Jan 20, 2009

பதிவர்களே உஷார்!! ப்ளாகர் கணக்குகள் Hack செய்யப்படுகின்றன‌


   சமீபகாலமாக மின்னஞ்சல் முகவரிகளை கடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ப்ளாகர் கணக்கை கடத்துவது எளிதானது என்று கூகிளான்டவர் குறி சொல்கிறார்.

   சில நாட்களுக்கு முன் என் அக்காவின் ஆர்குட் கணக்கு கடத்த‌ப்பட்டது.பின் ஒருவழியாக அந்த கணக்கையே முடக்க முடிந்தது. சென்ற வாரம் பதிவர் விஜய கோபலாசாமியின் கணக்கு திருடப்பட்டது. இன்று புதுகை.அப்துல்லாவின் கணக்கும் திருடப்பட்டிருக்கிறது. ஒரு வழியாக அவரின் மின்னஞ்சல் கணக்கை கைப்பற்றிவிட்டோம். ஆனால் ப்ளாகர் கணக்கு இன்னமும் எதிரிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    நாம் அடிக்கடி கடவுச்சொல் மாற்றுவதால் மட்டுமே இதை தடுக்க முடியாது. ஏனெனில் அவர்களின் திருடும் வழிமுறை கடவுச்சொல்லை கைப்பற்றுவதல்ல. எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளால் கடத்தப்பட்ட கணக்கை மீண்டும் பெற முடியும். முதலில் உங்கள் Security Question  மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின் மறக்காமல் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் Secondary Email மாற்றுங்கள். ஜிமெய்ல் முகவரி என்றால் secondary email யாஹூவாக இருக்கட்டும். கடத்துபவன் கில்லாடி என்றால் இவைகளை உடனே மாற்றிவிடுவான். அப்போது என்ன செய்யலாம்?

    இப்போதே நீங்கள் ஜிமெய்லின் எந்தெந்த சேவைகளை உபயோகிக்கறீர்கள் என்ற தகவலை சேமியுங்கள். அந்த கணக்கு தொடங்கப்பட்ட நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கூகிளின் இந்த உதவிப் பக்கத்தில் இருக்கும் படிவம் மூலமாகத்தான் நாம் இதை முறையிடவெண்டும். அடிக்கடி ஒரே ஐ.பி.முகவரியில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைத்துவிடும். ஒவ்வொரு Netcentre ஆக அலையும் தாமிரா போன்றவர்களுக்கு இது சிரமம்தான். அந்தப் படிவத்திலே கூகிள் வழங்கும் பலதரபட்ட சேவைகளின் பட்டியல் இருக்கிறது. உடனே இதில் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் தனியாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நம் கணக்கும் கடத்தபட்டால் இருக்கும் விவரங்களை கொண்டு கைப்பற்றிவிடலாம். அதற்குள் திருடியவன் எதையாவது அழித்து விட்டால் என்ன செய்வது?

    தமிழ்மணத்தில் இருப்பவர்களுக்கு இது எளிதான வேலை. தமிழ்மண கருவிப்படையில் புத்தகம் போல் இருக்கும் ஐகானை அழுத்தினால் உங்களின் கடைசி 20 பதிவுகளின் பட்டியல் வரும். இதன் மூலம் அந்தப் பதிவுகளை பி.டி.எஃப் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதின் மூலம் நம் பதிவுகளை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதிக அக்கறை உள்ளவர்கள் தமிழ்மணத்தில் இணைக்கும்போதே பி.டி.எஃப் ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இதுவல்லாமல் வேறு மென்பொருள் ஏதாவ்து இருக்கிறதா என்ற விவரம் கூகிளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.கிடைத்தால் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

50 கருத்துக்குத்து:

அன்புமணி on January 20, 2009 at 5:37 PM said...

என்னவெல்லாம் செய்றாங்கப்பா.... எதுக்கும் எல்லாரும் உசாரா இருங்கப்பூ! தகவலுக்கு நன்றி கார்க்கி!

அ.மு.செய்யது on January 20, 2009 at 5:41 PM said...

தகவலுக்கு நன்றி கார்க்கி...

அதை தடுக்க வழிமுறைகளும் சொல்லிக் கொடுத்தமை பாராட்டுக் குரியது.

புதுகை.அப்துல்லா on January 20, 2009 at 5:46 PM said...

என்னுடைய பதிவு போனதைப்பற்றி நான் கவலைப்படவில்லை கார்க்கி. ஆனால்
நானும்,ராப்பும்,வெண்பூவும்,
தாமிராவும் கும்மிகளில் அடித்த மறக்க முடியாத கமெண்டுகளை இழந்ததுதான் வருத்தமாக இருக்கிறது.
இந்த மெயில் ஐ.டி யை காப்பாற்றிக் கொடுத்த உன் உதவியை காலத்திற்கும் மறக்க மாட்டேன்.

அதிஷா on January 20, 2009 at 5:50 PM said...

பீதிய கெளப்புறீங்களே நண்பா!!

இப்பவே அல்லைய புடிக்குது.. ;-(

கார்க்கி on January 20, 2009 at 5:50 PM said...

/அன்புமணி said...
என்னவெல்லாம் செய்றாங்கப்பா.... எதுக்கும் எல்லாரும் உசாரா இருங்கப்பூ! தகவலுக்கு நன்றி கார்க்//

நன்றி சகா

*********************

// அ.மு.செய்யது said...
தகவலுக்கு நன்றி கார்க்கி...

அதை தடுக்க வழிமுறைகளும் சொல்லிக் கொடுத்தமை பாராட்டுக் குரிய//

நன்றி சகா

*********************

// புதுகை.அப்துல்லா said...
என்னுடைய பதிவு போனதைப்பற்றி நான் கவலைப்படவில்லை கார்க்கி. ஆனால்
நானும்,ராப்பும்,வெண்பூவும்,
தாமிராவும் கும்மிகளில் அடித்த மறக்க முடியாத கமெண்டுகளை இழந்ததுதான் வருத்தமாக இருக்கிறது.
டே//

உண்மைதான்

அத்திரி on January 20, 2009 at 5:54 PM said...

மிர்சலா இருக்குப்பா... கவனிக்கிறேன்

narsim on January 20, 2009 at 6:03 PM said...

டர்ர கிளப்புறீங்களே சகா..

வித்யா on January 20, 2009 at 6:20 PM said...

கார்க்கி எதுக்கும் உன் போன் நம்பர கொடு. ஏதாவது பிரச்சனைன்னா கேக்கலாம்ல:)

அருண் on January 20, 2009 at 6:29 PM said...

2 மச்.

அன்புடன் அருணா on January 20, 2009 at 6:59 PM said...

அச்சச்சோ....என்னப்பா புதுசு புதுசா பயம் காட்டுகிறீகள்??? சரி சரி எதுவும் பிரச்னைன்னா உதவுவீங்கதானே???
அன்புடன் அருணா

கிரி on January 20, 2009 at 7:10 PM said...

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய...

தகவலுக்கு (எச்சரிக்கைக்கு) நன்றி கார்க்கி

கார்க்கி on January 20, 2009 at 7:12 PM said...

மக்களே உங்க ப்ளாக back up எடுக்க இந்த லிங்க் உப‌யோகப்படும்.

http://help.blogger.com/bin/answer.py?hl=en&answer=41447

MayVee on January 20, 2009 at 7:49 PM said...

thanks for tht link.

science has developed so much ah...
பஜார்ல உஷார் இல்லாட்டி.... நிஜார் இருக்காது.....

கணினி தேசம் on January 20, 2009 at 7:54 PM said...

அவ்வ்வ்வ்வ்....வேணாம் வலிக்கும்...
நாங்களே கஷ்டப்பட்டு தக்கி தடுமாறி எழுதுறோம், இதுல இந்த பிரச்சனை வேறயா.
:((((

கணினி தேசம் on January 20, 2009 at 7:54 PM said...

சகா, ப்ளாக்க "Export/Import Blog" மூலம் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
பதிவும், பின்னூட்டங்களும் இதனுள் அடங்கும். மிகவும் சுலபம்.
பதிவுப்பட்டையை தனியாக தரவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.

வழிமுறை..
Blogger Dashboard >> Settings >> Basic >> Export Blog

நசரேயன் on January 20, 2009 at 8:17 PM said...

நல்ல தகவல், எச்சரிக்கைக்கு நன்றி

கும்க்கி on January 20, 2009 at 8:23 PM said...

தகவலுக்கு நன்றி..

(படா கைங்களுக்குதான் இந்த பிரச்னையெல்லாம்...)

Sinthu on January 20, 2009 at 8:36 PM said...

தகவலுக்கு நன்றி
உங்க அக்கா ஓர்குட் இல உன்ன்டோ.......? தெரியாமப் போச்சே........?

Mohan on January 20, 2009 at 8:58 PM said...

ஆகா இப்பவே பயம்மா இருக்கே.. என்னப்பா இது வலைத்தளத்திலே கூட நிம்மதியா இருக்க விட மாட்டாங்களா?

நன்றி கார்க்கி.. சகா நீங்கள் கார்க்கி மட்டுமில்லை.. காக்கி அணியாத காக்கி.. ;)

நண்பா பாஸ்வேர்ட் மட்டும் மாத்திப் பலனில்லை என்று வேறு பயமுறுத்தி விட்டீர்களே.. இன்றிலிருந்து முதல்வேலை back up தான்..

LOSHAN on January 20, 2009 at 9:03 PM said...
This comment has been removed by the author.
LOSHAN on January 20, 2009 at 9:04 PM said...

பயமுறுத்தினாலும் பயனுள்ள தகவல்.. நன்றி காக்கி.. சாரி.. கார்க்கி.. எங்கள் தளங்கள் காத்த தானைத் தளபதியே வாழ்க நீவிர்..

வேறு பாதுகாப்பு முறைகள் இருந்தாலும் அறியத் தரவும்.

பகீ on January 20, 2009 at 9:26 PM said...

Offline explorer போன்ற மென்பொருள்கள் (வின்டோஸ்) மூலம் தளங்களை தரவிறக்கி வைத்துக்கொள்ளுவது பாதுகாப்பான ஒரு முறை. முதல்முறை செய்யும்போது சிறிதளவு நேரம் எடுத்தாலும் அதன்பின்னர் இலகுவானது.

பெரிதாக படங்களை பயன்படுத்தாதவர்கள் தங்கள் பதிவை தாங்களே ஏதாவது Desktop Feed reader இல் பதிந்து கொள்ளலாம். (Netnewswire (மக்))

ஊரோடி பகீ.

வால்பையன் on January 20, 2009 at 9:29 PM said...

என்ன கொடுமை சார் இது!

ஒரு அப்பாவி ப்ளாக்கையா கேக் பண்றது?

ஜோசப் பால்ராஜ் on January 20, 2009 at 9:32 PM said...

எங்களுக்கு எல்லாம் நிறைய முன் அனுபவம் இருக்கு. நாங்க எல்லாம் உசாரு இதுல.
முன்னெச்சரிக்கை தகவலை அனைவருக்கு கொண்டு சேர்த்தமைக்கு பாராட்டுக்கள் சகா.

கும்க்கி on January 20, 2009 at 9:37 PM said...

ஊரோடி பகீ.
இது என்னன்னே...?

சென்ஷி on January 20, 2009 at 9:38 PM said...

:(((

வருத்தம் தரக்கூடிய விஷயம்.. தகவலுக்கும் பயன் தரக்கூடிய இணைப்புகளுக்கும் நன்றி கார்க்கி...

இதனை முறியடிப்பதற்கான ஏதும் வழிவகைகள் உண்டா...

முரளிகண்ணன் on January 20, 2009 at 9:52 PM said...

மிக்க நன்றி கார்கி. அப்துல்லாவின் பதிவுகளை மீட்க வழியில்லையா? மனது கஷ்டமாக இருக்கிறது. சில முறை அங்கே கும்மியில் கலந்து கொண்ட எனக்கே கஷ்டமாய் இருக்கிறது

Anonymous said...

அடப்பாவிகளா இதக்கூடவா ஹேக் பண்ணுவானுக?

தகவலுக்கு நன்றி கார்க்கி.

Ŝ₤Ω..™ on January 20, 2009 at 10:09 PM said...

அச்சோச்சோ..
ஒரு வருடத்துக்கு முன், என் gmail மற்று blogger கணக்குகள் இப்படி தான் போச்சி.. வெகு விரைவிலேயே அந்த நபரை நான் கண்டுகொண்டாலும், நேரடியாக கேட்கமுடியாத ஒரு சூழ்நிலை.. அப்போது எவ்வளவோ போராடியும், கூகில் உதவவில்லை..

அப்புர என்ன, சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்று, பேசி ஒரு சாமாதானத்துக்கு வந்து கணக்குகளை மீட்டேன்.. :-(

Sridhar Narayanan on January 20, 2009 at 10:11 PM said...

//ஏனெனில் அவர்களின் திருடும் வழிமுறை கடவுச்சொல்லை கைப்பற்றுவதல்ல. //

வேறு என்ன வழிமுறை இருக்கிறது?

இது hacking என்ற வகையில் வராது. Phishing என்ற முறையில் கடவுச் சொல்லை உங்களிடமிருந்தே வேறு வகையில் ஏமாற்றி பறிப்பதுதான். வேறு வகையில் ப்ளாக்கர் கணக்கை கைப்பற்ற முடியுமா என்று தெரியவில்லை. தெரிந்தால் விரிவாக சொல்லுங்களேன்.

Ŝ₤Ω..™ on January 20, 2009 at 10:11 PM said...

சமீபத்தில் ஒரு பதிவை அண்ணன் நீக்கிவிட்டாரு.. அதுவே எனக்கு கஷ்டமா இருந்தது.. இப்போ மொத்தமும் போயிடிச்சே.. :-(

நட்புடன் ஜமால் on January 20, 2009 at 10:34 PM said...

பாதுகாக்க

Ŝ₤Ω..™ on January 20, 2009 at 10:35 PM said...

நம் பதிவுகளை அவ்வப்போது backup எடுத்துக்கொள்வது நல்லது..
1. goto Settings
2. click Export Blog
3. click Download Blog

Ŝ₤Ω..™ on January 20, 2009 at 10:39 PM said...

நம் பதிவுகளை அவ்வப்போது backup எடுத்துக்கொள்வது நல்லது..
1. goto Settings
2. click Export Blog
3. click Download Blog

SanJaiGan:-Dhi on January 20, 2009 at 10:48 PM said...

கிகிகி.. இப்போ என்னோடதுலயும் எவனோ ஒரு நல்லவன் இருககான்.. :))

அவன் ஐபி : IMAP 67.228.171.35

அவனைப் பற்றிய தகவல்
OrgName: SoftLayer Technologies Inc.
OrgID: SOFTL
Address: 1950 N Stemmons Freeway
City: Dallas
StateProv: TX
PostalCode: 75207
Country: US

ReferralServer: rwhois://rwhois.softlayer.com:4321

NetRange: 67.228.0.0 - 67.228.255.255
CIDR: 67.228.0.0/16
OriginAS: AS36351
NetName: SOFTLAYER-4-5
NetHandle: NET-67-228-0-0-1
Parent: NET-67-0-0-0-0
NetType: Direct Allocation
NameServer: NS1.SOFTLAYER.COM
NameServer: NS2.SOFTLAYER.COM
Comment: abuse@softlayer.com
RegDate: 2007-11-07
Updated: 2008-01-25

RAbuseHandle: ABUSE1025-ARIN
RAbuseName: Abuse
RAbusePhone: +1-214-442-0605
RAbuseEmail: abuse@softlayer.com

RNOCHandle: IPADM258-ARIN
RNOCName: IP Admin
RNOCPhone: +1-214-442-0600
RNOCEmail: ipadmin@softlayer.com

RTechHandle: IPADM258-ARIN
RTechName: IP Admin
RTechPhone: +1-214-442-0600
RTechEmail: ipadmin@softlayer.com

OrgAbuseHandle: ABUSE1025-ARIN
OrgAbuseName: Abuse
OrgAbusePhone: +1-214-442-0605
OrgAbuseEmail: abuse@softlayer.com

OrgTechHandle: IPADM258-ARIN
OrgTechName: IP Admin
OrgTechPhone: +1-214-442-0600
OrgTechEmail: ipadmin@softlayer.com

Kumaran on January 21, 2009 at 12:36 AM said...

நன்றி கார்க்கி.. ஆனால் கூகுள் சேவை பயன்படுத்த ஆரம்பித்த தேதியை சரியா கண்டுபிடிப்பது எப்படி.. நான் அநேகமா எல்லா சேவையையும் தொட்டிருப்பேன் ஆனால் எதற்கும் தேதி ஞாபகம் இல்லியே.. hack செய்யபடுவதற்கு முன் இப்போதே அதை கண்டுபிடிப்பதற்கு வழி இருக்கிறதா.. தெரிந்தால் அத்ற்கும் ஒரு பதிவிடுங்கள்..

Bleachingpowder on January 21, 2009 at 12:49 AM said...

உங்க வெரைட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு தல, அடுத்த பதிவு என்ன விண்வெளி ஆராய்ச்சி கட்டுரையா :)). சூப்பர் ஃபார்ம்ல இருக்கீங்க, கல்க்குங்க.

தாரணி பிரியா on January 21, 2009 at 9:35 AM said...

தகவலுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி கார்க்கி

அனுஜன்யா on January 21, 2009 at 10:15 AM said...

கார்க்கி,

ஒண்ணும் புரியாட்டாலும், ஒரு கலக்கு கலக்குகிறாய் என்று புரிகிறது. நம்ம ப்ளாகை 'ஹேக்' பண்ணி என்ன உபயோகம் அவனுகளுக்கு? எதுக்கும் நீ சொன்ன யோசனைகளை நடைமுறைப் படுத்த வேண்டியதுதான். கொஞ்சம் 'அவசர உதவிக்கு' என்று போட்டு உன் செல் நம்பர் போட்டுவிடு :)

அனுஜன்யா

Thusha on January 21, 2009 at 10:16 AM said...
This comment has been removed by the author.
Thusha on January 21, 2009 at 10:19 AM said...

என்னுடைய நண்பி ஒருவரின் orkut கணக்கும் இப்படி திருடப்பட்டது நாங்கள் அதன் பின் தன் தெரியும் இப்படி எல்லாம் ஆக்கள் இருக்காங்க என்று

கார்க்கி on January 21, 2009 at 10:33 AM said...

Malware,spyware போன்ற விஷக்குருமிகள் நம் கணிணியில் உள்ள Registry என்ற கோப்பை மொத்தமாக களவான்டு சென்றுவிடும். அதில் அனைத்து தகவல்களும் சேர்ந்திருக்கும். ஹேக் செய்வதை சிலர் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். பழி வாங்குவதற்கெல்லாம் ஹேக் செய்தால் அப்துல்லாவின் கணக்கை ஹேக் செய்வதற்கு வழியே இல்லை.. பாஸ்வேர்டை தெரிந்துக் கொன்டு கடத்துபவரும் இருக்கிறார்கள்.. அதற்காகத்தான் இன்றே மாற்ற சொன்னேன்.. மற்றவை மூலம் ஹேக் செய்யப்படுவதற்கு.. மேலதிக தகவல்களும் படத்துடன் கூடிய வழிகாட்டுதலும் கூடிய விரைவில் பதிவிடுகிறேன். பலரும் கேட்ட என் அலைபேசி எண்கள்

ஹைதை : 9989322884
சென்னை : 9789887048

ஏதேனும் ஒரு நம்பரில் நிச்ச்யம் இருப்பேன்..

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

SanJaiGan:-Dhi on January 21, 2009 at 10:42 AM said...

உஷார் : இப்போ எல்லாம் மிக அதிகமாக சோசியல் நெட்நொர்க் தளங்கள் வந்துவிட்டன. நம்ம ஆட்கள் அதில் இணைததும் அவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும். அதை கொடுத்தால் அந்த முகவரியிலுள்ள மெயில் ஐடி எல்லாம் எடுத்துக் கொள்ளும். அதை எல்லாம் சேர்வு செய்து நம்ம ஆளுங்களும் எல்லாருக்கும் அழைப்பு அனுப்புகிறார்கள். அந்த மாதிரி தளங்கள் எல்லாமே பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. ஆகவே அது போன்ற தளங்களுக்கு போகும் போது வேறு கடவுசொல் பயன்படுத்துங்க. மேலும் உங்க மெயில் ஐடி பாஸ்வேட்ட் குடுத்து உங்கள் காண்டாக் லிஸ்டை அது உபயோகிக்கும் படி செய்ய வேண்டாம்.

கார்க்கி on January 21, 2009 at 3:49 PM said...

மேலதிக தகவலுக்கு நன்றி சகா

Karthik on January 21, 2009 at 4:38 PM said...

சூப்பர் கார்க்கி.
:)

ஷாஜி on January 21, 2009 at 4:53 PM said...

தகவலுக்கு நன்றி கார்க்கி...

கார்க்கி on January 21, 2009 at 5:17 PM said...

/ Karthik said...
சூப்பர் கார்க்கி.
:)//

:)))))

********************

// ஷாஜி said...
தகவலுக்கு நன்றி கார்க்கி//

நன்றி ஷாஜி

ஜிம்ஷா on January 21, 2009 at 6:15 PM said...

வால்பையன் said...
என்ன கொடுமை இது!

ஒரு அப்பாவி ப்ளாக்கையா கேக் பண்றது?

நசரேயன் on January 21, 2009 at 7:24 PM said...

//புதுகை.அப்துல்லா said...
என்னுடைய பதிவு போனதைப்பற்றி நான் கவலைப்படவில்லை கார்க்கி. ஆனால்
நானும்,ராப்பும்,வெண்பூவும்,
தாமிராவும் கும்மிகளில் அடித்த மறக்க முடியாத கமெண்டுகளை இழந்ததுதான் வருத்தமாக இருக்கிறது.
இந்த மெயில் ஐ.டி யை காப்பாற்றிக் கொடுத்த உன் உதவியை காலத்திற்கும் மறக்க மாட்டேன்.
//
அண்ணே உங்க பதிவு எல்லாம் என்னிடம் இருக்கு நான் google reader ல சேமித்து வைத்ததினால் என்னால உங்களோட எல்லா பதிவுகளையும் எடுக்க முடியும்

தாமிரா on January 28, 2009 at 10:05 AM said...

மீ த 50.! என்னாபா.. இது பயம் காட்டுற.? நான் எனது பதிவுகளை மாதம் ஒரு முறை பிடிஎப்'பாக மாற்றி பத்திரப்படுத்திவருகிறேன். இருப்பினும் ஐடி திருடப்பட்டால் வலைப்பூ என்னவாகும்? விளங்கிடும்..

 

all rights reserved to www.karkibava.com