Jan 8, 2009

காக்டெய்ல் (தியேட்டர் ஸ்பெஷல்)


   சென்ற வாரம் அண்ணா திரையரங்கில் என் அண்ணா அபியும் நானும், அபியும் நானும் படம் பார்த்தோம்.(அபி எனது அண்ணனின் பெயர்). பிரமிட் அண்ணா, மீண்டும் வெறும் அண்ணாவாகி விட்டது. தயவு செய்து யாரும் அந்தப் பக்கம் போயிடாதீங்கப்பூ. எல்லா இருக்கைகளும் சம தளத்தில் அமைத்த அந்த டிசைனர் நல்லாயிருக்கனும். பாதி திரையில் நன் முன்னே இருப்பவரின் தலைதான் தெரிகிறது. என் அக்கா மகனுக்கு படம் தெரியவில்லையென என் மடியில் அமர்ந்தான்.பின்னால் இருந்து ஒருவர் சண்டைக்கு வந்தார். அமைதி விரும்பியான நான் அவனை இறக்கிவிட்டேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவருக்கு பின்னால் இருப்பவர் அவரை "டவுன்" செய்ய சொன்னார். அவருடன் சன்டையை தொடர்ந்தார். என் அக்காப் பையனிடம் சொன்னேன் "படத்துல சண்டையே இல்லைன்னு அழுதியே பார்த்துக்கோ"

*************************************************    கட்டணத்தை சீரமைத்த தமிழக அரசுக்கு நன்றி சொல்லலாமா? கொஞ்சம் பொறுங்கள். மாயஜாலில் அதிகபட்சம் 120ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்பது அரசு விதி. ஆனால் வரிவிலக்கு இருக்கும் படத்திற்கும் 120 தான். வரிவிலக்கு இல்லாத படத்திற்கும் 120 தான். ஆக இதன் மூலம் பார்வையாளனுக்கும் பலனில்லை. அரசுக்கும் பலனில்லை. எங்கே போகிறது அந்தப் பணம்? அது மட்டுமில்லாமல், தசவாதாரம் படத்திற்கு கட்டணம் 200 ரூபாய். 120 ரூபாய் நுழைவு சீட்டு, மீதி 80 ரூபாய்க்கு உள்ளே ஏதாவது வாங்க்க் கொள்ளலாம். ஆனால் உள்ளே ஒரு காஃபியின் விலை 20ரூபாய். திருட்டு சிடி தப்பே இல்ல.

************************************************* தேவி தியேட்டரின் பின்னே ஒரு லஸ்ஸி கடை இருக்கிறது. சென்னைவாசிகளுக்கு தெரிந்திருக்கும். அண்னா சாலையில் எந்த திரையரங்கு சென்றாலும் அங்கே சென்று சமோசா, கச்சோரி,ஜிலேபி லஸ்ஸி என ஒரு வெட்டு வெட்டுவது வழக்கம். இதுவரை போகாதவர்கள் ஒரு முறை போய் பாருங்கள்.
  புலிகேசி படம் பார்க்க சென்றபோது தேவி வளாகம் மேம்படுத்தப்படுவதாக போர்ட் வைத்திருந்தார்கள். இன்னமும் வேலை நடக்கிறதாம். ஒரு முன்னேற்றமும் காணவில்லை. ஒரு காலத்தில் என் அபிமான திரையரங்கு அது. யாருக்காவது தெரியுமா என்ன பிரச்சினை என்று?

*************************************************    பத்ரியில் ஆரம்பித்து குருவி வரை விஜயின் அனைத்துப் படங்களையும் முதல் நாள் பார்த்திருக்கிறேன். சிங்கையில் இருந்தபோது கூட இது தொடர்ந்தது. வில்லுக்கு போகனும் என்றிருக்கிறேன். படம் எப்படி இருந்தாலும் அந்த ஆட்டம் பாட்டத்திற்கே செல்லலாம். குறிப்பாக ஆல்பர்ட்,தேவி,உதயம் ஆகியவை விஜயின் கோட்டை என்பார்கள். ஆனால் புறநகரில் உள்ள குரோம்பேட்டை வெற்றி மற்றும் அகஸ்தியாவில் பார்க்க வேண்டும் முதல் நாள். இந்த முறை எங்கே பார்ப்பேன் என்று தெரியவில்லை.எதுவுமில்லைன்னா குடும்பத்தோட மாயாஜால்தான்.

*************************************************     சென்னையில் பல இடங்களில் மல்ட்ப்ளக்சுகள் வர இருக்கின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை பிரியும் இடத்தில் ஒரு வணிக வளாகம் கட்டப்படுகிறது. அதனுள் ஐனாக்ஸைப் போல 6 திரைகள். ஆற்காடு சாலை பிக் பஸார் மேல் 10 திரைகள். இவையல்லாது சத்யம் சினிமாஸ் 10 திரைகள் கொண்ட அரங்கு ஒன்றையும் கட்டப் போகிறார்களாம்.படம் எங்க இருக்கு? ஒரு வேளை பழைய படங்களை ஓட்டுவார்களா?

22 கருத்துக்குத்து:

அ.மு.செய்யது on January 8, 2009 at 10:14 AM said...

இன்பரமேசன் இஸ் வெல்த் !!!!!

நல்லா இருந்துச்சுங்க காக்டெயில்....

அ.மு.செய்யது on January 8, 2009 at 10:16 AM said...

//திருட்டு சிடி தப்பே இல்ல.
//

அப்ப அடிக்கடி பர்மா பஜார்‍ ல உங்கள பாக்கலாமோ ???

ஸ்ரீமதி on January 8, 2009 at 10:54 AM said...

:))))))

Prosaic on January 8, 2009 at 11:02 AM said...

my alter ego?!!

நான் ஆதவன் on January 8, 2009 at 11:20 AM said...

//ஆனால் புறநகரில் உள்ள குரோம்பேட்டை வெற்றி மற்றும் அகஸ்தியாவில் பார்க்க வேண்டும் முதல் நாள்.//

எங்க ஏரியாவில் உள்ள அகஸ்தியா தியேட்டரை புறநகர் தியேட்டர் என்று கேவலப்படுத்தியதற்காக கார்க்கியை கன்னா பின்னாவென்று தாறுமாறாக கண்டிக்கிறேன்.

நான் ஆதவன் on January 8, 2009 at 11:22 AM said...

தல அதுவும் சென்னை தான்.
சென்னை-21, சென்னை-81 நம்புங்கப்பா. சென்னையில அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி அது. ஒத்துக்க மாட்டீங்கறீங்களே...

பாபு on January 8, 2009 at 11:39 AM said...

chrompet வெற்றி theatre க்கு முதல் நாள் போனீங்கன்னா ,டிக்கெட் இன் விலை
நீங்க சொன்ன மாயாஜால் விலையை விட அதிகமாயிருக்கும்

தராசு on January 8, 2009 at 11:43 AM said...

//தேவி தியேட்டரின் பின்னே ஒரு லஸ்ஸி கடை இருக்கிறது. சென்னைவாசிகளுக்கு தெரிந்திருக்கும். அண்னா சாலையில் எந்த திரையரங்கு சென்றாலும் அங்கே சென்று சமோசா, கச்சோரி,ஜிலேபி லஸ்ஸி என ஒரு வெட்டு வெட்டுவது வழக்கம். இதுவரை போகாதவர்கள் ஒரு முறை போய் பாருங்கள். //

நல்ல தகவல். ஆமா, சமோசாவ, கச்சோரியை மற்றும் ஜிலேபியை எல்லாம் எப்படியாவது வெட்டிப்புடலாம். ஆனா லஸ்ஸியை எப்படி வெட்டறீங்க? அதுக்கெல்லாமா அங்க கத்தி தறாங்க?????

அத்திரி on January 8, 2009 at 12:36 PM said...

//பத்ரியில் ஆரம்பித்து குருவி வரை விஜயின் அனைத்துப் படங்களையும் முதல் நாள் பார்த்திருக்கிறேன்.//

ஆனாலும் உனக்கு ரொம்ம்ப தில்லு சகா..ஷாஜகான் படத்தோட முடிஞ்சது விஜய் படத்த முதல் நாள் பார்க்கும் வழக்கம்.

Bleachingpowder on January 8, 2009 at 12:37 PM said...

//பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை பிரியும் இடத்தில் ஒரு வணிக வளாகம் கட்டப்படுகிறது. அதனுள் ஐனாக்ஸைப் போல 6 திரைகள். ///

//ஒரு வேளை பழைய படங்களை ஓட்டுவார்களா?//

என்ன இப்படி சாதாரணமா சொல்லீடீங்க, அங்க வரது PVR Cinemas, India's largest cinema chain. பழைய படங்களை போட்டா கூட அத பாக்குறதுக்கு ஆளு இருக்கும். அவங்க வந்தா சத்தியத்திற்கே ஆப்படிச்சிடுவாங்கனு தோனுது. பெங்களூருல கஜினி pvrல மட்டும் தினமும் இருபது ஷோ ஓட்டறாங்க டிக்கட் விலை ஜஸ்ட் 300 for pvr classic 1000 for Gold Class இருந்து முதல் வாரம் எல்லா ஷோவும் housefull.

நம்ம தலைவர் பெங்களூர் வரும் போதெல்லாம் இங்க Gold classல தனியா உட்கார்ந்து படம் பார்பார்.

Bleachingpowder on January 8, 2009 at 12:37 PM said...
This comment has been removed by the author.
கணினி தேசம் on January 8, 2009 at 6:17 PM said...

//திருட்டு சிடி தப்பே இல்ல.//

தரவிறக்கம் செய்வதும்கூட தப்பே இல்லை.. எங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேற வழி இல்லை................. வெளிநாட்டில் இருப்பதால்.

LOSHAN on January 8, 2009 at 6:18 PM said...

முதல் மேட்டர் சூப்பர்..
//"படத்துல சண்டையே இல்லைன்னு அழுதியே பார்த்துக்கோ"//

//பத்ரியில் ஆரம்பித்து குருவி வரை விஜயின் அனைத்துப் படங்களையும் முதல் நாள் பார்த்திருக்கிறேன்.//

ஐயோ பாவம் நீங்க.. ;)
any all the best for Villu.. ;)

கணினி தேசம் on January 8, 2009 at 6:24 PM said...

//பத்ரியில் ஆரம்பித்து குருவி வரை விஜயின் அனைத்துப் படங்களையும் முதல் நாள் பார்த்திருக்கிறேன்.//

அப்ப ஒரே ஆட்டம்..பிகிலு. கலக்கல்தான்!

அவர் படத்துல பாட்டு மட்டும்..அதுவும் குத்து,பெப்பி பாட்டுக்கள்.. மிகவும் ரசிக்கலாம். விஜய் ஆட்டத்துல கெட்டிக்காரர்.

மெலடி பாட்டுக்களில்..அவர் வையை திறக்காமல் பாடுவதை, ஏனோ என்னால் சகிக்க முடிவதில்லை. :(((.

கணினி தேசம் on January 8, 2009 at 6:26 PM said...

//சென்னையில் பல இடங்களில் மல்ட்ப்ளக்சுகள் வர இருக்கின்றன. //

இருக்கிற பொருளாதார பிரச்சினை'ல முழுசா கட்டி முடிப்பாங்களா ?

முரளிகண்ணன் on January 8, 2009 at 6:33 PM said...

nice informations

அன்புடன் அருணா on January 8, 2009 at 6:59 PM said...

உங்களுக்கு என் வலைப்பூவில் ஒரு பட்டாம்பூச்சி!!!
அன்புடன் அருணா

வால்பையன் on January 8, 2009 at 7:04 PM said...

வாழ்க்கை ஒரு சினிமா சினிமா
மூன்று மணி நேரம் தான்!

dharshini on January 8, 2009 at 7:20 PM said...

// அமைதி விரும்பியான நான் அவனை இறக்கிவிட்டேன்.//
நம்பிட்டோம்ல்ல.....

// "படத்துல சண்டையே இல்லைன்னு அழுதியே பார்த்துக்கோ" //
ஹா ஹா ஹா :)

// சமோசா, கச்சோரி,ஜிலேபி லஸ்ஸி என ஒரு வெட்டு வெட்டுவது வழக்கம். //
சாப்பாட்டு ராமனா இருப்பீங்க போல..

ச்சின்னப் பையன் on January 8, 2009 at 7:26 PM said...

டாக்டர் படமெல்லாம் முதல் நாளிலேயேவா... தெய்வம்ணே நீங்க... ( நான் போன வாரம்தான் கில்லி பாத்தேன்!!!)...:-))))

கோபிநாத் on January 9, 2009 at 1:17 AM said...

சகா..

அண்ணா திரையரங்கு ஆப்பு அனுபவங்கள் எனக்கும் உண்டு...முன்னாடியிருந்து ரெண்டவது வரிசையில உட்காந்து படம் பார்த்திருக்கியா சகா...அந்த கொடுமையை எல்லாம் அனுபவச்ச தான் தெரியும்...;))

அண்ணாவில் கடைசியாக ஆப்பு வாங்கி படம் சரோஜா ;)

தேவி பற்றி உங்கள் சந்தேகம் எனக்கும் உண்டு. அந்த கடையில நானும் பல வெட்டு வெட்டியிருக்கேன்.

தேவி திரையரங்கு போலவே தான் சத்யமும் இருக்குன்னு எனக்கு தோணுது. இன்னும் கட்டிக்கிட்டே இருக்கானுங்க என்னாத்த நினைச்சி செய்யுறானுங்கன்னு ஒரு மண்ணும் புரியல ;)

இளைய பல்லவன் on January 15, 2009 at 10:01 PM said...

//திருட்டு சிடி தப்பே இல்ல.
//

என் கருத்தும் அதுதான். இப்படி கொள்ளையடிக்காமல் சரியான ரேட் இருந்தால் நிச்சயம் தியேட்டருக்குச் செல்லலாம்.

இல்லைன்னா கமெண்ட் படிச்சுட்டு விட்டுறவேண்டியதுதான். அப்படியும் நல்லா இருந்துச்சுன்னு சொன்னா எங்காவது கெடச்சதுன்னா ஓகே. அப்படியும் இல்லன்னா இருக்கவே இருக்கு "உலகத் தொலைக்காட்சிகளில் மூஊஊஊஊஊதாஆஆஆன் முறையாஆஆஅக அ அ அ அ அ"

சினிமாத்துறையினர் சிந்தித்தால் நல்லது.

 

all rights reserved to www.karkibava.com