Jan 28, 2009

காக்டெய்ல்


   டாடா நிறுவனத்தின் முக்கியமான பாலிசியில் ஒன்று சுற்றுப்புற கிராமத்து மக்களின் நன்மதிப்பை பெறுதல். நான் வேலை செய்த (TATA Bluescope steel)பிரிவிலும் அதற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் மூணாரில் தலைகீழாக இருக்கிறது. அங்கே இருக்கும் பலருக்கும் டாடா தேயிலை நிறுவத்தின் மீது கடுங்கோபம் இருக்கிறது. அவர்களில் பாதி பேர் அங்கே வேலை செய்து வெளியே வந்திருக்கிறார்கள்.அவர்கள் சொல்வது வெளியே அனுப்பப் பட்டார்கள். பிரிட்டிஷ் ஸ்டைலில் வேலை வாங்கும் மேலாளர்களை அவர்கள் குற்றம் சொல்கிறார்கள். கடைகளிலும் டாடா தேயிலையை விட சிறந்தது என்று வேறு ஒன்றை சொல்கிறார்கள். ஆனாலும் டாடா தான் நிறைய விற்கிறதாம். உண்மையில் டாடா அப்படித்தானா? என்னால் நம்பமுடியவில்லை. யாருக்காவாது தெரியுமா?

*************************************************   எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு விஷயம் நினைவுக்கு வந்து அது யார் என்ற விடைத் தெரியாமல் போனால் பைத்தியம் பிடித்து விடும். இப்படித்தான் ஒரு நாள் இலங்கை வேகப் பந்து வீச்சாள‌ர் ஒருவரைப் பற்றி நினைவு வந்தது. கையை மடக்காமல் அவர் பந்து வீசும் முறை பற்றி கூட பிரச்சனை வந்ததே. தலையில் கூட கலர் கலர் குரோட்டன்ஸ் செடியை வளர்த்தாரேன்னு பல அடையாளங்கள் தெரிந்தும் பெயர் ம்ட்டும் நினைவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின் நண்பனை அழைத்து "டேய் இலங்கை பெளலர் தலையில செடி வளர்ப்பானே.. லசித் மலிங்கா.. அவன் பேர் என்னா?" சிறிது நேர யோசனைக்குப் பின் அவன் பதில் சொன்னான். தெரியல மச்சி.

*************************************************

    பரபரப்பாக ஆரம்பித்து கண்டுக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிட்டது எனக்கு. சமீபத்தில் செந்தழல் ரவி கூட ஜே.கே.ஆர் பற்றி பதிவு எழுதினார். ஆங்காங்கே சிதறி கிடக்கும் ஜே.கே.ஆர் பதிவுகளை தொகுக்கவே இந்த வலை ஆரம்பிக்கப்பட்டது. ஏனோ நம் தலைவி சில நாட்களாக வலையுலகில் காணாமல் போனதும், ஆர்வமுடன் கொ.ப.செ பதவி கேட்டு வாங்கிய வித்யாவும் அத்தணை வீரியத்துடன் இயங்காமல் போனதும், தலையுடன் நடக்கவிருந்த சந்திப்பு எதிர்பாராத விதமாக தள்ளி வைக்கப்பட்டதும் முக்கிய காரணமென நினைக்கிறேன். விரைவில் சங்கம் இது குறித்து விவாதிக்கும். அது வரையில் சங்கத்தில் சேர்ந்து பதிவெழுத விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சொல்ல ஆசைப்படுகிறோம். வாழ்க வீரத்தளப‌தி.

*************************************************

   எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அப்படியென்றால் மனிதநேயம் ஆண்களுக்கு மட்டும்தானே.  Mankind என்றுதானே சொல்கிறோம். அத‌ற்கு Man என்றால் மனிதர் என்றுதான் பொருள்.அது இருவருக்குமே பொது என்றாள். சரிதான், பின் எதற்கு Ladies and Gentle men என்கிறார்கள், Gentlemen என்று மட்டும் சொன்னால் போதுமே என்றேன். தொடர்பு துண்டிக்கப்பட்டது.(ஹலோ தொலைபேசி தொடர்பு மட்டும்தாம்ப்பா). உங்களுக்கு தெரியுமா? Man என்றால் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

*************************************************

முடியலத்துவக் கவிதைகள்

பழங்காலத்தில் பல்சர் இருந்தது

அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்ககூடாது
என்னை உன்னிலிருந்து
அந்நியப்படுத்தியது எது?
இந்தக்கதவும் அறிவிப்பும் தானே

திப்பு கிழித்தெறிந்த வேங்கையின்
பேரப்புலி ஒன்று
இன்னும் வெறிகொண்டு திரிகிறது
வஞ்சம் தீர்க்க
அது பசித்தால்
பிஸ்கட் திங்கும் புலியாம்

பெருமழைக்கு பயந்த பெருச்சாளி
சமணகுகைக்குள் நுழைந்தது
மூலிகை வர்ணம் குழைத்து
வரையப்பட்ட நிர்வாண படங்களை பார்த்து
பெரும்பயம் கொண்டது பெருச்சாளி
ரப்பை பருத்த காவலர்
என் வண்டியை நிறுத்தி
தோசை ஏதேனும் இருக்கிறதாவென
சோதனை போடுகிறார்
அவரது சோதனையில்
என் கவிதைகள் சிக்காதிருக்கட்டும்

--செல்வேந்திரன்

மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்.

36 கருத்துக்குத்து:

vinoth gowtham on January 28, 2009 at 11:07 AM said...

நான் வால்பாறையில் ஒரு கோவிலுக்கு சென்று இருக்கிறேன்(Balaji Temple). அவ்வளவு அழகாக, ரம்யமாக இருக்கும் அந்த இடமமும் அந்த கோவிலும். அந்த இடத்திற்கு யார் போனாலும் அதை கண்டிப்பை உணர்வார்கள். அவ்வளவு அழகா அதை Maintain பண்ணி இருப்பார்கள். அந்த இடம் TATA GROUPS இன் இடம் தான். அவர்களூடைய TEA ESTATE நடுவில் இருக்கும். அதை சுற்றி இருக்கும் இடத்திலும் மக்களிடமும் அவர்கள் நற்பெயர் பெற்று இருப்பார்கள் என்பதே என்னோடய அபிபிராயம். அந்த இடத்துக்கு போய் இருக்கீங்களா??.

வித்யா on January 28, 2009 at 11:08 AM said...

அச்சச்சோ மீ த பர்ஸ்ட் மிஸ்ஸாயிடுச்சே:(

vinoth gowtham on January 28, 2009 at 11:09 AM said...

அவர் பெயர் Lashith Malinga தாங்க. Bleaching மண்டையன்.

வித்யா on January 28, 2009 at 11:10 AM said...

\\ஆர்வமுடன் கொ.ப.செ பதவி கேட்டு வாங்கிய வித்யாவும் அத்தணை வீரியத்துடன் இயங்காமல் போனதும்\\

ஆணி ஜாஸ்தி கார்க்கி. நிறைய பதிவுகள் draftல இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படிதான்.

தாமிரா on January 28, 2009 at 11:22 AM said...

கலக்கல்..

பல அடையாளங்கள் தெரிந்தும் பெயர் மற்றும் நினைவில்லை. /// மற்றும் அல்ல மட்டும். மேலும் சில இடங்களில் இந்தத்தவறை பார்த்ததாக எண்ணம்.

வித்யா on January 28, 2009 at 11:32 AM said...

\\தலையில் கூட கலர் கலர் குரோட்டன்ஸ் செடியை வளர்த்தாரேன்னு\\

என் அப்பாகூட இதே கமெண்ட் தான் அடித்தார்.

narsim on January 28, 2009 at 11:46 AM said...

PHOTOS SUPER SAGA..

கார்க்கி on January 28, 2009 at 11:47 AM said...

@வினோத்,

நான் பார்க்கலைங்க. ஆனா டாடா அப்படி செய்ய மாட்டர்கள் தான் நனௌம் நினைக்கிறேன்.

****************

//வித்யா said...
\\ஆர்வமுடன் கொ.ப.செ பதவி கேட்டு வாங்கிய வித்யாவும் அத்தணை வீரியத்துடன் இயங்காமல் போனதும்\\

ஆணி ஜாஸ்தி கார்க்கி. நிறைய பதிவுகள் draftல இருக்கு. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படிதா//

தெரியும் கொ.ப.செ. அதையும் எழுத மறந்துட்டேன்.. ஜூனியர் எபப்டி இருக்கிறார்?

*****************
//தாமிரா said...
கலக்கல்..

பல அடையாளங்கள் தெரிந்தும் பெயர் மற்றும் நினைவில்லை. /// மற்றும் அல்ல மட்டும். மேலும் சில இடங்களில் இந்தத்தவறை பார்த்ததாக எண்ண//

நன்றி சகா.. மாத்திடுறேன்

prakash on January 28, 2009 at 12:15 PM said...

//முடியலத்துவக் கவிதைகள்//

நவீனமயம் ஏற்படுத்திய உலக சீரழிவை ஜனரஞ்சக சொல்லாடலில் எடுத்தியம்பி இருக்கிறார் கவிஞர்....

காவலர்
ஆசையாய் செய்த
தோசைக்கான சோதனையில்
ஓசையில்லாமல் தப்பித்து வந்த கவிஞரின் வரிகளுக்கு
காசை கொண்டு பூசை செய்யலாமென....
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.....................................

வால்பையன் on January 28, 2009 at 1:21 PM said...

டாடா தான் நிறைய விற்கிறதாம். உண்மையில் டாடா அப்படித்தானா? என்னால் நம்பமுடியவில்லை. //

டாடா வேலைக்கு டாடா சொன்னவர்கள்
டாடா டீக்கு டாடா சொல்லவில்லை போலும்

வால்பையன் on January 28, 2009 at 1:23 PM said...

//டேய் இலங்கை பெளலர் தலையில செடி வளர்ப்பானே.. லசித் மலிங்கா.. அவன் பேர் என்னா?" சிறிது நேர யோசனைக்குப் பின் அவன் பதில் சொன்னான். தெரியல மச்சி.//

உங்கள் நண்பரிடம் நீங்கள் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

அவரு சொல்ல வந்தது ”உனக்கு என்ன ஆச்சு”ன்னு தெரியல மச்சி.

வால்பையன் on January 28, 2009 at 1:26 PM said...

ஆங்காங்கே சிதறி கிடக்கும் ஜே.கே.ஆர் பதிவுகளை தொகுக்கவே இந்த வலை ஆரம்பிக்கப்பட்டது. //

தலைவின் மவுனம் தான் என்னை எதோ செய்கிறது. எனக்கு பதவி கொடுத்ததில் எதாவது தகறாரா?

வால்பையன் on January 28, 2009 at 1:28 PM said...

Man என்றால் அண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?//

human என்ற வார்த்தையில் இரண்டும் சேர்ந்து விடுகிறதா இல்லையா?
அதனால் உங்கள் தோழி சொன்னது சரிதான்

வால்பையன் on January 28, 2009 at 1:32 PM said...

செல்வேந்திரனின் அறிமுகம் அருமை

Bleachingpowder on January 28, 2009 at 1:38 PM said...

//பின் எதற்கு Ladies and Gentle men என்கிறார்கள், Gentlemen என்று மட்டும் சொன்னால் போதுமே என்றேன்.//

அதானே...அதே மாதிரி கணவன் மனைவியை அழைக்கும் பொழுது அது Mrs & Mr ன்னு தான் போடறாங்க ஏன் அதை Mr & Mrs போடமாட்டாங்க.

எப்படி தல எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் எழுதறீங்க. ஒரு பதிவிற்கு பதில் போடறதுக்கே எனக்கு தலை சுத்தீருச்சு காலையில.

Bleachingpowder on January 28, 2009 at 1:39 PM said...

//vinoth gowtham said...
அவர் பெயர் Lashith Malinga தாங்க. Bleaching மண்டையன்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்...:(((

அனுஜன்யா on January 28, 2009 at 1:44 PM said...

டாட்டா நிறுவனம் பொதுவாக நாணயத்திற்கும், ஊழியர் நலத் திட்டங்களுக்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால், முன்னாரில் நானும் வேறுமாதிரி கேள்விப்பட்டேன். தேயிலை வியாபாரம், விவசாயமாக இல்லாது, ஒரு உற்பத்தி துறை போல் செயல்பட வைப்பதில் உள்ள பல சிக்கல்களில் இதுவும் ஒன்று என்று ஒரு வல்லுநர் (வேறு யார், நாந்தேன்) கூறுகிறார்.

மலிங்கா - :))

ஜெ.கே.ஆர். - ஆள விடு. ஜூட்

ஆண்/பெண் விவாதம் ஆதாம்/ஏவாள் காலந்தொட்டே இருக்கு. she includes he; woman includes man; என்றெல்லாம் நிறைய கேள்விப்பட்டு, விவாதித்து, கல்லடி பட்டாச்சு.
//சரிதான், பின் எதற்கு Ladies and Gentle men என்கிறார்கள், Gentlemen என்று மட்டும் சொன்னால் போதுமே என்றேன்//
அதற்கும் Ladies என்றாலே Gentle. ஆண்களில் தான் தனியாகச் சிலரை அவ்வாறு விளிக்க வேண்டும் என்று பதில் வந்தது. ஹம், அப்போதெல்லாம் விவாதம் செய்யவாவது தைரியம்/சுதந்திரம் இருந்தது.

அனுஜன்யா

பின்னூட்டம்னா இப்படி போடணும். சும்மா ":)" செல்லுபடியாகாது. :)

vinoth gowtham on January 28, 2009 at 2:22 PM said...
This comment has been removed by the author.
vinoth gowtham on January 28, 2009 at 2:29 PM said...

//Bleachig Powder said:
//vinoth gowtham said...
அவர் பெயர் Lashith Malinga தாங்க. Bleaching மண்டையன்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்...:(((//

உங்கள சொல்லலிங்க ...

கார்க்கி on January 28, 2009 at 2:33 PM said...

/வால்பையன் said...
செல்வேந்திரனின் அறிமுகம் அருமை//

நன்றி சகா

**************
Bleachingpowder said...
எப்படி தல எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் எழுதறீங்க. ஒரு பதிவிற்கு பதில் போடறதுக்கே எனக்கு தலை சுத்தீருச்சு காலையி//

நம்மள நம்பி வந்தவங்களுக்கு பதில் சொல்றத விட வேற என்ன பெரிய வேலை எனக்கு சகா?

***************

@அனுஜன்யா,

தல, அதுக்கு என்ன மாதிரி பெருசா பதிவு போடனும்.. நாலு வரி எழுதறீங்க.. அத எட்டு பேரு பிரிச்சு மேஞ்சடறாங்க.. அப்புறம் நாங்க என்ன சொல்றது?? :)

சின்ன அம்மிணி on January 28, 2009 at 2:46 PM said...

//இப்படித்தான் ஒரு நாள் இலங்கை வேகப் பந்து வீச்சாள‌ர் ஒருவரைப் பற்றி நினைவு வந்தது. //
முத்தையா முரளிதனைக்கூட இப்படித்தான் அமுக்கப்பாத்தாங்க.

அனுஜன்யா on January 28, 2009 at 2:50 PM said...

நெத்தியடி! ஒத்துக்குறேன். அவ்வ்வ்வ்வ்வ்

அனுஜன்யா

முரளிகண்ணன் on January 28, 2009 at 3:27 PM said...

கலக்கல் காக்டெயில் கார்கி

கார்க்கி on January 28, 2009 at 3:39 PM said...

/சின்ன அம்மிணி said...
//இப்படித்தான் ஒரு நாள் இலங்கை வேகப் பந்து வீச்சாள‌ர் ஒருவரைப் பற்றி நினைவு வந்தது. //
முத்தையா முரளிதனைக்கூட இப்படித்தான் அமுக்கப்பாத்தாங்க//

ஆமாங்க.. நலமா?

*****************
// அனுஜன்யா said...
நெத்தியடி! ஒத்துக்குறேன். அவ்வ்வ்வ்வ்வ் //

தல.... இருந்தாலும் உங்க கவித நாலு வரில நாலாயிரம் அர்த்தம் தரும்.. புரியாத நான் என்ன சொல்ரதுன்னு கேட்டிருக்கணுமில்ல?

******************

/ முரளிகண்ணன் said...
கலக்கல் காக்டெயில் கார்கி//

வாங்கண்ணா.. கார்த்திக் நலமா?

prakash on January 28, 2009 at 3:41 PM said...

//நம்மள நம்பி வந்தவங்களுக்கு பதில் சொல்றத விட வேற என்ன பெரிய வேலை எனக்கு சகா?//

நான் உன்னை நம்பலன்னு உனக்கு யார் சொன்னது கார்க்கி :))

தாரணி பிரியா on January 28, 2009 at 4:06 PM said...

வால்பாறை பாலாஜி கோயில் பாக்கலையா?

கிரிக்கெட் பாக்கறது அத்தனை நல்லது இல்லையாமே அதனால யாருங்க மலிங்கா


வில்லு பார்த்ததும் தலயை மறந்துட்டிங்களோன்னோ நினைச்சேன்.:)


Male, Female இதை விட்டுட்டிங்க‌

முடியலத்துவம் அறிமுகத்துக்கு நன்றி

கார்க்கி on January 28, 2009 at 4:51 PM said...

// prakash said...
//நம்மள நம்பி வந்தவங்களுக்கு பதில் சொல்றத விட வேற என்ன பெரிய வேலை எனக்கு சகா?//

நான் உன்னை நம்பலன்னு உனக்கு யார் சொன்னது கார்க்கி :)//

ண்ணா.. எப்படியோ உங்களுக்கு மற்றும் நர்சிம்முக்கு பதில் சொல்ல தவறிட்டேன்.. :)))

******************
// narsim said...
PHOTOS SUPER SAGA..//

என் ஃபோட்டோவாச்சே தல

****************

//தாரணி பிரியா said...
வால்பாறை பாலாஜி கோயில் பாக்கலையா?//

இன்னும் வால்பாறையே பார்க்கல

வித்யா on January 28, 2009 at 5:36 PM said...

\\Bleachingpowder said...
அதே மாதிரி கணவன் மனைவியை அழைக்கும் பொழுது அது Mrs & Mr ன்னு தான் போடறாங்க ஏன் அதை Mr & Mrs போடமாட்டாங்க.\\

அழைக்கும்போது ஆண்களை தானே கூப்பிடுகிறார்கள். Mrs & Mr Karki. Mr & Mrs karki என்று அழைத்தால் நீங்கள் அந்த பெண்ணின் பெயரை தவறாக குறிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகிவிடும். லேடிஸ் ஃபர்ஸ்ட் என்பதாலும் Mrs முதலில் வருகிறது என்றும் சொல்கிறார்கள். இது உண்மையான்னு தெரியல.

கார்க்கி on January 28, 2009 at 5:51 PM said...

//வித்யா said...
\\Bleachingpowder said...
அதே மாதிரி கணவன் மனைவியை அழைக்கும் பொழுது அது Mrs & Mr ன்னு தான் போடறாங்க ஏன் அதை Mr & Mrs போடமாட்டாங்க.\\

அழைக்கும்போது ஆண்களை தானே கூப்பிடுகிறார்கள். Mrs & Mr Karki. Mr & Mrs karki என்று அழைத்தால் நீங்கள் அந்த பெண்ணின் பெயரை தவறாக குறிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகிவிடும். லேடிஸ் ஃபர்ஸ்ட் என்பதாலும் Mrs முதலில் வருகிறது என்றும் சொல்கிறார்கள். இது உண்மையான்னு தெரியல//

அதுக்கு ஏங்க Mrs& Mr கார்க்கினு சொல்லனும். வேற பேரே தெரியாதா?அதுவும் ரெண்டு தடவ

வித்யா on January 28, 2009 at 5:53 PM said...

யோவ் உன் பதிவுல உன் பேரை தானே யூஸ் பண்ணனும். உள்ளார ரசிச்சிட்டு வெளில ஆக்டிங்கா??

PoornimaSaran on January 28, 2009 at 6:14 PM said...

டேய் இலங்கை பெளலர் தலையில செடி வளர்ப்பானே.. லசித் மலிங்கா.. அவன் பேர் என்னா?

நல்லா கேட்டிங்க போங்க!!!

கார்க்கி on January 28, 2009 at 6:51 PM said...

// வித்யா said...
யோவ் உன் பதிவுல உன் பேரை தானே யூஸ் பண்ணனும். உள்ளார ரசிச்சிட்டு வெளில ஆக்டிங்கா?//

ஹிஹிஹி..விடுங்க விடுங்க..

*******************
// PoornimaSaran said...
டேய் இலங்கை பெளலர் தலையில செடி வளர்ப்பானே.. லசித் மலிங்கா.. அவன் பேர் என்னா?

நல்லா கேட்டிங்க போங்க//

:)))

Sinthu on January 28, 2009 at 7:06 PM said...

"எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு விஷயம் நினைவுக்கு வந்து அது யார் என்ற விடைத் தெரியாமல் போனால் பைத்தியம் பிடித்து விடும். இப்படித்தான் ஒரு நாள் இலங்கை வேகப் பந்து வீச்சாள‌ர் ஒருவரைப் பற்றி நினைவு வந்தது. கையை மடக்காமல் அவர் பந்து வீசும் முறை பற்றி கூட பிரச்சனை வந்ததே. தலையில் கூட கலர் கலர் குரோட்டன்ஸ் செடியை வளர்த்தாரேன்னு பல அடையாளங்கள் தெரிந்தும் பெயர் ம்ட்டும் நினைவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின் நண்பனை அழைத்து "டேய் இலங்கை பெளலர் தலையில செடி வளர்ப்பானே.. லசித் மலிங்கா.. அவன் பேர் என்னா?" சிறிது நேர யோசனைக்குப் பின் அவன் பதில் சொன்னான். தெரியல மச்சி."
என்ன கொடுமை.......................

Kathir on January 28, 2009 at 11:00 PM said...

//எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம்//

விடுங்க சகா.....
விட்டுக்கொடுக்கறது நமக்கு புதுசா என்ன...
:))

இப்ப இருந்தே இதையெல்லாம் கண்டுக்காம இருந்து பழகிட்டா, வருங்காலத்துல தலை ஆட்டறதுக்கு வசதியா இருக்கும்.....

கார்க்கி on January 29, 2009 at 9:58 AM said...

@சிந்து,

நன்றி..

*************
// Kathir said...
//எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம்//

விடுங்க சகா.....
விட்டுக்கொடுக்கறது நமக்கு புதுசா என்ன...
:))

இப்ப இருந்தே இதையெல்லாம் கண்டுக்காம இருந்து பழகிட்டா, வருங்காலத்துல தலை ஆட்டறதுக்கு வசதியா இருக்கும்...//

தெளிவா இருக்கிங்க சகா

பரிசல்காரன் on January 30, 2009 at 5:17 PM said...

யோவ்.. கவனிக்காம விட்டுட்டேனே..


சகா... அந்த ஸ்ரீலங்கா பவுலர் மேட்டரை நீ சொல்லக் கேட்டதுக்கும், எழுதினக்கும் உள்ள வித்தியாசத்துல உன் எதிர்காலம் எவ்ளோ ப்ரைட்னு தெரியுது!

சூப்பர்!

 

all rights reserved to www.karkibava.com