Jan 27, 2009

புட்டிக்கதைகள்


  அதுவரை எந்தப் பெண்ணின் பின்னாலும் போகாத ஏழுவுக்கு அவளைக் கண்டவுடன் பிடித்துவிட்டது. ஆறுமுகம் வந்து இந்த மேட்டரை சொன்னபோது எங்களால் நம்பவே முடியவில்லை. குடித்துவிட்டு ஒரு நாள் பேண்ட்டே இல்லாமல் ஹாஸ்டலுக்கு வந்த அன்று கூட வராத வெட்கம் இன்று அவன்கண்ணில் தெரிந்தது. இதற்கு மேல் ஏழுவை மலையேற்றினால்தான் விஷயத்தைகறக்க முடியும் என்று முடிவு செய்து அன்று பூஜைக்கு ஏற்பாடு செய்தான் பாலாஜி.

  முதலில் அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை இரண்டு பியர் தருவதாக உறுதி கூறி அடிக்க வைத்தோம். திட்டமிட்டபடி பாதி பியரைகுடித்துவிட்டு தண்ணி கலந்து வைத்திருந்தான் பாலாஜி. அந்த பாதி பியரில் பாதி அடித்த ஏழு சிரித்தான்.

அழகுடா... இது வரைக்கும் யாரையும் இப்படி பார்த்ததில்ல.

எப்படி பார்த்தான் தெரியுமா மச்சி? சொன்னா கேட்காம மூனு பஃப் இழுத்துட்டு மப்புல தடுக்கி கீழ விழுந்துட்டான். அப்ப அவ சரியா எதிர்ல வர, தலைவர் ஸ்ரீமரங்கபெருமாள் மாதிரி தலைல கைய முட்டுக் கொடுத்துட்டு சைட் அடிச்சாரு என்றான்ஆறு.

டேய். அதுவா முக்கியம்.. என்ன சாப்பிடறான்னு தெரியல மச்சி. அவ கண்ணம்அப்படியே மொழு மொழுன்னு...

அவ சைவம் மச்சி. தயிர் சாதம் தான் என்றான் ஆறு .

சான்ஸே இல்லடா.. அவள போய் சைவம்ன்னு.. அவ கண்ண பார்த்தியா.. கண்லமீன் இருக்குடா.. அவ சைவம் இல்ல மச்சி.. என்று இழுத்தான் ஏழு

அவ சாப்பிடறது சைவம்டா

  ரைட்டு விடு. அவ பேரு கலைவாணி மச்சி. கல்யாணத்துல வெளியே பெருசா பேனர் வைப்பிங்க இல்ல.. அப்ப இப்படித்தான் எழுதனும்..

தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

  எல்லாம் ஓக்கேடா. அது என்ன‌ ஏழு பீர் ஏழும‌லை என்றான் பாலாஜி.

போன‌ நியூ இய‌ர்ல ஏழு பியரடிச்சேனே. அத சொன்னேன்.

டேய் போன இயர்ல நீ அடிச்ச மொத்த பியரே நாலரைதான்டா.

ரைட்டு விடு. இப்ப அதுவா பிரச்சனை. அவள எப்படி கரெக்ட் பண்றது ஐடியா கொடுங்கடா.' அதுக்கு முன்னாடி சைடு டிஷ் எதுவாச்சு சொல்லு. இனிமேல நானும் சைவம்தான். அதனால் மட்டன்ல எதுவாச்சு சொல்லு

எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.

முடியலடா என்னால.. நான் வாயை மூடிக்கிக்றேன் என்றான் பாலாஜி.

ஆறு மட்டும் சீரியஸாக "மச்சி, அவ உனக்கு செட்டாவாளா? அவ கேரக்டர் எப்படின்னு விசாரிக்காலான்டா முதல்ல என்றான்

எனக்கு அவள பிடிச்சு போச்சுடா. இது வேணும் அது வேணுமெல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஆனா என்ன மாதிரி வாய் அதிகமில்லாம, நீங்க சொல்வீங்களே மொக்கை போடறேன் அது மாதிரி பேசமா இருந்தா போதும் என்று உண்மையை ஒப்புக் கொண்டான் ஏழு.

  மறுநாள் ஆறுவும் ஏழுவும் அவளை சந்தித்து பேசுவதாக திட்டம் தயார் ஆனது. வழக்கம்போல அரைபியரில் ஃபுல் டைட்டாக ஆனார் ஏழு.

  அடுத்தநாள் அவள் வரும் வழியில் காத்திருந்தோம். ஆறுவும் ஏழுவும் மட்டும் சற்று முன்னால் சென்றார்கள்.
மச்சி. எப்படியாவது ஓக்கே சொல்ல வைக்கனும்டா பார்த்தா அமைதியான பொண்ணு மாதிரிதான் தெரியுது என்று கிசுகிசுத்தான் ஏழு.

சரிடா என்ற ஆறு அவளைப் பார்த்து "ஹலோ..இங்க வா நீ" என்றான்

திரும்பிய அவள், என்னையா என்பது போல கேட்க, ஆறு ஆமாம் என்று ஆமோதித்தான்.

அருகில் வந்தவள் "என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி" என்று சிரித்து விட்டு சென்றாள்.

பியரடிக்காமலே மயங்கி விழுந்தான் ஏழு.

46 கருத்துக்குத்து:

Anonymous said...

மீ த பர்ஸ்டு

Anonymous said...

மீ த செகண்டு. பேர் தெரிஞ்சுக்கிட்டே ஏய்னு கூப்புடறதா

muru on January 27, 2009 at 2:19 PM said...

me the 2nd and 3rd

ஸ்ரீமதி on January 27, 2009 at 2:21 PM said...

அண்ணா சூப்பர் :))

//"என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி" //

Ultimate :))

vinoth gowtham on January 27, 2009 at 2:22 PM said...

U mean..
ARTCOMEU..

Anbu on January 27, 2009 at 2:29 PM said...

அண்ணா சூப்பர் :))முதல் வோட் நான்தான்

கும்க்கி on January 27, 2009 at 2:32 PM said...

அ..அ..அண்ணா ஜூப்பரு.

நான் ஆதவன் on January 27, 2009 at 2:41 PM said...

என்னது எல்லாருக்கும் அண்ணனா...அப்ப நானும் "அண்ணா ஜூப்பரு"..

நான் ஆதவன் on January 27, 2009 at 2:45 PM said...

சகா உங்ககிட்ட இருந்து அடுத்து "கதிசூரபாண்டியன்" கதைகள் வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

கார்க்கி on January 27, 2009 at 3:13 PM said...

//சின்ன அம்மிணி said...
மீ த செகண்டு. பேர் தெரிஞ்சுக்கிட்டே ஏய்னு கூப்புடறதா//

அது அவர முன்னாடியே தெரியாத மாதிரி ஒரு பில்டப் கொடுக்க அம்மினி..

***************

/ muru said...
me the 2nd and 3ர்ட்//

தேர்ட் மட்டும்தாம்ப்பா..

*************

/ஸ்ரீமதி said...
அண்ணா சூப்பர் :))

//"என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி" //

Ultimate :))//

தாங்க்ஸ் தங்கச்சி

****************

//vinoth gowtham said...
U mean..
ARTCOMஏஊ..//

என்னங்க சொல்ல வர்றீங்க?????????????

கார்க்கி on January 27, 2009 at 3:16 PM said...

/ Anbu said...
அண்ணா சூப்பர் :))முதல் வோட் நான்தா//

:))))

*******************

// கும்க்கி said...
அ..அ..அண்ணா ஜூப்பரு//

இதெல்லாம் ரொம்ப ஓவரு

*************

// நான் ஆதவன் said...
என்னது எல்லாருக்கும் அண்ணனா...அப்ப நானும் "அண்ணா ஜூப்பரு//

இனிமேல் கார்க்கியை யாரும் அண்ணாவென்று சொல்லக் கூடாதுனு சட்டம் போடனும்..வேனும்ன்னா தம்பின்னு சொல்லுங்க..

//நான் ஆதவன் said...
சகா உங்ககிட்ட இருந்து அடுத்து "கதிசூரபாண்டியன்" கதைகள் வரும் என ஆவலுடன் //

அப்படின்னா என்ன சகா???????????

prakash on January 27, 2009 at 3:21 PM said...

//இனிமேல் கார்க்கியை யாரும் அண்ணாவென்று சொல்லக் கூடாதுனு சட்டம் போடனும்..வேனும்ன்னா தம்பின்னு சொல்லுங்க..//

தம்பி சூப்பரூ.....

prakash on January 27, 2009 at 3:24 PM said...

////vinoth gowtham said...
U mean..
ARTCOMஏஊ..//

என்னங்க சொல்ல வர்றீங்க?????????????//

ART-COME-U
கலை-வா-ணி

நான் ஆதவன் on January 27, 2009 at 3:34 PM said...

//நான் ஆதவன் said...
சகா உங்ககிட்ட இருந்து அடுத்து "கதிசூரபாண்டியன்" கதைகள் வரும் என ஆவலுடன் //

அப்படின்னா என்ன சகா???????????//

நாட்டு நிலவரமே தெரியாம இருக்கீங்க....

vinoth gowtham on January 27, 2009 at 3:41 PM said...

Prakash said:

////vinoth gowtham said...
U mean..
ARTCOMU..//

என்னங்க சொல்ல வர்றீங்க?????????????//

ART-COME-U
கலை-வா-ணி..//

Prakash கரெக்டா சொல்லிடாரு பாருங்க..

கும்க்கி on January 27, 2009 at 3:54 PM said...

prakash said...
////vinoth gowtham said...
U mean..
ARTCOMஏஊ..//

என்னங்க சொல்ல வர்றீங்க?????????????//

ART-COME-U
கலை-வா-ணி

டம்பியின் துபாஷி வால்க..வால்க.

Jenbond on January 27, 2009 at 3:55 PM said...

\\சான்ஸே இல்லடா.. அவள போய் சைவம்ன்னு.. அவ கண்ண பார்த்தியா.. கண்லமீன் இருக்குடா.. அவ சைவம் இல்ல மச்சி.. என்று இழுத்தான் ஏழு\\
\\எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே?\\

சகா சூப்பர்ர்ர்ர்ர்ர்ர். போதையிலேயே think பண்ணுவீங்களா?. கலக்குற ஏழு (சாரி கார்கி).

Jenbond on January 27, 2009 at 3:57 PM said...

\\கும்க்கி said...

டம்பியின் துபாஷி வால்க..வால்க.\\

இப்படியெல்லாம் சொன்னா தமிழ் வாழாது.

கார்க்கி on January 27, 2009 at 4:08 PM said...

//prakash said...
//இனிமேல் கார்க்கியை யாரும் அண்ணாவென்று சொல்லக் கூடாதுனு சட்டம் போடனும்..வேனும்ன்னா தம்பின்னு சொல்லுங்க..//

தம்பி சூப்பரூ..//

தாங்க்ஸ்ண்ணா

*******************

/கதிசூரபாண்டியன்" கதைகள் வரும் என ஆவலுடன் //

அப்படின்னா என்ன சகா???????????//

நாட்டு நிலவரமே தெரியாம இருக்கீங்க..//

ஆமா சகா.. மூனு நாளா நாட்டுலயே இல்ல..சொல்லுங்க‌

**************

/ART-COME-U
கலை-வா-ணி..//

Prakash கரெக்டா சொல்லிடாரு பாருங்க//

பெரிய ஆளுங்க நீங்க..

*******************

/சகா சூப்பர்ர்ர்ர்ர்ர்ர். போதையிலேயே think பண்ணுவீங்களா?. கலக்குற ஏழு (சாரி கார்கி)//

ஏழுமலை ஃபோட்டோ போடும் நம்பமாட்டறீங்களே ஜேம்ஸ்பாண்டு..

நான் ஆதவன் on January 27, 2009 at 4:16 PM said...

//
ஆமா சகா.. மூனு நாளா நாட்டுலயே இல்ல..சொல்லுங்க‌//

சாரு சார் வெப்சைட் போய் பாருங்க சகா

வித்யா on January 27, 2009 at 4:53 PM said...

காதல் மன்னன் அண்ணன் ஏழுமலை வாழ்க:)

Karthik on January 27, 2009 at 4:53 PM said...

அண்ணியும் இருக்காங்களா???

கட்சி ஆரம்பிச்சிட வேண்டியதுதான். தலைவரோட நாளைக்கு பேசிடுறேன்.
:))

Welcome back Karki!

Sinthu on January 27, 2009 at 4:57 PM said...

அப்புறம் என்னாச்சு.........?

SK on January 27, 2009 at 5:11 PM said...

juperuuuuuuuuuuuu :)

saga miss panniten intha weekend call panna :( :(

அமிர்தவர்ஷினி அம்மா on January 27, 2009 at 5:15 PM said...

:)

இனிமே ஏழுமலையை குடிக்க வேணாம்னு சொல்லிடுங்க சகா.
போட்டோ பாத்தேன் ரொம்ப சின்ன வயசா இருக்காரு.
ப்ளீஸ்
(புட்டிக்கதைகள் முழுவதும் கற்பனையாக இருக்கவே விழைகிறேன்)

Thusha on January 27, 2009 at 5:18 PM said...

"அப்புறம் என்னாச்சு.........?"

அதன் தல மயங்கி விழுந்துட்டார் இவங்க எல்லாரும் சேர்ந்து தூக்கிட்டுப் போயிருப்பாங்க வேறு என்ன நடந்திருக்கு

கார்க்கி on January 27, 2009 at 5:27 PM said...

// வித்யா said...
காதல் மன்னன் அண்ணன் ஏழுமலை வாழ்க://

:)))

************

/// Karthik said...
அண்ணியும் இருக்காங்களா???

கட்சி ஆரம்பிச்சிட வேண்டியதுதான். தலைவரோட நாளைக்கு பேசிடுறேன்.
:))

Welcome back Kaர்கி!//

அண்ணி இருக்காங்க.. ஆனா கலைவாணி இல்ல.

நன்றி கார்த்திக்..

************

// Sinthu said...
அப்புறம் என்னாச்சு....//

வழக்கம்போல 36 மணி நேரம் கழிச்சு எழுந்தாரு

prakash on January 27, 2009 at 5:27 PM said...

//Prakash கரெக்டா சொல்லிடாரு பாருங்க..//

பிரகாஷ் சொன்னா கரெக்டாதான் இருக்கும் :))

prakash on January 27, 2009 at 5:27 PM said...

//டம்பியின் துபாஷி வால்க..வால்க.//

ஹி ஹி...நன்றி கும்க்கி அவர்களே...

Bleachingpowder on January 27, 2009 at 5:28 PM said...

//தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர் //

கவித...கவித...

//ஒரு நாள் பேண்ட்டே இல்லாமல் ஹாஸ்டலுக்கு வந்த அன்று கூட வராத வெட்கம்//

உங்க சுயசரிதையை விரும்பி படிப்பதில் நானும் ஒருவன் தல. தொடர் முடிந்ததும் ஒரு புக்கா போட்டுடலாம். அடுத்த ஆண்டு புத்தக கண்காட்சியில் சாருவோட ஸ்டாலுக்கு பக்கத்துல நம்ம ஸ்டாலை போட்டுட்டு உட்காந்திடுவோம். ஆசிரியர் பேர் என்னன்னு போட போறீங்க? கார்க்கினே போட்டிடலாமா இல்ல உங்க ஒரிஜினல் பேர் ஏழுமலைன்னு போட போறீங்களா?

கார்க்கி on January 27, 2009 at 5:30 PM said...

// SK said...
juperuuuuuuuuuuuu :)

saga miss panniten intha weekend call panந ://

இப்போ எங்க இருக்கிங்க சகா????

**********

//அமிர்தவர்ஷினி அம்மா said...
:)

இனிமே ஏழுமலையை குடிக்க வேணாம்னு சொல்லிடுங்க சகா.
போட்டோ பாத்தேன் ரொம்ப சின்ன வயசா இருக்காரு.
ப்ளீஸ்
(புட்டிக்கதைகள் முழுவதும் கற்பனையாக இருக்கவே விழைகிறே//

அப்போ சின்ன வயசு.. :))

கவலையே படாதீங்க. புட்டிக்கதைகளில் பாதி உண்மை பாதி கற்பனைதான்.

****************

// Thusha said...
"அப்புறம் என்னாச்சு.........?"

அதன் தல மயங்கி விழுந்துட்டார் இவங்க எல்லாரும் சேர்ந்து தூக்கிட்டுப் போயிருப்பாங்க வேறு என்ன நடந்திருக்//

அதேதான்..

dharshini on January 27, 2009 at 6:13 PM said...

// இனிமேல நானும் சைவம்தான். அதனால் மட்டன்ல எதுவாச்சு சொல்லு

எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி. //

super... :)

PoornimaSaran on January 27, 2009 at 6:15 PM said...

//ஸ்ரீமரங்கபெருமாள் மாதிரி தலைல கைய முட்டுக் கொடுத்துட்டு சைட் அடிச்சாரு //

super:))

கார்க்கி on January 27, 2009 at 7:00 PM said...

/ Bleachingpowder said...
உங்க சுயசரிதையை விரும்பி படிப்பதில் நானும் ஒருவன் தல. தொடர் முடிந்ததும் ஒரு புக்கா போட்டுடலாம். அடுத்த ஆண்டு புத்தக கண்காட்சியில் சாருவோட ஸ்டாலுக்கு பக்கத்துல நம்ம ஸ்டாலை போட்டுட்டு உட்காந்திடுவோம். ஆசிரியர் பேர் என்னன்னு போட போறீங்க? கார்க்கினே போட்டிடலாமா இல்ல உங்க ஒரிஜினல் பேர் ஏழுமலைன்னு போட போறீங்களா?//

ஏங்க இந்த கொலவெறி????????

***************

//dharshini said...

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி. //

super... :)//

:))))))))))))))

*************************

// PoornimaSaran said...
//ஸ்ரீமரங்கபெருமாள் மாதிரி தலைல கைய முட்டுக் கொடுத்துட்டு சைட் அடிச்சாரு //

supeர்:))//

நன்றி :)))))

பாண்டி-பரணி on January 27, 2009 at 8:14 PM said...

ஏழு கதையில நகைச்சுவைக்கு பன்மடங்கு உண்டு இப்போ காதல்,அப்பாலிக்கா ஆக்‌ஷன்,திரில்லர் எல்லாம் உண்டு போல சகா தல ஏழு தான் கண்டிப்பா வின் பண்ணணும்

nathas on January 27, 2009 at 9:32 PM said...

ha ha ha
Too Good !!!

தாரணி பிரியா on January 27, 2009 at 10:18 PM said...

:} :} :}

தாரணி பிரியா on January 27, 2009 at 10:21 PM said...

ஏழுமலையை வெச்சு ஒரு காவியமே எழுதலாம் போல. காவிய நாயகன் ஏழுமலை :)

Kathir on January 27, 2009 at 10:26 PM said...

//என்னது எல்லாருக்கும் அண்ணனா...அப்ப நானும் "அண்ணா ஜூப்பரு"..//

ரிப்பீட்டு.....

MayVee on January 27, 2009 at 10:46 PM said...

nalla irukku kadai....
:-))

முரளிகண்ணன் on January 27, 2009 at 11:03 PM said...

super karki.

hilarious

ஸ்ரீதர்கண்ணன் on January 27, 2009 at 11:19 PM said...

//தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

//எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.

//என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி


ஜூப்பரு ஜூப்பரு.

கார்க்கி on January 28, 2009 at 9:36 AM said...

/ பாண்டி-பரணி said...
ஏழு கதையில நகைச்சுவைக்கு பன்மடங்கு உண்டு இப்போ காதல்,அப்பாலிக்கா ஆக்‌ஷன்,திரில்லர் எல்லாம் உண்டு போல சகா தல ஏழு தான் கண்டிப்பா வின் பண்ணணு//

ஏழுவின் தீவிர ரசிகரு பரணிக்கு நன்றி..

****************

/ nathas said...
ha ha ha
Too Good !!!//

தேங்க்ஸ்..

**************

//தாரணி பிரியா said...
ஏழுமலையை வெச்சு ஒரு காவியமே எழுதலாம் போல. காவிய நாயகன் ஏழுமலை //

வாழ்க வாழ்க‌

****************

//Kathir said...
//என்னது எல்லாருக்கும் அண்ணனா...அப்ப நானும் "அண்ணா ஜூப்பரு"..//

ரிப்பீட்டு...//

நான் அப்பீட்டூ

கார்க்கி on January 28, 2009 at 9:38 AM said...

//MayVee said...
nalla irukku kadஐ..//

:))))

***********

// முரளிகண்ணன் said...
super karki.

hilaரிஒஉ//

நன்றி முரளி

*************

// ஸ்ரீதர்கண்ணன் said...
//தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

//எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.

//என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி


ஜூப்பரு ஜூப்பரு//

நன்றி சகா

தாமிரா on January 28, 2009 at 9:48 AM said...

பிரமாதம். ஏழுமலை தொடரின் சிறப்பான பகுதிகளில் இதுவும் ஒன்று. சிறுகதை வடிவமும் இதில் இருப்பதைப்போல உணர்கிறேன். பல இடங்களில் ரசித்துச்சிரித்தேன்.

கார்க்கி on January 28, 2009 at 5:01 PM said...

/ தாமிரா said...
பிரமாதம். ஏழுமலை தொடரின் சிறப்பான பகுதிகளில் இதுவும் ஒன்று. சிறுகதை வடிவமும் இதில் இருப்பதைப்போல உணர்கிறேன். பல இடங்களில் ரசித்துச்சிரித்தேன்//

ரொம்ப நன்றி சகா

 

all rights reserved to www.karkibava.com