Jan 17, 2009

விஜய் டீ.வியில் பதிவர் குடும்பம்


அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

   அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்

**********************************************

ஞாயிறோட ஞாயிறு இன்னிக்கோட எட்டு நாள் ஆச்சு, அந்த அமளி துமளி எல்லாம் நடந்து. நடுவே குசும்பன் கல்யாணம், நண்பர்கள் வருகை எல்லாம் இருந்ததால் என்னால் பகிர்ந்துக்க முடியலை அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை. இன்னமும் காலம் தள்ளி போடுவது வரலாற்றுக்கு நான் இழைக்கும் அநீதி என கருதியே இப்போது பதிகிறேன்.

போன ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன். "ஏழரை ஆச்சு எழுந்திருங்க"ன்னு சொன்ன போது எனக்கு தெரியாது ஏழரை என்பது மணி அல்ல சனி என்று. காலை குளித்து முடித்து வந்த பின்ன சாமி ரூமில் பார்த்தபோது ஒரு பித்தளை தட்டினிலே மூன்று தேங்காய்கள் மஞ்சள் குளிச்சு உக்காந்து இருந்துச்சு. சாதாரணமா மழையை தற்காலிகமாக நிறுத்த என் வீட்டில் செய்யும் கூத்து இது. இன்னிக்கு தான் நல்லா வெயில் அடிக்குதே பின் எதற்கு இந்த பில்டப்புன்னு நெனச்சுகிட்டே ஒரு வித மிரட்சியோட வந்தேன் சாப்பிட.

"பின்ன சாப்பிட்டுக்கலாம் முதல்ல போய் டிவி ரிப்பேர்காரனையும், கேபிள் காரனையும் கூட்டிகிட்டு வந்துடுங்க"ன்னு சொன்னப்பதான் பார்த்தேன், என்னிக்கும் இல்லாத அளவு பளிச்சுன்னு தெரிஞ்சுது டிவி. 'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குறித்த நேரத்தில் சோறு போட்டா வாலை ஆட்டிகிட்டு சொன்ன வேலை செய்வார்"ன்னு தெளிவாத்தான் சொன்னார். பின்ன எதுக்கு டிவிகாரன், கேபிள்காரன் எல்லாம் என நினைத்து கொண்டே போய் கூப்பிட போயிட்டேன். ஏழரைக்கே எழுந்து நாலரையை எக்ஸ்ட்ராவாக இரண்டரை லிட்டர் வாங்கிகிட்டு 200 பீபரியையும் வாங்கிகிட்டு கேபிள்காரன், டிவி ரிப்பேர்காரனுடன் வீட்டுக்கு திரும்பும் போதே வீட்டில் அமளி ஆரம்பமாகிடுச்சு.

  "ம் ...ம்..ஆமாம் ராத்திரி சரியா ராத்திரி ஏழரைக்கு தான் நிகழ்ச்சி, மறக்காம பார்த்துட்டு எனக்கு உங்க கருத்தை சொல்லனும். இல்லாட்டி நம்ம வீட்டுக்கு வந்துட்டா மிளகு அடையும், ஜவ்வரிசி கொழுக்கட்டயும் சாப்பிட்டுகிட்டே பார்க்கலாம், வச்சிடவா"ன்னு யார்கிட்டயோ தங்கமணி பேசிகிட்டு இருந்தாங்க. எனக்கு ஓரளவு புரிஞ்சாலும் சரி கேட்டுடுவோமேன்னு"என்ன ஏதாவது நிகழ்ச்சியா முக்கியமா"ன்னு கேட்டு வச்சேன்.

   "தோ பாருங்க ஒரு தடவை தான் சொல்லுவேன். இன்னிக்கு ராத்திரி ஏழரைக்கு விஜய் டிவியிலே EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சி.அதை தான் ரொம்ப ஆர்வமா பார்க்க இந்த டிவிரிப்பேர்காரன், கேபிள் காரன் எல்லாம் கூட்டிகிட்டு வர சொன்னேன். இனிமே தொண தொணன்னு கேள்வி கேக்காம சொன்ன வேலை மட்டும் செய்யுங்க"ன்னு சொல்லிட்டு அடுத்த யாருக்கோ போன் போட்டு முன்ன பேசின அதே டயலாக்கை பேசினாங்க. டிவி தான் புதுசாச்சேன்னு கேட்டதுக்கு "இது சும்மா ஒரு ஜெனரல் செக்கப் தான், அந்த நேரத்துல சொதப்பிடகூடாதுல்ல அதான். அது போல கேபிள்காரனுக்கும் சொல்லிட்டேன். சாயந்திரம் நம்ம நகர்லயே தான் சுத்திகிட்டு இருக்கனும்ன்னு. தவிர மழை பெஞ்சா நம்ம டிவிக்குதான் வேர்த்து கொட்டுமே அதுக்காக பிள்ளையாருக்கு மஞ்சள் தேங்காய் வச்சாச்சு, தவிர மினி ஜென்செட் கூட அரேஞ்ச் பண்ணியாச்சு அக்காவீட்டிலிருந்து"ன்னு மின்னெச்சரிக்கை மினிம்மா பேசிகிட்டே போக எனக்கு ஆகா காலை ஏழரைக்கு ஆரம்பிச்ச ஏழரை இரவு ஏழரை வரை தொடர போகுதுன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது.

  இத்தனைக்கு பாப்பா கொஞ்சமும் அசராம மாடியிலே போய் போகோ டிவியில் கண்ணும் கருத்தமாவுமாக இருக்கவே நான் போய் "பாப்பா அப்படி என்ன நிகழ்ச்சி"ன்னு ஆர்வ மிகுதியிலே கேக்க அதுக்கு பாப்பா "அட சிம்பிள்ப்பா, நம்ம AVC Eng. College பசங்க EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சியிலே இன்னிக்கு கலந்துகறாங்க, நம்ம பிரியா அக்கா கூட அதிலே டேன்ஸ் ஆடுறாங்க, அதுக்கு தான் அம்மா இத்தனை அலப்பரை கொடுக்குறாங்க"ன்னு சொன்னா. நான் அதுக்கு "சரி அதிலே அம்மாவுக்கு என்ன ரோல், எல்லாம் காலேஜ் பசங்களாச்சே"ன்னு கேட்டதுக்கு பாப்பா "என்னப்பா அம்மா ரோல் தான் முக்கியமான ரோல், அம்மா இல்லாட்டி அவங்களுக்கு மானமே போயிருக்கும்"ன்னு சொல்ல நான் அப்படியே ஆகாசத்தில் பறந்தேன். நம்ம தங்கமணி மாத்திரம் டிவி நிகழ்ச்சி இயக்குனராயிட்டா அதை வச்சே பல பதிவு போடலாம். அவங்களை பேட்டி எடுத்து பத்து பாகமா போடலாம்ன்னு எல்லாம் நெனச்சுகிட்டு நானும் கூட மாட ஜவ்வரிசி அரைப்பதில் இருந்து மிளகு இடிச்சு தர்ர வரை எல்லாம் செஞ்சு ஏகப்பட்ட சபாஷ் வாங்கினேன்.

   நேரம் ஆக ஆக தங்கமணி முகத்திலே ஒரு படபடப்பு. எனக்கோ பாவமா போயிடுச்சு. "தோ பார், உன் கடமைய செஞ்சுட்ட, பதட்டபடாம இரு. என்ன ரிசல்ட் வந்தாலும் நாம தைரியமா ஏத்துக்கனும். ஒரு பழைய படைப்பாளிங்கிற முறையிலே (அடங்கொய்யால...)ஒரு புது படைப்பாளிக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்னன்னா" என்கிற ரேஞ்சில் நான் பொங்க பொங்க அபிபாப்பா அலட்சியமா பார்த்துகிட்டு மைல்டா சிரிச்சுகிட்டு போகுது அடையை தட்டில் எடுத்துகிட்டு.

   ஆச்சு மணி ஏழரை. அடைக்கு ஆசைப்பட்ட அக்கம் பக்கமும், கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்ட கொழுப்பெடுத்ததுகளும் வீட்டில் ஹாலில் நிறைந்து இருக்க நடுவே நம்ம படைப்பாளி தங்கமணியும். எனக்கு நட்டுவை பார்த்துக்கும் பெரும் பொருப்பு தரப்பட்டது. முதல் செஷன்ல தங்கமணியின் ரோல் ஏதும் வரலை. அடை தீர்ந்து போன கடுப்பில் இருந்த மாமிகள் வீட்டுக்கு கிளம்ப "தோ இப்ப இந்த தடவை வந்துடும், கொஞ்சம் இருங்க"ன்னு கெஞ்ச நான் போய் சமாதானமாக "தோ பார் இப்படித்தான் இருக்கும். நான் பதிவ போட்டுட்டு இப்படித்தான் பரபரப்பா இருப்பேன்"ன்னு ஏதேதோ சொல்ல "அய்யோ அய்யோ அதோ ஆடுது அதோ ஆடுது"ன்னு கூச்சல். நான் உத்து உத்து பார்க்க "எங்க பார்க்கறீங்க, அதோ வலமிருந்து இடமா இரண்டாவதா ஆடுது பாருங்க"ன்னு சொன்னப்ப நான் "அட நம்ம பிரியா"ன்னு சொல்ல "அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா"ன்னு சொல்ல எனக்கு தலை சுத்திகிட்டு கிர்ர்ர்ர்ன்னு வந்துச்சு. பக்கத்து வீட்டு மாமி எல்லாம் "ஏண்டீ நன்னா இருக்கே, இது அந்த பார்த்த முதல் நாளேல கமலி கட்டிண்டு வர்ர அதே டிசைன் தானே, சூப்பரா இருக்குடீ, அதிலயும் அந்த கருப்பு கலர் சேரிக்கு சிகப்பு பார்டரும் அட்டாச்சுடு பிளவுசும் சும்மா அசத்திட்டே போ..."ன்னு சிலாகித்து பேச பேச "கொஞ்சம் இருங்க மாமி, அடை மொருகலா எடுத்துட்டு வர்ரேன்"ன்னு கிச்சன் உள்ளே போக அப்போ பார்த்து மாடியிலே சுட்டி டிவி பார்த்து முடிச்ச பிரேக் டைம்ல வந்த பாப்பா "மாமீஸ் அடுத்த வாரம் சேம் டைம்க்கு வந்துடுங்கோ, என் நிகழ்ச்சி இருக்கு"ன்னு குண்டை தூக்கி போட நான் மெதுவா பாப்பாகிட்டே கேட்டேன் என்ன நிகழ்ச்சின்னு. அதுக்கு அவ 'வர வர நமீதா கவுன் பெருசா இருக்குதாம். அதான் என் ஃபஸ்ட் பர்த் டே கவுனை கூரியர் பன்ணியிருக்கேன் வர்ர வாரம் மானாட மயிலாட நம்ம நிகழ்ச்சி தான்"ன்னு நக்கலா சொல்லிட்டு போனா!!

என்ன கொடுமை சாரே!!

இவரின் மீதி நகைச்சுவை பதிவுகளை இங்கே படியுங்கள்.

************************************************

19 கருத்துக்குத்து:

LOSHAN on January 18, 2009 at 12:09 AM said...

அடப்பாவி .. நானும் எனவோ எதோன்னு பதறியடிச்சு ஆர்வத்தோட வந்தா.. ஆனாலும் நல்லாவே சிரிச்சேன்.. அதிலும் நமீதா கவுன் மேட்டர் அருமை..

LOSHAN on January 18, 2009 at 12:09 AM said...

wow.. me the 1st.. ;)

குப்பன்_யாஹூ on January 18, 2009 at 8:53 AM said...

i too came with huge expectation, but unable to read fully about vijaya tv writing.

அத்திரி on January 18, 2009 at 9:10 AM said...

//"அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா//

அய்யய்ய்யோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

என்ன வுட்டுடு சகா.................

Sinthu on January 18, 2009 at 9:12 AM said...

super.............................

Thusha on January 18, 2009 at 9:22 AM said...

ஹி ஹி ஹி

கார்க்கி on January 18, 2009 at 12:39 PM said...

// LOSHAN said...
அடப்பாவி .. நானும் எனவோ எதோன்னு பதறியடிச்சு ஆர்வத்தோட வந்தா.. ஆனாலும் நல்லாவே சிரிச்சேன்.. அதிலும் நமீதா கவுன் மேட்டர் அரு//

தலைப்பு கூட அவர் வைத்ததுதான்.. என் வேலை இல்லீங்கண்ணா

***********************

// குப்பன்_யாஹூ said...
i too came with huge expectation, but unable to read fully about vijaya tv wriடிங்//

:))))

********************

// அத்திரி said...
//"அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா//

அய்யய்ய்யோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

என்ன வுட்டுடு சகா....//

ஹிஹிஹிஹி

கார்க்கி on January 18, 2009 at 12:40 PM said...

// Sinthu said...
supஎர்..//

வருகைக்கு நன்றி..புதுசா கவிதை ஏதாவ்து எழுதனியா?

************
// Thusha said...
ஹி ஹி ஹி//

கிகிகிகி

mannar on January 18, 2009 at 2:18 PM said...

http://in.youtube.com/watch?v=rMfjuBX_qw0
enga talaivar sam anderson tiramaia paruanga!!!!!!!!!!!!!!

வித்யா on January 18, 2009 at 4:21 PM said...

நல்லாருந்தது:)

வால்பையன் on January 18, 2009 at 5:30 PM said...

ஜூப்பரு

அவரு எப்பவுமே இப்படி தான் சத்தமில்லாம சிரிக்க வச்சிட்டு போவாரு

அபி அப்பா on January 18, 2009 at 5:49 PM said...

அட! எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு படிச்சுகிட்டே வந்தா, அட நான் எழுதுனதுதான்! ரொம்ப நன்றிப்பா!

அன்புடன்
அபிஅப்பா

Sinthu on January 18, 2009 at 6:21 PM said...

ம்ம் எழுதியிருக்கேன். நேரம் இருந்தா கருத்து சொல்லுங்கோ...........

Priya Kannan on January 18, 2009 at 11:19 PM said...

இந்த வார விகடனிலும் அபிஅப்பா ப்ளாக் பத்தின செய்தி வந்து இருக்கே :)

-- Tharani priya

ஸ்ரீமதி on January 19, 2009 at 9:13 AM said...

super :))))))))

கார்க்கி on January 19, 2009 at 9:52 AM said...

நன்றி வித்யா

நன்றி வால்

*********************

//அட! எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு படிச்சுகிட்டே வந்தா, அட நான் எழுதுனதுதான்! ரொம்ப நன்றிப்பா!

அன்புடன்
அபிஅப்//

வருகைக்கு நன்றி அபிஅப்பா.. மேலும் விகடன் மேட்டருக்கு வாழ்த்துகள்.. உடல்நலம் எப்படியிருக்கு?

**************************

//இந்த வார விகடனிலும் அபிஅப்பா ப்ளாக் பத்தின செய்தி வந்து இருக்கே :)

-- Tharani pரிய//

அப்படியா??????

*****************

// ஸ்ரீமதி said...
super :))))))))//

வாம்மா மின்னல்

Anonymous said...

Enda Mokkai podringa

Anonymous said...

கார்க்கி,
அபிஅப்பாவோட 'கலக்குறே சந்துரு' தான் பெஸ்ட்.

கார்க்கி on January 20, 2009 at 10:12 AM said...

// Manmatha Rasa said...
Enda Mokkai podர்இங//

மொக்கை போடக்கூடாதா???????????????

*******************

//வடகரை வேலன் said...
கார்க்கி,
அபிஅப்பாவோட 'கலக்குறே சந்துரு' தான் பெஸ்ட்//

தேடி படிக்க்றேன்ணணா

 

all rights reserved to www.karkibava.com