Jan 21, 2009

காக்டெய்ல்


   என் வலையில் மேல் வலது மூலையில் இருக்கும் ‘Vertx Solutions’ விளம்பரத்தைப் பார்த்து சிலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். அது என் நண்பனுடைய உறவினர் நடத்தும் கன்சல்டன்சி. என்னை தொடர்ந்து வாசிக்கும் அவர் அங்கே Bidvertiser விளம்பரம் இருந்ததைப் பார்த்து தன் இணையத்தளத்திற்கு சுட்டி தருவதற்கு மாதம் எவ்வளவு என்றார். இப்படி கேட்டதற்கே அவருக்கு ஆண்டு சந்தா இலவசமாக தந்துவிட்டேன். சந்தை மந்தமான போதும் அவர் நிறுவனம் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. அவர் தளத்தில் இருக்கும் Hot jobs உங்களக்கு சரிபட்டு வருமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.All the best.

*************************************************     விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது நடந்த போஸ்டர் கலாட்டாவைப் பற்றி வருத்தப்பட்ட பதிவுலக நண்பர் ஒருவர் அஜித்தின் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்றார். நான் பார்த்த நொந்த கதையெல்லாம் சொன்னபோது ஆதாரம் இருக்கா என்றார். வேற வேலையில்லையா எனக்கு என்று விட்டுவிட்டேன். நேற்று நம்ம சகா சரவணகுமரன் பதிவுல் இருந்த படத்தைப் பார்த்து அவருக்கு அழைத்தேன். அவரும் பார்த்திருப்பார் என நினைக்கிறேன். எடுக்கவேயில்லை.நீங்களும் என்ஜாய் மக்களே.

*************************************************     கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மந்தமான பதிவுலகம் இன்னமும் மீளவில்லை. பலரது ஹிட் கவுண்டரையும் பார்க்கும் போது இது தெளிவாக தெரிகிறது.அப்படியே புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விடுமுறை என்பது ஒரு காரணமாக இருக்கும் என்று தோண்றவில்லை. நடுவே குமுதம் மற்றும் விகடன் உபயத்தால் குறிப்பிட்ட சிலரது கிராஃப் மற்றும் எகிறியது. ஆனால் பொதுவாக வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெறும் 200 ஹிட்ஸ் பெற்றாலே பதிவுகள் சூடாகிறது. அது மட்டுமில்லாமல் வில்லுவும், திருமாவும், திருமங்லமும் ஒரு வாரத்திற்கு மேலாக சூடான இடுகையை ஆக்ரமிப்பு செய்கின்றன. பல ரெகுலர் வாசகர்களை காணவில்லை. Recession தான் காரணமா? ஒரு வேளை சத்யமில் இருப்பவர்கள்தான் பதிவுலகை காப்பாற்றி வந்தார்களா? மென்பொருள் துறையினர் அலுவலகத்தில் படிக்க பயப்படுகிறார்களா? எப்போது இது மீளும்? (சப்பா.. கேள்வி கேட்டதுக்கே கண்ன கட்டுதே)

*************************************************

  சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இன்ஃபோஸிசல் கேட்கப்பட்ட கேள்வி என்றும், பதலளிப்பவர் ஜீனியஸ் என்றும் சொன்னது அந்த எஸ்.எம்.எஸ்.  “I + opposite of W + first of Ice + double time Yes +  3/4 of X + 15th letter + Half ‘O’ ”.

   இரண்டாவது எழுத்தைத் தவிர மற்றவற்றை கண்டுபிடித்து எழுதிய போது இப்படி வந்தது “I _iss you”. நானாக அதை “K” என்று நினைத்துக் கொண்டு அதே எண்ணுக்கு ரிப்ளை அனுப்பும்போது நல்ல வேளையாக தவறுதலாக கேன்சல் பொத்தானை அமுக்கிவிட்டேன். பின் “I Miss You” என்று சரியாக அனுப்பி யாரென்று கேட்டால் பிரபலமான ஒரு பெண் பதிவர் தன் பெயரை அனுப்பினார். அந்த அக்காவிடமிருந்து  ஜஸ்ட் எஸ்கேப் ஆனாலும் இதுவரை அவருக்கு அடுத்த எஸ்.எம். எஸ் அனுப்பவில்லை.

    சேட்டில வந்த இன்னொரு பெண்பதிவர் "சகா" என்பது ஆணகளுக்கு மட்டுமா என்றுக் கேட்டார். ஆமாம், வேண்டுமென்றால் உங்களை சகி என்றழைக்கிறேன் என்று சொல்ல வந்தேன். நம் திரைப்படங்கள் சகி என்பதை காதலியாக மட்டுமே அர்த்தம் கொண்டுள்ளதால், இல்லங்க.. அது இரு பாலினருக்கும் பொதுவென்று சொல்லிவிட்டேன். Mankind என்பது ஆண்களுக்கு மட்டுமா என்ன? அது எப்படி இருவருக்கும் பொதுவானதோ அது போலத்தான் சகாவும்.. என்ன லேடீஸ்.. சூப்பர் சகான்னு பின்னூட்டம் போடத் தயாரா?

52 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on January 21, 2009 at 11:16 AM said...

சூப்பர் சகா

ஸ்ரீமதி on January 21, 2009 at 11:19 AM said...

நான் சூப்பர் அண்ணான்னுதான் போடுவேன்... பரவால்லயா சகா? ;))))

ஸ்ரீமதி on January 21, 2009 at 11:21 AM said...

3rd one நானும் நினைச்சதுதான் :))

வெண்பூ on January 21, 2009 at 11:21 AM said...

ஆனாலும் ரசிக *ஞ்சுகள் எந்த லெவலுக்கு வேணும்னா போறாங்க... :)))

//
எப்போது இது மீளும்?
//
யாருக்குத் தெரியும்?

ஸ்ரீமதி on January 21, 2009 at 11:22 AM said...

அந்த SMS எனக்கும் வந்தது... நான் கரெக்ட்டா சொல்லிட்டேனே.. :)

தாரணி பிரியா on January 21, 2009 at 11:23 AM said...

பின்ன அஜீத் ரசிகர்கள் எல்லாம் செம டீசண்டாக்கும்

* * *

எல்லாம் லீவு மூடுதான். மென்பொருள் துறையில நைட் எட்டு மணிக்கு ஆபிஸ்ல உட்காந்து ப்ளாக் படிக்கறவங்களை எழுதறவங்களை எல்லாம் எனக்கு தெரியுமே. அவங்களாவது பயப்படறாவது.

* * *

:)

* * *

சகின்னு தோழின்னுதான் அர்த்தம். அதனால கூப்பிடலாம் சகா.

(ஆனா என்னையும் சகிச்சுகோன்னு சொல்லறீங்களான்னு அவங்க கேட்டா நான் பொறுப்பில்லை :)

சரவணகுமரன் on January 21, 2009 at 11:27 AM said...

கார்க்கி, இதனால அஜித் ரசிகர்கள் என்னை சபிச்சிட மாட்டாங்களே?

அத பார்த்து சந்தோஷம்தான் படுவாங்கன்னு நினைக்கிறேன்.

முரளிகண்ணன் on January 21, 2009 at 11:35 AM said...

:-)))))))))))))))))

கார்க்கி on January 21, 2009 at 11:38 AM said...

// ஸ்ரீமதி said...
நான் சூப்பர் அண்ணான்னுதான் போடுவேன்... பரவால்லயா சகா? ;))))//

நீ எதாவது போடு.. சொல்ற பேச்ச கேட்கிறவங்ககிட்டதான் சொல்ல முடியும்

*******************

// தாரணி பிரியா said...
பின்ன அஜீத் ரசிகர்கள் எல்லாம் செம டீசண்டாக்கும்//

ஹிஹிஹி.. நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..

//சகின்னு தோழின்னுதான் அர்த்தம். அதனால கூப்பிடலாம் சகா.

(ஆனா என்னையும் சகிச்சுகோன்னு சொல்லறீங்களான்னு அவங்க கேட்டா நான் //

சூப்பர்..

***********************

//வெண்பூ said...
ஆனாலும் ரசிக *ஞ்சுகள் எந்த லெவலுக்கு வேணும்னா போறாங்க.//

ஆமாம் சகா

**********************

/சரவணகுமரன் said...
கார்க்கி, இதனால அஜித் ரசிகர்கள் என்னை சபிச்சிட மாட்டாங்களே//

எனக்கு தெரியாதுப்பா..

தாரணி பிரியா on January 21, 2009 at 11:41 AM said...

அய்யய்யோ சரவணக்குமார் லிங்க பாக்காமாயே அஜீத் ரசிகர்கள் டீசண்ட்னு சொல்லிட்டேன். வாபஸ் வாங்கிக்கறேன். விஜய்யெ தேவலாம் போல :)

என்ன கொடுமை இது

narsim on January 21, 2009 at 11:53 AM said...

சகா.. நாங்களும் தான் பதிவு போடுறோம்.. எங்ககிட்டயும் தான் மொபைல் இருக்கு..ஹும்.. சரி விடுங்க..

அஜித் மேட்டர விடமாட்டீங்களா..? தல தலதான் தல‌

வித்யா on January 21, 2009 at 12:08 PM said...

சூப்பர் சகா:))

வித்யா on January 21, 2009 at 12:09 PM said...

அய்யோ அந்த போட்டோ கண்ண கட்டுதுடா சாமி.

Sinthu on January 21, 2009 at 12:30 PM said...

"என்னுடைய நண்பி ஒருவரின் orkut கணக்கும் இப்படி திருடப்பட்டது நாங்கள் அதன் பின் தன் தெரியும் இப்படி எல்லாம் ஆக்கள் இருக்காங்க என்று"

sister is ok anna. keep going on that track ok va........

sister
sitnhu

Krish_007 on January 21, 2009 at 12:59 PM said...

சூப்பர் சகா. அந்த கொடுமைய நேத்தே பார்த்தாச்சு. வாயில்லாதா ஜீவன்களின் (கழுதை, மாடு) நலனில் அக்கறையோடு சரியாதான் செஞ்சிருக்காங்க (Paintla எழுதியது). ஏன்னா அவைகலாலேயே ஜீரணிக்க முடியாது என்பதை தெரிந்த ஜீவகருண்யம் உள்ளவர்கள்.

Jenbond

அ.மு.செய்யது on January 21, 2009 at 1:01 PM said...

//பல ரெகுலர் வாசகர்களை காணவில்லை. Recession தான் காரணமா? ஒரு வேளை சத்யமில் இருப்பவர்கள்தான் பதிவுலகை காப்பாற்றி வந்தார்களா? மென்பொருள் துறையினர் அலுவலகத்தில் படிக்க பயப்படுகிறார்களா?//

மென்பொருள் துறையினருக்கு பதிவுகளைப் படிப்பதை விட வேறெந்த வேலையும் இப்போது இல்லை.

prakash on January 21, 2009 at 1:04 PM said...

//இப்படி கேட்டதற்கே அவருக்கு ஆண்டு சந்தா இலவசமாக தந்துவிட்டேன். //

:))

அ.மு.செய்யது on January 21, 2009 at 1:05 PM said...

சகா சகி நல்ல விளக்கம்.

உக்காந்து யோசிப்பிங்களோ ????

சூப்பர் சகா...

vinoth gowtham on January 21, 2009 at 1:06 PM said...

அந்த வாழ்த்து செய்தி உணர்ச்சி வசப்பட்ட சில ரசிகர்களின் வேலை.
அந்த ஒரு இடத்துல மட்டும் தானே இருக்கு..ஊரு முழுவதும் அதே மாதரி பண்ணலியே. ஆனா விஜய்க்கு பட்டம் கொடுத்தபா அவங்க பண்ண அட்டகாசம் கொஞ்சமா நஞ்சமா..

prakash on January 21, 2009 at 1:08 PM said...

//அவர் தளத்தில் இருக்கும் Hot jobs உங்களக்கு சரிபட்டு வருமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்//

இப்ப இருக்கிற job கூட ஹாட்டா தான் இருக்கு. சூடு தாங்காம எப்ப எழுந்து ஒடபோறனோ தெரியல :))

கார்க்கி on January 21, 2009 at 1:10 PM said...

/தாரணி பிரியா said...
அய்யய்யோ சரவணக்குமார் லிங்க பாக்காமாயே அஜீத் ரசிகர்கள் டீசண்ட்னு சொல்லிட்டேன். வாபஸ் வாங்கிக்கறேன். விஜய்யெ தேவலாம் போல :)

என்ன கொடுமை இ//

நோட் த பாய்ண்ட் மிஸ்டர். வினோத் கெளதமன்..

*********************

//narsim said...
சகா.. நாங்களும் தான் பதிவு போடுறோம்.. எங்ககிட்டயும் தான் மொபைல் இருக்கு..ஹும்.. சரி விடுங்க..

அஜித் மேட்டர விடமாட்டீங்களா..? தல தலதான் த//

ஹிஹிஹி
************************

//வித்யா said...
சூப்பர் சகா:))//

ரைட் சகா

******************

//sister is ok anna. keep going on that track ok va........

sister
siட்ன்ஹு//
ஓக்கே சிஸ்டர்

Sinthu on January 21, 2009 at 1:12 PM said...
This comment has been removed by the author.
கார்க்கி on January 21, 2009 at 1:12 PM said...

//முரளிகண்ணன் said...
:-)))))))))))))))))//

என்ன தல?

*******************

/ Krish_007 said...
சூப்பர் சகா. அந்த கொடுமைய நேத்தே பார்த்தாச்சு. வாயில்லாதா ஜீவன்களின் (கழுதை, மாடு) நலனில் அக்கறையோடு சரியாதான் செஞ்சிருக்காங்க (Paintla எழுதியது). ஏன்னா அவைகலாலேயே ஜீரணிக்க முடியாது என்பதை தெரிந்த ஜீவகருண்யம் உள்ளவர்க//

கிகிகி..வேற ஒன்னும் சொல்லலப்பா

*******************

//மென்பொருள் துறையினருக்கு பதிவுகளைப் படிப்பதை விட வேறெந்த வேலையும் இப்போது இல்//

உண்மைதான் செய்யது சகா.. ஆனா பயப்படறாங்களோ?

//அ.மு.செய்யது said...
சகா சகி நல்ல விளக்கம்.

உக்காந்து யோசிப்பிங்களோ //

ஹிஹிஹிஹி

************************

prakash on January 21, 2009 at 1:12 PM said...

//நேற்று நம்ம சகா சரவணகுமரன் பதிவுல் இருந்த படத்தைப் பார்த்து//

அனோஷ்கா என்பது அஜித் பொண்ணு பேரா?

அந்த 2050 இல் முதல் குடிமகள் மேட்டரு சூப்பரப்பு:))

Thusha on January 21, 2009 at 1:15 PM said...

என்ன லேடீஸ்.. சூப்பர் சகான்னு பின்னூட்டம் போடத் தயாரா?

தயார்...............
ஆனால் அண்ணா சகாவை விட அண்ணா தன் நல்ல இருக்கு போல தெரியுது அண்ணா, ஆகவே உங்களை அண்ணா என்றே அழைக்கலாம் சரி தானே அண்ணா

சப்பா மொத்தமா எத்தினை அண்ணா வந்திட்டுது

கார்க்கி on January 21, 2009 at 1:16 PM said...

// vinoth gowtham said...
அந்த வாழ்த்து செய்தி உணர்ச்சி வசப்பட்ட சில ரசிகர்களின் வேலை.
அந்த ஒரு இடத்துல மட்டும் தானே இருக்கு..ஊரு முழுவதும் அதே மாதரி பண்ணலியே. ஆனா விஜய்க்கு பட்டம் கொடுத்தபா அவங்க பண்ண அட்டகாசம் கொஞ்சமா நஞ்சமா//

ஏனுங்கண்ணா.. அவிங்க பண்ணா உணர்ச்சி வசப்பட்டாங்க.. இவிங்க செஞ்சா ஆட்டமா? யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.. ஏலே பாண்டி எண்றா நான் சொலறது?( யாராவது 1 2 ந்னு எண்னுனிங்கணா அம்புட்டுதேன் சொல்லிபூட்டேன்)

**************

/ prakash said...
//அவர் தளத்தில் இருக்கும் Hot jobs உங்களக்கு சரிபட்டு வருமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்//

இப்ப இருக்கிற job கூட ஹாட்டா தான் இருக்கு. சூடு தாங்காம எப்ப எழுந்து ஒடபோறனோ தெரியல ://

ஏ,ஸீ கூட காஸ்ட் கட்டிங்ல போயிடுச்சாண்னே?

********************

// Sinthu said...
என்ன லேடீஸ்.. சூப்பர் சகான்னு பின்னூட்டம் போடத் தயாரா?

தயார்...............
ஆனால் அண்ணா சகாவை விட அண்ணா தன் நல்ல இருக்கு போல தெரியுது அண்ணா, ஆகவே உங்களை அண்ணா என்றே அழைக்கலாம் சரி தானே அண்ணா

சப்பா மொத்தமா எத்தினை அண்ணா //

அம்மா தாயீ நீ அண்ணான்னே சொல்லுன்னு சொல்லியாச்சு

வால்பையன் on January 21, 2009 at 1:21 PM said...

காக்டெயில் சூப்பராகீது சகா!

ஆணிகள் அதிகமே பதிவுலகம் காத்து வாங்க காரணம்

Anonymous said...

//வால்பையன் said...
காக்டெயில் சூப்பராகீது சகா!

ஆணிகள் அதிகமே பதிவுலகம் காத்து வாங்க காரணம்//

ரிப்பீட்டிக்கிறேன் சகா

vinoth gowtham on January 21, 2009 at 1:52 PM said...

//அஜீத் ரசிகர்கள் டீசண்ட்னு சொல்லிட்டேன். வாபஸ் வாங்கிக்கறேன். விஜய்யெ தேவலாம் போல..
நோட் த பாய்ண்ட்..//
//ஏனுங்கண்ணா.. அவிங்க பண்ணா உணர்ச்சி வசப்பட்டாங்க.. இவிங்க செஞ்சா ஆட்டமா? யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.. ஏலே பாண்டி எண்றா நான் சொலறது..//

ஒன்னும் சொல்றதுக்கு இல்லைங்க..ஆனா ஒன்னு மட்டும் புரியுது..அஜித் ரசிகர்களுக்கு விஜய சுத்தமா பிடிக்காது..
விஜய் ரசிகர்களுக்கு அஜித்தை பிடிக்கவே பிடிக்காது..

கரெக்டா ..

ஸ்ரீமதி on January 21, 2009 at 1:59 PM said...

//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
நான் சூப்பர் அண்ணான்னுதான் போடுவேன்... பரவால்லயா சகா? ;))))//

நீ எதாவது போடு.. சொல்ற பேச்ச கேட்கிறவங்ககிட்டதான் சொல்ல முடியும்//

:(((

கார்க்கி on January 21, 2009 at 2:06 PM said...

//வால்பையன் said...
காக்டெயில் சூப்பராகீது சகா!

ஆணிகள் அதிகமே பதிவுலகம் காத்து வாங்க காரணம்//

அப்பாடா.. ரொம்ப நாள் கழிச்சு மிக்ஸீங் நல்லாயிருக்குனு சொல்லியிருக்கிங்க சகா

********************

//சின்ன அம்மிணி said...
//வால்பையன் said...
காக்டெயில் சூப்பராகீது சகா!

ரிப்பீட்டிக்கிறேன் சகா//

ரைட் ஜூட்..

****************

//ஒன்னும் சொல்றதுக்கு இல்லைங்க..ஆனா ஒன்னு மட்டும் புரியுது..அஜித் ரசிகர்களுக்கு விஜய சுத்தமா பிடிக்காது..
விஜய் ரசிகர்களுக்கு அஜித்தை பிடிக்கவே பிடிக்காது..

கரெக்டா //

இல்லைங்க.. எனக்கு அஜித்தும் புடிக்கும்..:))))

********************

//நீ எதாவது போடு.. சொல்ற பேச்ச கேட்கிறவங்ககிட்டதான் சொல்ல முடியும்//

:(((//

அது.. ச்சும்மா.. பீ ஹேப்பீ

வனம் on January 21, 2009 at 2:15 PM said...

வணக்கம் கார்க்கி

ம்ம்ம் புரியுது, புரியுது

சரி நான் இப்போழுது துபையில் இருக்கின்றேன்

அதிகம் படிக்க முடியாது, நேரம் இல்லை

முடிந்தபோது வருகின்றேன்

நன்றி
இராஜராஜன்

vinoth gowtham on January 21, 2009 at 2:26 PM said...

//இல்லைங்க.. எனக்கு அஜித்தும் புடிக்கும்..:)))) //

Hello மிஸ்டர். கார்கி Blog தானே இது இல்ல மாத்தி வந்துட்டனா..

Krish_007 on January 21, 2009 at 2:27 PM said...

ஏன் சகா அஜித் & விஜய் (ரசிகர்களுக்குள் மட்டும்) அப்படி என்ன சொத்து தகராறு?. அஜித் ரசிகர்கள் விஜயை கேளி செய்வதும் விஜய் ரசிகர்கள் அஜித்தை கேளி செய்வதும் (karki, nanaadhavan) நிறுத்தவே முடியாதா? (உடனே "அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்னு" நாயகன் டயலாக் பேச்கூடாது). தமிழ் ரசிகர்கள் தங்களுடைய ரசனையை குறுகிய வட்டத்துக்குள்(தானை தலைவன்) நிறுத்திக்கொல்வதால்தான் எப்பொழுதாவது ஒரு சில நல்ல படங்கள் வருகின்றன. இதை பற்றி உங்களின் கருத்து என்ன.

Jenbond

அனுஜன்யா on January 21, 2009 at 2:29 PM said...

காக்டெயில் சூப்பராதான் இருக்கு. ஆமா, அஜித் மேல் உனக்கு ஏன் இந்த கொலைவெறி சகா?

அனுஜன்யா

நானும் ஒருவன் on January 21, 2009 at 3:44 PM said...
This comment has been removed by the author.
கார்க்கி on January 21, 2009 at 3:45 PM said...

// வனம் said...
வணக்கம் கார்க்கி

ம்ம்ம் புரியுது, புரியுது

சரி நான் இப்போழுது துபையில் இருக்கின்றேன்//

என்ன சகா? பெங்களூரில் இருந்து எப்போ போனிங்க? நலமா?

************************

/ vinoth gowtham said...
//இல்லைங்க.. எனக்கு அஜித்தும் புடிக்கும்..:)))) //

Hello மிஸ்டர். கார்கி Blog தானே இது இல்ல மாத்தி வந்துட்டனா//

ஹிஹிஹி..

**************************

//Krish_007 said...
ஏன் சகா அஜித் & விஜய் (ரசிகர்களுக்குள் மட்டும்) அப்படி என்ன சொத்து தகராறு?//

இதுக்கு தனியா பதில் சொல்றேன்.. இல்லைன்னா என்ன அஜித் ரசிகர்கள் கொலையே பண்ணிடுவாங்க..

*********************

// அனுஜன்யா said...
காக்டெயில் சூப்பராதான் இருக்கு. ஆமா, அஜித் மேல் உனக்கு ஏன் இந்த கொலைவெறி ச//

ஏண்ணா இந்தக் கேள்விய சரவனகுமரன கேட்கல? :))))

Prosaic on January 21, 2009 at 3:49 PM said...

good one!

Sinthu on January 21, 2009 at 4:14 PM said...

" “I + opposite of W + first of Ice + double time Yes + 3/4 of X + 15th letter + Half ‘O’ ”."

நல்ல கண்டுபிடிப்பு........

Karthik on January 21, 2009 at 4:33 PM said...

1. good. :)

2. anyway ajith fans are the 'standard' you guys are trying to get. :)

3. really? :(

4. aha, this sounds cool. :)

கார்க்கி on January 21, 2009 at 5:19 PM said...

//Prosaic said...
good ஒனெ!//

தாங்க்ஸ் பிரதர்

***************

// Sinthu said...
" “I + opposite of W + first of Ice + double time Yes + 3/4 of X + 15th letter + Half ‘O’ ”."

நல்ல கண்டுபிடிப்பு....//

நான் கண்டுபிடிக்கலம்மா

***************

@கார்த்திக்,

நீயுன் அஜித் அபிமானின்னு உளவுத்துறை தகவல் சொல்லுதே.. உண்மையா?

Anonymous said...

கிகிகிகிகி.. :P

Krish_007 on January 21, 2009 at 5:40 PM said...

\\
// Sinthu said...
என்ன லேடீஸ்.. சூப்பர் சகான்னு பின்னூட்டம் போடத் தயாரா?

தயார்...............
ஆனால் அண்ணா சகாவை விட அண்ணா தன் நல்ல இருக்கு போல தெரியுது அண்ணா, ஆகவே உங்களை அண்ணா என்றே அழைக்கலாம் சரி தானே அண்ணா

சப்பா மொத்தமா எத்தினை அண்ணா //

அம்மா தாயீ நீ அண்ணான்னே சொல்லுன்னு சொல்லியாச்சு
//

saga ANNA appadinu chellama kuppitta ENNAMA THNAGACHIIIIIIII nu Sivagi mathiri feelings of India nu agama pakistan terror partha vijayakanth mathiri terrora sollunu solringa. Anna nu sollurathu avalavu periya ketta varthiya. Ungali irandu mundru per sonathuke kobapadurinka. Annadurai (X CM) ellarume annanuthan koopittanga ana avar kovame padalai.


\\இதுக்கு தனியா பதில் சொல்றேன்\\

when, where

கணினி தேசம் on January 21, 2009 at 9:34 PM said...

//சந்தை மந்தமான போதும் அவர் நிறுவனம் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. //
கேற்கவே சந்தோசமா இருக்கு. ஹ்ம்ம்.


//மென்பொருள் துறையினர் அலுவலகத்தில் படிக்க பயப்படுகிறார்களா? எப்போது இது மீளும்?
//

சகா...எங்க..அலுவலகத்துல ப்ளாக் தளங்கள் திறக்க தடை :(((.

//எழுதிய போது இப்படி வந்தது “I _iss you”. //
நல்ல வேலை.. தவறி அனுப்பியிருந்தா "I KICK YOU" னு பதில் வந்திருக்கும். :-))சகா.... காக்டெய்ல் சுவை.!!

தமிழன்-கறுப்பி... on January 22, 2009 at 1:20 AM said...

இதுக்கு இன்னொரு காரணம் இருக்கு கார்க்கி வன்னியும் ஈழமும் தருகிற விரக்தி எந்த பதிவுகள் பக்கமும் செல்ல முடிவதில்லை, சொல்லப்போனா...
நான் வழமையாக பின்னூட்டம் போடுகிறேனோ இல்லையோ பதிவுகள் எல்லாம் படிப்பவன் ஆனால் எனக்கு கடந்த சில நாட்களாக பதிவுகள் எழுதவோ படிக்கவோ மனது வரவில்லை...

கார்க்கி on January 22, 2009 at 10:55 AM said...

// Thooya said...
கிகிகிகிகி//

ஹிஹிஹிஹிஹி

***************

//aga ANNA appadinu chellama kuppitta ENNAMA THNAGACHIIIIIIII nu Sivagi mathiri feelings of India nu agama pakistan terror partha vijayakanth mathiri terrora sollunu solringa. Anna nu sollurathu avalavu periya ketta varthiya. Ungali irandu mundru per sonathuke kobapadurinka. Annadurai (X CM) ellarume annanuthan koopittanga ana avar kovame padஅலை//

நான் எங்கண்ணா கோவப்பட்டேன்.. தம்பிய அண்ணான்னு சொன்னதால் ஒரு வருத்தம் அவ்வள‌வுதான்

//\\இதுக்கு தனியா பதில் சொல்றேன்\\

when, wஹெரெ//

மெய்ல்லதான்

**********************
//கணினி தேசம் said...

சகா...எங்க..அலுவலகத்துல ப்ளாக் தளங்கள் திறக்க தடை :(((.//

:(((((

//சகா.... காக்டெய்ல் சுவை.!//

நன்றிங்க‌

**************************

//தமிழன்-கறுப்பி... said...
இதுக்கு இன்னொரு காரணம் இருக்கு கார்க்கி வன்னியும் ஈழமும் தருகிற விரக்தி எந்த பதிவுகள் பக்கமும் செல்ல முடிவதில்லை, சொல்லப்போனா...
நான் வழமையாக பின்னூட்டம் போடுகிறேனோ இல்லையோ பதிவுகள் எல்லாம் படிப்பவன் ஆனால் எனக்கு கடந்த சில நாட்களாக பதிவுகள் எழுதவோ படிக்கவோ மனது வரவில்லை..//

இதனால் பலர் வரவில்லை என்றால் ஓக்கேதான்..

Bleachingpowder on January 22, 2009 at 2:21 PM said...

டாக்டர் - விஜய்
ajith daughter - president

Good kopination

//பல ரெகுலர் வாசகர்களை காணவில்லை. Recession தான் காரணமா? //

Appraisal time தல அதான் :))

Sundar on January 22, 2009 at 7:34 PM said...

//அந்த அக்காவிடமிருந்து ஜஸ்ட் எஸ்கேப் ஆனாலும்//
ரொம்ப பயப்படாதீங்க சகா. ஒன்னும் உங்களை மீறி யாரும் உறவை மற்ற முடியாது.

Sundar on January 22, 2009 at 7:38 PM said...

//பல ரெகுலர் வாசகர்களை காணவில்லை. Recession தான் காரணமா? //
அதுவும் தான். படிக்க நிறைய மேட்டர் இருக்கு - ஒபாமா, சத்யம், அடுத்த ட்ரவுசர் தேடற வேலை.

அமிர்தவர்ஷினி அம்மா on January 27, 2009 at 5:12 PM said...

நல்லா காக்டெய்ல் கலக்கியிருக்கீங்க கார்க்கி சகா

:)-

தாமிரா on January 28, 2009 at 9:58 AM said...

விளம்பரம் இருந்ததைப் பார்த்து தன் இணையத்தளத்திற்கு சுட்டி தருவதற்கு மாதம் எவ்வளவு என்றார். இப்படி கேட்டதற்கே அவருக்கு ஆண்டு சந்தா இலவசமாக தந்துவிட்டேன். ///ROTFL..))

அத்தனை பகுதிகளுமே சிறப்பாக இருந்தது, குறிப்பாக பதிவுலக வாசகர்கள் குறித்த ஆராய்ச்சி.

கார்க்கி on January 28, 2009 at 5:11 PM said...

/ Sundar said...
//பல ரெகுலர் வாசகர்களை காணவில்லை. Recession தான் காரணமா? //
அதுவும் தான். படிக்க நிறைய மேட்டர் இருக்கு - ஒபாமா, சத்யம், அடுத்த ட்ரவுசர் தேடற வேலை//

உண்மைதான்

*************

// அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்லா காக்டெய்ல் கலக்கியிருக்கீங்க கார்க்கி சகா

:)-//

நன்றி அ.அம்மா

***************
// தாமிரா said...
விளம்பரம் இருந்ததைப் பார்த்து தன் இணையத்தளத்திற்கு சுட்டி தருவதற்கு மாதம் எவ்வளவு என்றார். இப்படி கேட்டதற்கே அவருக்கு ஆண்டு சந்தா இலவசமாக தந்துவிட்டேன். ///ROTFL..))

அத்தனை பகுதிகளுமே சிறப்பாக இருந்தது, குறிப்பாக பதிவுலக வாசகர்கள் குறித்த ஆராய்ச்சி//

நன்றி சகா

 

all rights reserved to www.karkibava.com