Jan 20, 2009

உங்க குழ‌ந்தையின் வய‌சு என்ன?


    சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மீது எனக்கொரு ஈர்ப்பு.எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும். எங்கள் பாட்டிகூட என்னிடம் ஏதோ காந்த சக்தி இருப்பதாக சொல்வார். பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும். என் இலையில் வைக்கப்பட்ட எல்லாம் அடுத்தடுத்த இலையில் இருக்கும். சுயபுராணம் போதும் எனிகிறீர்களா? ஓக்கே.

  என் சித்தி மகன் மற்றும் என் அக்கா மகன் இருவரையும் அருகில் இருந்து வளர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுவும் என் அக்கா ஒரு வருடம் ஆன்சைட் சென்று விட்டார். நான், என் அம்மா மற்றும் என் அக்கா மகன் மூவர் மட்டும்தான். அவனின் அப்பாவும் பெங்களுரில் இருந்தார்.

  நம் வீட்டு பெரியோர்கள் குழந்தை வளர்க்கும் முறையினை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.டென்னிஸ் பயிற்சி வகுப்பில் ஒருவர் சொன்னார். அவரின் மகனுக்கு இதில் விருப்பமில்லையாம். ஆனால் அவரின் ஆசைக்காக இங்கே சேர்த்திருக்கிறாராம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பத்தை திணிக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் விரும்பும் திரைப்படத்தை பார்க்க செல்வதால் தேவையில்லாமல் அவர்களையும் அந்த படங்களை பார்க்க வைக்கிறார்கள்.

திருமணத்திற்கு சென்றால் தன் வயது பிள்ளைகளோடு ஓடி விளையாடத்தான் எல்லா குழந்தைகளும் விரும்புவார்கள். தங்கள் அந்தஸ்த்தை சபைக்கு பறைசாற்ற ஷெர்வானி, குர்தா என அசெளகரிய ஆடைகள் அணிவித்து அவர்களை அடக்க முயலுவார்கள் பெற்றோர்கள். குழந்தைகளை இயல்பாய் இருக்கும்படி அனுமதிக்கும் பெற்றோர்களை காண்பதே அரிதாகிவிட்டது.

   அம்மா பசிக்குது என்று குழந்தைகள் வரும்போது கோலங்களில் மூழ்கிவிட்டு, பத்து மணிக்கு இரண்டு இட்லி போதுமென்னும் குழந்தையை அதட்டி மூன்றாக சாப்பிட வைப்பதை பாசம் என்கிறார்கள். நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை வேறு. மீறி எடுத்து போனால் "கேட்டதை விட அதிகமாக வாங்கி தருவதால் பணத்தின் மதிப்பு தெரியல" என்று திட்டு வேறு.

   நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவர்கள் சந்தோஷத்திற்கு எழுப்பிவிட்டு ஏதாவது விளையாடுவது போல் ஆரம்பிப்பார்கள். பிடிக்காமல் அழும் குழந்தையை பெற்றோர்கள் கண்டிப்பதை பார்த்தால் எனக்கு எரிச்சலாய் வரும். குழந்தையை பார்த்துக் கொள்வதாக சொல்லும் அனைவரும் அதன் மூலம் தங்கள் வேண்டியதை செய்கிறார்களே அன்றி குழந்தைக்கு தேவையானதை செய்வதே இல்லை.

  இது போதாதென்று வேலை செய்யும் பெற்றோர்களிடையே வளரும் ஈகோ குழந்தைகளை மேலும் கஷ்டப்படுத்துகிறது. அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குழந்தைக்காக  நேரம் ஒதுக்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். அப்போதும் தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவார்களே அன்றி குழ‌ந்தைக்கு தேவையான நேரத்தில் இருக்க மாட்டர்கள்.

   அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். நொடிக்கு நொடி வேஷம் மாற்ற வேண்டிய உலகத்தில் இருக்கும் நமக்கு இது சாத்தியமாவ‌தில்லை. பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோண்றுகிறது. தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்.உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?

54 கருத்துக்குத்து:

அத்திரி on January 20, 2009 at 10:49 AM said...

நாந்தான் முதல்ல

ஸ்ரீமதி on January 20, 2009 at 10:50 AM said...

அச்சச்சோ நான் செகண்ட் :))

அருண் on January 20, 2009 at 10:50 AM said...

உர்ர்ர்ர்ர். me the 3rd.

அத்திரி on January 20, 2009 at 10:55 AM said...

//அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.//

இந்த வரியில் ஒரு திருத்தம்.. அம்மா திட்டினால் இயல்பாகவே குழந்தைகள் அப்பாவிடம் போய் சொல்லும் நாம் கூப்பிடவே வேண்டாம். இது என் அனுபவம்.

அத்திரி on January 20, 2009 at 10:57 AM said...

//அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். //

கண்டிப்பா சகா .... மாறவில்லை என்றாலும் மாற்றி விடுவார்கள் சகா.....

Anonymous said...

:)

சரவணகுமரன் on January 20, 2009 at 10:58 AM said...

நல்ல பதிவு...

அத்திரி on January 20, 2009 at 10:59 AM said...

பதிவுக்கு பதிவு கலக்குற சகா ....... ஆனா என்ன திடீர்னு குழந்தைகளை பற்றிய பதிவு....


தாமிரா அண்ணே கவனிங்க

வித்யா on January 20, 2009 at 11:06 AM said...

என்ன தீடிர்ன்னு இப்படியொரு பதிவு?
இன்னும் கல்யாணமே ஆகலயே???
இருந்தாலும் பதிவு ரொம்ப நல்லாருந்தது. நாங்கள் கூட இப்படி நடந்து கொள்வதில்லை. ஆனால் சுற்றிருப்பவர்கள் அப்படி இருக்கவிடுவதீல்லை.

வித்யா on January 20, 2009 at 11:06 AM said...

me the 10th:))

Krish_007 on January 20, 2009 at 11:13 AM said...

Enna saga neenga sonnathu ellam unmaya?. Namma CBI report padi chinna kulandhaikal ungala kanda "Ayyo amma puchandiiiiiii"nu allum nu sollranga. Kulandhaikal valarpinai patri gnani "ARINTHUM ARIYAMALUM" padichingala. Ungalaku usefulla irukkum (Ungaluku kalayanam mudinchithulla?).

Jenbond

ஸ்ரீமதி on January 20, 2009 at 11:14 AM said...

சரி நாமளாவது அவங்களுக்கு ஆதரவா இருக்கலாம்ன்னு நினைச்சா.. நீ என்ன குழந்தைங்களோட விளையாடிட்டு இருக்கன்னு திட்டு தான் விழுது.. :(( வாட் டு டூ?? இதுங்களும் திருந்தாது.. நமக்கும் வழிவிடாது.. :( (சாரி நிஜமான கோபம்..)

கார்க்கி on January 20, 2009 at 11:14 AM said...

முதல் மூன்று இடங்களை வென்ற அத்திரி, ஸ்ரீமதி மற்றும் அருணுக்கு வாழ்த்துகள் :))))

***************************
//இந்த வரியில் ஒரு திருத்தம்.. அம்மா திட்டினால் இயல்பாகவே குழந்தைகள் அப்பாவிடம் போய் சொல்லும் நாம் கூப்பிடவே வேண்டாம். இது என் அனுபவம்//

அது வேறு சகா. நான் சொல்வது அவர்களிடையே உள்ள ஈகோவால் அரவணைப்பது


****************************

நன்றி தூயா, சரவணகுமரன்

*********************
//வித்யா said...
என்ன தீடிர்ன்னு இப்படியொரு பதிவு?
இன்னும் கல்யாணமே ஆகலயே???
இருந்தாலும் பதிவு ரொம்ப நல்லாருந்தது//

இதற்கு விடையாகத்தான் முதல் இரண்டு பத்தியை சேர்த்திருந்தேன். திருமணம் ஆகவில்லை ஆனால் குழந்தை வளர்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் சொல்கிறேன்.

நன்றி வித்யா

கார்க்கி on January 20, 2009 at 11:17 AM said...

//Krish_007 said...
Enna saga neenga sonnathu ellam unmaya?. Namma CBI report padi chinna kulandhaikal ungala kanda "Ayyo amma puchandiiiiiii"nu allum nu sollranga. Kulandhaikal valarpinai patri gnani "ARINTHUM ARIYAMALUM" padichingala. Ungalaku usefulla irukkum (Ungaluku kalayanam mudinchithulla?).

Jenபொன்ட்//

கப்பலோட்டுபவரே நீங்கள் யாரென்று நான் கண்டுபிடித்துவிட்டேன். நாங்களும் ஜேம்ஸ்பான்டுதான். ஏன் இந்த கொலவெறி?

***************************

//ஸ்ரீமதி said...
சரி நாமளாவது அவங்களுக்கு ஆதரவா இருக்கலாம்ன்னு நினைச்சா.. நீ என்ன குழந்தைங்களோட விளையாடிட்டு இருக்கன்னு திட்டு தான் விழுது.. ://

உங்கள பத்தி குழந்தை ஏதாவது புகார் பண்ணியிருக்கும். கவிதை சொல்லி கொல்றாளேன்னு

அத்திரி on January 20, 2009 at 11:18 AM said...

//அது வேறு சகா. நான் சொல்வது அவர்களிடையே உள்ள ஈகோவால் அரவணைப்பது//


அது ஈகோ கிடையாது..... ஊடலால் ஏற்படுத்தப்படுவது..


உனக்கு இப்ப புரியாது

மிஸஸ்.டவுட் on January 20, 2009 at 11:18 AM said...

//"உங்க குழ‌ந்தையின் வய‌சு என்ன?"//

என் மகள் சில நேரங்களைத் தவிர பெரும்பாலும் அவளது இஷ்டப் படியே வளர்கிறாள்(வளர்க்கப் படுகிறாள்...கவனமான கண்காணிப்பில்!!!) குழந்தைகளின் சின்ன சின்ன உணர்வுகள் மதிக்கப் பட்டால் போதும் பெற்றோர்கள் தங்களது குழந்தைப் பருவத்தை மறுபடி மீட்டெடுக்கலாம் ஒவ்வொரு குழந்தை வளரும் போதும்.
நல்ல பதிவு கார்க்கி .

ஸ்ரீமதி on January 20, 2009 at 11:21 AM said...

// கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
சரி நாமளாவது அவங்களுக்கு ஆதரவா இருக்கலாம்ன்னு நினைச்சா.. நீ என்ன குழந்தைங்களோட விளையாடிட்டு இருக்கன்னு திட்டு தான் விழுது.. ://

உங்கள பத்தி குழந்தை ஏதாவது புகார் பண்ணியிருக்கும். கவிதை சொல்லி கொல்றாளேன்னு//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :))

Krish_007 கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டே... :)))

அ.மு.செய்யது on January 20, 2009 at 11:23 AM said...

//அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். நொடிக்கு நொடி வேஷம் மாற்ற வேண்டிய உலகத்தில் இருக்கும் நமக்கு இது சாத்தியமாவ‌தில்லை. //

உண்மை...

பெற்றோர்கள் இந்த பதிவை கண்டிப்பாக படிக்க வேண்டும்

narsim on January 20, 2009 at 11:24 AM said...

நல்ல பதிவு சகா..

கார்க்கி on January 20, 2009 at 11:25 AM said...

//அது ஈகோ கிடையாது..... ஊடலால் ஏற்படுத்தப்படுவது..


உனக்கு இப்ப புரியா//

கோச்சுக்காதீங்க.. நான் சொல்றது வேலைக்கு செல்லும்,குறிப்பாக ஐ.டி பெற்றோர்களின் மனநிலை பற்றி. அவர்களிடையே ஊடல் என்பது இல்லை. ஊடல் என்றால் ஓரிரு நாளில் சரியாகிவிடும். ஈகோ வந்துவிட்டால் எப்போதும் பிரச்சினைதான்.

*****************************

// மிஸஸ்.டவுட் said...
//"உங்க குழ‌ந்தையின் வய‌சு என்ன?"//

என் மகள் சில நேரங்களைத் தவிர பெரும்பாலும் அவளது இஷ்டப் படியே வளர்கிறாள்(வளர்க்கப் படுகிறாள்...கவனமான கண்காணிப்பில்!!!) குழந்தைகளின் சின்ன சின்ன உணர்வுகள் மதிக்கப் பட்டால் போதும் பெற்றோர்கள் தங்களது குழந்தைப் பருவத்தை மறுபடி மீட்டெடுக்கலாம் ஒவ்வொரு குழந்தை வளரும் போதும்.
நல்ல பதிவு கார்க்//

வலையில் இருக்கும் அனைத்து அம்மாம்க்களும் அப்படித்தான் என நினைக்கிறேன். நன்றி

கார்க்கி on January 20, 2009 at 11:27 AM said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :))

Krish_007 கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டே... :)))//

மவுண்ட் ரோடுல அண்ணா சாலை

ரஜினிகாந்த் முரட்டு காளை தெரியுமா?

*****************************

/
உண்மை...

பெற்றோர்கள் இந்த பதிவை கண்டிப்பாக படிக்க வேண்டும்//

நன்றி செய்ய்து

*******************************

/narsim said...
நல்ல பதிவு சகா.//

சும்மான்னாச்சுக்கும் சொல்ற மாதிரி இருக்கு தல :)))))))))

***********************

புதுகைத் தென்றல் on January 20, 2009 at 11:28 AM said...

நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவிற்கு என் பாராட்டுக்கள்.

பிள்ளைகளை எதற்கும் வற்புறுத்தக்கூடாது என்பதுதான் என் பாலிசி.

அத்திரி on January 20, 2009 at 11:32 AM said...

//கோச்சுக்காதீங்க.. நான் சொல்றது வேலைக்கு செல்லும்,குறிப்பாக ஐ.டி பெற்றோர்களின் மனநிலை பற்றி. அவர்களிடையே ஊடல் என்பது இல்லை. ஊடல் என்றால் ஓரிரு நாளில் சரியாகிவிடும். ஈகோ வந்துவிட்டால் எப்போதும் பிரச்சினைதான்.//

ஆமா சகா ஈகோன்னா இன்னாது??????????!!!!!!!!!!!

அத்திரி on January 20, 2009 at 12:03 PM said...

//எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும்//

உனக்கு எதிர் வரிசையில் யார் இருந்தா???????????

அத்திரி on January 20, 2009 at 12:04 PM said...

நாந்தான் 25..................

Krish_007 on January 20, 2009 at 12:23 PM said...

\\கப்பலோட்டுபவரே நீங்கள் யாரென்று நான் கண்டுபிடித்துவிட்டேன். நாங்களும் ஜேம்ஸ்பான்டுதான். ஏன் இந்த கொலவெறி?\\

saga nan kappal ottubavan illai. unmaiya sonna kovichukathinga enna unami sudum. ennoda comment ku repeat sonna SRIMATHI ku thx

Jenbond

முத்துலெட்சுமி-கயல்விழி on January 20, 2009 at 12:25 PM said...

எவ்வளவு கோவமா திட்டியிருந்தாலும் என் இரண்டு பிள்ளைங்களும் ஆறுதலுக்கும் என் கிட்டயே தான் வருவாங்க.. அப்பா திட்டினா அப்பாவே தான் ஏன் திட்டினாங்கன்னு சமாதனப்படுத்தனும்.. நான் திட்டினா நானே தான் சமாதானப்படுத்தனும்ன்னு இருக்கறது கூட ஒரு விதத்தில் நல்லாவே இருக்கு.. கொஞ்சம் டிஸ்கஷன்ஸ் போட்டுருவோம்.. திட்டுனவங்களும் திட்டபட்டவங்களும்.. :))

prakash on January 20, 2009 at 12:26 PM said...

//நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து,//

என் பொண்ணு உஷாரா ரெண்டு பொம்மையையும் கேட்பாள் :))
வாங்கி கொடுத்தால் வீட்டுக்கு வந்தவுடன் ரெண்டையும் தூர போட்டு விட்டு
கரண்டி, ஸ்பூன், டப்பா வகையறாக்களுடன் செட்டில் ஆகிடுவாங்க. நம்ம அதிகாரம் எல்லாம் அங்க செல்லாது...

Sinthu on January 20, 2009 at 12:41 PM said...

அனுபவம் இருப்பது போல் பட்டு பட்டு என்று சொல்றீங்களே அண்ணா. எப்படி உங்களால் மட்டும் முடிகிறது........

கார்க்கி on January 20, 2009 at 12:45 PM said...

/புதுகைத் தென்றல் said...
நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவிற்கு என் பாராட்டுக்க//

நன்றிக்கா

******************
//ஆமா சகா ஈகோன்னா இன்னாது??????????!!!!!!!!!!//

குஷி படம் பார்க்கலையா நீங்க?

*******************

//saga nan kappal ottubavan illai. unmaiya sonna kovichukathinga enna unami sudum. ennoda comment ku repeat sonna SRIMATHI ku thx

Jenபொன்ட்//

கோபமெல்லாம் இல்லை.. யாருன்னு சொல்லுங்க..

கார்க்கி on January 20, 2009 at 12:47 PM said...

/முத்துலெட்சுமி-கயல்விழி said...
எவ்வளவு கோவமா திட்டியிருந்தாலும் என் இரண்டு பிள்ளைங்களும் ஆறுதலுக்கும் என் கிட்டயே தான் வருவாங்//

கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. நன்றி

************************

//prakash said...
என் பொண்ணு உஷாரா ரெண்டு பொம்மையையும் கேட்பாள் :))
வாங்கி கொடுத்தால் வீட்டுக்கு வந்தவுடன் ரெண்டையும் தூர போட்டு விட்டு
கரண்டி, ஸ்பூன், டப்பா வகையறாக்களுடன் செட்டில் ஆகிடுவாங்க. நம்ம அதிகாரம் எல்லாம் அங்க செல்லாது..//

வாங்கி கொடுத்தா ஓக்கேதான்..

*************************

/ Sinthu said...
அனுபவம் இருப்பது போல் பட்டு பட்டு என்று சொல்றீங்களே அண்ணா//

ஹிஹிஹிஹி

Krish_007 on January 20, 2009 at 1:15 PM said...

Ungaludaya pudhiya saga. Padhivukalai mattum padithuvittu comments potathillai. My Name is JEGAN

Jenbond

Thusha on January 20, 2009 at 2:11 PM said...

" பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும்"

அப்ப பந்தியில் நீங்க தன் முதல் ஆளா ..................

:))))))))))

Thusha on January 20, 2009 at 2:15 PM said...

"/ Sinthu said...
அனுபவம் இருப்பது போல் பட்டு பட்டு என்று சொல்றீங்களே அண்ணா//

ஹிஹிஹிஹி"

ஆக, அண்ணா இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்.......................

கார்க்கி on January 20, 2009 at 3:31 PM said...

//Krish_007 said...
Ungaludaya pudhiya saga. Padhivukalai mattum padithuvittu comments potathillai. My Name is JEகாண் //

வாங்க சகா பழகலாம்..

***************

// Thusha said...
" பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும்"

அப்ப பந்தியில் நீங்க தன் முதல் ஆ//

ஹிஹிஹி..ஆமா

/
ஆக, அண்ணா இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்....//

அனுபவம் இருக்கு ஆனா இல்லைன்னு அர்த்தம்

ச்சின்னப் பையன் on January 20, 2009 at 4:47 PM said...

நல்ல பதிவு.... :-)))

Krish_007 on January 20, 2009 at 5:55 PM said...

naan ready saga.

அன்புடன் அருணா on January 20, 2009 at 6:52 PM said...

//தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்.உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?//

கட்டாயம் உணரவேண்டும் நவீன பெற்றோர்கள்....
அன்புடன் அருணா

கும்க்கி on January 20, 2009 at 7:41 PM said...

:-))

MayVee on January 20, 2009 at 7:43 PM said...

என்னை அப்பா, அம்மா. அண்ணன் என்ன முவரும் திட்டுவார்கள்....... அந்த மாதிரி சமயத்தில் books கூட டைம் spend பண்ணுவேன். இப்படி தான் நான் படிக்க அரமிசேன்....

நானும் ஒருவன் on January 20, 2009 at 7:50 PM said...
This comment has been removed by the author.
கணினி தேசம் on January 20, 2009 at 8:48 PM said...

இன்றுதான் படித்தேன்... நல்ல பதிவு.

டீவியில் மூழ்கியிருக்கும் பெற்றோருக்கு குட்டு!!

டிஸ்கி: நம்ம வீட்டுல.."எப்ப பாரு LapTop-ல உக்கார்ந்துடறீங்க..! சும்மா..சும்மா ப்ளாக் திறந்து வைச்சுக்கிறது... குழந்தைய கொஞ்சம் கவனீங்க" இப்படி டோஸ் விழுது.

பதிவுலகத்தில் கூட திட்டமிட்டு அளவுடன் நேரத்தை செலவு செய்வதாய் இருக்கிறேன்.

வால்பையன் on January 20, 2009 at 9:55 PM said...

நிறைய ஆண்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மனிதில் கொண்டு தான் மனைவியை வேலைக்கு அனுப்புவதில்லை, ஆனால் இதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்

Kathir on January 20, 2009 at 10:50 PM said...

ரொம்ப நல்ல பதிவு சகா..

என்னைய மாதிரி சின்ன பசங்களுக்கு பயனுள்ள விஷயங்கள்.....

//உனக்கு எதிர் வரிசையில் யார் இருந்தா???????????//

இதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை சகா.....

:))

Bleachingpowder on January 21, 2009 at 12:42 AM said...

செம ஃபார்ம்ல இருக்கீங்க தல. கலக்குங்க. உங்களூக்கு பிறக்க போகும் மகளோ, மகனோ ரொம்ப கொடுத்து வைக்த்தவர்கள்.

உங்க கிட்ட பிடிச்சதே இந்த வெரைட்டி தான். சினிமா,கவிதை,மொக்கை,குழந்தைகளோட உலகம்,காலேஜ் கலாட்டானு கல்ந்து கட்டி அடிக்குறீங்க. எப்ப தல பதிவை எழுதுவீங்க?

நான் பார்த்த வரை பெற்றோர்களிடம் பிடிக்காத ஒரு விசியம் என்றால் அது குழந்தை எதாவது ஒரு பொருளை கிழே போட்டு உடைத்து விட்டால் காட்டு கத்து கத்துவது. பாவம் அதுக்கு என்ன தெரியும்.

ஒரு நாள் கடைக்கு பால் வாங்க சென்ற போது அங்கே ஒரு சிறுவன் பால் பாக்கெட்டை வாங்கி தவறுதலாக கிழே கொட்டி விட்டான். அம்மா திட்டுவாள் என்று பயந்து விட்டிற்கு போக பயந்து அங்கேயே அழுது கொண்டிருந்தான், சிறிது நேரம் கழித்து அவனை தேடி வந்த அவனுடைய அம்மா பாலை கொட்டி விட்டான் என்று தெரிந்து அங்கேயே அடித்து இழுத்து சென்றதை பார்த்ததும் கொஞ்ச நேரம் மனசே சரியில்லை.

அதே போல் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை விட அதிக மதிப்பென் எடுக்கும் சக மாணவர்களை ஒப்பிட்டு திட்டுவது வாடிக்கை. ஆனால் எனக்கும் தெரிந்து எந்த குழந்தைகளும் அவர்கள் பெற்றோர்களை மற்ற் பெற்றோர்களோடு ஒப்பிடுவதில்லை.இப்பொழுதெல்லாம் குழந்தைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டியது தான் நிறைய

Natty on January 21, 2009 at 1:28 AM said...

கார்க்கி.. .அப்படி சில பெற்றோர்கள் இருக்கலாம்... ஆனா.. நான் பார்த்து நிறைய பெற்றோர்கள் குழந்தைகளிடம் குழந்தைகளாகவே பழகுகிறார்கள்... ;) , நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருக்கும் பெற்றோர்கள் நிறைய இருக்கிறார்கள்... உங்க பதிவு படிச்சா எல்லா பெற்றோர்களும் too bad ன்னு சொல்றா மாதிரி இருக்கு, ஒரு டிஸ்கி சேர்க்க கூடாதா?

பாபு on January 21, 2009 at 9:01 AM said...

//பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோண்றுகிறது. //

மிசச்சரியா சொல்லியிருக்கீங்க

கார்க்கி on January 21, 2009 at 10:43 AM said...

/ ச்சின்னப் பையன் said...
நல்ல பதிவு....//

நன்றி தல..

*******************

/கட்டாயம் உணரவேண்டும் நவீன பெற்றோர்கள்....
அன்புடன் அரு//

நன்றி அருணா

*******************

/ MayVee said...
என்னை அப்பா, அம்மா. அண்ணன் என்ன முவரும் திட்டுவார்கள்....... அந்த மாதிரி சமயத்தில் books கூட டைம் spend பண்ணுவேன். இப்படி தான் நான் படிக்க அரமிசேன்//

நல்ல பழக்கம்தானே

கார்க்கி on January 21, 2009 at 10:46 AM said...

//கணினி தேசம் said...
இன்றுதான் படித்தேன்... நல்ல பதிவு.

டீவியில் மூழ்கியிருக்கும் பெற்றோருக்கு குட்டு//

நீங்க படிச்ச நேத்துதான் இது பதிவேற்றப்பட்டது..:)))

******************

// வால்பையன் said...
நிறைய ஆண்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மனிதில் கொண்டு தான் மனைவியை வேலைக்கு அனுப்புவதில்லை, ஆனால் இதை புரிந்து கொள்ள மறுக்கிறார்க//

இந்த காலத்து இளஞர்கள் பெண் பார்க்கும்போதே வேலைக்கு செல்லபவர்களை கேட்கிறார்கள்.. அவர்களும் என்ன செய்வார்கள்.. பொருளாதாராம் அபப்டியிருக்கு..

************************

/Kathir said...
ரொம்ப நல்ல பதிவு சகா..

என்னைய மாதிரி சின்ன பசங்களுக்கு பயனுள்ள விஷயங்கள்.//

யோவ் நான் சின்னப்பையந்தாய்யா..////உனக்கு எதிர் வரிசையில் யார் இருந்தா???????????//

இதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை சகா...//

பொண்ணுதான்.. போதுமா?

கார்க்கி on January 21, 2009 at 10:51 AM said...

// Bleachingpowder said...
செம ஃபார்ம்ல இருக்கீங்க தல. கலக்குங்க. உங்களூக்கு பிறக்க போகும் மகளோ, மகனோ ரொம்ப கொடுத்து வைக்த்தவர்கள்.//

ஹிஹிஹிஹி..


//உங்க கிட்ட பிடிச்சதே இந்த வெரைட்டி தான். சினிமா,கவிதை,மொக்கை,குழந்தைகளோட உலகம்,காலேஜ் கலாட்டானு கல்ந்து கட்டி அடிக்குறீங்க. எப்ப தல பதிவை எழுதுவீங்//

நன்றி சகா.. யாரு? ரஜினிய பத்தியா?

//ஆனால் எனக்கும் தெரிந்து எந்த குழந்தைகளும் அவர்கள் பெற்றோர்களை மற்ற் பெற்றோர்களோடு ஒப்பிடுவதில்லை.இப்பொழுதெல்லாம் குழந்தைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டியது தான் நிறை//

இந்த பாய்ண்டும் எழுதனும்னு நினைச்சேன் மறந்துட்டேன்.. நன்றி சகா..


***********************************

//Natty said...
கார்க்கி.. .அப்படி சில பெற்றோர்கள் இருக்கலாம்... ஆனா.. நான் பார்த்து நிறைய பெற்றோர்கள் குழந்தைகளிடம் குழந்தைகளாகவே பழகுகிறார்கள்... ;) , நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருக்கும் பெற்றோர்கள் நிறைய இருக்கிறார்கள்... உங்க பதிவு படிச்சா எல்லா பெற்றோர்களும் too bad ன்னு சொல்றா மாதிரி இருக்கு, ஒரு டிஸ்கி சேர்க்க கூடாதா//

நானும் சொல்லியிருக்கேனே.. ப்ளாகில் கூட பல நல்ல அம்மாக்கள் இருப்பதாக.. படிக்கும்போதெ இது அந்த பெற்றொர்களுக்கு மட்டுமென்ற எண்ணம் வர வேண்டும் என நினைத்தேன்.. டிஸ்கி வேணும்ன்ன போட்டுக்கலாம் சகா.. நன்றி

*******************************

/பாபு said...
//பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோண்றுகிறது. //

மிசச்சரியா சொல்லியிருக்கீங்க//

நன்றி பாபு

கார்க்கி on January 21, 2009 at 10:54 AM said...

நன்றி நண்பர்களே.. எனக்கெ தெரியும் இந்தக் கட்டுரை இன்னும் செப்பனிட வேண்டுமென்று,. அது மட்டுமில்லாமல் சின்னப்பையன் இதைப் பற்றியெல்லாம் ஏன் எழுதுகிறான் என்று சொல்வார்களோ என்று கூட பயந்தேன்.. இது முதல் முயற்சியாக இருக்கட்டும் என்று பல நாடக்ள் கழித்து பதிவிட்டேன்.. சூடும் ஆகிவிட்டது.. பல புதிய நண்பர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் நான் எதிர்பார்த்த பரிசல்,தாமிரா மற்றும் சில அப்பாக்கள் வந்து கருத்து சொல்லாததுதான் வருத்தம்.. உஙக்ள் ஆதரவுக்கு நன்றி.. உருப்படியாய் ஒன்னு எழுதிட்டேனில்ல?

Massattra Kodi on January 21, 2009 at 12:25 PM said...

Very true. I like your style of writing and clarity of thoughts.

There are very few "Rangamanis" who understand the child physchology and approach them.

Massattra Kodi

Karthik on January 21, 2009 at 4:27 PM said...

//எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும்.

தெரியும். :)

பிள்ளைங்களை படிக்க ஹாஸ்டலுக்கு அனுப்புபவர்களை என்ன பண்ணலாம்??
:)

வெண்பூ on January 31, 2009 at 4:17 PM said...

//
அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும்
//

சரியா சொன்னீங்க கார்க்கி.. உங்ககிட்ட இருந்து வித்தியாசமான பதிவு.. பாராட்டுக்கள்.

 

all rights reserved to www.karkibava.com