Jan 19, 2009

புட்டிக்கதைகள் (ஏழுமலை ஃபோட்டோவோடு)


  ஏழுமலையும் விஜய் ரசிகன்தான். அப்போது குஷி படம் ரிலிஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அனைவருக்கும் அவனே ஸ்பான்சர் செய்வதாக சொன்னான். வழக்கம்போல் எங்கள் குழுவினர் பத்து பேரும் கிள‌ம்பினோம். அன்றைய அனைத்துக் காட்சிகளுக்கும் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டினார்கள்.எல்லா இடத்திலும் அப்படித்தான் என்பதால் ஏதோ ஒரு ஹிந்தி படத்திற்கு போகலாம் என ஐடியா சொன்னான் பாலாஜி. குஷிக்குத்தானே ஏழுமலை ஸ்பான்சர் செய்வதாக சொன்னதால் அவனுக்கு மினி பியர் ஒன்றை ஊற்றி வழிக்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேறியது.

     நானும் அவனும் மட்டும் அருகில் இருந்த பாருக்கு சென்றோம். மற்றவர்கள் டிக்கெட் வாங்க செல்வதாகவும், காட்சிக்கு நேரமாவதால் நாம் மட்டும் சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்புவதாகவும் அவனிடம் சொன்னேன். அவசர அவசர‌மாக நான் இரண்டு லார்ஜும், ஏழு தனது ட்ரேட்மார்க் மினி பியரை முடித்து விட்டு கிளம்பும் போது தலையை சொறிந்தார் வெய்ட்டர்.

சார்...டிப்ஸ்.

  பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு.

   தியேட்டருக்குள் நுழைந்து எங்கள் இருக்கையில் அமர்வதற்குள் ஆடி தீர்த்தான். முதலில் சில விளம்பரங்களும் பின் ஒரு ஆங்கில பட ட்ரெய்லர் போட்டார்கள். அப்பவாது சொல்லிடலாம் என்றதற்கு வேண்டாம் என்றது பொதுக்குழு. படமும் ஆரம்பமானது. பாதிக் கண்ணால் பார்த்தான் ஏழு.

 என்ன மச்சி. இந்த ட்ரெய்லருக்கு மட்டும் இவ்ளோ நேரம் பேரே போடறாங்க?

  தெரியலடா என்றான் பாலாஜி .ஏழுவுக்கு மீதிக் கண்ணும் மூடிக் கொண்டதைப் பார்த்து நிம்மதி அடைந்தோம்.பத்து நிமிடத்தில் மீண்டும் எழுந்தவன் அரங்கம் அதிர சொன்னான்

 படத்த போடுங்கடா.

தியேட்டரே அவனை ஒரு மாதிரி பார்க்க எழுந்தான் ஏழு. அப்போதும் எங்களை நம்பி தியேட்டர்காரனை திட்டினான். இப்போது நாங்கள் சொல்வதை எதுவும் அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவன் சாமியாடுவதைக் கண்ட ஃபிகர் ஒன்று "இவனையெல்லாம் சுட்டுத் தள்ளனும்" என்று பொருமியது.

  அதை மட்டும் ககபோ செய்தவன் அருகில் சென்றான்.தடுக்க சென்ற என்னிடம் ஒரு நிமிடம் என்றவன் ஃபிகரிடம் சொன்னான் "சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?"

   திரையில் ஷாரூக் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பெரிதாய் ஏதோ சாதித்தவன் போல நடந்த ஏழு திரையை பார்த்து சொன்னான் "புரியலன்னா கூட இந்தப் பொண்ணுங்க இங்லிஷ் படத்துக்கு வந்துடுவாங்க" 

   ஒரு வழியாய் வெளியே தள்ளிட்டு வந்த பின் ஏழுவைக் கேட்டேன் "மச்சி அது என்ன இங்க‌லிஷ் படம்டா?"

பாலாஜி சிரித்து விட்டதை கேட்ட ஏழுவுக்கு கோபம் வந்தது. தன் ஆங்கில புலமையை சபைக்கு காட்டினான்.

A for Apple

B for Big apple

C for Chinna apple

D for Double apple

E for Extra apple

F for என்று இழுத்தான். எல்லோரும் அவனையே கொலைவெறியோடு பார்க்க ஏழு சொன்னான்.

F for First sonnene antha apple.

**********************************************

   முக்கிய குறிப்பு: ஏழுமலையானின் தரிசனம் வேண்டுபவர்கள் இங்கே க்ளிக்கவும்

43 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on January 19, 2009 at 10:08 AM said...

me the first??:):)

அ.மு.செய்யது on January 19, 2009 at 10:09 AM said...

// பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு. //

சூப்பர் டிப்ஸ்ங்கோ !!!!!

ஸ்ரீமதி on January 19, 2009 at 10:11 AM said...

//"இவனையெல்லாம் சுட்டுத் தள்ளனும்" என்று பொருமியது.

அதை மட்டும் ககபோ செய்தவன் அருகில் சென்றான்.தடுக்க சென்ற என்னிடம் ஒரு நிமிடம் என்றவன் ஃபிகரிடம் சொன்னான் "சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?"//

Ultimate :))))))))))

ஸ்ரீமதி on January 19, 2009 at 10:12 AM said...

Romba super, nallaa sirichen anna.. :)))

ஸ்ரீமதி on January 19, 2009 at 10:12 AM said...

me the 5th :):)

vinoth gowtham on January 19, 2009 at 10:33 AM said...

தெரியதனமா.. ஒரு ஆர்வத்துல..நீங்க கொடுத்து இருந்த Link ல இருக்குற எல்லாம் Photosம் பாத்துட்டேன் ஏன் இப்படி எதுக்கு இந்த கொலவெறி..

கார்க்கி on January 19, 2009 at 10:38 AM said...

//அ.மு.செய்யது said...
// பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு. //

சூப்பர் டிப்ஸ்ங்கோ !!!!//

நன்றி சகா

*************************

// ஸ்ரீமதி said...
Romba super, nallaa sirichen annஅ.. //


:)))))...

*********************

/ vinoth gowtham said...
தெரியதனமா.. ஒரு ஆர்வத்துல..நீங்க கொடுத்து இருந்த Link ல இருக்குற எல்லாம் Photosம் பாத்துட்டேன் ஏன் இப்படி எதுக்கு இந்த கொலவெறி//

ஹாஹா.. ஜே.கே.ஆரின் தசாவதாரம்னு ஒரு பதிவ போன வருஷம் போட்டேன். அதுக்காக ஓப்பன் செய்த ஆல்பத்துலயே இந்த ஃபோட்டொவையும் சேர்த்துட்டேன்.. மத்த ஆல்பத்துல சில பல ர‌கசியங்கள் இருந்ததால் இதுல சேர்த்தேன்.. நல்லாத்தானே இருக்கார் ஜே.கே.ஆர்?????????

நான் ஆதவன் on January 19, 2009 at 10:40 AM said...

நடு செண்டர்ல... :-)

தமிழ்ப்பறவை on January 19, 2009 at 10:52 AM said...

excellent... laughed a lot..
adhuvum antha apple matter...super....

சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?"//

narsim on January 19, 2009 at 11:08 AM said...

//அப்போதும் எங்களை நம்பி தியேட்டர்காரனை திட்டினான்//

இந்த இடத்தை மிக ரசித்தேன் சகா.. கத்த கத்த கூட இருப்பவர்களுக்கு அடிவயிறு பிடிக்கும்.. நல்ல இடம்.. நல் நடை

வெண்பூ on January 19, 2009 at 11:12 AM said...

கார்க்கி.. செம நக்கல்.. வாய்விட்டு சிரிக்க வெச்ச பதிவு இது..

வித்யா on January 19, 2009 at 11:17 AM said...

\\சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?"//
ROTFL:))

வித்யா on January 19, 2009 at 11:17 AM said...

ஆப்புறம் அந்த போட்டோ எந்த வருஷம் எடுத்தது??

கார்க்கி on January 19, 2009 at 11:29 AM said...

/நான் ஆதவன் said...
நடு செண்டர்ல...//

:)))..வேனும்ன்னே போட்டதுதான் சகா

***************

/ தமிழ்ப்பறவை said...
excellent... laughed a lot..
adhuvum antha apple matter...supஎர்..//

நன்றி பறவை..

*****************

/ narsim said...
//அப்போதும் எங்களை நம்பி தியேட்டர்காரனை திட்டினான்//

இந்த இடத்தை மிக ரசித்தேன் சகா.. கத்த கத்த கூட இருப்பவர்களுக்கு அடிவயிறு பிடிக்கும்.. நல்ல இடம்.. நல் ந//

நன்றி தல.. :)))

கார்க்கி on January 19, 2009 at 11:31 AM said...

//வெண்பூ said...
கார்க்கி.. செம நக்கல்.. வாய்விட்டு சிரிக்க வெச்ச பதிவு இது.//

நன்றி சகா.. ஆனியெல்லாம் குறைஞ்சுடுச்சா?

*****************

// வித்யா said...
\\சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?"//
ROTFள்:))//

நன்றி கொ.ப.செ

// வித்யா said...
ஆப்புறம் அந்த போட்டோ எந்த வருஷம் எடுத்தது?//

2000.. வேற ஃபோட்டோ கொடுக்க மாட்டறான்..இதுவே எங்க college groups(yahoogroups) la இருந்து சுட்டது

வால்பையன் on January 19, 2009 at 12:11 PM said...

உங்க அலும்பு தாங்கலையப்பா!

பாண்டி-பரணி on January 19, 2009 at 1:08 PM said...

//பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு.//
தலை தலதான் என்ன டெரெட் மார்க் டிப்ஸ் தல ஏழு வாழ்க

அய்யோ அந்த போட்டோ

வழக்கமான நல்ல பதிவு சகா

பாண்டி-பரணி on January 19, 2009 at 1:12 PM said...

jk ரித்திஷ் தான் 7

சின்ன வயசு போட்டோவா ?
:)

நடுcenter suuப்பர்

Thusha on January 19, 2009 at 1:54 PM said...

"சார்...டிப்ஸ்.

பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு."

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
டிப்ஸ்ன்னு சொன்ன இது தன் டிப்ஸ் தல நீங்க எங்கயே போய்ட்டிங்க

Thusha on January 19, 2009 at 2:02 PM said...

"A for Apple

B for Big apple

C for Chinna apple

D for Double apple

E for Extra apple"
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்துரை இங்கிலிஷு எல்லாம் போசுது

Karthik on January 19, 2009 at 2:15 PM said...

ப்ளாக் உலகமே கொண்டாடும் நட்சத்திரமாக இருந்தாலும், விளம்பரம் பிடிக்காதவர் தல ஏழுமலை என்பது இதன் மூலம் நிருபணமாகியிருக்கிறது.

ஆனாலும் அவர் தன் ரசிகர்களுக்காக ஒரு நாள் முகத்தை காட்ட வேண்டும். பிறகு ஒரு கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பற்ற வேண்டும். 2011 நெருங்குகிறது.

Karthik on January 19, 2009 at 2:17 PM said...

கலக்கல்ஸ் கார்க்கி..!
:)

கார்க்கி on January 19, 2009 at 2:23 PM said...

/வால்பையன் said...
உங்க அலும்பு தாங்கலையப்பா//

என்ன சகா சொல்றீங்க? ஓக்கேவா இல்லையா?

*************************

// பாண்டி-பரணி said...
//பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு.//
தலை தலதான் என்ன டெரெட் மார்க் டிப்ஸ் தல ஏழு வாழ்//

நன்றி சகா

*********************

/Thusha said...
"A for Apple

B for Big apple

C for Chinna apple

D for Double apple

E for Extra apple"
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்துரை இங்கிலிஷு எல்லாம் போசு//

அத பேசினது துரை இல்லம்மா. ஏழு :)))

***************************

//Karthik said...
ப்ளாக் உலகமே கொண்டாடும் நட்சத்திரமாக இருந்தாலும், விளம்பரம் பிடிக்காதவர் தல ஏழுமலை என்பது இதன் மூலம் நிருபணமாகியிருக்கிறது.

ஆனாலும் அவர் தன் ரசிகர்களுக்காக ஒரு நாள் முகத்தை காட்ட வேண்டும். பிறகு ஒரு கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பற்ற வேண்டும். 2011 நெருங்குகிறது//

:))))))))))))))))))))))))))))))))))))))

ரமேஷ் வைத்யா on January 19, 2009 at 2:40 PM said...

சூபர்ப்! ரசித்தேன்.

Prosaic on January 19, 2009 at 4:45 PM said...

hehe!

அத்திரி on January 19, 2009 at 6:14 PM said...

//ஃபிகரிடம் சொன்னான் "சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?"//


லொள்ளுவின் இமயம் ஏழுமலை @ கார்க்கி வாழ்க

அத்திரி on January 19, 2009 at 6:22 PM said...

போட்டோவில ஏழுமலை இல்லை....... ஏன்னா போட்டோவுல உன்னைக் காணோமே

தாமிரா on January 19, 2009 at 7:34 PM said...

ரசித்தேன்.! ஏழுமலை சீரிஸ் இப்படித்தான் இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். கதையோடு ஒட்டிய கலக்கல் ஜோக்ஸ்.. பிரமாதம்.!

கும்க்கி on January 19, 2009 at 7:35 PM said...

வழக்கம் போலவே ஏழு யாரையும் ஏமாற்றாமல் குல்மால் அடித்திருக்கிறார்.
ரசிக பெருமக்களும் சிச்சு சிச்சு அனுபவித்திருப்பதை பார்க்கையில் நெஞ்சம் விம்முகிறது..
தனியாக ஏழு டிக்ஷ்னரி போடும் திட்டம் ஏதும் உள்ளதா..?

ச்சின்னப் பையன் on January 19, 2009 at 7:51 PM said...

ஹாஹா... சிரித்தேன்... :-)))

கார்க்கி on January 19, 2009 at 8:08 PM said...

// ரமேஷ் வைத்யா said...
சூபர்ப்! ரசித்தேன்//

நன்றி தல‌

*****************

// Prosaic said...
hஎஹெ!//

:)))

**************

/அத்திரி said...
போட்டோவில ஏழுமலை இல்லை....... ஏன்னா போட்டோவுல உன்னைக் காணோ//

அடுத்த பதிவர் சந்திப்புக்கு அவ வர சொல்றேன்

கார்க்கி on January 19, 2009 at 8:09 PM said...

//தாமிரா said...
ரசித்தேன்.! ஏழுமலை சீரிஸ் இப்படித்தான் இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். கதையோடு ஒட்டிய கலக்கல் ஜோக்ஸ்.. பிரமாதம்.//

அப்பாடா.. ஓக்கே சகா

*********************

// கும்க்கி said...
வழக்கம் போலவே ஏழு யாரையும் ஏமாற்றாமல் குல்மால் அடித்திருக்கிறார்.
ரசிக பெருமக்களும் சிச்சு சிச்சு அனுபவித்திருப்பதை பார்க்கையில் நெஞ்சம் விம்முகிறது..
தனியாக ஏழு டிக்ஷ்னரி போடும் திட்டம் ஏதும் உள்ளதா.//

உஷ்.. சத்தம் போடாதீங்க.. பல திட்டங்கள் இருக்கு

*********************

// ச்சின்னப் பையன் said...
ஹாஹா... சிரித்தேன்.//

நன்றி பூச்சான்டி

Sinthu on January 19, 2009 at 9:18 PM said...

Apple கதை super............

சரவணகுமரன் on January 19, 2009 at 11:49 PM said...

செம கரச்சலா இருக்கு... :-))

முரளிகண்ணன் on January 20, 2009 at 12:51 AM said...

i enjoyed this post well

Balakumar on January 20, 2009 at 4:16 AM said...

very nice..

Thanks
Balakumar

Anonymous said...

:)

கார்க்கி on January 20, 2009 at 10:08 AM said...

// Sinthu said...
Apple கதை super.....//

ஹீஹீஹீஹ்

*****************

// சரவணகுமரன் said...
செம கரச்சலா இருக்கு..//

அப்படின்னா என்ன தலீவா?

*****************

// முரளிகண்ணன் said...
i enjoyed this post நெல்ல்//

thanksப்பா

********************

/ Balakumar said...
very niசெ..//

முதல் கருத்துக்கு நன்றி சகா

*****************

// Thooya said...
:)//

கிகிகிகிகி

Bleachingpowder on January 21, 2009 at 12:54 AM said...

ஹாஹாஹா... நீங்க எல்லாம் ஊருக்கு அடங்கவே மாட்டீங்களா??அப்புறம் எனக்கும் மட்டும் சொல்லுங்க அன்னைக்கு நீங்க பாத்த படம் சோல்ஜர் தானே :)) இல்லைன்னா ஒரு மனுசன் படத்தை பார்த்து இவ்வளவு வயலண்ட் ஆக மாட்டான் :)

Natty on January 21, 2009 at 1:35 AM said...

:)))) முடில சகா ... டிப்ஸ் சூப்பர்.. அடுத்த ஹோட்டல்ல ட்ரை பண்ண வேண்டியதுதான் ;)

Natty on January 21, 2009 at 1:38 AM said...

:D சூப்பர் சகா... மறுபடி படிச்சிட்டேன்... சரி காமடி...

கார்க்கி on January 21, 2009 at 10:41 AM said...

/Bleachingpowder said...
ஹாஹாஹா... நீங்க எல்லாம் ஊருக்கு அடங்கவே மாட்டீங்களா??அப்புறம் எனக்கும் மட்டும் சொல்லுங்க அன்னைக்கு நீங்க பாத்த படம் சோல்ஜர் தானே :)) இல்லைன்னா ஒரு மனுசன் படத்தை பார்த்து இவ்வளவு வயலண்ட் ஆக மாட்டா//

என்ன நக்கலா? அவனே அத இங்லிஷ் படம் நினைச்சுட்டு போயிட்டான்.. நீங்க வேற எடுத்து கொடுக்கறீங்க.. ஒழுங்கா படிங்க.. திரையில் ஷாருக்னு சொல்லியிருக்கேன்..

****************************


/ Natty said...
:D சூப்பர் சகா... மறுபடி படிச்சிட்டேன்... சரி காமடி//

ரொம்ப நன்றிங்க‌

புதியவன் on January 22, 2009 at 1:45 PM said...

//"சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?//

கலக்கல் பதிவு...

 

all rights reserved to www.karkibava.com