Jan 17, 2009

நான்-அவள்-அவன்


   தலைவலிக்கெல்லாமா டாக்டரைப் பார்க்கணும் என்று வேண்டா வெறுப்பாகத்தான் அங்கு வந்தேன். விதி என்பதில் சற்று நம்பிக்கை வந்தது.கையில் ஒரு குழந்தையுடன் அவள் அமந்திருந்தாள். கடைசியாக அவளை நான் பார்த்து ஆறு வருடமிருக்கும்.

     உடைந்த குரலில் குழந்தையை கொஞ்சிய அவளை ரொம்ப நேரத்திற்கு பார்க்க முடியவில்லை. அவளது கண்கள் குண்டுகள் போல உள்ளடங்கி பரிதாபமாய் இருந்தன. நோய் அவளுக்கா அல்லது அவளின் குழந்தைக்கா என்று தெரியவில்லை. இன்னும் அவள் என்னைப் பார்க்கவில்லை.

   அவள் யாரென்று சொல்லவில்லையே. அவள் நான் தான். இன்னமும் அவள்தான் நான். பார்த்த நொடியிலே காதல் கொண்டு, துரத்தி துரத்தி கடிதம் கொடுத்து, மிரட்டியே பணிய வைத்து, என்னை அவளுக்கு எடுத்து சொல்லி கடைசியில் உண்மையாகவே காதலிக்க வைத்த தேவதை.

    வெளியிலிருந்த வந்த அவனைப் பார்த்த அவள் குழந்தையை அவனிடம் கொடுத்த போதுதான் என்னைப் பார்த்தாள். துன்பமும்,இன்பமும் ஒன்றாய் கலந்த ஒரு தெய்வீக நிலையில் இருந்தோம். எந்த நேரமும் வார்த்தையை உதிர தயாராயிருந்தன என் உதடுகள். கேட்கும் அடுத்த நொடியே அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது அவள் கண்களில் கண்ணீர். தேவ மெளனத்தை சிந்திக் கொண்டிருந்தது எங்கள் காதல்.

    பேச வேண்டியதையெல்லாம் காதலித்த காலத்திலே முடித்துவிட்டதால் கண்களால் பேசிக்கொண்டிருந்தோம். என்ன ஆச்சு என்பது போல் நான் பார்த்த பார்வைக்கு குழந்தையைப் பார்த்தாள். அதன் கழுத்தில் அவன் கைவைத்து பார்த்தலிருந்து காய்ச்சல் என்றறிந்தேன். அதேப் பார்வையை பார்த்தாள். எனக்கு குழந்தை இல்லாததால் சிரித்தேன். தலை குனிந்தாள்.

   அன்றிரவு படுக்கையில் படுத்தேன். அவளின் விருப்பப்படி பேசாமல் இருந்து அவளுக்கு வேண்டியதை செய்த திருப்தியில் சற்று ஆனந்தமாய் உணர்ந்தேன். இருந்தும் ஒரு பாரம் அழுத்தியது. ஆண்பிள்ளை அழக்கூடாதென்று எவன் சொன்னது?அழுதேன்.சற்று நேரத்திலே உறங்கிப் போனேன்.

  அங்கே அவள் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை படுக்க வைத்து படுக்கைக்கு வந்த போது நான் உறங்கி சில மணித்துளிகள் ஆகியிருக்கும். "நல்லாயிருக்கியா" என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாத வருத்தத்தில் படுக்க போனவளை அவன் சந்தோஷமாக அணைத்தான். முடியாது என்று நினைத்தானோ முடிந்து விட்டது என்று நினைத்தானோ அவனும் உறங்கிப் போனான். அவள் மட்டும் விழித்திருந்தாள்.வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்னீருக்கு அடர்த்தி அதிகம்.

  சில சமயங்களில் கதவுகள் அடைக்கப்பட்டாலும் காற்று மூடிய கதவுகளுக்கு அப்பாலும் செல்லும். சாளரங்கள் அதை திசை திருப்ப முயலும்.சாளரம் வழியே காற்று செல்ல எத்தனிக்கும் போது கதவு திறந்தாலும்,அப்போது காற்றுக்கு சாளரம்தானே கதவு?

31 கருத்துக்குத்து:

கும்க்கி on January 17, 2009 at 12:32 PM said...

:-00

SUREஷ் on January 17, 2009 at 12:37 PM said...

//சில சமயங்களில் கதவுகள் அடைக்கப்பட்டாலும் காற்று மூடிய கதவுகளுக்கு அப்பாலும் செல்லும். //


?!?!?!?!?!?!?!?!!!???!!!

கும்க்கி on January 17, 2009 at 12:39 PM said...

அதிகமும் மாற்றம் தேவைப்படுகிறது..இல்லையேல் படிப்பவர்களை குழப்பமுற வைக்கும்..

Karthik on January 17, 2009 at 12:42 PM said...

great piece!

கார்க்கி on January 17, 2009 at 1:04 PM said...

//SUREஷ் said...
//சில சமயங்களில் கதவுகள் அடைக்கப்பட்டாலும் காற்று மூடிய கதவுகளுக்கு அப்பாலும் செல்லும். //


?!?!?!?!?!?!?!?!!!???!!!//

என்னங்க சொல்றீங்க?

****************************

//கும்க்கி said...
அதிகமும் மாற்றம் தேவைப்படுகிறது..இல்லையேல் படிப்பவர்களை குழப்பமுற வைக்கு//

இன்னும் விளக்கமாய் எழுத தயக்காமாய் இருக்கு தல..

***************************

// Karthik said...
great piஎசெ!//

தான்க்ஸ் கார்த்திக்

கும்க்கி on January 17, 2009 at 1:34 PM said...

சொந்த கதைய சொல்லும்போது ஒளிவு மறைவு இருக்கபிடாது..சகா.

narsim on January 17, 2009 at 1:39 PM said...

//துன்பமும்,இன்பமும் ஒன்றாய் கலந்த ஒரு தெய்வீக நிலையில் இருந்தோம். எந்த நேரமும் வார்த்தையை உதிர தயாராயிருந்தன என் உதடுகள். கேட்கும் அடுத்த நொடியே அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது //

ரசித்தேன் சகா..

அ.மு.செய்யது on January 17, 2009 at 1:49 PM said...

//வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்னீருக்கு அடர்த்தி அதிகம்.
//

!!!! நிறைய விஷயங்கள ஞாபகப் படித்திட்டு போயிடுச்சி உங்க பதிவு..
ஏண்டா படிச்சோம்னு இருக்கு...

பரிசல்காரன் on January 17, 2009 at 2:26 PM said...

:-)

நல்லாருக்குப்பா.

வால்பையன் on January 17, 2009 at 2:38 PM said...

காவியமா!
ஓவியமா?
ஜீவிதமா?
கண்ணே என் காதல் சின்னமா?

Sinthu on January 17, 2009 at 3:00 PM said...

உருக்கம்..........

தேனீ on January 17, 2009 at 4:21 PM said...

urai nadai nalla irukku, aanaaal karuthu theLivai illai...
anupavithu eluthi irupathu purihirathu anaaal engalaaal muZhuthaaga anupavikka mudiya villai

Thusha on January 17, 2009 at 6:08 PM said...

"தாமிரா said...
/ கும்க்கி said...
சொந்த கதைய சொல்லும்போது ஒளிவு மறைவு இருக்கபிடாது..சகா//

அண்ணே இது புனைவுதான்..

*******************

//narsim said...

ரசித்தேன் சகா.//

நன்றி தல.. தயக்கத்துடந்தான் பதிவிட்டேன்

********************

//அ.மு.செய்யது said...

!!!! நிறைய விஷயங்கள ஞாபகப் படித்திட்டு போயிடுச்சி உங்க பதிவு..
ஏண்டா படிச்சோம்னு இருக்கு//

:)))

**************************

//பரிசல்காரன் said...
:-)

நல்லாருக்குப்பா//

வாங்க சகா.. ரங்கனாதர் எப்படி இருக்கார்?

January 17, 2009 2:31 PM""


எப்ப இருந்து நீங்க கார்கி அண்ணாக்கு assistant ஆக இருக்கீங்க

வெண்பூ on January 17, 2009 at 6:22 PM said...

ரசிச்சேன் சகா...

//
கேட்கும் அடுத்த நொடியே அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது அவள் கண்களில் கண்ணீர்.
//
சோகத்துல பீர் வுட்டுகினே எழுதினியா தல???

வித்யா on January 17, 2009 at 7:14 PM said...

எனக்கென்னவோ சொந்த அனுபவம் போலதான் தோணுது:)

கார்க்கி on January 17, 2009 at 8:24 PM said...

/ கும்க்கி said...
சொந்த கதைய சொல்லும்போது ஒளிவு மறைவு இருக்கபிடாது..சகா//

அண்ணே இது புனைவுதான்..

*******************

//narsim said...

ரசித்தேன் சகா.//

நன்றி தல.. தயக்கத்துடந்தான் பதிவிட்டேன்

********************

//அ.மு.செய்யது said...

!!!! நிறைய விஷயங்கள ஞாபகப் படித்திட்டு போயிடுச்சி உங்க பதிவு..
ஏண்டா படிச்சோம்னு இருக்கு//

:)))

**************************

//பரிசல்காரன் said...
:-)

நல்லாருக்குப்பா//

வாங்க சகா.. ரங்கனாதர் எப்படி இருக்கார்?

கார்க்கி on January 17, 2009 at 8:26 PM said...

//வால்பையன் said...
காவியமா!
ஓவியமா?
ஜீவிதமா?
கண்ணே என் காதல் சின்னமா?//

:)))))

*****************

//Sinthu said...
உருக்கம்..........//

ஹிஹிஹி..

****************8

// தேனீ said...
urai nadai nalla ir//வால்பையன் said...
காவியமா!
ஓவியமா?
ஜீவிதமா?
கண்ணே என் காதல் சின்னமா?//

:)))))

*****************

//Sinthu said...
உருக்கம்..........//

ஹிஹிஹி..

****************8

// தேனீ said...
urai nadai nalla irukku, aanaaal karuthu theLivai illai...
anupavithu eluthi irupathu purihirathu anaaal engalaaal muZhuthaaga anupavikka mudiya viல்லை//

கருத்திற்கு நன்றி.

கார்க்கி on January 17, 2009 at 8:32 PM said...

//வெண்பூ said...
ரசிச்சேன் சகா...//

நன்றி தல..

******************

//வித்யா said...
எனக்கென்னவோ சொந்த அனுபவம் போலதான் தோணுது:)//

ஹிஹிஹி..நிச்சயமா இல்ல கொ.ப.செ

ச்சின்னப் பையன் on January 17, 2009 at 8:49 PM said...

நானும் ரசித்தேன்..

அன்புடன் அருணா on January 17, 2009 at 8:51 PM said...

//வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம்//

ம்ம்ம் அதிகம்தான்...அழகான பதிவு.
அன்புடன் அருணா

கார்க்கி on January 17, 2009 at 11:26 PM said...

//ச்சின்னப் பையன் said...
நானும் ரசித்தேன்..//

நன்றி சகா

*********************8

////வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம்//

ம்ம்ம் அதிகம்தான்...அழகான பதிவு.
அன்புடன் அருணா//

:))))))

அத்திரி on January 18, 2009 at 9:25 AM said...

சொந்தக்கதை மாதிரி இருக்கு... ஆங்....... எதோ சொல்ல வந்து ஒன்னுமே சொல்லாம உட்டுட்டியே........ இப்பவெல்லாம் வாரத்துல ஒரு நாள் இந்த மாதிரி பதிவு போடுறியே என்னடே மேட்டர்?????????????

அத்திரி on January 18, 2009 at 9:27 AM said...

//கும்க்கி said...
அதிகமும் மாற்றம் தேவைப்படுகிறது..இல்லையேல் படிப்பவர்களை குழப்பமுற வைக்கும்//

ஏலே கும்க்கி பதிவு எழுத ஆரம்பிச்சிட்டியாலே............முதல்ல எழுதுடே

அத்திரி on January 18, 2009 at 9:29 AM said...

//வெண்பூ said...
சோகத்துல பீர் வுட்டுகினே எழுதினியா தல???//

அது இன்னான்னே தெரியல உங்களுக்கு பிரியாணி இல்லனா எப்படி சோகமா இருப்பியளோ அதே மாதிரி இந்த பய புள்ள ஒருமாசமா இப்ப்டிதான் இருக்கான் ஏலே சகா என்ன ஆச்சுடா உனக்கு என்ன ஆச்சுடா

அத்திரி on January 18, 2009 at 9:31 AM said...

25

கார்க்கி on January 18, 2009 at 12:36 PM said...

// அத்திரி said...
//வெண்பூ said...
சோகத்துல பீர் வுட்டுகினே எழுதினியா தல???//

அது இன்னான்னே தெரியல உங்களுக்கு பிரியாணி இல்லனா எப்படி சோகமா இருப்பியளோ அதே மாதிரி இந்த பய புள்ள ஒருமாசமா இப்ப்டிதான் இருக்கான் ஏலே சகா என்ன ஆச்சுடா உனக்கு என்ன ஆச்சு//

:)))).. ஒன்னுமில்ல தலைவா...

Sundar on January 19, 2009 at 4:31 PM said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா on January 19, 2009 at 5:23 PM said...

துன்பமும்,இன்பமும் ஒன்றாய் கலந்த ஒரு தெய்வீக நிலையில் இருந்தோம். எந்த நேரமும் வார்த்தையை உதிர தயாராயிருந்தன என் உதடுகள். கேட்கும் அடுத்த நொடியே அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது அவள் கண்களில் கண்ணீர். தேவ மெளனத்தை சிந்திக் கொண்டிருந்தது எங்கள் காதல்.

மிக மிக மிக ......... ரசித்துப் படித்தேன்.

எத்தனிக்கும் போது கதவு திறந்தாலும்,அப்போது காற்றுக்கு சாளரம்தானே கதவு?
ஆம், காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி
பொங்கிடுச்சு போல இருக்கு//
காற்று உங்கள் சாளரத்தின் வழியே வெளிவந்துவிட்டது.

உண்மையோ, கற்பனையோ நிறைய பேரின் மனதை சிறிது அசைத்துப் பார்த்திருக்கும்.

கார்க்கி on January 19, 2009 at 7:08 PM said...

/ Sundar said...
:)//

வருகைக்கு நன்றி சகா

******************

//உண்மையோ, கற்பனையோ நிறைய பேரின் மனதை சிறிது அசைத்துப் பார்த்திருக்கும்//

நன்றி அமித்து அம்மா

தாமிரா on January 19, 2009 at 7:57 PM said...

உண்மையில் அழகான பதிவு... கடைசி பாரா தவிர்த்து..

கார்க்கி on January 19, 2009 at 8:39 PM said...

/தாமிரா said...
உண்மையில் அழகான பதிவு... கடைசி பாரா தவிர்த்து//

ஏன் தல?

 

all rights reserved to www.karkibava.com