Jan 16, 2009

காக்டெய்ல் (மூணார் ஸ்பெஷல்)


    மூனாரின் அருகே டாப் ஸ்டேஷன் என்று ஒரு பகுதி. மிக உயரமான பகுதி என்பதால் இந்தப் பெயர். இது ஒரு தனியாருக்கு சொந்தமான இடம் என்பதால் 15 ரூபாய் கட்டணம் வாங்கிகிறார்கள். அங்கே இருந்த ஒரு கைடு சொன்னத் தகவல் இது. அந்தப் பகுதியில் கொடைக்கானல் 60 கிலோமீட்டர் என்ற மைல்கல்லைப் பார்த்து அவரிடம் கேட்டேன். 15 வருடங்களுக்கு முன்பு வரை இங்கே இருந்து கொடைக்கானலுக்கு சாலை வசதி இருந்ததாம். கேப்டன் பிரபாகரன் படத்தில் இந்த சாலை வழியாக கடத்தல் பொருட்கள் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் கடத்தப்பட்டதாக காணிப்பித்ததால் அந்தச் சாலை மூடப்பட்டதாக சொல்கிறார்.இப்போது இங்கே இருந்து கொடைக்கானல் செல்ல வேண்டுமென்றால் மலையிறங்கி வததலகுண்டு சென்றுதான் செல்ல வேண்டுமாம்.

************************************************

    அதேப்போல் இந்த இடத்திலிருந்து தேனி சரியாக 22 கிலோமீட்டர்தானாம். கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தோம். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் சுற்றி தான் நாங்கள் மூனார் சென்றோம். அந்த சாலை மூடப்பட்டதற்கு பின்னாளும் ஒரு தமிழ்ப்படம் இருக்கிறதாம். பிதாமகனில் காட்டப்பட்ட ப‌ல காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டது. இந்த பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது உண்மைதானாம். இயக்குனர் பாலாவுக்கு அங்கே இருந்து வழக்கமாக கஞ்சா சப்ளை செய்யப்பட்டதாம்.அதை அவர் படத்தில் காட்ட,இப்போது இந்த சாலையும் மூடப்பட்டது.ட்ரெக்கிங் செல்பவர்கள் மட்டும் இதன் வழியாக செல்கிறார்கள். வாகங்களில் செல்பவர்கள் இப்போது 100 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியிருக்கிறது.

    நேரமில்லாததால் நாங்கள் ட்ரெக்கிங் செல்லவில்லை. வழியில் ஒரு ஆதிவாசிகள் பகுதியும் இருக்கிறது. அவர்களுக்கு இப்போது அரசாங்கம் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. வேட்டியும் சேலையும் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த முறை நிச்சயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். மூனார் செல்பவர்கள் (ஹனிமூனுக்கு போறவங்க இல்லப்பா) இதையும் திட்ட்மிட்டுக் கொள்ளுங்கள்.

*************************************************

   கேரளாவில் காலையிலே மக்கள் கள்ளு குடிக்கிறார்கள். கேப்பங்கிழங்கும் ஒரு லிட்டர் கள்ளும்தான் அவர்களது காலை உணவு. இங்கேயும் எல்லைப் பிரச்சினை உள்ளது. தமிழர்களுக்கும் கேரளாவை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி கைகலப்பு நடப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சுற்றுலா பயணிகளை அவர்கள் தொல்லை செய்வதில்லை. பார்ப்பதற்கென்று பெரிதாய் எதுவுமில்லை. ஒரு வாரம் தங்கி weather enjoy செய்யலாம். அனைவரும் சொல்வது போல அங்கே புதுமண தம்பதிகள் அதிகம் காணப்படவில்லை. பிறகுதான் புரிந்தது. மார்கழியில் யார் திருமணம் செய்வார்கள்?

ஒரு நான் வெஜ் ஜோக்:

தோழி:      ஹனிமூனுக்கு மூணார் போனியே என்ன பார்த்த? மணமகள்: Fan  சுத்தறததான் பார்த்தேன்.

29 கருத்துக்குத்து:

வெண்பூ on January 16, 2009 at 2:27 PM said...

மூணாறு என்பதால் மூணு தகவல் மட்டுமா?

கொடைக்கானல் போனபோது எங்கள் கார் டிரைவர் அந்த வழியைக் காட்டினார். அது அவ்வளவாக பாதுகாப்பில்லாதது என்பதால் மூடப்பட்டதாக சொன்னார்.

நான் வெஜ் ஜோக் ஓகே டைப்.. அடுத்த முறை பெட்டரா முயற்சி செய்யவும்.. :))))

வெண்பூ on January 16, 2009 at 2:27 PM said...

ஹையா.. நாந்தான் மீ த பஷ்டூ..

LOSHAN on January 16, 2009 at 2:30 PM said...

நல்ல விஷயங்கள் சகா.. எனக்கும் இந்தியா வந்த வேளையில் மூணாறு போக வாய்ப்புக் கிடைத்தது.. அருமையான இடம்..

பி.கு- அந்த ஜோக் 'A' one சகா.. ;)

அருண் on January 16, 2009 at 2:40 PM said...

A ஜோக் A1.

prakash on January 16, 2009 at 2:44 PM said...

//Fan சுத்தறததான் பார்த்தேன்//

அங்கெல்லாம் போனா சுத்தி பாக்கணும்
சுத்தறத பாக்க கூடாது...
ஹி ஹி பாக்கறதுக்கு எவ்ளோ எடம் இருக்கு [மூணார்ல]

prakash on January 16, 2009 at 2:48 PM said...

//கேப்டன் பிரபாகரன் படத்தில் இந்த சாலை வழியாக கடத்தல் பொருட்கள் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் கடத்தப்பட்டதாக காணிப்பித்ததால் அந்தச் சாலை மூடப்பட்டதாக சொல்கிறார்//

நம்பத்தகுந்த தகவலாக இல்லையே கார்க்கி. படத்தில் காண்பிக்கபட்டதால் சாலையை மூடிவிடுவார்களா என்ன?

prakash on January 16, 2009 at 2:50 PM said...

//ஒரு வாரம் தங்கி செய்யலாம்.//

எழத்து பிழையா? :))

கார்க்கி on January 16, 2009 at 2:57 PM said...

//வெண்பூ said...
மூணாறு என்பதால் மூணு தகவல் மட்டுமா?

கொடைக்கானல் போனபோது எங்கள் கார் டிரைவர் அந்த வழியைக் காட்டினார். அது அவ்வளவாக பாதுகாப்பில்லாதது என்பதால் மூடப்பட்டதாக சொன்னார்.//

இதுவும் நம்பத்தகுந்தததா என்று தெரியவில்லை.கைடு சொன்னார்

//நான் வெஜ் ஜோக் ஓகே டைப்.. அடுத்த முறை பெட்டரா முயற்சி செய்யவும்.//

சரிங்கண்ணா

**************************

// LOSHAN said...
நல்ல விஷயங்கள் சகா.. எனக்கும் இந்தியா வந்த வேளையில் மூணாறு போக வாய்ப்புக் கிடைத்தது.. அருமையான இடம்..

பி.கு- அந்த ஜோக் 'A' one சகா.//

மூனார் போனிங்களா? நன்று

************************

// அருண் said...
A ஜோக் ஆ1.//

பதிவில் கமர்ஷியல் ஐட்டம் குறைவென்பதால் சேர்த்தேன்..ஹிஹிஹி..

***************************

//prakash said...
//ஒரு வாரம் தங்கி செய்யலாம்.//

எழத்து பிழையா? :))//

நல்லா சொன்னிங்க.. இப்போ பாருங்க..

வித்யா on January 16, 2009 at 3:05 PM said...

நல்லா எண்ஜாய் பண்ணிருக்காப்போலருக்கே.

முரளிகண்ணன் on January 16, 2009 at 3:07 PM said...

kaarki, muunaarula ethukku fan?

& very orthadax girl?

Thusha on January 16, 2009 at 3:29 PM said...

"கேரளாவில் காலையிலே மக்கள் கள்ளு குடிக்கிறார்கள். கேப்பங்கிழங்கும் ஒரு லிட்டர் கள்ளும்தான் அவர்களது காலை உணவு."

இங்கு படிக்கும் நம்ம கேரளாத்துப் பங்கிளிகளிடம் கேட்டுபர்க்கிறேன் உண்மையா என்று
(அடி மட்டும் விழாது தானே அண்ணா)

வால்பையன் on January 16, 2009 at 3:29 PM said...

சினிமா நிறைய மேட்டருக்கு ஆப்பு வச்சிருச்சு போல!

ஜோக் எனக்கு புரியல
நான் இதுவரைக்கும் மூணாறு போனதில்லை, அதுனால இருக்குமோ!

PoornimaSaran on January 16, 2009 at 3:34 PM said...

:)

கணினி தேசம் on January 16, 2009 at 3:35 PM said...

எல்லாம் சரி..
மூனாறு'ல நீங்க என்ன கூத்து செய்தீங்கனு சொல்லவேஇல்லை..

அடுத்த பதிவா?


மூனாறு எனக்கும் மறக்க முடியாத இடம். ;-)

ராஜா மல போனீங்களா?

கார்க்கி on January 16, 2009 at 3:45 PM said...

// வித்யா said...
நல்லா எண்ஜாய் பண்ணிருக்காப்போலருக்கே//

உண்மைதான். மூணாரை அல்ல, பழைய நண்பர்களுடன் சென்றதை..

****************

//முரளிகண்ணன் said...
kaarki, muunaarula ethukku ஃபன்?//

நீங்க வேற..பகல்ல 30 டிகிரி வெயில் அடிக்கிறது

******************

// Thusha said...
"கேரளாவில் காலையிலே மக்கள் கள்ளு குடிக்கிறார்கள். கேப்பங்கிழங்கும் ஒரு லிட்டர் கள்ளும்தான் அவர்களது காலை உணவு."

இங்கு படிக்கும் நம்ம கேரளாத்துப் பங்கிளிகளிடம் கேட்டுபர்க்கிறேன் உண்மையா என்று
(அடி மட்டும் விழாது தானே அண்ணா//

கேரள மலைவாழ் மக்களிடம்னு கேளுங்க.. அடி விழாது

*******************

/வால்பையன் said...
சினிமா நிறைய மேட்டருக்கு ஆப்பு வச்சிருச்சு போல!

ஜோக் எனக்கு புரியல
நான் இதுவரைக்கும் மூணாறு போனதில்லை, அதுனால இருக்குமோ//

ஹிஹிஹி... ஜோக் மறுபடியும் படிங்க‌

*****************

// PoornimaSaran said...
:)//

:))))))))))

********************
//கணினி தேசம் said...

மூனாறு எனக்கும் மறக்க முடியாத இடம். ;-)

ராஜா மல போனீங்களா//

போனேன் சகா.. அப்படி என்ன ஸ்பெஷல் மூனாருல உங்களுக்கு?

வால்பையன் on January 16, 2009 at 3:51 PM said...

இப்போ புரியுது!

இதுக்கு மூணாறே போயிருக்க வேண்டியதில்லையே!

எப்படியோ! நல்ல இருந்தா சரி மக்கா!

இன்னும் கல்யாணம் ஆகலைன்னு வேற சொல்றாங்க!
இது பிஞ்சிலேயே பழுத்து திரியுது!

ச்சின்னப் பையன் on January 16, 2009 at 4:50 PM said...

சினிமாவிலே எதையாவது காட்டினா, அரசாங்கம் அதை தடை பண்ணிடுமா????????

கார்க்கி on January 16, 2009 at 5:04 PM said...

/வால்பையன் said...
இப்போ புரியுது!

இதுக்கு மூணாறே போயிருக்க வேண்டியதில்லையே//

ஹிஹிஹி..

*************************

/ச்சின்னப் பையன் said...
சினிமாவிலே எதையாவது காட்டினா, அரசாங்கம் அதை தடை பண்ணிடுமா???????//

அப்படியில்லைங்க.. அது ரொம்ப நாளா நடந்துட்டு இருக்கு.. சினிமாவால அது பலருக்கும் தெரிய வந்ததால் அரசாங்கம் மூட முடிவு செய்ததாம். இதுவும் அவர் சொன்ன தகவ்லே .. நம்பத்தகுந்ததானு தெரியல..

prakash on January 16, 2009 at 6:04 PM said...

//இதுக்கு மூணாறே போயிருக்க வேண்டியதில்லையே//

தல, என்னதான் நம்மூர்ல fan இருந்தாலும் மூனார் fan மாதிரி வருமா?

அதான் அங்க போய் fan பார்த்திருக்காங்க :))

prakash on January 16, 2009 at 6:06 PM said...

ஏய் கார்க்கி என்னய்யா இது சீனுக்கு சீன் டிரஸ் மாத்திகிட்டே இருக்க?
கலக்குற போ ....

அனுஜன்யா on January 16, 2009 at 6:30 PM said...

நான் மூணார் போனபோது ஒரு மலைமுகட்டிலிருந்து தூரத்தில் தெரிவது கொடைக்கானல் என்று சொன்ன லோக்கல் ஆசாமி, முன்னாலே கேபிள் சர்வீஸ் இருந்தது. அரிசி அங்கிருந்துதான் வரும்னு சொன்னார். நாங்களும் சரி என்று நம்பிவிட்டோம். whatever... எனக்குப் பிடித்த மலைவாசஸ்தலம். ஊட்டி, கோடை அளவு வியாபாரமயமாகவில்லை இன்னும்.

அனுஜன்யா

கார்க்கி on January 16, 2009 at 7:36 PM said...

// prakash said...
ஏய் கார்க்கி என்னய்யா இது சீனுக்கு சீன் டிரஸ் மாத்திகிட்டே இருக்க?
கலக்குற போ .//

ஹிஹிஹிஹ்

*****************

// எனக்குப் பிடித்த மலைவாசஸ்தலம். ஊட்டி, கோடை அளவு வியாபாரமயமாகவில்லை இன்னும்.

அனுஜன்//

அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு..கூட்டம் குரைவென்று சொல்ரேன்

Karthik on January 17, 2009 at 10:39 AM said...

:))

Anonymous said...

இந்த காக்டெயில் செமையா இரூக்கு. முதுமலை பக்கம் போகலையா

கார்க்கி on January 17, 2009 at 1:11 PM said...

// Karthik said...
:))//

என்னப்பா? இப்ப எல்லாம் வெறும் ஸ்மைலிதானா?

*************
// சின்ன அம்மிணி said...
இந்த காக்டெயில் செமையா இரூக்கு. முதுமலை பக்கம் போகலையா//

நன்றி அம்மிணி

கும்க்கி on January 17, 2009 at 3:51 PM said...

நாங்க மூணார் போனப்ப பால்ஸ்ல குளிக்கலாம்னு ஆசைப்பட்டு மதியம்வரை சுத்துனோம்..அப்படி எதுவும் இல்லை.
ராஜ மலையும் டெட் எண்ட் பாய்ண்ட்டும் டேம் ல் உள்ள பாஸ்ட் போட்டிங்கும் தவிர்த்து கிளைமேட் மட்டும்தான் ரசிக்கமுடியும். அதிகம் சுற்றுலா தளங்களை எதிப்பார்த்து போவது வீண்.
அங்கேயிருந்து கொச்சினுக்கு ஒரு அருமையான பாதை உள்ளது.அதில் பயணிப்பதே ஒரு சுற்றுலா அனுபவம்.

Anonymous said...

கார்க்கி,

மூனாறு அதிகம் வியாபரஸ்தலமாக ஆகாத ஒரு மலைப் பிரதேசம். சுற்றிப் பார்க்க அதிகம் இல்லாத ஏரியா.

மூனாறுல வரையாடுன்னு ஒரு கால்நடை இருக்கு. அது அழிந்து வரும் இனம்.

கார்க்கி on January 19, 2009 at 7:36 PM said...

//கும்க்கி said...
நாங்க மூணார் போனப்ப பால்ஸ்ல குளிக்கலாம்னு ஆசைப்பட்டு மதியம்வரை சுத்துனோம்..அப்படி எதுவும் இல்லை.
ராஜ மலையும் டெட் எண்ட் பாய்ண்ட்டும் டேம் ல் உள்ள பாஸ்ட் போட்டிங்கும் தவிர்த்து கிளைமேட் மட்டும்தான் ரசிக்கமுடியும். அதிகம் சுற்றுலா தளங்களை எதிப்பார்த்து போவது வீண்.
அங்கேயிருந்து கொச்சினுக்கு ஒரு அருமையான பாதை உள்ளது.அதில் பயணிப்பதே ஒரு சுற்றுலா அனுபவ//

அண்ணே அங்கே ஆட்டுக்கால் அருவின்னு ஒன்னு இருக்கு.. ஆனா குளிக்க முடியாது.. பார்க்கலாம்.. சின்னதுதான்

***************************

/வடகரை வேலன் said...
கார்க்கி,

மூனாறு அதிகம் வியாபரஸ்தலமாக ஆகாத ஒரு மலைப் பிரதேசம். சுற்றிப் பார்க்க அதிகம் இல்லாத ஏரியா.

மூனாறுல வரையாடுன்னு ஒரு கால்நடை இருக்கு. அது அழிந்து வரும் இனம்//

நாங்க பார்த்தோம் வேலனண்ணா.. ஆனா வேற ஏதோ ஒரு பேரு சொன்னாங்க‌

ஜோசப் பால்ராஜ் on January 20, 2009 at 9:44 PM said...

சகா, நீங்க சொல்ற மூணாறு - கொடைக்கானல் பாதை கொடைக்கானல்ல இருக்க பேரிஜம் ஏரி வழியாகத்தான் செல்லும். இது இந்தியாவிலேயே மிக சுத்தமான இரண்டாவது ஏரி. இந்த பாதை முழுக்க முழுக்க வனத்துறையின் பாதுகாப்பில் இருக்கின்றது. வனத்துறையினரின் அனுமதியோடு தான் ஏரியை பார்கவே செல்ல முடியும். இந்த பாதையில் நிறைய டீ எஸ்டேட்டுகள் இருக்கின்றன. ஒரு முறை இந்தப்பாதையில் பயணிக்கும் வாய்ப்பு அடியேனுக்கு கிட்டியது.

 

all rights reserved to www.karkibava.com