Jan 12, 2009

வில்லு‍ -ஒரு ரசிகனின் பார்வையில்


விமர்சணத்திற்கு போவதற்கு முன்னால் சில கேள்விகள்,டிஸ்கிக்கள். இதுவரை படம் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி. இது ஒரு வழக்கமான விஜய் படம் என்று நினைத்து சென்றீர்களா அல்லது விஜய் ஆஸ்கார் விருதுக்காக முயற்சி செய்திருக்கிறார் என்று நினைத்து சென்றீர்களா? பதில் கடைசியில். இனி டிஸ்கி. இந்த படமும் சரி ,இந்த விமர்சணமும் சரி விஜயை ரசிக்க முடிந்தவர்களுக்கும், மசாலா பட ரசிகர்களுக்கும் மட்டுமே.

இந்த முறை கமலா திரையரங்கில் வில்லு பார்த்தேன். அரங்கு முழுவதும் விஜயின் ஃபேன்ஸ் என்பதாலோ என்னவோ ஏ.ஸி போடவில்லை. வழக்கமாய் இருக்கும் அதிரடி ஓப்பனிங் சாங்கில் இல்லை என்பது உண்மை. குஷ்பூ வந்தும் சற்று அமைதி காத்தனர் ரசிகர்கள்.முதல் 10 நிமிடங்கள் நல்லாயிருக்கா இல்லையானு சொல்ல முடியாதபடி நகர்ந்தது. ஒரு திருமணத்திற்காக விஜய் கிராமத்திற்கு செல்ல, நயன்தாரா வடிவேலு கூட்டணியில் ஒரு அரை மணி நேரம் அரங்கம் அதிர சிரிப்பலை. படத்தில் பலமே இந்த காமெடிதான் என்று வெளியே வரும்போது பலர் சொல்வது காதில் விழுந்தது. கடைசியாக வரும் என எதிர்பார்த்த வாடா மாப்ளே இரண்டாவதாக வந்தது. படம் என்ன லோ பட்ஜெட்டா என்ற சந்தேகம். பாடல்களில் போக்கிரியில் இருந்த ரிச்னெஸ் இல்லை.

முதல் பாதி காதல்,காமெடி, ஒரு ட்விஸ்ட் என நல்லபடியாய் போனது. வழக்கம்போல் அனைவரின் கருத்துகளையும் கவனித்தேன். எல்லோருக்கும் திருப்தி. இரண்டாம் பாதியில்தான் பிரச்சனை. குறிப்பாக கடைசி 15 நிமிடம் மரண மொக்கை. க்ளைமேக்ஸ் சொதப்பியதால் அரங்கம் விட்டு வெளியே வரும்போது பலரும் முதல் பாதி சந்தோஷத்தை மறந்திருந்தனர்.

கதை என்ன பெரிய கதை.அது எல்லாம் பெருசா ஒன்னுமில்லைங்க. அப்பாவுக்காக மகன் பழி வாங்கும் கதைதான். நான் சென்றது விஜயின் நடனம், குறும்புத்தனம், சில பஞ்ச் டயலாக்ஸ். அதில் குறைவில்லை. குறிப்பாக நீ கோபபட்டால் பாடல் அருமை. அந்தப் பாடல் காட்சியாக்கப்பட்ட விதம்தான் எனக்கு பிடித்திருந்தது.ஜல்சா பாடல் ஒரே ஒரு கடற்கரையில் முடித்து விட்டனர். என்னா ஆச்சு பிரபு? நயந்தாரா நல்லதொரு ஆடை வடிவமைப்பாளரை பார்ப்பது நல்லது.

விஜயின் அப்பாவாக வேறு ஒருவரை போட்டிருக்கலாம். போக்கிரியில் விஜய் போலிஸ் வேடத்தில் வந்தது அவரது ரசிகர் மத்தியில் ஹிட்டானதால் இந்த முறை ராணுவ வேடத்தில் போட்டுவிட்டார் பிரபுதேவா. ஆனால் அதனால் கதையில் ஒரு மிகப் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை நானே சொல்வேனா? மாட்டேம்ப்பா.

அதிகம் விரசமில்லாமல், கலகலப்பான காமெடியோடு, சில ஆக்ஷன்களுடம் டைம் பாஸ் பண்ணக்கூடிய படம்தான். கடைசி 15 நிமிடத்தைத் தவிர. ஒரு விஜய் ரசிகனாக‌ எனக்கு இது முழு திருப்தி தரவில்லை. ஆனால் ஒரு விஜய் ரசிகனுக்கு தேவையான அனைத்தும் இருந்தது.குறி லேசாக தவறினாலும் வெண்கல கோப்பயை தவறவிடாது வில்லு. பப்ளிக் டாக். படம் சுமார்.

*************************************************
முதல் பத்தியில் உள்ள கேள்விக்கான பதில்:
முதலாவது பிரிவு என்றால் இந்தப் படத்தில் என்ன ஏமாற்றம்? இரண்டாவது பிரிவு என்றால் உங்களைப் பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.

.

69 கருத்துக்குத்து:

இராம்/Raam on January 12, 2009 at 8:20 PM said...

விஜய்'கெல்லாம் ரசிகனா?? என்ன கொடுமை கார்க்கி??

அக்னி பார்வை on January 12, 2009 at 8:30 PM said...

பொங்களுக்கு சென்னை வந்துள்ளீர்களா?

Bleachingpowder on January 12, 2009 at 8:31 PM said...

//ஒரு விஜய் ரசிகனாக‌ எனக்கு இது முழு திருப்தி தரவில்லை//

விஜய் ரசிகனுக்கே முழு திருப்தி தரலைன்னா மத்தவங்க கதி ??

Bleachingpowder on January 12, 2009 at 8:34 PM said...

//விஜய் ஆஸ்கார் விருதுக்காக முயற்சி செய்திருக்கிறார் என்று நினைத்து சென்றீர்களா? //

அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு விஜய்க்கும் அவர் காட்டிய வித்தியாசத்தை பார்த்தவுடன் அப்படி தான் நினைச்சேன்.

Bleachingpowder on January 12, 2009 at 8:37 PM said...

வுட்டுல ரொம்ப போரடிக்குது அதான் சும்மா உங்களை கலாய்க்குறேன் கோச்சுகாதிங்க :)

பரிசல்காரன் on January 12, 2009 at 8:43 PM said...

விமர்சனத்தில் இருந்த நேர்மைக்குப் பாராட்டுக்கள் கார்க்கி.

கார்க்கி on January 12, 2009 at 8:47 PM said...

//இராம்/Raam said...
விஜய்'கெல்லாம் ரசிகனா?? என்ன கொடுமை கார்க்கி??//

ஏன சகா?

*************************8

// அக்னி பார்வை said...
பொங்களுக்கு சென்னை வந்துள்ளீர்களா?//

ஆமாம் சகா.ஆனா புத‌ன‌ன்று கிள‌ம்ப‌னும்

******************

// Bleachingpowder said...
//ஒரு விஜய் ரசிகனாக‌ எனக்கு இது முழு திருப்தி தரவில்லை//

விஜய் ரசிகனுக்கே முழு திருப்தி தரலைன்னா மத்தவங்க கதி ??//

எந்தப் படமும் முழு திருப்தி தராது தல. எனக்கு கடைசியா பிடிச்ச படம் சச்சினும்,கில்லியும். போக்கிரி கூட சுமார்தான் எனக்கு

// Bleachingpowder said...
வுட்டுல ரொம்ப போரடிக்குது அதான் சும்மா உங்களை கலாய்க்குறேன் கோச்சுகாதிங்க :)//

நடத்துங்க..ஆனா படம் ஹிட்டு. அப்ப சொல்லுங்க என் கணிப்பு எப்படின்னு

KaveriGanesh on January 12, 2009 at 8:54 PM said...

போட்ட காச எடுக்க முடியுமா?

kaveriganesh.blogspot.com

ஆளவந்தான் on January 12, 2009 at 9:10 PM said...

//
போக்கிரியில் விஜய் போலிஸ் வேடத்தில் வந்தது அவரது ரசிகர் மத்தியில் ஹிட்டானதால்
//
இடையில் “மட்டுமே” என்ற வார்த்தை மிஸ் ஆவது போல் உணர்வு :)

கிரி on January 12, 2009 at 9:19 PM said...

// இதுவரை படம் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி. இது ஒரு வழக்கமான விஜய் படம் என்று நினைத்து சென்றீர்களா அல்லது விஜய் ஆஸ்கார் விருதுக்காக முயற்சி செய்திருக்கிறார் என்று நினைத்து சென்றீர்களா?//

:-))))

கார்க்கி on January 12, 2009 at 9:20 PM said...

//பரிசல்காரன் said...
விமர்சனத்தில் இருந்த நேர்மைக்குப் பாராட்டுக்கள் கார்க்கி.//

நன்றி சகா :)))

***************************

// KaveriGanesh said...
போட்ட காச எடுக்க முடியுமா?//

ஐங்கரனுக்கு ஒரு நல்ல சேதிதான்.. ஏகன்,சேவல்,திருவண்ணாமலைனு வாங்கிய அடிக்கு மருந்தாகுமான்னு தெரியல. ஆனா இன்னொரு அடி கிடையாது

*********************

// ஆளவந்தான் said...
//
போக்கிரியில் விஜய் போலிஸ் வேடத்தில் வந்தது அவரது ரசிகர் மத்தியில் ஹிட்டானதால்
//
இடையில் “மட்டுமே” என்ற வார்த்தை மிஸ் ஆவது போல் உணர்வு //

நான் சொன்னதிலே அந்த அர்த்தம் தானே வருது. உங்க ஆசைக்கு "மட்டுமே" போட்டுக்கோங்க‌

Kathir on January 12, 2009 at 9:54 PM said...

//உங்களைப் பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.//

Same to you...

:)))

ILA on January 12, 2009 at 10:08 PM said...

//விஜய்'கெல்லாம் ரசிகனா?? என்ன கொடுமை கார்க்கி??//
அவர் தான் இப்போதைக்கு மாஸ் ஹீரோ, அதுல நீங்க இல்லைன்னா.. பொது மக்களிடமிருந்து விலகி இருக்கீங்கன்னு அர்த்தம்.

SUREஷ் on January 12, 2009 at 10:24 PM said...

வச்சா குடுமி, இல்லைனா மொட்டை..

SUREஷ் on January 12, 2009 at 10:26 PM said...

மோகன், ராமராஜன், அதிரடி மன்னன் டி.ஆர். வரிசைக்கு விஜய் வந்துவிடுவாரா...

முரளிகண்ணன் on January 12, 2009 at 10:28 PM said...

கார்க்கி நான் வேறொரு வேலையாக கே கே நகர்,வடபழனி சென்று விட்டு இப்போதுதான் வருகிறேன். இரண்டு தியேட்டர்களிலும் (உதயம்,கமலா) இரவு காட்சிக்கு நின்றிருந்த ரசிகர்களிடம் உற்சாகம் இல்லை. நீங்கள் சொன்ன அதே காரணத்தை சொன்னார்கள். எனினும் இரண்டாம் ஆட்டம் ரிசர்வ் செய்துவிட்டோம், அதனால் பார்க்கப் போகிறோம் என்றார்கள். உங்கள் விமர்சனமும் இதே கருத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

இவ்வளவு டை ஹார்ட் ஃபேன்ஸ் உள்ள நடிகர் இனி மசாலா வட்டத்தை விட்டு வெளியே வர முடியாது. எனவே இனி அதிலாவது நல்ல வெரைட்டி காட்ட முயற்சிக்கலாம். இன்னும் பத்தாண்டு கழித்து ரஜினிக்கு வயது 70 ஆகிவிடும். அப்போது அவுட்ரைட் சூப்பர்ஸ்டாராக நல்ல வாய்ப்பு விஜய்க்கு உள்ளது. இனி குருவி,வில்லு போல லாஜிக் இல்லாத படங்களில் நடிக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும்

கார்க்கி on January 12, 2009 at 11:02 PM said...

//Kathir said...
//உங்களைப் பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.//

Same to you...

:)))//

என்னைப் பார்த்து எதுக்குங்க? எனக்கு எந்த ஹோட்டல்ல என்ன கிடைக்கும்னு நல்லாத் தெரியும். மிலிட்டரி ஹோட்டல்ல போய் தயிர்சாதமும், அய்யர் மெஸ்ல போய் ஈரலும் கேட்கற ஆள் நான் இல்ல சகா.. :))))

****************************8

//ILA said...
//விஜய்'கெல்லாம் ரசிகனா?? என்ன கொடுமை கார்க்கி??//
அவர் தான் இப்போதைக்கு மாஸ் ஹீரோ, அதுல நீங்க இல்லைன்னா.. பொது மக்களிடமிருந்து விலகி இருக்கீங்கன்னு அர்த்தம்//

ரொம்ப நன்றி சகா.. தாமிராவோட தேர்தலிலும் இளைய தலைமுறையில் 76 வாக்குகள் வாங்கி முதலிடம் வாங்கினார் விஜய். அடுத்து சூர்யா, வெறும் 40 வாக்குகள். பதிவுலக வாசகர்களிலும் விஜய் ரசிகர்கள் ஏராளம்.அதுக்காக அவரு படம் எல்லாமே சூப்பர்னு சொல்லல. இருந்தாலும் விஜய் நம்பர் ஒன் தான்.

**************************


//SUREஷ் said...
வச்சா குடுமி, இல்லைனா மொட்டை//

இது எதுக்குங்க?

*********************

@முரளி,

நன்றி தல. கமலாவில் பயங்கர ஆர்ப்பாட்டம்.

//இவ்வளவு டை ஹார்ட் ஃபேன்ஸ் உள்ள நடிகர் இனி மசாலா வட்டத்தை விட்டு வெளியே வர முடியாது.//

இவ்வளவு ஃபேன்ஸ் அவருக்கு தந்ததே மசாலாதான். அவரை குறை சொல்பவர்கள் ஏன் அவர் படங்களை தொடர்ந்து பார்க்க வேண்டும்? ஒரு கம்ர்ஷியல் படத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள் சரியில்லை என விமர்சித்தால் ஓக்கே.அல்லது கம்ர்ஷியல் படங்கள் குப்பை என ஒதுங்கினாலும் ஒக்கே, பார்த்துவிட்டு விஜய் இதுவரை செய்யாத ஒன்றை செய்த மாதிரியும் இவர்களை நம்ப வைத்து ஏமாற்றியது மாதிரியும் எழுதுவது எரிச்சலை தருகிறது.

Kathir on January 13, 2009 at 12:01 AM said...

//என்னைப் பார்த்து எதுக்குங்க? எனக்கு எந்த ஹோட்டல்ல என்ன கிடைக்கும்னு நல்லாத் தெரியும். மிலிட்டரி ஹோட்டல்ல போய் தயிர்சாதமும், அய்யர் மெஸ்ல போய் ஈரலும் கேட்கற ஆள் நான் இல்ல சகா.. :))))//

அது நான் சும்மா உங்களை கலாய்க்க போட்ட கமெண்ட் சகா...
தப்பா எடுத்துக்காதீங்க.....

:))

ஆளவந்தான் on January 13, 2009 at 12:10 AM said...

//
என்னைப் பார்த்து எதுக்குங்க? எனக்கு எந்த ஹோட்டல்ல என்ன கிடைக்கும்னு நல்லாத் தெரியும். மிலிட்டரி ஹோட்டல்ல போய் தயிர்சாதமும், அய்யர் மெஸ்ல போய் ஈரலும் கேட்கற ஆள் நான் இல்ல சகா.. :))))
//

கடைக்கெல்லாம் சரியாதான் போறோம். ஆனா சாப்பாடு தான் ஆறி/ஊசி போய் இருக்குது.. அது தான் வருத்தமே..

குடுகுடுப்பை on January 13, 2009 at 12:57 AM said...

நானும் பாத்திட்டேன்
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

muru on January 13, 2009 at 3:38 AM said...

என்னதான் மாஸ் ஹீரோன்னாலும், கதையும்- கதையை சொல்லும் விதமும் ரொம்ப முக்கியம் என்று அழுத்தமாக நிருபிக்கப் பட்டுள்ளது.

உணர்வார்களா இந்த அட்டை கத்தி வீரர்கள்?

Sridhar Narayanan on January 13, 2009 at 4:02 AM said...

//நான் சென்றது விஜயின் நடனம், குறும்புத்தனம், சில பஞ்ச் டயலாக்ஸ்.//

மெய்யாலுமா? நல்லாத்தானே எழுதிட்டிருந்தீங்க.

MayVee on January 13, 2009 at 5:58 AM said...

இவ்வளவு பெரிய கமெண்ட் எழுதறதுக்கு பதிலா..... நீங்க வந்து "Please refer Vijay’s previous movies " அப்படின்னு போடு இருக்கலாமே.....

நீங்க விஜயை ரசிகனாக இருந்தும்.... எப்படி கதையை எதிர் பக்கலாம்.......
விஜய் படம் ஒரு மசாலா வடை போன்றது. சாப்பிட நல்ல இருக்கும்..... ஆனால் வயிறு கலைங்கி விடும்.

"ஒரு விஜய் ரசிகனாக‌ எனக்கு இது முழு திருப்தி தரவில்லை"
pitty on you....
அப்ப "இந்திய தொலைகக்ட்சில் முதல் முறையாக" னு வரும் போது பார்த்து கொள்ளலாமா??????

"விஜய் ஆஸ்கார் விருதுக்காக முயற்சி செய்திருக்கிறார் என்று நினைத்து சென்றீர்களா?"
ஆதி குருவி படம்களை பார்த்த பிறகுமா இந்த சந்தேகம்????

but we have to accept one thing tht vijay movie entertains us for three hours......

Thusha on January 13, 2009 at 7:54 AM said...

ரசிகனாய் இருந்தாலும் விமர்சனத்தில் உண்மையுள்ளது அண்ணா

அது சரி Profile படத்தில் யாரு அண்ணா இருக்காங்க பார்த்தல் பிரபுதேவா தம்பி ராஜசுந்தரம் மாதிரி................ இருக்கு

Karthik on January 13, 2009 at 8:52 AM said...

அதிகம் பேச விரும்பவில்லை. படம் ஹிட்டாக வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
:)

தாரணி பிரியா on January 13, 2009 at 8:56 AM said...

குருவிக்கு பரவாயில்லை, கிளைமேக்ஸ் சொதப்பிடுச்சுக்கா -‍ இது விஜய்யின் தீவிர ரசிகனான என் அலுவலக நண்பன் சொன்னது.
விஜய் ரசிகர்கள் நீங்களே ஒத்துக்கறீங்க. ஸோ அடுத்த படமாவது கில்லி மாதிரி நல்லா இருக்கட்டும் :)

ஆமா முழுசா முகம் தெரியற மாதிரி புரொபைல் போட்டா போடறது இல்லைன்னு முடிவு எடுத்து இருக்கிங்களா?

தாரணி பிரியா on January 13, 2009 at 8:57 AM said...

கார்த்திக் ஏன் அதிகம் பேசலைன்னு எனக்கு தெரியுமே

Cable Sankar on January 13, 2009 at 9:45 AM said...

நான் இன்னும் பாக்கல..

கும்க்கி on January 13, 2009 at 10:32 AM said...

விஜய் எனக்கு நெருங்கிய தோஸ்த்...அதனால கமெண்ட் போட்டா கோச்சுக்குவார்..
ஹை....கார்க்கி ...போட்டோ..பொட்டோ...(ரஜினி... தொப்பி ஸ்டைலில் படிக்கவேண்டாம்)

கும்க்கி on January 13, 2009 at 10:35 AM said...

என்ன தாமிரா சாரி..காமிரா யூஸ் பண்றிங்க...எப்படி எடுத்தாலும் தொப்பியோட காமிக்குது..?

அத்திரி on January 13, 2009 at 11:02 AM said...

சகா செகண்ட் ஆப் படம் பாக்குறவகளுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி இருக்காம் குருவியே பரவாயில்லையாம் என் நண்பன் சொன்னது..

டாக்டர் தலை நிஜமாவே தலய முந்திடுவார் போல இந்த விசயத்துல

வித்யா on January 13, 2009 at 11:14 AM said...

படம்-பார்க்கலாமா-வேணாமா?(space-bar-is-not-working:)

narsim on January 13, 2009 at 11:24 AM said...

உங்க நிலமையை நடுநிலைமை காக்க வச்சுட்டாங்களே சகா..

Anonymous said...

கார்க்கி,,நீங்க விஜய் ரசிகரா? ;) கிகிகி

BALAJI on January 13, 2009 at 1:09 PM said...

ரசிகன் மட்டும் ரசிக்க என்றால் படத்தை ரசிகர் show மட்டும் போட்டு பின்னர் படத்தை திரை அரங்குகளில் இருந்து எடுத்து விடலாம். மற்றவர்கள் பார்க்க விரும்பும் பருத்தி வீரன், சுப்ரமணிய புறம் போன்ற நல்ல படங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.அரசியல் பிரவேசம் செய்ய முடிவு செய்த விஜய் இனிமேல் நல்ல படம் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

அத்திரி on January 13, 2009 at 3:06 PM said...

//Thooya said...
கார்க்கி,,நீங்க விஜய் ரசிகரா? ;) கிகிகி//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(((((((((((((

prakash on January 13, 2009 at 3:49 PM said...

//இந்த படமும் சரி ,இந்த விமர்சணமும் சரி விஜயை ரசிக்க முடிந்தவர்களுக்கும், மசாலா பட ரசிகர்களுக்கும் மட்டுமே.//

என் இனமடா நீ....

prakash on January 13, 2009 at 3:52 PM said...

//குறிப்பாக கடைசி 15 நிமிடம் மரண மொக்கை.//

கடைசி 3,4 படங்கள்லேயே இங்க தான் கோட்டை விடுறார் விஜய்...

அமிர்தவர்ஷினி அம்மா on January 13, 2009 at 4:05 PM said...

பரிசல்காரன் said...
விமர்சனத்தில் இருந்த நேர்மைக்குப் பாராட்டுக்கள் கார்க்கி


ரிப்பீட்டே

prakash on January 13, 2009 at 4:08 PM said...

//நயந்தாரா நல்லதொரு ஆடை வடிவமைப்பாளரை பார்ப்பது நல்லது.//

யூஸ் இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் எதுக்குப்பா ஆளெல்லாம் போட்டு...

prakash on January 13, 2009 at 4:12 PM said...

சொல்ல மறந்துட்டனே....
போட்டோ சூப்பரப்பு....
விஜய் போட்டோ போட்டுட்டேன்னு நெனச்சேன். கிளிக் செஞ்சு பார்த்தா நீதான் :)))

கார்க்கி on January 13, 2009 at 6:27 PM said...

// Kathir said...
அது நான் சும்மா உங்களை கலாய்க்க போட்ட கமெண்ட் சகா...
தப்பா எடுத்துக்காதீங்க.....//


அட‌ அதுக்கெல்லாம் த‌ப்பா நினைப்பாங்க‌ளா ச‌கா?

****************************8

//muru said...
என்னதான் மாஸ் ஹீரோன்னாலும், கதையும்- கதையை சொல்லும் விதமும் ரொம்ப முக்கியம் என்று அழுத்தமாக நிருபிக்கப் பட்டுள்ளது//

அப்புற‌ம் ஏனுங்க‌ண்ணா பூ ஊத்திக்கிச்சு. சில‌ம்பாட்ட‌ம் சுமாரா ஓடுது? அன்பே சிவ‌த்துல‌ க‌தையில்லையா? சிவாஜில‌ பெருசா என்ன‌ க‌தை இருக்கு?

****************************************

// Sridhar Narayanan said...
//நான் சென்றது விஜயின் நடனம், குறும்புத்தனம், சில பஞ்ச் டயலாக்ஸ்.//

மெய்யாலுமா? நல்லாத்தானே எழுதிட்டிருந்தீங்க.//

:)))))

கார்க்கி on January 13, 2009 at 6:32 PM said...

//MayVee said...
but we have to accept one thing tht vijay movie entertains us for three hours......//

அது போதுமே

********************************

//Karthik said...
அதிகம் பேச விரும்பவில்லை. படம் ஹிட்டாக வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்//

:))))))))

*************************************

//தாரணி பிரியா said...
குருவிக்கு பரவாயில்லை, கிளைமேக்ஸ் சொதப்பிடுச்சுக்கா -‍ இது விஜய்யின் தீவிர ரசிகனான என் அலுவலக நண்பன் சொன்னது//

உண்மைதான்..

//ஆமா முழுசா முகம் தெரியற மாதிரி புரொபைல் போட்டா போடறது இல்லைன்னு முடிவு எடுத்து இருக்கிங்களா?//

:)))))

*************************

// Cable Sankar said...
நான் இன்னும் பாக்கல..//

பார்த்துட்டு சொல்லுங்க‌

கார்க்கி on January 13, 2009 at 6:36 PM said...

//Thusha said...
ரசிகனாய் இருந்தாலும் விமர்சனத்தில் உண்மையுள்ளது அண்ணா

அது சரி Profile படத்தில் யாரு அண்ணா இருக்காங்க பார்த்தல் பிரபுதேவா தம்பி ராஜசுந்தரம் மாதிரி................ //

ராஜு தாங்க அண்ணன்

*******************************

// கும்க்கி said...
என்ன தாமிரா சாரி..காமிரா யூஸ் பண்றிங்க...எப்படி எடுத்தாலும் தொப்பியோட காமிக்குது..?//

அதானே?

*****************************

// அத்திரி said...
சகா செகண்ட் ஆப் படம் பாக்குறவகளுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி இருக்காம் குருவியே பரவாயில்லையாம் என் நண்பன் சொன்னது..//

குருவி சுமார்னு சொன்ன உங்க நண்பனுக்கு ஒரு நன்றி சொல்லிடுங்க‌

****************

// வித்யா said...
படம்-பார்க்கலாமா-வேணாமா?(//

சிலம்பாட்டமே பார்த்தவங்க நீங்க. வில்லு தாராளமா பார்க்கலாம்

*********************8

// narsim said...
உங்க நிலமையை நடுநிலைமை காக்க வச்சுட்டாங்களே சகா..//

ஆமாம் தல. என் கஷ்டத்த புரிஞ்சிகிட்டிங்க‌

கார்க்கி on January 13, 2009 at 6:42 PM said...

//Thooya said...
கார்க்கி,,நீங்க விஜய் ரசிகரா? ;) கிகிகி//

ஹிஹிஹி..ஆமாங்க‌

*******************************

// BALAJI said...
ரசிகன் மட்டும் ரசிக்க என்றால் படத்தை ரசிகர் show மட்டும் போட்டு பின்னர் படத்தை திரை அரங்குகளில் இருந்து எடுத்து விடலாம்.//

ண்ணா படம் ஓடலைன்னா எடுத்திடுவாங்க.. உங்களுக்கு பிடிக்கலைன்னா பார்க்காதீங்க.. ரெண்டு வருஷத்துக்கு மூனு படம் கொடுக்கற விஜயினால் தான் மத்த படங்கள் பாதிக்கப்படுகிறதா? பூ படம் பார்த்திங்களா? விஜய் படத்தில் இருக்கும் கம்ர்ஷியல் மேட்டர்கள் அனைத்து தமிழ் சினிமாவிலும் உண்டு.

********************

// prakash said...
//குறிப்பாக கடைசி 15 நிமிடம் மரண மொக்கை.//

கடைசி 3,4 படங்கள்லேயே இங்க தான் கோட்டை விடுறார் விஜய்...//

மிகச்சரி..

************************

// அமிர்தவர்ஷினி அம்மா said...
பரிசல்காரன் said...
விமர்சனத்தில் இருந்த நேர்மைக்குப் பாராட்டுக்கள் கார்க்கி


ரிப்பீட்டே//

நன்றிம்மா..

கார்க்கி on January 13, 2009 at 6:49 PM said...

//prakash said...
சொல்ல மறந்துட்டனே....
போட்டோ சூப்பரப்பு....
விஜய் போட்டோ போட்டுட்டேன்னு நெனச்சேன். கிளிக் செஞ்சு பார்த்தா நீதான் //

தாங்க்ஸ்ண்ணா

// prakash said...
//இந்த படமும் சரி ,இந்த விமர்சணமும் சரி விஜயை ரசிக்க முடிந்தவர்களுக்கும், மசாலா பட ரசிகர்களுக்கும் மட்டுமே.//

என் இனமடா நீ....//

ஆமாங்கண்ணா

வால்பையன் on January 13, 2009 at 8:51 PM said...

தலைவர் ஜே.கே.ஆரின் போர்படை தளபதியாக இருந்து கொண்டு அட்டு படதிற்கெல்லாம் விமர்சனம் எழுதுவதை கண்டிக்கிறேன்!

நமது பணி மற்ற நடிகர்களை பற்றி பேசுவதல்ல, தலைவரின் புகழ் பாடுவதே! அதுவும் தளபதிக்கு இது முக்கிய பணி!

தண்டனையாக உடனே தலையை புகழ்ந்து ஒரு கவி பாடவும்.

தண்டனை உங்களுக்கு தான். படிக்கும் எங்களுகல்ல, கவியில் கவனம் இருக்கட்டும்

MUTHU on January 13, 2009 at 9:47 PM said...

''சிவாஜில‌ பெருசா என்ன‌ க‌தை இருக்கு?''

எதுக்கு இதுல என் தலையை இழுகிர்று

Sinthu on January 14, 2009 at 9:20 AM said...

இங்கிருந்து படம் பார்க்க முடியாவிட்டாலும் கதை விளங்கிவிட்டது அது வரை சந்தோசம்...
நரி அண்ணா.........

கார்க்கி on January 14, 2009 at 9:33 AM said...

//வால்பையன் said...
தலைவர் ஜே.கே.ஆரின் போர்படை தளபதியாக இருந்து கொண்டு அட்டு படதிற்கெல்லாம் விமர்சனம் எழுதுவதை கண்டிக்கிறேன்!//

அவரும் இளையதளபதின்னு சொன்னாங்க.. அதான் எழுதிட்டேன் சகா..

*************************8

//MUTHU said...
''சிவாஜில‌ பெருசா என்ன‌ க‌தை இருக்கு?''

எதுக்கு இதுல என் தலையை இழுகிர்று//

அவரு எனக்கும் தலதாம்ப்பா..

***************************

//Sinthu said...
இங்கிருந்து படம் பார்க்க முடியாவிட்டாலும் கதை விளங்கிவிட்டது அது வரை சந்தோசம்...
நரி அண்ணா.........//

நரி அண்ணாவா????????????????????????????

கும்க்கி on January 14, 2009 at 11:00 AM said...

நரி அண்ணா..நரி அண்ணா..
என்க்கு அந்த பாட்டி வடைய தூக்கிட்டு போன கதை கொன்ஞம் சொல்லுங்னா...

ஷாஜி on January 14, 2009 at 11:20 AM said...

/ஆனால் அதனால் கதையில் ஒரு மிகப் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.//

--அத மறைச்சிட்டிங்களே (நேர்மையான) கார்க்கி.

ஷாஜி on January 14, 2009 at 11:21 AM said...

//போட்ட காச எடுக்க முடியுமா?//

(ஐங்கரனுக்கு ஒரு நல்ல சேதிதான்.. ஏகன்,சேவல்,திருவண்ணாமலைனு வாங்கிய அடிக்கு மருந்தாகுமான்னு தெரியல. ஆனா இன்னொரு அடி கிடையாது)

--திருவண்ணாமலை கவிதாலயாவது சாமியோவ்வ்வ்...

ஷாஜி on January 14, 2009 at 11:25 AM said...

கார்க்கி sir, விஜயோட "ஜேம்ச் பாண்ட்" பைட்டு பத்தி எதுவுமே சொல்லாம விட்டுடிங்க... இதுதான் உங்க நேர்மையா? (ஓ.. நீங்க அவர் ரசிகர் இல்ல, இதுக்கு மேல உங்க கிட்ட என்னத்த எதிர்பார்க்கிறது..)

ஷாஜி on January 14, 2009 at 11:27 AM said...

//பரிசல்காரன் said...

விமர்சனத்தில் இருந்த நேர்மைக்குப் பாராட்டுக்கள் கார்க்கி.//

--- பரிசல் அய்யா இதை நீங்க மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்...

கார்க்கி on January 14, 2009 at 12:38 PM said...

//கும்க்கி said...
நரி அண்ணா..நரி அண்ணா..
என்க்கு அந்த பாட்டி வடைய தூக்கிட்டு போன கதை கொன்ஞம் சொல்லுங்னா...//

:)))

*************************************

// ஷாஜி said...
/ஆனால் அதனால் கதையில் ஒரு மிகப் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.//

--அத மறைச்சிட்டிங்களே (நேர்மையான) கார்க்கி.//

ஓட்டை இருக்குனு சொன்னதே நேர்மைதானே.. வேனும்ன்னா படம் பார்த்து நீங்க சொல்லுங்க..

//--திருவண்ணாமலை கவிதாலயாவது சாமியோவ்வ்வ்...//

அது எங்களுக்கும் தெரியும். சேவல் கூடத்தான் ஜின்னாவோடது. ஆனா ஒட்டு மொத்த ரைட்ஸையும் ஐங்கரன் வாங்கிட்டாங்க.. விசாரிச்சுட்டு சொல்லுங்க..

//ஓ.. நீங்க அவர் ரசிகர் இல்ல, இதுக்கு மேல உங்க கிட்ட என்னத்த எதிர்பார்க்கிறது..)//

நாங்க விஜய் ரசிகன்னு சொல்லிட்டுத்தான் பதிவே எழுதினோம்.. நீங்க யாரு, உங்க தல யாருன்னு தெரியும்ண்ணா..

//பரிசல் அய்யா இதை நீங்க மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்...//

அத நீங்க சொல்லக்கூடாது. நீங்களும் ஒருசார்பு உடையவர்தான் சகா.. உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன். வில்லு ஏகனை விட பரவாயில்லை.

Sinthu on January 14, 2009 at 1:27 PM said...

மன்னிக்கணும் அண்ணா................... தப்ப டைப் பண்ணிட்டேன்............
உங்களைப் போய் அப்படி சொல்வேனா................?

ஷாஜி on January 14, 2009 at 4:56 PM said...

//வேனும்ன்னா படம் பார்த்து நீங்க சொல்லுங்க..//

--இங்க இன்னும் DVD-Release ஆகல(இதுக்கு அப்புறமும் நான் theatreல போய் பார்ப்பேனா?)

(கடைசியா theatreல பாத்தது 'POKKIRI' - becoz, தல "AALWAR"ல ஏமாத்திட்டாரு..)

//ஆனா ஒட்டு மொத்த ரைட்ஸையும் ஐங்கரன் வாங்கிட்டாங்க.. //

--இந்த விசயம் எனக்கு தெரியாதுங்கண்ணா...

/நீங்க யாரு, உங்க தல யாருன்னு தெரியும்ண்ணா//
---வெற்றி! வெற்றி! உங்கள உசுப்பேத்தி என்னோட blog பக்கம் வரவச்சிட்டேன். எப்டி என் சாமர்தியம்.

//வில்லு ஏகனை விட பரவாயில்லை//
---இத நான் ஒத்துக்கறேன். ஏன்னா நானும் நேர்மையான ரசிகன். சிரிக்காதிங்க.. சொன்னா நம்புங்க சகா..

கும்க்கி on January 14, 2009 at 5:39 PM said...

Sinthu said...
மன்னிக்கணும் அண்ணா................... தப்ப டைப் பண்ணிட்டேன்............
உங்களைப் போய் அப்படி சொல்வேனா................?

பங்களாக்காரங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்....ன்னு நம்பிட்டமே......அய்யய்யோ.

(இருக்கறதுலியே உங்க நரி கமெண்ட்தான் டாப்பு)

observer on January 14, 2009 at 10:29 PM said...

படம் நல்லா இல்லை அண்ணா , இதுவும் குருவி போல தான் இருந்தது தொடர்சியாக விஜய்க்கு 3 ஹிட் (அழகிய தமிழ் மகன் , குருவி , இன்று வில்லு )

Sinthu on January 15, 2009 at 8:39 AM said...

"கும்க்கி said...
Sinthu said...
மன்னிக்கணும் அண்ணா................... தப்ப டைப் பண்ணிட்டேன்............
உங்களைப் போய் அப்படி சொல்வேனா................?

பங்களாக்காரங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்....ன்னு நம்பிட்டமே......அய்யய்யோ.

(இருக்கறதுலியே உங்க நரி கமெண்ட்தான் டாப்பு)"

அது என்ன பங்களா பொண்ணு... கும்க்கி அண்ணா.. சிந்து என்கிரவ ஒரு தமிழ் தாய் பெற்றெடுத்த தமிழ் பொண்ணு... என்னைப்போய் ............

வெண்பூ on January 15, 2009 at 10:33 AM said...

மொத்தத்துல ரசிகர்களே படம் கொஞ்சம் மொக்கைன்னு ஒத்துக்குறீங்க.. பாக்கலாம் கலெக்ஷன் எப்படி இருக்குன்னு..

கும்க்கி on January 15, 2009 at 10:45 AM said...

அது என்ன பங்களா பொண்ணு... கும்க்கி அண்ணா.. சிந்து என்கிரவ ஒரு தமிழ் தாய் பெற்றெடுத்த தமிழ் பொண்ணு... என்னைப்போய் ............

பங்களாதேசத்துக்காரவிங்க...அப்படிங்கறதான் சுருக்கி சொல்லிபிட்டேன்க்கா...

கார்க்கி on January 15, 2009 at 11:17 AM said...

@ஷாஜி,

//---வெற்றி! வெற்றி! உங்கள உசுப்பேத்தி என்னோட blog பக்கம் வரவச்சிட்டேன். எப்டி என் சாமர்தியம்//

சகா நான் எப்பவோ உங்க கடைய அலசிட்டேன். :))

//---இத நான் ஒத்துக்கறேன். ஏன்னா நானும் நேர்மையான ரசிகன். சிரிக்காதிங்க.. சொன்னா நம்புங்க சகா//

நிச்சயம் நம்பறேன்.. உங்க ஆதரவுக்கு நன்றி..

**************************

//observer said...
படம் நல்லா இல்லை அண்ணா , இதுவும் குருவி போல தான் இருந்த//

அண்ணாவா? நீங்க தம்பியா தங்கையா?

*********************

// வெண்பூ said...
மொத்தத்துல ரசிகர்களே படம் கொஞ்சம் மொக்கைன்னு ஒத்துக்குறீங்க.. பாக்கலாம் கலெக்ஷன் எப்படி இருக்குன்னு//

இப்போ காலம் மாறிடுச்சு சகா..படம் நல்லாயில்லைன்னா சொல்லிட‌றாங்க..அதுக்காக அவர் எங்க தலயில்லைன்னு ஆயிடுமா? இப்போ எல்லாம் எல்லோருக்கும் ச்க்ஸஸ் ரேட் ரொம்ப கம்மி

ஷாஜி on January 15, 2009 at 11:32 AM said...

//இப்போ எல்லாம் எல்லோருக்கும் ச்க்ஸஸ் ரேட் ரொம்ப கம்மி//

--இதுக்கும் Recession தான் காரணமா?

Sinthu on January 15, 2009 at 11:37 AM said...

"கும்க்கி said... பங்களாதேசத்துக்காரவிங்க...அப்படிங்கறதான் சுருக்கி சொல்லிபிட்டேன்க்கா..."

இந்த சின்ன பிள்ளையை அக்கா எண்டு சொல்லிட்டீங்களே.. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தாலே கடிக்க தெரியாது எனக்கு(அவ்வளவு சின்ன பிள்ளை..)
ஆனால் கும்க்கி அண்ணா நீங்க பரவாயில்லை 29 வயது அண்ணா ஒருவர் என்னை "அண்ணா" என்று கூப்பிட்ட கொடுமையே எனக்கு நடந்தது...

கும்க்கி on January 15, 2009 at 8:43 PM said...

இந்த சின்ன பிள்ளையை அக்கா எண்டு சொல்லிட்டீங்களே.. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தாலே கடிக்க தெரியாது எனக்கு(அவ்வளவு சின்ன பிள்ளை..)
ஆனால் கும்க்கி அண்ணா நீங்க பரவாயில்லை 29 வயது அண்ணா ஒருவர் என்னை "அண்ணா" என்று கூப்பிட்ட கொடுமையே எனக்கு நடந்தது...

சே..சே..சே யாரப்பா அது எல்..கே..ஜி..பிள்ளைங்களுக்கெல்லாம் ப்லாக் ஆரம்பிச்சு கொடுத்தது?

என்னாது...வாழைப்பழமா..........

(யக்கோவ்...போதுமா....?)

observer on January 15, 2009 at 11:58 PM said...

//////அண்ணாவா? நீங்க தம்பியா தங்கையா?//////தம்பி தான் தம்பி தான்

வண்ணத்துபூச்சியார் on January 16, 2009 at 12:47 PM said...

எச்சரிக்கை:

பார்க்காதவர்கள்: புது வருடத்தின் அதிர்ஷ்டசாலிகள்..

மீறி ரிஸ்க் எடுப்பவர்கள் மிகுந்த தைரியசாலிகள்..

பார்த்தவர்கள்: துரதிருஷ்டசாலிகள்.

 

all rights reserved to www.karkibava.com