Jan 9, 2009

புட்டிக்கதைகள்


ஏழு மலையேறினால் மட்டும் ராகிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவான். ப‌கடிவதை என்றால் அடிக்க மாட்டான், கடிப்பான். ஒரு நாள் வழக்கம் போல் சொட்டு நீர்ப் பாசனம் முடிந்து விடுதிக்கு அவனை தூக்கி சென்றோம். வழியிலே 'ஆஃபாயில்' போட்டதால் சற்று மப்பு இறங்கி நடக்க ஆரம்பித்தான்.இரண்டு முதலாமாண்டு மாணவர்களை பார்த்ததும் ஓரங்கட்டினான்.

   நான் ஆளுக்கொரு கேள்வி கேட்பேன். சரியா பதில் சொல்லிட்டா போலாம், இல்லைன்னா 11 மணி வரைக்கும் என் கூடவே வரணும் என்றான் ஏழு. அவர்களும் வேறு வழியில்லாமல் தலையாட்டினார்கள்.

 பூக்காரி அழுதா எப்படிக் கண்ணீர் விடுவா?

இருவரும் ஒருவரை பார்த்தனர். தெரியல சார் என்றவுடன் சொன்னான் ஏழு "மாலை மாலையா".

  அடுத்தக் கேள்வியை வீசினார் ஹீரோ. பழைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு எங்கே கலயாணம் ஆச்சு?

மீண்டும் அவர்கள் முழிக்க தலையில் தட்டிய ஹீரோ சொன்னார் 'சர்ச்'சில் தான்.

    இப்போ ஆளுக்கொரு வேலை கொடுப்பேன். அத செஞ்சிட்டா ஓக்கெ. இல்லைன்னா நான் சொல்ற கதைய கடைசி வரைக்கும் "ம்" சொல்லிக் கேட்கனும்.

    ஒரு ரூபாய் நாணயத்தைக் காட்டி இது என்ன? என்றான். அவன் தலை என்றான். திருப்பி காட்டிய போது பூ என்றான்.  இந்த தலையில இருந்து ஒரு முடி எடு. திருப்பி பூவில் இருந்து ஒரு இதழ் எடு என்றான்.பேயறைந்ததைப் போல் ஆனார்கள் இருவரும்.

   வேறு வழியில்லாமல் கதை கேட்க ஆரம்பித்த அவர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் ஏழு.

ஒரு நாள் நைட் 12 மணி இருக்கும். எனக்கு தாகமா இருந்துதா, ஆனா ரூம்ல தண்ணி இல்ல. எங்க ரூம் வேற மூனாவது மாடி. சரி, வேற வழியில்லாம பாலாஜிய எழுப்பி கீழப் போய் தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பினோம். அவன் எழுந்து லைட்ட போட்டான். அத பார்த்து பக்கத்து ரூம் சுதாகர் ,என்னடா ஏழு ரூம்ல இந்த நேரத்துல லைட் எரியுதுனு அவனும் லைட்ட போட்டான். அந்த விங்லயே நாங்க எப்பவும் பிரச்சனை பண்ற  ஆளுங்க. அதனால இந்த நேரத்துல என்ன பிரச்சனையோனு பயந்து தேர்ட் இயர் ரூம் எல்லாத்திலயும் லைட்ட போட்டாங்க. அட, அதிசயமா இருக்கேனு ஒரு செகண்ட் இயர் பையன் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லரயும் எழுப்பி லைட்ட போட்டான். அப்படியே ஒரு வழியா எங்க ஹாஸ்டல் முழுக்க லைட் எரிஞ்சுது. இத பார்த்த பக்கத்து ஹாஸ்டல் பசங்க, நாங்க என்னவோ அவங்கள அடிக்க வர்ற மாதிரி பயந்து போய் லைட்ட போட்டு முழிச்சிட்டே இருந்தாங்க. எங்க ஹாஸ்டலுக்கும்  அவங்களுக்கும் எப்பவுமே ஆகாது. அதனால் ஏதோ பெரிய மஹாபாரத போர் நடக்க போற மாதிரி அந்த ஏரியாவே லைட்ட போட்டு வெளிய வந்துட்டாங்க. வதந்திதான் தீ மாதிரி பரவுமே. ஒரு அஞ்சே நிமிஷத்துல சென்னை முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருந்து வெளியூர் பசங்க எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு மேட்டர சொல்லவும், நைட் ஃபுல்லா லைட் போட்டு வச்சா நல்லதுனு மேட்டர் ரூட் மாறிடிச்சு. அவ்ளோதான், தமிழ் நாடு ஃபுல்லா லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு.

       இந்தியாவின் ஒத்துமை அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது. 15 நிமிஷத்துல நம்ம நாடு முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருக்கிற மத்த நாட்டு தூதருங்க விஷயத்த அவங்க நாட்டுக்கு சொல்ல, முதல்ல பாகிஸ்தான் காரங்க லைட்ட போட்டாங்க.. உலகத்துல பாதி நாட்டுல பகல்ன்றதால அவங்க ஊருல ஏற்கனவே லைட் போட்டு வச்சிருந்தாங்க. மீதி நாட்டுலயும் லைட் போட்ட உடனே "உலகில் முதல் முறையாக உலகில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது". அப்படியே பூமியே தகதகனு மின்ன ஆரம்பிச்சது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறவங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சதுனு சொல்றப்ப அந்த பையன் கண்ணுல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சது. சரிடா பூமியோடு நிறுத்திக்கலாம்னு சொன்ன உடனே ரொம்ப சந்தொஷப்பட்டான்.

     அப்புறம் ஒரு வழியா நானும் பாலாஜியும் தண்ணி குடிச்சிட்டு வந்து லைட்ட நிறுத்திட்டு தூங்கப் போனோம். அப்பாடானு சுதாகரும் லைட்ட நிறுத்திட்டான். இத பார்த்துட்டு.........

இருவரும் இப்போது மயங்கி விழுந்தார்கள்.

27 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on January 9, 2009 at 10:05 AM said...

me the first :):)

muru on January 9, 2009 at 10:22 AM said...

கார்க்கி...
தல ஏழு சொன்ன கதை ரொம்ப நல்லா இருக்கு...

சரவணகுமரன் on January 9, 2009 at 10:31 AM said...

:-)))))))))))))

அ.மு.செய்யது on January 9, 2009 at 10:36 AM said...

// ஒரு ரூபாய் நாணயத்தைக் காட்டி இது என்ன? என்றான். அவன் தலை என்றான். திருப்பி காட்டிய போது பூ என்றான். இந்த தலையில இருந்து ஒரு முடி எடு. திருப்பி பூவில் இருந்து ஒரு இதழ் எடு என்றான்.//

ஹாஹா ஹாஹா .....!!!!!!

தாரணி பிரியா on January 9, 2009 at 10:37 AM said...

மொக்கசாமி எப்ப ஏழுமலை ஆனார்? அடிக்கடி மீள்பதிவு :(

தாரணி பிரியா on January 9, 2009 at 10:39 AM said...

ஆனாலும் புதுசா ரெண்டு கேள்வி கேட்டதால ஒ.கே

அ.மு.செய்யது on January 9, 2009 at 10:39 AM said...

//"உலகில் முதல் முறையாக உலகில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது". அப்படியே பூமியே தகதகனு மின்ன ஆரம்பிச்சது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறவங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சதுனு சொல்றப்ப அந்த பையன் கண்ணுல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சது. //

ஆமாங்க..அப்ப நாங்கூட பாத்துட்ருந்தேன்....

ஸ்ரீமதி on January 9, 2009 at 10:47 AM said...

Anna super,.... :))))

KaveriGanesh on January 9, 2009 at 10:50 AM said...

அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......


அன்புடன்

காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

ஆதித்தன் on January 9, 2009 at 10:53 AM said...

கடவுளே! தாங்க முடியலப்பா! எப்பிடி உங்க கற்பனைக் குதிரை மட்டும் இந்தப் பாய்ச்சல் பாயுது?

வெண்பூ on January 9, 2009 at 11:05 AM said...

மொக்க.. மொக்க.. செம மொக்க.. இந்த பக்கம் யாரும் வந்துடாதீங்க... :))

Sinthu on January 9, 2009 at 11:22 AM said...

அப்பா........... தாங்க முடியல்ல..............
எப்படி உங்களால மட்டும் இப்படி முடியிது............

அருண் on January 9, 2009 at 11:41 AM said...

Super!

Thusha on January 9, 2009 at 12:49 PM said...

நம்ம தலைவரால் மட்டுமோ இப்படி எல்லாம் முடியும்.............

என்ன ஒரு வில்லத்தனம் ............

அண்ணா இதுக்கு மேல முடியாது

தராசு on January 9, 2009 at 1:28 PM said...

//இருவரும் இப்போது மயங்கி விழுந்தார்கள்.//

நாங்களும்தான்.

எப்படி இப்படியெல்லாம்,!!!!!!!!!!! ம்ஹூம், முடியல.

ஆமா, இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா

தராசு on January 9, 2009 at 1:30 PM said...

தல,

போட்டோ எங்க?

இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.

தாமிரா on January 9, 2009 at 5:36 PM said...

இதுவும் ரிபீட்டா? ஏற்கனவே கதையை மட்டும் வேறெங்கோ படிச்சாமாதிரி ஞாபகம்.! என்னாச்சும்மா? பிஸியா?

அத்திரி on January 9, 2009 at 7:14 PM said...

))))))))))))))))

உன் அளும்பு தாங்கமுடியல

Kathir on January 10, 2009 at 12:28 AM said...

//மொக்கசாமி எப்ப ஏழுமலை ஆனார்? அடிக்கடி மீள்பதிவு//

//போட்டோ எங்க?//

ரிப்பீட்டு..........

வால்பையன் on January 10, 2009 at 12:52 AM said...

இந்த கதையை ஏற்கனவே உங்கள் பதிவில் படித்திருக்கிறேன் என்று சொல்ல, தாமிராவும் அதையே சொல்ல, ஒருவேளை உண்மையாக இருக்குமோன்னு அப்துல்லா அண்ணே ரிப்பீட்டு போட, கூடவே கும்கி அண்ணே ஓடிவர...............

Natty on January 10, 2009 at 12:57 AM said...

சகா... முடில... .எப்படி .. கலக்கிட்டீங்க.... இரசித்து படித்தேன்...

Karthik on January 10, 2009 at 9:59 AM said...

ஏழுமலைகூட நான் படிக்காம போயிட்டேனே?

superb!

அமிர்தவர்ஷினி அம்மா on January 10, 2009 at 12:25 PM said...

ஹைய்யோ ஹைய்யோ போங்க பாஸ்,
ஏழுமலை லூட்டி தாங்கமுடியலை.

cheena (சீனா) on January 11, 2009 at 1:40 PM said...

அய்ய்யோ = கற்பனைக் குதிரை பறக்குதே ஜெட் ஸ்பீடுலே - நன்று நன்று - ஆமா நாளைலேந்து உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்தோமே - என்னாச்சு

PoornimaSaran on January 11, 2009 at 11:10 PM said...

:))

கார்க்கி on January 12, 2009 at 8:36 AM said...

மக்களே.. மூணாறு வரைக்கும் ஒரு டூர் போய்ட்டு வந்தேன். விரிவான பதில்களும் சிறப்பு புகைப்படங்களும் இன்றிரவு பதிவில் வரும். பின்னூட்டமிட்டு கடையை காத்த அனைவருக்கும் நன்றி

Anonymous said...

Superb...........

 

all rights reserved to www.karkibava.com