Jan 6, 2009

பாம்பு ஃபைட் தெரியுமா?    கடந்த முறை சென்னை போன போது நண்பன் ஒருவன் சொன்னத் தகவலைக் கேட்ட போது அலறிவிட்டேன். இருக்கும் எல்லாம் போதை வஸ்துக்களையும் முயற்சி செய்து விட்ட சென்னைவாசிகள், இப்போது பாம்பின் விஷம் மூல போதை பெறுகிறார்களாம். இதற்கு பாம்பு ஃபைட் என்று பெயராம். என்ன வகை பாம்பு எனத் தெரியவில்லை. பார்க்க தண்ணி பாம்பு போல இருந்தாலும் அதை கையாளும் முறையிலே தெரிகிறது அது விஷப் பாம்பு என்று.

   மெல்லியதாக இருந்தாலும் நான்கு அடி நீளம் இருக்கும் அந்தப் பாம்பை தன் கழுத்தை சுற்றி போட்டுக் கொள்கிறார்கள். வாயை மட்டும் தன் விரல்களால் அழுத்தி பிடித்துக் கொண்டு, வரும் 'கஸ்டமர்களின்' உதட்டில் அந்தப் பாம்பை லாவகமாக கொத்த விடுகிறார்கள். அவ்வளவுதான். அவர் மெல்ல சுவரில் சாய்கிறார். ஒரு பத்து நிமிடம் கழித்து எழுந்து நடக்கிறார். ஆனால் போதை ரெண்டு நாளைக்கு இருக்குமாம். ஒரு ஃபைட்டுக்கு 1500 முதல் 4000 வரை வாங்கிறார்கள். ஒரு நாளில் ஒரு பாம்பு இரண்டு முறை மட்டுமே ஃபைட் செய்யும் என்பதால் பலப் பாம்புகளை வளர்க்கிறார்கள்.

     இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நான் இணையத்தில் இதைப் பற்றி மேய்ந்த போது கிடைத்தத் தகவல் எனக்கு மார‌டைப்பையே வர வைத்து விடும் போலிருக்கிறது. பாம்பின் விஷம் மூலம் பல வகையில் போதை வஸ்துக்கள் தயார் செய்யப் படுகின்றன. அதிலும் குறிப்பாக தெற்காசியாவில்தான் இவை பரவலாக செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு பாட்டிலில் கொஞ்சம் ஆல்கஹாலோடு ஒரு விஷப் பாம்பை போட்டு மூடி வைத்து விடிகிறார்கள். நாளைடைவில் அதன் விஷம் அதில் ஊறிவிடுகிறது. பின் பாம்பை எடுத்து விட்டு அந்த சரக்கை அடிக்கிறார்களாம். மேற்கத்திய நாடுகளில் Rattle என்ற வகை பாம்பும் ஆசிய நாடுகளில் கட்டு விரியன் என்ற வகை பாம்பும் இதற்கு பயன் படுத்துகிறார்கள்.

     இது ஏதோ விலை மலிவானது. அதனலதான் உயிரைப் பணயம் வைத்து குடிக்கிறார்கள் என்று நினைத்த எனக்கு மற்றொரு அதிர்ச்சி. இதன் விலை சாதரண மது வகைகளை விட பல மடங்கு அதிகம்.நல்லப் பாம்பையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. www.ebay.com என்ற இணையத்தில் Cobra Wine  என்ற மது விற்பணைக்கு உள்ளது. இதன் விலை $12.99. அதாவது கிட்டதட்ட 650 ரூபாய். இங்கேப் போய் பாருங்கள். பிடித்தால் வாங்கி அடித்துவிட்டு ஒரு விமர்சணம் எழுதுங்கள். என்னமோ போங்கப்பா..

57 கருத்துக்குத்து:

கோவி.கண்ணன் on January 6, 2009 at 10:56 AM said...

உவ்வ்வ்வ்வ்வ்வே.......

ஷாஜி on January 6, 2009 at 11:00 AM said...

இப்படியெல்லாம் கூடவா இருக்காங்க சாமி..

prakash on January 6, 2009 at 11:03 AM said...

புத்தாண்டு வாழ்த்துகள் கார்க்கி மற்றும் நண்பர்களே....
--நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரகாஷ்...

கார்க்கி on January 6, 2009 at 11:15 AM said...

/கோவி.கண்ணன் said...
உவ்வ்வ்வ்வ்வ்வே......//

அதுக்குள்ளா வாங்கி அடிச்சி பார்த்துட்டிங்களா கோவியாரே? நல்லாயில்லையா?

****************************

//ஷாஜி said...
இப்படியெல்லாம் கூடவா இருக்காங்க சாமி.//

இருக்காங்களே சகா..

**************************

/ prakash said...
புத்தாண்டு வாழ்த்துகள் கார்க்கி மற்றும் நண்பர்களே....
--நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரகாஷ்//

happy new year எங்க போனிங்க? அருணும் நானும் வலை வீசி தேடலாம்னு பேசிட்டு இருந்தோம்..

ரமேஷ் வைத்யா on January 6, 2009 at 11:17 AM said...

கார்க்கி,
அது பாம்பு பைட் (கடி). சென்னையில் பெசன்ட் நகர் தாண்டி கடல்புறமாகவே நடந்து சென்றால் குடிசை போன்ற வீட்டுக்குள் போய்க் கடிபடலாம். சார்ஜ் 2003ல் 1300 ரூபாய். போதை (அல்லது தடுமாற்றம்) மூன்று நாட்கள். இப்போது அவைலபிளா தெரியவில்லை.

வித்யா on January 6, 2009 at 11:32 AM said...

கார்க்கி இப்போதான் நானும் பாம்பைப் பற்றி பதிவெழுத ஆரம்பிச்சேன். BTW போதைக்கு யூஸ் பண்ணும் பாம்பின் பெயர் Black Mamba. One of the deadliest snake. இந்த வகை பாம்புகள் ஆப்பிரிகாவில் தான் அதிகம் தென்படுகின்றன. போதைக்கு குட்டிப் பாம்பையே யூஸ் பண்றாங்க. அதுவே இந்த எபெக்ட். பெரிசா போட்டுச்சுன்னா immediatea டிக்கெட் தான்.

அருண் on January 6, 2009 at 11:32 AM said...

இதப்பத்தி குமுத்தில ஒரு cover-up வந்திருந்தது.

அருண் on January 6, 2009 at 11:33 AM said...

வாங்க ப்ரகாஷ்.

prakash on January 6, 2009 at 11:41 AM said...

டைட்டில் பார்த்து பாம்பு fight என நினைத்தேன்.பாம்பு Bite போல...

prakash on January 6, 2009 at 11:42 AM said...

வணக்கம் அருண்.புத்தாண்டு வாழ்த்துகள்

prakash on January 6, 2009 at 11:47 AM said...

//happy new year எங்க போனிங்க? அருணும் நானும் வலை வீசி தேடலாம்னு பேசிட்டு இருந்தோம்..//

அலுவலக வேளையாக மும்பை பயணம். திடீர் அறிவிப்பு. இரவோடு இரவாக தூக்கி ப்ளைட்டில் போட்டு விட்டார்கள்.

ஒரு மாத ஸெட்யுலில் சென்றேன் இவ்வளவு நாள் இழுத்து விட்டார்கள்

புது வருடம் கூட அங்கேதான்.:((

prakash on January 6, 2009 at 11:50 AM said...

// 'கஸ்டமர்களின்' உதட்டில் அந்தப் பாம்பை லாவகமாக கொத்த விடுகிறார்கள். //

பாம்பு கிட்ட போயா lip kiss வாங்குவாங்க. மோசமான ஆளுங்கய்யா...

prakash on January 6, 2009 at 11:55 AM said...

//ஒரு நாலில் ஒரு பாம்பு இரண்டு முறை மட்டுமே ஃபைட் செய்யும் //

லிமிடெட் சர்வீஸ் போல :))
பாம்பு நம்ம மேல உள்ள பாசத்துல கொஞ்சம் வேகமா போட்டுச்சின்னா என்ன பண்றது?

rajeepan on January 6, 2009 at 11:59 AM said...

பாம்பைக்கண்டு பயந்து ஓடின காலம் இல்லாமல் போய்..போதைக்காக அதை தேடி அலையும் காலம் வந்துவிட்டதே...

ஜ்யோவ்ராம் சுந்தர் on January 6, 2009 at 12:19 PM said...

650 ரூபாய் சீப்தானுங்களே :)

வேணாம்யா இந்த விபரீத விளையாட்டு :) :)

கார்க்கி on January 6, 2009 at 12:26 PM said...

/ரமேஷ் வைத்யா said...
கார்க்கி,
அது பாம்பு பைட் (கடி). சென்னையில் பெசன்ட் நகர் தாண்டி கடல்புறமாகவே நடந்து சென்றால் குடிசை போன்ற வீட்டுக்குள் போய்க் கடிபடலாம். சார்ஜ் 2003ல் 1300 ரூபாய். போதை (அல்லது தடுமாற்றம்) மூன்று நாட்கள். இப்போது அவைலபிளா தெரியவில்லை//

நான் சென்றது கோவளத்துக்கு அருகில். அவங்க ஃபைட்டுன்னுதான் சொல்றாங்க..ரேட்டு ஏறிடுச்சு 3000..

*************************************

// வித்யா said...
கார்க்கி இப்போதான் நானும் பாம்பைப் பற்றி பதிவெழுத ஆரம்பிச்சேன். BTW போதைக்கு யூஸ் பண்ணும் பாம்பின் பெயர் Black Mamba. One of the deadliest snஅகெ.//

அந்த பாம்பு இவங்களுக்கு கிடைக்க சான்ஸ் இருக்கா? இது வேற பாம்புனு நினைக்கிறேன்..

**************************

// அருண் said...
இதப்பத்தி குமுத்தில ஒரு cover-up வந்திருந்தது//

அபப்டியா? லின்க் இருக்கா சகா?

******************

/ rajeepan said...
பாம்பைக்கண்டு பயந்து ஓடின காலம் இல்லாமல் போய்..போதைக்காக அதை தேடி அலையும் காலம் வந்துவிட்ட//

இன்னும் நிறைய இருக்குங்க.. வருகைக்கு நன்றி

************************

/ஜ்யோவ்ராம் சுந்தர் said...
650 ரூபாய் சீப்தானுங்களே :)

வேணாம்யா இந்த விபரீத விளையாட்டு ://

அப்படியா??????????

Anonymous said...

Oh YUKKKKKKKKKKKK

prakash on January 6, 2009 at 12:36 PM said...

போட்டோ சின்ன வயசு போட்டோவா கார்க்கி?
நல்லா இருக்கு:))

தாமிரா on January 6, 2009 at 12:39 PM said...

இது புதுசா இருக்கேப்பா.. நல்லபாம்பை வைத்து வாயிலேயே ஒரே போடு.. போட்டாதான் சரியா வருவானுங்க..

தாமிரா on January 6, 2009 at 12:42 PM said...

போட்டோ நல்லாருக்குதுபா.! சின்னப்பையன் மாதிரி இருக்குறயே..

வித்யா on January 6, 2009 at 1:29 PM said...

இல்ல கார்க்கி they bring it here and breed them here. Simple rite:)

Anonymous said...

போதை தலைக்கேறினா பரலோகம்தான் :(

கார்க்கி on January 6, 2009 at 2:26 PM said...

//Thooya said...
Oh YUKKKKKKKKக்க்க்க்//

என்ன மப்பா?

**************

//prakash said...
போட்டோ சின்ன வயசு போட்டோவா கார்க்கி?
நல்லா இருக்கு:)//

ஹலோ 2 வருஷம் முன்னாடி எடுத்தது.. நான் இப்பவும் சின்ன வயசு பையந்தாம்ப்பா...

************************

/தாமிரா said...
இது புதுசா இருக்கேப்பா.. நல்லபாம்பை வைத்து வாயிலேயே ஒரே போ//

ஹிஹிஹிஹி..ட்ரை பண்ணலாமா சகா?

******************

/வித்யா said...
இல்ல கார்க்கி they bring it here and breed them here. Simple ரிடெ//

யப்பா.. நிறைய மேட்ட‌ர் தெரியுதுப்பா கொ.ப.செ வுக்கு

****************************

/சின்ன அம்மிணி said...
போதை தலைக்கேறினா பரலோகம்தான்//

எனக்கு தெரியலைங்க.. உங்களுக்கு தெரியுமா?

அருண் on January 6, 2009 at 2:34 PM said...

//
அபப்டியா? லின்க் இருக்கா சகா?//

தேடிக்கிட்டே இருக்கேன்.

தாரணி பிரியா on January 6, 2009 at 2:44 PM said...

ஆஹா இந்த மாதிரி எல்லாம் கூட நடக்குமா என்ன? படிக்கவே கொஞ்சம் பயமாயிருக்கே.

தாரணி பிரியா on January 6, 2009 at 2:48 PM said...

இந்த புது போட்டா நல்லா இருக்கு கார்க்கி. பாத்தா சின்ன பையன் மாதிரியே இருக்கிங்க :)

கும்க்கி on January 6, 2009 at 2:52 PM said...

தாமிரா said...
போட்டோ நல்லாருக்குதுபா.! சின்னப்பையன் மாதிரி இருக்குறயே..

வயத்தெரிச்சல பத்தில்லாம் கவலை படாதீங்க....போக போக ஒரு ரெண்டு ரெண்டு வருடமா குறைச்சு உள்ள போட்டோவெல்லாம் போட்டுட்டேயிருங்க.....

அத்திரி on January 6, 2009 at 3:08 PM said...

அடப்போ சகா ஒரு பீர் இல்லை ஒரு குவாட்டர் குடிக்கிறதுக்கே தங்கமணிய ஊருக்கு அனுப்ப வேண்டியிருக்கு... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இதுல இது வேறயா?

சகா உன் போட்டோவை மாத்து...சோனி பையன் மாதிரி இருக்க...

பொண்ணுன்க்க எல்லாம் பயந்துரப்போதுங்க

கார்க்கி on January 6, 2009 at 3:16 PM said...

//தாரணி பிரியா said...
ஆஹா இந்த மாதிரி எல்லாம் கூட நடக்குமா என்ன? படிக்கவே கொஞ்சம் பயமாயிருக்//

படிக்கவே பயமா?

//தாரணி பிரியா said...
இந்த புது போட்டா நல்லா இருக்கு கார்க்கி. பாத்தா சின்ன பையன் மாதிரியே இருக்கிங்க //

ஹலோ நான் இப்பவும் சின்னப் பையன் தாங்க..
*******************
//கும்க்கி said...
தாமிரா said...
போட்டோ நல்லாருக்குதுபா.! சின்னப்பையன் மாதிரி இருக்குறயே..

வயத்தெரிச்சல பத்தில்லாம் கவலை படாதீங்க....போக போக ஒரு ரெண்டு ரெண்டு வருடமா குறைச்சு உள்ள போட்டோவெல்லாம் போட்டுட்டேயிருங்க.//

ஓக்கே தல..

************************

/அத்திரி said...

சகா உன் போட்டோவை மாத்து...சோனி பையன் மாதிரி இருக்க//

என்னங்க ஆளுக்கு ஒன்னு சொல்றீங்க.. இது நல்லாயிருக்குனு எல்லோரும் சொல்றாங்க.. நீங்க இப்படி சொல்றீங்க.. வேற ஃபோட்டொ இல்லையே

யோகன் பாரிஸ்(Johan-Paris) on January 6, 2009 at 3:38 PM said...

இதைக் குமுதத்தில் படித்தேன்.
சாவேன் பந்தயம் பிடி எனும் இவர்களை என்னென்பது.உலகத்தில் ஒரு சாரார் உயிரைக்காக்க ஓடியலைகிரார்கள்.
இவர்கள் உயிரைக் கொடுக்க அலைகிறார்கள்.
விதி வலியது.

ஸ்ரீமதி on January 6, 2009 at 3:59 PM said...

உவ்வே...........:(((

தாரணி பிரியா on January 6, 2009 at 4:08 PM said...

//ஹலோ நான் இப்பவும் சின்னப் பையன் தாங்க..
//

:)

தாரணி பிரியா on January 6, 2009 at 4:10 PM said...

உங்க ஜாதகமே இருக்கு :). இன்னும் என்ன சின்ன பையன் சொல்லிட்டு.

நீங்க பெரிய ஆள் ஆயாச்சுங்க‌

கார்க்கி on January 6, 2009 at 4:14 PM said...

/ யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இதைக் குமுதத்தில் படித்தேன்.
சாவேன் பந்தயம் பிடி எனும் இவர்களை என்னென்பது.உலகத்தில் ஒரு சாரார் உயிரைக்காக்க ஓடியலைகிரார்கள்.
இவர்கள் உயிரைக் கொடுக்க அலைகிறார்க//

உண்மைதான் நண்பரே..

****************************

/ஸ்ரீமதி said...
உவ்வே...........:(((//

நீ சமைக்கிறத விட இது நல்லாவே இருக்கும் :))

*******************

//தாரணி பிரியா said...
உங்க ஜாதகமே இருக்கு :). இன்னும் என்ன சின்ன பையன் சொல்லிட்டு.

நீங்க பெரிய ஆள் ஆயாச்சுங்//

நல்லாப் பாருங்க.. அதுல என் வயசு 23 போட்டிருக்கும்..

தாரணி பிரியா on January 6, 2009 at 4:23 PM said...

1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு

ரமேஷ் வைத்யா on January 6, 2009 at 4:24 PM said...

கார்க்கி,
//நல்லபாம்பை வைத்து வாயிலேயே ஒரே போ//
நீங்கள் டார்கெட் பண்ணுவது மாதிரி ஆளுங்க வாயில் நல்ல பாம்பை வைத்துக் கொத்தவிட்டால் அது கெட்ட பாம்பாகிவிடும். :‍ )))

ரமேஷ் வைத்யா on January 6, 2009 at 4:25 PM said...

கார்க்கி,
அத்திரிக்குப் பொறாமை. காய்ச்சலில் அடிபட்ட இந்த போட்டோவே இருக்கட்டும்.

பரிசல்காரன் on January 6, 2009 at 4:53 PM said...

குமுதத்தில் வந்ததே இது சகா...


ஓக்கே.. முயற்சித்து எப்படி இருக்கிறதென்று சொல்லவும்.

பாராட்டு: ஃபோட்டோல சின்னவனா இருக்கியே.. சூப்பர்.

உண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.!

தராசு on January 6, 2009 at 4:54 PM said...

யோவ்,

நீ இன்னாதான் நெனைச்சுகிட்டிருக்க,

தொப்பி போடாம ஒரு போட்டோ கூட எடுக்க மாட்டியா,

கார்க்கி on January 6, 2009 at 5:22 PM said...

/தாரணி பிரியா said...
1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு//

மாத்தி உங்க ஜாதகத்த பார்த்துட்டிங்க போலிருக்கு..

**********************

//ரமேஷ் வைத்யா said...
கார்க்கி,
அத்திரிக்குப் பொறாமை. காய்ச்சலில் அடிபட்ட இந்த போட்டோவே இருக்கட்டும்//

உங்க்ளுக்கும் பிடிக்கலையா?????????

**********************

//பரிசல்காரன் said...
குமுதத்தில் வந்ததே இது சகா...


ஓக்கே.. முயற்சித்து எப்படி இருக்கிறதென்று சொல்லவும்.

பாராட்டு: ஃபோட்டோல சின்னவனா இருக்கியே.. சூப்பர்.

உண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.//

நான் ஃபோட்டொவே போடலப்பா...

*****************************

/ தராசு said...
யோவ்,

நீ இன்னாதான் நெனைச்சுகிட்டிருக்க,

தொப்பி போடாம ஒரு போட்டோ கூட எடுக்க மாட்டியா///

கிகிகிகிகிகி

prakash on January 6, 2009 at 5:35 PM said...

அட... நம்ப ஆரம்பிச்சு வச்ச பிறகு வந்த எல்லா பின்னூட்டதிலேயும் கார்க்கி போட்டோ பத்தியே பேச்சு...

அம்மாவை திருஷ்டி சுத்த சொல்லுப்பா

prakash on January 6, 2009 at 5:36 PM said...

//1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு//

என்ன கொடுமை கார்க்கி இது :)))

prakash on January 6, 2009 at 5:40 PM said...

//சகா உன் போட்டோவை மாத்து...சோனி பையன் மாதிரி இருக்க...//

கார்க்கி சொல்லவே இல்ல. Sony கம்பெனி உன்னோடதா? :))

அத்திரி on January 6, 2009 at 5:41 PM said...

//கார்க்கி,
அத்திரிக்குப் பொறாமை. காய்ச்சலில் அடிபட்ட இந்த போட்டோவே இருக்கட்டும்.//


ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

சகா இப்பவும் சொல்றேன் போட்டோ நல்லா இல்லை.. எதோ ரெண்டு மூனு பிகரு ரூட்டு விடுறதா சொன்ன அத மெயின்டெயின் பண்ணனும்னா போட்டோவை மாத்து

prakash on January 6, 2009 at 5:45 PM said...

45

prakash on January 6, 2009 at 5:45 PM said...

46

prakash on January 6, 2009 at 5:45 PM said...

47

prakash on January 6, 2009 at 5:45 PM said...

48

prakash on January 6, 2009 at 5:45 PM said...

49

prakash on January 6, 2009 at 5:45 PM said...

me the 50th

ILA on January 6, 2009 at 6:34 PM said...

ஒசத்தி சரக்குன்னு புகழ் பெற்ற மரி(ஜூ)வானா எதுல இருந்து செய்யறாங்க? தேள் கொடுக்கு, அதுவும் விசம்தான்.

நட்புடன் ஜமால் on January 7, 2009 at 6:06 AM said...

\\Blogger தாரணி பிரியா said...

1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு\\

பிரியா அதிகாலையில் உங்களால் சிரித்தேன் ...

Thusha on January 7, 2009 at 7:21 AM said...

உண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.//

நான் ஃபோட்டொவே போடலப்பா...

கி கி கி கி கி கி கி கி
அண்ணா அவங்களுக்கு எல்லாம் பொறாமை நீங்க அவ்வளவு வு வு வு அழகு
)))))))))))))))):

கும்க்கி on January 7, 2009 at 8:31 AM said...

அண்ணன்மார்களுக்கு போட்டோ பிடிக்கலை.....
எல்லா அக்காவுங்களும் நல்லாருக்குன்னு சொல்லீட்டாங்க.....
பெரிய அரசியலே நடக்கும் போலருக்கே........பாவம் கார்க்கி.

கார்க்கி on January 7, 2009 at 10:36 AM said...

// ILA said...
ஒசத்தி சரக்குன்னு புகழ் பெற்ற மரி(ஜூ)வானா எதுல இருந்து செய்யறாங்க? தேள் கொடுக்கு, அதுவும் விசம்தான்//

அப்படியா? நமக்கு ராஜமீன் தாம்ப்பா..

*************

//நட்புடன் ஜமால் said...
\\Blogger தாரணி பிரியா said...

1923ல பொறந்தவர் அப்படின்னுதான் போட்டு இருக்கு\\

பிரியா அதிகாலையில் உங்களால் சிரித்தேன் ..//

:((((

********************

//Thusha said...
உண்மை:- ஃபோட்டோ எனக்குப் பிடிக்கவில்லை.//

நான் ஃபோட்டொவே போடலப்பா...

கி கி கி கி கி கி கி கி
அண்ணா அவங்களுக்கு எல்லாம் பொறாமை நீங்க அவ்வளவு வு வு வு அழகு
))))))))))))))))://

க்கும்மா.. அவங்களுக்கு பொறாமை..

*******************

/ கும்க்கி said...
அண்ணன்மார்களுக்கு போட்டோ பிடிக்கலை.....
எல்லா அக்காவுங்களும் நல்லாருக்குன்னு சொல்லீட்டாங்க.....
பெரிய அரசியலே நடக்கும் போலருக்கே........பாவம் கார்க்கி//

அய்யோ..பாவம்..

வால்பையன் on January 7, 2009 at 11:25 AM said...

குமுதத்தில் இது பற்றி ஒரு ஆர்டிக்கல் வந்தது!

Karthik on January 7, 2009 at 7:48 PM said...

தல எழுமலை கிட்ட ட்யூஷன் படிக்க அனுப்பிச்சா, சரியாயிடுவாங்க.
:)

strange ppl.

 

all rights reserved to www.karkibava.com