Jan 5, 2009

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!


    தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம். எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்திலா? எந்த இடம் என்பது மறந்து போய்விட்டது.   ஐந்தாவது செமஸ்டர் ஆரம்பமாயிருந்த சமயம் மெர்க்குரிப்பூக்கள் திரும்ப நூலகத்தில் கொடுங்களேன்.. நான் படிக்க வேண்டும்.. எனக் கேட்டிருந்தாய்.தகவல் சொன்ன அந்த நூலகனை உதைக்க வேண்டும் என மனதில் கறுவிக்கொண்டே திருப்பிக் கொடுத்தேன்.கல்லூரி மலரில் உங்கள் கவிதை படித்தேனென்று ஒருமுறையும் நான் உங்க பக்கத்து ஊருதான் என்று ஒருமுறையும் கேண்டீனில் பார்த்துக்கொண்டபோது சொன்னாய்.

   நள்ளிரவு சீட்டுக் கசேரிகளினூடே ரவி சொன்ன அந்த பிகர் நல்லா கீரா மச்சி! தான் உன்னைப் பற்றி யோசிக்க வைத்தது.ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ராமஜெயம் பஸ்ஸில் எனக்காக காத்திருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. நேருக்கு நேர் எங்கெங்கே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்குமென்று சொல்லிக்கொண்டிருந்தாய்.நீ ஏதோதோ பேசிக்கொண்டு வர மிக அருகில் மல்லிகைப்பூ வாசனைகளுடன் ஒரு பெண்ணை எதிர்பார்த்திராததால் வாயடைத்து மெளனமாகவே வந்து கொண்டிருந்தேன். சனிக்கிழமை காலை தொலைபேசியில் உன் குரல் கேட்கத் தவிப்பாய் இருந்தது.அந்த திங்கட்கிழமையா? அடுத்த திங்கட்கிழமையா? மெக்கானிகல் பில்டிங் பின்னாலிருந்த மைதானத்தில் வைத்து உன்னை காதலிப்பதாய் சொன்னேன் என நினைவு.சற்றுப் பெரிய விழிகள் உனக்கு சட்டெனக் குளமானதில் தவித்துப் போனேன்.பதிலெதுவும் சொல்லாமல் விலகிப்போனாய்.அகிலாவிடம் இந்த ஆம்பள பசங்க இப்படித்தான் என வன்மத்துடன் சொல்லியிருந்தாய்.அகிலா அவ கிடக்கிரா விடுறா என ஆறுதல் சொன்னபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

    பிரியும் தருணங்களில் நட்புக்கரம் நீட்டியபோது குழந்தையின் குதூகலத்துடன் விரல் பிடித்துக் கொண்டாய்.என்றென்றைக்குமான தோழி ப்ரிய ஸ்நேகிதி என உளறிக் கொட்டி முப்பது பக்க கடிதம் கொடுத்தேன் (இன்னும் வைத்திருக்கிறாயா அதை?)உலகின் அடிவானத்தை மீறிய அழகு இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கிறதென அறிவுமதியை துணைக்கழைத்தேன். ஓசூரிலிருந்த முதல் இரண்டு மாதங்களில் வாரம் இரண்டு முறையாவது பேசிக்கொண்டோமில்லையா?உனக்கு தொலைபேச எடுத்துக்கொண்ட சிரமங்கள் நீ அறியாதது. தொலைபேசியில் கூட ஆண் குரல் அனுமதியில்லை என்பாளே உன் வார்டன் அவள் பெயரென்ன ஏதோ பாட்டுடன் சம்பந்தப்படுத்தி கிண்டலடிப்போமே. அண்ணாமலை நகர் எஸ் டிடி பூத் பெண்கள் என்னை எங்கு பார்த்தாலும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள். குளிக்கும்போது எட்டிப்பார்த்ததுபோல் கூசிப்போவேன்.

   அடுத்த எட்டு மாதங்கள் உன் பிறந்த நாள்,என் பிறந்த நாள், நியூ இயர், உன் நினைவு வந்தது என ஒருமுறை இப்படியாய் தொலைபேசிக்கொண்டோம்.நான் எத்தனை கடிதங்கள் போட்டேன் என நினைவில்லை.ஒரு நள்ளிரவில் உனக்கு கடிதமெழுதிக்கொண்டிருந்தபோது அண்ணா பார்த்து விட்டார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.பின்பு பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிப் போய்விட்ட இரண்டு மாதங்கள் கழித்து தொலைபேசினாய்.படிப்பு முடிந்தது வேலைக்கு முயற்சிப்பதாய் கேட்டவுடன் மகிழ்ந்து போனேன்.உடனடியாய் அலுவலக ஏ.ஜி எம் மை அருவி பாருக்கு கூட்டிபோய் உன் வேலையை உறுதி செய்தேன். உனக்கு ஹாஸ்டல் தேடியது நினைவிருக்கிறதா? அந்த அப்ளிகேசனில் கார்டியன் என்ற இடத்தில் என கையொப்பமிட்டது இன்னமும் மகிழ்வைத் தருகிறது.

   இரண்டாயிரம் வருட ஜீன் மாத ஒன்றாம் தேதி விஜயன் பைக்கில் ஆஸ்டலில் இருந்து உன்னை கூட்டி வந்தேன். அந்த ஆறு மணி குளிர்.. ஆளில்லாத நேரு வீதி.. என் காதோரத்தில் உன் மூச்சுக் காற்று.. மற்றும் உன் பிரத்யேக வாசனை(ஒரு நள்ளிரவில் இது என்னடி வாசனை என கிறங்கியபோது ஃபேர் எவர் க்ரீம் பா என சொல்லி என் முகம் சுருங்கியதைப் பார்த்து சிரித்தாயல்லவா) இவைகளோடு அலுவலகத்தில் இறக்கி விட்டது மறக்க முடியாத தருணம்.அதற்கெனவே தொடர்ந்து இரவுப்பணி வாங்கிக்கொண்டேன்.எல்லா மாலைகளிலும் கடற்கரைக்கு போவதை விடவில்லை இல்லையா? கடற்கரைக்கெதிர்த்தார் போலிருந்த பூவரச மரமொன்றின் கீழிருக்கும் மரப்பெஞ்சு நமக்கெனவே உருவானதாய் சொல்லி சிலாகிப்போம். இதற்க்கு ஏன் காதலர் பூங்கா எனப் பெயர்? நண்பர்கள் நாம் கூடத்தான் வருகிறோம் என கள்ளச் சிரிப்பை மறைத்தபடி நீ கேட்ட மாலையில் தான் கங்கா வைப் பற்றி சொன்னேன் அப்போதுதான் முதன் முதலில் என் உள்ளங்கை பிடித்தாயல்லவா?

   ஆங்! இன்னொரு சந்தர்ப்பம் ராமன் திரையரங்கில் அலைபாயுதே பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென உணர்ச்சி வயப்பட்டு என் உள்ளங்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாய் என்ன? என்ன? எனப் பதறிக்கேட்டதற்க்கு எதுவுமில்லையென தலையசைத்தாய் ஆனால் உன் விழியோரம் துளிர்த்திருந்த நீர் அந்த இருட்டிலும் மின்னியது.

   ஆகஸ்ட் இருபத்தேழாம் தேதி மதியம்தான் நான் முதலில் தங்கியிருந்த அந்த மொட்டை மாடி இருட்டறையில் உன்னை முத்தமிட்டேன். (உலகிலேயே மிகவும் பிடித்த இடமென்று அடிக்கடி சொல்வாயே) அந்த துணிவு எப்படி வந்ததெனத் தெரியவில்லை அதற்க்கு முன்பு எத்தனையோ நாட்கள் தனித்திருந்தும் எதுவும் நேர்ந்து விடவில்லை அன்று உன்னை முத்தமிட எந்த முன் தீர்மாணங்களுமில்லை வெகு இயல்பாய் நிகழ்ந்தது அது… ஒரு பூ இதழ் விரிப்பது போல.அதற்க்குப்பின் முதல் ஷிப்ட் முடித்துவிட்டு நேராய் என் அறைக்கு வந்து விடுவாய் மூன்று மணிக்கு கதவையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன். எத்தனை முத்தங்கள் ஹேமா! அப்பா ஏன் அப்படி செய்தோமென இருக்கிறது.கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முத்தம்தான்.உலகத்திலேயே உடல்மொழியை முதலில் பேசிவிட்டு காதலை உறுதி செய்தவர்கள் நாமாகத்தான் இருக்கமுடியும்.ஃபார்மலாக நீ எப்போது என்னை காதலிக்கிறேன் என சொன்னாய் என மறந்து போய்விட்டது(தேதிகளை நினைவுபடுத்திக் கொள்ள பச்சை நிற டைரியை இப்போது படிப்பதில்லை ஹேமா)

   புயலும் மழையுமாயிருந்த ஒரு நாளின் இரவில் பார்த்தே ஆக வேண்டுமெனத் தொலைபேசினாய்.ஏழு மணிக்குப் போன மின்சாரம் ஒன்பது மணி வரை வந்திருக்கவில்லை. ஒரு மரம் விழும் சப்தம் கேட்டது வா! போய் பார்க்கலாம் என ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்காய் சென்றோமே. மின்சாரம் இல்லாத அந்த இரவில் ஒளிர்ந்த பிரஞ்சு வீதிகள் எத்தனை அழகு ஹேமா!
   நூலகத்தை ஒட்டியிருந்த அசோக மரம் புயலுக்கு இரையாகியிருந்தது மிகுந்த வருத்தங்களுடன் பார்த்தபடி தெருவை கடந்து மூலை திரும்புகையில் என்னைக் கட்டிக் கொண்டாய் அந்த இருளில் உன் உதட்டில் முத்தமிட்டதுதான் என் சிறந்த முத்தமென கிறக்கமான மதியங்களில் சிலாகிப்பாய்.

    டிசம்பர் இருபத்து மூன்றாம் நாள் கார்த்திகை தீபத்திற்க்கு ஊருக்குப் போகாமல் அறைத்தோழனை சரிகட்டி ஊருக்கனுப்பி உன் வருகைக்காக காத்திருந்தேன் கைக்கொள்ளாமல் அகல் விளக்குகளை வாங்கி வந்திருந்தாய்.தாழ்பாளில்லாத என் குளியலறையில் எவ்வளவு நம்பிக்கைகளோடு குளித்துவிட்டு வந்தாயென சிலாகித்தபோது பாக்கறதுன்னா பாத்துக்கோங்க என கிறங்கடித்தாய் மேலும் உன் மேல உன்ன விட அதிக நம்பிக்கை விஸ்வா! எனக்கு எனச் சொல்லி என் வன்மையான முத்தத்திலிருந்து அந்த தருணத்தை பாதுகாத்துக் கொண்டாய். பாவாடை தாவணியில் உன்னைப் பார்த்தது இல்லை என எப்போதோ சொல்லியிருந்ததை நினைவில் வைத்திருந்து கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகைப்பூ, கொலுசு, பாவாடை தாவணி சகிதமாய் நீ சடுதியில் மாறிப்போனாய் எப்படி இருக்கேன் என முன் வந்து கேட்ட தருணம் வெகு நாட்கள் கனவில் வந்தது ஹேமா!.

    மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அறைமுழுக்க அகல் விள்க்குகளை ஏற்றி வைத்தோம் தீபத்தின் ஒளியில் ஒளிர்ந்த அறையின் நடுவில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தோம்.எண்ணெய் தீர்ந்து அகல் விளக்குகள் குளிர்ந்தபின்பும் விளக்குகளைப் பொருத்தாமல் பால்கனி சன்னல்களினூடாய் உள் விழுந்த நிலவொளி வெளிச்சத்தில் புதைந்தபடி வானம் பார்த்தோம். நட்சத்திரத்தினுள் ஒன்றைத் தெர்ந்தெடுத்து அதனிடம் சொன்னாய் ஏ! நட்சத்திரமே பார்த்துக்கொள் இதே போன்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உன்னிடம் பேசும்போது இவரின் குழந்தையை நான் சுமந்திருப்பேன்.(நீ எப்போதும் என்னை ஒருமையில் கூப்பிட்டதில்லையே ஏன் ஹேமா?) ஏதாவது பாடுங்களேன் எனக் கேட்டதற்க்கு கண்கள் மூடி..சுவற்றில் சாய்ந்து உன் மடி மீது கால் தூக்கிப்போட்டு கனாக் காணும் கண்கள் மெல்ல பாடினேனே..செத்துடனும் போலிருக்கு விஸ்வா என உருகிப்போனாய்.. அந்த பின்னிரவில் ஈரமான தொடுகையில் விழித்துப் பார்க்கையில் நீ என்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தாய் ஏய் தூங்கு என கோபித்தபோது தூங்குமூஞ்சி எனச் சொல்லி நெருங்கி வந்து படுத்துக் கொண்டாய்.
   நம் காதலை நீ அவசரப்பட்டு சொல்லியிருக்க வேண்டாம் ஹேமா! எவ்வளவு விரைவாய் நடந்தது அந்தப் பிரிவு. மீண்டும் வேலை மாற்றம்,உன் அக்காவின் பிரச்சினைகள், அம்மாவின் பிடிவாதம், என் தற்கொலை முயற்சி, உன் கதறல்கள், நமது குடும்பத்திற்க்குள் நடந்த அடிதடி……..
எதுவிருப்பினும் நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!

********************************************

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் படிக்கும் பதிவர் இவர். குறிப்பாய் இந்தக் கதையை எத்தணை முறை படித்திருப்பேன் எனத் தெரியவில்லை. இது போன்றதொரு கதை நிச்சயம் நம் வாழ்விலோ நமக்கு தெரிந்தவர்கள் வாழ்விலோ நடந்திருக்கும். இவரை இங்கே படியுங்கள்.

49 கருத்துக்குத்து:

அதிரை ஜமால் on January 5, 2009 at 10:01 AM said...

\\"நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!"\\

ஏன் ...

அதிரை ஜமால் on January 5, 2009 at 10:03 AM said...

\\இது போன்றதொரு கதை நிச்சயம் நம் வாழ்விலோ நமக்கு தெரிந்தவர்கள் வாழ்விலோ நடந்திருக்கும். \\


நிச்சியம் ...

அருண் on January 5, 2009 at 10:22 AM said...

மீ த 3rd.

நான் ஆதவன் on January 5, 2009 at 10:31 AM said...

படிக்கும் போது உங்க கதைன்னு நினைச்சேன் சகா...
சூப்பர்

கும்க்கி on January 5, 2009 at 10:38 AM said...

அடப்பாவி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டியே....

கார்க்கி on January 5, 2009 at 11:00 AM said...

//அதிரை ஜமால் said...
\\இது போன்றதொரு கதை நிச்சயம் நம் வாழ்விலோ நமக்கு தெரிந்தவர்கள் வாழ்விலோ நடந்திருக்கும். \\


நிச்சியம் .//

முதல் வருகைக்கு நன்றி சகா

******************************

/ அருண் said...
மீ த 3ர்//

வாங்க அருண்..

****************

//நான் ஆதவன் said...
படிக்கும் போது உங்க கதைன்னு நினைச்சேன் சகா...
சூப்பர்//

அவ்ளோ மொக்கையாவா இருக்கு கதை?:)))))

*************************
// கும்க்கி said...
அடப்பாவி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டியே//

லேபிள் பார்க்கலையா?

ஸ்ரீமதி on January 5, 2009 at 11:17 AM said...

:))Super.. :))

அத்திரி on January 5, 2009 at 11:34 AM said...

present sakaa

கார்க்கி on January 5, 2009 at 12:18 PM said...

//ஸ்ரீமதி said...
:))Super.. :))//

:)))

******************

//அத்திரி said...
present sஅகா//

ரைட்டு

RAMYA on January 5, 2009 at 12:18 PM said...

இப்போ ப்ரெசென்ட் அப்புறமா வரேன்

வால்பையன் on January 5, 2009 at 12:54 PM said...

உங்களுக்கும் அய்யனாருக்கும் ஒரே அனுபவமா?

தாரணி பிரியா on January 5, 2009 at 1:17 PM said...

அப்படியே கண்ணு முன்னாடி விஷ்வாவும் ஹேமாவும் வந்துட்டு போனாங்க.


அழகான வர்ணனைகள் சரளமான எழுத்து நடைன்னு தொடர்ந்து படிக்க ஆர்வம் ஏற்படுத்தற எழுத்து இவரோடது.

கதையா இருந்தா கூட எனக்கு சோகமான முடிவுகள் பிடிக்காது அதனால :(

நல்ல நல்ல எழுத்துக்களை அறிமுகபடுத்துவதற்க்கு பெரிய நன்றி :)


(ஞாயித்துகிழமை திறக்க வேண்டிய கடையை திங்களன்னிக்கு லேட்டா திறந்து இருக்கிங்க )

Mohan on January 5, 2009 at 2:32 PM said...

மனதை தொட்டுவிட்டது. அருமை!

vinoth gowtham on January 5, 2009 at 2:48 PM said...

மழை நேர ரோமன் ரோல்லாந்து Library, Beach Road, பூங்கா.. அதை ரசித்து பார்த்தால் தாங்க தெரியும். என் கண் முன்னாடி ஒரு நிமிடம் அந்த காட்சிகள் எல்லாம் விரிந்தது... ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப Miss பண்றேன்.. நல்ல வழமையான நடை...Iyannai is Great..அதை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நீங்க அதுக்கு மேல GR8..

கார்க்கி on January 5, 2009 at 3:44 PM said...

// RAMYA said...
இப்போ ப்ரெசென்ட் அப்புறமா வரே//
வாங்க வாங்க..

***************

//வால்பையன் said...
உங்களுக்கும் அய்யனாருக்கும் ஒரே அனுபவமா//

:)))))

*********************

/(ஞாயித்துகிழமை திறக்க வேண்டிய கடையை திங்களன்னிக்கு லேட்டா திறந்து இருக்கிங்க )//

ஆமாம்.. தா.பி. வீட்டுல மக்கர் பண்ணிடுச்சு

******************

// Mohan said...
மனதை தொட்டுவிட்டது. அருமை//

அய்ஸுக்கு சொல்லறேன் சகா..

******************

// vinoth gowtham said...
மழை நேர ரோமன் ரோல்லாந்து Library, Beach Road, பூங்கா.. அதை ரசித்து பார்த்தால் தாங்க தெரியும். என் கண் முன்னாடி ஒரு நிமிடம் அந்த காட்சிகள் எல்லாம் விரிந்தது... ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப Miss பண்றேன்.. நல்ல வழமையான நடை...Iyannai is Great..அதை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நீங்க அதுக்கு மேல க்ற்8.//

நன்றி வினோத். நீங்க பான்டியா?

vinoth gowtham on January 5, 2009 at 4:08 PM said...

அமாங்க நான் புதுவை தான் ..நீங்க..? Photo புதுசா இருக்கு மறுபடியும் with cap..

அன்புமணி on January 5, 2009 at 5:06 PM said...

ரொம்ப டச்சிங்கா இருந்துச்சுங்க...

நான் ஆதவன் on January 5, 2009 at 5:35 PM said...

போட்டோ நல்லாயிருக்கு

ஸ்ரீமதி on January 5, 2009 at 5:39 PM said...

அண்ணா ப்ரோபைல்ல இருக்கறது யாரு படம்?? உங்க தம்பிதா?? ;))))

ஸ்ரீமதி on January 5, 2009 at 5:39 PM said...

me the 20 :):)

கார்க்கி on January 5, 2009 at 5:46 PM said...

/ vinoth gowtham said...
அமாங்க நான் புதுவை தான் ..நீங்க..? Photo புதுசா இருக்கு மறுபடியும் with சப்//

நான் புதுவையில் ஒரு வருடம் வேலை செய்திருக்கிறேன்.. கேப் எனக்கு ரொம்ப புடிக்கும்..

*************************

/ அன்புமணி said...
ரொம்ப டச்சிங்கா இருந்துச்சுங்க.//

வாங்க சகா

******************

/ நான் ஆதவன் said...
போட்டோ நல்லாயிருக்//

தாங்க்ஸ்ப்பா..

******************

/ஸ்ரீமதி said...
அண்ணா ப்ரோபைல்ல இருக்கறது யாரு படம்?? உங்க தம்பிதா?? ;)))//

நக்கலா? 2 வருஷம் முன்னாடி எடுத்தது

வித்யா on January 5, 2009 at 5:49 PM said...

நான் கூட startingla உங்க சொந்த அனுபவமோன்னு நினைச்சிட்டேன். அது சரி profile ஏன் ஒரு குளோஸப் போட்டோ. யாரும் கடை பக்கம் வரக்கூடாதுன்னா?

கும்க்கி on January 5, 2009 at 6:01 PM said...

போட்டோ மாத்தச்சொல்லி கரடியா கத்தியும் காதுல விழலை.
இப்போ மத்தும் எப்படி.....?

நல்லாருங்க ப்ரதர்....சே
நல்லாருக்கு ப்ரதர்.

கும்க்கி on January 5, 2009 at 6:11 PM said...

கார்க்கி.... உங்கள நம்பி பதிவ முழுசா படிச்சிட்டுத்தான் அப்புறம் லேபில் மற்றும் பின்னூட்டங்களெல்லாம்...சரியா.
அதனால பதிவ பார்த்து ஏமாந்தவங்க அதிகம்னு தோணுது.

கார்க்கி on January 5, 2009 at 6:16 PM said...

//வித்யா said...
நான் கூட startingla உங்க சொந்த அனுபவமோன்னு நினைச்சிட்டேன்//

கிட்டத்தட்ட அப்படித்தான்..

// அது சரி profile ஏன் ஒரு குளோஸப் போட்டோ. யாரும் கடை பக்கம் வரக்கூடாதுன்னா//

நிறைய பேர் வரணும்னு..

************************

//கும்க்கி said...
போட்டோ மாத்தச்சொல்லி கரடியா கத்தியும் காதுல விழலை.
இப்போ மத்தும் எப்படி.....?

நல்லாருங்க ப்ரதர்....சே
நல்லாருக்கு ப்ரதர்//

என்ன தல? நீங்க சொல்லித்தான் மாத்தினேன்.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு

/கார்க்கி.... உங்கள நம்பி பதிவ முழுசா படிச்சிட்டுத்தான் அப்புறம் லேபில் மற்றும் பின்னூட்டங்களெல்லாம்...சரியா.
அதனால பதிவ பார்த்து ஏமாந்தவங்க அதிகம்னு தோணுது//

அப்படியா? இனிமேல் டிஸ்கிய முதல்ல போட்டுடறேன்

கும்க்கி on January 5, 2009 at 6:17 PM said...

நாங்க கோட பாண்டி பக்கமெல்லாம் போயிருக்கோம்......அங்க போனாலே சரியா ஒன்னொன்னா தெரிய மாட்டேங்குது...காது ரிப்பேராய்டுது...காலு வேற பின்னுது.பயத்துல வாய் பேசவே வரமாட்டேங்குது.
சுருக்க சொல்லபோனா படா பேஜாராய்டுதுபா.

கும்க்கி on January 5, 2009 at 6:19 PM said...

கார்க்கி said...
//வித்யா said...
நான் கூட startingla உங்க சொந்த அனுபவமோன்னு நினைச்சிட்டேன்//

கிட்டத்தட்ட அப்படித்தான்..

அப்படியா.....(ஒரு சின்ன சந்தோஷம்)

vinoth gowtham on January 5, 2009 at 6:46 PM said...

//நான் புதுவையில் ஒரு வருடம் வேலை செய்திருக்கிறேன்..//

எங்க?..

vinoth gowtham on January 5, 2009 at 6:52 PM said...

//நாங்க கோட பாண்டி பக்கமெல்லாம் போயிருக்கோம்......அங்க போனாலே சரியா ஒன்னொன்னா தெரிய மாட்டேங்குது...காது ரிப்பேராய்டுது...காலு வேற பின்னுது.பயத்துல வாய் பேசவே வரமாட்டேங்குது.
சுருக்க சொல்லபோனா படா பேஜாராய்டுதுபா.//

ஏன்ங்க அப்படி ஆகுது ..
எனக்கு தெரியலேயே.. கார்கி அவர்கள் தான் சொல்ல வேண்டும்..

கார்க்கி on January 5, 2009 at 6:55 PM said...

// கும்க்கி said...
நாங்க கோட பாண்டி பக்கமெல்லாம் போயிருக்கோம்......அங்க போனாலே சரியா ஒன்னொன்னா தெரிய மாட்டேங்குது...காது ரிப்பேராய்டுது...காலு வேற பின்னுது.//

ஹோட்ட்ல போய் தண்ணி வேணும்னு சொல்லி இருப்பிங்க..

/கும்க்கி said...
கார்க்கி said...
//வித்யா said...
நான் கூட startingla உங்க சொந்த அனுபவமோன்னு நினைச்சிட்டேன்//

கிட்டத்தட்ட அப்படித்தான்..

அப்படியா.....(ஒரு சின்ன சந்தோஷ//

ந்டத்துங்க.. நடத்துங்க‌

**********************

// vinoth gowtham said...
//நான் புதுவையில் ஒரு வருடம் வேலை செய்திருக்கிறேன்..//

எங்க?..//

LG electronics,சேதராப்பட்டு..இப்போ இல்லை. டெல்லிக்கு போயிடுச்சு..

அனுஜன்யா on January 5, 2009 at 7:32 PM said...

நம்ம தல எழுத்து. அதாவது அய்ஸ் எழுதியது. சாளரம் திறந்தால் வரும் சில்லென்ற தென்றல் போல், உன் 'சாளரத்திலிருந்து' ஐய்சின் தென்றல். எத்தனை முறை படித்தாலும் ... சுகானுபவம்.

கார்க்கி, எனக்கு உன்னிடம் பிடித்த விதயங்களில், உனக்கு அய்ஸ் எழுத்துக்களின் மேல் உள்ள ஈர்ப்பும் ஒன்று.

அனுஜன்யா

அன்புடன் அருணா on January 5, 2009 at 8:37 PM said...

அய்யனாரின் பதிவுகள் அனைத்தும் படித்ததில்லை சரவணனின் பதிவுகள் மூலம் சில படித்திருக்கிறேன்....மனதை உருக்கியது....
அன்புடன் அருணா

கும்க்கி on January 5, 2009 at 10:31 PM said...

அனுஜன்யா said...
நம்ம தல எழுத்து.

வார்த்தைகள் மாறியதால் என்ன ஆச்சு பாருங்க....இருங்க சரியா சொல்லிபாப்பம்.
நம்ம தலையெழுத்து...சரியா..?

பலசரக்கு on January 5, 2009 at 11:29 PM said...

ஏன் பிரிஞ்சீங்க.. அதை ஏன் எழுதுனீங்க..
மனசை பிழிய வச்சிடீங்க.. சந்தோசம் தானே..
நல்லா இருங்க..

சேர்ந்து தொலைச்சிருக்க கூடாதா..

மெல்போர்ன் கமல் on January 6, 2009 at 12:00 AM said...

Story Super Mappu... Keep it up....
:))) Nalla vasana nadai....

Natty on January 6, 2009 at 1:06 AM said...

கார்க்கி, எங்கேயோ ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கு.. மீள் பதிவா?

கார்க்கி on January 6, 2009 at 9:57 AM said...

/கார்க்கி, எனக்கு உன்னிடம் பிடித்த விதயங்களில், உனக்கு அய்ஸ் எழுத்துக்களின் மேல் உள்ள ஈர்ப்பும் ஒன்று.

அனுஜன்யா//

ரொம்ப நன்றி தல..

********************************

/அன்புடன் அருணா said...
அய்யனாரின் பதிவுகள் அனைத்தும் படித்ததில்லை சரவணனின் பதிவுகள் மூலம் சில படித்திருக்கிறேன்....மனதை உருக்கிய//

ஆமாம் அருணா.. அவரை நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்..

**************************

/கும்க்கி said...
அனுஜன்யா said...
நம்ம தல எழுத்து.

வார்த்தைகள் மாறியதால் என்ன ஆச்சு பாருங்க....இருங்க சரியா சொல்லிபாப்பம்.
நம்ம தலையெழுத்து...சரி//

பூனைக்கு யாராவது மணி கட்டுங்கப்பா...

*******************************

//பலசரக்கு said...
ஏன் பிரிஞ்சீங்க.. அதை ஏன் எழுதுனீங்க..
மனசை பிழிய வச்சிடீங்க.. சந்தோசம் தானே..
நல்லா இருங்//

:))))

********************************

/ மெல்போர்ன் கமல் said...
Story Super Mappu... Keep it up....
:))) Nalla vasana nadaஇ...//

அய்ஸ்கிட்ட சொல்லிடறேன் சகா..

*************************

/ Natty said...
கார்க்கி, எங்கேயோ ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கு.. மீள் பதிவா?//

சகா பதிவோட கடைசி பத்திய படிச்சிங்களா?

தாமிரா on January 6, 2009 at 11:12 AM said...

என்ன அழுத்தமான‌ நடை, அழகான சப்ஜெக்ட்.. பின்ன ஏன் அவரைப்பற்றி பின்ந‌வீனம்.. அப்பிடி இப்பிடின்னு பயமுறுத்துறாங்க..?

Pattaampoochi on January 6, 2009 at 11:27 AM said...

ரொம்ப நல்லா இருக்குங்க கார்க்கி.
விஷ்வா மற்றும் ஹேமாவின் வலியை நாமே உணரும்படி இருந்தது.
அருமையான பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

கார்க்கி on January 6, 2009 at 12:31 PM said...

//தாமிரா said...
என்ன அழுத்தமான‌ நடை, அழகான சப்ஜெக்ட்.. பின்ன ஏன் அவரைப்பற்றி பின்ந‌வீனம்.. அப்பிடி இப்பிடின்னு பயமுறுத்துறாங்//

தல அவருடைய கவிதைகள் போய் படிச்சிட்டு வாங்க..

******************************

//Pattaampoochi said...
ரொம்ப நல்லா இருக்குங்க கார்க்கி.
விஷ்வா மற்றும் ஹேமாவின் வலியை நாமே உணரும்படி இருந்தது.
அருமையான பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி//

நன்றி பட்டாம்பூச்சி

Anonymous said...

superb superb superb !!!!

Sinthu on January 6, 2009 at 2:28 PM said...

\\"நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!"\\
அண்ணா தலைப்பை பார்த்தவுடன் ஏனடா அப்பா எப்ப இந்த ஹேமா வந்தா என்று யோசித்தேன்.அப்புறம் முழுமையாக வாசித்த பின்பு தானே புரிந்தது..
பதிவு நன்றாக இருக்கிறது..
உங்கள் புகைப்படமும் அழகாக இருக்கு........

அதிகமான வேலைகள் இருந்தமையாலும் cricket match (Sri Lanka vs Bangladesh)பார்க்க போனதினாலும் உங்கள் பதிவை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை.......

Sinthu on January 6, 2009 at 4:03 PM said...

\\இது போன்றதொரு கதை நிச்சயம் நம் வாழ்விலோ நமக்கு தெரிந்தவர்கள் வாழ்விலோ நடந்திருக்கும். \\
I don't think so.......
b coz I Have seen only in the Cinema..(Especially KISS)

நட்புடன் ஜமால் on January 7, 2009 at 5:58 AM said...

\\Blogger கார்க்கி said...

//அதிரை ஜமால் said...
\\இது போன்றதொரு கதை நிச்சயம் நம் வாழ்விலோ நமக்கு தெரிந்தவர்கள் வாழ்விலோ நடந்திருக்கும். \\


நிச்சியம் .//

முதல் வருகைக்கு நன்றி சகா\\

முதல் வருகையா ...

என்ன கார்க்கி புகைப்படமாற்றம் - அதனால் முதல் வருகை என்று சொல்லி விட்டீர்களோ

கார்க்கி on January 7, 2009 at 10:37 AM said...

//முதல் வருகையா ...

என்ன கார்க்கி புகைப்படமாற்றம் - அதனால் முதல் வருகை என்று சொல்லி விட்டீர்க//

இல்ல சகா.. மீ த ஃப்ர்ஸ்ட்டு வந்ததை அப்படி சொல்லிவிட்டேன்...

*************

// Thooya said...
superb superb supeர்ப் !//

:))))

*******************

//அதிகமான வேலைகள் இருந்தமையாலும் cricket match (Sri Lanka vs Bangladesh)பார்க்க போனதினாலும் உங்கள் பதிவை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை.//

மேட்ச் எல்லாம் பார்ப்பியா சிந்து? குட்

Sinthu on January 7, 2009 at 5:37 PM said...

Anna it happened in Chittagong.
Live show anna. V went and get free tickets and enjoyed a lot. Talk with Murali,Mahela,Sangakara,Chamara, dilshan & Ashraful.........
that's fantastic..
Not only Boy but also girl can watch match....

ஷாஜி on January 14, 2009 at 5:11 PM said...

படிக்கும் போது உங்க கதைன்னு நினைச்சேன் நம்ப வச்சு கழுத்தறுத்துட்டியே சகா....

santhiramathy on January 26, 2009 at 6:52 PM said...

மென்மையான் இனிய காதல் .........சுவைத்தேன் .....தேன் ...தேன் ..
.பதிலிட்டவர் .நிலாமதி

தீ on September 13, 2011 at 3:42 PM said...

என் தலத்தில் இத்த க்தையை போட்டு கொள்ளவா... ஹேமா என்ன் காதலியின் பெயர்

 

all rights reserved to www.karkibava.com