Jan 3, 2009

புது தேசம் உருவாகிறது


      எங்களுக்கென்று ஒரு தேசம். கவிதைகளை ரசிப்பவர்கள் அனைவரும் குடிமகன்கள் ஆகலாம். எங்கள் தேசத்திற்கு வருபவர்களுக்கு எந்த விசாவும் தேவையில்லை. ஆனால் விமானத்தில் வரும்போது ஜன்னலோர‌ இருக்கையில் அமர்ந்து தூங்குபவர்கள் நிச்சயம் திருப்பி அனுப்பப் படுவர்

     பள்ளிகள் அனைத்திலும் அகண்டு விரிந்த புள்வெளிகளும் ஆங்காங்கே ஓடித் திரியும் முயல்களும் கட்டாயம் வேண்டும். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லாமல் அது எப்படி செடிக்கு உதவுகிறது என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும். வகுப்பறைகளின் சன்னலோர கிளைகள் அனைத்தும் குறைந்த பட்சம் நான்கு பறவைகளை கொண்டு நிரப்ப வேண்டும்.

    சாலைகளில் உதிர்ந்து கிடக்கும் காலை நேரப் பூக்கள் அகற்றும் வரை அச்சாலைகள் மூடப்பட்டிருக்கும். நடந்து செல்பவர்களை பார்த்து சிரிக்கும் குழந்தைகளை பார்த்து சிரிக்காமல் போவோரின் உதடுகள் தைக்கப்படும். பாடிச் செல்லும் குருவிகளுக்கு இடைஞ்சலாய் ஒலி எழுப்பும் வாகன் ஓட்டிகள் வாழ்நாள் முழுவதும் வாகன‌ங்களை உபயோகிக்க தடை.

    மழை பெய்யும் போது குடை விரிப்பவர்களும், மழை நிற்கும் முன் நனையத் தவறுபவர்களும் பாலைவனத்தில் ஒரு நாள் இருக்க வேண்டும், வெறும் ஒரு குவளை தண்ணீரோடு. மாதத்தில் ஒரு முறை மின்சாரம் இல்லாமல் ஒற்றை மெழுவர்த்தியுடன் படுத்துறங்க வேண்டும்

   காதல் தோல்வியடைந்து கவிதை எழுதுபவர்களுக்கு இன்னொரு காதலன்/லி உருவாக்கப்பட வேண்டும் குளோனிங் முறையில். கட்டாயம் சாதி சான்றிதழ் தேவை இச்சேவையை பெற. காதலர் என்ற சாதி சான்றிதழ் பெற குறைந்தபட்சம் மூன்று முத்தங்களும், முப்பது சண்டைகளும் போட்டிருத்தல் வேண்டும்.

கவிஞர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.எங்கள் கனவு தேசத்தில் வசிப்பதற்காக எந்த சட்டங்களும் இல்லை. ரசிப்பதற்கு மட்டுமே.

38 கருத்துக்குத்து:

தராசு on January 3, 2009 at 9:57 AM said...

அய்ய், நான் தான் பர்ஷ்டூடூடூடூ,

கணினி தேசம் on January 3, 2009 at 9:58 AM said...

ப்ரெசென்ட் சார்....

கணினி தேசம் on January 3, 2009 at 10:02 AM said...

//எங்களுக்கென்று ஒரு தேசம். கவிதைகளை ரசிப்பவர்கள் அனைவரும் குடிமகன்கள் ஆகலாம்//

எழுதச் சொல்லாத வரையில்.. நான் ரெடி.

கணினி தேசம் on January 3, 2009 at 10:03 AM said...

/செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லாமல் அது எப்படி செடிக்கு உதவுகிறது என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும். //

சூப்பரூ!!

தராசு on January 3, 2009 at 10:04 AM said...

//எங்கள் கனவு தேசத்தில் வசிப்பதற்காக எந்த சட்டங்களும் இல்லை. ரசிப்பதற்கு மட்டுமே.//

இதோ முதல் குடியுரிமை விண்ணப்பத்தை அடியேன் சமர்ப்பிக்கிறேன்.

ஆமா, இந்த ஊருக்கு நீங்கதான் தலயா, அப்ப நமக்கு ஒரு மாவட்ட லெவெல்லயாவது போஷ்டிங் குடுங்க தல

தராசு on January 3, 2009 at 10:06 AM said...

அண்ணே கணினி அண்ணே,

/செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லாமல் அது எப்படி செடிக்கு உதவுகிறது என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும். //

சூப்பரூ!!

இன்னா சூப்பரு, தண்ணி ஊத்தமலே அது எப்படி உதவும்?

கணினி தேசம் on January 3, 2009 at 10:07 AM said...

//சாலைகளில் உதிர்ந்து கிடக்கும் காலை நேரப் பூக்கள் அகற்றும் வரை அச்சாலைகள் மூடப்பட்டிருக்கும்.//

பூக்கள் அகற்றும் வேலை கிடைக்குமா?

மதிபாலா on January 3, 2009 at 10:09 AM said...

ப்ரசென் சார்!

கணினி தேசம் on January 3, 2009 at 10:09 AM said...

//மழை பெய்யும் போது குடை விரிப்பவர்களும்,//

குடையே இல்லாமல் செய்து விட்டால்....

கணினி தேசம் on January 3, 2009 at 10:14 AM said...

//எங்கள் கனவு தேசத்தில் வசிப்பதற்காக எந்த சட்டங்களும் இல்லை. ரசிப்பதற்கு மட்டுமே.//

ரசிக்க நாங்க ரெடி...! தேசத்தை வந்தடையும் வழி தெரிந்தால் நலம்.

கணினி தேசம் on January 3, 2009 at 10:16 AM said...

//தராசு said...

அண்ணே கணினி அண்ணே,

/செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லாமல் அது எப்படி செடிக்கு உதவுகிறது என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும். //

சூப்பரூ!!

இன்னா சூப்பரு, தண்ணி ஊத்தமலே அது எப்படி உதவும்?//

வரியை மீண்டும் படியுங்கள்...
தண்ணீரால் செடிக்கு என்ன பயன் என சொல்லிக்கொடுத்தால்..அனைவரும் தவறாது தண்ணீர் ஊற்றுவார்கள் என்பதே!

SanJaiGan:-Dhi on January 3, 2009 at 10:18 AM said...

கார்க்கி, இதை கவிதை வடிவில் எழுதாலமே கவிதையைப் போல படிக்க வச்சிட்டிங்க.. ரொம்ப அருமையா இருக்கு.. தொடருங்கள்.. :)

கணினி தேசம் on January 3, 2009 at 10:20 AM said...

//பாடிச் செல்லும் குருவிகளுக்கு இடைஞ்சலாய் ஒலி எழுப்பும் வாகன் ஓட்டிகள் வாழ்நாள் முழுவதும் வாகன‌ங்களை உபயோகிக்க தடை.//

சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிருவது கூடத் தெரியாமல், முன்னால் இருப்பவர்கள் தூங்குவதாய் நினைத்து ஒலி எழுப்பும் மடையர்களுக்கும் இதுபோல் தடை விதித்தால் நன்றாக இருக்கும்.

கணினி தேசம் on January 3, 2009 at 10:22 AM said...

மொத்தத்தில்..அருமையான கனவு.

கலக்கல் சகா!!

நான் ஆதவன் on January 3, 2009 at 10:37 AM said...

//வெறும் ஒரு குவளை தண்ணீரோடு. மாதத்தில் ஒரு முறை மின்சாரம் இல்லாமல் ஒற்றை மெழுவர்த்தியுடன் படுத்துறங்க வேண்டும்//

இதெல்லாம் ஓவர் மாசத்தில பாதி நாள் தமிழ்நாடு முழுசும் இப்படி தான் இருக்காமே...

நான் ஆதவன் on January 3, 2009 at 10:41 AM said...

இந்த தேசத்தில இலவசமா எதுனா கொடுப்பீங்களா????? எங்களுக்கு எதுனா ப்ரீயா கொடுத்துகிட்டே இருக்கனும்..இல்லைன்னா நாங்க வாழ முடியாது

வித்யா on January 3, 2009 at 11:48 AM said...

\\ நடந்து செல்பவர்களை பார்த்து சிரிக்கும் குழந்தைகளை பார்த்து சிரிக்காமல் போவோரின் உதடுகள் தைக்கப்படும்\\
சூப்பர் கார்க்கி. ஹூம் இப்படிப்பட்ட தேசம் இருந்தா நல்லாதான் இருக்கும்:)

வித்யா on January 3, 2009 at 11:49 AM said...

என்ன கார்க்கி ஞாயித்துக்கிழமை கடைய தொறந்திருக்க??

கார்க்கி on January 3, 2009 at 12:35 PM said...

// தராசு said...
அய்ய், நான் தான் பர்ஷ்டூடூடூடூ,//

உங்க கைராசி எப்படியிருக்குனு பார்க்கலாம்..

**********************88

// கணினி தேசம் said...
//எங்கள் கனவு தேசத்தில் வசிப்பதற்காக எந்த சட்டங்களும் இல்லை. ரசிப்பதற்கு மட்டுமே.//

ரசிக்க நாங்க ரெடி...! தேசத்தை வந்தடையும் வழி தெரிந்தால் நலம்.//

விரைவில் அறிவிக்கப்படும் சகா.. விரிவான் பின்னூட்டங்களுக்கு நன்றி

***********************88

//SanJaiGan:-Dhi said...
கார்க்கி, இதை கவிதை வடிவில் எழுதாலமே கவிதையைப் போல படிக்க வச்சிட்டிங்க.. ரொம்ப அருமையா இருக்கு.. //

க‌விதைக்கானா மேட்ட‌ராக‌த்தான் ட்ராஃப்ட் செய்தேன்.. வ‌ழ‌க்க‌ம் போல‌ அவ‌ச‌ர‌த்தில் போட்டு விட்டேன்.. ந‌ன்றி ச‌கா

********************

//நான் ஆதவன் said...
இந்த தேசத்தில இலவசமா எதுனா கொடுப்பீங்களா?????//

சாரி ச‌கா.. என்த‌ மு.க‌.வும் கிடையாது.. நான் சொன்ன‌து முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம்(மு.க‌)

கார்க்கி on January 3, 2009 at 12:36 PM said...

//ஹூம் இப்படிப்பட்ட தேசம் இருந்தா நல்லாதான் இருக்கும்:)//

எல்லோருக்கும் ஆசைதான்

// வித்யா said...
என்ன கார்க்கி ஞாயித்துக்கிழமை கடைய தொறந்திருக்க??//

சரியா போச்சு.. நான் இன்னைக்கு சனிக்கிழமைன்னு நினைச்சுட்டு இருக்கேன்.. :))))

வித்யா on January 3, 2009 at 12:39 PM said...

Oops soory. இன்னைக்கு சனிக்கிழமை தான். நான் ஏதோ ஒரு நினைப்புல அடிச்சிட்டேன்:)

கார்க்கி on January 3, 2009 at 4:34 PM said...

// வித்யா said...
Oops soory. இன்னைக்கு சனிக்கிழமை தான். நான் ஏதோ ஒரு நினைப்புல அடிச்சிட்டேன்//

டூர் போய்ட்டு வந்ததில் இருந்தே இப்படித்தான் இருக்கிங்க..

தாமிரா on January 3, 2009 at 6:11 PM said...

அவசரப்பட்டுட்டியே கார்க்கி, என்ன பிரமாதமான ஐடியா? உன் மண்டைக்குள்ள போய் இது தோணிருக்கு பாரேன். ஆனா அப்பிடியே காலாகாலத்துக்கும் நிக்கிறமாதிரி பண்ணிருக்கலாமே.. ராஜா கையில மாட்டின பொம்மரில்லு மாதிரி ஆக்கிட்டியே ராசா.. அவ்வ்வ்......

Kathir on January 3, 2009 at 11:47 PM said...

நல்லா இருந்ததுங்க.....

ஆனா நானும் இதைத்தான் சொல்லனும் ன்னு நினைச்சேன்.....

//இதை கவிதை வடிவில் எழுதாலமே கவிதையைப் போல படிக்க வச்சிட்டிங்க.//

Sinthu on January 4, 2009 at 3:39 PM said...

"மழை பெய்யும் போது குடை விரிப்பவர்களும், மழை நிற்கும் முன் நனையத் தவறுபவர்களும் பாலைவனத்தில் ஒரு நாள் இருக்க வேண்டும், வெறும் ஒரு குவளை தண்ணீரோடு. மாதத்தில் ஒரு முறை மின்சாரம் இல்லாமல் ஒற்றை மெழுவர்த்தியுடன் படுத்துறங்க வேண்டும்" this s the best paragraph in ur post.


"காதல் தோல்வியடைந்து கவிதை எழுதுபவர்களுக்கு இன்னொரு காதலன்/லி உருவாக்கப்பட வேண்டும் குளோனிங் முறையில். கட்டாயம் சாதி சான்றிதழ் தேவை இச்சேவையை பெற. காதலர் என்ற சாதி சான்றிதழ் பெற குறைந்தபட்சம் மூன்று முத்தங்களும், முப்பது சண்டைகளும் போட்டிருத்தல் வேண்டும்."
this s over..............

RAMYA on January 4, 2009 at 11:38 PM said...

// எங்களுக்கென்று ஒரு தேசம். கவிதைகளை ரசிப்பவர்கள் அனைவரும் குடிமகன்கள் ஆகலாம். எங்கள் தேசத்திற்கு வருபவர்களுக்கு எந்த விசாவும் தேவையில்லை. ஆனால் விமானத்தில் வரும்போது ஜன்னலோர‌ இருக்கையில் அமர்ந்து தூங்குபவர்கள் நிச்சயம் திருப்பி அனுப்பப் படுவர்
//

ஆரம்பமே அருமை கார்கி
ஜன்னலோர‌ இருக்கையில்
அது எப்படி முடியும்
அவங்க தான் தூங்கி விடுவாங்களே

RAMYA on January 4, 2009 at 11:39 PM said...

/செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லாமல் அது எப்படி செடிக்கு உதவுகிறது என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும். //


உங்களுக்குன்னு ஒரு யோசனை
எப்படிப்பா யோசிப்பீங்க
அருமை அருமை அருமை

RAMYA on January 4, 2009 at 11:40 PM said...

நல்ல வேலை ரசிக்க
சட்டம் ஒன்னும் போடலை
அதான் தைரியமா ரசிச்சேன்

RAMYA on January 4, 2009 at 11:40 PM said...

மொத்தத்திலே superrrrrrrrrrrrr

கார்க்கி on January 5, 2009 at 10:00 AM said...

//தாமிரா said...
அவசரப்பட்டுட்டியே கார்க்கி, என்ன பிரமாதமான ஐடியா? உன் மண்டைக்குள்ள போய் இது தோணிருக்கு பாரேன்.//

:((((((

****************************

/ Kathir said...
நல்லா இருந்ததுங்க//

நன்றி கதிர்

************************

@சிந்து,

நன்றி

*******************

//RAMYA said...
மொத்தத்திலே superrrrrrrrrர்ர்ர்ர்//

நன்றி ரம்யா

ஸ்ரீமதி on January 5, 2009 at 10:58 AM said...

ஹை அண்ணா எனக்கு அந்த தேசத்துல இடம் உண்டா?? :))

வனம் on January 5, 2009 at 11:48 AM said...

வணக்கம் கார்கி

இன்றுதான் அலுவலகம் தொடங்கியது

அதான் தாமதம்

சரி கனவு நல்லாத்தான்யா இருக்கு
நன்றி
இராஜராஜன்

வால்பையன் on January 5, 2009 at 12:55 PM said...

புது தேசத்தில் எனக்கும் துண்டு போட்டு வையுங்க வந்துர்ரேன்

narsim on January 5, 2009 at 2:52 PM said...

//வால்பையன் said...
புது தேசத்தில் எனக்கும் துண்டு போட்டு வையுங்க வந்துர்ரேன்
//

நமக்கும் சேர்த்துத்தான்..

கார்க்கி on January 5, 2009 at 3:25 PM said...

/ ஸ்ரீமதி said...
ஹை அண்ணா எனக்கு அந்த தேசத்துல இடம் உண்டா//

கொஞ்சம் செலவாகும்.. ப்ரவாயில்லையா?

***********************

/ வனம் said...
வணக்கம் கார்கி

இன்றுதான் அலுவலகம் தொடங்கியது

அதான் தாமதம்

சரி கனவு நல்லாத்தான்யா இருக்//

வாங்க சகா.. நலமா?

*******************************

/ வால்பையன் said...
புது தேசத்தில் எனக்கும் துண்டு போட்டு வையுங்க வந்துர்ரேன்//

முன்பதிவு எங்கேயும் கிடையாது நம் தேசத்தில்.. :))

********************

/ narsim said...
//வால்பையன் said...
புது தேசத்தில் எனக்கும் துண்டு போட்டு வையுங்க வந்துர்ரேன்
//

நமக்கும் சேர்த்துத்தா//

என்ன தல? ஆனி அதிகமா?

நாடோடி இலக்கியன் on January 5, 2009 at 4:33 PM said...

அங்கே எனக்குமோர் இடம் வேண்டும்.

LOSHAN on January 6, 2009 at 9:02 AM said...

ஐயா ஏற்கெனவே ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக் களைத்துப் பொய் இருக்கும் எமக்கு விசேட சட்டம் மூலம் இடம் ஒதுக்கித் தருமாறு மனு தருகிறேன்..

சகா, அருமையான தேசம் ஐயா.. அப்படி ஒரு தேசம் தான் எங்கள் எல்லோருக்குமே வேண்டும்..
ஒவ்வொரு வரிகளும் கவிதைகள் போல.. ரசித்தேன்.. :)

அன்புடன் அருணா on January 17, 2009 at 9:56 PM said...

//மழை பெய்யும் போது குடை விரிப்பவர்களும், மழை நிற்கும் முன் நனையத் தவறுபவர்களும் பாலைவனத்தில் ஒரு நாள் இருக்க வேண்டும், வெறும் ஒரு குவளை தண்ணீரோடு. மாதத்தில் ஒரு முறை மின்சாரம் இல்லாமல் ஒற்றை மெழுவர்த்தியுடன் படுத்துறங்க வேண்டும்//

இதுதான் சூப்பர்...எனக்குப் பிடித்த வரிகள்....அழகா எழுதிருக்கீங்க...
அன்புடன் அருணா

 

all rights reserved to www.karkibava.com