Jan 2, 2009

காக்டெய்ல்


    "உனக்கும் உன் ரசிக/ரசிகை கோடிகளுக்கும் வாழ்த்துகள் என்றார்" நர்சிம். கேடிகள் என்பதைத்தான் கோடிகள் என்று சொல்லிவிட்டதாக இன்னொரு நண்பர் இடித்துரைத்தார். எது எப்படியோ நண்பர்கள் அனைவருக்கும் Wish u a very Happy and Prosperous  New Year (தமிழ் புத்தாண்டுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்வதை குறை சொல்பவர்களே, ஆங்கிலப் புத்தாண்டிற்கு தமிழில் வாழ்த்துவதா?)

************************************************    புது வருடத்தில் முதல் பதிவு கதையா, கவிதையா, நகைச்சுவையா, வழக்கம் போல் மொக்கையா அல்லது புட்டிக்கதையா என்று நீங்கள் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்.(சரி சரி). புட்டிகதைதான் என முடிவு செய்திருந்தேன். ஏழுமலையிடன் புகைப்படம் கேட்டிருந்தேன். காரணம் சொல்லாததால் இன்னமும் அனுப்பவில்லை அவன். ஃபோட்டோ இல்லாமால் புட்டிக்கதை போட்டால் வித்யா தீக்குளிப்பேன் என்று சொன்னதால் பதிவேற்றவில்லை. எல்லாம் டெபாஸிட் இழந்து விட்டதால் எவர்க்ரீன் காக்டெய்ல் ஜெயித்து விட்டது.பொருத்தம்தானே?

*************************************************   நண்பர்கள் சிலர் வழக்கம்போல் வீட்டில் பொய்க் காரணம் சொல்லிவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை வந்திருந்தார்கள். அவர்களை பிக்கப் செய்து கொண்டு வந்துக் கொண்டிருந்தபோது வழியில் தி.க.வினர் சிலர் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொன்டிருந்தார்கள். ஒருவன் சீரியஸா சொன்னான் "இவங்க வீட்ல எல்லாம் கேட்கவே மாட்டாங்களா?"

*************************************************   காம்ப்ளான் விளம்பரம் ஒன்றில் ஹார்லிக்ஸில் இருப்பது சீப்பான பொருட்கள் என்று நேரிடையாக அதன் பெயரை சொல்கிறார்கள். ஹார்லிக்ஸும் அதேப் போல் காம்ப்ளான் பெயரைச் சொல்கிறார்களாம். இது எப்படி சாத்தியம்? வழக்கு தொடுக்கலாமே? எதையும் காப்பியடிக்கும் சன் டிவி.யினர் விளம்பரம் கூட பஜாஜை காப்பி அடித்திருக்கிறார்கள்.

*************************************************வெள்ள நிவாரண நிதி
க்யூவிலிருந்த அருக்காணி-
முக்கால் அம்மணமாய்‍
மூக்கொழுகி நிற்க,
அவள் கையிலிருந்த
ரேஷன் கார்டு
பிளாஸ்ட்க் அட்டையில்
பளபளத்தது.

-கார்க்கி

31 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on January 2, 2009 at 12:15 PM said...

ஹை நாந்தான் முதல்

தாரணி பிரியா on January 2, 2009 at 12:17 PM said...

நான் எல்லாத்துக்கும் தமிழ்லதான் வாழ்த்து சொன்னேன். தமிழ் சொல்லறதுதான் நல்லாயிருக்கு

அருண் on January 2, 2009 at 12:20 PM said...

Happy new year Karki!

அருண் on January 2, 2009 at 12:22 PM said...

இந்த வருடம் தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துக்கள்.

தாரணி பிரியா on January 2, 2009 at 12:26 PM said...

ஏழுமலைகிட்ட அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போற உண்மை காரணத்தை சொல்லி கேட்டு இருக்கலாமே

**************

அட இன்னும் வீட்டுக்கு எல்லாம் இந்த பசங்க பயப்படறாங்களா? கேட்கவே சந்தோசமா இருக்கு.

*****************


ஆமா கார்க்கி இந்த ரெண்டு விளம்பரத்தையும் பார்த்து குழம்பி போய்தான் இருக்கேன். ஒரு வேளை ரெண்டு கம்பெனியும் ஒண்ணாக போகுதோ. ரெண்டோட பெஸ்டும் சேர்ந்து ஒரு புது புரொடக்டா வருமா அப்படி எல்லாம் ஒவரா சிந்திச்சுகிட்டு இருக்கேன்

******************

அத்திரி on January 2, 2009 at 1:16 PM said...

சகா கடைசி கவிதை நச்

narsim on January 2, 2009 at 1:26 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா..

அது சன் டிவியின் காப்பி என்பதை விட நல்ல டெவலப்மெண்ட் என்றே சொல்ல வேண்டும்.. கதாபாத்திரங்களை இடம் மாற்றி அதே வார்த்தைகளை வைத்து.. நல்ல முயற்சி தானே தல..

அந்த கவிதை.. நச்

வித்யா on January 2, 2009 at 1:27 PM said...

ஆஹா அப்ப அடுத்த புட்டிக்கதைல ஏழுமலையின் தரிசனம் நிச்சயம் இருக்கும். இந்த வருடமும் நிறைய பதிவுகள் எழுதுங்கள். Keep us entertained. வாழ்த்துக்கள்.

தராசு on January 2, 2009 at 1:38 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனுஜன்யா on January 2, 2009 at 1:43 PM said...

காம்ப்ளான் மற்றும் ஹார்லிக்ஸ் கோர்ட்டுக்குச் சென்று விட்டார்கள். Very unethical. ASCI என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

சன் டிவி விளம்பரம் ஒரு நல்ல take-away from a good ad. roles are reversed in this ad. இது யாரையும் பாதிக்காத, காயப்படுத்தாத விளம்பரம். மறைமுகமாக இது பஜாஜை நினைவுறுத்தினால், அதனால் பஜாஜ் கம்பெனிக்கு இலாபமே. மேலும் சன் குழுமம் பஜாஜ் நிறுவனங்களுடன் எதிலும் போட்டி போடவில்லை. Its a sort of tribute to the original theme.

அனுஜன்யா

கார்க்கி on January 2, 2009 at 1:50 PM said...

//தாரணி பிரியா said...
ஏழுமலைகிட்ட அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போற உண்மை காரணத்தை சொல்லி கேட்டு இருக்கலாமே//

ந‌ம்ப‌ மாட்டான். என்னைப் ப‌த்தி அவ‌னுக்குத் தெரியும்

//அட இன்னும் வீட்டுக்கு எல்லாம் இந்த பசங்க பயப்படறாங்களா? கேட்கவே சந்தோசமா இருக்கு.//

ஆமாங்க‌..

**********************************8

// அருண் said...
இந்த வருடம் தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துக்கள்//

ந‌ன்றி ச‌கா.. அந்த‌ ஆசை விட்டுப் போச்சு த‌ல‌ :))


***********************

//அத்திரி said...
சகா கடைசி கவிதை நச்//

ந‌ன்றி ச‌கா

கார்க்கி on January 2, 2009 at 2:02 PM said...

// narsim said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா..//

//அது சன் டிவியின் காப்பி என்பதை விட நல்ல டெவலப்மெண்ட் என்றே சொல்ல வேண்டும்.. கதாபாத்திரங்களை இடம் மாற்றி அதே வார்த்தைகளை வைத்து.. நல்ல முயற்சி தானே தல..//

அப்ப்டி சொல்றீங்க‌ளா?அதுவும் ச‌ரிதான்..


//அந்த கவிதை.. நச்//


நிஜ‌மாவா த‌ல‌?

********************************

//வித்யா said...
ஆஹா அப்ப அடுத்த புட்டிக்கதைல ஏழுமலையின் தரிசனம் நிச்சயம் இருக்கும். இந்த வருடமும் நிறைய பதிவுகள் எழுதுங்கள்.//

நிச்சயமாய்...

// Keep us entertained. வாழ்த்துக்கள்.////


ந‌ன்றிங்க‌.. முய‌ற்சி செய்கிறேன்:)))

*******************************

//தராசு said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக‌ள் த‌ல‌..

*************************8

// அனுஜன்யா said...
காம்ப்ளான் மற்றும் ஹார்லிக்ஸ் கோர்ட்டுக்குச் சென்று விட்டார்கள். Very unethical. ASCI என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. //

ரெண்டுமே டுபாக்கூர்னு தெரியுது

Thusha on January 2, 2009 at 3:51 PM said...

நாம்ம தல ஏழுமலை சாரருக்கும, அண்ணா உங்களுக்கும் Happy New Year. தலயின் பதிவு வரவில்லை என்று ஒரு கவலை ................

"காம்ப்ளான் விளம்பரம் ஒன்றில் ஹார்லிக்ஸில் இருப்பது "..........
எனக்கு அந்த இரு விளம்பரம் பற்றி ஒன்றும் தெரியாது

கவிதை சுப்பர் சுப்பர் சுப்பர்
வரட்டா.........

Kathir on January 2, 2009 at 3:59 PM said...

Karki,

Happy New Year......

unga profile la irundha id kku mail anuppi irukken...

Anonymous said...

Happy New Year to you

தாமிரா on January 2, 2009 at 4:22 PM said...

சொந்தக்கதையிலேயே பாதியை ஒப்பேத்திவிட்டு காக்டெயில்னு கலாய்க்கிறியாப்பா.. சரி மொத பதிவு, டென்ஷனாயிடப்போற.. சொல்லிடறேன்.. ரசித்தேன்.!

கார்க்கி on January 2, 2009 at 5:18 PM said...

//Thusha said...
நாம்ம தல ஏழுமலை சாரருக்கும, அண்ணா உங்களுக்கும் Happy New Year. தலயின் பதிவு வரவில்லை என்று ஒரு கவலை ................//

நன்று துஷா..வாழ்த்துகள்..

***********************8

//Kathir said...
Karki,

Happy New Year......

unga profile la irundha id kku mail anuppi irukkeந்...//

பார்க்கிறேன் சகா.happy new year

*************************8

//சின்ன அம்மிணி said...
Happy New Year to yoஉ//

happy new yearஅம்மினி

********************

// தாமிரா said...
சொந்தக்கதையிலேயே பாதியை ஒப்பேத்திவிட்டு காக்டெயில்னு கலாய்க்கிறியாப்பா.. சரி மொத பதிவு, டென்ஷனாயிடப்போற.. சொல்லிடறேன்.. ரசித்தேன்.!//

அப்ப‌டி ச‌ம்த்தா இருங்க‌

அமிர்தவர்ஷினி அம்மா on January 2, 2009 at 5:25 PM said...

கவிதையோடு மினுமினுக்கும் காக்டெயில்,

கவிதை ம், பலே பலே.

ஏழுமலை புகைப்படம், வேண்டாம், ஒரு கற்பனை சிதைந்தால், அதை தாங்கும் மனப்பக்குவம்.............

Sinthu on January 2, 2009 at 5:45 PM said...

எங்கடா பதிவை காணவில்லை என்று நினைத்தேன். வந்திட்டீங்களா............. வாங்க வாங்க............. நீங்கள் சொன்னதற்காக ஆங்கிலத்திலேயே வாழ்த்துகிறேன்....... சரியா?
Lated Wnglish Happy New Year.......

கார்க்கி on January 2, 2009 at 9:14 PM said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
கவிதையோடு மினுமினுக்கும் காக்டெயில்,

கவிதை ம், பலே பலே.//

ந‌ன்றிங்க‌..

//ஏழுமலை புகைப்படம், வேண்டாம், ஒரு கற்பனை சிதைந்தால், அதை தாங்கும் மனப்பக்குவம்............//


இதுவும் சரிதான். ஆனா சில பேர் கேட்கறாங்க்ளே? ஒரு ஐடியா இருக்கு.. வெய்ட் ப‌ண்ணுங்க‌

*****************************8

//Sinthu said...
எங்கடா பதிவை காணவில்லை என்று நினைத்தேன். வந்திட்டீங்களா............. வாங்க வாங்க............. நீங்கள் சொன்னதற்காக ஆங்கிலத்திலேயே வாழ்த்துகிறேன்....... சரியா?
Lated Wnglish Happy New Year.......
//

happy new year sinthu

வால்பையன் on January 2, 2009 at 9:19 PM said...

வாழ்த்துக்கள்

வால்பையன் on January 2, 2009 at 9:19 PM said...

எதுக்குன்னு கேக்குறிங்களா?

வால்பையன் on January 2, 2009 at 9:20 PM said...

அதுக்கு தாங்க!

வால்பையன் on January 2, 2009 at 9:20 PM said...

அதாங்க வரப்போற தமிழ் புத்தாண்டுக்கு முன் கூட்டியே முதலாவதாக வாழ்த்து

MayVee on January 3, 2009 at 7:50 AM said...

cocktail super....
wish u a happy new வருடம்....

கார்க்கி on January 3, 2009 at 9:58 AM said...

//வால்பையன் said...
அதாங்க வரப்போற தமிழ் புத்தாண்டுக்கு முன் கூட்டியே முதலாவதாக வாழ்த்து//

நன்றி வால்...2010 புத்தாண்டுக்கு என்னுடைய முதல் வாழ்த்து..

*******************8

//MayVee said...
cocktail super....
wish u a happy new வருடம்//

உங்களுக்கும் வழ்த்துகள் சகா

Karthik on January 3, 2009 at 10:31 AM said...

Nice post.
:)

நான் ஆதவன் on January 3, 2009 at 10:35 AM said...

கவிதை சூப்பர்

A N A N T H E N on January 3, 2009 at 11:00 AM said...

//ஆங்கிலப் புத்தாண்டிற்கு தமிழில் வாழ்த்துவதா...//

ஹாஹா.. அப்படியே சேர்த்து ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி,ரொமானியம், ஷிரியா மொழிகள்லையும் போட்டுடுங்க.. அவங்களுக்கும் ஜனவரி ஒன்னுத்தான்...

ஸ்ரீமதி on January 5, 2009 at 10:06 AM said...

:))))))))

கார்க்கி on January 5, 2009 at 2:58 PM said...

// Karthik said...
Nice post.
:)//

தாங்க்ஸ்..

**************

//நான் ஆதவன் said...
கவிதை சூப்பர்//

கவிதைனு சொன்னதுக்கு நன்றிங்க‌

*************

/A N A N T H E N said...
//ஆங்கிலப் புத்தாண்டிற்கு தமிழில் வாழ்த்துவதா...//

ஹாஹா.. அப்படியே சேர்த்து ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி,ரொமானியம், ஷிரியா மொழிகள்லையும் போட்டுடுங்க.. அவங்களுக்கும் ஜனவரி ஒன்னுத்தா//

அப்ப சரி

***********************

// ஸ்ரீமதி said...
:))))))))//

:(((((

 

all rights reserved to www.karkibava.com