Jan 22, 2009

வாக்காள பெருமக்களே!! வேணுமா 5000????


அன்பு வாக்காள பெருமக்களே!!!.. தமிழ்மண தேர்தலில் மூன்று தலைப்புகளில் என் மொக்கைகளையும் சேர்த்திருக்கிறேன். நீங்கள் நிற்கும் மூன்று தொகுதிகளை தவிர்த்து வேறு தொகுதிகளில் நான் நின்றிருந்தால், படித்து விட்டு பிடித்திருந்தால் வாக்களிக்காதீர். பிடிக்கவில்லையென்றால் வாக்களியுங்கள்.(அப்பதானே நிறைய வோட்டு விழும்)

நகைச்சுவை தொகுதியில் இந்தப் பதிவைதான் நிற்க வைத்திருக்கிறேன். படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.   


                                                           வலையுலக தர்பார்

அரசராக கோவி.கண்ணன், தலைமையமைச்சராக குசும்பன், மற்றும் உங்கள் அபிமான பதிவர்கள் வீற்றிருக்கும் தர்பாரில் ஒரு நாள்

*************************************************

   ராஜாதி ராஜ‌ 
   ராஜ மார்த்தாண்ட‌ 
   ராஜ கம்பீர‌ 
   ராஜ குலத்துலோத்துங்க‌ 
   மாமன்னன் ஆவி.கண்ணன் ச்சே.. பாவி.கண்ணன்..    ச்சேசே.. கோவி.கண்ணன் பராக்..பராக்..ப்ராக்..

அரசர்: என்ன குசும்பரே.. கவனித்தீரா?

குசும்பன்: ஆம். மன்னா.இவன் தலை வகிடை வலப்பக்கம் எடுத்துள்ளான். நுட்பமான விதயங்களையும் கவனிப்பதுதான் எனக்கு கை வந்த கலையாச்சே..ஹிஹிஹி

அர‌ச‌ர்: உன்னைப் போய் த‌லைமைய‌மைச்ச‌ராக‌ வைத்தால் இவ‌ன் இப்ப‌டித்தான் செய்வான். வாரும்.

குசும்ப‌ன்: (வீர‌னிட‌ம்) கேட்டாயா? அர‌ச‌ரே வாரும் என‌ சொல்லிவிட்டார். இதோ இப்பொதே உன‌க்கு இட‌ப்ப‌க்க‌ம் வ‌கிடெடுத்து வாரி விடுகிறேன். சீப்பு இருக்கிற‌தா?

(மன்னர் அரியணையில் அமர சபை தொடங்குகிறது)

மன்னர்: குசும்பா.. இன்றைய திட்டம் என்ன?

குசும்பன்: மன்னா. அந்த உடை விவகாரம்.

மன்னர்: ஆம். அமைச்சர்களே!!!நான் ஒரு மாபெறும் வீரன் என்பது ஒரு புறமிருக்க, சமீப காலமாக அபரிதமாக வளர்ந்து வரும் என் தொப்பை அந்த கம்பீரத்தை கெடுப்பதாக உள்ளது. எனவே இனிமேல் அனைவரும் தொளதொளவென உடை அணிய வேண்டும்.கழுத்திலிருந்து கால் வரைக்கும் ஒரே உடையாக இருக்க வேண்டும்.எவருக்கு தொப்பை என்பது தெரியாத அளவுக்கு அது இருக்க வேண்டும்.

நர்சிம் : மன்னா இது அநியாயம்.டவுசர் எனப்படும் கீழாடையின் உள்ளே மேலாடையை சொருகி வருவது என் வழக்கம். அவ்வாறு செய்யாமல் என்னால் கழிவறைக்கு கூட செல்ல முடியாதே.

மன்னர்: அரசரையே எதிர்த்து பேசும் தைரியம் யார் தந்தது நர்சிம்மரே? உங்களுக்கும் மாறவர்மனுக்கும் தொடர்பு உண்டு என்று வந்த தகவல் உண்மை போல உள்ளதே?அமைதியாக அமரும்.

 குசும்பர்: மன்னா உங்களை வாழ்த்திப் பாட அய்யணார் என்ற புலவர் வந்துள்ளார்.

 மன்னர்: புலவரா? வரச்சொல்லும். வந்து பாட சொல்லும்.

 அய்யணார்: திட்டமிடுதல்களைப் பற்றிய பிரக்ஞைகள் 
                  மீப்பெருவெளியின் இசைத்தன்மை மீது 
                  பெரும்திரையெனக் கவிழ்கிறது 
                  தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து 
                  பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை 
                  இன்னும் ஒருதரம் 
                  சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.

 மன்னர்: என்ன சொல்கிறான் இவன்? தமிழ்நாட்டு மண்ணில் தமிழிலே கவி பாடலாமே? இவன் ஏன் பிராகிருத மொழியில் பாடிகிறான்.

குசும்பன்: மன்னா உங்களுக்கு பிராகிருத மொழி கூடத் தெரியுமா?

மன்னர்: உங்களுக்குத் தெரியுமா?

குசும்பன்: இல்லை மன்னா

மன்னர்: அப்படியென்றால் எனக்குத் தெரியும்

முரளி: (நடுவில்) இது தில்லிமுல்லுவில்..

மன்னர்: படம் காட்டாமல் அமரும்.

குசும்பன்: இவர் வேண்டாம் மன்னா. இன்னொரு பெண்கவி வந்துள்ளார்

மன்னர்: ஆச்சரியம்? பெண் புலவரா? கவிதாயினி.. கவி தா இனி..

ராப் : பார் போற்றும் எங்கள் மன்னனே 
      வானளாவிய புகழுடைய விண்னனே 
      தங்கை துயர் துடைக்கும் அண்ணனே 
      சிங்க நிகர் வீரன் கோவி.கண்ணனே

மன்னர்: ஆஹா.. அற்புதம்.. முதல் முறையாக எனக்குப் பிடித்த கவிதை சொன்ன புலவர் நீ.பிடியும் 1000 பொற்காசுகள்.

ராப்: ஹை.மீ த ஃப்ர்ஸட்டா?நன்றி மன்னா.

குசும்பன்: மன்னா.. நீங்கள் ஏன் மகாராணியைப் பார்த்து ஒரு கவி பாட கூடாது?

மன்னர்: அனைத்தும் அறிவான் கண்ணன். இதோ..

        மதி முக நாயகியே..

லக்கி: (குறுக்கிடுகிறார்) மன்னா..மன்னிக்க வேண்டுகிறேன். மகாராணி வைகோவின் ஆதரவாளரா?

மன்னர்: (கோவமாக) யார் சொன்னது?

லக்கி: நீங்கள்தான் அவரை ம.தி.மு.க நாயகி என்றீரே?

மன்னர்: ஆவ்வ்வ்வ்.நல்ல கவிதையை இழந்து விட்டோமே. குசும்பா மதிய உணவென்ன?

ஒருவர்: பிரியாணி மன்னா

மன்னர்: யாரது? வெண்பூவா?

வெண்பூ: ஆம் மன்னா. நானே ருசி பார்த்து தங்களுக்கு பிடிக்கும் வண்னம் செய்ய சொல்லியிருக்கிறேன்.

மன்னர்: ருசி பார்த்தீரா? பின் எங்களுக்கு எங்கே இருக்கப் போகிறது?

குசும்பன்: மன்னா.ஒரு பிரச்சனை. இளவரசர் தேர்வு எழுத மாட்டேன் என்கிறாராம். அவருக்கு உடனே திருமணம் செய்ய வேண்டுமாம்.

மன்னர்: என்ன திருமணமா? அவரை உடனே குருகுலத்திலிருந்து மாற்றி முனிவர் தாமிராவிடம் சில காலம் விட்டுவிடுங்கள். எல்லாம் சரியாய் போகும். தேர்வு எழுத வேறு ஆளை தயார் செய்யுங்கள்.

குசும்பர்: ஒருவர் இருக்கிறார் மன்னா. இதோ வரச் சொல்கிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் பெய‌ரென்ன‌ ?

அப்துல்லா: வணக்கம் மன்னா.நான் புதுகை.அப்துல்லா. பிறருக்காக தேர்வு எழுதுவது என் விருப்பமான பணி.

ம‌ன்ன‌ர்: என்ன‌ புதுகையா? அப்ப‌டியென்றால் உன் ப‌ழைய‌ கை என்ன‌ ஆன‌து? யார் வெட்டினார்க‌ள்?

குசும்ப‌ன்: ம‌ன்னா புதுகை என்ப‌து அவ‌ர் ஊரின் பெய‌ர்.

ம‌ன்ன‌ர்: அப்போ துல்லா என்றால்?

குசும்ப‌ன்: அது அப்துல்லா. அப்போ துல்லா அல்ல‌ ம‌ன்னா.

ம‌ன்ன‌ர்: தெரியும் குசும்பா. அப் என்றால் இப்போது என்று பொருள். அத‌னால் தான் துல்லாவுக்கு ம‌ட்டும் அர்த்த‌ம் கேட்டேன்.

குசும்ப‌ன்: அய்யோ அய்யோ

ம‌ன்ன‌ர்: என்ன‌ துல்லா என்றால் அய்யோ என்று பொருளோ? என‌க்கு தெரியாதே..

 ஜோஸப் பால்ராஜ்: நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை.எங்கும் திருட்டு.பஞ்சம்.. பாவம் மக்கள்.

மன்னர்: போதும். பதிவர் சந்திப்பு சபையில் சம்மனமிட்டு அமர்ந்து சத்தம் போட்டு சங்கை முழங்கிவிட்டு, பின்புறம் போய் பீர் வேண்டுமென பிறரை பிறான்டி எடுப்பது நீர்தான் என்பது எனக்கு ஒற்றன் கொடுத்த தகவல். உண்மைதானே?

(தலையாட்டுகிறார்)

மன்னர்: குசும்பா. இவர்கள் என்னை கடுப்பேத்துகிறார்கள். வாரும் நாம் வேட்டைக்கு செல்வோம்.

குசும்பன் : நிஜமாகத்தான் சொல்கிறீர்களா அரசே?

மன்னர்: உம் நக்கலை சஞ்ச‌யிடமும், நந்துவிடமும் வைத்துக் கொள்.புறப்படு

(ஆற்றுகருகில்)

பரிசல்: அரசே!! இது போல வேட்டைக்கு போகும் போது என் குதிரை பாதியிலே நின்றுவிடும். அது போல் உங்களுக்கு ஆகி இருக்கிறதா?

மன்னர்: இவன் யாரடா. புறப்படும் போதே அபசகுனாமாக கேட்கிறான்?

குசும்பன்: இவருக்குத்தான் நாம் ராஜகுரு பதவி தருவதாக கேலி ஓலை அனுப்பி சபையே சிரிக்க வைத்தோம் அரசே.

மன்னர்: ஓ அவரா? இன்னொருவருக்கும் அனுப்பினோமே?

குசும்பன்: அவர் அந்தப்புரத்தில் இருப்பார்

மன்னர்: என்ன?

குசும்பன்: இல்லை மன்னா. கரைக்கு அந்த புறத்தில் இருப்பார் என்றேன்

அடுத்த பகுதியை படிக்க இங்கே க்ளிக்குங்கள்

28 கருத்துக்குத்து:

ராம்சுரேஷ் on January 22, 2009 at 6:48 PM said...

Content ஓண்ணுமே இல்லீங்க.. அமாவாசை வானம் மாதிரி இருக்கு!

அத்திரி on January 22, 2009 at 6:52 PM said...

ச்சே ஜஸ்ட் மிஸ் நாந்தான் ரெண்டாவது

அத்திரி on January 22, 2009 at 6:54 PM said...

முத்திரை குத்தி ஒரு வாரம் ஆவுது சகா..

நல்லாவே விளம்பரம் பண்ற

RAMYA on January 22, 2009 at 6:55 PM said...

என்ன என்ன நடக்குது இங்கே?????

RAMYA on January 22, 2009 at 6:59 PM said...

தினம் தினம் ஒரு திக் திக்
ஹல்லோ என்னா உறக்கத்தில்
தோன்றியதா நண்பா!!!

ராம்சுரேஷ் on January 22, 2009 at 7:01 PM said...

நான் போஸ்ட்ட பாக்க வரும்போது தலைப்பு மட்டும் தான் இருந்துச்சு. உள்ள எதுவும் தெரியல. அதான் அந்த ஃபர்ஸ்ட் கமெண்ட். இப்ப ஓ.கே.

ILA on January 22, 2009 at 7:14 PM said...

Please avoid such kind of Lenghteeeeee pOsts..

கார்க்கி on January 22, 2009 at 7:25 PM said...

// அத்திரி said...
முத்திரை குத்தி ஒரு வாரம் ஆவுது சகா/

ரொம்ப நன்றி சகா(உண்மையாதானே)

****************

// RAMYA said...
தினம் தினம் ஒரு திக் திக்
ஹல்லோ என்னா உறக்கத்தில்
தோன்றியதா நண்பா!//

ஏங்க இதுக்கு என்ன குறைச்சல்??????

******************

/ ராம்சுரேஷ் said...
நான் போஸ்ட்ட பாக்க வரும்போது தலைப்பு மட்டும் தான் இருந்துச்சு. உள்ள எதுவும் தெரியல. அதான் அந்த ஃபர்ஸ்ட் கமெண்ட். இப்ப ஓ.கே//

பதிவ போட்ட அடுத்த நொடியே வந்த உங்களுக்கு எப்படிப்பா நன்றி சொல்வேன்???????

*******************

/ ILA said...
Please avoid such kind of Lenghteeeeee pOச்ட்ச்.//

அது ரெண்டு ப‌திவாத்தான் போட்டேன்.. இப்போ மீள்பதிவு என்பதால் ஒன்னான்க்கிட்டேன் சகா

வித்யா on January 22, 2009 at 7:31 PM said...

நீ சொல்லாமலயே எப்பவோ குத்திட்டேன் சகா. வோட்டுரிமையை காப்பாத்தனும்னு தான் உங்கிட்ட சொல்லல. அப்புறம் அந்த 5000 --------------------- எனக்கு வேண்டாம்னு சொல்ல வந்தேன்;)

கார்க்கி on January 22, 2009 at 11:03 PM said...

//வித்யா said...
நீ சொல்லாமலயே எப்பவோ குத்திட்டேன் சகா. வோட்டுரிமையை காப்பாத்தனும்னு தான் உங்கிட்ட சொல்லல. அப்புறம் அந்த 5000 --------------------- எனக்கு வேண்டாம்னு சொல்ல வந்தேன்;)//

நிஜமா சொல்றிங்களான்னு தெரியல.. இதுவரைகும் எங்கிட்ட சொன்னவங்க மட்டும்ர்ர் 10 பேரு ஆச்சு. பார்ப்போம் அவ்வளோ ஓட்டு விழுந்திருக்கானு.. நன்றி கொ.ப.செ

தாரணி பிரியா on January 22, 2009 at 11:36 PM said...

எனக்கு இந்த பதிவு பிடிச்சு இருக்கே. இப்ப ஓட்டு போடறதா வேண்டாமா சொல்லுங்க சகா ;)

Natty on January 23, 2009 at 1:56 AM said...

சகா... முடில.. .கலாசு கலாசு.. நடக்கட்டும்.. இத மாதிரி எல்லாம் ஓட்டுவீங்கன்னு தான் நான் பிரபலம்ஸ் வலைக்குள்ள சிக்கவே இல்ல ;)

SanJaiGan:-Dhi on January 23, 2009 at 8:35 AM said...

//சஞ்சய்: நாங்கள் வியாபாரிகள் (தொழிலதிபர்கள் என்றும் சொல்லலாம்) மன்னா. அவ்வபோது இது போல குழுவாக சென்று வியாபாரத்தை பெருக்குவது பற்றி பேசுவோம்.//

எல்லாரும் பார்த்துக்கோங்க.. நானும் பதிவர் தான்.. நானும் பதிவர் தான்.. :))

SanJaiGan:-Dhi on January 23, 2009 at 8:35 AM said...

// ILA said...

Please avoid such kind of Lenghteeeeee pOsts..//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

Krish_007 on January 23, 2009 at 8:43 AM said...

சகா சோக்கா கீது பா (Continuity தான் missing மாதிரி எனக்கு தோனுது). நல்லா தான் கலாய்க்கிற சகா. வெள்ளை கொடிக்கு வேலை வந்து விட்டது சகா மாமா's சங்கம் உங்களை டரியல் செய்ய காத்துள்ளுதாக எனக்கு ஒற்றன் மூலமாக செய்தி வந்தது.

Jenbond

Krish_007 on January 23, 2009 at 8:47 AM said...

அய்யய்யோ கேட்க மறந்தே போச்சு எங்கே 5000? ஏமாத்த மாட்டிங்களே!

Jenbond

Krish_007 on January 23, 2009 at 9:27 AM said...

சகா பரிசல் மாமாவும் தன்னோட புட்டி தோழனை இன்னைக்கு அறிமுகபடுத்திவிட்டார். எழுமலை உஷார்

jenbond

கார்க்கி on January 23, 2009 at 9:59 AM said...

/தாரணி பிரியா said...
எனக்கு இந்த பதிவு பிடிச்சு இருக்கே. இப்ப ஓட்டு போடறதா வேண்டாமா சொல்லுங்க சகா//

பிடிக்கலைன்னா கூட வோட்டு போடனும் சொல்லும்போது, பிடிச்சா போட்டுத்தானே ஆகனும்?

************************

// Natty said...
சகா... முடில.. .கலாசு கலாசு.. நடக்கட்டும்.. இத மாதிரி எல்லாம் ஓட்டுவீங்கன்னு தான் நான் பிரபலம்ஸ் வலைக்குள்ள சிக்கவே இல்ல//

அடுத்த தொடர்ல நீங்க மாட்டனீங்க சகா

*****************

/ SanJaiGan:-Dhi said...
//சஞ்சய்: நாங்கள் வியாபாரிகள் (தொழிலதிபர்கள் என்றும் சொல்லலாம்) மன்னா. அவ்வபோது இது போல குழுவாக சென்று வியாபாரத்தை பெருக்குவது பற்றி பேசுவோம்.//

எல்லாரும் பார்த்துக்கோங்க.. நானும் பதிவர் தான்.. நானும் பதிவர் தான்.//

ஹலோ மாமா, நீங்க பதிவர்ன்னு தெரியும்.. நாங்களும் தொழிலதிப‌ர்தான்னு சொல்லுங்க‌

***************************

// Krish_007 said...
சகா சோக்கா கீது பா (Continuity தான் missing மாதிரி எனக்கு தோனுது). நல்லா தான் கலாய்க்கிற சகா. வெள்ளை கொடிக்கு வேலை வந்து விட்டது சகா மாமா's சங்கம் உங்களை டரியல் செய்ய காத்துள்ளுதாக எனக்கு ஒற்றன் மூலமாக செய்தி வந்த//

அவரை கொத்து பரோட்டா செய்ய ஆப்பரேஷன் சஞ்சய் ஸ்டார்ட் ஆகிவிட்டது

***************

// Krish_007 said...
சகா பரிசல் மாமாவும் தன்னோட புட்டி தோழனை இன்னைக்கு அறிமுகபடுத்திவிட்டார். எழுமலை உஷார்//

நல்லவேளை சொன்னிங்க.. அவர அடுத்த பார்ட் எழுத வுடாம செய்யனும்.. இல்லைன்னா நம்ம கதை அவ்வளவுதான்

Krish_007 on January 23, 2009 at 10:47 AM said...

\\சகா இப்போ நிறைய பேரு சொல்றாங்க.. நான் இல்லாத கடையில் கூட அந்த வார்த்தை கண்ணுல படுது.. ஏழுமலைக்கும் சகாவுக்ம், சகா Jenbondக்கும் நன்றி\\

அன்பே சிவம் படத்தை பலமுறை பார்த்ததினால் ஆரம்பித்தது. நீங்க எப்ப சகா ஆரம்பித்தீர்கள்.

Jenbond

ஷாஜி on January 23, 2009 at 11:18 AM said...

நல்லா இருக்கு சகா..

gayathri on January 23, 2009 at 12:46 PM said...

குசும்ப‌ன்: அது அப்துல்லா. அப்போ துல்லா அல்ல‌ ம‌ன்னா.

enna irhtu chinapulla thanm

olunga அப்துல்லா. itha eluthu kutti padinga

gayathri on January 23, 2009 at 12:47 PM said...

SanJaiGan:-Dhi said...
//சஞ்சய்: நாங்கள் வியாபாரிகள் (தொழிலதிபர்கள் என்றும் சொல்லலாம்) மன்னா. அவ்வபோது இது போல குழுவாக சென்று வியாபாரத்தை பெருக்குவது பற்றி பேசுவோம்.//

எல்லாரும் பார்த்துக்கோங்க.. நானும் பதிவர் தான்.. நானும் பதிவர் தான்.. :))

iyyo iyyo
:))))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))
:))))))))))))))))))))))))))))))))))

prakash on January 23, 2009 at 2:19 PM said...

இதுக்கு எங்கனா தனியா வோட்டு போடனுமா இல்லை
வழக்கம் போலவா?

கார்க்கி on January 23, 2009 at 2:40 PM said...

// ஷாஜி said...
நல்லா இருக்கு சகா.//


நன்றி சகா

***********

// gayathri said...
குசும்ப‌ன்: அது அப்துல்லா. அப்போ துல்லா அல்ல‌ ம‌ன்னா.

enna irhtu chinapulla tஹன்ம்//

நான் சின்னப்புள்ளதாங்க‌

*******************

/ prakash said...
இதுக்கு எங்கனா தனியா வோட்டு போடனுமா இல்லை
வழக்கம் போலவா//

பதிவர்களுக்கு மட்டும் தமிழ்மணம் ஒரு லின்க் அனுப்பி இருக்கு. அதுல இந்த பதிவுக்கு ஓட்டு போடலாம்.. தேர்வு செய்யப்படும் பதிவுகள் வாசகர் தேர்வுக்கு வரும் போது நீங்கள் வாக்களிக்கலாம்..

Karthik on January 23, 2009 at 5:08 PM said...

//நீங்கள் நிற்கும் மூன்று தொகுதிகளை தவிர்த்து வேறு தொகுதிகளில் நான் நின்றிருந்தால், படித்து விட்டு பிடித்திருந்தால் வாக்களிக்காதீர். பிடிக்கவில்லையென்றால் வாக்களியுங்கள்.(அப்பதானே நிறைய வோட்டு விழும்)

5000?

தமிழன்-கறுப்பி... on January 23, 2009 at 5:13 PM said...

:)

கார்க்கி on January 28, 2009 at 5:14 PM said...

நன்றி கார்த்திக்

நன்றி கருப்பி

விஜய் on February 17, 2009 at 3:22 PM said...

oh, just 28th konjam seekiram vanthutaeno intha pathivukku???

 

all rights reserved to www.karkibava.com