Jan 30, 2009

என்ன செய்யலாம் முத்துக்குமாருக்கு?

18 கருத்துக்குத்து

   முத்துக்குமாரைப் பற்றி இந்நேரம் அனைவருக்கு தெரிந்திருக்கும். அவரைப் பற்றியும் அவரின் செயல் பற்றியும் எந்தக் கருத்தும் சொல்லும் நிலையிலும் நாமில்லை. அந்த தகுதியும் இல்லை. அவரின் விருப்பம் அவர் சொல்ல வந்த விதயங்களை பல பேரிடம் சேர்ப்பது. அதை செய்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.

அவரின் இறுதி அறிக்கை. முடிந்தவர்கள் மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புங்கள். பதிவிட முடிந்தவர்கள் பதிவிடுங்கள்.

Jan 29, 2009

கஷ்டமர் கேர்

127 கருத்துக்குத்து

  நம்ம மக்களுக்கு யாராவது ஒரு இளிச்சவாயன் கிடைச்சான்னா போதும். கூடி கும்மி அடிச்சு குமுறிடுவாங்க. இது மாதிரி சம்பவங்கள் பல நடந்திருந்தாலும் இந்த கால் சென்ட்டர் பொண்ணுங்க படற அவஸ்தைதான் பாவம்ப்பா. பல நேரத்தில் நமகு எரிச்சல் தர்ற மாதிரி ஃபோன் பண்றதால் நம்ம பசங்க இவங்கள கலாய்ப்பது இப்போ அடிக்கடி நடக்குது.

   எனக்கு சில மாதங்கள் முன்பு லோன் வேணுமான்னு ஒரே நம்பரில் இருந்து கால் வந்துக் கொண்டே இருந்தது. ஒரு நாள் "ஆமாங்க லோன் வேணும்"னு சொன்னேன். எங்க வேலை செய்யறீங்க, எவ்ளோ ச‌ம்பளம், என்ன படிச்சு கிழிச்சிருக்கிங்க, கார் இருக்கா ட்ரெய்ன் இருக்கா, கல்யாணம் ஆயிடுச்சா, லவ் பண்றீங்களான்னு கேட்டாங்க. எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு நான் திருப்பி மூனு கேள்விதாங்க கேட்டேன்.

1) உங்க பேங்க்கோட போன வருஷம் நிகர லாபம் எவ்வளவு?

2) மொத்தம் எத்தனை கோடி ரூபாய் லோனா கொடுத்து இருக்கிங்க?

3) உங்க பேங்க் இந்தியாவில எத்தணையாவது இடத்துல இருக்கு?

   லோன் எடுக்க பல வங்கிகள் இருக்கும் போது இவங்க கிட்ட லோன் எடுக்கனும்ன்னு இந்தக் கேள்வி கேட்டா தப்பாங்க? அடுத்த நாள் நம்மள கலாய்ப்பதா நினைச்சு அந்தப் பொண்ணு திரும்ப கால் செய்து, எல்லாத்துக்கும் பதில் சொல்லுச்சு. அடடா.. தப்பு செஞ்சிட்டோமேனு உண்மையிலே லோன் போடலாம்னு முடிவு செஞ்சேன். எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சு எவ்ளோ லோன் வேணும், எதுக்குனு கேட்டுது அந்த பொண்ணு. வீட்டுக்கிட்ட ஒரே டிராஃபிக்குங்க. ஒரு மேம்பாலம் கட்டனும். பத்து கோடி ரூபாய் வேணும்ன்னு சொன்னேன். பாவம். அந்தப் பொண்ணு.

   இந்த மாதிரி இன்னொரு பொண்ணு ஒருத்தன்கிட்ட பட்ட அவஸ்தை தான் இப்போ ஹாட். ஆங்கிலத்தில் நடைபெற்ற அந்த உரையாடல்ல படிச்சு பாருங்க. நீல வண்ண‌த்தில் இருப்பதுதான் நம்ம தலைவர் பேசியது. கருப்பு நிறத்தில் இருப்பது எதிர்முனைப் பெண்.

Hello.. Can I speak to Mr.sharath?
Yes. sharath is I.
Hello sharath. This is Kunjan calling behalf of SBI sir.
Yes. Sharath I. U kunjan. Tell
As u hold SBI card for last 10 months, ur name has been shortlisted as VIP customer
VIP? Bag?
Yeah VIP customer
Briefcase?
No sir. VIP customer. And you have exciting offers
Exciting offers?
Yes sir
For VIP suitcase?
No No No.. I am not telling about VIP suitcase.
I have the bag.with me. I bag no VIP
No sir.I telling about your status.
My status? Single. I no marriage. VIP.. SBI card. I No meaning.
U have SBI credit card sir.
Yes.have. SBI card
Yes sir
And VIP?
Earlier u were normal customer. Now SBI has shortlisted you as a VIP customer
Why SBI shortlist VIP customer.. and why you.. call i.. no meaning getting..
Do u know what I am saying?
yes.english. I am talking to English.
Am also answering you in English.
But u English I no. why VIP? I no buy any suitcase of VIP.
I am not asking you to buy VIP suitcase.
VIP customer is VIP suitcase buy. I no buy. Customer how I become VIP customer. I no meaning. U tell
I will call u later .ok bye.
OK.TATA.

அந்த அற்புதமான உரையாடலை கேட்டு ரசிங்க. 

Jan 28, 2009

காக்டெய்ல்

36 கருத்துக்குத்து

   டாடா நிறுவனத்தின் முக்கியமான பாலிசியில் ஒன்று சுற்றுப்புற கிராமத்து மக்களின் நன்மதிப்பை பெறுதல். நான் வேலை செய்த (TATA Bluescope steel)பிரிவிலும் அதற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் மூணாரில் தலைகீழாக இருக்கிறது. அங்கே இருக்கும் பலருக்கும் டாடா தேயிலை நிறுவத்தின் மீது கடுங்கோபம் இருக்கிறது. அவர்களில் பாதி பேர் அங்கே வேலை செய்து வெளியே வந்திருக்கிறார்கள்.அவர்கள் சொல்வது வெளியே அனுப்பப் பட்டார்கள். பிரிட்டிஷ் ஸ்டைலில் வேலை வாங்கும் மேலாளர்களை அவர்கள் குற்றம் சொல்கிறார்கள். கடைகளிலும் டாடா தேயிலையை விட சிறந்தது என்று வேறு ஒன்றை சொல்கிறார்கள். ஆனாலும் டாடா தான் நிறைய விற்கிறதாம். உண்மையில் டாடா அப்படித்தானா? என்னால் நம்பமுடியவில்லை. யாருக்காவாது தெரியுமா?

*************************************************   எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு விஷயம் நினைவுக்கு வந்து அது யார் என்ற விடைத் தெரியாமல் போனால் பைத்தியம் பிடித்து விடும். இப்படித்தான் ஒரு நாள் இலங்கை வேகப் பந்து வீச்சாள‌ர் ஒருவரைப் பற்றி நினைவு வந்தது. கையை மடக்காமல் அவர் பந்து வீசும் முறை பற்றி கூட பிரச்சனை வந்ததே. தலையில் கூட கலர் கலர் குரோட்டன்ஸ் செடியை வளர்த்தாரேன்னு பல அடையாளங்கள் தெரிந்தும் பெயர் ம்ட்டும் நினைவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின் நண்பனை அழைத்து "டேய் இலங்கை பெளலர் தலையில செடி வளர்ப்பானே.. லசித் மலிங்கா.. அவன் பேர் என்னா?" சிறிது நேர யோசனைக்குப் பின் அவன் பதில் சொன்னான். தெரியல மச்சி.

*************************************************

    பரபரப்பாக ஆரம்பித்து கண்டுக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிட்டது எனக்கு. சமீபத்தில் செந்தழல் ரவி கூட ஜே.கே.ஆர் பற்றி பதிவு எழுதினார். ஆங்காங்கே சிதறி கிடக்கும் ஜே.கே.ஆர் பதிவுகளை தொகுக்கவே இந்த வலை ஆரம்பிக்கப்பட்டது. ஏனோ நம் தலைவி சில நாட்களாக வலையுலகில் காணாமல் போனதும், ஆர்வமுடன் கொ.ப.செ பதவி கேட்டு வாங்கிய வித்யாவும் அத்தணை வீரியத்துடன் இயங்காமல் போனதும், தலையுடன் நடக்கவிருந்த சந்திப்பு எதிர்பாராத விதமாக தள்ளி வைக்கப்பட்டதும் முக்கிய காரணமென நினைக்கிறேன். விரைவில் சங்கம் இது குறித்து விவாதிக்கும். அது வரையில் சங்கத்தில் சேர்ந்து பதிவெழுத விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சொல்ல ஆசைப்படுகிறோம். வாழ்க வீரத்தளப‌தி.

*************************************************

   எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அப்படியென்றால் மனிதநேயம் ஆண்களுக்கு மட்டும்தானே.  Mankind என்றுதானே சொல்கிறோம். அத‌ற்கு Man என்றால் மனிதர் என்றுதான் பொருள்.அது இருவருக்குமே பொது என்றாள். சரிதான், பின் எதற்கு Ladies and Gentle men என்கிறார்கள், Gentlemen என்று மட்டும் சொன்னால் போதுமே என்றேன். தொடர்பு துண்டிக்கப்பட்டது.(ஹலோ தொலைபேசி தொடர்பு மட்டும்தாம்ப்பா). உங்களுக்கு தெரியுமா? Man என்றால் ஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களும் சேர்த்தா?

*************************************************

முடியலத்துவக் கவிதைகள்

பழங்காலத்தில் பல்சர் இருந்தது

அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்ககூடாது
என்னை உன்னிலிருந்து
அந்நியப்படுத்தியது எது?
இந்தக்கதவும் அறிவிப்பும் தானே

திப்பு கிழித்தெறிந்த வேங்கையின்
பேரப்புலி ஒன்று
இன்னும் வெறிகொண்டு திரிகிறது
வஞ்சம் தீர்க்க
அது பசித்தால்
பிஸ்கட் திங்கும் புலியாம்

பெருமழைக்கு பயந்த பெருச்சாளி
சமணகுகைக்குள் நுழைந்தது
மூலிகை வர்ணம் குழைத்து
வரையப்பட்ட நிர்வாண படங்களை பார்த்து
பெரும்பயம் கொண்டது பெருச்சாளி
ரப்பை பருத்த காவலர்
என் வண்டியை நிறுத்தி
தோசை ஏதேனும் இருக்கிறதாவென
சோதனை போடுகிறார்
அவரது சோதனையில்
என் கவிதைகள் சிக்காதிருக்கட்டும்

--செல்வேந்திரன்

மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்.

Jan 27, 2009

புட்டிக்கதைகள்

46 கருத்துக்குத்து

  அதுவரை எந்தப் பெண்ணின் பின்னாலும் போகாத ஏழுவுக்கு அவளைக் கண்டவுடன் பிடித்துவிட்டது. ஆறுமுகம் வந்து இந்த மேட்டரை சொன்னபோது எங்களால் நம்பவே முடியவில்லை. குடித்துவிட்டு ஒரு நாள் பேண்ட்டே இல்லாமல் ஹாஸ்டலுக்கு வந்த அன்று கூட வராத வெட்கம் இன்று அவன்கண்ணில் தெரிந்தது. இதற்கு மேல் ஏழுவை மலையேற்றினால்தான் விஷயத்தைகறக்க முடியும் என்று முடிவு செய்து அன்று பூஜைக்கு ஏற்பாடு செய்தான் பாலாஜி.

  முதலில் அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை இரண்டு பியர் தருவதாக உறுதி கூறி அடிக்க வைத்தோம். திட்டமிட்டபடி பாதி பியரைகுடித்துவிட்டு தண்ணி கலந்து வைத்திருந்தான் பாலாஜி. அந்த பாதி பியரில் பாதி அடித்த ஏழு சிரித்தான்.

அழகுடா... இது வரைக்கும் யாரையும் இப்படி பார்த்ததில்ல.

எப்படி பார்த்தான் தெரியுமா மச்சி? சொன்னா கேட்காம மூனு பஃப் இழுத்துட்டு மப்புல தடுக்கி கீழ விழுந்துட்டான். அப்ப அவ சரியா எதிர்ல வர, தலைவர் ஸ்ரீமரங்கபெருமாள் மாதிரி தலைல கைய முட்டுக் கொடுத்துட்டு சைட் அடிச்சாரு என்றான்ஆறு.

டேய். அதுவா முக்கியம்.. என்ன சாப்பிடறான்னு தெரியல மச்சி. அவ கண்ணம்அப்படியே மொழு மொழுன்னு...

அவ சைவம் மச்சி. தயிர் சாதம் தான் என்றான் ஆறு .

சான்ஸே இல்லடா.. அவள போய் சைவம்ன்னு.. அவ கண்ண பார்த்தியா.. கண்லமீன் இருக்குடா.. அவ சைவம் இல்ல மச்சி.. என்று இழுத்தான் ஏழு

அவ சாப்பிடறது சைவம்டா

  ரைட்டு விடு. அவ பேரு கலைவாணி மச்சி. கல்யாணத்துல வெளியே பெருசா பேனர் வைப்பிங்க இல்ல.. அப்ப இப்படித்தான் எழுதனும்..

தலைவா நீ உலகையே வென்றவன்
கலைவாணி உன்னையே வென்றவர்

இப்படிக்கு,
ஏழு பீர் ஏழும‌லை ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்..

  எல்லாம் ஓக்கேடா. அது என்ன‌ ஏழு பீர் ஏழும‌லை என்றான் பாலாஜி.

போன‌ நியூ இய‌ர்ல ஏழு பியரடிச்சேனே. அத சொன்னேன்.

டேய் போன இயர்ல நீ அடிச்ச மொத்த பியரே நாலரைதான்டா.

ரைட்டு விடு. இப்ப அதுவா பிரச்சனை. அவள எப்படி கரெக்ட் பண்றது ஐடியா கொடுங்கடா.' அதுக்கு முன்னாடி சைடு டிஷ் எதுவாச்சு சொல்லு. இனிமேல நானும் சைவம்தான். அதனால் மட்டன்ல எதுவாச்சு சொல்லு

எப்படா ஆடு சைவமாச்சு?

ஆடு எப்பவுமே சைவம்தான்டா. அது வெறும் தழை, இலை தான் சாப்பிடும். அப்ப அது சைவம்தானே? ஆறு அவள சைவம்னு சொன்ன மாதிரி.

முடியலடா என்னால.. நான் வாயை மூடிக்கிக்றேன் என்றான் பாலாஜி.

ஆறு மட்டும் சீரியஸாக "மச்சி, அவ உனக்கு செட்டாவாளா? அவ கேரக்டர் எப்படின்னு விசாரிக்காலான்டா முதல்ல என்றான்

எனக்கு அவள பிடிச்சு போச்சுடா. இது வேணும் அது வேணுமெல்லாம் எனக்கு ஆசை கிடையாது. ஆனா என்ன மாதிரி வாய் அதிகமில்லாம, நீங்க சொல்வீங்களே மொக்கை போடறேன் அது மாதிரி பேசமா இருந்தா போதும் என்று உண்மையை ஒப்புக் கொண்டான் ஏழு.

  மறுநாள் ஆறுவும் ஏழுவும் அவளை சந்தித்து பேசுவதாக திட்டம் தயார் ஆனது. வழக்கம்போல அரைபியரில் ஃபுல் டைட்டாக ஆனார் ஏழு.

  அடுத்தநாள் அவள் வரும் வழியில் காத்திருந்தோம். ஆறுவும் ஏழுவும் மட்டும் சற்று முன்னால் சென்றார்கள்.
மச்சி. எப்படியாவது ஓக்கே சொல்ல வைக்கனும்டா பார்த்தா அமைதியான பொண்ணு மாதிரிதான் தெரியுது என்று கிசுகிசுத்தான் ஏழு.

சரிடா என்ற ஆறு அவளைப் பார்த்து "ஹலோ..இங்க வா நீ" என்றான்

திரும்பிய அவள், என்னையா என்பது போல கேட்க, ஆறு ஆமாம் என்று ஆமோதித்தான்.

அருகில் வந்தவள் "என் பேரு இங்கவாநீ இல்ல, கலைவாணி" என்று சிரித்து விட்டு சென்றாள்.

பியரடிக்காமலே மயங்கி விழுந்தான் ஏழு.

Jan 22, 2009

வாக்காள பெருமக்களே!! வேணுமா 5000????

28 கருத்துக்குத்து

அன்பு வாக்காள பெருமக்களே!!!.. தமிழ்மண தேர்தலில் மூன்று தலைப்புகளில் என் மொக்கைகளையும் சேர்த்திருக்கிறேன். நீங்கள் நிற்கும் மூன்று தொகுதிகளை தவிர்த்து வேறு தொகுதிகளில் நான் நின்றிருந்தால், படித்து விட்டு பிடித்திருந்தால் வாக்களிக்காதீர். பிடிக்கவில்லையென்றால் வாக்களியுங்கள்.(அப்பதானே நிறைய வோட்டு விழும்)

நகைச்சுவை தொகுதியில் இந்தப் பதிவைதான் நிற்க வைத்திருக்கிறேன். படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.   


                                                           வலையுலக தர்பார்

அரசராக கோவி.கண்ணன், தலைமையமைச்சராக குசும்பன், மற்றும் உங்கள் அபிமான பதிவர்கள் வீற்றிருக்கும் தர்பாரில் ஒரு நாள்

*************************************************

   ராஜாதி ராஜ‌ 
   ராஜ மார்த்தாண்ட‌ 
   ராஜ கம்பீர‌ 
   ராஜ குலத்துலோத்துங்க‌ 
   மாமன்னன் ஆவி.கண்ணன் ச்சே.. பாவி.கண்ணன்..    ச்சேசே.. கோவி.கண்ணன் பராக்..பராக்..ப்ராக்..

அரசர்: என்ன குசும்பரே.. கவனித்தீரா?

குசும்பன்: ஆம். மன்னா.இவன் தலை வகிடை வலப்பக்கம் எடுத்துள்ளான். நுட்பமான விதயங்களையும் கவனிப்பதுதான் எனக்கு கை வந்த கலையாச்சே..ஹிஹிஹி

அர‌ச‌ர்: உன்னைப் போய் த‌லைமைய‌மைச்ச‌ராக‌ வைத்தால் இவ‌ன் இப்ப‌டித்தான் செய்வான். வாரும்.

குசும்ப‌ன்: (வீர‌னிட‌ம்) கேட்டாயா? அர‌ச‌ரே வாரும் என‌ சொல்லிவிட்டார். இதோ இப்பொதே உன‌க்கு இட‌ப்ப‌க்க‌ம் வ‌கிடெடுத்து வாரி விடுகிறேன். சீப்பு இருக்கிற‌தா?

(மன்னர் அரியணையில் அமர சபை தொடங்குகிறது)

மன்னர்: குசும்பா.. இன்றைய திட்டம் என்ன?

குசும்பன்: மன்னா. அந்த உடை விவகாரம்.

மன்னர்: ஆம். அமைச்சர்களே!!!நான் ஒரு மாபெறும் வீரன் என்பது ஒரு புறமிருக்க, சமீப காலமாக அபரிதமாக வளர்ந்து வரும் என் தொப்பை அந்த கம்பீரத்தை கெடுப்பதாக உள்ளது. எனவே இனிமேல் அனைவரும் தொளதொளவென உடை அணிய வேண்டும்.கழுத்திலிருந்து கால் வரைக்கும் ஒரே உடையாக இருக்க வேண்டும்.எவருக்கு தொப்பை என்பது தெரியாத அளவுக்கு அது இருக்க வேண்டும்.

நர்சிம் : மன்னா இது அநியாயம்.டவுசர் எனப்படும் கீழாடையின் உள்ளே மேலாடையை சொருகி வருவது என் வழக்கம். அவ்வாறு செய்யாமல் என்னால் கழிவறைக்கு கூட செல்ல முடியாதே.

மன்னர்: அரசரையே எதிர்த்து பேசும் தைரியம் யார் தந்தது நர்சிம்மரே? உங்களுக்கும் மாறவர்மனுக்கும் தொடர்பு உண்டு என்று வந்த தகவல் உண்மை போல உள்ளதே?அமைதியாக அமரும்.

 குசும்பர்: மன்னா உங்களை வாழ்த்திப் பாட அய்யணார் என்ற புலவர் வந்துள்ளார்.

 மன்னர்: புலவரா? வரச்சொல்லும். வந்து பாட சொல்லும்.

 அய்யணார்: திட்டமிடுதல்களைப் பற்றிய பிரக்ஞைகள் 
                  மீப்பெருவெளியின் இசைத்தன்மை மீது 
                  பெரும்திரையெனக் கவிழ்கிறது 
                  தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து 
                  பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை 
                  இன்னும் ஒருதரம் 
                  சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.

 மன்னர்: என்ன சொல்கிறான் இவன்? தமிழ்நாட்டு மண்ணில் தமிழிலே கவி பாடலாமே? இவன் ஏன் பிராகிருத மொழியில் பாடிகிறான்.

குசும்பன்: மன்னா உங்களுக்கு பிராகிருத மொழி கூடத் தெரியுமா?

மன்னர்: உங்களுக்குத் தெரியுமா?

குசும்பன்: இல்லை மன்னா

மன்னர்: அப்படியென்றால் எனக்குத் தெரியும்

முரளி: (நடுவில்) இது தில்லிமுல்லுவில்..

மன்னர்: படம் காட்டாமல் அமரும்.

குசும்பன்: இவர் வேண்டாம் மன்னா. இன்னொரு பெண்கவி வந்துள்ளார்

மன்னர்: ஆச்சரியம்? பெண் புலவரா? கவிதாயினி.. கவி தா இனி..

ராப் : பார் போற்றும் எங்கள் மன்னனே 
      வானளாவிய புகழுடைய விண்னனே 
      தங்கை துயர் துடைக்கும் அண்ணனே 
      சிங்க நிகர் வீரன் கோவி.கண்ணனே

மன்னர்: ஆஹா.. அற்புதம்.. முதல் முறையாக எனக்குப் பிடித்த கவிதை சொன்ன புலவர் நீ.பிடியும் 1000 பொற்காசுகள்.

ராப்: ஹை.மீ த ஃப்ர்ஸட்டா?நன்றி மன்னா.

குசும்பன்: மன்னா.. நீங்கள் ஏன் மகாராணியைப் பார்த்து ஒரு கவி பாட கூடாது?

மன்னர்: அனைத்தும் அறிவான் கண்ணன். இதோ..

        மதி முக நாயகியே..

லக்கி: (குறுக்கிடுகிறார்) மன்னா..மன்னிக்க வேண்டுகிறேன். மகாராணி வைகோவின் ஆதரவாளரா?

மன்னர்: (கோவமாக) யார் சொன்னது?

லக்கி: நீங்கள்தான் அவரை ம.தி.மு.க நாயகி என்றீரே?

மன்னர்: ஆவ்வ்வ்வ்.நல்ல கவிதையை இழந்து விட்டோமே. குசும்பா மதிய உணவென்ன?

ஒருவர்: பிரியாணி மன்னா

மன்னர்: யாரது? வெண்பூவா?

வெண்பூ: ஆம் மன்னா. நானே ருசி பார்த்து தங்களுக்கு பிடிக்கும் வண்னம் செய்ய சொல்லியிருக்கிறேன்.

மன்னர்: ருசி பார்த்தீரா? பின் எங்களுக்கு எங்கே இருக்கப் போகிறது?

குசும்பன்: மன்னா.ஒரு பிரச்சனை. இளவரசர் தேர்வு எழுத மாட்டேன் என்கிறாராம். அவருக்கு உடனே திருமணம் செய்ய வேண்டுமாம்.

மன்னர்: என்ன திருமணமா? அவரை உடனே குருகுலத்திலிருந்து மாற்றி முனிவர் தாமிராவிடம் சில காலம் விட்டுவிடுங்கள். எல்லாம் சரியாய் போகும். தேர்வு எழுத வேறு ஆளை தயார் செய்யுங்கள்.

குசும்பர்: ஒருவர் இருக்கிறார் மன்னா. இதோ வரச் சொல்கிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் பெய‌ரென்ன‌ ?

அப்துல்லா: வணக்கம் மன்னா.நான் புதுகை.அப்துல்லா. பிறருக்காக தேர்வு எழுதுவது என் விருப்பமான பணி.

ம‌ன்ன‌ர்: என்ன‌ புதுகையா? அப்ப‌டியென்றால் உன் ப‌ழைய‌ கை என்ன‌ ஆன‌து? யார் வெட்டினார்க‌ள்?

குசும்ப‌ன்: ம‌ன்னா புதுகை என்ப‌து அவ‌ர் ஊரின் பெய‌ர்.

ம‌ன்ன‌ர்: அப்போ துல்லா என்றால்?

குசும்ப‌ன்: அது அப்துல்லா. அப்போ துல்லா அல்ல‌ ம‌ன்னா.

ம‌ன்ன‌ர்: தெரியும் குசும்பா. அப் என்றால் இப்போது என்று பொருள். அத‌னால் தான் துல்லாவுக்கு ம‌ட்டும் அர்த்த‌ம் கேட்டேன்.

குசும்ப‌ன்: அய்யோ அய்யோ

ம‌ன்ன‌ர்: என்ன‌ துல்லா என்றால் அய்யோ என்று பொருளோ? என‌க்கு தெரியாதே..

 ஜோஸப் பால்ராஜ்: நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை.எங்கும் திருட்டு.பஞ்சம்.. பாவம் மக்கள்.

மன்னர்: போதும். பதிவர் சந்திப்பு சபையில் சம்மனமிட்டு அமர்ந்து சத்தம் போட்டு சங்கை முழங்கிவிட்டு, பின்புறம் போய் பீர் வேண்டுமென பிறரை பிறான்டி எடுப்பது நீர்தான் என்பது எனக்கு ஒற்றன் கொடுத்த தகவல். உண்மைதானே?

(தலையாட்டுகிறார்)

மன்னர்: குசும்பா. இவர்கள் என்னை கடுப்பேத்துகிறார்கள். வாரும் நாம் வேட்டைக்கு செல்வோம்.

குசும்பன் : நிஜமாகத்தான் சொல்கிறீர்களா அரசே?

மன்னர்: உம் நக்கலை சஞ்ச‌யிடமும், நந்துவிடமும் வைத்துக் கொள்.புறப்படு

(ஆற்றுகருகில்)

பரிசல்: அரசே!! இது போல வேட்டைக்கு போகும் போது என் குதிரை பாதியிலே நின்றுவிடும். அது போல் உங்களுக்கு ஆகி இருக்கிறதா?

மன்னர்: இவன் யாரடா. புறப்படும் போதே அபசகுனாமாக கேட்கிறான்?

குசும்பன்: இவருக்குத்தான் நாம் ராஜகுரு பதவி தருவதாக கேலி ஓலை அனுப்பி சபையே சிரிக்க வைத்தோம் அரசே.

மன்னர்: ஓ அவரா? இன்னொருவருக்கும் அனுப்பினோமே?

குசும்பன்: அவர் அந்தப்புரத்தில் இருப்பார்

மன்னர்: என்ன?

குசும்பன்: இல்லை மன்னா. கரைக்கு அந்த புறத்தில் இருப்பார் என்றேன்

அடுத்த பகுதியை படிக்க இங்கே க்ளிக்குங்கள்

Jan 21, 2009

இப்படி கூட உயிர் போகுமா?

76 கருத்துக்குத்து

  அப்பா நாளைக்கு ரெக்கார்ட் நோட் வாங்கனும்ப்பா என்ற மகனை வருத்தத்தோடு பார்த்தான் மணி. அடுத்த வேளை உணவுக்கே வழி தெரியாத அவனுக்கு மகனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

  சரிடா.. அப்பா நைட் காசு தர்றேன் என்ற மணியை கவலையோடு பார்த்தாள் மணியின் மனைவி. எப்படிங்க என்ற அர்த்தத்தோடு அவள் பார்த்தது மணிக்கு புரிந்தது.

  வீட்டில் மூலையில் இருந்த அந்த நாற்காலியை மணி பார்த்ததும் கண்கலங்கினாள். தேக்கு மரத்திலான அந்த நாற்காலி மணி தன் அப்பாவின் நினைவாக வைத்திருந்தான். அதனருகே மணி சென்றதும் கையில் சுத்தியுடன் வந்தாள்.

  ஏங்க.. முழுசா விக்கனுமா? இத பிரிச்சு ஒரு கட்டைய மட்டுமாவது வச்சுக்கலாமா? என்றாள். பதிலேதும் பேசாமல் சுத்தியை வாங்கியவன் மெல்லத் தட்டினான். பின் கண்ணுக்குத் தெரிந்த ஒரு ஆணியைப் புடுங்கி தூக்கி எறிந்தான். எவ்வளவோ தேற்றியும் முடியாமல் அவளும் அழத் தொடங்கினாள்.

   வெளியே சென்று வந்த மணியின் மகனின் காலில் அந்த துருப்பிடித்த ஆணி குத்தியது. வீட்டு நிலவரம் தெரிந்த அவன் அதை மறைத்துவிட்டான். மெல்ல அது சீழ் பிடித்து ஒரு நாள் அது அவன் காலையே பறிக்கப் போகிறது என்பதை அவனறியவில்லை.

   மணிக்குத் தெரிந்தவுடன் தன்னால் முடிந்த அளவுக்கு கடன் வாங்கி மகனைக் காப்பாற்ற முயன்றான். முடியாமல் அவன் கால் போனது. தன் இயலாமையை எண்ணி தற்கொலை செய்து கொண்டான் மணி. அவனின் மனைவியும் அவனிடமே சென்றுவிட்டாள்.

  தனியே ஒற்றைக் காலுடன் போராட முடியாமல் அவனும் தற்கொலை செய்ய எண்ணி கடிதம் எழுதினான். ஒரே வரியில் முடித்து விட்டான் கடிதத்தை.

*

*

*

*

*

*

*

ங்கொய்யால.. இதுக்குத்தான் சொல்றோம் .. ஆணிய புடுங்க‌ வேண்டாம்..

காக்டெய்ல்

52 கருத்துக்குத்து

   என் வலையில் மேல் வலது மூலையில் இருக்கும் ‘Vertx Solutions’ விளம்பரத்தைப் பார்த்து சிலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். அது என் நண்பனுடைய உறவினர் நடத்தும் கன்சல்டன்சி. என்னை தொடர்ந்து வாசிக்கும் அவர் அங்கே Bidvertiser விளம்பரம் இருந்ததைப் பார்த்து தன் இணையத்தளத்திற்கு சுட்டி தருவதற்கு மாதம் எவ்வளவு என்றார். இப்படி கேட்டதற்கே அவருக்கு ஆண்டு சந்தா இலவசமாக தந்துவிட்டேன். சந்தை மந்தமான போதும் அவர் நிறுவனம் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. அவர் தளத்தில் இருக்கும் Hot jobs உங்களக்கு சரிபட்டு வருமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.All the best.

*************************************************     விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது நடந்த போஸ்டர் கலாட்டாவைப் பற்றி வருத்தப்பட்ட பதிவுலக நண்பர் ஒருவர் அஜித்தின் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்றார். நான் பார்த்த நொந்த கதையெல்லாம் சொன்னபோது ஆதாரம் இருக்கா என்றார். வேற வேலையில்லையா எனக்கு என்று விட்டுவிட்டேன். நேற்று நம்ம சகா சரவணகுமரன் பதிவுல் இருந்த படத்தைப் பார்த்து அவருக்கு அழைத்தேன். அவரும் பார்த்திருப்பார் என நினைக்கிறேன். எடுக்கவேயில்லை.நீங்களும் என்ஜாய் மக்களே.

*************************************************     கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மந்தமான பதிவுலகம் இன்னமும் மீளவில்லை. பலரது ஹிட் கவுண்டரையும் பார்க்கும் போது இது தெளிவாக தெரிகிறது.அப்படியே புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விடுமுறை என்பது ஒரு காரணமாக இருக்கும் என்று தோண்றவில்லை. நடுவே குமுதம் மற்றும் விகடன் உபயத்தால் குறிப்பிட்ட சிலரது கிராஃப் மற்றும் எகிறியது. ஆனால் பொதுவாக வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெறும் 200 ஹிட்ஸ் பெற்றாலே பதிவுகள் சூடாகிறது. அது மட்டுமில்லாமல் வில்லுவும், திருமாவும், திருமங்லமும் ஒரு வாரத்திற்கு மேலாக சூடான இடுகையை ஆக்ரமிப்பு செய்கின்றன. பல ரெகுலர் வாசகர்களை காணவில்லை. Recession தான் காரணமா? ஒரு வேளை சத்யமில் இருப்பவர்கள்தான் பதிவுலகை காப்பாற்றி வந்தார்களா? மென்பொருள் துறையினர் அலுவலகத்தில் படிக்க பயப்படுகிறார்களா? எப்போது இது மீளும்? (சப்பா.. கேள்வி கேட்டதுக்கே கண்ன கட்டுதே)

*************************************************

  சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இன்ஃபோஸிசல் கேட்கப்பட்ட கேள்வி என்றும், பதலளிப்பவர் ஜீனியஸ் என்றும் சொன்னது அந்த எஸ்.எம்.எஸ்.  “I + opposite of W + first of Ice + double time Yes +  3/4 of X + 15th letter + Half ‘O’ ”.

   இரண்டாவது எழுத்தைத் தவிர மற்றவற்றை கண்டுபிடித்து எழுதிய போது இப்படி வந்தது “I _iss you”. நானாக அதை “K” என்று நினைத்துக் கொண்டு அதே எண்ணுக்கு ரிப்ளை அனுப்பும்போது நல்ல வேளையாக தவறுதலாக கேன்சல் பொத்தானை அமுக்கிவிட்டேன். பின் “I Miss You” என்று சரியாக அனுப்பி யாரென்று கேட்டால் பிரபலமான ஒரு பெண் பதிவர் தன் பெயரை அனுப்பினார். அந்த அக்காவிடமிருந்து  ஜஸ்ட் எஸ்கேப் ஆனாலும் இதுவரை அவருக்கு அடுத்த எஸ்.எம். எஸ் அனுப்பவில்லை.

    சேட்டில வந்த இன்னொரு பெண்பதிவர் "சகா" என்பது ஆணகளுக்கு மட்டுமா என்றுக் கேட்டார். ஆமாம், வேண்டுமென்றால் உங்களை சகி என்றழைக்கிறேன் என்று சொல்ல வந்தேன். நம் திரைப்படங்கள் சகி என்பதை காதலியாக மட்டுமே அர்த்தம் கொண்டுள்ளதால், இல்லங்க.. அது இரு பாலினருக்கும் பொதுவென்று சொல்லிவிட்டேன். Mankind என்பது ஆண்களுக்கு மட்டுமா என்ன? அது எப்படி இருவருக்கும் பொதுவானதோ அது போலத்தான் சகாவும்.. என்ன லேடீஸ்.. சூப்பர் சகான்னு பின்னூட்டம் போடத் தயாரா?

Jan 20, 2009

பதிவர்களே உஷார்!! ப்ளாகர் கணக்குகள் Hack செய்யப்படுகின்றன‌

50 கருத்துக்குத்து

   சமீபகாலமாக மின்னஞ்சல் முகவரிகளை கடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ப்ளாகர் கணக்கை கடத்துவது எளிதானது என்று கூகிளான்டவர் குறி சொல்கிறார்.

   சில நாட்களுக்கு முன் என் அக்காவின் ஆர்குட் கணக்கு கடத்த‌ப்பட்டது.பின் ஒருவழியாக அந்த கணக்கையே முடக்க முடிந்தது. சென்ற வாரம் பதிவர் விஜய கோபலாசாமியின் கணக்கு திருடப்பட்டது. இன்று புதுகை.அப்துல்லாவின் கணக்கும் திருடப்பட்டிருக்கிறது. ஒரு வழியாக அவரின் மின்னஞ்சல் கணக்கை கைப்பற்றிவிட்டோம். ஆனால் ப்ளாகர் கணக்கு இன்னமும் எதிரிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    நாம் அடிக்கடி கடவுச்சொல் மாற்றுவதால் மட்டுமே இதை தடுக்க முடியாது. ஏனெனில் அவர்களின் திருடும் வழிமுறை கடவுச்சொல்லை கைப்பற்றுவதல்ல. எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளால் கடத்தப்பட்ட கணக்கை மீண்டும் பெற முடியும். முதலில் உங்கள் Security Question  மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின் மறக்காமல் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் Secondary Email மாற்றுங்கள். ஜிமெய்ல் முகவரி என்றால் secondary email யாஹூவாக இருக்கட்டும். கடத்துபவன் கில்லாடி என்றால் இவைகளை உடனே மாற்றிவிடுவான். அப்போது என்ன செய்யலாம்?

    இப்போதே நீங்கள் ஜிமெய்லின் எந்தெந்த சேவைகளை உபயோகிக்கறீர்கள் என்ற தகவலை சேமியுங்கள். அந்த கணக்கு தொடங்கப்பட்ட நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கூகிளின் இந்த உதவிப் பக்கத்தில் இருக்கும் படிவம் மூலமாகத்தான் நாம் இதை முறையிடவெண்டும். அடிக்கடி ஒரே ஐ.பி.முகவரியில் வேலை செய்பவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைத்துவிடும். ஒவ்வொரு Netcentre ஆக அலையும் தாமிரா போன்றவர்களுக்கு இது சிரமம்தான். அந்தப் படிவத்திலே கூகிள் வழங்கும் பலதரபட்ட சேவைகளின் பட்டியல் இருக்கிறது. உடனே இதில் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் தனியாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நம் கணக்கும் கடத்தபட்டால் இருக்கும் விவரங்களை கொண்டு கைப்பற்றிவிடலாம். அதற்குள் திருடியவன் எதையாவது அழித்து விட்டால் என்ன செய்வது?

    தமிழ்மணத்தில் இருப்பவர்களுக்கு இது எளிதான வேலை. தமிழ்மண கருவிப்படையில் புத்தகம் போல் இருக்கும் ஐகானை அழுத்தினால் உங்களின் கடைசி 20 பதிவுகளின் பட்டியல் வரும். இதன் மூலம் அந்தப் பதிவுகளை பி.டி.எஃப் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதின் மூலம் நம் பதிவுகளை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதிக அக்கறை உள்ளவர்கள் தமிழ்மணத்தில் இணைக்கும்போதே பி.டி.எஃப் ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இதுவல்லாமல் வேறு மென்பொருள் ஏதாவ்து இருக்கிறதா என்ற விவரம் கூகிளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.கிடைத்தால் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

உங்க குழ‌ந்தையின் வய‌சு என்ன?

54 கருத்துக்குத்து

    சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மீது எனக்கொரு ஈர்ப்பு.எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும். எங்கள் பாட்டிகூட என்னிடம் ஏதோ காந்த சக்தி இருப்பதாக சொல்வார். பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும். என் இலையில் வைக்கப்பட்ட எல்லாம் அடுத்தடுத்த இலையில் இருக்கும். சுயபுராணம் போதும் எனிகிறீர்களா? ஓக்கே.

  என் சித்தி மகன் மற்றும் என் அக்கா மகன் இருவரையும் அருகில் இருந்து வளர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுவும் என் அக்கா ஒரு வருடம் ஆன்சைட் சென்று விட்டார். நான், என் அம்மா மற்றும் என் அக்கா மகன் மூவர் மட்டும்தான். அவனின் அப்பாவும் பெங்களுரில் இருந்தார்.

  நம் வீட்டு பெரியோர்கள் குழந்தை வளர்க்கும் முறையினை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.டென்னிஸ் பயிற்சி வகுப்பில் ஒருவர் சொன்னார். அவரின் மகனுக்கு இதில் விருப்பமில்லையாம். ஆனால் அவரின் ஆசைக்காக இங்கே சேர்த்திருக்கிறாராம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பத்தை திணிக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் விரும்பும் திரைப்படத்தை பார்க்க செல்வதால் தேவையில்லாமல் அவர்களையும் அந்த படங்களை பார்க்க வைக்கிறார்கள்.

திருமணத்திற்கு சென்றால் தன் வயது பிள்ளைகளோடு ஓடி விளையாடத்தான் எல்லா குழந்தைகளும் விரும்புவார்கள். தங்கள் அந்தஸ்த்தை சபைக்கு பறைசாற்ற ஷெர்வானி, குர்தா என அசெளகரிய ஆடைகள் அணிவித்து அவர்களை அடக்க முயலுவார்கள் பெற்றோர்கள். குழந்தைகளை இயல்பாய் இருக்கும்படி அனுமதிக்கும் பெற்றோர்களை காண்பதே அரிதாகிவிட்டது.

   அம்மா பசிக்குது என்று குழந்தைகள் வரும்போது கோலங்களில் மூழ்கிவிட்டு, பத்து மணிக்கு இரண்டு இட்லி போதுமென்னும் குழந்தையை அதட்டி மூன்றாக சாப்பிட வைப்பதை பாசம் என்கிறார்கள். நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை வேறு. மீறி எடுத்து போனால் "கேட்டதை விட அதிகமாக வாங்கி தருவதால் பணத்தின் மதிப்பு தெரியல" என்று திட்டு வேறு.

   நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவர்கள் சந்தோஷத்திற்கு எழுப்பிவிட்டு ஏதாவது விளையாடுவது போல் ஆரம்பிப்பார்கள். பிடிக்காமல் அழும் குழந்தையை பெற்றோர்கள் கண்டிப்பதை பார்த்தால் எனக்கு எரிச்சலாய் வரும். குழந்தையை பார்த்துக் கொள்வதாக சொல்லும் அனைவரும் அதன் மூலம் தங்கள் வேண்டியதை செய்கிறார்களே அன்றி குழந்தைக்கு தேவையானதை செய்வதே இல்லை.

  இது போதாதென்று வேலை செய்யும் பெற்றோர்களிடையே வளரும் ஈகோ குழந்தைகளை மேலும் கஷ்டப்படுத்துகிறது. அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குழந்தைக்காக  நேரம் ஒதுக்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். அப்போதும் தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவார்களே அன்றி குழ‌ந்தைக்கு தேவையான நேரத்தில் இருக்க மாட்டர்கள்.

   அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். நொடிக்கு நொடி வேஷம் மாற்ற வேண்டிய உலகத்தில் இருக்கும் நமக்கு இது சாத்தியமாவ‌தில்லை. பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோண்றுகிறது. தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்.உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?

Jan 19, 2009

புட்டிக்கதைகள் (ஏழுமலை ஃபோட்டோவோடு)

43 கருத்துக்குத்து

  ஏழுமலையும் விஜய் ரசிகன்தான். அப்போது குஷி படம் ரிலிஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அனைவருக்கும் அவனே ஸ்பான்சர் செய்வதாக சொன்னான். வழக்கம்போல் எங்கள் குழுவினர் பத்து பேரும் கிள‌ம்பினோம். அன்றைய அனைத்துக் காட்சிகளுக்கும் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டினார்கள்.எல்லா இடத்திலும் அப்படித்தான் என்பதால் ஏதோ ஒரு ஹிந்தி படத்திற்கு போகலாம் என ஐடியா சொன்னான் பாலாஜி. குஷிக்குத்தானே ஏழுமலை ஸ்பான்சர் செய்வதாக சொன்னதால் அவனுக்கு மினி பியர் ஒன்றை ஊற்றி வழிக்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேறியது.

     நானும் அவனும் மட்டும் அருகில் இருந்த பாருக்கு சென்றோம். மற்றவர்கள் டிக்கெட் வாங்க செல்வதாகவும், காட்சிக்கு நேரமாவதால் நாம் மட்டும் சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்புவதாகவும் அவனிடம் சொன்னேன். அவசர அவசர‌மாக நான் இரண்டு லார்ஜும், ஏழு தனது ட்ரேட்மார்க் மினி பியரை முடித்து விட்டு கிளம்பும் போது தலையை சொறிந்தார் வெய்ட்டர்.

சார்...டிப்ஸ்.

  பெப்பர் சிக்கனில் காரம் கம்மியாயிருக்கு.இன்னும் கொஞ்சம் பெப்பர் போட சொல்லு எனறு தனக்குத் தெரிந்த டிப்ஸை சொல்லிவிட்டு நடந்தான் ஏழு.

   தியேட்டருக்குள் நுழைந்து எங்கள் இருக்கையில் அமர்வதற்குள் ஆடி தீர்த்தான். முதலில் சில விளம்பரங்களும் பின் ஒரு ஆங்கில பட ட்ரெய்லர் போட்டார்கள். அப்பவாது சொல்லிடலாம் என்றதற்கு வேண்டாம் என்றது பொதுக்குழு. படமும் ஆரம்பமானது. பாதிக் கண்ணால் பார்த்தான் ஏழு.

 என்ன மச்சி. இந்த ட்ரெய்லருக்கு மட்டும் இவ்ளோ நேரம் பேரே போடறாங்க?

  தெரியலடா என்றான் பாலாஜி .ஏழுவுக்கு மீதிக் கண்ணும் மூடிக் கொண்டதைப் பார்த்து நிம்மதி அடைந்தோம்.பத்து நிமிடத்தில் மீண்டும் எழுந்தவன் அரங்கம் அதிர சொன்னான்

 படத்த போடுங்கடா.

தியேட்டரே அவனை ஒரு மாதிரி பார்க்க எழுந்தான் ஏழு. அப்போதும் எங்களை நம்பி தியேட்டர்காரனை திட்டினான். இப்போது நாங்கள் சொல்வதை எதுவும் அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவன் சாமியாடுவதைக் கண்ட ஃபிகர் ஒன்று "இவனையெல்லாம் சுட்டுத் தள்ளனும்" என்று பொருமியது.

  அதை மட்டும் ககபோ செய்தவன் அருகில் சென்றான்.தடுக்க சென்ற என்னிடம் ஒரு நிமிடம் என்றவன் ஃபிகரிடம் சொன்னான் "சுட்டா நாங்க‌ளே விழுந்திட‌ப் போறோம்.அப்புற‌ம் ஏன் த‌ள்ள‌னும்?"

   திரையில் ஷாரூக் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பெரிதாய் ஏதோ சாதித்தவன் போல நடந்த ஏழு திரையை பார்த்து சொன்னான் "புரியலன்னா கூட இந்தப் பொண்ணுங்க இங்லிஷ் படத்துக்கு வந்துடுவாங்க" 

   ஒரு வழியாய் வெளியே தள்ளிட்டு வந்த பின் ஏழுவைக் கேட்டேன் "மச்சி அது என்ன இங்க‌லிஷ் படம்டா?"

பாலாஜி சிரித்து விட்டதை கேட்ட ஏழுவுக்கு கோபம் வந்தது. தன் ஆங்கில புலமையை சபைக்கு காட்டினான்.

A for Apple

B for Big apple

C for Chinna apple

D for Double apple

E for Extra apple

F for என்று இழுத்தான். எல்லோரும் அவனையே கொலைவெறியோடு பார்க்க ஏழு சொன்னான்.

F for First sonnene antha apple.

**********************************************

   முக்கிய குறிப்பு: ஏழுமலையானின் தரிசனம் வேண்டுபவர்கள் இங்கே க்ளிக்கவும்

Jan 17, 2009

விஜய் டீ.வியில் பதிவர் குடும்பம்

19 கருத்துக்குத்து

அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

   அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்

**********************************************

ஞாயிறோட ஞாயிறு இன்னிக்கோட எட்டு நாள் ஆச்சு, அந்த அமளி துமளி எல்லாம் நடந்து. நடுவே குசும்பன் கல்யாணம், நண்பர்கள் வருகை எல்லாம் இருந்ததால் என்னால் பகிர்ந்துக்க முடியலை அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை. இன்னமும் காலம் தள்ளி போடுவது வரலாற்றுக்கு நான் இழைக்கும் அநீதி என கருதியே இப்போது பதிகிறேன்.

போன ஞாயிறு விடியகாலை ஏழரை மணிக்கே அராஜகமாக எழுப்பப்பட்டேன். "ஏழரை ஆச்சு எழுந்திருங்க"ன்னு சொன்ன போது எனக்கு தெரியாது ஏழரை என்பது மணி அல்ல சனி என்று. காலை குளித்து முடித்து வந்த பின்ன சாமி ரூமில் பார்த்தபோது ஒரு பித்தளை தட்டினிலே மூன்று தேங்காய்கள் மஞ்சள் குளிச்சு உக்காந்து இருந்துச்சு. சாதாரணமா மழையை தற்காலிகமாக நிறுத்த என் வீட்டில் செய்யும் கூத்து இது. இன்னிக்கு தான் நல்லா வெயில் அடிக்குதே பின் எதற்கு இந்த பில்டப்புன்னு நெனச்சுகிட்டே ஒரு வித மிரட்சியோட வந்தேன் சாப்பிட.

"பின்ன சாப்பிட்டுக்கலாம் முதல்ல போய் டிவி ரிப்பேர்காரனையும், கேபிள் காரனையும் கூட்டிகிட்டு வந்துடுங்க"ன்னு சொன்னப்பதான் பார்த்தேன், என்னிக்கும் இல்லாத அளவு பளிச்சுன்னு தெரிஞ்சுது டிவி. 'மகர ராசி நேயர்களே, விருச்சிக ராசி நேயருக்கு குறித்த நேரத்தில் சோறு போட்டா வாலை ஆட்டிகிட்டு சொன்ன வேலை செய்வார்"ன்னு தெளிவாத்தான் சொன்னார். பின்ன எதுக்கு டிவிகாரன், கேபிள்காரன் எல்லாம் என நினைத்து கொண்டே போய் கூப்பிட போயிட்டேன். ஏழரைக்கே எழுந்து நாலரையை எக்ஸ்ட்ராவாக இரண்டரை லிட்டர் வாங்கிகிட்டு 200 பீபரியையும் வாங்கிகிட்டு கேபிள்காரன், டிவி ரிப்பேர்காரனுடன் வீட்டுக்கு திரும்பும் போதே வீட்டில் அமளி ஆரம்பமாகிடுச்சு.

  "ம் ...ம்..ஆமாம் ராத்திரி சரியா ராத்திரி ஏழரைக்கு தான் நிகழ்ச்சி, மறக்காம பார்த்துட்டு எனக்கு உங்க கருத்தை சொல்லனும். இல்லாட்டி நம்ம வீட்டுக்கு வந்துட்டா மிளகு அடையும், ஜவ்வரிசி கொழுக்கட்டயும் சாப்பிட்டுகிட்டே பார்க்கலாம், வச்சிடவா"ன்னு யார்கிட்டயோ தங்கமணி பேசிகிட்டு இருந்தாங்க. எனக்கு ஓரளவு புரிஞ்சாலும் சரி கேட்டுடுவோமேன்னு"என்ன ஏதாவது நிகழ்ச்சியா முக்கியமா"ன்னு கேட்டு வச்சேன்.

   "தோ பாருங்க ஒரு தடவை தான் சொல்லுவேன். இன்னிக்கு ராத்திரி ஏழரைக்கு விஜய் டிவியிலே EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சி.அதை தான் ரொம்ப ஆர்வமா பார்க்க இந்த டிவிரிப்பேர்காரன், கேபிள் காரன் எல்லாம் கூட்டிகிட்டு வர சொன்னேன். இனிமே தொண தொணன்னு கேள்வி கேக்காம சொன்ன வேலை மட்டும் செய்யுங்க"ன்னு சொல்லிட்டு அடுத்த யாருக்கோ போன் போட்டு முன்ன பேசின அதே டயலாக்கை பேசினாங்க. டிவி தான் புதுசாச்சேன்னு கேட்டதுக்கு "இது சும்மா ஒரு ஜெனரல் செக்கப் தான், அந்த நேரத்துல சொதப்பிடகூடாதுல்ல அதான். அது போல கேபிள்காரனுக்கும் சொல்லிட்டேன். சாயந்திரம் நம்ம நகர்லயே தான் சுத்திகிட்டு இருக்கனும்ன்னு. தவிர மழை பெஞ்சா நம்ம டிவிக்குதான் வேர்த்து கொட்டுமே அதுக்காக பிள்ளையாருக்கு மஞ்சள் தேங்காய் வச்சாச்சு, தவிர மினி ஜென்செட் கூட அரேஞ்ச் பண்ணியாச்சு அக்காவீட்டிலிருந்து"ன்னு மின்னெச்சரிக்கை மினிம்மா பேசிகிட்டே போக எனக்கு ஆகா காலை ஏழரைக்கு ஆரம்பிச்ச ஏழரை இரவு ஏழரை வரை தொடர போகுதுன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது.

  இத்தனைக்கு பாப்பா கொஞ்சமும் அசராம மாடியிலே போய் போகோ டிவியில் கண்ணும் கருத்தமாவுமாக இருக்கவே நான் போய் "பாப்பா அப்படி என்ன நிகழ்ச்சி"ன்னு ஆர்வ மிகுதியிலே கேக்க அதுக்கு பாப்பா "அட சிம்பிள்ப்பா, நம்ம AVC Eng. College பசங்க EQ2 ன்னு ஒரு நிகழ்ச்சியிலே இன்னிக்கு கலந்துகறாங்க, நம்ம பிரியா அக்கா கூட அதிலே டேன்ஸ் ஆடுறாங்க, அதுக்கு தான் அம்மா இத்தனை அலப்பரை கொடுக்குறாங்க"ன்னு சொன்னா. நான் அதுக்கு "சரி அதிலே அம்மாவுக்கு என்ன ரோல், எல்லாம் காலேஜ் பசங்களாச்சே"ன்னு கேட்டதுக்கு பாப்பா "என்னப்பா அம்மா ரோல் தான் முக்கியமான ரோல், அம்மா இல்லாட்டி அவங்களுக்கு மானமே போயிருக்கும்"ன்னு சொல்ல நான் அப்படியே ஆகாசத்தில் பறந்தேன். நம்ம தங்கமணி மாத்திரம் டிவி நிகழ்ச்சி இயக்குனராயிட்டா அதை வச்சே பல பதிவு போடலாம். அவங்களை பேட்டி எடுத்து பத்து பாகமா போடலாம்ன்னு எல்லாம் நெனச்சுகிட்டு நானும் கூட மாட ஜவ்வரிசி அரைப்பதில் இருந்து மிளகு இடிச்சு தர்ர வரை எல்லாம் செஞ்சு ஏகப்பட்ட சபாஷ் வாங்கினேன்.

   நேரம் ஆக ஆக தங்கமணி முகத்திலே ஒரு படபடப்பு. எனக்கோ பாவமா போயிடுச்சு. "தோ பார், உன் கடமைய செஞ்சுட்ட, பதட்டபடாம இரு. என்ன ரிசல்ட் வந்தாலும் நாம தைரியமா ஏத்துக்கனும். ஒரு பழைய படைப்பாளிங்கிற முறையிலே (அடங்கொய்யால...)ஒரு புது படைப்பாளிக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்னன்னா" என்கிற ரேஞ்சில் நான் பொங்க பொங்க அபிபாப்பா அலட்சியமா பார்த்துகிட்டு மைல்டா சிரிச்சுகிட்டு போகுது அடையை தட்டில் எடுத்துகிட்டு.

   ஆச்சு மணி ஏழரை. அடைக்கு ஆசைப்பட்ட அக்கம் பக்கமும், கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்ட கொழுப்பெடுத்ததுகளும் வீட்டில் ஹாலில் நிறைந்து இருக்க நடுவே நம்ம படைப்பாளி தங்கமணியும். எனக்கு நட்டுவை பார்த்துக்கும் பெரும் பொருப்பு தரப்பட்டது. முதல் செஷன்ல தங்கமணியின் ரோல் ஏதும் வரலை. அடை தீர்ந்து போன கடுப்பில் இருந்த மாமிகள் வீட்டுக்கு கிளம்ப "தோ இப்ப இந்த தடவை வந்துடும், கொஞ்சம் இருங்க"ன்னு கெஞ்ச நான் போய் சமாதானமாக "தோ பார் இப்படித்தான் இருக்கும். நான் பதிவ போட்டுட்டு இப்படித்தான் பரபரப்பா இருப்பேன்"ன்னு ஏதேதோ சொல்ல "அய்யோ அய்யோ அதோ ஆடுது அதோ ஆடுது"ன்னு கூச்சல். நான் உத்து உத்து பார்க்க "எங்க பார்க்கறீங்க, அதோ வலமிருந்து இடமா இரண்டாவதா ஆடுது பாருங்க"ன்னு சொன்னப்ப நான் "அட நம்ம பிரியா"ன்னு சொல்ல "அட அத விடுங்க அந்த புடவை நம்ம வீட்டு புடவைங்க என்னமா ஆடுது. அதுக்குள்ள தான் பிரியா இருக்கா"ன்னு சொல்ல எனக்கு தலை சுத்திகிட்டு கிர்ர்ர்ர்ன்னு வந்துச்சு. பக்கத்து வீட்டு மாமி எல்லாம் "ஏண்டீ நன்னா இருக்கே, இது அந்த பார்த்த முதல் நாளேல கமலி கட்டிண்டு வர்ர அதே டிசைன் தானே, சூப்பரா இருக்குடீ, அதிலயும் அந்த கருப்பு கலர் சேரிக்கு சிகப்பு பார்டரும் அட்டாச்சுடு பிளவுசும் சும்மா அசத்திட்டே போ..."ன்னு சிலாகித்து பேச பேச "கொஞ்சம் இருங்க மாமி, அடை மொருகலா எடுத்துட்டு வர்ரேன்"ன்னு கிச்சன் உள்ளே போக அப்போ பார்த்து மாடியிலே சுட்டி டிவி பார்த்து முடிச்ச பிரேக் டைம்ல வந்த பாப்பா "மாமீஸ் அடுத்த வாரம் சேம் டைம்க்கு வந்துடுங்கோ, என் நிகழ்ச்சி இருக்கு"ன்னு குண்டை தூக்கி போட நான் மெதுவா பாப்பாகிட்டே கேட்டேன் என்ன நிகழ்ச்சின்னு. அதுக்கு அவ 'வர வர நமீதா கவுன் பெருசா இருக்குதாம். அதான் என் ஃபஸ்ட் பர்த் டே கவுனை கூரியர் பன்ணியிருக்கேன் வர்ர வாரம் மானாட மயிலாட நம்ம நிகழ்ச்சி தான்"ன்னு நக்கலா சொல்லிட்டு போனா!!

என்ன கொடுமை சாரே!!

இவரின் மீதி நகைச்சுவை பதிவுகளை இங்கே படியுங்கள்.

************************************************

நான்-அவள்-அவன்

31 கருத்துக்குத்து

   தலைவலிக்கெல்லாமா டாக்டரைப் பார்க்கணும் என்று வேண்டா வெறுப்பாகத்தான் அங்கு வந்தேன். விதி என்பதில் சற்று நம்பிக்கை வந்தது.கையில் ஒரு குழந்தையுடன் அவள் அமந்திருந்தாள். கடைசியாக அவளை நான் பார்த்து ஆறு வருடமிருக்கும்.

     உடைந்த குரலில் குழந்தையை கொஞ்சிய அவளை ரொம்ப நேரத்திற்கு பார்க்க முடியவில்லை. அவளது கண்கள் குண்டுகள் போல உள்ளடங்கி பரிதாபமாய் இருந்தன. நோய் அவளுக்கா அல்லது அவளின் குழந்தைக்கா என்று தெரியவில்லை. இன்னும் அவள் என்னைப் பார்க்கவில்லை.

   அவள் யாரென்று சொல்லவில்லையே. அவள் நான் தான். இன்னமும் அவள்தான் நான். பார்த்த நொடியிலே காதல் கொண்டு, துரத்தி துரத்தி கடிதம் கொடுத்து, மிரட்டியே பணிய வைத்து, என்னை அவளுக்கு எடுத்து சொல்லி கடைசியில் உண்மையாகவே காதலிக்க வைத்த தேவதை.

    வெளியிலிருந்த வந்த அவனைப் பார்த்த அவள் குழந்தையை அவனிடம் கொடுத்த போதுதான் என்னைப் பார்த்தாள். துன்பமும்,இன்பமும் ஒன்றாய் கலந்த ஒரு தெய்வீக நிலையில் இருந்தோம். எந்த நேரமும் வார்த்தையை உதிர தயாராயிருந்தன என் உதடுகள். கேட்கும் அடுத்த நொடியே அடைத்து வைக்கப்பட்ட மது குப்பியில் இருந்து வெளியே வரத் துடிக்கும் மதுவைப்போல் வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது அவள் கண்களில் கண்ணீர். தேவ மெளனத்தை சிந்திக் கொண்டிருந்தது எங்கள் காதல்.

    பேச வேண்டியதையெல்லாம் காதலித்த காலத்திலே முடித்துவிட்டதால் கண்களால் பேசிக்கொண்டிருந்தோம். என்ன ஆச்சு என்பது போல் நான் பார்த்த பார்வைக்கு குழந்தையைப் பார்த்தாள். அதன் கழுத்தில் அவன் கைவைத்து பார்த்தலிருந்து காய்ச்சல் என்றறிந்தேன். அதேப் பார்வையை பார்த்தாள். எனக்கு குழந்தை இல்லாததால் சிரித்தேன். தலை குனிந்தாள்.

   அன்றிரவு படுக்கையில் படுத்தேன். அவளின் விருப்பப்படி பேசாமல் இருந்து அவளுக்கு வேண்டியதை செய்த திருப்தியில் சற்று ஆனந்தமாய் உணர்ந்தேன். இருந்தும் ஒரு பாரம் அழுத்தியது. ஆண்பிள்ளை அழக்கூடாதென்று எவன் சொன்னது?அழுதேன்.சற்று நேரத்திலே உறங்கிப் போனேன்.

  அங்கே அவள் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை படுக்க வைத்து படுக்கைக்கு வந்த போது நான் உறங்கி சில மணித்துளிகள் ஆகியிருக்கும். "நல்லாயிருக்கியா" என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாத வருத்தத்தில் படுக்க போனவளை அவன் சந்தோஷமாக அணைத்தான். முடியாது என்று நினைத்தானோ முடிந்து விட்டது என்று நினைத்தானோ அவனும் உறங்கிப் போனான். அவள் மட்டும் விழித்திருந்தாள்.வெளியே வந்த கண்ணீரை விட வரத் துடிக்கும் கண்னீருக்கு அடர்த்தி அதிகம்.

  சில சமயங்களில் கதவுகள் அடைக்கப்பட்டாலும் காற்று மூடிய கதவுகளுக்கு அப்பாலும் செல்லும். சாளரங்கள் அதை திசை திருப்ப முயலும்.சாளரம் வழியே காற்று செல்ல எத்தனிக்கும் போது கதவு திறந்தாலும்,அப்போது காற்றுக்கு சாளரம்தானே கதவு?

Jan 16, 2009

காக்டெய்ல் (மூணார் ஸ்பெஷல்)

29 கருத்துக்குத்து

    மூனாரின் அருகே டாப் ஸ்டேஷன் என்று ஒரு பகுதி. மிக உயரமான பகுதி என்பதால் இந்தப் பெயர். இது ஒரு தனியாருக்கு சொந்தமான இடம் என்பதால் 15 ரூபாய் கட்டணம் வாங்கிகிறார்கள். அங்கே இருந்த ஒரு கைடு சொன்னத் தகவல் இது. அந்தப் பகுதியில் கொடைக்கானல் 60 கிலோமீட்டர் என்ற மைல்கல்லைப் பார்த்து அவரிடம் கேட்டேன். 15 வருடங்களுக்கு முன்பு வரை இங்கே இருந்து கொடைக்கானலுக்கு சாலை வசதி இருந்ததாம். கேப்டன் பிரபாகரன் படத்தில் இந்த சாலை வழியாக கடத்தல் பொருட்கள் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் கடத்தப்பட்டதாக காணிப்பித்ததால் அந்தச் சாலை மூடப்பட்டதாக சொல்கிறார்.இப்போது இங்கே இருந்து கொடைக்கானல் செல்ல வேண்டுமென்றால் மலையிறங்கி வததலகுண்டு சென்றுதான் செல்ல வேண்டுமாம்.

************************************************

    அதேப்போல் இந்த இடத்திலிருந்து தேனி சரியாக 22 கிலோமீட்டர்தானாம். கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தோம். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் சுற்றி தான் நாங்கள் மூனார் சென்றோம். அந்த சாலை மூடப்பட்டதற்கு பின்னாளும் ஒரு தமிழ்ப்படம் இருக்கிறதாம். பிதாமகனில் காட்டப்பட்ட ப‌ல காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டது. இந்த பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது உண்மைதானாம். இயக்குனர் பாலாவுக்கு அங்கே இருந்து வழக்கமாக கஞ்சா சப்ளை செய்யப்பட்டதாம்.அதை அவர் படத்தில் காட்ட,இப்போது இந்த சாலையும் மூடப்பட்டது.ட்ரெக்கிங் செல்பவர்கள் மட்டும் இதன் வழியாக செல்கிறார்கள். வாகங்களில் செல்பவர்கள் இப்போது 100 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியிருக்கிறது.

    நேரமில்லாததால் நாங்கள் ட்ரெக்கிங் செல்லவில்லை. வழியில் ஒரு ஆதிவாசிகள் பகுதியும் இருக்கிறது. அவர்களுக்கு இப்போது அரசாங்கம் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. வேட்டியும் சேலையும் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த முறை நிச்சயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். மூனார் செல்பவர்கள் (ஹனிமூனுக்கு போறவங்க இல்லப்பா) இதையும் திட்ட்மிட்டுக் கொள்ளுங்கள்.

*************************************************

   கேரளாவில் காலையிலே மக்கள் கள்ளு குடிக்கிறார்கள். கேப்பங்கிழங்கும் ஒரு லிட்டர் கள்ளும்தான் அவர்களது காலை உணவு. இங்கேயும் எல்லைப் பிரச்சினை உள்ளது. தமிழர்களுக்கும் கேரளாவை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி கைகலப்பு நடப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சுற்றுலா பயணிகளை அவர்கள் தொல்லை செய்வதில்லை. பார்ப்பதற்கென்று பெரிதாய் எதுவுமில்லை. ஒரு வாரம் தங்கி weather enjoy செய்யலாம். அனைவரும் சொல்வது போல அங்கே புதுமண தம்பதிகள் அதிகம் காணப்படவில்லை. பிறகுதான் புரிந்தது. மார்கழியில் யார் திருமணம் செய்வார்கள்?

ஒரு நான் வெஜ் ஜோக்:

தோழி:      ஹனிமூனுக்கு மூணார் போனியே என்ன பார்த்த? மணமகள்: Fan  சுத்தறததான் பார்த்தேன்.

Jan 12, 2009

எக்ஸ்க்யூஸ் மீ கேர்ள்ஸ்

49 கருத்துக்குத்து
யாருன்னு தெரியுதா? எடுத்தவன் முகத்தில் வெளிச்சம் வராமல் சதி செய்துவிட்டான். அவனுக்கு PITஐப் பற்றி சொல்லியிருக்கிறேன்

ச்சும்மா. பயப்படாதீங்க.


மரம் விழலையான்னு குசும்பன் கேட்க‌க் கூடாதுன்னு எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டிக்கிறேன்


என் கண்ணே பட்டிடும் போலிருக்குன்னு மெய்ல் செய்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்

(இடமிருந்து) பிரேம்,தனா,மணிமாறன்,ஹிஹிஹி நான் தான்,பாலாஜி,பிரபு, நாசர்

எதிர்பாராதவிதமாக கடந்த வாரம் மூணார் போகும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி நண்பர்களோடு எட்டு வருடம் கழித்து நான் போன டூர். கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் போனது நான்கு நாட்கள். அங்கே நான் தெரிந்துக் கொண்ட சில விஷயங்களை பதிவாக போட இருப்பதால் இதில் புகைப்படங்களோடு நிறுத்திக் கொள்கிறேன்.என் புரொஃபைலில் போட சில நல்ல படங்க‌ள் சிக்கியதும், என் சமீபத்திய படம் என நிரூபிக்கவும் இவை உதவியதில் மகிழ்ச்சி.

வில்லு‍ -ஒரு ரசிகனின் பார்வையில்

69 கருத்துக்குத்து
விமர்சணத்திற்கு போவதற்கு முன்னால் சில கேள்விகள்,டிஸ்கிக்கள். இதுவரை படம் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி. இது ஒரு வழக்கமான விஜய் படம் என்று நினைத்து சென்றீர்களா அல்லது விஜய் ஆஸ்கார் விருதுக்காக முயற்சி செய்திருக்கிறார் என்று நினைத்து சென்றீர்களா? பதில் கடைசியில். இனி டிஸ்கி. இந்த படமும் சரி ,இந்த விமர்சணமும் சரி விஜயை ரசிக்க முடிந்தவர்களுக்கும், மசாலா பட ரசிகர்களுக்கும் மட்டுமே.

இந்த முறை கமலா திரையரங்கில் வில்லு பார்த்தேன். அரங்கு முழுவதும் விஜயின் ஃபேன்ஸ் என்பதாலோ என்னவோ ஏ.ஸி போடவில்லை. வழக்கமாய் இருக்கும் அதிரடி ஓப்பனிங் சாங்கில் இல்லை என்பது உண்மை. குஷ்பூ வந்தும் சற்று அமைதி காத்தனர் ரசிகர்கள்.முதல் 10 நிமிடங்கள் நல்லாயிருக்கா இல்லையானு சொல்ல முடியாதபடி நகர்ந்தது. ஒரு திருமணத்திற்காக விஜய் கிராமத்திற்கு செல்ல, நயன்தாரா வடிவேலு கூட்டணியில் ஒரு அரை மணி நேரம் அரங்கம் அதிர சிரிப்பலை. படத்தில் பலமே இந்த காமெடிதான் என்று வெளியே வரும்போது பலர் சொல்வது காதில் விழுந்தது. கடைசியாக வரும் என எதிர்பார்த்த வாடா மாப்ளே இரண்டாவதாக வந்தது. படம் என்ன லோ பட்ஜெட்டா என்ற சந்தேகம். பாடல்களில் போக்கிரியில் இருந்த ரிச்னெஸ் இல்லை.

முதல் பாதி காதல்,காமெடி, ஒரு ட்விஸ்ட் என நல்லபடியாய் போனது. வழக்கம்போல் அனைவரின் கருத்துகளையும் கவனித்தேன். எல்லோருக்கும் திருப்தி. இரண்டாம் பாதியில்தான் பிரச்சனை. குறிப்பாக கடைசி 15 நிமிடம் மரண மொக்கை. க்ளைமேக்ஸ் சொதப்பியதால் அரங்கம் விட்டு வெளியே வரும்போது பலரும் முதல் பாதி சந்தோஷத்தை மறந்திருந்தனர்.

கதை என்ன பெரிய கதை.அது எல்லாம் பெருசா ஒன்னுமில்லைங்க. அப்பாவுக்காக மகன் பழி வாங்கும் கதைதான். நான் சென்றது விஜயின் நடனம், குறும்புத்தனம், சில பஞ்ச் டயலாக்ஸ். அதில் குறைவில்லை. குறிப்பாக நீ கோபபட்டால் பாடல் அருமை. அந்தப் பாடல் காட்சியாக்கப்பட்ட விதம்தான் எனக்கு பிடித்திருந்தது.ஜல்சா பாடல் ஒரே ஒரு கடற்கரையில் முடித்து விட்டனர். என்னா ஆச்சு பிரபு? நயந்தாரா நல்லதொரு ஆடை வடிவமைப்பாளரை பார்ப்பது நல்லது.

விஜயின் அப்பாவாக வேறு ஒருவரை போட்டிருக்கலாம். போக்கிரியில் விஜய் போலிஸ் வேடத்தில் வந்தது அவரது ரசிகர் மத்தியில் ஹிட்டானதால் இந்த முறை ராணுவ வேடத்தில் போட்டுவிட்டார் பிரபுதேவா. ஆனால் அதனால் கதையில் ஒரு மிகப் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை நானே சொல்வேனா? மாட்டேம்ப்பா.

அதிகம் விரசமில்லாமல், கலகலப்பான காமெடியோடு, சில ஆக்ஷன்களுடம் டைம் பாஸ் பண்ணக்கூடிய படம்தான். கடைசி 15 நிமிடத்தைத் தவிர. ஒரு விஜய் ரசிகனாக‌ எனக்கு இது முழு திருப்தி தரவில்லை. ஆனால் ஒரு விஜய் ரசிகனுக்கு தேவையான அனைத்தும் இருந்தது.குறி லேசாக தவறினாலும் வெண்கல கோப்பயை தவறவிடாது வில்லு. பப்ளிக் டாக். படம் சுமார்.

*************************************************
முதல் பத்தியில் உள்ள கேள்விக்கான பதில்:
முதலாவது பிரிவு என்றால் இந்தப் படத்தில் என்ன ஏமாற்றம்? இரண்டாவது பிரிவு என்றால் உங்களைப் பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வருது.

.

Jan 9, 2009

புட்டிக்கதைகள்

27 கருத்துக்குத்து

ஏழு மலையேறினால் மட்டும் ராகிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவான். ப‌கடிவதை என்றால் அடிக்க மாட்டான், கடிப்பான். ஒரு நாள் வழக்கம் போல் சொட்டு நீர்ப் பாசனம் முடிந்து விடுதிக்கு அவனை தூக்கி சென்றோம். வழியிலே 'ஆஃபாயில்' போட்டதால் சற்று மப்பு இறங்கி நடக்க ஆரம்பித்தான்.இரண்டு முதலாமாண்டு மாணவர்களை பார்த்ததும் ஓரங்கட்டினான்.

   நான் ஆளுக்கொரு கேள்வி கேட்பேன். சரியா பதில் சொல்லிட்டா போலாம், இல்லைன்னா 11 மணி வரைக்கும் என் கூடவே வரணும் என்றான் ஏழு. அவர்களும் வேறு வழியில்லாமல் தலையாட்டினார்கள்.

 பூக்காரி அழுதா எப்படிக் கண்ணீர் விடுவா?

இருவரும் ஒருவரை பார்த்தனர். தெரியல சார் என்றவுடன் சொன்னான் ஏழு "மாலை மாலையா".

  அடுத்தக் கேள்வியை வீசினார் ஹீரோ. பழைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு எங்கே கலயாணம் ஆச்சு?

மீண்டும் அவர்கள் முழிக்க தலையில் தட்டிய ஹீரோ சொன்னார் 'சர்ச்'சில் தான்.

    இப்போ ஆளுக்கொரு வேலை கொடுப்பேன். அத செஞ்சிட்டா ஓக்கெ. இல்லைன்னா நான் சொல்ற கதைய கடைசி வரைக்கும் "ம்" சொல்லிக் கேட்கனும்.

    ஒரு ரூபாய் நாணயத்தைக் காட்டி இது என்ன? என்றான். அவன் தலை என்றான். திருப்பி காட்டிய போது பூ என்றான்.  இந்த தலையில இருந்து ஒரு முடி எடு. திருப்பி பூவில் இருந்து ஒரு இதழ் எடு என்றான்.பேயறைந்ததைப் போல் ஆனார்கள் இருவரும்.

   வேறு வழியில்லாமல் கதை கேட்க ஆரம்பித்த அவர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்தான் ஏழு.

ஒரு நாள் நைட் 12 மணி இருக்கும். எனக்கு தாகமா இருந்துதா, ஆனா ரூம்ல தண்ணி இல்ல. எங்க ரூம் வேற மூனாவது மாடி. சரி, வேற வழியில்லாம பாலாஜிய எழுப்பி கீழப் போய் தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு கிளம்பினோம். அவன் எழுந்து லைட்ட போட்டான். அத பார்த்து பக்கத்து ரூம் சுதாகர் ,என்னடா ஏழு ரூம்ல இந்த நேரத்துல லைட் எரியுதுனு அவனும் லைட்ட போட்டான். அந்த விங்லயே நாங்க எப்பவும் பிரச்சனை பண்ற  ஆளுங்க. அதனால இந்த நேரத்துல என்ன பிரச்சனையோனு பயந்து தேர்ட் இயர் ரூம் எல்லாத்திலயும் லைட்ட போட்டாங்க. அட, அதிசயமா இருக்கேனு ஒரு செகண்ட் இயர் பையன் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லரயும் எழுப்பி லைட்ட போட்டான். அப்படியே ஒரு வழியா எங்க ஹாஸ்டல் முழுக்க லைட் எரிஞ்சுது. இத பார்த்த பக்கத்து ஹாஸ்டல் பசங்க, நாங்க என்னவோ அவங்கள அடிக்க வர்ற மாதிரி பயந்து போய் லைட்ட போட்டு முழிச்சிட்டே இருந்தாங்க. எங்க ஹாஸ்டலுக்கும்  அவங்களுக்கும் எப்பவுமே ஆகாது. அதனால் ஏதோ பெரிய மஹாபாரத போர் நடக்க போற மாதிரி அந்த ஏரியாவே லைட்ட போட்டு வெளிய வந்துட்டாங்க. வதந்திதான் தீ மாதிரி பரவுமே. ஒரு அஞ்சே நிமிஷத்துல சென்னை முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருந்து வெளியூர் பசங்க எல்லாம் அவங்கவங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு மேட்டர சொல்லவும், நைட் ஃபுல்லா லைட் போட்டு வச்சா நல்லதுனு மேட்டர் ரூட் மாறிடிச்சு. அவ்ளோதான், தமிழ் நாடு ஃபுல்லா லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு.

       இந்தியாவின் ஒத்துமை அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது. 15 நிமிஷத்துல நம்ம நாடு முழுக்க லைட் எரிய ஆரம்பிச்சிடுச்சு. இங்க இருக்கிற மத்த நாட்டு தூதருங்க விஷயத்த அவங்க நாட்டுக்கு சொல்ல, முதல்ல பாகிஸ்தான் காரங்க லைட்ட போட்டாங்க.. உலகத்துல பாதி நாட்டுல பகல்ன்றதால அவங்க ஊருல ஏற்கனவே லைட் போட்டு வச்சிருந்தாங்க. மீதி நாட்டுலயும் லைட் போட்ட உடனே "உலகில் முதல் முறையாக உலகில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது". அப்படியே பூமியே தகதகனு மின்ன ஆரம்பிச்சது செவ்வாய் கிரகத்தில் இருக்கிறவங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சதுனு சொல்றப்ப அந்த பையன் கண்ணுல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சது. சரிடா பூமியோடு நிறுத்திக்கலாம்னு சொன்ன உடனே ரொம்ப சந்தொஷப்பட்டான்.

     அப்புறம் ஒரு வழியா நானும் பாலாஜியும் தண்ணி குடிச்சிட்டு வந்து லைட்ட நிறுத்திட்டு தூங்கப் போனோம். அப்பாடானு சுதாகரும் லைட்ட நிறுத்திட்டான். இத பார்த்துட்டு.........

இருவரும் இப்போது மயங்கி விழுந்தார்கள்.

Jan 8, 2009

காக்டெய்ல் (தியேட்டர் ஸ்பெஷல்)

22 கருத்துக்குத்து

   சென்ற வாரம் அண்ணா திரையரங்கில் என் அண்ணா அபியும் நானும், அபியும் நானும் படம் பார்த்தோம்.(அபி எனது அண்ணனின் பெயர்). பிரமிட் அண்ணா, மீண்டும் வெறும் அண்ணாவாகி விட்டது. தயவு செய்து யாரும் அந்தப் பக்கம் போயிடாதீங்கப்பூ. எல்லா இருக்கைகளும் சம தளத்தில் அமைத்த அந்த டிசைனர் நல்லாயிருக்கனும். பாதி திரையில் நன் முன்னே இருப்பவரின் தலைதான் தெரிகிறது. என் அக்கா மகனுக்கு படம் தெரியவில்லையென என் மடியில் அமர்ந்தான்.பின்னால் இருந்து ஒருவர் சண்டைக்கு வந்தார். அமைதி விரும்பியான நான் அவனை இறக்கிவிட்டேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவருக்கு பின்னால் இருப்பவர் அவரை "டவுன்" செய்ய சொன்னார். அவருடன் சன்டையை தொடர்ந்தார். என் அக்காப் பையனிடம் சொன்னேன் "படத்துல சண்டையே இல்லைன்னு அழுதியே பார்த்துக்கோ"

*************************************************    கட்டணத்தை சீரமைத்த தமிழக அரசுக்கு நன்றி சொல்லலாமா? கொஞ்சம் பொறுங்கள். மாயஜாலில் அதிகபட்சம் 120ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்பது அரசு விதி. ஆனால் வரிவிலக்கு இருக்கும் படத்திற்கும் 120 தான். வரிவிலக்கு இல்லாத படத்திற்கும் 120 தான். ஆக இதன் மூலம் பார்வையாளனுக்கும் பலனில்லை. அரசுக்கும் பலனில்லை. எங்கே போகிறது அந்தப் பணம்? அது மட்டுமில்லாமல், தசவாதாரம் படத்திற்கு கட்டணம் 200 ரூபாய். 120 ரூபாய் நுழைவு சீட்டு, மீதி 80 ரூபாய்க்கு உள்ளே ஏதாவது வாங்க்க் கொள்ளலாம். ஆனால் உள்ளே ஒரு காஃபியின் விலை 20ரூபாய். திருட்டு சிடி தப்பே இல்ல.

************************************************* தேவி தியேட்டரின் பின்னே ஒரு லஸ்ஸி கடை இருக்கிறது. சென்னைவாசிகளுக்கு தெரிந்திருக்கும். அண்னா சாலையில் எந்த திரையரங்கு சென்றாலும் அங்கே சென்று சமோசா, கச்சோரி,ஜிலேபி லஸ்ஸி என ஒரு வெட்டு வெட்டுவது வழக்கம். இதுவரை போகாதவர்கள் ஒரு முறை போய் பாருங்கள்.
  புலிகேசி படம் பார்க்க சென்றபோது தேவி வளாகம் மேம்படுத்தப்படுவதாக போர்ட் வைத்திருந்தார்கள். இன்னமும் வேலை நடக்கிறதாம். ஒரு முன்னேற்றமும் காணவில்லை. ஒரு காலத்தில் என் அபிமான திரையரங்கு அது. யாருக்காவது தெரியுமா என்ன பிரச்சினை என்று?

*************************************************    பத்ரியில் ஆரம்பித்து குருவி வரை விஜயின் அனைத்துப் படங்களையும் முதல் நாள் பார்த்திருக்கிறேன். சிங்கையில் இருந்தபோது கூட இது தொடர்ந்தது. வில்லுக்கு போகனும் என்றிருக்கிறேன். படம் எப்படி இருந்தாலும் அந்த ஆட்டம் பாட்டத்திற்கே செல்லலாம். குறிப்பாக ஆல்பர்ட்,தேவி,உதயம் ஆகியவை விஜயின் கோட்டை என்பார்கள். ஆனால் புறநகரில் உள்ள குரோம்பேட்டை வெற்றி மற்றும் அகஸ்தியாவில் பார்க்க வேண்டும் முதல் நாள். இந்த முறை எங்கே பார்ப்பேன் என்று தெரியவில்லை.எதுவுமில்லைன்னா குடும்பத்தோட மாயாஜால்தான்.

*************************************************     சென்னையில் பல இடங்களில் மல்ட்ப்ளக்சுகள் வர இருக்கின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை பிரியும் இடத்தில் ஒரு வணிக வளாகம் கட்டப்படுகிறது. அதனுள் ஐனாக்ஸைப் போல 6 திரைகள். ஆற்காடு சாலை பிக் பஸார் மேல் 10 திரைகள். இவையல்லாது சத்யம் சினிமாஸ் 10 திரைகள் கொண்ட அரங்கு ஒன்றையும் கட்டப் போகிறார்களாம்.படம் எங்க இருக்கு? ஒரு வேளை பழைய படங்களை ஓட்டுவார்களா?

Jan 7, 2009

பிரபல பதிவர்களை அழைக்கும் முன்பு..

64 கருத்துக்குத்து

  பதிவர்களை சிலரை சமீபத்தில் அழைத்தபோது அவர்களின் காலர் ட்யூன் ஆச்சரியபடுத்தியது. இதோ உங்களுக்காக‌

1) நர்சிம் - கம்பன் ஏமார்ந்தான்

2) முரளி - சினிமா சினிமா (குசேலன்)

3) பரிசல் - வேலை வேலை காலையும் மாலையும் வேலை எப்பவுமே வேலை(அவ்வை சண்முகி)

4) தாமிரா - பொண்டாட்டி சொன்னா கேட்டக்கனும் புத்தியில் வாங்கிப் போட்டக்கனும்

5) குசும்பன் - சிரி சிரி சிரி (ஆளவந்தான்)

6) புதுகை அப்துல்லா ஊருக்காக வாழும் கலைஞன் (சங்கமம்)

7) கிரி - சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா

8) செந்தழல் ரவி - சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா

9) அதிஷா - கதை சொல்லப் போறேன்(ஏதோ ஒரு கார்த்திக் படம்)

10) ரமேஷ் வைத்யா - இளமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது (முத்து)

11) வால்பையன் - தண்ணித் தொட்டி தேடி வந்த (சிந்து பைரவி)

12) அறிவிழி - நான் அவனில்லை

13) ராப் - முதன் முதலாக காதல் டூயட்

14) வெண்பூ - கல்யாண சமையல் சாதம்

15) லக்கி - நல்லதொரு குடும்பம் பல்கலை'கழகம்'

*************************************************

பி.கு : புரொஃபைல் படத்தை மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து கூறவும்.

Jan 6, 2009

பாம்பு ஃபைட் தெரியுமா?

57 கருத்துக்குத்து

    கடந்த முறை சென்னை போன போது நண்பன் ஒருவன் சொன்னத் தகவலைக் கேட்ட போது அலறிவிட்டேன். இருக்கும் எல்லாம் போதை வஸ்துக்களையும் முயற்சி செய்து விட்ட சென்னைவாசிகள், இப்போது பாம்பின் விஷம் மூல போதை பெறுகிறார்களாம். இதற்கு பாம்பு ஃபைட் என்று பெயராம். என்ன வகை பாம்பு எனத் தெரியவில்லை. பார்க்க தண்ணி பாம்பு போல இருந்தாலும் அதை கையாளும் முறையிலே தெரிகிறது அது விஷப் பாம்பு என்று.

   மெல்லியதாக இருந்தாலும் நான்கு அடி நீளம் இருக்கும் அந்தப் பாம்பை தன் கழுத்தை சுற்றி போட்டுக் கொள்கிறார்கள். வாயை மட்டும் தன் விரல்களால் அழுத்தி பிடித்துக் கொண்டு, வரும் 'கஸ்டமர்களின்' உதட்டில் அந்தப் பாம்பை லாவகமாக கொத்த விடுகிறார்கள். அவ்வளவுதான். அவர் மெல்ல சுவரில் சாய்கிறார். ஒரு பத்து நிமிடம் கழித்து எழுந்து நடக்கிறார். ஆனால் போதை ரெண்டு நாளைக்கு இருக்குமாம். ஒரு ஃபைட்டுக்கு 1500 முதல் 4000 வரை வாங்கிறார்கள். ஒரு நாளில் ஒரு பாம்பு இரண்டு முறை மட்டுமே ஃபைட் செய்யும் என்பதால் பலப் பாம்புகளை வளர்க்கிறார்கள்.

     இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நான் இணையத்தில் இதைப் பற்றி மேய்ந்த போது கிடைத்தத் தகவல் எனக்கு மார‌டைப்பையே வர வைத்து விடும் போலிருக்கிறது. பாம்பின் விஷம் மூலம் பல வகையில் போதை வஸ்துக்கள் தயார் செய்யப் படுகின்றன. அதிலும் குறிப்பாக தெற்காசியாவில்தான் இவை பரவலாக செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு பாட்டிலில் கொஞ்சம் ஆல்கஹாலோடு ஒரு விஷப் பாம்பை போட்டு மூடி வைத்து விடிகிறார்கள். நாளைடைவில் அதன் விஷம் அதில் ஊறிவிடுகிறது. பின் பாம்பை எடுத்து விட்டு அந்த சரக்கை அடிக்கிறார்களாம். மேற்கத்திய நாடுகளில் Rattle என்ற வகை பாம்பும் ஆசிய நாடுகளில் கட்டு விரியன் என்ற வகை பாம்பும் இதற்கு பயன் படுத்துகிறார்கள்.

     இது ஏதோ விலை மலிவானது. அதனலதான் உயிரைப் பணயம் வைத்து குடிக்கிறார்கள் என்று நினைத்த எனக்கு மற்றொரு அதிர்ச்சி. இதன் விலை சாதரண மது வகைகளை விட பல மடங்கு அதிகம்.நல்லப் பாம்பையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. www.ebay.com என்ற இணையத்தில் Cobra Wine  என்ற மது விற்பணைக்கு உள்ளது. இதன் விலை $12.99. அதாவது கிட்டதட்ட 650 ரூபாய். இங்கேப் போய் பாருங்கள். பிடித்தால் வாங்கி அடித்துவிட்டு ஒரு விமர்சணம் எழுதுங்கள். என்னமோ போங்கப்பா..

Jan 5, 2009

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!

49 கருத்துக்குத்து

    தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம். எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்திலா? எந்த இடம் என்பது மறந்து போய்விட்டது.   ஐந்தாவது செமஸ்டர் ஆரம்பமாயிருந்த சமயம் மெர்க்குரிப்பூக்கள் திரும்ப நூலகத்தில் கொடுங்களேன்.. நான் படிக்க வேண்டும்.. எனக் கேட்டிருந்தாய்.தகவல் சொன்ன அந்த நூலகனை உதைக்க வேண்டும் என மனதில் கறுவிக்கொண்டே திருப்பிக் கொடுத்தேன்.கல்லூரி மலரில் உங்கள் கவிதை படித்தேனென்று ஒருமுறையும் நான் உங்க பக்கத்து ஊருதான் என்று ஒருமுறையும் கேண்டீனில் பார்த்துக்கொண்டபோது சொன்னாய்.

   நள்ளிரவு சீட்டுக் கசேரிகளினூடே ரவி சொன்ன அந்த பிகர் நல்லா கீரா மச்சி! தான் உன்னைப் பற்றி யோசிக்க வைத்தது.ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ராமஜெயம் பஸ்ஸில் எனக்காக காத்திருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை. நேருக்கு நேர் எங்கெங்கே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்குமென்று சொல்லிக்கொண்டிருந்தாய்.நீ ஏதோதோ பேசிக்கொண்டு வர மிக அருகில் மல்லிகைப்பூ வாசனைகளுடன் ஒரு பெண்ணை எதிர்பார்த்திராததால் வாயடைத்து மெளனமாகவே வந்து கொண்டிருந்தேன். சனிக்கிழமை காலை தொலைபேசியில் உன் குரல் கேட்கத் தவிப்பாய் இருந்தது.அந்த திங்கட்கிழமையா? அடுத்த திங்கட்கிழமையா? மெக்கானிகல் பில்டிங் பின்னாலிருந்த மைதானத்தில் வைத்து உன்னை காதலிப்பதாய் சொன்னேன் என நினைவு.சற்றுப் பெரிய விழிகள் உனக்கு சட்டெனக் குளமானதில் தவித்துப் போனேன்.பதிலெதுவும் சொல்லாமல் விலகிப்போனாய்.அகிலாவிடம் இந்த ஆம்பள பசங்க இப்படித்தான் என வன்மத்துடன் சொல்லியிருந்தாய்.அகிலா அவ கிடக்கிரா விடுறா என ஆறுதல் சொன்னபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

    பிரியும் தருணங்களில் நட்புக்கரம் நீட்டியபோது குழந்தையின் குதூகலத்துடன் விரல் பிடித்துக் கொண்டாய்.என்றென்றைக்குமான தோழி ப்ரிய ஸ்நேகிதி என உளறிக் கொட்டி முப்பது பக்க கடிதம் கொடுத்தேன் (இன்னும் வைத்திருக்கிறாயா அதை?)உலகின் அடிவானத்தை மீறிய அழகு இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கிறதென அறிவுமதியை துணைக்கழைத்தேன். ஓசூரிலிருந்த முதல் இரண்டு மாதங்களில் வாரம் இரண்டு முறையாவது பேசிக்கொண்டோமில்லையா?உனக்கு தொலைபேச எடுத்துக்கொண்ட சிரமங்கள் நீ அறியாதது. தொலைபேசியில் கூட ஆண் குரல் அனுமதியில்லை என்பாளே உன் வார்டன் அவள் பெயரென்ன ஏதோ பாட்டுடன் சம்பந்தப்படுத்தி கிண்டலடிப்போமே. அண்ணாமலை நகர் எஸ் டிடி பூத் பெண்கள் என்னை எங்கு பார்த்தாலும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள். குளிக்கும்போது எட்டிப்பார்த்ததுபோல் கூசிப்போவேன்.

   அடுத்த எட்டு மாதங்கள் உன் பிறந்த நாள்,என் பிறந்த நாள், நியூ இயர், உன் நினைவு வந்தது என ஒருமுறை இப்படியாய் தொலைபேசிக்கொண்டோம்.நான் எத்தனை கடிதங்கள் போட்டேன் என நினைவில்லை.ஒரு நள்ளிரவில் உனக்கு கடிதமெழுதிக்கொண்டிருந்தபோது அண்ணா பார்த்து விட்டார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.பின்பு பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிப் போய்விட்ட இரண்டு மாதங்கள் கழித்து தொலைபேசினாய்.படிப்பு முடிந்தது வேலைக்கு முயற்சிப்பதாய் கேட்டவுடன் மகிழ்ந்து போனேன்.உடனடியாய் அலுவலக ஏ.ஜி எம் மை அருவி பாருக்கு கூட்டிபோய் உன் வேலையை உறுதி செய்தேன். உனக்கு ஹாஸ்டல் தேடியது நினைவிருக்கிறதா? அந்த அப்ளிகேசனில் கார்டியன் என்ற இடத்தில் என கையொப்பமிட்டது இன்னமும் மகிழ்வைத் தருகிறது.

   இரண்டாயிரம் வருட ஜீன் மாத ஒன்றாம் தேதி விஜயன் பைக்கில் ஆஸ்டலில் இருந்து உன்னை கூட்டி வந்தேன். அந்த ஆறு மணி குளிர்.. ஆளில்லாத நேரு வீதி.. என் காதோரத்தில் உன் மூச்சுக் காற்று.. மற்றும் உன் பிரத்யேக வாசனை(ஒரு நள்ளிரவில் இது என்னடி வாசனை என கிறங்கியபோது ஃபேர் எவர் க்ரீம் பா என சொல்லி என் முகம் சுருங்கியதைப் பார்த்து சிரித்தாயல்லவா) இவைகளோடு அலுவலகத்தில் இறக்கி விட்டது மறக்க முடியாத தருணம்.அதற்கெனவே தொடர்ந்து இரவுப்பணி வாங்கிக்கொண்டேன்.எல்லா மாலைகளிலும் கடற்கரைக்கு போவதை விடவில்லை இல்லையா? கடற்கரைக்கெதிர்த்தார் போலிருந்த பூவரச மரமொன்றின் கீழிருக்கும் மரப்பெஞ்சு நமக்கெனவே உருவானதாய் சொல்லி சிலாகிப்போம். இதற்க்கு ஏன் காதலர் பூங்கா எனப் பெயர்? நண்பர்கள் நாம் கூடத்தான் வருகிறோம் என கள்ளச் சிரிப்பை மறைத்தபடி நீ கேட்ட மாலையில் தான் கங்கா வைப் பற்றி சொன்னேன் அப்போதுதான் முதன் முதலில் என் உள்ளங்கை பிடித்தாயல்லவா?

   ஆங்! இன்னொரு சந்தர்ப்பம் ராமன் திரையரங்கில் அலைபாயுதே பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென உணர்ச்சி வயப்பட்டு என் உள்ளங்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாய் என்ன? என்ன? எனப் பதறிக்கேட்டதற்க்கு எதுவுமில்லையென தலையசைத்தாய் ஆனால் உன் விழியோரம் துளிர்த்திருந்த நீர் அந்த இருட்டிலும் மின்னியது.

   ஆகஸ்ட் இருபத்தேழாம் தேதி மதியம்தான் நான் முதலில் தங்கியிருந்த அந்த மொட்டை மாடி இருட்டறையில் உன்னை முத்தமிட்டேன். (உலகிலேயே மிகவும் பிடித்த இடமென்று அடிக்கடி சொல்வாயே) அந்த துணிவு எப்படி வந்ததெனத் தெரியவில்லை அதற்க்கு முன்பு எத்தனையோ நாட்கள் தனித்திருந்தும் எதுவும் நேர்ந்து விடவில்லை அன்று உன்னை முத்தமிட எந்த முன் தீர்மாணங்களுமில்லை வெகு இயல்பாய் நிகழ்ந்தது அது… ஒரு பூ இதழ் விரிப்பது போல.அதற்க்குப்பின் முதல் ஷிப்ட் முடித்துவிட்டு நேராய் என் அறைக்கு வந்து விடுவாய் மூன்று மணிக்கு கதவையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன். எத்தனை முத்தங்கள் ஹேமா! அப்பா ஏன் அப்படி செய்தோமென இருக்கிறது.கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முத்தம்தான்.உலகத்திலேயே உடல்மொழியை முதலில் பேசிவிட்டு காதலை உறுதி செய்தவர்கள் நாமாகத்தான் இருக்கமுடியும்.ஃபார்மலாக நீ எப்போது என்னை காதலிக்கிறேன் என சொன்னாய் என மறந்து போய்விட்டது(தேதிகளை நினைவுபடுத்திக் கொள்ள பச்சை நிற டைரியை இப்போது படிப்பதில்லை ஹேமா)

   புயலும் மழையுமாயிருந்த ஒரு நாளின் இரவில் பார்த்தே ஆக வேண்டுமெனத் தொலைபேசினாய்.ஏழு மணிக்குப் போன மின்சாரம் ஒன்பது மணி வரை வந்திருக்கவில்லை. ஒரு மரம் விழும் சப்தம் கேட்டது வா! போய் பார்க்கலாம் என ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்காய் சென்றோமே. மின்சாரம் இல்லாத அந்த இரவில் ஒளிர்ந்த பிரஞ்சு வீதிகள் எத்தனை அழகு ஹேமா!
   நூலகத்தை ஒட்டியிருந்த அசோக மரம் புயலுக்கு இரையாகியிருந்தது மிகுந்த வருத்தங்களுடன் பார்த்தபடி தெருவை கடந்து மூலை திரும்புகையில் என்னைக் கட்டிக் கொண்டாய் அந்த இருளில் உன் உதட்டில் முத்தமிட்டதுதான் என் சிறந்த முத்தமென கிறக்கமான மதியங்களில் சிலாகிப்பாய்.

    டிசம்பர் இருபத்து மூன்றாம் நாள் கார்த்திகை தீபத்திற்க்கு ஊருக்குப் போகாமல் அறைத்தோழனை சரிகட்டி ஊருக்கனுப்பி உன் வருகைக்காக காத்திருந்தேன் கைக்கொள்ளாமல் அகல் விளக்குகளை வாங்கி வந்திருந்தாய்.தாழ்பாளில்லாத என் குளியலறையில் எவ்வளவு நம்பிக்கைகளோடு குளித்துவிட்டு வந்தாயென சிலாகித்தபோது பாக்கறதுன்னா பாத்துக்கோங்க என கிறங்கடித்தாய் மேலும் உன் மேல உன்ன விட அதிக நம்பிக்கை விஸ்வா! எனக்கு எனச் சொல்லி என் வன்மையான முத்தத்திலிருந்து அந்த தருணத்தை பாதுகாத்துக் கொண்டாய். பாவாடை தாவணியில் உன்னைப் பார்த்தது இல்லை என எப்போதோ சொல்லியிருந்ததை நினைவில் வைத்திருந்து கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகைப்பூ, கொலுசு, பாவாடை தாவணி சகிதமாய் நீ சடுதியில் மாறிப்போனாய் எப்படி இருக்கேன் என முன் வந்து கேட்ட தருணம் வெகு நாட்கள் கனவில் வந்தது ஹேமா!.

    மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அறைமுழுக்க அகல் விள்க்குகளை ஏற்றி வைத்தோம் தீபத்தின் ஒளியில் ஒளிர்ந்த அறையின் நடுவில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தோம்.எண்ணெய் தீர்ந்து அகல் விளக்குகள் குளிர்ந்தபின்பும் விளக்குகளைப் பொருத்தாமல் பால்கனி சன்னல்களினூடாய் உள் விழுந்த நிலவொளி வெளிச்சத்தில் புதைந்தபடி வானம் பார்த்தோம். நட்சத்திரத்தினுள் ஒன்றைத் தெர்ந்தெடுத்து அதனிடம் சொன்னாய் ஏ! நட்சத்திரமே பார்த்துக்கொள் இதே போன்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உன்னிடம் பேசும்போது இவரின் குழந்தையை நான் சுமந்திருப்பேன்.(நீ எப்போதும் என்னை ஒருமையில் கூப்பிட்டதில்லையே ஏன் ஹேமா?) ஏதாவது பாடுங்களேன் எனக் கேட்டதற்க்கு கண்கள் மூடி..சுவற்றில் சாய்ந்து உன் மடி மீது கால் தூக்கிப்போட்டு கனாக் காணும் கண்கள் மெல்ல பாடினேனே..செத்துடனும் போலிருக்கு விஸ்வா என உருகிப்போனாய்.. அந்த பின்னிரவில் ஈரமான தொடுகையில் விழித்துப் பார்க்கையில் நீ என்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தாய் ஏய் தூங்கு என கோபித்தபோது தூங்குமூஞ்சி எனச் சொல்லி நெருங்கி வந்து படுத்துக் கொண்டாய்.
   நம் காதலை நீ அவசரப்பட்டு சொல்லியிருக்க வேண்டாம் ஹேமா! எவ்வளவு விரைவாய் நடந்தது அந்தப் பிரிவு. மீண்டும் வேலை மாற்றம்,உன் அக்காவின் பிரச்சினைகள், அம்மாவின் பிடிவாதம், என் தற்கொலை முயற்சி, உன் கதறல்கள், நமது குடும்பத்திற்க்குள் நடந்த அடிதடி……..
எதுவிருப்பினும் நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!

********************************************

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் படிக்கும் பதிவர் இவர். குறிப்பாய் இந்தக் கதையை எத்தணை முறை படித்திருப்பேன் எனத் தெரியவில்லை. இது போன்றதொரு கதை நிச்சயம் நம் வாழ்விலோ நமக்கு தெரிந்தவர்கள் வாழ்விலோ நடந்திருக்கும். இவரை இங்கே படியுங்கள்.

Jan 3, 2009

புது தேசம் உருவாகிறது

38 கருத்துக்குத்து

      எங்களுக்கென்று ஒரு தேசம். கவிதைகளை ரசிப்பவர்கள் அனைவரும் குடிமகன்கள் ஆகலாம். எங்கள் தேசத்திற்கு வருபவர்களுக்கு எந்த விசாவும் தேவையில்லை. ஆனால் விமானத்தில் வரும்போது ஜன்னலோர‌ இருக்கையில் அமர்ந்து தூங்குபவர்கள் நிச்சயம் திருப்பி அனுப்பப் படுவர்

     பள்ளிகள் அனைத்திலும் அகண்டு விரிந்த புள்வெளிகளும் ஆங்காங்கே ஓடித் திரியும் முயல்களும் கட்டாயம் வேண்டும். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லாமல் அது எப்படி செடிக்கு உதவுகிறது என்பதும் சொல்லித் தரப்பட வேண்டும். வகுப்பறைகளின் சன்னலோர கிளைகள் அனைத்தும் குறைந்த பட்சம் நான்கு பறவைகளை கொண்டு நிரப்ப வேண்டும்.

    சாலைகளில் உதிர்ந்து கிடக்கும் காலை நேரப் பூக்கள் அகற்றும் வரை அச்சாலைகள் மூடப்பட்டிருக்கும். நடந்து செல்பவர்களை பார்த்து சிரிக்கும் குழந்தைகளை பார்த்து சிரிக்காமல் போவோரின் உதடுகள் தைக்கப்படும். பாடிச் செல்லும் குருவிகளுக்கு இடைஞ்சலாய் ஒலி எழுப்பும் வாகன் ஓட்டிகள் வாழ்நாள் முழுவதும் வாகன‌ங்களை உபயோகிக்க தடை.

    மழை பெய்யும் போது குடை விரிப்பவர்களும், மழை நிற்கும் முன் நனையத் தவறுபவர்களும் பாலைவனத்தில் ஒரு நாள் இருக்க வேண்டும், வெறும் ஒரு குவளை தண்ணீரோடு. மாதத்தில் ஒரு முறை மின்சாரம் இல்லாமல் ஒற்றை மெழுவர்த்தியுடன் படுத்துறங்க வேண்டும்

   காதல் தோல்வியடைந்து கவிதை எழுதுபவர்களுக்கு இன்னொரு காதலன்/லி உருவாக்கப்பட வேண்டும் குளோனிங் முறையில். கட்டாயம் சாதி சான்றிதழ் தேவை இச்சேவையை பெற. காதலர் என்ற சாதி சான்றிதழ் பெற குறைந்தபட்சம் மூன்று முத்தங்களும், முப்பது சண்டைகளும் போட்டிருத்தல் வேண்டும்.

கவிஞர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.எங்கள் கனவு தேசத்தில் வசிப்பதற்காக எந்த சட்டங்களும் இல்லை. ரசிப்பதற்கு மட்டுமே.

Jan 2, 2009

காக்டெய்ல்

31 கருத்துக்குத்து

    "உனக்கும் உன் ரசிக/ரசிகை கோடிகளுக்கும் வாழ்த்துகள் என்றார்" நர்சிம். கேடிகள் என்பதைத்தான் கோடிகள் என்று சொல்லிவிட்டதாக இன்னொரு நண்பர் இடித்துரைத்தார். எது எப்படியோ நண்பர்கள் அனைவருக்கும் Wish u a very Happy and Prosperous  New Year (தமிழ் புத்தாண்டுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்வதை குறை சொல்பவர்களே, ஆங்கிலப் புத்தாண்டிற்கு தமிழில் வாழ்த்துவதா?)

************************************************    புது வருடத்தில் முதல் பதிவு கதையா, கவிதையா, நகைச்சுவையா, வழக்கம் போல் மொக்கையா அல்லது புட்டிக்கதையா என்று நீங்கள் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்.(சரி சரி). புட்டிகதைதான் என முடிவு செய்திருந்தேன். ஏழுமலையிடன் புகைப்படம் கேட்டிருந்தேன். காரணம் சொல்லாததால் இன்னமும் அனுப்பவில்லை அவன். ஃபோட்டோ இல்லாமால் புட்டிக்கதை போட்டால் வித்யா தீக்குளிப்பேன் என்று சொன்னதால் பதிவேற்றவில்லை. எல்லாம் டெபாஸிட் இழந்து விட்டதால் எவர்க்ரீன் காக்டெய்ல் ஜெயித்து விட்டது.பொருத்தம்தானே?

*************************************************   நண்பர்கள் சிலர் வழக்கம்போல் வீட்டில் பொய்க் காரணம் சொல்லிவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை வந்திருந்தார்கள். அவர்களை பிக்கப் செய்து கொண்டு வந்துக் கொண்டிருந்தபோது வழியில் தி.க.வினர் சிலர் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொன்டிருந்தார்கள். ஒருவன் சீரியஸா சொன்னான் "இவங்க வீட்ல எல்லாம் கேட்கவே மாட்டாங்களா?"

*************************************************   காம்ப்ளான் விளம்பரம் ஒன்றில் ஹார்லிக்ஸில் இருப்பது சீப்பான பொருட்கள் என்று நேரிடையாக அதன் பெயரை சொல்கிறார்கள். ஹார்லிக்ஸும் அதேப் போல் காம்ப்ளான் பெயரைச் சொல்கிறார்களாம். இது எப்படி சாத்தியம்? வழக்கு தொடுக்கலாமே? எதையும் காப்பியடிக்கும் சன் டிவி.யினர் விளம்பரம் கூட பஜாஜை காப்பி அடித்திருக்கிறார்கள்.

*************************************************வெள்ள நிவாரண நிதி
க்யூவிலிருந்த அருக்காணி-
முக்கால் அம்மணமாய்‍
மூக்கொழுகி நிற்க,
அவள் கையிலிருந்த
ரேஷன் கார்டு
பிளாஸ்ட்க் அட்டையில்
பளபளத்தது.

-கார்க்கி

 

all rights reserved to www.karkibava.com