Dec 31, 2009

2010ல் கார்க்கி-சில மாற்றங்கள்

50 கருத்துக்குத்து

 

எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது. வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது. மறுநாள் 2ம்தேதி வெள்ளிக்கிழமையாய் போனதால் சற்று சலிப்பு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஹைதைக்கும், சைதைக்கும் பயணம் செய்தே காலம் கழிந்தன அப்போதெல்லாம். பெரிதாய் வாழ்வு ருசிக்கவில்லை எனலாம்.

   சமீபத்திய வருடங்களில் புத்தாண்டை நான் அதிகம் கொண்டாடியதில்லை. திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.ஆனால் 2009ல் நிறைய மாற்றங்கள். குறிப்பாய் வலையுலகம். 2007 ஆகஸ்டிலே பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நணபர்கள் கிடைத்தார்கள். மார்ச்சில் தமிழ்மணம் நட்சத்திரம் ஆனேன். சில இலக்கியவாதிகள் தொடர்பு கிடைத்தது. நின்றுவிட்டு வாசிப்பு மீண்டும் தொடங்கியது. ஐந்து வருடங்களால தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் வலையுலகம் தான்.

ஏழுவை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. புட்டிக்கதைகளுக்காக யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். ஹைதையை விட்டு சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்ற நினைத்தபோது சட்டென்று முடிவெடுக்க  நம்பிக்கை வந்ததற்கு காரணமும் இந்த அணுகுமுறைதான்.எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.

சென்ற ஆண்டில் பல முக்கிய பதிவர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள். யோசித்துப் பார்த்தேன். மொக்கைசாமி லேபிளில் மட்டும் 52 பதிவுகள். வலையுலகம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகளும் பெரும்பாலும் மொக்கைகளே. இந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த இடத்தில் விஜய். பொது வாழ்க்கைக்கு(?) வந்த பிறகு தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.

அதனால் இந்தப் புத்தாண்டில் ஒரு முடிவு எடுக்கலாமென்றிருக்கிறேன். வழக்கமாய் எல்லா புத்தாண்டுகளுக்கும் எந்த உறுதிமொழியும் எடுக்கக்கூடாது என்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். இந்த முறை உண்மையில் எடுக்கப் போகிறேன்.

சென்ற ஆண்டில் எனது மொக்கை உங்களை அதிகம் பாதித்ருந்தாலோ,

ஆணி புடுங்க வேண்டாம் என்ற கதையின் முடிவில்  டமாரென்று அடித்ததைப் போல் வேறு ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தாலோ,

வேட்டைக்காரன், வில்லு எனப் பதிவுகள் போட்டு உங்களை நோகடித்திருந்தாலோ,

ஜே.கே.ஆரின் மந்திரம் என உங்களை நசுக்கி இருந்தாலோ

கவிதைகள் என்ற பெயரில் உங்களை கொலை செய்ய முயன்றிருந்தாலோ

தயவு செய்து உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செஞ்சுக்கோங்க..ஏன்னா

 

 

 

 

இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன். அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். மொக்கைக்கு அந்தப் பக்கம்  இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது. சரிதானே சார்?

சாளரத்தின் வாசகர்கள் அனைவருக்கும்

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR

அடுத்தப் பதிவு திங்கிள்கிழமைதான். மூன்று நாட்கள் விடுமுறை. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக இதை சமர்ப்பிக்கிறேன்.என்ஜாய் மாடி

Dec 29, 2009

வலையுலக கவிஞர்கள் அதிர்ச்சி

38 கருத்துக்குத்து

 

    நேற்றைய பதிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த சில வலையுலக கவிஞர்கள் அது குறித்து ஒரு கலந்துரையாடல் செய்ததாக பி.டி.ஐ. செய்தி குறிப்பொன்று சொல்கிறது. உரையாடல்  கவிதைப் போட்டிக்காக அந்தக் கவிதைகளை பரிந்துரைக்காததைக் கண்டு அதன் அமைப்பாளர்களில் ஒருவரான சிவராமன் அதிர்ச்சி வெளிட்டுள்ளார். ரகசியமாக பதிவு செய்யப்பட்ட அந்த கலந்துரையாடல் உங்களுக்காக இதோ.

பைத்தியக்காரன் :  அருமையா எழுதி இருக்காரும்மா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் ஏன் போட்டிக்கு அனுப்பலன்னுதான் தெரியல

ஜ்யோவ்ராம் சுந்தர் : முதல் கவிதைக்கான தலைப்பை பாருங்க. ”உ”ன்னு வச்சிருக்கார். இதுல வாசகனுக்கு அவர் முழு சுதந்திரமும் தருகிறார். அதை உரையாடல் போட்டிக்கென்று படிக்கலாம். அந்த கடைசி வரியில் ஜென் சொன்னது உண்மை என்பதாகவும் நினைக்கலாம். அதை வாசகனின் ,முடிவுக்கே விட்டதைத்தான் நான் ரசிக்கிறேன். வாசகனின் அனுபவத்திற்கேற்ப எந்த தலைப்பும் வைத்து படிக்கலாம், பிரதி அனுமதிக்கும் எல்லைக்குட்பட்டு.

கேபிள் சங்கர்: ஆனால் சில வரிகள் புரியலையே. சொல்லுங்களேன் சுந்தர்ஜி

ஜ்.சுந்தர்: கவிதைக்கு அர்த்தம் சொல்லுவது போல் சள்ளை பிடித்த வேலை எதுவுமில்லை. இந்த எண்டர் கவிதை ஆட்களையெல்லாம் ஏன் சேர்த்துக் கொண்டீர்கள்?

பை.காரன் :சுந்தரின் வார்த்தையை கவனியுங்கள். முதல் கவிதைக்கான தலைப்பு என்னும்போது அது கவிதை என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். இதுவே கார்க்கிக்கு பெரிய வெற்றிதான். போலவே இரண்டாவதும் கவிதை என்பது அதே வரியின் மூலம் நாமறியலாம். அவருக்கு அது பிடிக்கவில்லை என்பது பெரிய விஷயல்ல. அதுவும் கவிதை என்பதை மட்டும் பதிவு செய்ய விழைகிறேன்.

கேபிள்: இருந்தாலும் யாராவது அர்த்தம் சொன்னால்..

அனுஜன்யா: கேபிள். முதல் கவிதையில் முதல் வரியைப் பாருங்கள். ”குட்டிச் சுவற்றை வளர்க்கும் நோக்கில்” என்கிறார். அதாவது அதன் மேல் இந்த நால்வரும் ஏறும்போது அந்த குட்டிச் சுவர் கூட பெருமை அடைகிறதாம். அந்த நால்வரையும் நாசுக்காக பெருமைப் படுத்தி சொல்கிறார் கவிஞர்.

பை.காரன்: இப்படியும் பார்க்கலாம் அனு. ஏற்கனவே குட்டிசுவர் கருங்கல்லால் ஆனது என்பதை புகைப்படத்தின் மூலம் பதிவு செய்த கவிஞர், அதன் மேல் நால்வரும் அமர்ந்து நாங்களும் கருங்கல்தான். எனவே சுவர் பெரியதாகிறது என்று சொல்வதாகவும் அர்த்தம் வருகிறது.

ஜ்.சுந்தர்: இதைத்தான் சொல்கிறேன். வாசகன் புத்திசாலி என்றால் அனு சொன்னது போல். வாசகன் கல்லு என்றால் இரண்டாவது. வாவ்!!Fantastic

கேபிள்: கடந்து செல்லும் எல்லோருக்கும் மதிப்பெண் போடுவது எதற்கு?

அனுஜன்யா: முதல் வரிகளில் நால்வரின் பெருமையை சொன்ன படைப்பாளி, இங்கே அந்தச் சுவற்றின் பெருமையை சொல்கிறார். அதாவது பாஸாகவே தடுமாறிய மாணவர்கள், இந்தச் சுவற்றை அடைந்தவுடன் ஆசிரியர் ஆகும் அளவிற்கு அறிவாளி ஆவதாக குறிப்பிடுகிறார் கவிஞர். என்ன ஒரு சொல்லாடல்!!!

பை.காரன்: ஆமோதிக்கிறேன்

கேபிள்: அவர் காதலியை கண்டதும் கீழே குதிப்பதாக சொல்கிறாரே. அப்படியென்றால் காதலித்தால் விழுந்துவிடுவோம் என்கிறாரா?

அனுஜன்யா: ஒரு பெண்ணிடத்தில் விழுந்துவிடுவதுதானே காதல்?

பை.க்காரன்: அப்படி மட்டும் இல்லை. கல்லின் மேல் இருக்கும் போது ஆசிரியர் ஆன நண்பர், கீழே குதிக்கும் போது ஜென் குருவாகவே ஆகிவிடுகிறார். இது எப்படி சாத்தியம்? யோசிக்க வேண்டும். காதலில் விழுந்தவரை அருகில் இருந்து பார்க்கிறார். யோசிக்கிறார். ஜென்னாக மாறுகிறார்.ஆனால் காதலிப்பவரோ ஜென்னாக மாறவில்லை எனக் குறிப்பால் உணர்த்துகிறார் கவிஞர். இதன் அர்த்தம், அனுபவம் என்பது நாம் அனுபவித்துதான் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்பதில்லை. உலகை உற்றுப் பார்க்க வேண்டுமென்கிறார். என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை?

ஜ்.சுந்தர்: நகுலனின் பல கவிதைகளில் இந்தக் கூறுகளை நாம் காண முடியும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது கவிதை.

கேபிள்: எனக்கும் ஒன்று தோன்றுகிறது. தரையில் இருந்தவன் சுவரின் மேலேறுகிறான். மீண்டும் தரைக்கே வருகிறான். வாழ்க்கை ஒரு வட்டம் என்று திருமலையில் விஜய் சொன்னதை கவிதையினூடே சொல்லி தான் ஒரு விஜய் ரசிகன் என்பதை சொல்ல வருகிறார்.

அனுஜன்யா: கொஞ்சம் அமைதியா இருங்க. இல்லைன்னா சட்டையில் இருக்கும்  பட்டனை தட்டிட்டே இருங்க.

பை.காரன்: இதை ஏன் அவர் உரையாடல் போட்டிக்கு.

அனுஜன்யா: இல்லை சிவா. கவனியுங்கள். நண்பர்கள் இடையே நடந்த உரையாடல்தான் இரண்டு கவிதைகளிலும் முக்கிய கரு. உரையாடல் கவிதைப் போட்டிக்கு என்பதை இதை விட சிறப்பாய் எப்படி உணர்த்த முடியும்? பாருங்கள். இது முதலில் படிக்கும் போது தெரியவில்லை நமக்கு.

ஜ்.சுந்தர்: அடுத்ததைப் பாருங்கள். பிள்ளையாருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஒரு சாராரும், இல்லையென்று ஒரு சாராரும் சொல்ல, கவிஞர் அவருக்கு திருமணத்தோடு ஒரு மகளையும் கொடுத்து கடைசியில் மருமகனையும் தருகிறார். இது எப்பேற்பட்ட கட்டுடைப்பு? அசாத்திய துணிச்சல் தேவை இதற்கு

இப்படி செல்லும் அந்த கலந்துரையாடலின் முழு வடிவம் இன்னும் கிடைக்கவில்லை. இன்னமும் அது தொடர்வதாக சமீபத்தில் வந்தச் செய்தி ஒன்று சொல்கிறது.

ஜென் குருவும், பிள்ளையார் மாமாவும்

33 கருத்துக்குத்து

 

       

தெருமுனை குட்டிச்சுவரை

வளர்த்துவிடும் நோக்கில்shortwall

நால்வர் குழு மேலேறி அமர்ந்தோம்

கடந்து செல்லும் எல்லோருக்கும்

மதிப்பெண் போட்டு

ஆசிரியர் சேவை செய்துக்கொண்டிருந்தோம்.

நீ

கடந்த போது கலவரப்பட்ட நான்

தொப்பென கீழே குதித்தேன்.

உடனிறங்கிய மற்றொரு ஆசிரியர்

ஜென் குருவாகவே மாறிப் போய் சொன்னார்

“இதுவும் கடந்து போகும் மச்சி”

********************************************************************************************************************

    

இப்போதெல்லாம்

பால் குடிப்பதில்லை

என்பதாலோ என்னவோ

ரயில்வேகேட் பிள்ளையாருக்கு

ஓப்பனிங் சரியில்லை.

அவ்வழியே சென்றபோது

உள்நுழைந்த என்னை

“என்னடா மச்சி”

என்றார்கள் நண்பர்கள்.

“பிள்ளையார் மாமா காப்பாத்து”

என்றதை கேலி செய்தவர்களுக்கு

எப்படித் தெரியும்

முன்தினம் தான்

“பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா”

என்று நீ வேண்டியது.

Dec 28, 2009

புதிர் விடைகளும் சிம்புவின் சுக்ர திசையும்

26 கருத்துக்குத்து

இதுவரை ஒருவர் மட்டுமே ஏழு கேள்விகளுக்கு சரியான பதில் எழுதி இருக்கிறார். அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கிறது கம்பேனீஈஈஈஈஈஈஈஈ.

வாழ்த்துகள் தமிழ்ப்பறவை.

*******************************************

1) தளபதியின் ஆள் இவர். ஆனால் தல இவரை தினமும் கொஞ்சுகிறார். யார் இவர்?

அனுஷ்கா. அஜித் மகளின் பெயர் இதுதான்.

2) மழை இப்படி பெய்தால் தான் சூர்யாவுக்கு பிடிக்கிறதாம். எப்படி?

”ஜோ”ன்னு மழை பெஞ்சாத்தானே சூர்யாவுக்கு பிடிக்கும்?

3) தனது பெயரின் முதல் பாதியை சிவாஜியின் முக்கிய ஐட்டத்தையும், பின் பாதியில் தனது சொந்த ஊர் தொடர்பான ஐட்டத்தையும் வைத்திருக்க்கிறார். யார் இவர்?

விக்ரம்…  சிவாஜியும் ”விக்”கும் கார்க்கியும் மொக்கையும் மாதிரி இல்லையா? அவர் ஊர் பரமக்குடி. அதான் ”ரம்”

4) பசங்க சில பேர் நடிச்ச படத்தில் இவரும் ஒருவர். படம் ஊத்திக் கொண்டாலும் அதிகம் ஆடியவர். இவருக்கு முதன் முதலில் பெயர் வாங்கித் தந்த படத்தையே சமீபத்தில்தான் பார்த்தாராம். யார் இவர்?

BOYZ படத்தில் நடித்த பரத். நல்லாத்தானே ஆடினார் அந்தப் படத்தில்!!! அவருக்கு பேர் வாங்கித் தந்த முதல் படம் “காதல்”. சமீபத்திய படம் “கண்டேன் காதலை”. க்ளூ சரியா?

5) குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கினாலும் போர்வையே இனி எனக்கு வேண்டாமென்று சொல்ல மாட்டார் அஜித். ஏன்?

குளிருக்கு ஷால் போர்த்திப்பாங்க இல்லையா? கோடை வந்தடுச்சுன்னு “ஷால்”இனி வேணாம்ன்னு சொல்லுவாரா தல?

6) நயன்தாரா வரிசையில் இடம்பிடித்தவர் என்றாலும் த்ரிஷாவுக்கும் இவருக்கும் கூட முடிவில் ஒற்றுமை உண்டு. . இவரது பெயரும் பிரபல ஒளிப்பதிவாளரின் பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அவரது கேமராவில் அடங்காத அளவுக்கு வளர்ச்சி கண்ட இந்த நடிகை யார்?

நயன்தாரா வரிசையில் நைண்ட்டிதாரா என்று இடம் பிடித்தவர். திரிஷாவின் கடைசி எழுத்தும் இவரின் கடைசி எழுத்தும் ஷா. அந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. அடங்காத வளர்ச்சி கண்ட நிரோஷா தான் அவர். அவரின் பெயரிலே இன்னொரு க்ளு கொடுக்க நினைத்தேன். கிகிகி

7) உலக நாயகனின் ஓடாத ரத்த ஆற்றில் முக்கிய பங்கு வகித்தவர் என்றாலும் இவர் திரைத்துறைக்கு வந்தது என்னவோ 2002ல்தான். பயணத்தைத் தினம் தினம் ரசிக்கும் இவரின் அடுத்த வெளியீடு விரைவில். யார் இவர்?

ஓடாத ரத்த ஆறு என்றால் குருதிபுனல். அது ஓடாத படம்தானே? அதில் “ஆப்ரேஷன் தனுஷ்” முக்கியமான விஷயம். ஆனால் இவர் நடித்த முதல் படம் வெளிவந்தது 2002ல். இவரது மகனின் பெயர் யாத்ரா. யாத்ராவுக்கு தம்பியோ தங்கையோ விரைவில் வரப் போகிறது. தனுஷ் தான் அவர்

8) காற்றில் பரவும் வஸ்துவால் உலக புகழ்பெற்றவர். காற்றையே தனது முதலெழுத்தாக கொண்டாலும், நான் என்ற அகந்த இல்லாதவர் என்பதை காட்ட அதை மட்டும் அழித்துவிட்டார் போலும். யார் இவர்?

காற்றில பரவும் இசை. காற்று என்றால் AIR. I என்றால் நான். அதை நீக்கிவிட்டால் A R. இனியும் யாரென்று சொல்ல வேண்டுமா?

*******************************

ஏ.ஆர். என்றவுடன் இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இசை லண்டனில் கடந்த 19ஆம்தேதி வெளியிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் எங்கேயும் இசைத்தட்டு கிடைக்கவில்லை. அப்படியென்றால் அன்று நடந்த நிகழ்ச்சி எதற்கு என்று புரியவில்லை. அதெல்லாம் விடுங்க. பிபிசியில் ரகுமானின் பேட்டி ஒளிபரப்பப்பட்ட போது 30 செகண்ட் ஹொசன்னா என்ற பாடலையும் காட்டினார்கள்.

என்ன சொல்றது? வார்த்தையே வரலை. சிம்புவுக்கு சுக்ர திசை சூ,,ப்பரா அடிக்குது..எப்படா சிடி வருமென்று ஏங்க வைக்கும் பாடல்.

Dec 27, 2009

புதிர்கள்- ஜெயிப்பவருக்கு புத்தகம் பரிசு

32 கருத்துக்குத்து

 

புதிர்கள் மூளைக்கு வேலை தருகிறதாம். புதிர் போடுபவர்களுக்கா பதில் தேடுபவர்களுக்கா என்பதையெல்லாம் ஓரமாக வைப்போம்.  இங்கே இருக்கும் புதிருக்கான அனைத்து விடைகளையும் சரியாக சொல்லும் மூன்று பேருக்கு இந்த வருட புத்தக கண்காட்சியில் தலா ஒரு புத்தகம் பரிசாக வாங்கித் தரப்படும். நடுவரின் (நான் தாம்ப்பா) தீர்ப்பே இறுதியானது. விடையை மட்டும் சொன்னால் போதாது. கேள்வியில் இருக்கும் க்ளுக்கள் எப்படி பொருந்துகிறது என்பதை விளக்கவும் வேண்டும். விடைகளை பல பின்னூட்டங்களில் சொல்பவர்கள், கடைசியில் தொகுத்து மொத்தமாக ஒரு பின்னூட்டம் போட்டால் வசதியாக இருக்கும். ஸ்டார்ட் மீஸீக்.

1) தளபதியின் ஆள் இவர். ஆனால் தல இவரை தினமும் கொஞ்சுகிறார். யார் இவர்?

2) மழை இப்படி பெய்தால் தான் சூர்யாவுக்கு பிடிக்கிறதாம். எப்படி?

3) தனது பெயரின் முதல் பாதியை சிவாஜியின் முக்கிய ஐட்டத்தையும், பின் பாதியில் தனது சொந்த ஊர் தொடர்பான ஐட்டத்தையும் வைத்திருக்க்கிறார். யார் இவர்?

4) பசங்க சில பேர் நடிச்ச படத்தில் இவரும் ஒருவர். படம் ஊத்திக் கொண்டாலும் அதிகம் ஆடியவர். இவருக்கு முதன் முதலில் பெயர் வாங்கித் தந்த படத்தையே சமீபத்தில்தான் பார்த்தாராம். யார் இவர்?

5) குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கினாலும் போர்வையே இனி எனக்கு வேண்டாமென்று சொல்ல மாட்டார் அஜித். ஏன்?

6) நயன்தாரா வரிசையில் இடம்பிடித்தவர் என்றாலும் த்ரிஷாவுக்கும் இவருக்கும் கூட முடிவில் ஒற்றுமை உண்டு. . இவரது பெயரும் பிரபல ஒளிப்பதிவாளரின் பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அவரது கேமராவில் அடங்காத அளவுக்கு வளர்ச்சி கண்ட இந்த நடிகை யார்?

7) உலக நாயகனின் ஓடாத ரத்த ஆற்றில் முக்கிய பங்கு வகித்தவர் என்றாலும் இவர் திரைத்துறைக்கு வந்தது என்னவோ 2002ல்தான். பயணத்தைத் தினம் தினம் ரசிக்கும் இவரின் அடுத்த வெளியீடு விரைவில். யார் இவர்?

8) காற்றில் பரவும் வஸ்துவால் உலக புகழ்பெற்றவர். காற்றையே தனது முதலெழுத்தாக கொண்டாலும், நான் என்ற அகந்தை இல்லாதவர் என்பதை காட்ட அதை மட்டும் அழித்துவிட்டார் போலும். யார் இவர்?

Dec 26, 2009

இலக்கிய அரங்கில் சில கைப்புள்ளைகள்

52 கருத்துக்குத்து

 

நேற்று மாலை உயிர்மையின் நூல் வெளியீட்டு அரங்கிற்கு(அப்படித்தான் சொல்றாங்க) செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 12 நூல்கள், 11 படைப்பாளிகள். இது போன்ற இலக்கிய கூட்டத்திற்கு நான் சென்றதில்லை. ஒரு ஆர்வத்தில், அதீத ஆசையோடும் எதிர்பார்ப்புகளோடும் சென்றேன். பிரபஞ்சன், ஞானக்கூத்தன் எனப் பலரையும் பார்க்கும் ஆர்வமும் இருந்தது. அரங்கினுள்ளே நுழையும் போதே ஒரு வித பதட்டோத்தோடு சென்றேன். நமக்கென்ன இங்கே வேலை என்பதால் இருக்கலாம். வழக்கம்போல் பதிவர்களிடம் உரையாடிவிட்டு லக்கி,அதிஷா,நர்சிம்,ஆதி,சிவராமன் என சுற்றிலும் பதிவர்கள் சூழ அமர்ந்துக் கொண்டேன்.

சொன்ன நேரத்தில் தொடங்கி என்னை ஆச்சரியப்படுத்தினார்கள். பிரபஞ்சனைத் தவிர மற்ற அனைவரும் நேரத்திற்கு வந்ததையே பெரிய விஷயமாக நினைத்தேன்.இலக்கிய வாசனை இனிமேல் நமக்கு ஒட்டுமென்ற என் எண்ணம் மேலும் உறுதியானது. முதலில் தலைமை தாங்கிய தினமணி ஆசிரியர் பேசினார். சரி.தலைவர் என்பதால் இப்படி பேசுகிறார். படைப்பாளிகள் பேசினால் எதிர்பார்த்தது கிடைக்கும் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம் நானும் ஆதியும்.முதலில் சுகுமாறன் என்பவர் தமிழ்நதியின் குறுநாவலைப் பற்றி விமர்சனம் செய்தார். எனக்கு அவர் பேச்சு பிடித்திருந்தது. அடுத்த முறை அழுத்தமாக படைக்க வேண்டுமென்ற அவரின் கடைசி வரி நாவலைப் பற்றி பறைசாற்றியது. அருகிலிருந்த ஆதி ”சுகுமாறன் ****” என்று எழுதினார். நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும் நாலுஸ்டார் அதிகமென்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்து வந்தார் நேற்றைய ஆட்ட நாயகன்  தேவேந்திர பூபதி. லட்சுமி ***(அடுத்த பெயர் தெரியவில்லை) என்பவரது சிறுகதை தொகுப்பை விமர்சனம் செய்தார். லட்சுமி மதுரை, அவர் அண்ணனும் மதுரை, அவர் அப்பாவும் மதுரை, அவர் தாத்தாவும் மதுரை…….. நானும் மதுரை. அதனால் இவரைக் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இன்னும் ஏதேதோ ஒரு வரைமுறையே இல்லாமல், அட ஒரு கமா ஃபுல்ஸ்டாப் கூட இல்லாமல் உளறியவரின் சாராம்சம் “அடுத்த தொகுப்பில் எந்தக் கதையும் இந்த 13ஐ போல் இருக்ககூடாது” என்பதே. அதாவது இந்த தொகுப்பு குப்பை. பேனாவை எடுத்தார் ஆதி. இவருக்கு ***** என்று குறித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் கையெடுத்த பின் தான் தலைப்பு தெரிந்தது. “Mr.Mokkai”

அடுத்து யாரோ பேசினார்கள். அதை விட்டுவிடுவோம். உமாஷக்தியின் கவிதைத் தொகுப்பை இயக்குனர் அறிவழகன் விமர்சனம் செய்தார். வழக்கம் போல் தனது ஈரம் படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் இன்னும் பல ”கள்”கள் பாராட்டியதைப் பற்றி பேசிவிட்டு கவிதைக்கு வந்தார். அவர் அந்தக் கவிதையை சொல்லி சொல்லி விமர்சித்த பாங்கை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார் அந்த புதிய எழுத்தாளர். “சகா. ஹோட்டல்ல ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பொங்கல்ன்னு சொல்ற மாதிரியே கவிதையை சொல்றார் பாருங்க” என்று அவர் சொன்ன போது அவர் வியந்ததற்கான காரணம் அறிந்து வியந்தேன். ஆதி பக்கம் திரும்பினால் “அச்சச்சோ. அதிகபட்சம் அஞ்சு ஸ்டார்தானே” என்று கவலைக் கொண்டார்.

அடுத்த படைப்பாளி விஜய். முழுபெயரும் சொல்லும் முன்னர்  ஒரு காட்சி. அந்த குளிரூட்டப்பட்ட அறையின் கதவுக்கு வெகு அருகில்,ஆனால் வெளியே நின்று புகைக்க ஆரம்பித்தார் அந்த 31 வயது இளைஞர். வெகுண்டெழுந்த ஒரு காமன்மேன்  ”படிச்சு என்ன சார் கிழிக்கிறீங்க. லைப்ரரில, பொது இடத்துல பிடிக்கிறீங்க வெட்கமா இல்லை” என சொன்னதோடு மட்டுமல்லாமல் எல்லா துண்டு சிகரெட்களையும், குப்பைகளையும் எடுக்கத் தொடங்கினார். அவர் மனைவி அதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார். வேண்டாமென்று அவரைத் தடுக்கவில்லை. இந்த இளைஞர் அந்த காமன்மேனை திட்டிக் கொண்டே கீழிறங்கி சென்றார், ஏறிவிட்ட தனது டென்ஷனை ஊதித் தள்ள. அந்த இளைஞரின் பெயர் விஜய மகேந்திரன். அவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பும் நேற்று வெளியிடப்பட்டது. விமர்சிக்க வந்த பாரதி மணி அவர்கள் “இனி வருபவர்கள் இலக்கியத்தைப் பற்றி பேசுவார்கள். கேட்போம்” என்று சென்றுவிட்டார்.செருப்பால் அடித்தது போன்று இருந்தது.

அருகிலிருந்த சகாவுக்கு அழைப்பு வந்தது. “எப்படிய்யா அங்க உட்கார்ந்திருக்கீங்க?” என்றார் அந்த பிரபல எழுத்தாளர். வெளியே சென்றுவிட்டார் போலும். நாங்களும் வெளியே வந்தோம். ”வானிலிருக்கும் நட்சத்திரங்களை மட்டுமல்ல, நான் போட்ட நட்சத்திரங்களையும் எண்ண முடியலையே” என்று வருத்தப்பட்டார் ஆதி. மீண்டும் உள்ளே வந்த போது ஞானக்கூத்தன் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்செல்வன் பேசினார். மிகவும் நன்றாக இருந்தது. அடுத்ததாக எங்கிருந்தோ மேடைக்கு வந்தார் சாரு நிவேதிதா. நான் கிளம்பறேன் சகா என்றவனை இழுத்து பிடித்தார். பிடித்தது சனியன் என்று சொல்ல முடியவில்லை,சகாவின் பிடியில் இருந்ததால்.

திருமண மேடையில் கூட்டணியை உடைக்கும் அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவரல்ல என்று நிரூபித்தார் சாரு. வழக்கம்போல கேரளபுராணம் இத்யாதிகளும் இருந்தன. முடிக்கும் வரை அவர் விமர்சிக்க வேண்டிய புத்தகம் பற்றி ஒரு வரி கூட பேசவில்லை. ஞானியில் தொடங்கி ஜெயமோகன், தமிழ்ச்செல்வன், கமல், வேட்டைக்காரன் என அனைவரையும் துவம்சம் செய்தார். பிச்சை எடுத்து சாப்பிடுகிறேன் என்று காலரைத் தூக்கிவிடும் சாரு, வேட்டைக்காரன் டிக்கெட் வாங்க பிச்சைப் போட்டவருக்கு நரகம்தான் என்று சாபமிட்டிருக்கக்கூடும். அந்த பொன்னான மூன்று மணி நேரத்தில் பாலஸ்தீன கவிஞர் பனியனோ ஜட்டியோவைப் படித்திருக்கலாமே!! உங்களுக்கு அங்க என்னங்க வேலை?

   ஜெயமோகன் எழுதிய குப்பையைப் படித்துக் காட்டியவர், அந்த குப்பையை பிரசுரித்த ஆசிரியரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.ஜெயமோகன் எழுதியது சரியா தவறா என்பது இருக்கட்டும். அதை எழுதவிட்டு,அதை அவரது பத்திரிக்கையிலே பிரசுரித்துவிட்டு  வேடிக்கைப் பார்க்கும் மனுஷ்யபுத்திரன் அவர்களின் நியாயம் எனக்கு புரியவில்லை. சாருவை புறக்கணிப்பதுதான் சரியென்று நான் முடிவெடுத்து அவர் வலைப்பக்கமே நான் போவதில்லை. இது போல எங்கேயாவது தென்படும் விஷயங்களும் அவர் மீதான கோவத்தை அதிகப்படுத்துவதாகவே அமைகிறது. இணையத்தில் அவர் ஒதுக்கப்படுகிறார் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் கீழே.

சென்ற திசம்பர் 15ல் நான் எழுதிய பதிவு. இதன்படி அவரது அப்போதைய ஹிட்ஸ் 513595. அப்போது அவரது தளத்திற்கு தினமும் 10000 ஹிட்ஸ் வருவதாக விளம்பரம் செய்திருந்தார். அப்படியென்றால் மாதத்திற்கு 3லட்சம். ஆண்டிற்கு 36 லட்சம். அதனோடு அந்த 5 லட்சத்தைக் கூட்டினால் 41லட்சம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய ஹிட்ஸ் 22 லட்சம். அதாவது கிட்டத்தட்ட 50% குறைவு.இணையத்தில் படிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்க இவருக்கு மட்டும் ஏன் குறைகிறது? என்னைப் போன்று பலரும் சாருவை ஒதுக்கிவைத்ததுதான் காரணம். இது புரியாமல் இவரது புத்தக நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஆயிரம், லட்சம் என்பதெல்லாம் பிரியாணி கணக்காக இருக்கும். அதற்கும் யார் அருள் புரிந்தார்களோ?

நேற்றைய நிகழ்வு ஒன்றை மட்டும் சொல்லியது எனக்கு. எதையும் நேரிடையாக அணுகாமல் நமக்குள்ளே பிம்பம் அமைக்கக்கூடாது. இலக்கியத்தை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டம்தான் இது. ரிலையண்சுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை. இவர்களால் தமிழ் இலக்கியம் இம்மியளவும் உயரப்போவதில்லை. கரைவேட்டி கட்டிக் கொள்ளாத கட்சிக்காரர்கள். அவ்வளவே!!!

Dec 23, 2009

கார்க்கியின் காக்டெயில்

51 கருத்துக்குத்து

 

  இந்த வருடம் தமிழ்மண விருதுகள் சீக்கிரமே அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. நாமளும் களத்தில் இறங்கியாச்சு. பிராச்சரத்தை இன்று இனிதே தொடங்கி இன்றே முடித்துவிடலாமென முடிவு செய்திருக்கிறேன். படைப்பிலக்கியம் பிரிவில் ”நிச்சயிக்கப்பட்ட சொர்க்கம்” என்ற பதிவையும், நகைச்சுவை பிரிவில் சூப்பர்ட் ஹிட்டடித்த “சூரியன் எஃப்.எம்மில் ஏழு”வையும் நாமினேட் செய்திருக்கிறேன். பார்த்து செய்ங்க. இது இடை தேர்தல் அல்ல. அதனால் எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. வேண்டுமென்றால் வாரம் ஒரு புட்டிக்கதை, விஜய் பற்றிய பதிவுகளுக்கு முழுவிலக்கு போன்ற வாக்குறுதிகள் தருகிறேன்.

*****************************************************************************************************************

நேற்று யூ.எஸ் கிளம்பிவிட்டான் பப்லு. அரையாண்டு விடுமுறைக்கும் பொங்கல் விடுமுறைக்கும் இடையே இருந்த கேப்பை நிரப்பி தம்பி ஹார்ட்ஃபோர்டுக்கு பறந்துவிட்டார். செம பனியாம். சென்ற வாரம் டாக்டர் அவனுக்கு இரும்பு சத்துக்காக டானிக் கொடுத்தது நினைவிருக்கிறதா? உள்ளே இருக்கும் இரும்பால் மெட்டல் டிடெக்டர் சத்தம் போட்டு இவனை அரெஸ்ட் செஞ்சிடுவாங்கனு ஒரே கவலையா இருந்தான். போய் சேர்ந்து ஃபோன் செய்தால்தான் தெரியும் நடந்த கூத்து.

*****************************************************************************************************************

ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்தீர்களா நேற்று? இல்லையென்றால் ஒரு அருமையான பரவசத்தை இழந்துவிட்டீர்கள். ரோஷனும், அல்காவும் ஒருலட்ச ரூபாய்க்காக ரேபிட் ஃபையர் ரவுண்டில் பாடினார்கள். ரோஷன் காற்றின் மொழி, உயிரே உயிரே என மென்மையாய் தொடங்கி வான் நிலா நிலா அல்ல என்று அதிரடியாய் முடித்தார். அல்கா வெள்ளி மலரேவில் தொடங்கி உதயா உதயாவென ஆகி, என்னுடையா ஃபேவரிட் பாடலான கண்ணன் வந்து பாடுகிறானில் முடித்தார். வாவ்!!! நான் அடிக்கடி “வாய்ப்புகளே இல்லை” என்று சொல்வேன். என்னடா அது என்பார் அம்மா. நேற்று சொன்னேன் இதுதாம்மா அது. அல்காவுக்கு ஃபினிஷிங் கொஞ்சம் சரியில்லை. என்னுடைய சாய்ஸ் ரோஷன். இந்த வயதில் உயிரே பாடலை ஜஸ்ட் லைக் தட் பாடிகிறார். ஒரு முறை ரோஷனிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் போலிருக்கிறது.

ரோஷனின் சில அட்டகாசங்கள்

http://www.youtube.com/watch?v=ktVWC86CFCk

http://www.youtube.com/watch?v=jcrZLQxllmc

*****************************************************************************************************************Scan12242009_101711

   ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறுகிறது. ஆம். விகடனில் எனது கவிதை ஒன்று வெளிவந்திருக்கிறது. குங்குமத்தில் ஏற்கனவே ஒரு முறை வந்திருந்தாலும் அது பிளாக் அறிமுகம் என்பதாக இருந்தது. இரண்டிலும் பிரசுரமானது கவிதை என்பது கூடுதல் சிறப்பு. இதற்காக பின்னூட்டங்களில் என்னை கவிஞர்.கார்க்கி என்று அழைப்பதை அறவே வெறுக்கிறேன்.

மேலும் ஜெனோவா, ராஜா சந்திரசேகர் அவர்களின் கவிதையும் வந்திருக்கிறது

 

*****************************************************************************************************************

ஹைக்கூ எழுதுவது பற்றி பலரும் பல விதமாக பேசறாங்களே. எனக்கு சொல்லி தாயேன் கார்க்கி என்றான் நண்பன். துள்ளி எழுந்த நான் அவனுக்கு விளக்கினேன். ஹைக்கூ என்பது மூனு வரி இருக்கணும் மச்சி. கடைசி வரி இல்லாமல் படித்தால் முதல் இரண்டு வரிகள் அர்த்தம் வரக்கூடாது என்றேன்.

புரியலையே மச்சி  என்றவன் உதாரணம் கேட்டான்.

ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மாலில் கதவுக்கு அங்கிட்டு அவள், இங்கிட்டு நான். உடனே சொன்னேன் ஒரு ஹைக்கூ.

அவள் கைவிட்டாள்

நான் கைப்பிடித்தேன்

கதவில் கைப்பிடி.

கடைசி வரி இல்லாமல் படித்தால் அர்த்தம் வரவில்லைதானே? அப்போ இது ஹைக்கூதானே?.பின்னூட்டங்களில் ஹைக்குவுக்கு விளக்கம் கொடுக்காதிங்கப்பா. இது மொக்கை.

*****************************************************************************************************************

நண்பன் ஒருவன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை சில பி.பி.ஓக்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பினேன். வேலை கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.

மச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.

கலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி?

ஆல்செக்(Allsec) BPO டா.

எல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த?

என்னைத் திட்டவும் முடியாமல், பதில் சொல்லவும் முடியாமல் வைத்துவிட்டான்

Dec 22, 2009

சோடா விக்கும் சொக்க தங்கமே

46 கருத்துக்குத்து

 

   திருவல்லிக்கேனி மேன்ஷன். கோவையில் பிறந்தவர் என்றாலும் சென்னை செந்தமிழில் பட்டையைக் கிளப்பும் அதிஷாவும், காதல் பித்தன் எம்.எஸ்.கேவும், பின்நவீனத்துவ பீரங்கி அனுஜன்யாவும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். எதிர்த்துக் கடை ஃபிகரை யார் கரெக்ட் பண்ணுவது என்ற மோதல் நடந்துக் கொண்டிருந்தது.

அதிஷா: இன்னா நைனா? யாரான்டா பிலிம் காட்டற? அவ என் டாவு.

எம்.எஸ்.கே: அன்பை சுமந்துக் கொன்டு வாழ்பவன் நான். அவள் அன்பின் மொத்த உருவம்

அனுஜன்யா: விழியின் வழியில் மொழியின் சுழலில் வழியும் கவிதை அவள். மழலை சிரிப்பும் அழகின் பிறப்பும் அவளின் இடத்தில்.

அதிஷா: இன்னா எழவோ? இன்னொரு தபா அவளப் பத்தி இப்டித் தப்புத் தப்பா பேசின.. மவனே கீசிடுவேன்

எம்.எஸ்.கே: என்ன மனிதர்கள் இவர்கள்? அமிழ்த்துகிற காதலைத் தாண்டி வெளியே வரத் துடிக்கும் பந்து நான். என்னை உதைத்தத் தள்ளத் துடிக்கும் கட்டை நீங்கள்.

அதிஷா: மவனே அப்டியே கட்டையால அட்ச்சேன் வை. வாயி வெத்தலப்பாக்கு போட்டுக்கும். இன்னாடா பெர்சா சொல்ட்ட நீ? அவள பத்தி நான் சொல்றேன் கேளு.

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

எம்.எஸ்.கே: குவளைக்குள் அடைத்து வைக்கப்பட்ட

வெறும் நீரென என் காதலை எண்ணிவிடாதே

உள்ளுக்குள் வெடிக்க தயாராயிருக்கும்

வாயுவைப் போன்றது அது

அனுஜன்யா: விடலைகளின் பார்வைகளால்
நிராகரிக்கப்பட்ட பெண்ணொன்று
அண்டைவீட்டு சாளரத்திலிருந்து
தஞ்சமடைந்தது என்னிடம்;
விலக மறுத்த முகம்
கவரவில்லையெனினும்
இலயிக்கத்துவங்கியது மனம்

அதிஷா : தபாரு. முட்ஞ்சா தமில்ல சொல்லு. இல்லீன்னா போய்ட்டே இரு..உன் மூஞ்சில என் லெஃப்ட் ஹேண்ட வைக்க.

அனுஜன்யா: உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;

அதிஷா: எப்பிதான் ஒரு அர்த்தமும் இல்லாம பாரா பாராவ எய்தி தள்றியோ நீ. போட்டி மாமு. அவ அய்க பத்தி மூனு பேரும் பாடுவோம். யார்து சோக்கா கீதுனு அவ்ளே சொல்ட்டும். டீலூ ஓக்ககேவா?

எம்.எஸ்.கே: நான் தயார், என் கவிதையை கேளுங்கள்

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

அதிஷா: இன்னா நைனா இது? நீ வேலைக்காவ மாட்ட. இத்த கேளு.

மச்சான் பாடப் போறேன் கானா

உன்க்கு மத்ததெல்லாம் வேனா

உன் லிப்ஸ்தான் உனக்கு பேனா

அதுல இங்க் என்ன ஸ்பெஷல் தேனா?

எம்.எஸ்.கே: ம்ஹூம். சார் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க.

அனுஜன்யா: ரகசியங்கள் கட்டவிழ்க்கும்
தருணங்கள் வந்துவிட்டதென்றாள்
விகாரமாயிருப்பினும்
பின்னாட்களின் நிம்மதி நிமித்தம்
அவள் இறக்கிவிட்ட பாரங்கள்
பெரும் பொருட்டல்லவெனினும்
தைரியத்தின் உச்சகட்டமாக
அவள் பார்த்தவைகள் என்னளவில்
சுயநலங்களும் சாகசங்களில்
விருப்பமின்மையும் மட்டுமே

அதிஷா: தபாரு. நீயும் நானும் ரவுடி ரேஞ்சுக்கு யூத்னு சொல்ட்டு திரியற. கவிதையும் என்ன மாதிரி ஷோக்கா எழுத தெர்ல. டீசண்ட்டா ஒதுங்கிக்கோ. இன்னா நான் சொல்றது?

அனுஜன்யா:

பேச்சுக்குமிழியின்
முட்டைகளுடைத்தவனுக்கு
எனது முத்தங்கள்
திரையின் பின்னாலிருந்து
மொழியுமிழ்தலென்பது
சுய புணர்வையொத்தது
பேச்சுக்களற்ற வெளி அபாயகரமானதென
எவன் சொன்னது
மெளனங்களின் உன்னதங்கள்
கலவியின் கூட்டினை திறக்கவல்லது...

அதிஷா : சாமீ.. எனக்கு அந்தப் பொண்ணும் வோணாம். இவனும் வோணாம். இப்டியே சாவடிச்சிடுவான்.

எம்.எஸ்.கே: நாமிருவரும்
சேர்ந்து நனைவதற்காகவே
இன்னும் சில
அழகான மழைகள்
மேகங்களுக்குள்ளேயே காத்திருக்கின்றன.
சீக்கிரம் வா..
-0-
ஆனால் எதிர்ப்பார்ப்புகளேதுமின்றி வா..
உனக்கென்று கொடுக்க
என்னிடம் இருப்பதெல்லாம்
அளவற்ற நேசமும்
குறைவற்ற முத்தங்களும் மட்டுமே.

அதிஷா: இது கொஞ்சம் சுமார்ப்பா. நீ காம்பெடிஷன்ல கீற. ஆனா அவன அடிச்சு துரத்திடு. இன்னொரு தபா என் கண்ல பட்டான் மவனே டாராந்துடுவான்.

இருவரின் கவிதயைப் படித்த சோடக் கடை ஃபிகர்,

சோடா விக்கும் சொக்க தங்கமே ‍- கோலி

சோடா விக்கும் சொக்க தங்கமே

என்னை நீ பார்த்தாலே விக்குமே

பாழா போன மனசுக்கு வலிக்குமே

சொன்னா சொன்னா கேளு

இனிமே நீ என்னோட ஆளு

பாடலை தேர்வு செய்து விட, அதிஷா ஆனந்தக் கூத்தாடுகிறார். வழக்கம் போல சோக கவிதை எழுதுகிறார் எம்.எஸ்.கே

Dec 21, 2009

ஏழுவும் கெமிஸ்ட்ரி மேடமும்

63 கருத்துக்குத்து

 

மு.கு: புட்டிக்கதைகள் எழுதி வெகு நாட்களாகிவிட்டது. புதிதாய் படிக்க வந்திருப்பவர்கள் இங்கே சென்று ஏழுவைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

*********************************************************************************************************

கடைசி வருடத்திற்கு வந்துவிட்டாலும் கெமிஸ்ட்ரி பிராக்டிக்கல்ஸை மட்டும் க்ளியர் செய்யாமலே இருந்தான் ஏழு. தேர்வுக்கு சென்றிருந்தாலே பாஸ் செய்திருப்பான். இந்த முறையாவது அவனை இழுத்துக் கொண்டு போக வேண்டுமென்று நினைத்தான் பாலாஜி. எப்படியோ ஏமாற்றி முதல் நாள் இரவு ஒரு பியரை அடித்துவிட்டான் ஏழு. விஷயம் தெரிந்த ஆறு குதிக்க, ஏழு உள்ளே வந்தான்

”அவங்க வாய மூடிட்டு இருந்தா இவன் ஒழுங்கா எக்ஸாம் எழுதிட்டு வருவாண்டா.சும்மா சும்மா இவனை கடுப்பேத்துறாங்க” என்று ஏழுவுக்காக வாதாடினான் பாலாஜி,.

”ஆமாம் மச்சி. அவங்க ம்யூட்டா இருந்தா க்யூட்டா இருப்பாங்க” என்றான் ஏழு.

என்னடா சொல்ற?

அதான் மச்சி. அந்த கெமிஸ்ட்ரி கம்முன்னு இருந்தா கும்முன்னு இருப்பாங்க என்று தமிழ்படுத்தியவனை பந்தாடினார்கள் அனைவரும்.

முதல் நாள் மப்பு பாதி இறங்கவில்லை என்று தெரிந்தும் ஏழுவை கெமிஸ்ட்ரி லேபில் கொண்டு போய் டிராப் செய்தான். நடந்துதான் சென்றார்கள். இருந்தாலும் டிராப் செய்தான் என்று சொல்வதே சரியானது. உள்ளே நுழைந்தவனை கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தார்கள் வேதா மேடம்.

எக்ஸாமுக்கு லேட்டாவா வர்றது? 30 நிமிஷத்திலே முடிச்சிடுவியா?

எவ்ளோ பெரிய வீரனா இருந்தாலும் டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது மேடம்.

உன் கூட படிச்சவங்க எல்லாம் எப்போ பாஸ் பண்ணிட்டாங்க. நீ ஏம்ப்பா?

டிரெயின் எவ்ளோ வேகமா போனாலும் கடைசி பொட்டி கடைசியாத்தான் வரும் மேடம்

உன் பேட்ச் மேட்ஸ் எல்லாம் இந்த வருஷம் முடிஞ்சா உன்னை விட்டு போயிடுவாங்க. நீ இங்க தான் வரணும். தெரிஞ்சுக்கோ

சைக்கிள் போனா சைக்கிள் ஸ்டேண்ட் கூடவே போகும். ஆனா பஸ் போனாலும் பஸ் ஸ்டேண்ட் அங்கேயாதான் இருக்கும் மேடம். அங்கேயேதான் இருக்கும்.

கார்க்கி உன் ரூம் மேட்தானே? அவன் தியரியிலே செண்ட்டம் எடுத்தான். நீ என்னன்னா பிராக்ட்டிகல்ஸையே பாஸ் பண்ன மாட்ற

லன்ச் பேக்ல லன்ச் இருக்கும், ஸ்கூல் பேக்ல ஸ்கூல் இருக்குமா மேடம்?

அவன் கிட்ட கத்துக்கிட்டு வரலாமில்ல?

ப‌ஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னா பஸ் வரும்.ஃபுல் ஸ்டாப் பக்கத்துல நின்னா ஃபுல் இல்ல,ஆஃப் கூட வராது மேடம்.

இன்னைக்கு கஷ்டப்பட்டா நாளைக்கு நீதானே நல்லா இருக்க போற?

இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எழுந்திருக்கலாம் மேடம். நாளைக்கு தூங்கினா இன்னைக்கு எழுந்திருக்க முடியுமா?

இந்த நக்கலுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை.நல்லா படிக்கிற பையன் நீ. எழுதின எக்ஸாமில் எல்லாம் நல்ல மார்க்.

காக்கா கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளைதானே மேடம்.

டயலாக் எல்லாம் சரி. ஆனா எக்ஸாம் எழுதத்தான் வர மாட்ற.

முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதானே

உன்கிட்ட டவுட் கேட்ட பசங்க எல்லாம் பிராக்டிகல்ஸ்ல 100 மார்க் வாங்கிட்டாங்க. தெரியுமா?

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும், பரிசு கைக்குதான் கிடைக்கும்

உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. இதுக்கு பதில் சொன்னா பாஸ் போட்டுடறேன். எந்த திடப்பொருளை எரித்தால் நேரிடையாக வாயுவாகிவிடும்?

தெரியாது மேடம். எந்த திரவத்தை சூடாக்கினால் திடப் பொருளாகும்?இதுக்கு பதில் சொல்லிட்டா நீங்க என்ன ஃபெயில் ஆக்கிடுங்க.

ரொம்ப நேரம் யோசிச்ச கெமிஸ்ட்ரி மேடம், தெரியாது என்று சொல்ல சிரித்துக் கொண்டே சொன்னான் ஏழு

தோசை மாவு மேடம்.

Dec 20, 2009

வேட்டைக்காரனைப் பற்றி

49 கருத்துக்குத்து

 

OgAAAMQf0gxHVOKmVybguxrrFG4QkkXFYSEBA2FJjyAbzpTGhuk4AQfnK7Nwy0vRTgjKWsFTuipDQ4PZsO-4knHVUvcAm1T1UEKeg7txyfOgHI54f7l7WGFfKBbH

கடைசிப் பதிவை பார்த்து இமெயிலில் பொங்கி விட்டார்கள் சில விஜய் ரசிகர்கள். ”எங்கப்பா இருந்தீங்க இத்தனை நாளா? வேட்டைக்காரன் வரும்வரை எங்கேயும் நான் விஜயை விட்டுக் கொடுத்ததே இல்லை. இந்தப் பதிவிலும் கடைசி வரியே வாழ்க இளைய தளபதிதான்னு” சொன்னாலும் கேட்கவில்லை. அவர்கள் ஆதங்கமெல்லாம் படம் நல்லா இருந்தும் ஏன் இப்படி செஞ்சிங்க என்பதுதான்.

படம் நல்லாயிருக்கான்னு சிரிப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. நான் கேட்டவரை மவுத் டாக் பாசிட்டிவ்தான். சிக்னலில் நின்ற போது பேசிக் கொண்டிருந்த இருவர், அலுவலகத்தில் மொபைலில் பேசியவர், என்னுடன் படம் பார்க்க வந்ததிலே சிலர் என எங்கும் படத்தைப் பற்றி நல்ல டாக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எனக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் யாருக்குமே பிடிக்காது என்பதில்லை. கடைசியாக எனக்கு பிடித்த விஜய் படம், நம்புங்கள் போக்கிரி அல்ல. சச்சின். திருப்பாச்சியெல்லாம் ஏண்டா என்று வெளிவந்தேன் சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து. ஆனால் தமிழகத்தில் அதன் ரிசல்ட் பிளாக்பஸ்டர்.

வேட்டைக்காரனும் திருப்பாச்சியும் பல விஷயங்களில் ஒன்று. இரண்டுமே ஒரே ஃபார்முலா. முதல் பாதி முழுவதும் காதல்,காமெடி. இண்டெர்வல் பிலாக்கில் ஒரு ட்விஸ்ட்டோ, சவாலோ இருக்கும். இரண்டாம் பாதி ஆக்‌ஷன் மேளா.இது புது ரூட்டல்ல. அண்ணாமலை ரூட்தான்.  விஜயைத் தவிர யாரும் இப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று கிண்டலாக சொன்னார் ஒரு பதிவர். வேறு யார் நடித்தாலும் செட்டாகாது என்பதற்கு திருப்பாச்சி,சிவகாசி வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி, தர்மபுரி என்று பாதாளத்திற்கு சென்ற பேரரசுவே சாட்சி. இத்தனைக்கும் அஜித்தும், விஜயகாந்தும் மாஸ் ஹீரோக்கள்தான். விஜய்க்கு இது சரியான பாதையாகத்தான் எனக்கு தெரிகிறது. அவர் படங்கள் பெர்லின் திரைப்பட விழாவுக்கு எல்லாம் போவதில்லை. அதிகபட்சம் திருவனந்தபுரம்தான். ஆனால் பிரச்சினை திரைக்கதை. வில்லனிடம் ஹீரோ மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனம் இருந்தால் என்னால் ரசிக்க முடிகிறது.

உதாரணம் திருவிளையாடல் ஆரம்பம். ஒவ்வொரு காட்சியும் தனுஷ் தனது புத்திசாலித்தனத்தால் பிரகாஷ்ராஜை திணறடிப்பார். அப்படி ஒரு படத்தில் விஜய் நடித்தால் மரண மாஸ். ஆனால் அந்தப் படத்தில் அந்த மாஸ் மிஸ். வேட்டைக்காரனின் குறையாக நான் கண்டது இந்த புத்திசாலித்தனத்தை மட்டும்தான். மற்றபடி இசை,காமெடி, விஜயின் சேஷ்டைகள் என எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் படம் ஸ்கோர் பண்ணுகிறது. முதல் பாதி இரண்டே இரண்டு பாடல்கள்தான். ஆனால் 90 நிமிடம். நிச்சயம் அதை நம்மால் உணர முடியவில்லை. முதல் பாதியில் ஒரே குறை அந்த அருவி சீன். முதல் நாள் ரசிகர்களே அதை ரசிக்கவில்லை. குருவியில் செய்த அதே தவறு. மற்றபடி முதல் பாதி நன்றாகவே இருக்கிறது.

இரண்டாம் பாதியில் ஏற்கனவே ஹிட்டடித்த புலி உறுமுது பாடல் முதலில் வருகிறது. முதலில் சின்னத்தாமரைப் பாட்டு, இரண்டாவதாக புலி உறுமுதுவைப் போட்டிருக்கலாம். படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கும். அம்மன் பாட்டு என்று கிண்டலடித்தவர் கூட திரையில் நன்றாக இருப்பதாக சொன்னார். அடுத்தடுத்த காட்சிகள்தான் வேகத்தடைகள். தன் நண்பனை போட்டுத் தள்ளிய வில்லனின் மகனை விஜய் கொல்லும் சீனில் கொஞ்சம் கூட கோபமே இல்லாமல் “உன் புள்ளைக்கு மொள்ளமாறித்தனம் கத்துக் கொடுத்த. ரவுடித்தனம் செய்ய கத்துக் கொடுத்த. நீச்சல் அடிக்க கத்துக் கொடுத்தியா” என்கிறார் சிரித்துக் கொண்டே. இதைத்தான் அதிஷா “அடிக்கிற சுனாமியில் கிடைக்கிற அல்வாத்துண்டை ரசிக்கவா முடியும்?” என்கிறார். க்ளைமேக்ஸ் மகா கொடுமை. இந்த கடைசி அரை மணி நேரத்தால் படமே மொக்கை என்கின்ற லெவலுக்கு ஆக்கிவிட்டார்கள்.விஜயின் கடைசி மூன்று படங்களிலுமே க்ளைமேக்ஸ் சப்பைதான்.

தமிழ் சினிமா கற்றுக் கொள்ளாத இன்னொரு விஷயம் நேரம். ”2.15 மணி நேரம்தான் படம் ஓடுது. அதனால் இந்த சினிமாவுக்கு போக வேண்டாமென்று” ஆ முதல் இசட் வரை எந்த ஏரியா ரசிகனும் கவலைக் கொள்வதில்லை. இருந்தாலும் 3 மணி நேரம் படம் எடுப்பேன் என்று மல்லுக்கு நிற்கிறார்கள். படம் ஜவ்வு என்று டாக் வந்தவுடன் தியேட்டரிலே எடிட்டிங் நடக்கிறது. ஜி யில் தொடங்கி கந்தசாமி, பொக்கிஷம் என இது தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. வேட்டைக்காரனையும் கொஞ்சம் வெட்டலாம். விறுவிறுப்பு கூடும்.

படத்தில் விஜயிடம் நான் ரசித்தவை: சஞ்சய் ஆடுவதை கொஞ்சம் பெருமையுடனும் நக்கலாக பார்த்து சிரிப்பது, டிரெயின் சீன்,“உங்களுக்கு ஒரு புள்ளை இருந்தா நம்பி அனுப்புவீங்க இல்ல” என்று சொல்லும் இடம், டயலாக் டெலிவரி, ”உனக்கெல்லாம் போலிஸ்காரன் பத்தாதுடா. வேற வேற வேட்டைக்காரன் தாண்டா” என்று கர்ஜிப்பது(இது டிரெய்லரில் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடவில்லை), என் உச்சி பாடலில் தலைகீழாக நடப்பது..

குருவி, வில்லு வந்த போது பதிவர்களில் ஒருவர் கூட நன்றாக இருந்ததாக எழுதவில்லை. ஆனால் வேட்டைக்காரனை லக்கி ஓக்கே என்கிறார். பரிசல் பாஸ் ஆகிவிட்டதாக சொல்கிறார். ஜெட்லீ முதல் பாதி சூப்பர் என்கிறார். சிங்கப்பூர் சேவியர் தூள் என்கிறார். இன்னும் சிலர் நன்றாக இருப்பதாகவே எழுதி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் கல்லூரி நண்பன் அழைத்து எத்தனை முறை பார்த்தாய் என்றான். ரெண்டு தடவடா என்றால், இப்படி ஒரு தல படம்(அவன் அஜித் ஃபேன்) வந்திருந்தால் நான் வீட்டுக்கே போக மாட்டேன். நாலு ஷோவும் பார்ப்பேன் என்கிறான். சத்யமில் வியாழன் வரை 90% ஃபுல் ஆகிவிட்டது. இது படத்தின் மவுத் டாக் வெளிவந்த பின் ரிச்ர்வ் செய்யப்பட்ட நாட்கள். ஆக வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப்படம் என்பது உறுதி ஆகிவிட்டது. எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது பெரிய விஷயமே இல்லை.அதே போல்தான் மற்றவர்களுக்கும்.

வேட்டைக்காரன் எவ்வளவு பெரிய வெற்றி, விஜய்க்கு இது மறுவாழ்வா?, விஜயின் கடந்த கால தோல்விகள்.. இன்னும் பல விஷயங்களைப் பற்றிய என் பார்வை விரைவில்…

Dec 19, 2009

பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும்

35 கருத்துக்குத்து

 

பதிவெழுதும் அனைவரும் சொல்லும் விஷயம் “இந்த நட்பு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்”. முழுக்க முழுக்க உண்மை. பல சம்பவங்களை சொல்லலாம்

அந்த அண்ணணைப் பார்க்க போகிறவர்களுக்கு தெரியும். இறங்கி தெருவில் நடந்தாலே என்ன சார் என்று இவரிடம் வேலை செய்பவர்கள் அல்ல, அருகில் இருக்கும் கடைகளில் வேலை செய்பவர்கள் கூட கேட்பாகள். அவரிடம் நடுஇரவில் கூட அழைத்து ஜஸ்ட் லைக் தட் எந்த உதவியென்றாலும் என்னால் கேட்க முடிகிறது.

இவரை என் நணபர். இங்கே, இந்த  வேலை செய்கிறார் என்றால், அப்புறம் எப்படி என்பது போல் புருவம் உயர்த்துகிறார்கள். இவரோ சகா சாப்பிட்டியாம்மா என்று கேட்கிறார்.

அநியாயத்திற்கு நல்லவர் ஒருவர் போயும் போயும் இந்த ஊரில் இருக்கிறார். இவர் ஊருக்கு சென்றால் இவர் வேறு ஊருக்கு போய்விட்டார். அடடா என்னும் போது ஸ்விஃப்ட் காரும், டிரைவரும் வந்து “சார் அனுப்பினாருங்க. அவர் ஊரில் இல்லை” என்கிறார்.

இவரது ஓனரே இவரிடம் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தான் பேச முடியும். மேலே சொன்னவர்களெல்லாம் இவரிடம் பேச தினமும் முயற்சி செய்வார்கள். அமாவாசை 15 நாளுக்கு ஒரு முறைதானே? எனக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன். சகா, அவசரமா? ஒரு 10 நிமிஷத்தில் கூப்பிடவா என்ற பதிலாவது நிச்சயம் எனக்கு.

பிரபல பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் இவர். அப்துல் கலாமின் தற்போதைய கனவே இவரின் கண்கள் வழியாகத்தான் கருவாகிறது. இவரோ நம்மை ஓரங்கட்டி “கார்க்கி. இப்படி ட்ரை செய்யலாமே. உனக்கு சரியா வருமென்று” நமக்கு உதவி செய்கிறார்.

இன்னும் ஐ.ஐ.டி, அந்த ஆளு, இந்த கம்பெனி, இந்த காலேஜ்ன்னு என எங்கும் வியாபித்திருக்கும் நண்பர்கள் பலர். இந்த சகாக்கள் துணை இருக்கும்வரை இன்னும் ஒன்றல்ல, ஒன்பது வேட்டைக்காரனை விஜய் தந்தாலும் தைரியமாக பார்ப்பேன். வாழ்க இளைய தளபதி.

Dec 17, 2009

வர்றான் பாரு வேட்டைக்காரன்..

40 கருத்துக்குத்து

 

happy vettaikaran day frds..  

இந்நேரம் வேட்டைக்காரனைப் பற்றிய செய்திகள் சிலர் காதுகளுக்கு வந்திருக்ககூடும், நான்  மாலை 6.30மணி காட்சிக்கு ஆல்பர்ட் செல்கிறேன். வந்து நம்ம கச்சேரிய வச்சிக்கிலாம்.

மாயாஜாலில் 40 காட்சிகளாக தொடங்கிய முன்பதிவு,இப்போது 44 காட்சிகளாக உயர்த்தும்படி ஆகியிருக்கிறது. சென்னையில் மட்டும் 45 திரையரங்குகள். கோவையில் ஒரு திரையரங்கையே புதுசாக சேர்த்திருக்கிறார்கள். இதெல்லாம் விட யூ.கேவில் அவதார் படமே நான்கு காட்சிகள்தான். ஆனால் வேட்டைக்காரன் 7 காட்சிகள். நம்ப மாட்டிங்கன்னு தெரியும். நீங்களே போய் பாருங்க. தகவல் தந்த நண்பர் ட்ரூத் அவர்களுக்கு நன்றி,

இப்போதைக்கு

வசூல் வேட்டையாட வரும்

 

vettaikaran-release-date-poster

.

 படக்குழுவினருக்கு வாழ்த்துகள்

வீ.சேகர் பதிவு

46 கருத்துக்குத்து

 

   எனக்கொரு அண்ணன் இருக்கிறான். எல்லா அண்ணன்கள் போலதான் அவனும். அதாவது தம்பியை விட மூத்தவன் என சொல்ல வருகிறேன். சின்ன வயதில் இருந்தே அவன் எனக்கு செக்யுரிட்டியாகவோ அல்லது டிடெக்டிவாகவோ பின் தொடர்ந்து, தப்பு செய்யும் போதெல்லாம் கையும் களவுமாக மாட்டி விடுவான். அண்ணன்களால் வரும் பெரிய தொல்லையே இந்த செகண்ட் ஹேண்ட் பொருட்கள்தான். மெளண்ட்பேட்டன் பிரபுவுக்கு தாடி வளர்ந்த வரலாற்று புத்தகம், செயின் லொடலொடவென ஆடும் பழைய சைக்கிள்  என எல்லாப் பொருட்களும் செகண்ட் ஹேண்டில்தான் நம் கைகளுக்கே வரும். இவ்வாறாக அவனிடம் இருந்து என்னிடம் பாஸாகாத ஒரு பொருள் ஷூக்கள் தான். அவை செகண்ட் ஹேண்ட் என்று அழைக்க முடியாதல்லவா? செகண்ட் லெக்குதானே!!

தற்போது ஸ்காட்லேந்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறான் இந்த மகாத்மா. PROSAIC என்ற பெயரில் நீங்கள் அவனின் பின்னூட்டங்களை எப்போவாது என் பதிவில் பார்த்திருக்கக்கூடும். அல்லது அடிக்கடி வேறு யாருடைய பதிவிலாவது பார்த்திருப்பீர்கள். இதிலிருந்தே அவனுக்கு நல்ல விஷயங்கள் அறவேஏஏஏஏஏ பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டால் நீங்க நம்ம ஆளுங்க. அதான் அறிவாளிங்க. அவன் வாங்கி, யூஸ் செய்யாமல் எனக்கு தந்த ஒரே பொருள் இதுதான். சரி விடுங்க. இன்னைக்கு அண்ணன் அவதரித்த திருநாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, ஒரு பாட்டு போடலாம்ன்னு பார்த்தேன். தம்பியாக இருந்தால் தென்மதுரை வைகை நதி போடலாம். அண்னனுக்கு? ”அண்ணன் என்ன தம்பி என்ன”.. வேண்டாமுங்க. 

  பிரதர் ஹேப்பி பர்த்டேப்பா…தமிழில் வாழ்த்தலாம். ஆனால் ஆங்கிலத்தில் வாழ்த்தும் போது இலவசமாக ஒரு டே போட்டுக் கொல்லலாம்.(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல வெயிலான்)

லாலாலா..லாலாலா

****************************************

மூஞ்சிப்புத்தகம். அதாம்ப்பா ஃபேஸ்புக்கில் farmvilla விளையாட ஆரம்பித்திருக்கிறேன். அதை கவனித்த பப்லு, அவனுக்கும் தனியாக ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்து ஒரு நாலு ஏக்கர் இடத்தை வளைத்துப் போட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தான். அதில் கிடைக்கும் பழங்கள் எல்லாம் பிடிக்கவில்லை அவனுக்கு. பிஸா செடி, பர்கர் கொடியெல்லாம் இல்லையாடான்னு கேட்கிறான். இரவு 1 மணிக்கு எழுந்து “டேய். ஹார்வெஸ்ட் செய்யலாம்டா. இல்லைன்னா வீணா போயிடும்ன்னு” மிரட்டறான். இப்ப பிரச்சினை, தம்பிக்கு neighbours எட்டு பேர் இல்லையாம். அதனால் அருகில் இருக்கும் பொறம்போக்கு இடங்களை வளைத்து போட முடியவில்லை. லோக்கல், எஸ்.டி.டி, ஐ.எஸ்.டின்னு போட்டு ஆள் சேர்க்கிறான். அதனால் யாராவது இந்த கேம் ஆடறவங்க பப்லுவையும் சேர்த்துக்கோங்கப்பா. அவன் தோட்டத்துக்கு லின்க் இதோ. அல்லது sreekesh devanathan னு தேடிப் பாருங்க.

லாலாலா..லாலாலா

************************************

தலைவலி என்று (நல்லாப் படிங்க. “என்ற” இல்லை, என்று) குடும்ப டாக்டரைப் பார்க்க சென்றேன். இத சாப்பிடுங்க வலி இறங்கிடும்ன்னு தந்தார். சில நாட்களில் கண்ணில் பிரச்சினை வந்து கண் மருத்துவரைப் போய் பார்த்தேன். அது சரியான உடனே ஜலதோஷம். இன்று வாய்ப்புண். மனுஷன் இறங்கிடும்ன்னு சொன்னது இப்படின்னு இப்பதான் புரிஞ்சுது. இரும்பு சத்துக்காக பப்லுவுக்கு அவர் ஒரு டானிக் கொடுத்திருக்கிறார். உடனே எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்கணும். உள்ளே ஏதாவது பார்ட் துருப்பிடிச்சிருக்கான்னு.

லாலாலா..லாலாலா

******************************

அம்மா வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் கிளாஸ் பெயிண்டிங், தஞ்சாவூர் பெயிண்டிங்ன்னு இறங்கிட்டாங்க. போதாதென்று வீட்டுக்கு வருபவர்களெல்லாம் நல்லா இருக்குன்னு திருமண பரிசுகளுக்கு வாங்கி செல்கிறார்கள். நீயும் என்னவோ எழுதறியே இதெல்லாம் ஃபோட்டோ எடுத்து போட மாட்டியான்னு கேட்டாங்க. ம்ம் என்றேன். வீட்டிற்கு வந்த திருப்பூர் பதிவர்கள் “கார்க்கி பிளாகுல போட சொல்லுங்கம்மா. பரிசாக கொடுக்க இதை விட பெட்டர் ஆப்ஷன் இல்லைன்னு” போட்டு கொடுத்துவிட்டார்கள்.(நாம எப்போ நல்ல விஷயங்களை நம்ம கடைல போட்டிருக்கோம்?) ஃபோட்டோ எடுத்து எங்கே சேவ் செய்தேன்னு தெரியல. இப்போதைக்கு விஷயத்தை சொல்லிவிட்டேன். இன்னொரு நாளில் ஃபோட்டோக்கள்.

லாலாலா..லாலாலா

Dec 15, 2009

அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை

50 கருத்துக்குத்து
   அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. எனக்கு ஒரு முறை நடந்தது. தேதி நினைவிலில்லை. வருடம் 2002. புத்தம் புது காலை என்றானே!! அப்படியொரு காலைப் பொழுது. என்னையும், என்னுடன் பணிபுரியும் சிலரையும் ஏற்றிக் கொண்டு கிளம்பியது அந்த பேருந்து. அடுத்த தெருவைத் தாண்டினால் கடலைப் பார்க்கலாம். அது திசம்பர் மாதம். தேதிதான் நினைவிலில்லை. திசம்பர் மாத பனிமூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அந்த பனிமூட்டத்தில் கடலைப் பார்ப்பதுதான் எத்தனை சுகம்? காதலைப் போலவே கடலும் முடிவிலியாய் தெரியும். பால் போல் பொங்கி வரும் வெண்ணிற அலைகளில் இறங்கி விளையாடத் தோன்றும். அலைகளின் ஓசையை விட சிறந்ததொரு இசையை நான் இன்னும் கேட்டதில்லை.

  தேதிதான் நினைவிலில்லை. ஆனால் திங்கள் கிழமை. வார இறுதி முடிந்து வேலைக்கு செல்லும் அலுப்பு அனைவரது கண்களிலும் தெரிகிறது. பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்கிறது. ஒருவருக்காக சில நிமிடங்கள்  காத்திருக்கும் வேளையில் கடலை ரசிக்கிறேன்.  சூரியன் மெல்ல மெல்ல எழுந்து வருகிறான். அந்த ரம்மியமான காட்சியில் மனம் லயிக்கிறது. என்றும் இல்லாமல் அன்று மட்டும் மனம் எதையோ தேடுகிறது. இதுவரை கிடைக்காத ஏதோ ஒன்றைத் தேடுகிறது. அதுவும் சுகமாய்த்தான் இருக்கிறது. வழக்கமான அரட்டைகள் ஏனோ திங்கள் காலையில் நடப்பதில்லை. வித்தியாசமாய் முன்னிருப்பவரின் குறட்டை சத்தம் சினமூட்டுகிறது. வெண்பனியும், செந்நிற வானமும், நீலநிற கடலும் சங்கமிக்கும் காட்சியை  ரசிக்க முடியாதவர்களை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் நினைவில் பசுமையாய் இருக்கிறது. தேதிதான் நினைவிலில்லை.


   வேகமெடுக்கிறது பேருந்து. காந்தி சிலையைத் தாண்டி செல்லும் வேளையில் என் கண்ணில் படுகிறது அந்த குழந்தை. மூன்று வயதிருக்கலாம். பெண் குழந்தை. . ஒரு காலைத் தூக்கி இன்னொரு காலால் அடி வைக்கும் அழகு! பால் மணம் மாறா சிரிப்பு!! என என்னை முழுமையாய் ஆட்கொள்கிறாள். பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகள்?   பேருந்து வேகமாய் கடக்கும் அந்த ஒரு சில வினாடிகளில் என் வாழ்க்கை நின்று விடக்கூடாதா என்று ஏங்குகிறேன். நின்றுவிட்டது பேருந்து. வழக்கமாய் இங்கே நிற்காதே என்றெல்லாம் யோசிக்கவில்லை.  அந்த கணம் அந்த மழலைக்கு சமர்ப்பணம் செய்கிறேன். மெல்ல நகர தொடங்கியது பேருந்து. கண்பார்வையில் இருந்து மறையும் வரை எட்டிப் பார்க்கிறேன். சிவப்பு நிற ஃப்ராக்கில் கொள்ளை அழகுடன் குழந்தை. சிவப்பு நிறம் கூட நினைவிலிருக்கிறது. தேதிதான் நினைவிலில்லை.


இந்த குழந்தையைத்தான் மனம் தேடியதோ என்றெண்ணியபடி திரும்புகிறேன். மூன்று வயது குழந்தை நான் திரும்புவதற்குள் வளர்ந்து 20 வயது பெண்ணாக என் எதிரில் அமர்ந்திருக்கிறது. இவளை இதற்கு முன்பு இங்கே பார்த்தது இல்லையே. யார் இவள்? குழப்பமாய் இருக்கிறது. அதே சிரிப்பு. அதே சிவப்பு. சிவப்பு நிற சுடிதார். கிள்ளிப் பார்க்கிறேன். நம்பச் சொல்கிறது வலி. ஆனாலும் முடியவில்லை. அவள் கைகளில் இருப்பது அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் புத்தகம் என்பது நினைவிலிருக்கிறது, தேதிதான் நினைவிலில்லை.


  வளரும்போது குழந்தைத்தனத்தை இழந்துவிடுகிறோம். அதனாலே அழகையும் இழக்கிறோம். இவள் யாரிடத்தில் வரம் வாங்கினாள் என்று தெரியவில்லை. ஆண்டுகள் கூடும்போது அழகும் கூடுமென சிவன் வரம் கொடுப்பானா என்ன? ஒருவரிடத்தில் மட்டுமெல்லாம் வரம் வாங்கினால் இவ்வளவு அழகு கிடைக்காது.  கண், காது, இதழ்கள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரம் வாங்கி வந்தவள் போலிருந்தாள். இன்னும் கடலோரம்தான் பேருந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் என் பார்வை கடலுக்கு எதிர்புறமாய் திரும்பி பல நிமிடங்கள் ஆகிறது. மெல்லிய கீற்றாய் விபூதி, மிகச் சிறியதாய் கம்மல், சற்று பெரியதாக கழுத்து சங்கிலி, மென்மெல்லிய சிவப்பு வர்ணத்தில் உதட்டு சாயமென சில இடையூறுகளைத் தவிர்த்து அவள் அழகை முழுமையாய் ரசிக்கிறேன். உடன் இருந்தவளை அருணா என அழைப்பது கூட நினைவிலிருக்கிறது. தேதிதான் நினைவிலில்லை.


அடுத்த நிறுத்தத்தில் ஏறிய ப்ரியா இவளைப் பார்த்து ஹாய்சொல்லிவிட்டு கேட்கிறாள். “பதினாறாம் தேதிதானே வர்றேன்னு சொன்னிங்க”.


”ஹலோ மேடம். இன்னைக்குத்தான் சிக்ஸ்டீன்த்”.


  அலைகளே!!! சற்று அமைதியாய் இருங்களேன். என்னவள் பேசுகிறாள் என்றேன் சத்தமாக, மனதுக்குள்.

என்ன சொன்னாள்? இன்று தேதி பதினாறா??????

**************************************************************************************************************
மில்லிமீட்டருக்கும் குறைவான
விட்டத்து சாரல் தெளித்த
மலர் சிலிர்க்கும் சோலை
மார்கழியின் ஈரம் குளித்து
எழுந்துவிட்ட காலை
வாச பூக்களில் எல்லாம்
வண்ணம் தீட்டி
வெட்கம் உண்ட
தண்ணென்ற சூரியன்
கோடிகோடியாய் கொட்டிக்கொடுத்தாலும்
மீண்டும் மீண்டும் கேட்டு   வாங்கும்
கரையோர காதல் அலைகள்
எனினும், எவையும்
எனைக்கவரவில்லை...
அதிசயமாய் சிவப்பு உடையில்
தேவதையைக் கண்ட நொடியில்...
நிமிட நேரத்தில்
நினைவுகளைக் கொய்தாள்..
ஆதலால்,
இன்றுவரை 
தேதி மட்டும் நினைவிலில்லை...
- ஸ்ரீமதி

Dec 14, 2009

பிரச்சினை செய்த வளரும் பதிவர்

107 கருத்துக்குத்து

 

DSC004363 

நர்சிம் மற்றும் இன்னும் சில பதிவர்களின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்ததேன். எதிர்பார்த்ததை விட நல்ல கூட்டம். அதை விட முக்கியமானது வந்திருந்த பதிவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷம். அவர்களது புத்தகமே வெளியாவது போல் பூரிப்பு. எடுத்து வந்து பேனாவின் இங்க் தீரும் வரை ஆட்டோகிராஃபாய் போட்டு தள்ளினார். ம்ம். வாழ்த்துகள் எழுத்தாளர்களே..

  ஞாநி பேசும்போது தான் யாரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லையென்றும், ஒருவரை எதிர்ப்பதின் அடிப்படையே இன்னொருவரை ஆதரிப்பதுதான் என்றார். ஆனால் படிக்கிறவங்க யாருக்குமே நீங்க யாரை ஆதரிக்கிறீங்கன்னு இதுவரை தெரியலையே என்றார் ஒரு வளரும் பதிவர். அவையில் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

பார்ட் டைமாக எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாதென்றார் ஞாநி. எழுத்து மூலம் சம்பாதித்து, அதில் சரக்கடிப்பவர்களே..சாரி, சாப்பிடுபவர்களே எழுத்தாளர்களாம். அதுவும் சரிதான். புரட்டாசி மாசம் ஒரு நாள் அடுத்த வீட்டில் யாசிப்பதால் பிச்சைக்காரர்கள் ஆகிவிடுவோமா என்றார் அந்த வளரும் பதிவர். இதை செவிமெடுத்த லேங்குவேஜ் பிளேயர் சற்று கலவரமாகி போனார்.

முக்கியமான காட்சி. சாருவும் நர்சிம்மும் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார். வாங்க வாங்க என்று சாரு அழைக்க, அவர் நர்சிம்மை வாங்க சார் ஃபோட்டோ எடுத்துக்கலாம் என்று ஓரங்கட்ட.. ஹேய் டண்டணக்கா .ஹேய் டணக்குடக்கா என்றார் வளரும் பதிவர்.  நாங்களும் ரவுடிதான் பாஸ் என்று சொல்லாமலே சென்றார் நர்சிம்.

புத்தகத்தை யாருக்கு சமர்ப்பிப்பது என்பது பற்றி பேச்சு வந்தது. அதில் ஏதோ சர்ச்சை எழ, உதா’ரண’த்துடன் விளக்க முயன்றார் அந்த சினிமா பதிவர். ”நான் படமெடுக்கும் போது என் குருவுக்கு நன்றி சொல்லிப் போடுகிறேன். ஆனால் அதை அவருக்கே தெரியப்படுத்தவில்லை. அவர் எதேச்சையாக படம் பார்க்கிறார், அந்த நேரத்தில் அவர் மனநிலை எப்படியிருக்கும்” என்றார். இங்கேயும் வந்த அந்த வளரும் பதிவர் “அது படம் முடிஞ்ச பிறகுதான் சொல்ல முடியுமென்றார்.  ஙே வாகிப் போனார் டிவிகாரர்.

இன்னொரு நண்பர் விஜயை நடிகர் விஜய் என்று சொல்வது கேலிக்குரியது என்றார். அங்கேயும் மூக்கு முதல் அனைத்தையும் நுழைத்த அந்த வளரும் பதிவர் “ஆஷிஷ் நெஹ்ராவை கூடத்தான் ரைட் ஹேண்டெட் பேட்ஸ்மன்னு போடறாங்க. அதுக்கு என்ன செய்ய முடியுமென்றார்”.(ஆவ்வ்..மாட்டிக்கிட்டேனா?)

Dec 11, 2009

தலைவாஆஆஆஆ!!!

34 கருத்துக்குத்து

 

இன்று திசம்பர் 12.

ஒரு சூரியன்..

ஒரு சந்திரன்..

ஒரு சூப்பர்ஸ்டார்.

Rajinikanth131008_1

WISH YOU MANY MORE HAPPY

RETURNS OF THE DAY

THALAIVAAAAAAAAAAA

போன வருடம் எழுதிய பதிவொன்றை மீள் பதிவிடுகிறேன். ரஜினியைப் பற்றி நான் எழுதிய ஒரே பதிவு. அந்த டைமுக்கு ஏற்ற மாதிரி இருப்பதால், புது வாசகர்களுக்கு புரியாமல் போகலாம். அட்ஜஸ்ட்  பண்ணிக்கோங்கப்பா. இன்று இரவு சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போகவிருப்பதால் எதுவும் புதுசா எழுத தோணல. :))

*******************************************************************************************************************

குசேலன் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என சூப்பர் ஸ்டார் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

லக்கிலுக் : மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட டமாரு கொமாருனு ஒரு கேரக்டர் கீது..அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க விகடன் மூவிஸ் வழங்கும் சூப்பர் ஸ்டார் இன்&ஆஸ் "டமாரு கொமாரு" (மயிலாப்பூர் தமிழன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

  அதான்டா இதான்டா டமாரு கொமாரு நாந்தான்டா..
  மயிலாப்பூர் ஏரியாவுல அனைவருக்கும் காவல்டா..
  டாஸ்மாக்கில் படுத்துக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  துண்டு பீடி பிடிச்சுக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  குவார்ட்டர் வாங்கி தந்த ஆள மறப்பதில்லடா..
  ஆனா வாட்டர் பாக்கெட் வாங்க மறந்துபுட்டேன்டா

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீதாம்ப்பா

அய்யனார்: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே முள்ளும் ம‌ல‌ரும் காலத்து ரஜினியாக காட்டும்....

லக்கி : என்ன சொல்றப்பா நீ?ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? குசேலனும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ டமாரு கொமாருதான்.

சத்தி : (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் சார்..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

பரிசல்காரன் : வணக்கம் சார்.அந்த திண்டல்மலை முருகன் ஆசியோடு படத்த ஆரம்பிக்கலாம் சார்.கதை என்னனா, உங்களுக்கு, நாட்ட திருத்துற வேலய விட்டுடுனும்னு வில்லன் ஒரு லெட்டர் எழுதறாரு. நீங்களும் அதை ஏத்துக்குற மாதிரி பதில் லெட்டர் எழுதுறீங்க..அப்போ இன்டெர்வெல். அதுக்கு அப்புறம் அந்த லெட்டர மாத்தி அவரு அசர நேரமா பார்த்து பூந்து வெளயாடுறீங்க..அப்பப்போ மத்த நாட்டு நடப்ப பத்தி நான் எழுதி தர வசனத்த பேசுறீங்க.. இது பன்ச் டயலாக் இல்ல,அவியல் டயலாக் சார்..

ஏ!! லெட்டர் போடு லெட்டர் போடு
தாத்தாவுக்கும் லெட்டர் போடு
தங்கமணிக்கும் லெட்டர் போடு
லதானந் அங்கிளுக்கு லெட்டர் போடு
கயல்விழி ஆன்டிக்கி லெட்டர் போடு

அப்படியே போட்டு தாக்கினிங்கனா அவ்ளோதாண்ணா

ரஜினி : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

ச்சின்னப்பையன் : தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க.லதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

ர‌ஜினி : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.தாமிரானு சொல்லுவாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யான‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ளீச்சிங் ப‌வுட‌ர் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...வேணும்னா கிரிய‌ கேளுங்க‌..

கிரி: ஆமாம் த‌லைவா.. நாளைக்கே ஆளுக்கொரு மொக்க‌ ப‌திவு இதை ப‌த்தி எழுதி சூடாக்கிடுவானுங்க‌..

ம‌ங்க‌ளூர் சிவா: ரிப்பீட்டேய்...

ர‌ஜினி :என்ன‌ப்பா? திருப்பி ச‌ந்திர‌முகி 2 எடுக்க‌லாம்னு சொல்றீயா?

ம‌ங்க‌ளூர் சிவா: இது எங்க‌ பாஷை

ர‌ஜினி:  அட‌ப்பாவி..இது நான் சொன்ன‌துடா

நிஜமா நல்லவன் : எனக்கொரு ஐடியா தலைவா. இதுதான் நீங்க நடிக்க போற கடைசிப் படம்னு டைட்டில்ல போட்டுடுவோம்.படம் முடியும் போது அனைவருக்கும் நன்றி சொல்லிடுங்க... உங்க கடைசி படம்னு எல்லோரும் பார்ப்பாங்க..படம் ஓடினதுக்கப்புறம் அது டைரக்டர் எழுதிக் கொடுத்தது அத நம்பினா நீ உருப்புட மாட்டனு அறிக்கை விட்டுட்டு அடுத்த படம் ஆரம்பிச்சிடலாம்.

ர‌ஜினி: நல்லவனாடா நீ!!!!!!

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். படத்தின் பெயர் உண்மைகன்னடன்/தமிழன்/மராத்தி 5698741259635871.. இதற்கு வரிவிலக்கு நிச்சயம் உண்டு.கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

ர‌ஜினி: ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.க‌ண்ண‌ன் : கால‌ம் மாறும்.உங்க‌ள் செல்வாக்கு உய‌ரும்.எந்த‌ விதியும் கால‌த்தில் அட‌க்க‌ம்.

ர‌ஜினி : ச‌ரியா சொன்னீங்க‌.க‌தைய‌ சொல்லுங்க‌.

கோவி.க‌ண்ண‌ன் : உங்க‌ ப‌ட‌த்த‌ வ‌ச்சு நாலு பேர் கிண்ட‌ல் செஞ்ச‌ மாதிரிதான் என்னையும் செஞ்சாங்க‌. நான் க‌வ‌ல‌ப‌ட‌ல‌யே.. போட்டிக்கு நானும் ஒரு க‌மென்ட் அனுப்பி ந‌டுவ‌ரோட‌ பாராட்டையும் வாங்கிட்டேன்.அதே மாதிரி குசேல‌ன‌ கிண்ட‌ல் ப‌ன்னி ஒரு ட‌ய‌லாக் எழுதி விவேக்க‌ பேச‌ வ‌ச்சுடுவோம்.

"காய்கறியெல்லாம் பார்த்தா இருக்கும் பச்ச பசேலனு
பார்த்தவங்க பச்சையா திட்டின படம்தான் குசேலன்"

"பதினேழு முறை படையெடுத்து ஜெயிச்சவன் கஜினி
பன்னாட பீ.வாசுவ நம்பி தோத்தவன் இந்த ரஜினி"

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குசேலன் ஏன் ஓடலனா பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. சிவாஜி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

  " மொக்க போடுறா மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு பல்லேலக்கா மெட்டில் போட்டோம்னா கர்னாடக காவிரி மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல...

     சற்று முன் கிடைத்த தகவல்படி சூப்பர்ஸ்டார் தற்போது இமயமலையில் உள்ளார்.கதை சொல்ல விரும்பும் மீதிப் பதிவர்கள் பின்னூட்டத்தில் கதையை சொன்னால் அவரிடம் சொல்லப்படும்.அந்தக் கதையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க பால்ராஜ் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார்.வெற்றி பெறுவோருக்கு பாலபாரதியின் "அவன்,அவள்,அது" புத்தகம் ஆசிப் அண்ணாச்சியின் கைகளால் பரிசளிக்கப்படும்

Dec 10, 2009

பிளாகராகிறார் கவுண்டமணி

42 கருத்துக்குத்து

 

   தனது ஃபேவரிட் இடமான உட்லண்ட்ஸ் டிரைவ் இன் திறக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும், இதன் பிறகும் தனக்கு சினிமா வாய்ப்பு வர்ற வழியே இல்லை என்றறிந்ததும், டைம் பாஸ் செய்ய பிளாக் எழுத தொடங்குகிறார் நக்கல் நையாண்டியின் ஹோல்சேல் டீலர் கவுண்டமணி. விஷயம் கேள்விப்பட்டதும் பதிவர்களிடையே சலசலப்பு ஏற்படுகிறது. வழக்கம் போல் அவரைப் பேட்டியெடுக்க ஸ்க்ரிபிலிங் பேடுடனும், பேனாவுடனும் சீறிப் பாய்கிறார் சில நாட்களாக பதுங்கியிருக்கும் பரிசல்.

வணக்கம் சார். என் பேரு பரிசல்காரன்.

என்னடா நாய பேரு அது பரிசல்காரன். விரிசல்காரன்னு. எப்பவுமே தண்ணியில கிடப்பியா?

அது நான் இல்ல சார்.

அது நான் இல்லன்னா பின்ன என்ன ரொமாலி ரொட்டியா? உங்க வூட்டுல உனக்கு பேரே வைக்கலையா?

கிருஷ்ண குமார் சார்.

ஓ… வைக்கும் போதே சார்ன்னு சேத்து வச்சிட்டாங்களோ? இந்த டகால்ட்டி வேல எல்லாம் எங்கிட்ட வேணாம் மவனே. பேர மட்டும் சொல்லு.

கிருஷ்ண குமார்.

அப்படி வாடி வழிக்கு. என்ன வேணும் உனக்கு?

உங்க பேட்டி ஒன்னு.

ஹே…ஹேய். யார்கிட்ட மேன்?  நான் வேட்டி எல்லாம் கட்டுறத இல்ல. ஐ அம் ஒன்லி ஜீன்ஸ், கார்கோ மேன். பார்த்தியா எனக்கும்  சிக்ஸ் பேக்.  ஐ அம் யூத்யா. அவன்  சூர்யா. சூர்யாவுக்கு இடுப்புக்கு மேல சிக்ஸ் பேக். எனக்கு இடுப்புக்கு கீழ சிக்ஸ் பேக். யூ நோ காஃபி ஷாப்? யூ நோ டிஸ்கோ? ஐ அம் ரியல் யூத்யா.

அதில்ல சார். இண்டெர்வியூ.

ஓஹோ. நீ என்ன தொழிலதிபரா? நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்கல சாமீயோவ். பனியன் விக்கிரவன், பணியாரம் விக்கிரவன் எல்லாம் தொழிலதிபராம். டேய் உங்கிட்ட நான் வேலை கேட்டனா? அப்புறம் ஏண்டா என்னையே துரத்தரீங்க?

சார். சொல்றத புரிஞ்சுக்கோங்க. நான் கேள்வி கேட்பேன். நீங்க பதில் சொல்லனும். அப்..

அடேய்.. நான் அடங்கி ஒடுங்கி போய் கிடைக்கிறேன்றதால எவன் வேண்ணா கேட்கலாமா?. இவரு கேட்பாராமே கொஸ்டீன். ஐன்ஸ்டீன் தெரியுமா?  அவரு நானும் பிரஷ் மேட்ஸ்.

பிரஷ் மேட்ஸா? அப்படின்னா என்னங்கண்ணா?

அடேய் வூடு மாரி பெருச்சாளி. கேப்புல அண்ணன்னு சொல்லிட்ட. எனக்கு கூட பொறந்த, குறையா பொறந்தன்னு தம்பிங்க யாரும் இல்ல. நீ நீயா இரு. அதான் எனக்கு சேஃப்ட்டி. பிரஷ் மேட்ஸா? அந்த ஐன்ஸ்டின் பையனும் நானும் ஹாங்காங்கில் இருந்தப்ப ஒன்னாதான் பல் தேய்ப்போம். அதாண்டா நாய பிரஷ் மேட்ஸ்.

நிஜமாவா சார்? அவரு எவ்ளோ பெரிய ஆளு. அப்புறம்?

அப்புறம் என்னடா செல்ஃபோன் தலையா. தண்ணி ஊத்தி வாய கழுவிட்டு போயிட்டே இருப்போம்.

அதில்லை சார்.

டேய் .முன்ன பின்ன பல் விளக்கியிருக்கிய்யா? எல்லோரும் அதான் செய்வாங்க.

ஓக்கே சார். பிளாகுல என்ன சார் எழுத போறீங்க?

நீ என்னடா நாய எழுதற?

நான் அவியல் எ..

அடேய். நீ பரிசல்காரனா சமையல்காரானா? என்னங்கடா ஃபிலிம் காட்டறீங்க.

அதில்ல சார். இதுக்கு தொகுப்பு பதிவுன்னு பேரு. பார்க்கிறத, கேட்கிறத பத்தி எழுதறது.

ஓஹோ. அப்போ நினைக்கிறத பத்தி எழுதினா துவையல்ன்னு சொல்லுவிங்களா?

சார். தமிழில் முதல்ல 500 ஃபாலொயர்ஸ் தொட்டவன் நான் தான். நான் சொல்ற மாதிரி எழுதினா ஃபேமஸ் ஆகலாம்.

இந்த மங்காத்தா எல்லாம் எங்கிட்ட ஆவாது மவனே. ஃபாலோயர்ஸே தமிழ் கிடையாது. அப்புறம் எப்படி தமிழில் 500 ஃபாலோயர்ஸ் உனக்கு? இந்த ஒண்ணரையணா நோட்டையும், இங்க் ஒழுகுற பேனாவையும் வச்சிக்கிட்டு பார்க்கிறத எல்லாம் நீ எழுதுனா உன்னைப் படிக்கிறாங்களா? வாட் இஸ் திஸ் நான் சென்ஸ்?ஓ மை காட்..

அப்படியில்ல சார். சாதாரண டயலாக்கையும் நீங்க சொல்ற ஸ்டைலில் ரசிக்க வைக்கிறங்க இல்லையா? அதே மாதிரி தெரிஞ்ச விஷயம்னாலும் என் ஸ்டைலில் சுவாரஸ்யமா சொல்லி.

அடேய் பாலிடிக்ஸ் பாபா.. உன் மகுடிக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்டி.  என்னை கேனைகிறுக்கன் நினைச்சியா? எனக்கு ஏத்த ஆளு யாருன்னு தெரிஞ்சிட்டுதாண்டி பிளாகே ஓப்பன் செஞ்சேன். யூ கோ ஹோம் மேன். ஐ கோ ஸீ மை ஃப்ரெண்டு.ஹே..ஹேஹேய்.

(பரிசல் அது யாரு யாரு என்று கேட்டபடியே பின்னால் செல்கிறார். தொல்லை தாங்க முடியாமல் பதில் சொல்கிறார் கவுண்டர் “ உன் பேருக்கு பின்னாடி   ரெண்டெழுத்த சேர்த்து சொன்னியே, அந்த அவிஞ்ச தலையன் தான்”. :

விரைவில் கவுண்டரோடு அந்த ரெண்டெழுத்து ஆசாமியின் கலந்துரையாடல் வரும்.

உரையாடல் போட்டி. டவுன் டவுன்

42 கருத்துக்குத்து

    

    

என் பெயரோhands
அவள் பெயரோ
எங்கள் பெயர்களோ அற்று
இருக்கும்
இந்தக் கவிதையில்
எங்கேயாவது
காதல் பிடிபடலாம்
அப்போது நீங்கள்
கண்ணீர் சிந்தலாம்.
காறி உமிழலாம்.
கணத்த மனதோடு சிரிக்கலாம்.
அது
எங்கள் காதல் என்பதை மறந்து..

***************************** *****************************  *****************************

                            


லவ் பேர்ட்ஸ் வேண்டுமென்றாள்
கூண்டுடன்
வருவேன் என்று
காத்திருக்கும்
அவளிடம் போய்
எப்படிச் சொல்வது
சுதந்திரமாய்_1820729_birds300pa
அவை காதலிக்க
வானம் விட்டதை.
ஏதேதோ
காரணம் சொல்லி
அவள் இதழ்களில்
முத்தமொன்று பதிக்கலாம்
அப்போது எங்கள் இதழ்களில்
வந்து மலரும்
லவ் பேர்ட்ஸின் புன்னகை.

Dec 8, 2009

கேர்ள்ஸ்.. பொண்ணுங்க..அம்மாயி

49 கருத்துக்குத்து

 

   பொண்ணுங்களுக்கும் எனக்கும் மட்டும் ஆகவே மாட்டேங்குதுங்க. ஏன்னே தெரியல. எங்க போனாலும் நம்ம பேர டேமேஜ் ஆக்கறதே இவங்கதான். அதான் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவங்கள் டேமேஜ் பண்ணி பண்ணி, என்னை நானே பிரச்சினையில சிக்க வச்சிக்கிறேன். இருந்தாலும் விடுவோமா? இதோ இன்னைக்கு கொஞ்சம் பிரச்சினை பண்ணுவோம். :))

ist2_4538265-danger-woman

1) ஒரு பையனை திட்டுனும்ன்னா இந்தப் பொண்ணுங்க சேலை செலக்ட் பண்றத விட சந்தோஷமா நினைப்பாங்க. கவனிக்க, சேலை வாங்க இல்லை, செலக்ட் செய்ய. அதுவும் காலேஜ் பொண்ணுங்கன்னா ச்சும்மா இங்கிலிபிஷு வெளாடும்.

idiot, stupid, rascal, scoundrel, Damn it, bull shit, rowdy, mental,fool, cheat, my foot, இதெல்லாம் போதாதுன்னு அறிவு கெட்டவன், பொறுக்கி, ஜொள்ளு, நாய, பேய, கழுதை, பேய்… இப்படியே போகுதுங்க லிஸ்ட். நம்ம பசங்க தான் ஷார்ப். ரெண்டு வார்த்தை. ரெண்டே வார்த்தை. அதுவும் ஒன்னு இங்கிலிஷு, ஒன்னு தமிழு. “சப்பை ஃபிகர்” மச்சின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

2) வெள்ளைக்கார துரை இருக்கிறானே பயங்கர கிரிமினல். ஸ்ட்ரைட்டா சொன்னா உதை விழுமேன்னு பல பயமொயிகளை, அதாம்ப்ப்பா ப்ராவெர்ப். நச்சுன்னு சொல்லி வச்சிருக்காங்க

Barking dog seldom bite

பேசுற ஃபிகர் எல்லாமே பிக்கப் ஆயிடாது மச்சி

All that glitters are not gold.

ஜீன்ஸ் போட்ட எல்லாமே ஜிகிடி ஆகாது

Make the hay while sun shines,

அழகான பொண்ணு திரும்பி பார்த்தா அப்பவே அப்ளிகேஷன் போடு

3) ஒரு தபா நம்ம டமாரு கொமாரு கடவுள கண்டுக்கனாம்ப்பா. ஏஞ்சாமீ பொண்ணுங்கள இப்ம்புட்டு அழகா படைச்சன்னு கேட்டான். அவரும் நீயெல்லாம் ரொமான்ஸ் வுடட்டும்ன்னுதான் கொமாருன்னு சொன்னாரு. ஆனா ஏஞ்சாமி லூசா படைச்சன்னு கேட்டானாம். அதுங்க உன்ன டாவு வுட வேணாமா? அதுக்குதான்னு சொன்னாராம், (சேம் சைடு கோலோ????)

பி.கு: பதிவு குட்டியா இருக்குன்னும், இது எல்லாம் மெயிலில் வந்துச்சு, தந்தியில் வந்துச்சு, எதிர்த்த வீட்டு தாத்தா சொன்னாருன்னு பின்னூட்டம் போடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்கப்படும். 

Dec 7, 2009

கார்க்கியின் காக்டெயில்

46 கருத்துக்குத்து

 

sunaina 

சில மாதங்களாகவே வலது கண்ணில் சிறு பிரச்சினை இருக்கிறது. மெட்ராஸ் ஐ போல சிவந்து விடும். எரிச்சலும் இருக்கும். சென்ற வாரம் தெரிந்த டாக்டர் ஒருவரிடம் சென்றேன். ஐ டிராப்ஸ் தறேன். போடு என்றார். பின்ன கண்ணுல என்ன பைப் வச்சா மருந்த விட முடியும்? ட்ராப் ட்ராப் தானே டாக்டர் விட முடியுமென்றேன். சிரித்தாரா முறைத்தாரா என்று தெரியவில்லை. நேற்று மீண்டும் அவரிடம் சென்றேன். ரைட் ஐலதானே பிரச்சினை என்றார். ரைட் ஐய்யா இருந்தா எப்படி டாக்டர் பிரச்சினை இருக்கும்? பிரச்சினை இருந்தா எப்படி டாக்டர் ரைட் ஐய்யா இருக்குமென்றேன். முதல் முறையாவது மருந்து எழுதி தந்த பின் தான் பேசினேன். இந்த முறை அதற்கு முன்பே பேசிவிட்டதால் அவர் எழுதி தந்த  ட்ராப்ஸை கண்களில் போடும் திட்டத்தை டிராப் செய்துவிட்டேன். ஏற்கனவே நம்ம கண்ணு பெர்ர்ர்ர்ர்சு. இதுல இன்னும் சுருங்குனா?

***********************************************************

    திருநெல்வேலி அளவுக்கு தூரமும் இல்லாமல் தாம்பரம் அளவுக்கு நெருக்கமும் இல்லாமல் திண்டிவனம் தூரத்தில் நண்பனொருவன் இருக்கிறான். அட!!! அவனும் நானும் திண்டிவனத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள்தான். பெண் குழந்தை பிறந்ததை கூட என்னிடம் சொல்லாமல் பேர் வைப்பதற்கு மட்டும் என்னிடம் வந்தான். அவன் பெயர் விமல். அவன் மனைவியின் பெயர் தீபா. இரண்டையும் இணைத்து ”விபா” என்ற பெயரை சொன்னேன். துள்ளிக் குதித்தான். மிகவும் பிடித்திருப்பதாகவும், வீட்டில் பேசி விட்டு வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றான். அவன் மனைவியின் உண்மையான பெயர் பாலசரஸ்வதியாம். தீபா செல்லப் பெயராம். அதனால் அந்தப் பெயரை வைத்து ஏதாவது சொல்ல சொன்னான். எவ்வளவு முயன்றும் “பா.வி” என்றுதான் வந்தது. அவனை அழைத்து ” குழந்தைக்கு தாத்தா பேரை வைக்கலாம். ஆனா அப்பா பேரையே எப்படி வைப்பது” என்ற பீடிகையுடன் பா.வியை சொன்னேன். கேனைப்பையன் ஸ்பீக்கரில் போட்டிருக்கிறான். ”இவனையெல்லாம் என் குழந்தைக்கு பேரு வைக்க சொன்னியா”டா என்று மட்டும் கேட்க முடிந்தது லைன் கட் ஆவதற்குள்.

********************************************************

அதோ இதோ என்று பலரை பயமுறுத்தியும் ரசிகர்களை சூடேற்றியும் வந்த வேட்டைக்காரன் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சென்னை சிட்டியில் மட்டும் 20 தியேட்டர் என்கிறார்கள். முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் 4 கோடி கலெக்‌ஷன் எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். மாயாஜாலில் ஒரு நாளைக்கு 40 ஷோவாம். நயாக்ரா நீர்விழ்ச்சியில் தளபதி குளிக்கும் சீனை டிரெயிலரில் இதுவரை பார்க்காதவர்கள் வீட்டில் டிவி இல்லை எனலாம். 

சாமிக்கு முன்னாடி மட்டும்தாண்டா சாந்தமா இருப்பேன். சாக்கடை முன்னாடியெல்லாம் … என்று நறநறக்கிறார் விஜய், சலீம் கெளஸிடம் . எனக்கு என்னவோ இதிலும் விஜய் ஆஸ்காருக்கோ, குறைந்தபட்சம் தேசிய விருதுக்கோ முயற்சித்ததோ மாதிரி தெரியவில்லை. அதே ஒப்பனிங் சாங், அதே மொக்கை காமெடி, அதே லவ் டிராக், அதே குத்துப்பாட்டு, அதே பன்ச் வசனம், அதே க்ளைமேக்ஸ் என்றுதான் தெரிகிறது. அதனால் மூளை இருக்கும் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

   விஜயின் அற்புத நடிப்பை எதிர்பாத்து சென்று ஏமாற்றம் அடைந்து “வேட்டைக்காரன் ஒரு முன்பின்பழமைத்துவ படம்”, ”தொலைந்தது என் 200 ரூபாய்” என்றெல்லாம் பதிவு போடவேண்டிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க… உங்களுக்கு தலைவலி வராமல் இருக்க, தயவு செய்து வேட்டைக்காரனை பார்த்து விடாதீர்கள். அவதார் வருகிறது, “பா” நன்றாக இருக்கிறதாம். “ரேணிகுண்டா” ஹிட்டாம். அங்கே செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று மணி நேரம் ஜாலியாக ரசிக்க நினைப்பவர்கள் என்னுடன் வரலாம். 18ஆம் தேதி காலை ஷோ.உதயம். நானும் இன்னொரு கல்லூரி பதிவரும் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். விரும்புவர்கள் உடனே சொல்லுங்கள்.விஜயின் மாஸை பார்க்கலாம்.

************************************************

”அது ஏண்டா என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட” என்று பப்லுவிடம் நான்காவது முறையாக நான் கேட்டபோது அம்மா, அக்காவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடிப்பதற்குள்  எட்டு முறைக் கேட்டுவிட்டேன் பப்லுவிடம் அதேக் கேள்வியை. அவனும் “வெள்ளை செந்தில்” மாதிரி முழித்துக் கொண்டிருந்தான். அன்று வீட்டில் எட்டு பேருக்கு மேல் இருந்தோம். அவங்களையெல்லாம் விட்டு என் கிட்ட ஏன் கேட்ட என்று நான் மீண்டும் கேட்ட போது எண்ட்ரீ ஆனார் எங்க வூட்டு ராமராஜன் வினோத்.

அப்படி என்னதாண்டா கேட்டான்?

என்ன கேட்டானா? நோபல் பரிசு வாங்கிய முதல் இந்திய பெண்மணி த்ரிஷா தானேன்னு கேட்கிறாண்டா என்றேன்

முகத்தை வாழைப்பழ செந்தில் போல வைத்துக் கொண்டு பதில் சொன்னான் பப்லு “ எங்க மிஸ் mother teresa வை மதர் திரிசான்னு சொன்னாங்க. அது எனக்கு சரியா ஞாபகமில்லை. அதான் த்ரிஷாவான்னு கேட்டேன் என்றான். தலையிலே நங்கென்று குட்டினேன்.

பின் நானே அவனுக்கு நோபல் பரிசென்றால் என்ன என்றும், யார் யார் வாங்கினார்கள் என்றும் விளக்கினேன். த்ரிஷாவுக்கெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்றேன். படித்து முடித்த பின், புத்தகத்தை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சிறிது தூரம் சென்ற பப்லு, அங்கிருந்த எட்டு பேருக்கும் கேட்கும் படி கத்தினான்

“சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் கொடுத்தா ஒத்துப்ப. திரிஷா உனக்கு பிடிக்காது. அதான் அடிக்கிற”

 

Dec 6, 2009

பையா – ஹைய்ய்ய்யா

41 கருத்துக்குத்து

 

paiya-stills-011   

      பையா. இது கார்த்தியின் இரண்டாவது படமா மூன்றாவது படமா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் கலர் கலர் காஸ்ட்யூமில்  அவர் ஆடுவதை சன் மியூசிக்கில் நாம் பார்க்கப் போகும்  முதல் படமென்பது மட்டும் உண்மை. I strongly believe that karthi would have better dressing sense than any other in his league.

   மொத்தம் ஐந்து பாடல்கள். பொதுவாக லிங்குசாமியின் படத்தில் மெலடிக்கு முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கும்.

ஆனந்தம் - பல்லாங்குழியின், என்ன இதுவோ

ரன் - பொய் சொல்ல, மின்சாரம் என் மீது, பனிக்காற்றே

சண்டக்கோழி - தாவணி போட்ட தீபாவளி

பீமா – முதல் மழை, ரகசிய கனவுகள், எனதுயிரே.

இதிலும் அப்படித்தான் என்று சொல்லலாம். மேலே சொன்ன பட்டியலில் ஒரு படம் குறைவதைக் கண்டுபிடித்தவர்கள் நிச்சயம் அசல் சினிமா ரசிகர்கள் :))

1) துளி துளி (ஹரிச்சரன், தன்வி)

  Wow!! what a start ? ஆரம்பமே கிடார்தான். இந்த பிட்டை ரிங்டோனாக ஆக்கியிருக்கிறேன். கேட்பவர்கள் எல்லாம் முதல் முறை கேட்டவுடனே என்ன படம் என்கிறார்கள். மென்மெல்லிய மெலடி என்று சொல்லலாம். வழக்கம் போல அதே வேண்டுதல்தான். யுவனின் சின்ன சின்ன அதிசயத்தை ரசிக்க ஹெட்ஃபோனில் கேளுங்கள். Interlude.பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையிலோ, சரணத்துக்கும் அனுபல்லவிக்கும் இடையே வரும் பி.ஜி.எம்மைத்தான் interlude என்பார்கள். இதில் இரண்டாவது interlude கவனியுங்கள். ரிதமே இல்லாமல் வருகிறது. இதற்கு முன் இப்படி வந்ததாக எனக்கு நினைவில்லை. எம்மகனில் ஒரு பாட்டு முழுவதுமே இயற்கை சத்தத்தை வைத்தே அமைத்திருந்தார் வித்யாசாகர். ஆனால் கேட்கத்தான் முடியவில்லை. இதில் நன்றாக வந்திருக்கிறது. ஹரிச்சரனின் குரலிலும், பாடுவதிலும் நல்ல முன்னேற்றம். டெடிகேஷன்களுக்கு இன்னொரு ”முதன் முறை” என்று சொல்லலாம். யுவன் ராக்ஸஸ்ஸ்ஸ

2) பூங்காற்றே (பென்னி தயாள்)

பாடியவர் பென்னி தயாள் என்னும்போதே எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. காதலியை கண்டுபிடித்த காதலன் பாடும் பாடல். இந்த மெட்டை எளிதில் ரீச் ஆகும்படி கம்போஸ் செய்திருக்கலாம். யுவன் ஏதோ முயற்சி செய்திருக்கிறார். அதனால் பல்லவியை தவிர்த்து எதுவும் உடனே கவரவில்லை. ஆனால் தொடர்கவனிப்பில் மனதை மயக்குகிறது. இருந்தும் ஏதோ குறைகிறது. Bass guitarன் ஆதிக்கம் அதிகம். இந்த ஒரு கருவியை போதுமடா சாமி என்பது போல் ஆக்கிய பெருமை பரத்வாஜையே சாரும். எதற்கெடுத்தாலும் பேஸ் கிட்டாரைத்தான் நோண்டுவார்  மனுஷன்.

3) என் காதல் சொல்ல (யுவன்)

அதே அதே. போகாதே, பொய் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி என்று யுவன் தனக்கென ஒரு டிராக்  வைத்திருப்பார். சென்ற முறை சர்வத்தில் சொதப்பியவர் கவனமாக இந்த முறை சிக்சர் அடித்திருக்கிறார்.வழக்கமாக காதல் தோல்வியடைந்த பின்தான் யுவன் வருவார். இந்த முறை ஹீரோவுக்கு காதல் வந்தவுடனே யுவனை அழைத்துவிட்டார்கள். அப்படியே உங்களுக்கும் ஒரு துணையை புடிச்சுக்கோங்க பாஸ்.    ஆங்காங்கே ”பொய் சொல்ல” பாடல் நினைவுக்கு வருவதற்கு மெட்டு காரணமல்ல. யுவனின் குரல்தான் காரணம்.

காதல் வந்தாலே கண்ணோடுதான்

கள்ளத்தனம் வந்து குடியேறுமோ

முத்துக்குமார். நீங்க ஆடுங்க தல.

4) அடடா மழைடா (ராகுல் நம்பியார், சைந்தவி)

தமிழ் சினிமா இலக்கணப்படி க்ளைமேக்ஸுக்கு முன்பாக வரும் பாடல். குத்துப்பாட்டு என்று ஒதுக்கிவிட முடியாது. ரசனையாகவே வந்திருக்கு. மெட்டுக்கும், படத்தின் மூடுக்கும் ஏற்றப்படி வார்த்தைகளை அமைப்பதில் முத்துக்குமாரை மிஞ்ச முடியாது. வல்லினத்தில் வித்தைக் காட்டுகிறார். ராகுல் நம்பியாரை கேட்டு எத்தனை நாளாகி விட்டது? சைந்தவியும் ராகுலும் சரியான தேர்வு என்று சொல்ல வைக்கிறார்கள். யப்பா கார்த்தி.. ஆடுவிங்க இல்ல?

5) சுத்துதே சுத்துதே (கார்த்திக்,சுனிதா சாரதி)

பொதுவாக தமிழ் சினிமா பாடல்களில் பல்லவி நன்றாகயிருக்கும்.(அவங்க இல்ல சாமியோவ்) போகப்போக கடுப்படிப்பார்கள். இந்தப் பாடலில் பல்லவியைக் கேட்டு நெக்ஸ்ட் பட்டனை தட்டிவிட்டேன். கடைசியாக கேட்கும் போது ஈர்த்தது. கார்த்திக்குன் குரல் பெரிய பலம். டூயட்தான். இருந்தாலும் இதற்கு நடனம் அமைப்பது சற்றி சிரமம் போல் தெரிகிறது. பார்ப்போம்.

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும், சிவா மனசுல சக்தியென்று அட்டகாசமாக 2009ஐ துவக்கினாலும் இடையில் சர்வம், முத்திரை, வாமனன் என்று சறுக்கல்தான் யுவனுக்கு. யோகி நன்றாக இருந்தும் ஹிட்லிஸ்ட்டில் சேரவில்லை.இதோ பையா மூலமாக i am back என்கிறார். துளியும் துளியும், என் காதல் சொல்லவும் இனிவரும் கான்செர்ட்களில் நிச்சயம் இடம் பெறும்.யுவன், முத்துக்குமார் ஜோடியென்றால் பெரிய எதிர்பார்ப்பிருக்கும். ஆனால் பாடல்கள் படத்தோடு ஒன்றாமலே வருவதால் பகீரத பிரயத்தனமில்லாமல் ஜஸ்ட் லைக் தட் எழுதி இருக்கிறார். ஆனாலும் ஹிட்தான்.

Verdict : ஒரிஜினல் சிடி வாங்கலாம்.

பி.கு : பாலு ரசிகர்கள் இந்தப் பாடலை நிச்சயம் இந்நேரம் கேட்டிருப்பீர்கள். நாணயம் என்ற படத்தில், ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ஒரு மெலடி, ”நான் போகிறேன்”. உடன் பாடியிருப்பவர் சித்ரா. கிளாசிக்.

Dec 3, 2009

பிரமாதம் பிரணவ்

34 கருத்துக்குத்து

 

   அந்த சிறுவனுக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கலாம். தூர்தர்ஷனில் வந்த மகாபாரத போரை, போரடித்தாலும் பார்த்துக் கொண்டிருப்பான். என்னப்பா இது? ”அம்புல இருந்து நெருப்பு வருது. தண்ணி வருது. ஒரு அம்பு விட்டா நூறா மாறுது.பல மைல் தூரம் போய் அடிக்குது. கேட்டா வரம் வாங்கியிருக்கிறான்னு சொல்றாங்க. கேனத்தனமா இருக்கே” என்றான் தன் தந்தையிடம். அவர் படித்துக் கொண்டிருந்த ஹிந்துவை மூடி வைத்துவிட்டு இவனோட வந்தமர்ந்தார்.

தம்பி, புராணம் இதிகாசம் எல்லாம் உண்மை கிடையாது. ஆனா அதுல சொன்ன கதைகளும், இது மாதிரியான பொருட்களும் சொல்லும் விஷயம்தான் முக்கியம். அதை மட்டும் நாம் எடுத்துக்கிட்டு போயிடனும்.

புரியலையேப்பா

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல ஒரு கதவு இருக்கும் இல்ல.

ஆமா. அண்டா..

அதேதான். அது என்ன மந்திரத்திலா திறக்குது?

இல்ல. அந்த மந்திரம் கேட்ட உடனே உள்ள இருந்து சில பேரு சுத்துவாங்க. திறக்கும்.

அதேதான் கண்ணு. இந்த போருல காட்டுற எல்லாமே சாத்தியம்தான். ஆனா அது எப்படி சாத்தியம்ன்றத கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். இந்த உலகத்துல ஒரு விஷயம் எப்படி நடக்குதுன்னு தெரியற வரைக்கும் அது கடவுள் வேலை. அந்த லாஜிக்க கண்டுபுடிச்சிட்டா அறிவியல். உனக்கு இன்னும் கொஞ்ச வயசு ஆச்சுன்னா நீயே யோசிப்ப.

அந்த உரையாடல் அந்த அளவில் முடிவுற்றது. மூன்று வருடங்களுக்கு பிறகு அந்த சிறுவன் யோசிக்கத் தொடங்கினான். இன்றைய பிரபலமான கண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்குமே proto டைப்பாக நம் முன்னோர்கள் கதைகளில் சொல்லியிருப்பதை உணர்ந்தான். ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் செய்த வேலைகளைத்தான் பிரம்மாஸ்திரங்கள் செய்தன. சற்று கூர்ந்து கவனித்தால் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் இப்படி ஒரு ஆதர்சம் இருக்கும்.அந்தப் பையன் யாருன்னு கேட்கறீங்களா? இன்னும் தெரியலைன்னா நீங்க விசுவின் அரங்கங்களை பார்த்ததில்லைன்னு அர்த்தம்.

  ரைட்டு விடுங்க. இதெல்லாம் எதுக்குடான்னு யோசிக்கிறீங்களா? நம்மில் பலருக்கு ஏற்கனவே பரிச்சயமாகிவிட்டிருப்பார் இந்த இளைஞர். பிரணவ், ஆம் Pranav Mistry தான். உலகைமே திருப்பிப் பார்க்கும்படி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார் இந்த குஜராத்திய இளைஞர். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிரணவின் பெயரை விரைவில் உச்சரிக்காத மீடியாக்களே இல்லை எனும் நிலை வரப்போகிறது. இந்தியாவின் பில்கேட்ஸ் என்றெல்லாம் இவரை மீடியாக்கள் கொச்சைப்படுத்தக்கூடும். (அது அவர்களைப் பொறுத்தவரை பாராட்டு). அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்கறீர்களா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

    பட்டணத்தில் பூதம் என்று திரைப்படம். அதில் பூதத்தின் உதவியோடு பல அதிசயங்களை நடத்துவார்கள் இரண்டு நாயPranavMistry2கர்கள்.  நாளிதழ் விளம்பரத்தில் இருந்த சிவாஜி திடிரென “பாட்டும் நானே பாவமும் நானே” என்று பாடத் தொடங்குவார். அடுத்தப் பக்கத்தில் இருந்த கார், நகரத் தொடங்கும்.எல்லாமே பூதத்தின் வேலைதான். அந்த பூதத்தைத்தான் கண்டுபிடித்திருக்கிறார் பிரணவ். அவர் கண்டுபிடித்த பூதத்தை நம் உடலில் வைத்துக் கொண்டால் வெள்ளத்தாளில் வீடியோகேம் ஆடலாம். நம்ம ஊரு இயக்குனர்கள் இரண்டு கைகளை ‘ட’ வடிவத்தில் வைத்து பார்ப்பார்களே,அப்படி புகைப்படம் எடுக்கலாம். எடுத்தப் புகைப்படத்தை கைகளாலே வெட்டி குறுக்கலாம். அல்லது பெரிதாக்கலாம். இதைப் பாருங்கள்.

   இவர் கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம் டிஜிட்டல் உலகையும் நம் வாழும் நிஜ உலகையும் இணைப்பது. நம் உடலில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறு கருவிகளின் வாயிலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நினைத்த நேரத்தில் பயன்படுத்த  செய்வதுதான் பிரணவின் கண்டுபிடிப்பு. கேட்க எளிமையாக தெரிந்தாலும் இதன் பயன்கள் சொல்லி முடியாது. இதற்கு அவர் வைத்திருக்கும் செல்லப்பெயர் Sixth Sense. அடுத்து இன்னொரு பதிவில் இது செயல்படும் முறையை பார்ப்போம்.அதெல்லாம் வீடியோவிலே பார்த்துட்டோம்ன்னு சொல்றீங்களா? பிரணவ் விவரித்ததை தமிழில் கிடைக்கச் செய்ய வேண்டும். கவிதை மட்டுமல்ல, இது போன்ற தொழில் நுட்பங்களும் தமிழில் கிடைக்க வேண்டுமென்பதே என் ஆசை.

sixthsense-pranav-mistry

   பிரணவைப் பற்றி நேரம் ஒதுக்கி எழுதுவதற்கு காரணம் சிக்ஸ்த் சென்ஸ் என்ற மேஜிக் மட்டும்  அல்ல. கோடிக்கணக்கான டாலர்களோடு இந்த தொழில்நுட்பத்தை வாங்க பல நிறுவனங்கள் வரிசையில் நிற்க, மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்பதற்காக இலவசமாக இந்த சேவையை தரப்போகிறேன் என்றாரே!!! அதற்காக. அந்த ஒரே காரணத்திற்காகத்தான் பிரணவை பாராட்ட வேண்டும்.  You are great young man.

 

all rights reserved to www.karkibava.com