Dec 16, 2008

இப்படியும் சில் ஊருண்டு..அன்பின் கார்க்கி..,
ரேஷன் கடை மாதாந்திர ஆய்விற்க்காக சென்ற முலுக்கலபள்ளி என்ற ஊரில் கெரசின் வாங்க காத்திருந்த அப்பாவும் மகனும் அவ்ர்தம் ஊரும்.....
இரு பெரும் பொருளாதார மேதைகளின் சாதனையால் ஒரு செகண்டிற்க்கும் குறைவான நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்த உங்களுடன் என்னால் செல்பேசிட முடிந்தது..மலை கிராமத்திலும் ஏர் செல் கவரேஜ் வசதி. நாட்டினுடைய வளர்ச்சி சதவீதம் இவர்களை போன்ற ஏழை விவசாயிகளுக்கு என்ன செய்தது...அல்லது நாம்தான் என்ன செய்ய போகிறோம்...?
பதிவாக போட முடியுமெனில்  நன்றி.
கும்க்கி
தகவல் தந்த நம் நண்பர் கும்க்கிக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிருங்கள். ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்ற‌ம் நிகழ வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

34 கருத்துக்குத்து:

அத்திரி on December 16, 2008 at 7:16 PM said...

1

அருண் on December 16, 2008 at 7:18 PM said...

me the 2nd??

அருண் on December 16, 2008 at 7:20 PM said...

//முலுக்கலபள்ளி //

இது தருமபுரி/கிருஷ்னகிரி மாவட்டமா?

அருண் on December 16, 2008 at 7:21 PM said...

//நாட்டினுடைய வளர்ச்சி சதவீதம் இவர்களை போன்ற ஏழை விவசாயிகளுக்கு என்ன செய்தது...அல்லது நாம்தான் என்ன செய்ய போகிறோம்...? //

நச்.

அத்திரி on December 16, 2008 at 7:23 PM said...

இந்த படங்களை பார்க்கும் போது என்னுடைய கிராமமும், பக்கத்து கிராமங்களும் ஞாபகத்திற்கு வருகிறது. மருத்துவ வசதி வேண்டும் என்றால் குறைந்தப்பட்சம் 15 கிலோமீட்டர் தூரமுள்ள அம்பாசமுத்திரத்துக்கோ அல்லது 25 கிலோமீட்டர் தூரமுள்ள தென்காசிக்குத்தான் வரனும். இந்த ஒரே காரணத்திற்காக என் அப்பாவை இழந்ததும்.........

அன்புடன் அருணா on December 16, 2008 at 7:25 PM said...

//ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்ற‌ம் நிகழ வேண்டுமென ஆசைப்படுகிறேன்.//

1
me the 2nd??
ம்ம்ம் இதெல்லாம் உருப்படாது கார்க்கி!!!!

கார்க்கி on December 16, 2008 at 7:26 PM said...

//அருண் said...
//முலுக்கலபள்ளி //

இது தருமபுரி/கிருஷ்னகிரி மாவட்டமா//

ஆமாம் அருண்..

******************

@அத்திரி,

சோகம்.. இன்னுமும் அவர்கள் அப்படியே இருக்க, இந்தியா ஒளிர்கிறது, வல்லரசு என தம்பட்டமடிப்பது மடத்தனம்.. நண்பர்களுடன் ஒரு நாள் இது போன்ற கிரமத்திற்கு சென்று வரலாமா? தயார் என்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கார்க்கி on December 16, 2008 at 7:28 PM said...

விஜய் டீவியில் ஒரு நாள் பார்த்தேன். வெறும் இருவர் மட்டுமே ஒரு ஊரில் இருக்கிறார்கள்.. மீதிப் பேர் எல்லாம் இடம் பெயர்ந்து விட்டனர்.. எந்த வ்சதியும் இல்லாதுதான் காரணம்

Shakthiprabha on December 16, 2008 at 7:33 PM said...

I think the best solution is to concentrate on developing towns, rather than cities.

BIG MNCs, HOSPITALS, ESSENTIAL SERVICES should set up units in towns and there by make middle class and upper middle class commutattions possible from towns.

Every development is a chain reaction of another.

Its like hierarchy. We cant reach development of village directly, we NEED TO go thro town development.

Every citizen should be eager to shift his base to the town.


For that schools, mfacturing unites, offices, banks, commuting etc should be easily made available from towns.

Once town is developed we shall and can turn our concentration towards smaller villages.

இல்லாட்டி வெறுமே பேசியே காலம் போயிரும்.

like rich becoming richer
and poor poorer

நம் வேறான கிராமம் மட்டும் அப்படியே நின்ற இடத்தில் இருந்தால், அறுவடை, காய்கறி, நெர்பயிற் சாகுபடி எல்லாம் பாதிக்கப்படும்.

உழவனின் சிரிப்பில் தான் நாளைய பாரதம்.

அதற்குப் படிப்படியாய் வழி வகுக்கவெண்டும்.

கும்க்கி on December 16, 2008 at 7:35 PM said...

அய்ய்யயோ
ஏனுங்க உங்க ஸ்டைலில் பதிவாக போடுங்கன்னு சொல்லவந்தா இப்படி மாட்டி உட்டுட்டீங்களே.....

இனி சஞ்சய் முகத்துல எப்படி விழிப்பேன்.................?

கும்க்கி on December 16, 2008 at 7:36 PM said...

அருண் said...
//முலுக்கலபள்ளி //

இது தருமபுரி/கிருஷ்னகிரி மாவட்டமா?

கிருஷ்ணகிரி மாவட்டம்..

கார்க்கி on December 16, 2008 at 7:46 PM said...

@சக்திபிரபா,

நல்ல கருத்து..

/
உழவனின் சிரிப்பில் தான் நாளைய பாரதம்//

நிதர்சனமான உண்மை

***************************

//கும்க்கி said...
அய்ய்யயோ
ஏனுங்க உங்க ஸ்டைலில் பதிவாக போடுங்கன்னு சொல்லவந்தா இப்படி மாட்டி உட்டுட்டீங்க//

யோசிச்சென்.. எனக்கு அந்தப் படுத்துல இருக்கிறத வார்த்தைல கொன்டு வர முடியல.. மக்களும் அப்படி ஃபீல் பண்ணுவாங்கணு நம்பறேன்..

அருண் on December 16, 2008 at 8:13 PM said...

இதப்போல சமூகப்பதிவுகள் நிறைய போடுங்கள்.

அருண் on December 16, 2008 at 8:14 PM said...

//உழவனின் சிரிப்பில் தான் நாளைய பாரதம்.

அதற்குப் படிப்படியாய் வழி வகுக்கவெண்டும்.//

100% உண்மை!

வித்யா on December 16, 2008 at 8:53 PM said...

:(
ஏதோ ஒரு ஆங்கில செய்தி சேனலில் மும்பை தாக்குதலை மையப்படுத்தி ஒருவர் கருத்து கூறினார். மாநிலங்கள கார்ப்பரேட் கம்பெனிகளின் தாரை வார்த்துவிட வேண்டும் என்று. என்னைக் கேட்டால் கார்ப்பரேட் கம்பெனிகள் தத்தெடுத்துக்கொள்ளலாம். கொஞ்சமாவது மாற்றம் இருக்கும் என நினைக்கிறேன்.

narsim on December 16, 2008 at 8:55 PM said...

கார்க்கி..(சகானுதான கூப்புடுவான்னு யோசிக்கிறீங்களா சகா.. நல்ல மேட்டர் இல்லையா.. அதான்.. சீரியஸா பேர்..)

கிராமங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டது என்று ஏர்டெல் ஏர்செல் ஏடிம் மற்றும் பெப்சி விளம்பர பலகைகள் அறிவித்தாலும்.. சற்று உற்று பார்த்தால் அவர்கள் இழந்து கொண்டிருக்கும் வாழ்வும் கிராமத்து தன்மையும் மிகப் பெரிய அச்சத்தை உண்டாக்குகின்றன..

வயல்களில் இறங்கி வேலைபார்ப்பவர்கள் கையில் மெபைல் இருப்பதை பார்த்து சந்தோஷப்படும் அதே வேளையில் நாளை அந்த வயல்கள் இல்லாமல் போவதற்கான ஆதார வளர்ச்சியின் அச்சாரம் தான் அந்த மொபைல்கள் என்பதை உணர்ந்தால் உண்மை புரியும்.. கடினமான வரிகளில் சொல்கிறேன்.. புரியாதவர்களுக்கு..

நிலம்..ரியல் எஸ்டேட் தொழில் தான் மிக முக்கிய பணப்புழக்கம் ஏற்படுத்தும் தொழில்.. துர் அதிர்ஷ்டம் என்னவென்றால்.. வேறு எந்த பொருளும் நன்றாக போனால் நிறைய தயாரித்து விற்கலாம்.. ஆனால் நிலம்?? ஆக அனைத்து விளை நிலங்களும் விற்ற பின் விவசாயத்திற்கு எங்கு போவது..?? பிறந்தது முதல் விவசாயம் பார்த்து மண்ணை தெய்வமாய் நினைத்து வாழும் விவசாயிகளின் வாயில் நாம் வைக்கப் போவது.. அதே மண் மட்டும் தான்.. ரியல் எஸ்டேட் என்ற பெயரில்..

கிராமங்கள் நாசமாகப் போகக் காரணம் விவசாய நிலங்கள் மூர்ச்சையாகிக் கொண்டிருப்பதுதான்.. அரசு விவசாயத்திற்கு என்று என்ன செய்கிறது.. கடனை தள்ளுபடி செய்து ஓட்டு வாங்குவதோடு முடித்துக் கொள்கிறது..அதையும் தாண்டி .. ஒரு மூட்டை நெல்லிற்கு அரசின் பணம் எவ்வளவு தெரியுமா?? த்தூ.. என்று துப்பிக் கொண்டே ஆனால் வேறு வழி இல்லாமல் தான் துப்பிய எச்சிலை தானே புறங்கையால் துடைத்துக் கொண்டு.. கிடைக்கும் காசை வாங்கி.. அடுத்த போகம் விளைச்சலுக்கு மறுபடியும் வட்டிக்கு வாங்கி மீண்டும் விவசாயம் செய்கிறான்.. நாம் சப்பாத்தி சாப்பிட்டு விட்டு தாகம் எடுக்காமல் இருக்க மோருக்கு கொஞ்சம் சோறை சாப்பிட்டு தூங்கி விடுகிறோம்.. அவன் தூக்கில் தொங்கி விடுகிறான்..

விவசாயி காக்கப்படவேண்டும்.. ஏனெனில்.. விவசாயம் காக்கப் பட வேண்டும்...

வித்யா on December 16, 2008 at 8:55 PM said...

நான் படித்த காலேஜ் பள்ளிக்கூடம், மருத்துவமனை, விழிப்புணர்வு முகாம் என பல நல்ல விஷயங்களை சுற்றியுள்ள கிராமத்தில் ஏற்படுத்தினார்கள். டாடா கம்பெனி கூட இம்மாதிரி செய்வதாகக் கேள்வி.

வித்யா on December 16, 2008 at 8:59 PM said...

நர்சிம் சார் சொல்வது நிதர்சனமான உண்மை. அப்புறம் சோத்துக்கு பதில் கேப்ஸ்யூல் தான்:(

சதீசு குமார் on December 16, 2008 at 9:11 PM said...

உழவனின் சிரிப்பில் தான் நாளைய உலகம்.. இது இன்னும் பொருத்தமாக இருக்கும்..

தெரியாமலா வள்ளுவன் உழவுத் தொழிலை போற்றியிருக்கிறான்..

PoornimaSaran on December 16, 2008 at 10:25 PM said...

இப்படியும் சில கிராமங்கள்

thushanthini on December 16, 2008 at 10:31 PM said...

எல்லோருமே நகரத்தின் வளர்ச்சி பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் அதன் பினனால் ஆதி முலம் இப்படி பட்ட கிராமங்கள் என்பதும் அல்லது விவாசாயிகள் என்பதை மறந்து விட்டார்கள் அல்லது இவர்களை போன்றவர்க இருப்பது தெரிந்து இருக்காது
now a days இயற்கை இவர்களுக்கு துணை போவது இல்லை
India என்று சொன்ன உடன் நான் கவலைப்படும அல்லது கோவப்படும விடையங்களில் இப்படி பட்ட விடையங்களும் ஒன்று

"நண்பர்களுடன் ஒரு நாள் இது போன்ற கிரமத்திற்கு சென்று வரலாமா?"
anna நல்ல விடையம் அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்

SK on December 16, 2008 at 10:34 PM said...

நல்ல ஒரு கலந்துரையாடலை எதிர் பார்க்கிறேன்

கும்கி சார், உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது

கார்க்கி, இதுக்கு ஒரு வழி பண்ணுவோம்.

பூர்ணிமா, சில இல்லை பல கிராமங்கள் இப்படி தான் இருக்கு.

Itsdifferent on December 17, 2008 at 3:54 AM said...

Spread the wealth. What I mean by wealth is not just hard cash.
Every wealth that we all have attained. How did we get them, by becoming economically stronger.
I have written to many of the bloggers, individuals about Micro Finance. We have to enable folks like these, to do better, whatever they are good at. Cash reaps cash. We have to train them, if they dont have any skills, remember we were not experts the first day of our work, we had the "Opportunity" to learn and become better.
Read about such an effort in payir.org.
Can each and everyone ready to spend some of our time, for such efforts.
The concept here is called "Giving Back to the community".
I would encourage all the bloggers to write more and more about such efforts, use our collective wisdom, team strength to create an organization, for such efforts.
Can we do that?

Itsdifferent on December 17, 2008 at 4:05 AM said...

There is another great example in the name of popatrao pawar. I have written about him as well, in some of the feedback.
These are our examples, all we need to do is just replicate their efforts in a larger scale.
Most of us are buried in our daily grind, it takes resolve to come out of that grind and start something, and expand in a larger scale.
I can see lot of bloggers from so many towns and cities, and I strongly believe, that if we combine our forces and start something.
Lets do something....
I am ready for any such efforts, I have similar minded friends here in the US, who are all ready to contribute financially.
If we can create an Organization in TN, on the ground, we can really make a difference.

தாரணி பிரியா on December 17, 2008 at 6:15 AM said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா on December 17, 2008 at 6:17 AM said...

கிராமங்களோட வளர்ச்சி ? அப்படி ஒண்ணு நடத்து இருந்தா ஏன் இந்த மாதிரி இருக்கான்னு தெரியலையே. இந்த வளர்ச்சியில கூட அரசியல் இருக்கு. ஏதாவது தலைவரோட ஊருக்கு போற வழியிலே இருக்கற ஊருன்னா ஒரளவுக்கு வசதிகள் கிடைக்கும். அந்த மாதிரி இல்லையின்னா இப்படியே கிடக்க வேண்டியதுதான்.

கார் விலையையும் செல்போன் விலையையும் கொறைச்சாச்சு இல்லையா? அப்புறம் என்ன எல்லோரும் முன்னேறியாச்சு. இல்லைன்னாலும் முன்னேறிடுவாங்க. இங்க எங்க ஊருல காலேஜ் கட்ட, பெரிய பெரிய ஆபிஸ் கட்ட அப்படின்னு நிறைய பேர் நிலத்தை வித்துட்டு போயிட்டாங்க. எங்க பாத்தாலும் பச்சையா காடா வயலா இருந்த இடம் எல்லாம் இப்ப பெரிய பெரிய காலேஜாவும் கார்ப்ப்ரேட் ஆபிஸாவும் இருக்கு. பாக்கறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு அரிசி, பருப்பு எல்லாம் கிடைக்குமான்னு யோசிச்சு பார்த்தாதான் ஒண்ணும் புரியலை.

நாம என்ன செய்ய முடியும் எனக்கு தெரியலை. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட போய் நிலத்தை விக்க வேண்டாம் சொன்னப்ப அவர் கேட்கலை. வருசம் பூரா கஷ்டப்பட்டு வர்றதை விட இவங்கஅதிகமா பணம் தராங்க? என்ன பண்றதுன்னு கேட்டார் எனக்கு பதில் சொல்ல தெரிய்லை. இப்ப எங்க ஊரை பாத்திங்கன்ன (கோவையிலிருந்து ஒரு 20 கிமீ வரும்) மெட்ரிக் ஸ்கூல ஆரம்பிச்சு Engineering காலேஜ் வரை எல்லாமே இருக்கு. ஆனா எங்க ஊர்காரங்க அங்க ஒரு 10% படிச்சாலே அதிகம்தான். அவங்க எல்லாம் இன்னும் இதே மாதிரிதான் ஒரு ரூபா அரிசிக்கும் பத்து லிட்டர் கெரசினுக்கும் வரிசையில நின்னுகிட்டு இருக்காங்க. இதுல பாரதம் ஒளிர்கிறதுன்னு பேப்பர்ல போடறை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில படிச்சுட்டு ம் நாமளும் இருக்கோம்.

என்னதான் சம்பாதிச்சாலும் பசிக்கும்போது சோறுதான் சாப்பிட முடியும். இவங்க நல்லாயிருந்தாதான் நாம நல்லாயிருக்க முடியும். எல்லாம் புரியதுதான். ஆனா என்ன செய்யறதுன்னதுதான் தெரியலை. வித்யா சொன்ன மாதிரி பெரிய நிறுவனங்கள் கிராமங்களை தத்து எடுத்துக்கலாம் அப்படின்னும் தோணுது. இங்க கூட "ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்" நிறைய நல்ல காரியங்களை செஞ்சுகிட்டு வர்றாங்க.

நம்மதான் ஏதாவது மாற்றம் கொண்டு வரணும்.

கும்க்கி on December 17, 2008 at 8:19 AM said...

SK said...
நல்ல ஒரு கலந்துரையாடலை எதிர் பார்க்கிறேன்

கும்கி சார், உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது. Hello S K
pls see my profile.&.mail me.

கார்க்கி on December 17, 2008 at 9:39 AM said...

பலர் நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளனர். Itsdifferentஅவர்கள் சொல்வது சற்று முயற்சி செய்தால் சாத்தியம் என்றே தெரிகிறது. தலைகளிடம் ஆலோசித்து விட்டு இது குறித்த விரிவான பதிவையும் செயல்திட்டத்தையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.. மேலும் பல கருத்துகளை எதிர் பார்க்கிறேன்..

மிக்க நன்றி நண்பர்களே...

Itsdifferent on December 17, 2008 at 9:58 AM said...

Thank you Karki, finally I was able to break the ice with you all.
I am ready for any kind of action.
I have lots of ideas on how to make it work. We should definitely leverage Payir.org and other implementations.
I am excited, finally someone is ready to acknowledge the fact, that we can!!!
Lets do it....

பாபு on December 17, 2008 at 10:59 AM said...

இந்தியா ஒளிருகிறது என்பவர்களை அந்த பையன் முகத்தை பார்க்க சொல்ல வேண்டும்.
உண்மைய சொன்னா என்ன சொல்றதுன்னே தெரியலே.
corporate கம்பெனிகளுக்கு காட்டும் சலுகையில் கொஞ்சம் விவசாயிகளுக்கு காட்டினால் போதும்.அவர்கள் வாழ்க்கை வளமாகும்

அத்திரி on December 17, 2008 at 11:55 AM said...

என்னுடைய 10வயதில் என்ன போக்குவரத்து வசதி இருந்ததோ அதுதான் இப்பொழுதும்.
எங்க ஊரை விட்டு வெளியே வரனும்னா காலை 5மணி, 8:30,9:00 மதியம் 12:00 1:00, 3:00, 4:30, இரவு 7:00, 7:30 அவ்ளோதான். இடைப்பட்ட நேரங்களில் போகனும்னா குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் நடந்து பக்கத்து ஊர்ல போயி பஸ் பிடிக்கனும்.
ஓரேஒரு ஆறுதல் பக்கத்து ஊருக்கு மினி பஸ் வரும். அதுதான் லேட்டஸ்ட்.. இடைப்பட்ட நேரங்களில் ஏதாவது அவசரம்னா ஒன்னுமே செய்ய முடியாது.

படிச்சி முடிச்சிட்டு 9 மாதங்கள் விவசாயம் அப்பாவோடு சேர்ந்து பார்த்தேன்.மே-ஜூன் மாதவாக்கில் நிலக்கடலை, நெல் பயிரிடுவோம்.. தென்மேற்கு பருவமழை கரெக்டா இருந்திச்சின்னா தண்ணிக்கு நோ பிராப்ளம். இல்லைனா தண்ணிக்காக வயல்களில் இரவு பகலா பழியா கிடக்கனும். முறை வைத்து தண்ணி விடுவாங்க..

இப்படி நாள் நேரம் பாக்காம கஷ்டப்பட்டு விலைஞ்சதை வித்துட்டு கணக்கு பாத்தா
நஷ்ட கணக்கு தான் வரும். செலவு செய்தது 4000ரூபாய், விளைஞ்சதுல கிடச்சது 2000ரூபாய்... இப்படியே தான் போய்கிட்டு இருக்கு.

இன்றைக்கு அரசாங்களின் கூக்குரல் "கிராமங்களிலும் டெலிபோன்,செல்போன் வசதி இந்தியா முன்னெற்து".

விளை நிலங்களை விக்கிற அவலம் வரவில்லை... காரணம்.. நகரங்களில் இருந்து ரொம்பா தூரம் தள்ளி இருப்பதுதான்.

இந்த விசயத்தில் ஆண்டவனுக்கு நன்றி.

அத்திரி on December 17, 2008 at 11:57 AM said...

வருகிற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி எங்க ஊர்ல திருவிழா...

வருகிறீர்கள?? சகா...........

rapp on December 18, 2008 at 5:12 PM said...

:(:(:(

Karthik on December 20, 2008 at 1:53 PM said...

நாமதான் கலர் டீவி கொடுக்கிறோமே கார்க்கி?

ஒரு கட்சியை மட்டும் சொல்லவில்லை. எல்லாரும் அதே மாதிரிதான். நம் அரசுக்கு கிராமங்களை பற்றிய சென்ஸிடிவிட்டி கொஞ்சமும் கிடையாது என்பதற்காக சொல்ல வருகிறேன்.

லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும்போது 'வல்லரசு' கனவு காண நம்மால் மட்டும்தான் முடியும்.

 

all rights reserved to www.karkibava.com