Dec 8, 2008

டப் டிப் டொக் டங் டமால் $%&$^@#$%


    சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். நான் எட்டாவது படிக்கும் போது ஆசிரியர் ஒருவர் ஒவ்வொருவருடைய வாழ்க்கை லட்சியம் பற்றிக் கேட்டார். ஒருவன் டாக்டர் ஆவது என்றான். எஞ்ஜினீயர், ஆசிரியர்,வக்கீல என ஆளுக்கு ஒன்று சொன்னர்கள். என முறை வந்தபோது அப்படி ஏதும் இல்லை என்றேன். மொத்த வகுப்பும் விநோதமாய் பார்த்தது. பலரது Aim அப்போதுதான் உதயமானது என்பதையும் மறந்து வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள்.

   குறிக்கோள் இல்லாத வாழ்க்கைக்கு பல உவமைகள் சொன்னார் ஆசிரியர். டாக்டர் ஆவதுதான் குறிக்கோள் என்றால் டாக்டர் ஆன பின் என்ன என்று என் கேள்வியைக் கேட்டேன். எதிர்கால் டாக்டருக்கு பதில் தெரியாததால் ஆசிரியரே பதில் சொன்னார். அப்போது வேறு ஒரு குறிக்கோள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

   அவர் மாணவர்களை அடிக்க மாட்டார் என்பதால் நானும் என் விவாதத்தை தொடர்ந்தேன்.

   கால்பந்தாட்டத்தை உதாரணமாக சொன்னார். கோல் என்ற Aim  இல்லாமல் விளையாடினால் சுவாரஸ்யம் இருக்காது. இரண்டு அணியினரும் கோல் என்ற Aimஐ நோக்கி போவதுதான் ஆட்டம். அதுதான் சுவாரஸ்யம் என்றார்.

   இது போல விளையாடும்போது ஏதாவ்து ஒரு அணி நிச்சயம் தோற்கும். அதனால் வாழ்வே சூன்யாமானதை போல அவர்கள் உணர்வார்கள். அது கூடாது என்பதாலே வேண்டாம் என நினைப்பதாக நானும் பதில் சொன்னேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான்.

  "சாலையின் இருபக்கமும் வாகனங்கள் எதிரெதிரே வந்தால் எப்படி போக முடியும்? அவர்கள் விருப்பப்படி போனால் யாரும் போக முடியாதல்லவா" என்றார்.

  “உண்மைதான் சார். அதற்கு தேவை விதிமுறைகளோ சட்டமோ தானே. குறிக்கோள் எதற்கு? ஓரிடத்திர்கு போய் சேர வேண்டும் என்ற பயணத்தை விட இலக்கில்லாமால் நம் விருப்பப்படி போகும் பயணம் தானே சுகம்” என்றேன்

   ஆசிரியர் என்பதால் அவரால் பதில் சொல்ல முடியாமல் போன இடத்தில் வாதத்தை முடித்துக் கொண்டார். மறுநாள் ஏதாவது ஒரு Aim எனக்கு நான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் உத்தரவிட்டார். அதோடு அந்த பீரியட் முடிந்து விட்டது.

  மறுநாள் மறக்காமல் வந்தவுடன் என்னை எழுப்பினார். (தூங்கிட்டு இருந்தியானு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்)

"என்னடா.. யோசிச்சியா?”

  அதை மறந்தேப் போன எனக்கு சட்டென்று மூளையின் மூலையில் பல்பு எரிந்தது. ஆம் என்பது போல தலையாட்டினேன்.

  சொல்லு.  என்ன உன் Aim?

  வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim.

  டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^

86 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on December 7, 2008 at 10:37 PM said...

:-)))...

mrs.doubt on December 7, 2008 at 10:44 PM said...

good aim...

Anonymous said...

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான்

i too say this often.

தாரணி பிரியா on December 7, 2008 at 11:14 PM said...

//பலரது Aim அப்போதுதான் உதயமானது என்பதையும் மறந்து வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள்.//


ரொம்பவே ரசிச்சேன் கார்க்கி

தாரணி பிரியா on December 7, 2008 at 11:18 PM said...

//மறுநாள் ஏதாவது ஒரு Aim எனக்கு நான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் உத்தரவிட்டார்//

:)

தாரணி பிரியா on December 7, 2008 at 11:21 PM said...

எனக்கும் இந்த மாதிரி நிறைய Aim இருந்து அது மாறி மாறி இப்ப இன்றைய பொழுது இனிதே முடிந்ததுன்னு சொல்லணும் அவ்வளவுதான் அப்படின்ற அளவுல வந்து நிக்குது :)

Anonymous said...

7

Anonymous said...

8

Anonymous said...

9

Anonymous said...

10

கார்க்கி on December 8, 2008 at 6:34 AM said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...//

வாங்க ஸ்மைலி ஆனந்த்

*******************************8

//mrs.doubt said...
good aiம்...//

வாங்க மேட்ட்ட்டம்ம்

*************************8

//Anonymous said...
என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான்

i too say this ofடென்.//

நன்றி அனானி

கார்க்கி on December 8, 2008 at 6:36 AM said...

//தாரணி பிரியா said...
//பலரது Aim அப்போதுதான் உதயமானது என்பதையும் மறந்து வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள்.//


ரொம்பவே ரசிச்சேன் கார்க்கி//

நன்றி தா.பி.

//எனக்கும் இந்த மாதிரி நிறைய Aim இருந்து அது மாறி மாறி இப்ப இன்றைய பொழுது இனிதே முடிந்ததுன்னு சொல்லணும் அவ்வளவுதான் அப்படின்ற அளவுல வந்து //

அதான் உண்மை.அதான் நிரந்தரம். மாயிக்கி எப்பவும் நிரந்தரம்தான் புடிக்கும் :))))

*************************************

இது என்ன நம்பர் விளையாட்டு அனானி.?

muru on December 8, 2008 at 7:03 AM said...

///டப் டிப் டமால் டொக் தடால் டங்///
அது சரி இது என்ன சப்தம்?

/// @#$%^&*@#$$%!@#$%^&*^///
இது நீங்க மயங்கி விழுந்ததா?

ச்சின்னப் பையன் on December 8, 2008 at 7:43 AM said...

:-))))))

ச்சின்னப் பையன் on December 8, 2008 at 7:43 AM said...

15

PoornimaSaran on December 8, 2008 at 8:24 AM said...

ஓ! நீங்க எப்பவுமே இப்படிதான? இல்லை இப்படிதான் எப்பவுமேவா?????

PoornimaSaran on December 8, 2008 at 8:26 AM said...

//@#$%^&*@#$$%!@#$%^&*
//


????????????????????????????

கார்க்கி on December 8, 2008 at 8:41 AM said...

// muru said...
///டப் டிப் டமால் டொக் தடால் டங்///
அது சரி இது என்ன சப்தம்?

/// @#$%^&*@#$$%!@#$%^&*^///
இது நீங்க மயங்கி விழுந்ததா//

டப் டிப் என் மேல விழுந்த அடி.. "^&*@#$$%!@#$%^&*" இது என்னை திட்டியது.. ஹிஹிஹி.சென்சார்ட்

************************************
// ச்சின்னப் பையன் said...
:-))))))//

வாங்க பெரியவரே..பின்ன வலைச்சர ஆசிரியர்ன்னா சின்னவரா?

*************************

//PoornimaSaran said...
ஓ! நீங்க எப்பவுமே இப்படிதான? இல்லை இப்படிதான் எப்பவுமேவா?????//

எப்பவாச்சும் இப்படி இருப்பேன்.. இப்படித்தான் எப்பவாச்சும் இருப்பேன்னும் சொல்லலாம்

ramesh said...

good aim

தாமிரா on December 8, 2008 at 10:21 AM said...

ரசித்தேன்.. எனக்கும் கூட அந்த வயதில் எந்த குறிக்கோளும் இருந்ததில்லை. போலீஸ் வேலை மீது ஒரு ஆசை இருந்தது. கற்பனை பண்ணிப்பாருங்கள்.. நானெல்லாம் போலீஸானால் நாடு தாங்குமா?

அடிக்காத வாத்தியாரையே அடிக்க வைத்த உங்கள் திறமை பதிவின் ஹைலைட்.!

சரவணகுமரன் on December 8, 2008 at 10:21 AM said...

நல்லா பேசி இருக்கீங்க, கார்க்கி...

ஆனா, அடுத்த நிலையை யோசிச்சாத்தானே அட்லீஸ்ட் இருக்குற நிலையில பிரச்சனை இல்லாம இருக்கும்?

சென்ஷி on December 8, 2008 at 10:37 AM said...

:))
சூப்பர்

prakash on December 8, 2008 at 10:38 AM said...

கார்க்கி போடும் எல்லா பதிவிலும் பாரபட்சம் இல்லாமல் கும்மி அடிப்பது
என்னோட AIM...

நான் ஆதவன் on December 8, 2008 at 10:56 AM said...

டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^

நான் ஆதவன் on December 8, 2008 at 10:57 AM said...

// prakash said...
கார்க்கி போடும் எல்லா பதிவிலும் பாரபட்சம் இல்லாமல் கும்மி அடிப்பது
என்னோட AIM...//

அப்ப இது மொக்க பதிவுன்னு சொல்றீங்களா?????

நான் ஆதவன் on December 8, 2008 at 10:59 AM said...

நல்லாயிருக்கு சகா உங்க பதிவும் உங்க குறிக்கோளும்...

அருண் on December 8, 2008 at 11:07 AM said...

இது உங்க வாழ்க்கையில நடந்த நிஜ நிகழ்ச்சியா?

prakash on December 8, 2008 at 11:43 AM said...

//அப்ப இது மொக்க பதிவுன்னு சொல்றீங்களா?????//

மொக்கை பதிவில் மட்டும் என்று நான் சொல்லவில்லை...
எல்லா பதிவிலும் என்று சொல்லியிருப்பதால் நான் எஸ்கேப் ....:):)

அத்திரி on December 8, 2008 at 12:07 PM said...

//வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim. //

நல்லாவே aim பண்னியிருக்கீங்க சகா

ஸ்ரீமதி on December 8, 2008 at 12:08 PM said...

//சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். //

என்னைப் போல் ஒருவன்... :)) (ஒருமைக்கு மன்னிக்கவும்)

ஸ்ரீமதி on December 8, 2008 at 12:08 PM said...

உங்க விவாதம் அழகா, உண்மையா இருந்தது.. :))

ஸ்ரீமதி on December 8, 2008 at 12:10 PM said...

//வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim.//

எதார்த்தமா இருக்க பலரும் யோசிக்கிறாங்க.. இத நான் சொன்னா நீ சின்ன பொண்ணு உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்றாங்க.. இங்க பாருங்கப்பா என்ன மாதிரியே ஒருத்தர் இருக்காரு.. :))

Ŝ₤Ω..™ on December 8, 2008 at 12:47 PM said...

நல்லா இருக்கு சகா..
நான் யோசிக்கறதயே நீங்க எழுதி இருக்கறது போல இருக்கு..

ஒரு தொடர் நாடகத்தில் வந்த காட்சி.. 10 வருடங்கள் ஆன பின்னும் இன்னும் மனசுல ஆழமா பதிஞ்சி இருக்கு..

நாயகன் கேட்பார்..(hello.. hello.. சகா நான் உங்க ஆள பத்தி சொல்லல.. நாயகன்னு சொன்னாலே விசிலா?? tooooo much)

தொடரின் நாயகன் கேட்பார்.. உங்க அப்பா பேரு என்ன? தாத்தா பேரு என்ன? அவரோட அப்பா பேரு என்ன?? அவரோட அப்பா பேரு என்ன?? அவரோட அப்பா பேரு என்ன??
பாதிக்கு மேல் பதில் தெரியாமல் எதிராளி முளிப்பார்.. அப்போது நாயகன் சொல்லுவார்.. நம்ம தாத்தாவோட தாத்தா பேரு கூட நமக்கு தெரியல.. நாமளே இப்படின்னா, நமக்கு அடுத்து அடுத்து வரும் தலைமுறைக்கு, தாத்தா பேரு கூட தெரியாம போய்டும்.. அப்படி இருக்கும் போது ஏன் இந்த வீண் ஆற்பாட்டம் எல்லாம்??


என்ன ஒரு சிந்தனை பார்த்தீங்களா??
அன்று முதல்.. நான் முடிவெடுத்தேன்.. வாழற கொஞ்ச காலம்.. நல்ல மனுஷனா, அடுத்தவங்களுக்கு தொல்ல தராம வாழ்ந்தா போதும்.. வேற ஒன்னும் கிளிக்க வேண்டியது இல்லன்னு..

தராசு on December 8, 2008 at 12:48 PM said...

எப்பிடி,,,,,, எப்பிடி,,,,,, எப்பிடிண்ணே இப்பிடி எல்லாம் யோசிக்கிறீங்க, எப்பிடி, எப்பிடிண்ணே,

சாதிச்ச விரும்பாதவர்கள் எப்பொழுதும் ஒரு வசதியான வட்டத்துக்குள் (Comfort zone) வாழ விரும்புவர்களாச இருப்பார்கள் என்று புளியமரத்தடி ஜோசியர் சொன்னார்.

smile on December 8, 2008 at 1:28 PM said...

அதுசரி சகா , நீங்க படிக்கும் போது சரி
இப்ப
உங்க போன வாரம் எய்ம் படி கொண்டாப்பூர் பக்கம் போயிட்டிங்களா

வால்பையன் on December 8, 2008 at 1:48 PM said...

உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்

வால்பையன் on December 8, 2008 at 1:51 PM said...

நான் படிச்ச காலத்தில இப்படியெல்லாம் வாத்தியார் கிட்ட பேச முடியாது. முதுகுல டின்னு கட்டிடுவார்

வால்பையன் on December 8, 2008 at 1:52 PM said...

ஆனாலும் நீங்க புத்திசாலி மாணவர்ங்கிறதால உங்க வாத்தியார் உங்கள மன்னிச்சிட்டார்.

வால்பையன் on December 8, 2008 at 1:52 PM said...

//என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான்
//

இன்னைகேல்லாம் வாழ்றதே ஒரு சாதனை தானப்பா

வால்பையன் on December 8, 2008 at 1:52 PM said...

40 அடித்த பெருமை எனக்கா

வால்பையன் on December 8, 2008 at 1:53 PM said...

நண்பர்கள் யாரையும் காணோமே

வால்பையன் on December 8, 2008 at 1:53 PM said...

சாப்பிட போயிட்டாங்களா

வால்பையன் on December 8, 2008 at 1:53 PM said...

இருக்கட்டும் லச்சியம் இல்லாமல் வாழலாம், சாப்பாடு இல்லாமல் வாழ முடியுமா

prakash on December 8, 2008 at 2:13 PM said...

//இன்னைகேல்லாம் வாழ்றதே ஒரு சாதனை தானப்பா//

இது மேட்டரு :))

prakash on December 8, 2008 at 2:17 PM said...

//சாதிச்ச விரும்பாதவர்கள் எப்பொழுதும் ஒரு வசதியான வட்டத்துக்குள் (Comfort zone) வாழ விரும்புவர்களாச இருப்பார்கள் என்று புளியமரத்தடி ஜோசியர் சொன்னார்.//

அந்த புளியமரத்தடி ஜோசியர் அனேகமாக ஒரு வசதியான வட்டத்துக்குள் (Comfort zone) வாழ விரும்புபவராக இருப்பார். அதாவது என்னை மாதிரி.... ஹி ஹி

அமுதா on December 8, 2008 at 2:19 PM said...

@#$%^&*@#$$%!@#$%^&*^ :-))

அமிர்தவர்ஷினி அம்மா on December 8, 2008 at 2:19 PM said...

//டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^//

அடிக்காத ஆசிரியரையே இப்படி கொலவெறி புடிச்சி ஆடவெச்சிட்டீங்களெ, அவர் போட்ட போடுல நீங்க போட்ட சத்தம் தானே அது.

உண்மைய சொல்லனும்னா நானும் உங்க கட்சி,
வாழ்க்கையை அதன் போக்கிலே போய் வாழும், வருபனவற்றை எதிர்கொள்ளும் ஒரு சிலரில் நானும் ஒருவள்.

பலரது Aim அப்போதுதான் உதயமானது என்பதையும் மறந்து வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள்//
சரியாச் சொன்னீங்க.
நெறைய ப்பேரு கலெக்டர் அப்படின்னு சொல்லுவாங்க, அதுக்கு UPSC Exam எழுதனும்னு தெரியாமலேயே
(3 தடவை எழுதன அனுபவத்துல சொல்றேன், தயவு செய்து உங்க எய்ம்னு யாராவது கேட்டா கலெக்டர்னு மட்டும் சொல்லிடாதீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா on December 8, 2008 at 2:20 PM said...

வால்பையன் said...
இருக்கட்டும் லச்சியம் இல்லாமல் வாழலாம், சாப்பாடு இல்லாமல் வாழ முடியுமா

WELL SAID

prakash on December 8, 2008 at 2:21 PM said...

49

prakash on December 8, 2008 at 2:21 PM said...

50

prakash on December 8, 2008 at 2:24 PM said...

என்னோட AIM நிறைவேறிடுச்சு...

50 நான்தான் போட்டேன் :))

Karthik on December 8, 2008 at 2:52 PM said...

அப்பவே இப்படித்தானா???
:)

தராசு on December 8, 2008 at 3:02 PM said...

//அந்த புளியமரத்தடி ஜோசியர் அனேகமாக ஒரு வசதியான வட்டத்துக்குள் (Comfort zone) வாழ விரும்புபவராக இருப்பார். அதாவது என்னை மாதிரி.... ஹி ஹி//

அட்றா சக்கை, அட்றா சக்கை, பூனைக்குட்டி மெதுவா வெளியில வருதுடோய்,,,,,,,

வித்யா on December 8, 2008 at 3:11 PM said...

\\வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim. \\

நான் புத்தாண்டுக்கு மட்டும் இதை கடைப்பிடிக்கிறேன்.

தராசு on December 8, 2008 at 3:18 PM said...

//வாழ்க்கையை அதன் போக்கிலே போய் வாழும், வருபனவற்றை எதிர்கொள்ளும் ஒரு சிலரில் நானும் ஒருவள்//.

அது என்னங்க, வாழ்க்கையின் அதன் போக்கு, அப்டீன்னா இன்னாங்க,

வாழ்க்கைல எங்க போகணும்னு ஒரு வழி தெரியாமத்தான் வாழ்ந்துகிட்டிருக்கிறீங்களா??? அப்ப நாளைக்கு இன்னா செய்யணும்கறதை யோசிக்கவே மாட்டீங்களா??

கண்டிப்பா யோசிப்பீங்க, ஏன்னா யோசிச்சு பார்த்துட்டு, அதைக் கண்டவுடன் டரியல் ஆனவந்தான் இமயமலைக்குப் போயிட்டு, பரம்பொருள், தியானம் அது இதுனு பொய்யாய் பாசாங்கு செய்கிறான்.

நீங்க இதுவரைக்கும் இந்த உலகத்துலதான் இருக்கறீங்கன்னா உங்களுக்குன்னு ஒரு கனவு இருக்குது, அத பார்த்துகுனுதான் தினமும் ஓடினிக்கிறீங்கோ, புரிஞ்சுக்கோங்க.

தராசு on December 8, 2008 at 3:22 PM said...

54

தராசு on December 8, 2008 at 3:23 PM said...

53

தராசு on December 8, 2008 at 3:24 PM said...

52

தராசு on December 8, 2008 at 3:24 PM said...

51

தராசு on December 8, 2008 at 3:26 PM said...

அய்யய்யோ, தப்பாயிடுச்சு, ராத்திரி அடிச்ச பல 90கள்னால, எல்லாம் தலைகீழாவே போகுது.

இது முதல் முறையா 60

prakash on December 8, 2008 at 3:39 PM said...

//அட்றா சக்கை, அட்றா சக்கை, பூனைக்குட்டி மெதுவா வெளியில வருதுடோய்,,,,,,,//

என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே தல...
பூனைக்குட்டி வெளிய வருதுன்னு சொல்ல வரேன்னு சொல்லிடாதிங்க :))

rapp on December 8, 2008 at 3:59 PM said...

யப்பா ஏன்னா கஷ்டப்படவேண்டியிருக்கு, நாமளும் ஸ்கூலுக்கெல்லாம் போ(பொ)ய் படிச்சோம்னு சொல்ல:):):) நான்கூட அப்பப்போ இந்த ஸ்டேட் பர்ஸ்ட் ஆளுங்க போட்டோ, பேட்டில்லாம் பாத்து இப்டில்லாம் நெனச்சுக்கறதுண்டு:):):)ஹா ஹா ஹா, ஏன் என்னைய மாதிரி இயல்பா உண்மைய ஒத்துக்கமாட்டேங்கறீங்க:):):)

தராசு on December 8, 2008 at 4:12 PM said...

//என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே தல...
பூனைக்குட்டி வெளிய வருதுன்னு சொல்ல வரேன்னு சொல்லிடாதிங்க//

நீங்க எந்த வட்டம்னு தெரிஞ்சுடிச்சி, அது தெரியாமத்தான் ஒரே குழப்பத்திலிருக்கறீங்கோ

prakash on December 8, 2008 at 4:43 PM said...

//நீங்க எந்த வட்டம்னு தெரிஞ்சுடிச்சி, அது தெரியாமத்தான் ஒரே குழப்பத்திலிருக்கறீங்கோ//

எனக்கு குழப்பமா இல்லையான்னு நான் தான் சொல்லணும் ...
உங்களுக்கு தெரிஞ்சிடுச்சி இல்ல. அது வரைக்கும் மகிழ்ச்சி:):)

கார்க்கி on December 8, 2008 at 6:19 PM said...

//தாமிரா said...
ரசித்தேன்.. எனக்கும் கூட அந்த வயதில் எந்த குறிக்கோளும் இருந்ததில்லை. போலீஸ் வேலை மீது ஒரு ஆசை இருந்தது. கற்பனை பண்ணிப்பாருங்கள்.. நானெல்லாம் போலீஸானால் நாடு தாங்குமா?//

நல்லாத் தாங்கும். தங்கமணி சொல்றத அமைதியா கேட்கிற மாதிரி கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பார்க்க தெரிஞ்சா போலிஸாகலாமே!!!!

****************************************************

/சரவணகுமரன் said...
நல்லா பேசி இருக்கீங்க, கார்க்கி...

ஆனா, அடுத்த நிலையை யோசிச்சாத்தானே அட்லீஸ்ட் இருக்குற நிலையில பிரச்சனை இல்லாம இருக்கும்?//

நன்றி சகா.. அடுத்த நிலையை யோசிக்க ஆரம்பிக்கறப்பதான் பிரச்சனையே ஸ்டார்ட் ஆகுது.

************************

//சென்ஷி said...
:))
சூப்ப//

நன்றி தல‌

கார்க்கி on December 8, 2008 at 6:23 PM said...

//prakash said...
கார்க்கி போடும் எல்லா பதிவிலும் பாரபட்சம் இல்லாமல் கும்மி அடிப்பது
என்னோட AIம்...//

ஆஹா.. இதுவல்லவோ எய்ம்.

****************************

//நான் ஆதவன் said...
நல்லாயிருக்கு சகா உங்க பதிவும் உங்க குறிக்கோளும்.//

நன்றி சகா..

*******************************

//அருண் said...
இது உங்க வாழ்க்கையில நடந்த நிஜ நிகழ்ச்சியா//

ஆமாண்ணே.. நம்பித்தான் ஆகனும் நீங்க‌

கார்க்கி on December 8, 2008 at 6:29 PM said...

//அத்திரி said...
//வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim. //

நல்லாவே aim பண்னியிருக்கீங்க ச//

ஹிஹிஹி.ந‌ன்றி அத்திரி

*******************************

//ஸ்ரீமதி said...
//சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். //

என்னைப் போல் ஒருவன்... :)) (ஒருமைக்கு மன்னிக்கவும்)//

பரவாயில்லம்மா.. ஒருவர்ன்னு சொன்னாதான் ஒரு மாதிரி இருக்கும் :)))

**************************************8

//Ŝ₤Ω..™ said...
நல்லா இருக்கு சகா..
நான் யோசிக்கறதயே நீங்க எழுதி இருக்கறது போல இருக்கு//

ந‌ம‌க்கும் செட் இருக்கு ச‌கா.. பின்னூட்ட‌ங்க‌ள‌ ப‌டிச்சு பாருங்க‌..

****************************************

//தராசு said...
எப்பிடி,,,,,, எப்பிடி,,,,,, எப்பிடிண்ணே இப்பிடி எல்லாம் யோசிக்கிறீங்க, எப்பிடி, எப்பிடிண்ணே,

சாதிச்ச விரும்பாதவர்கள் எப்பொழுதும் ஒரு வசதியான வட்டத்துக்குள் (Comfort zone) வாழ விரும்புவர்களாச இருப்பார்கள் என்று புளியமரத்தடி ஜோசியர் சொன்னா//

உண்மைதான்.. ஆனா ஏதாவ்து சாதிக்க‌ற‌ன்னு சொல்லிட்டு திரிய‌ற‌துல‌ 10% பேர்தான் செய‌றாங்க‌.. மீதிப் பேர் போராட‌றேன்னு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்க‌ள்

Sundar on December 8, 2008 at 6:29 PM said...

//என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான். //
சரி தான். 'வாழ்வது' என்பதன் அர்த்தத்தை பொறுத்து தான் சாதனையின் அர்த்தமே.

கார்க்கி on December 8, 2008 at 6:33 PM said...

//smile said...
அதுசரி சகா , நீங்க படிக்கும் போது சரி
இப்ப
உங்க போன வாரம் எய்ம் படி கொண்டாப்பூர் பக்கம் போயிட்டிங்களா//

அது என் எய்ம் அல்ல. விருப்பம். அது நடக்கலை. அதனால் எனக்கு எந்த க்ஷ்டமும் இல்ல. ஆனா அத நான் ஒரு எய்மா எடுத்து இருந்தேனா இன்னேரம் கஷ்டபட்டிருப்பேன். அவனவன் டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பார்க்கறாங்க. நமக்கு கொண்டாபூர் இல்லைன்னா ஜவுரிபூர்..

*********************************

//வால்பையன் said...
ஆனாலும் நீங்க புத்திசாலி மாணவர்ங்கிறதால உங்க வாத்தியார் உங்கள மன்னிச்சிட்டார்//

மன்னிச்சாரா????? தலைப்ப படிங்க சகா

****************

/அமுதா said...
@#$%^&*@#$$%!@#$%^&*^ :-))//

@#$%^&&*(

************************8

//அமிர்தவர்ஷினி அம்மா said...
//டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^//

அடிக்காத ஆசிரியரையே இப்படி கொலவெறி புடிச்சி ஆடவெச்சிட்டீங்களெ, அவர் போட்ட போடுல நீங்க போட்ட சத்தம் தானே அது.

உண்மைய சொல்லனும்னா நானும் உங்க கட்சி,
வாழ்க்கையை அதன் போக்கிலே போய் வாழும், வருபனவற்றை எதிர்கொள்ளும் ஒரு சிலரில் நானும் ஒருவள்//

அட‌ ந‌ம்ம‌ க‌ட்சிக்கு ப‌ல‌த்த‌ ஆத‌ர‌வு தாய்க்குல‌ங்க‌ள் கிட்ட‌தான் போலிருக்கு

கார்க்கி on December 8, 2008 at 6:38 PM said...

// Karthik said...
அப்பவே இப்படித்தானா???//

இப்பவும் அப்படித்தான்

*********************************

//வித்யா said...
\\வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim. \\

நான் புத்தாண்டுக்கு மட்டும் இதை கடைப்பிடிக்கிறேன்//

எனக்கு தினமும் புத்தாண்டுதாங்க..

***************************************

//கண்டிப்பா யோசிப்பீங்க, ஏன்னா யோசிச்சு பார்த்துட்டு, அதைக் கண்டவுடன் டரியல் ஆனவந்தான் இமயமலைக்குப் போயிட்டு, பரம்பொருள், தியானம் அது இதுனு பொய்யாய் பாசாங்கு செய்கிறான்//

தராசண்ணே.. நாங்க எப்போ இமயமலைக்கு போனேன்? அப்புறம் அது எல்லாம் பொய்யான பாசங்கா? நாளைக்கு பத்த் கண்டிப்பா யோசிப்போம்.. ஆனா 20 வருஷம் கழிச்சு என்ன நடக்கும்னு யோசிக்க மாட்டேன்..

கும்க்கி on December 8, 2008 at 6:39 PM said...
This comment has been removed by the author.
கார்க்கி on December 8, 2008 at 6:41 PM said...

//rapp said...
யப்பா ஏன்னா கஷ்டப்படவேண்டியிருக்கு, நாமளும் ஸ்கூலுக்கெல்லாம் போ(பொ)ய் படிச்சோம்னு சொல்ல:):):) நான்கூட அப்பப்போ இந்த ஸ்டேட் பர்ஸ்ட் ஆளுங்க போட்டோ, பேட்டில்லாம் பாத்து இப்டில்லாம் நெனச்சுக்கறதுண்டு:):):)ஹா ஹா ஹா, ஏன் என்னைய மாதிரி இயல்பா உண்மைய ஒத்துக்கமாட்டேங்கறீங்க:):)://

எனக்கு ஒரு உண்மைய சொல்ல சான்ஸ் கொடுத்ததுக்கு நன்றி தலைவி. நான் 10th ல 461/500..

**********************************

//Sundar said...
//என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான். //
சரி தான். 'வாழ்வது' என்பதன் அர்த்தத்தை பொறுத்து தான் சாதனையின் அர்த்தமே//

சரியா சொன்னிங்க சகா.. சிலருக்கு அதுதான் சுகத்தை தரும். அவர்கள் செய்யலாம். ஆனா தன்னைத்தானே வருத்திக் கொண்டு வறட்டு பிடிவாதத்துடன் சாதிக்கறேன்னு திரிவாங்களே அது புடிக்காது..

தராசு on December 8, 2008 at 7:01 PM said...

ஆக மொத்தம் இன்னைக்கு தத்துவங்களா அள்ளித்தெளிக்கறதுதான் உங்க aim னு சொல்றீங்க.

கார்க்கி on December 8, 2008 at 7:05 PM said...

//தராசு said...
ஆக மொத்தம் இன்னைக்கு தத்துவங்களா அள்ளித்தெளிக்கறதுதான் உங்க aim னு சொல்றீங்க//

தத்துவங்களா? அப்படின்னா என்ன?

தராசு on December 8, 2008 at 7:18 PM said...

//அடுத்த நிலையை யோசிக்க ஆரம்பிக்கறப்பதான் பிரச்சனையே ஸ்டார்ட் ஆகுது.//

//ஆனா ஏதாவ்து சாதிக்க‌ற‌ன்னு சொல்லிட்டு திரிய‌ற‌துல‌ 10% பேர்தான் செய‌றாங்க‌.. மீதிப் பேர் போராட‌றேன்னு வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்க‌ள்//

//எனக்கு தினமும் புத்தாண்டுதாங்க..//

//நாளைக்கு பத்த் கண்டிப்பா யோசிப்போம்.. ஆனா 20 வருஷம் கழிச்சு என்ன நடக்கும்னு யோசிக்க மாட்டேன்..//

//சிலருக்கு அதுதான் சுகத்தை தரும். அவர்கள் செய்யலாம். ஆனா தன்னைத்தானே வருத்திக் கொண்டு வறட்டு பிடிவாதத்துடன் சாதிக்கறேன்னு திரிவாங்களே அது புடிக்காது..//


இதெல்லாம் தத்துவமில்லாம பின்ன இன்னாங்கோ

கார்க்கி on December 8, 2008 at 7:24 PM said...

//இதெல்லாம் தத்துவமில்லாம பின்ன இன்னாங்கோ//

ப்ர்ருங்க இதெல்லாம் தத்துவம்னே எனகு தெரியல.. நான் எல்லாம் எங்க உருப்பட போறேன்? என் கண்ன தொறந்துட்டீங்க.. நன்றி தராசு

அன்புடன் அருணா on December 8, 2008 at 7:31 PM said...

எப்பிடிப்பா இப்பிடில்லாம்????
லட்சியம்...அது இதுன்னு வாழ்க்கையையே வேஸ்ட்டாக்கிட்டேம்பா....
அன்புடன் அருணா

வால்பையன் on December 8, 2008 at 7:45 PM said...

//v a
n
ija a
n
i d //

இது என்னாங்க கும்க்கி
ஆங்கில பின்நவீனத்துவ கவிதையா?

வால்பையன் on December 8, 2008 at 7:46 PM said...

// அன்புடன் அருணா said...

எப்பிடிப்பா இப்பிடில்லாம்????
லட்சியம்...அது இதுன்னு வாழ்க்கையையே வேஸ்ட்டாக்கிட்டேம்பா....
அன்புடன் அருணா//


ஆமாமா நீங்க கூட ஆரம்பத்தில ஒரு வித்தியாசமான லட்சியத்தோட இருந்ததா கேள்வி

வால்பையன் on December 8, 2008 at 7:47 PM said...

80

rapp on December 8, 2008 at 8:09 PM said...

//எனக்கு ஒரு உண்மைய சொல்ல சான்ஸ் கொடுத்ததுக்கு நன்றி தலைவி. நான் 10th ல 461/500.. //

நான்கூட பத்தாங்கிலாசுல 1010 வாங்கினேன்:):):) அதெல்லாம் விஷயமில்ல, பிளஸ்டூல எம்புட்டு வாங்குனீங்க?

கார்க்கி on December 8, 2008 at 8:15 PM said...

//நான்கூட பத்தாங்கிலாசுல 1010 வாங்கினேன்:):):) அதெல்லாம் விஷயமில்ல, பிளஸ்டூல எம்புட்டு வாங்குனீங்க//

எனக்கு அப்படி எந்த எய்மும் இல்லாததால் டிப்ளோமாக்கு சென்றுவிட்டேன் :))))))))))

கார்க்கி on December 8, 2008 at 8:17 PM said...

//அன்புடன் அருணா said...
எப்பிடிப்பா இப்பிடில்லாம்????
லட்சியம்...அது இதுன்னு வாழ்க்கையையே வேஸ்ட்டாக்கிட்டேம்பா.//

வேஸ்ட்டா? இனிமேல டேஸ்ட்டா இருக்கட்டும்..

**************************************

// வால்பையன் said...
//v a
n
ija a
n
i d //

இது என்னாங்க கும்க்கி
ஆங்கில பின்நவீனத்துவ கவிதையா//

என்ன வால்? வேற பதிவுக்கு போட வேண்டியதா???????இங்க எங்க கும்க்கி வந்தாரு?

Anonymous said...

funny yet interesting.

Sinthu, Bangladesh said...

அண்ணா இப்படியும் ஒரு aim ஆ...........
அனால் நரக இருக்கிறது.............
இவ்வளவு நாலும் உங்கள் பதிவுகளை miss பண்ணிவிட்டேனே..........

கும்க்கி on December 10, 2008 at 8:52 PM said...

/ வால்பையன் said...
//v a
n
ija a
n
i d //

இது என்னாங்க கும்க்கி
ஆங்கில பின்நவீனத்துவ கவிதையா//

என்ன வால்? வேற பதிவுக்கு போட வேண்டியதா???????இங்க எங்க கும்க்கி வந்தாரு?

ஸ்மைலி ஆனந்தார் பேரை ஸ்மைலியாக போட முயற்சித்து சரியா வராமல் டிலீட்டிட்டேன்...நரி அதையும் கண்டுபிடித்துவிட்டது.

 

all rights reserved to www.karkibava.com