Dec 23, 2008

புட்டிக்கதைகள்


    ஏழுவுக்கு ஒரு ஆசை. தண்ணியடித்து விட்டு ஸ்டெடியாக ஹாஸ்டலுக்கு நடந்தே செல்ல வேண்டுமென்று. எவ்வளவோ சொல்லியும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. துணைக்கு ரெண்டு ஜூனியர்சுடன் கிளம்பப் போனவ்னை வழிமறித்து நாங்களே அழைத்து சென்றோம். அன்று பார்த்து பியரை ராவாக வேறு அடித்து விட்டான்.

   பாரை விட்டு வெளியே வந்தோம். ஹாஸ்டலுக்கு போக வேண்டியப் பாதைக்கு சரியாக எதிர் திசையில் நடந்தான். சரி, காத்து அந்தப் பக்கம் அடிக்குது போலிருக்கு என்று நாங்களும் நடந்தோம். எதிரில் வந்த ஒரு முதியவர் ஏழுவை மடக்கி தம்பி அடையாறுக்கு எப்படிப்பா போனும் என்றார்?

அதான் பைக் வச்சிருக்கிங்க இல்ல? அதிலே போக வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினார் ஏழு.

ஏழுவுக்கு தாடி வளரவே இல்லை என்ற மனக்குறை உண்டு. வழியில் ஒரு சலூன் கடையைப் பார்த்ததும் உள்ளே நுழைந்தான். ஸ்டைலாக ஷேவிங் என்றான். அவர் சிரித்து விட, வெட்கத்துடன் வெளியே வந்துவிட்டான்.

மச்சி, உனக்கு ஷேவ் பண்ற செலவே கிடையாது. அதனால் அது shaving இல்லடா, saving என்றான் ஆறு. ஏழுவுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதும் இவன் தான்.

டேய்.உள்ள ஹேர் டைனு எழுதியிருக்கான். அப்படின்னா என்னடா? முடி எப்படி சாகும் என்றான் ஏழு.

லூசு. Dyeன்னா கலர் அடிக்கிறது. Die ன்னா தான் சாவது.

எனக்கு புரிஞ்சிடுச்சு. Dyeன்னா மண்டைல போடறது. Dieன்னா மண்டையே போடறது. சரியா? என்றான் தெளிவாக.

இவன் அடிக்கும் கூத்தையெல்லாம் பார்த்த வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவன் ஏழுவிடம் வந்து Can i say something? என்றான்.

அவ்வளவுதான். ஏழுவுக்கு கோவம் வந்துவிட்டது. மச்சி என்ன பார்த்து ‘கேணை ஏதாவது சொல்லுன்னு’ சொல்றான் மச்சி என்றான்.

பின் அவனை ஒரு வழியாய் அங்கிருந்து ஹாஸ்டலை நோக்கி தூக்கிக் கொண்டு போனோம்.

இவன் ஏன்டா இப்படி செய்றான் என்றார் ஒரு புது வரவு.

இது பரவாயில்ல மச்சி. ஒரு தடவ ரயில்வே ஸ்டேஷனுக்கு போனப்ப, ப்ளாட்ஃபார்ம் டிக்கட் வாங்க சொன்னேன். அதுக்கு இவன் கேட்கறான் "ஏன் மச்சி.காசுதான் இருக்கில்ல. பால்கனி வாங்கலாமா?"

ரைட் விடுன்னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு நானே போய் டிக்கட் வாங்கிட்டு வந்தேன். அப்போ ஒரு பெண் குரல் சொல்லுச்சு ”Charminar express will arrive shortly on platform number 10”. அதுக்கு இவன் கேட்கறான்

ஏன் மச்சி. Shortஆ வந்தா பயணிகள் எண்ணிக்கை குறையுமே. மீதிப் பேர் எல்லாம் எதுல வருவாங்க?

அப்புறம் எங்க ஃப்ரெண்ட் வந்த கோச் கடைசிப் பெட்டின்னு சொன்னதால் ரொம்ப தூரம் நடந்தோம். பாதி தூரத்துல நடக்க முடியாம இந்த லூசு சொல்றான் இனிமேல் கடைசிப் பெட்டியே எந்த வண்டியிலயும் இருக்கக் கூடாதாம்.

அது எப்படிடா ?எப்படியும் ஒரு கடைசிப் பெட்டி இருக்கனுமில்ல?

அப்படின்னா அத கொன்டு வந்து நடுவுல வைங்கனு சொல்றான்.

--ரவுசு தொடரும்

32 கருத்துக்குத்து:

கும்க்கி on December 23, 2008 at 6:40 PM said...

ஹப்பா ஒரு பின்னூட்டம் போடறதுக்குள்ற ஒரு பதிவா..?

கும்க்கி on December 23, 2008 at 6:44 PM said...

எலுத்தாளர் ஆன பின்னாடி ஏலுமலய எங்க மறந்துடுவீங்களோன்னு .....ஒரு பயம்தான்.

அத்திரி on December 23, 2008 at 7:01 PM said...

//ஏன் மச்சி. Shortஆ வந்தா பயணிகள் எண்ணிக்கை குறையுமே. மீதிப் பேர் எல்லாம் எதுல வருவாங்க?//


ஹையோ ஹையோ.........

விஜய் ஆனந்த் on December 23, 2008 at 7:41 PM said...

:-)))...

தாமிரா on December 23, 2008 at 8:13 PM said...

ஏழுமலை ஸ்டோரி வழக்கம் போல இல்லாமல், சின்ன சின்ன ஜோக்குகளால் ஆன தோரண‌ம் போல இருந்தது. ஆமா.. சைட்ல வில்லு விளம்பரம் அவசியம் தேவைதானா? ஒரு சார்பு சொந்த‌ வாழ்வில் இருக்கலாம், பொது வாழ்வில் தம்பட்டம் அடிப்பது சரியல்ல என்பது என் எண்ணம்.

தமிழ்குறிஞ்சி on December 23, 2008 at 8:16 PM said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.

கார்க்கி on December 23, 2008 at 8:28 PM said...

// கும்க்கி said...
எலுத்தாளர் ஆன பின்னாடி ஏலுமலய எங்க மறந்துடுவீங்களோன்னு .....ஒரு பயம்தான்//

ஹிஹிஹி.. இதுதான் நமக்கு நிரந்தரம்ண்ணா..

****************

/அத்திரி said...
//ஏன் மச்சி. Shortஆ வந்தா பயணிகள் எண்ணிக்கை குறையுமே. மீதிப் பேர் எல்லாம் எதுல வருவாங்க?//


ஹையோ ஹையோ//

என்ன ஆச்சு சகா?

************

/விஜய் ஆனந்த் said...
:-))).../

:))))

கார்க்கி on December 23, 2008 at 8:28 PM said...

// கும்க்கி said...
எலுத்தாளர் ஆன பின்னாடி ஏலுமலய எங்க மறந்துடுவீங்களோன்னு .....ஒரு பயம்தான்//

ஹிஹிஹி.. இதுதான் நமக்கு நிரந்தரம்ண்ணா..

****************

/அத்திரி said...
//ஏன் மச்சி. Shortஆ வந்தா பயணிகள் எண்ணிக்கை குறையுமே. மீதிப் பேர் எல்லாம் எதுல வருவாங்க?//


ஹையோ ஹையோ//

என்ன ஆச்சு சகா?

************

/விஜய் ஆனந்த் said...
:-))).../

:))))

கார்க்கி on December 23, 2008 at 8:31 PM said...

/தாமிரா said...
ஏழுமலை ஸ்டோரி வழக்கம் போல இல்லாமல், சின்ன சின்ன ஜோக்குகளால் ஆன தோரண‌ம் போல இருந்தது. //
உண்மைதான்..நேத்து எதுவும் எழுதல.. இன்னைக்கும் எழுதல.. ஞாயிற்றுக்கிழமை கடன் வாங்கி போட்டாச்சு.. சனிக்கிழமை மீள்பதிவு.. அதான் ஏதாவது எழுதனும்னு அரை மணி நேரத்தில் எழுதி போட்டேன்.. இனிமேல் சரியா எழுதனும்..

//ஆமா.. சைட்ல வில்லு விளம்பரம் அவசியம் தேவைதானா? ஒரு சார்பு சொந்த‌ வாழ்வில் இருக்கலாம், பொது வாழ்வில் தம்பட்டம் அடிப்பது சரியல்ல என்பது என் எண்ணம்//

எடுத்தாச்சு..

*********************

/தமிழ்குறிஞ்சி said...
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை //

ரொம்ப சந்தோஷங்க.. நன்றி

ILA on December 23, 2008 at 8:44 PM said...

:))

வித்யா on December 23, 2008 at 9:02 PM said...

கார்க்கி நீயும் டபாய்ச்சுக்கிட்டே இருக்க. இந்த தடவ நான் கேக்க மாட்டேன். anyways asusual நல்லாருந்தது.

கார்க்கி on December 23, 2008 at 10:09 PM said...

// ILA said...
:))
//

வாங்க இளா..

**************

//வித்யா said...
கார்க்கி நீயும் டபாய்ச்சுக்கிட்டே இருக்க. இந்த தடவ நான் கேக்க மாட்டேன். anyways asusual நல்லாருந்தது.//

ஊட்டிப் போகல? நானும் தேடறேன்.. கிடைக்கல.. எங்கேயோ save பண்ணேன்.. இந்த தடவ கிடைக்கலைன்னா அவனையே கேட்டுடறேன்

PoornimaSaran on December 24, 2008 at 12:34 AM said...

ஏழுமலை கலக்கிட்டார்.. நல்ல பிரண்டு தான் :)

Anonymous said...

ஏழுமலை தெளிவா இல்ல பதில் சொல்லியிருக்காரு. மப்பில சொன்ன மாதிரி இல்லையே.

தாரணி பிரியா on December 24, 2008 at 9:38 AM said...

எரிமலை ஏழுமலை ‍ இவருக்கு இந்த டைட்டில் நல்லா இருக்கா கார்க்கி.

//ஹாஸ்டலுக்கு போக வேண்டியப் பாதைக்கு சரியாக எதிர் திசையில் நடந்தான். சரி, காத்து அந்தப் பக்கம் அடிக்குது போலிருக்கு என்று நாங்களும் நடந்தோம்//


திரும்பி நின்னு இருந்தா சரியான திசையில போயிருக்கலாம்தானே.

அவர் என்னமோ தெளிவாதான் இருக்கற மாதிரி தோணுது.


அவர் இதை படிக்கிறாரா? என்ன சொல்லுவார்னு அதையும் சொல்லுங்களேன்

sinthu on December 24, 2008 at 10:05 AM said...

எழுமலை அண்ணாவால் மட்டும் எப்படி முடிகிறது.........
நன்றாக சிரித்தேன். அண்ணா ஆங்கிலத்தில் படிக்கும் பொது தமிழில் உள்ள பற்று அதிகமாவது போல் ஒரு உணர்வு..........so எழுமலை அண்ணா கவலை படாதீங்க தமிழ் இங்களை வாழவைக்கும்...
Sinthu
Bangladesh

கும்க்கி on December 24, 2008 at 10:16 AM said...

எழ்ழாது ஏழு ம்ழக்கு ஆழ்ரவு குழைஞ்சிக்கிட்டே பொலுழ்து..
இழு ஒன்னும்ழ்ழ்ழ் ச்ழியில்லயேஏஏஏஏஏ?
(அரை பீர்...சே..பீரே எங்க குல வழக்கம் கிடயாது..ஆம்மா.)

கார்க்கி on December 24, 2008 at 10:20 AM said...

//PoornimaSaran said...
ஏழுமலை கலக்கிட்டார்.. நல்ல பிரண்டு தான் :/

படிச்சா என்ன கிழிச்சுடுவான்..

************************

// சின்ன அம்மிணி said...
ஏழுமலை தெளிவா இல்ல பதில் சொல்லியிருக்காரு. மப்பில சொன்ன மாதிரி இல்லை/

மப்புல தெரியாம தெளிவா சொல்லிட்டேன்..

*************

//தாரணி பிரியா said...
எரிமலை ஏழுமலை ‍ இவருக்கு இந்த டைட்டில் நல்லா இருக்கா கார்க்கி./

ஹிஹிஹி.. நல்லாயிருக்குங்க..

/அவர் இதை படிக்கிறாரா? என்ன சொல்லுவார்னு அதையும் சொல்லுங்களேன்//

இல்லங்க.. அவனுக்கு தெரியாது.. சொல்லனும்

கார்க்கி on December 24, 2008 at 10:22 AM said...

/ கும்க்கி said...
எழ்ழாது ஏழு ம்ழக்கு ஆழ்ரவு குழைஞ்சிக்கிட்டே பொலுழ்து..
இழு ஒன்னும்ழ்ழ்ழ் ச்ழியில்லயேஏஏஏஏ//

அப்படியா? பின்னூட்டம் குறைவுதான்.. ஆனா இந்தப் பதிவுக்கு ஹிட்ஸ் இப்பவே 500 தாண்டியாச்சு..

***************************

/sinthu said...
எழுமலை அண்ணாவால் மட்டும் எப்படி முடிகிறது.........
நன்றாக சிரித்தேன்/

நன்றி சிந்து

narsim on December 24, 2008 at 10:36 AM said...

//அன்று பார்த்து பியரை ராவாக வேறு அடித்து விட்டான்//

அம்மாடியோவ்.. காட்டமா இருக்காதா சகா..??

gayathri on December 24, 2008 at 10:57 AM said...

ஏழுவிடம் வந்து Can i say something? என்றான்.

அவ்வளவுதான். ஏழுவுக்கு கோவம் வந்துவிட்டது. மச்சி என்ன பார்த்து ‘கேணை ஏதாவது சொல்லுன்னு’ சொல்றான் மச்சி என்றான்.

இத படிச்சிட்டு என்னாலா சிரிப்ப அடக்கவே முடியலபா

Karthik on December 24, 2008 at 11:46 AM said...

கலக்கலா இருக்கு கார்க்கி.

இலக்கியவாதி ஆனாலும் எழுமலையை கை விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
:)

கார்க்கி on December 24, 2008 at 12:37 PM said...

/narsim said...
//அன்று பார்த்து பியரை ராவாக வேறு அடித்து விட்டான்//

அம்மாடியோவ்.. காட்டமா இருக்காதா சகா./

தெரியல தல.. நான் பியர் அடிச்சதில்லை.. (உடனே எப்பவுமே விஸ்கிதானான்னு கேட்பவர்கள் கதை அவ்வளவுதான்)

*****************************************

/gayathri said...
ஏழுவிடம் வந்து Can i say something? என்றான்.

அவ்வளவுதான். ஏழுவுக்கு கோவம் வந்துவிட்டது. மச்சி என்ன பார்த்து ‘கேணை ஏதாவது சொல்லுன்னு’ சொல்றான் மச்சி என்றான்.

இத படிச்சிட்டு என்னாலா சிரிப்ப அடக்கவே முடியல//

இதெல்லாம் ஒரு ஜோக்குனு எழுதறான்னேனு சிரிக்கிரிங்களா?

************************

/ Karthik said...
கலக்கலா இருக்கு கார்க்கி.

இலக்கியவாதி ஆனாலும் எழுமலையை கை விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்//

கார்த்திக், பின்னூட்டம் மட்டறுப்பதில்லை. எனவே இது போன்ற ஆபாசமான‌ வார்த்தைகள் எழுதாதே..

வித்யா on December 24, 2008 at 2:25 PM said...

ஊட்டி இன்னைக்கு நைட் கிளம்பறேன். திங்கள் காலை சென்னை ரிடர்ன். btw ஜூனியர்க்கு வில்லு பாடல்கள் எதுவுமே பிடிக்கல. Got to wait for the videos to know the true response:)

வித்யா on December 24, 2008 at 2:25 PM said...

me the 25th:)

கார்க்கி on December 24, 2008 at 2:54 PM said...

/வித்யா said...
ஊட்டி இன்னைக்கு நைட் கிளம்பறேன். திங்கள் காலை சென்னை ரிடர்ன்//

happy journey..enjoyy

அன்புடன் அருணா on December 24, 2008 at 3:23 PM said...

//Dyeன்னா மண்டைல போடறது. Dieன்னா மண்டையே போடறது.//

hahahaha...I just couldnot control laughing...that was fantastic....
ஏழுமலை...ரொம்ப steady!!!
anbudan aruna

வெங்கட்ராமன் on December 24, 2008 at 4:44 PM said...

கண்ணாபின்னான்னு சிரிச்சேன் தல. . . .

அமிர்தவர்ஷினி அம்மா on December 24, 2008 at 5:32 PM said...

நல்லா சிரித்தேன்

கும்க்கி on December 24, 2008 at 9:34 PM said...

வித்யா said...
ஊட்டி இன்னைக்கு நைட் கிளம்பறேன். திங்கள் காலை சென்னை ரிடர்ன். btw ஜூனியர்க்கு வில்லு பாடல்கள் எதுவுமே பிடிக்கல. Got to wait for the videos to know the true response:)

ஹி...ஹி..ஹா..ஹா..ஹாஆஆஆ.

ஜுனியர்க்கு கூடவா....?

அய்யோ பாவம் கார்க்கி..எவ்வளவு மனசு நொந்துபோச்சுதோ..

கும்க்கி on December 24, 2008 at 9:36 PM said...

விஜய் ஆனந்த் said...
:-)))...

:----((((...

கார்க்கி on December 25, 2008 at 11:35 PM said...

//அன்புடன் அருணா said...
//Dyeன்னா மண்டைல போடறது. Dieன்னா மண்டையே போடறது.//

hahahaha...I just couldnot control laughing...that was fantastic....
ஏழுமலை...ரொம்ப steஅட்ய்!//

நன்றி அருணா

*********************88

//வெங்கட்ராமன் said...
கண்ணாபின்னான்னு சிரிச்சேன் தல//

நன்றி சகா

********************88

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்லா சிரித்தே//

மகிழ்ச்சி அமித்து அம்மா

*******

//அய்யோ பாவம் கார்க்கி..எவ்வளவு மனசு நொந்துபோச்சுதோ/

நானேதான் சொல்லியிருக்கேனே தல பாடல்கள் போக்கிரி அளவுக்கு இல்லைன்னு

 

all rights reserved to www.karkibava.com