Dec 31, 2008

ஸ்டார்ட் மீஸிக்


   ஒரு படத்தின் பாடல்களை கேட்ட உடனே எல்லோரும் சொல்வது ரெண்டு பாட்டு தேறும் அல்லது மூனு பாட்டு ஓக்கே. படத்தின் எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தது எல்லாம் ராசா காலம். இது போல Complete album என்பது வருடத்தில் ஒன்று வந்தாலே பெரிய விஷயம்.

  இந்த வருடம் அப்படி வந்ததுதான் வாரணம் ஆயிரம். ஹாரீஸின் சொந்த சரக்கா என்றெல்லாம் பார்க்காமால் பாடல்களை எடை போட்டால் ஏழு பாடல்களும் ஹிட். இசை வெளியான அன்றே அனல் மேலே பனித்துளி பாடல் என்னைக் கவர்ந்து அது குறித்து நன் எழுதிய பதிவு இங்கே.அதன் பின்னூட்டத்தில் பரிசல் முன் தினம் பார்த்தேனே குறித்து சிலாகித்தார். ஒரு சில தினங்களிலே அய்யனார் அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைப் பற்றி எழுதினார். தமிழ்மணத்தின் ஆக இளையப் பதிவரான கார்த்திக் ஏத்தி ஏத்தி பாடலின் வீடியோவையே போட்டு தன் விருப்பப் பாடலை பதிவு செய்தார். வெட்டிப்பயலின் ஐபோடில் அஞ்சல தான் எப்போதும் வாசம் செய்கிறாளாம். அடியே கொல்லுதேவைப் பற்றி பலர் பதிவிட்டுருக்கிறார்கள்.

  இது போல ஒரு Complete album சமீபத்தில் எனக்கு தெரிந்து வெகு சில மட்டுமே. யுவனின் காதல் கொண்டேன் மற்றும் 7ஜி ரெய்ன்போ காலனி. ஏ.ஆர்.ரகுமான் மணிரத்னம் ஜோடியின் சிலப் படங்கள், வித்யாசாகரின் ரன். ஆனால் இவையெல்லாவற்றையும் விட வாரணம் ஆயிரம் ஒரு படி மேலே என்பது மட்டும் உண்மை.

    ஆனால் ராசாவின் படங்களை எடுத்துக் கொண்டால் எத்தணைப் படங்கள் சொல்லலாம்? பட்டியலிடலாம் எனத் துவங்கினேன். உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போகிறது. எனவே எனக்குப் பிடித்த ஒரு படத்தை மட்டும் சொல்கிறேன். நிழல்கள்.மடை திறந்து, பூங்கதவே, பொன்மாலைப் பொழுது என ராசாவின் அட்டகாசம் சற்று அதிகமாகவே இருக்கும்.

  அதேப் போல சிலப் படங்களில் எல்லா விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கும். உதாரணம் திருமலை. தாம்தக்க பாடலில் சற்று கர்னாடக சங்கீதத்தின் சாயல் இருக்கும். மிருதங்கம், வீணை என்று அமர்க்களப்படித்தி இருப்பார் வித்யாசாகர். அழகூரில் பூத்தவளே அருமையான மெலடி. நீயா பேசியது சோகப் பாடல். வாடியம்மா ஜக்கம்மா சென்னை கானா. திம்சுகட்டை டிபிக்கல் தமிழ் சினிமா குத்துப் பாட்டு.

    பிறக்க போகும் புது வருடம் விஜய் ஆன்டனியின் வருடம் என்று தோண்றுகிறது எனக்கு. நல்ல இயக்குனர்கள் மற்றும் முன்னனி நடிகர்கள் வாய்ப்பளிக்கும்போது பிரகாசிப்பார். வழக்கம் போல் யுவன், ஹாரிஸ் கலக்குவார்கள். அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.

55 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:42 AM said...

me the first??

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:42 AM said...

ஹை நாந்தான் :)))))))

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:46 AM said...

//அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.//

உங்களுக்கு கல்யாணம்????????பதிவு எழுதபோறதில்ல??????

வில்லு படம்??

வேற என்ன??

அருண் on December 31, 2008 at 10:47 AM said...

Me the 4th ......

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:47 AM said...

வாரணமாயிரம்ல எனக்கு எல்லாப்பாட்டுமே பிடிக்குமே.. :))

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:48 AM said...

ஹை நான்தானே 5th :)))

அருண் on December 31, 2008 at 10:49 AM said...

சகா, சுப்பிரமணியபுரம் பாடல்களும் சூப்பர் தான்.

narsim on December 31, 2008 at 10:51 AM said...

ஒரு மேட்டர் கிடைச்சா பின்னி பிரிச்சு மேய்றீங்களேயா.. கலக்கல்..

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா.. உங்களுக்கும் உங்கள் ரசிக/ரசிகை கோடிகளுக்கும்..

ஷாஜி on December 31, 2008 at 10:56 AM said...

தாம் தூம் - ஆல்பம் கூட ஹிட் தான் சார்.

ஸ்ரீமதி on December 31, 2008 at 10:57 AM said...

me the 10 :):)

ராம்சுரேஷ் on December 31, 2008 at 11:18 AM said...

விஜய் படத்தில் எப்பவுமே எல்லா பாட்டும் ஹிட்டாகும். அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். :)

புத்தாண்டு வாழ்த்துகள் கார்க்கி.

புதுகை.அப்துல்லா on December 31, 2008 at 11:38 AM said...

//அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.//


என்னப்பா அது??? எனக்கு மட்டுமாவது தனியாச் சொல்லேன் :)

அனுஜன்யா on December 31, 2008 at 11:39 AM said...

கார்க்கி,

என்ன மாட்டப் போறியா? வாழ்த்துக்கள் - புத்தாண்டுக்கும், பின்வரப்போகும் வைபவத்திற்கும். :)

அனுஜன்யா

ஸ்ரீமதி on December 31, 2008 at 12:01 PM said...

புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா :))

ஸ்ரீமதி on December 31, 2008 at 12:01 PM said...

me the 15 :):)

Sinthu on December 31, 2008 at 12:05 PM said...

ஸ்ரீமதி said...
வாரணமாயிரம்ல எனக்கு எல்லாப்பாட்டுமே பிடிக்குமே.. :))
Mee toooooooooo

கூட்ஸ் வண்டி on December 31, 2008 at 12:09 PM said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

நான் ஆதவன் on December 31, 2008 at 12:15 PM said...

//அழகூரில் பூத்தவளே அருமையான மெலடி//

எனக்கு மிகவும் பிடித்த மெலடி இது சகா..

நான் ஆதவன் on December 31, 2008 at 12:15 PM said...

//பதிவு எழுதபோறதில்ல?????? //

குசும்பு கொஞ்சம் அதிகம் தான்

நான் ஆதவன் on December 31, 2008 at 12:17 PM said...

//அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.//

ரஜினி நடிக்கறத நிறுத்த போறாரா என்ன?

வித்யா on December 31, 2008 at 12:37 PM said...

ஜூனியரோட பேவரிட் அடியே கொல்லுதேவும், அஞ்சலை, மற்றும் ஏத்தி ஏத்தி தான்.

சரவணகுமரன் on December 31, 2008 at 12:45 PM said...

கார்க்கி, உங்களுக்கு ரஹ்மான் மேலே என்ன கோபம்?

கோவி.கண்ணன் on December 31, 2008 at 12:59 PM said...

கார்க்கி,

புத்தாண்டு வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் on December 31, 2008 at 12:59 PM said...

மீ த 24த்தும் !

தாரணி பிரியா on December 31, 2008 at 1:24 PM said...

me the 25

SanJaiGan:-Dhi on December 31, 2008 at 1:27 PM said...

இதில் ராஜவின் பாடல்கள் தவிர மற்ற எல்லாம் வானவில் தான். நீண்ட நேரம் மனதில் தங்குவதில்லை. அதைவிட சிறந்ததாய் அடுத்த பாடல் வரும்போது இது மறந்து போய்டும். ஆனா ராஜாவின் பாடல்கள் அப்படி அல்ல. பெரும்பாலானவை எந்த சிறந்த பாடல்களாலும் வெல்ல முடியாதவை..

ஆசைய காத்துல தூது விட்டு, காற்றில் எந்தன் கீதம், அந்தி மழை பொழிகிறது, இது ஒரு பொன் மாலைப் பொழுது இன்னும் ஏராளம். என் மொபைலில் இருக்கும் பாடல்களை பட்டியல் போட்டாலே பெரிய பதிவாகிவிடும். :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்க்கி. :)

அக்னி பார்வை on December 31, 2008 at 1:47 PM said...

காத்திருக்கிறோம்..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தாமிரா on December 31, 2008 at 1:57 PM said...

டிசம்பர் இசைக்காலம் பலரையும் தொற்றிக்கொண்டுள்ளது போல தெரிகிற‌து. உதாரணம் சொல்கையில் எடுக்க வேற படம் கிடைக்கலையாக்கும்.? வாழ்த்துகள்.!

அமிர்தவர்ஷினி அம்மா on December 31, 2008 at 2:59 PM said...

ஸ்ரீமதி said...
//அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.//

உங்களுக்கு கல்யாணம்????????

எனக்கும் அதே டவுட்டுதான். இருந்தாலும் அண்ணன் இருக்காரு போல, ஒருவேளை அவருக்கா இருக்குமோ.. ச்சே ஏன் இவ்வளவு யோசனை.

ப்பா, ஏழுமலையைப் பத்தி ஏதாவது சொல்லுப்பா...

அமிர்தவர்ஷினி அம்மா on December 31, 2008 at 3:00 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Karthik on December 31, 2008 at 3:26 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்க்கி!
:)

//அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது.

வேலை சென்னைக்கு மாறியாச்சா?

உயிரோசையில் இன்னொரு கதையா?

தல ஏழுமலையை நேரில் பார்த்து ஆட்டோக்ராப் வாங்கி, போட்டோ எடுத்துக் கொண்டீர்களா?


//தமிழ்மணத்தின் ஆக இளையப் பதிவரான கார்த்திக் ஏத்தி ஏத்தி பாடலின் வீடியோவையே போட்டு தன் விருப்பப் பாடலை பதிவு செய்தார்.

ஆஹா!

LOSHAN on December 31, 2008 at 4:28 PM said...

உண்மை தான்.. ஆனால் வித்யாசாகர்,ரஹ்மான் ஆகியோரும் பல படங்கள் இவ்வாறு தந்துள்ளார்கள்..

வித்யாசாகரின் தில்,தூள்,குருவி,திருமலை,வில்லன்,பூவெல்லாம் உன் வாசம்,தித்திக்குதே.. இவ்வாறு அடுக்கிட்டே போகலாம்.. என்ன படங்கள் பல தோல்வியடைந்தன..

ரஹ்மானும் அவ்வாறே.. ரோஜா,காதலன்,ஜென்டில்மன்,அண்மையில் சிவாஜி.. இப்படியே அடுக்கலாமே..

கார்க்கி ஏன் இதையெல்லாம் விட்டுட்டீங்க?

எனக்கும் வாரணம் ஆயிரம் பாடல்கள் எல்லாமே பிடிக்கும்..

எனக்கு ரொம்பப் பிடித்த வா.ஆ பாடல் பற்றிய பதிவு இது..

http://loshan-loshan.blogspot.com/2008/12/blog-post_05.html

முரளிகண்ணன் on December 31, 2008 at 5:14 PM said...

பல படங்களை விட்டுவிட்டு உங்கள் தலையின் திருமலையை உதாரணத்துக்கு எடுத்த நுண்ணரசியலை கண்டிக்கிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தாரணி பிரியா on December 31, 2008 at 5:30 PM said...

வாரணம் ஆயிரம் பாட்டு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில ரொம்பவே பிடித்தது நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை. இப்ப தினமுமே அனேகமா கேட்கற பாட்டு இதுதான்.


அப்புறம் ராஜா சார் ஒரு சின்ன வயலின் பிட், புளுட் பிட் போட்டா கூட அவ்வளவு இனிமையா இருக்குமே. எனக்கு 80‍ல வந்த ராஜா சார் பாட்டுகள் ரொம்பவே பிடிக்கும்

//ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது//

சர்க்கரை வியாபாரம் செய்ய போறீங்களா :)

தாரணி பிரியா on December 31, 2008 at 5:30 PM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்க்கி

கார்க்கி on December 31, 2008 at 5:41 PM said...

// ஸ்ரீமதி said...
//அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.//

உங்களுக்கு கல்யாணம்????????பதிவு எழுதபோறதில்ல??????

வில்லு படம்??

வேற என்ன??
//

எனக்கு கல்யாணம் இல்ல.. பதிவு எழுதாமா எப்படி எனக்கு துக்கம் வரும்? வில்லு எனக்குதான் ஜாலி, பதிவர்களுக்கு இல்ல..

***************************

// அருண் said...
சகா, சுப்பிரமணியபுரம் பாடல்களும் சூப்பர் தான்.//

எல்லாப் பாட்டையும் சொல்ல முடியாது சகா

*****************
// narsim said...
ஒரு மேட்டர் கிடைச்சா பின்னி பிரிச்சு மேய்றீங்களேயா.. கலக்கல்..//

ந‌ன்றி த‌ல‌..

//புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா.. உங்களுக்கும் உங்கள் ரசிக/ரசிகை கோடிகளுக்கும்..//

நக்க‌லு..

***************8

// ஷாஜி said...
தாம் தூம் - ஆல்பம் கூட ஹிட் தான் சார்.//

எல்லாப் பாட்டும் சொல்ல‌ முடியாது ந‌ண்ப‌ரே

கார்க்கி on December 31, 2008 at 5:46 PM said...

// ராம்சுரேஷ் said...
விஜய் படத்தில் எப்பவுமே எல்லா பாட்டும் ஹிட்டாகும். அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். :)

புத்தாண்டு வாழ்த்துகள் கார்க்கி//

அப்பாடா.. எனக்கு ஒரு சப்போர்ட் கிடைச்சாச்சு.. வாழ்த்துகள் சகா..

************************

//புதுகை.அப்துல்லா said...
//அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.//


என்னப்பா அது??? எனக்கு மட்டுமாவது தனியாச் சொல்லேன் :)//

கால் பண்ணுங்க சொல்றேன்..

********************

//என்ன மாட்டப் போறியா? வாழ்த்துக்கள் - புத்தாண்டுக்கும், பின்வரப்போகும் வைபவத்திற்கும். :)

அனுஜன்யா//

அச்சச்சோ..மேட்டர் இப்படி ஆயிடுச்சே.. அப்படியெல்லாம் இல்ல தல.. நான் இன்னும் யூத்துதான்..

******************

//நான் ஆதவன் said...
//அழகூரில் பூத்தவளே அருமையான மெலடி//

எனக்கு மிகவும் பிடித்த மெலடி இது சகா..//

அனைவருக்கும் பிடிச்ச மெலடி சகா

கார்க்கி on December 31, 2008 at 5:50 PM said...

// வித்யா said...
ஜூனியரோட பேவரிட் அடியே கொல்லுதேவும், அஞ்சலை, மற்றும் ஏத்தி ஏத்தி தான்.//

எழுதி வச்சுக்கோங்க.. வாடா மாப்ளேனு அவன் அடுத்த மாதம் சொல்லுவான்..

************************88

// சரவணகுமரன் said...
கார்க்கி, உங்களுக்கு ரஹ்மான் மேலே என்ன கோபம்?//

கோபமா? எனக்கா? போங்க சகா

***********************8

//கோவி.கண்ணன் said...
கார்க்கி,

புத்தாண்டு வாழ்த்துகள்//

வாழ்த்துகள் தல‌

***************8

// SanJaiGan:-Dhi said...
இதில் ராஜவின் பாடல்கள் தவிர மற்ற எல்லாம் வானவில் தான். நீண்ட நேரம் மனதில் தங்குவதில்லை. அதைவிட சிறந்ததாய் அடுத்த பாடல் வரும்போது இது மறந்து போய்டும். ஆனா ராஜாவின் பாடல்கள் அப்படி அல்ல. பெரும்பாலானவை எந்த சிறந்த பாடல்களாலும் வெல்ல முடியாதவை
//

இதைப் ப‌ற்றி ஒரு த‌னிப்ப‌திவே எழுத‌லாம்..95க்கு அப்புற‌ம் வ‌ன்த‌ என்த‌ ராஜா பாட‌ல் ம‌ன‌சுல‌ நிக்குதுங்க‌? கால‌ம் மாறிப்போச்சு.. இதான் ட்ரென்ட்..

*********************88

// தாமிரா said...
டிசம்பர் இசைக்காலம் பலரையும் தொற்றிக்கொண்டுள்ளது போல தெரிகிற‌து. உதாரணம் சொல்கையில் எடுக்க வேற படம் கிடைக்கலையாக்கும்.? வாழ்த்துகள்.//

நான் சொன்ன‌துக்கு ஏத்த‌ வேற‌ ஒரு ப‌ட‌ம் சொல்லுங்க‌ளேன்.. ராஜா இசையைத் த‌விர‌

**********************8

/அமிர்தவர்ஷினி அம்மா said...
ப்பா, ஏழுமலையைப் பத்தி ஏதாவது சொல்லுப்பா...
//

ஏழும‌லையா? ச‌ன்தோஷ‌மா இருக்குங்க‌ ஏழும‌லையின் வெற்றி

***************

கணினி தேசம் on December 31, 2008 at 7:53 PM said...

சகா,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டிலும்..உங்கள் கலாய்ப்புகள் தொடரட்டும். :))))

ILA on January 1, 2009 at 4:32 AM said...

Its Going to Be AR Rehman Again.. (ethir paarpputhaane vaazkkai)

SurveySan on January 1, 2009 at 7:48 AM said...

//ஆனால் ராசாவின் படங்களை எடுத்துக் கொண்டால் எத்தணைப் படங்கள் சொல்லலாம்? பட்டியலிடலாம் எனத் துவங்கினேன். உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போகிறது. எனவே எனக்குப் பிடித்த ஒரு படத்தை மட்டும் சொல்கிறேன். நிழல்கள்.//

true.
Ninaivellam Nithya comes to mind and a few hundred more movies along with that ;)

அத்திரி on January 1, 2009 at 9:06 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா

அத்திரி on January 1, 2009 at 9:08 AM said...

இளையராஜா இசையில் காதலுக்கு மரியாதை படத்தை பற்றி சொல்லாததுக்கு உன்னை!!!!!!!!!>>>>>>>>>>>>>>>>>>>>>

Thusha on January 1, 2009 at 12:10 PM said...

"எனக்கு கல்யாணம் இல்ல.. பதிவு எழுதாமா எப்படி எனக்கு துக்கம் வரும்? வில்லு எனக்குதான் ஜாலி, பதிவர்களுக்கு இல்ல..""

கடைசியாக இப்ப என் தன் சொல்ல வாரிங்க ...................

வாரணமாயிரம் எனக்கு எல்லாப்பாட்டுமே ரொம்ப பிடிக்கும்

இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் அண்ணா

Saravana Kumar MSK on January 1, 2009 at 8:18 PM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..

Saravana Kumar MSK on January 1, 2009 at 8:20 PM said...

நற்செய்தியை எதிர்பார்கிறேன்..

Sinthu on January 1, 2009 at 8:40 PM said...

விடுங்க துஷா அக்கா எனவோ சொல்ல வாராங்க.................
கார்கி அண்ணா. பதிவு நன்றாக உள்ளது...
எழுதுங்களேன்.................... இன்னும் கொஞ்சம்...

RAMYA on January 2, 2009 at 12:36 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்க்கி !!!!

கார்க்கி on January 2, 2009 at 2:43 PM said...

/கணினி தேசம் said...
சகா,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புத்தாண்டிலும்..உங்கள் கலாய்ப்புகள் தொடரட்டும்.//

நன்றி சகா

************************8

//ILA said...
Its Going to Be AR Rehman Again.. (ethir paarpputhaane vaazkkai)
//

எனக்கும் ஆசைதான்.. கைவசம் தமிழ் படங்கள் அவ்வளவாக இல்லையே அவரிடம்

********************8

//SurveySan said...
//ஆனால் ராசாவின் படங்களை எடுத்துக் கொண்டால் எத்தணைப் படங்கள் சொல்லலாம்? பட்டியலிடலாம் எனத் துவங்கினேன். உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போகிறது. எனவே எனக்குப் பிடித்த ஒரு படத்தை மட்டும் சொல்கிறேன். நிழல்கள்.//

true.
Ninaivellam Nithya comes to mind and a few hundred more movies along with தட்//

அனைவரும் இப்படித்தான் சகா..
******************
//அத்திரி said...
இளையராஜா இசையில் காதலுக்கு மரியாதை படத்தை பற்றி சொல்லாததுக்கு உன்னை//

நானும் நினைச்சேன் ச‌கா..

*********************
// Thusha said...
"எனக்கு கல்யாணம் இல்ல.. பதிவு எழுதாமா எப்படி எனக்கு துக்கம் வரும்? வில்லு எனக்குதான் ஜாலி, பதிவர்களுக்கு இல்ல..""

கடைசியாக இப்ப என் தன் சொல்ல வாரிங்க//

இப்போ சொல்ல‌ மாட்டேனு சொல்ல‌ வ‌ர்றேன்

************************8

//Saravana Kumar MSK said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..//

அண்ணாவா? ச‌ரியா போச்சு

**************8

//கார்கி அண்ணா. பதிவு நன்றாக உள்ளது...
எழுதுங்களேன்.................... இன்னும் கொஞ்சம்//

எழுத‌றேன் த‌ங்க‌ச்சி :(((

***********************

//RAMYA said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்க்கி !!!!//


happy new year ramya

வால்பையன் on January 2, 2009 at 9:25 PM said...

எனது சந்தேகத்தை நீங்கள் தீர்க்கவே இல்லை!

பாட்டுகள் கேட்பதற்கு நடுவே வேலை எதாவது செய்வீர்களா

வால்பையன் on January 2, 2009 at 9:28 PM said...

அட நாந்தான் 50

விஜய் on February 17, 2009 at 1:20 PM said...

52

விஜய் on March 18, 2009 at 3:48 PM said...

53

விஜய் on March 18, 2009 at 3:48 PM said...

54th

விஜய் on March 18, 2009 at 3:48 PM said...

55th

 

all rights reserved to www.karkibava.com