Dec 29, 2008

பிரபல பதிவரை பேட்டி எடுத்த புட்டிக்கதைகள் ஹீரோ


    சென்னைக்கும் ஹைதைக்கும் அடிக்கடி தரைவழி மார்க்கமாகவும், வான் வழி மார்க்கமாகவும் சென்று வரும் பிர'பல' பதிவருடன் நம் புட்டிக்கதைகள் ஏழுமலை கண்ட சிறப்பு பேட்டி.

1) மனைவி சொல்லே மந்திரம் என்ற வாசகத்தில் உங்களுக்கு ஏன் உடன்பாடில்லை அன்பரே?

     யாருங்க சொன்னது மனைவி சொல்லே மந்திரம்னு?நீங்களே சொல்லுங்க, எந்த மொழி மந்திரத்திலாவது "போடா, பொறுக்கி, நாய #$%^&**&^%$#@!@#$%^&**^%$#@! போன்ற வார்த்தைகள் உண்டா? மனைவி சொல்ற‌தெல்லாம் மந்திரம் இல்லைங்க. தந்திரம்

2) "எதற்காக என்னைப் போன்றவர்கள் மனைவிக்கு பயப்பட வேண்டும்" என்று சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பேசியிருக்கிறீர்களே?

     ஆமாங்க. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். துணி துவைப்பது, சாமான் கழுவறது, வீடு பெருக்கறதுனு இருக்கிற‌ எல்லா வேலைகளையும் கரெக்டா செஞ்சிடும் என்னை மாதிரியான ஆண்கள் இன்னும் எதற்காக மனைவிக்கு பயப்படனும் சொல்லுங்க.

3) பெண்கள் காந்தம் மாதிரி. கிட்டப் போனாலே ஆண்கள் ஒட்டிக் கொள்வார்கள்னு "வெட்கபடாம" ஒருத்தர் சொல்லியிருக்காரே. அதப் பத்தி என்ன நினைக்கறீங்க?

     தவறு.Absolutely Wrong. காந்தத்திற்கு பாஸிட்டிவ் சைட் என்று ஒன்று இருக்கிறதே.

4) இங்கே இருக்கும் அனைத்து ஆண்களும் இப்படித்தான் இருப்பதாக நினைக்கறீங்களா?

   என் நண்பன் ஒருவன் திருமணம் செய்யனும்னு முடிவு செஞ்சான். அவனுக்காக "மனைவி தேவை" விளம்பரம் கொடுத்தேன். மறுநாள் ஆயிரம் ஃபோன் கால். என் மனைவிய எடுத்துக்கோங்கனு. ஆண் வர்க்கத்திற்காக போராட யாருமே இல்லை என்பதுதான் இதற்கு காரணம்.I am there.I will fight for justice.

5) ஆயிரம் தான் நீங்க மனைவிகளை கிண்டம் செய்தாலும் உங்களுக்கே தங்கமணி ***** என்ற பட்டம் தானே கிடைச்சு இருக்கு?

     புரட்சி தளபதி, சின்னத் தளபதி மாதிரிங்க அது. என்ன அழிக்கனும்னு நினைக்கிற சிலர்தான் அப்படி சொல்றாங்க. உண்மையா என் ரசிகர்கள் என்னை குருவேன்னு தான் சொல்றாங்க.  

6) பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்னு எழுதி இருக்கிங்களே? என்ன படிக்கனும்னு சொல்ல வர்றீங்க?

B.Com. அப்பவாது calmஆ இருக்காங்களானு பார்ப்போம்

7) சமீபத்தில் நீங்கள் சொன்னதாக‌ சொல்லி வாசகர் ஒருவர் அவரது தங்கமணியை தூக்கிக் கொண்டு போனாராமே?

    அது ஒரு சோக கதைங்க. நம்ம கவலைகளையும் சோகங்களையும் நாம் தான் சுமக்க வேண்டும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்துக் கொண்டார்.

*************************************************    மனைவிப் பேச்சுக்கு பதிலே பேசாத தா*** அவர்கள் நம்மிடம் எல்லாக் கேள்விக்கும் விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றியும் ஒரு நைன்ட்டியும்.

அடுத்து, வலையுலகை வாழ வைப்பதற்காகவே செல்லிட பேசி வைத்திருக்கும் “ரொம்ப நல்லவன்” என்று பேரெடுத்த பதிவருடன் நேர்காணல். அதுவரை உங்களிடமிருந்து வடை பெறுவது ஏழுமலை.

25 கருத்துக்குத்து:

அதிரை ஜமால் on December 29, 2008 at 10:10 AM said...

குட்டி கதைகள் தெரியும்

அதென்ன புட்டி ...

SUREஷ் on December 29, 2008 at 10:28 AM said...

கல்யாணம் ஆன பிற்கு இதைப் படிப்பதும், கண்கெட்ட பிற்கு சூரிய வணக்கம் என்பதும்.........

நான் ஆதவன் on December 29, 2008 at 10:42 AM said...

பேச்சிலர் காவல் தெய்வமே...
எங்கள் குருவே....

நீ செய்யும் இந்த தொண்டுக்கு ஈடு இணையேது...

கார்க்கி on December 29, 2008 at 11:03 AM said...

/ அதிரை ஜமால் said...
குட்டி கதைகள் தெரியும்

அதென்ன புட்டி //

என்னண்ணே இப்படி கேட்டிங்க? புட்டிக்கதைகள் அப்படின்னு லேபிள் இருக்கும். அத கிளிக்கி படிங்க..

********************

// SUREஷ் said...
கல்யாணம் ஆன பிற்கு இதைப் படிப்பதும், கண்கெட்ட பிற்கு சூரிய வணக்கம் என்பதும்........//

ஒன்னுதான்...

***********************

/நான் ஆதவன் said...
பேச்சிலர் காவல் தெய்வமே...
எங்கள் குருவே....

நீ செய்யும் இந்த தொண்டுக்கு ஈடு இணையேது.//

இது அவருக்குத்தானே சகா?

narsim on December 29, 2008 at 11:16 AM said...

2 & 3 super saga!!

நான் ஆதவன் on December 29, 2008 at 11:19 AM said...

//
இது அவருக்குத்தானே சகா?//

நம்ம குருவுக்கு தான் சகா....

வித்யா on December 29, 2008 at 11:38 AM said...

பிரசெண்ட் மட்டும் போட்டுட்டு மீ த எஸ்கேப்:)

கார்க்கி on December 29, 2008 at 1:02 PM said...

வித்யா said...
பிரசெண்ட் மட்டும் போட்டுட்டு மீ த எஸ்கேப்:)//

ஏன்???????????

**********************

/ narsim said...
2 & 3 super saக!!//

ஸ்பெஷல் என்ன தல‌ அந்த ரென்டுல??????

அமிர்தவர்ஷினி அம்மா on December 29, 2008 at 1:05 PM said...

அது ஒரு சோக கதைங்க. நம்ம கவலைகளையும் சோகங்களையும் நாம் தான் சுமக்க வேண்டும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்துக் கொண்டார்//

அனுபவிச்சு பாருங்க சார் அப்ப புரியும்
பேட்டியா எடுக்கறீங்க பேட்டி...

muru on December 29, 2008 at 1:05 PM said...

\\\3) பெண்கள் காந்தம் மாதிரி. கிட்டப் போனாலே ஆண்கள் ஒட்டிக் கொள்வார்கள்னு "வெட்கபடாம" ஒருத்தர் சொல்லியிருக்காரே. அதப் பத்தி என்ன நினைக்கறீங்க?

தவறு.Absolutely Wrong. காந்தத்திற்கு பாஸிட்டிவ் சைட் என்று ஒன்று இருக்கிறதே\\\

என்ன பாசு, காந்தத்திற்கு பாசிடிவ் சைடு எதுங்க? நார்த் போல்- சவுத் போல் மட்டும தானே.

Anonymous said...

அவரு இப்ப வேற என்னமோ எழுதி புதிர் போட்டு இருக்காரு

கார்க்கி on December 29, 2008 at 2:45 PM said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...
அது ஒரு சோக கதைங்க. நம்ம கவலைகளையும் சோகங்களையும் நாம் தான் சுமக்க வேண்டும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்துக் கொண்டார்//

அனுபவிச்சு பாருங்க சார் அப்ப புரியும்
பேட்டியா எடுக்கறீங்க பேட்டி./

வேற வழி.. ஒரு நாள் மாட்டித்தானே ஆகனும்..

***************************************

/என்ன பாசு, காந்தத்திற்கு பாசிடிவ் சைடு எதுங்க? நார்த் போல்- சவுத் போல் மட்டும தானே//

என்னங்கண்ணா.. நல்லா படிச்சிங்க போங்க.. எந்த ஊர்ல படிச்சிங்க?

**************************

/சின்ன அம்மிணி said...
அவரு இப்ப வேற என்னமோ எழுதி புதிர் போட்டு இருக்கா//

தல சீக்கிரமே வழிக்கு வருவாரு

பரிசல்காரன் on December 29, 2008 at 2:53 PM said...

. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். துணி துவைப்பது, சாமான் கழுவறது, வீடு பெருக்கறதுனு இருக்கிற‌ எல்லா வேலைகளையும் கரெக்டா செஞ்சிடும் என்னை மாதிரியான ஆண்கள் இன்னும் எதற்காக மனைவிக்கு பயப்படனும் சொல்லுங்க.//

நான் தெரிஞ்சே இந்தக் கேள்வியக் கேட்டுட்டிருக்கேன், பதிலே இல்ல!

ஸ்ரீமதி on December 29, 2008 at 3:08 PM said...

:)))))))))Maattaamalaa poyiduveenga annikitta?? Annaikku irukku anna ungalukku...:))

ஸ்ரீமதி on December 29, 2008 at 3:08 PM said...

me the 15 :):)

வால்பையன் on December 29, 2008 at 3:59 PM said...

பாவம் அவரு,
விடவே மாட்டிங்களா!

கார்க்கி on December 29, 2008 at 4:45 PM said...

//பரிசல்காரன் said...
. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். துணி துவைப்பது, சாமான் கழுவறது, வீடு பெருக்கறதுனு இருக்கிற‌ எல்லா வேலைகளையும் கரெக்டா செஞ்சிடும் என்னை மாதிரியான ஆண்கள் இன்னும் எதற்காக மனைவிக்கு பயப்படனும் சொல்லுங்க.//

நான் தெரிஞ்சே இந்தக் கேள்வியக் கேட்டுட்டிருக்கேன், பதிலே இல்//

உண்மைய ஒத்துக்கற தைரியம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு சகா..

****************************

/ ஸ்ரீமதி said...
:)))))))))Maattaamalaa poyiduveenga annikitta?? Annaikku irukku anna ungalukku...:))//

நான் கொஞ்சம் டேஞ்சர்ம்மா.. அண்ணிதான் பாவம்னு நினைக்கிறேன்

***************************
//வால்பையன் said...
பாவம் அவரு,
விடவே மாட்டிங்களா//

எங்க குரு சகா அவரு.. எப்படி விடுவோம்?

SK on December 29, 2008 at 4:49 PM said...

:-) :-)

கும்க்கி on December 29, 2008 at 6:03 PM said...

நான் கொஞ்சம் டேஞ்சர்ம்மா.. அண்ணிதான் பாவம்னு நினைக்கிறேன்.

பாப்பம்ய்யா பாப்பம்.

கார்க்கி on December 29, 2008 at 6:46 PM said...

/ SK said...
:-) :‍)//

எங்க குரு தா...வ பார்த்தா சிரிப்பா இருக்கா உங்களுக்கு??????

*********************

/கும்க்கி said...
நான் கொஞ்சம் டேஞ்சர்ம்மா.. அண்ணிதான் பாவம்னு நினைக்கிறேன்.

பாப்பம்ய்யா பாப்பம்//

கப்சிப்..பப்ளிக்ல போய் இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு.. பெரிய மனுஷரய்யா நீர்...

தாமிரா on December 29, 2008 at 8:21 PM said...

நான் ஆதவன் said...
//இது அவருக்குத்தானே சகா?//
நம்ம குருவுக்கு தான் சகா.... ///

புல்ல்ல்ல‌ரிக்க‌ வைக்குறாங்க‌ளே.. ந‌ன்றி ந‌ன்றி.! பேட்டி சென்ஸார் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தை க‌ண்டிக்கிறேன்.

கும்க்கி on December 29, 2008 at 10:24 PM said...

பேட்டி சென்ஸார் செய்யப்படாததை
கண்டிக்கிறேன்.
(ஊருக்கு போன அண்ணி திரும்ப வரட்டும்....அண்ணாத்தைக்கு இருக்கு)

கார்க்கி on December 30, 2008 at 10:47 AM said...

// தாமிரா said...
நான் ஆதவன் said...
//இது அவருக்குத்தானே சகா?//
நம்ம குருவுக்கு தான் சகா.... ///

புல்ல்ல்ல‌ரிக்க‌ வைக்குறாங்க‌ளே.. ந‌ன்றி ந‌ன்றி.! பேட்டி சென்ஸார் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தை க‌ண்டிக்கிறேன்//

விரைவில் முழுப் பேட்டியையும் போடறேன்...

**********************


/ கும்க்கி said...
பேட்டி சென்ஸார் செய்யப்படாததை
கண்டிக்கிறேன்.
(ஊருக்கு போன அண்ணி திரும்ப வரட்டும்....அண்ணாத்தைக்கு இருக்//

மறுபடியும் சொல்றேன்.. பப்ளிக்..பப்ளிக் :))))

Karthik on December 30, 2008 at 11:48 AM said...

பேட்டி கலக்கலாக இருக்கு.
:)

தல ஏழுமலைய யாராவது பேட்டி காணுங்கப்பா!

A N A N T H E N on December 31, 2008 at 7:52 AM said...

ஹாஹா...

 

all rights reserved to www.karkibava.com