Dec 28, 2008

இந்த அக்காவும் பதிவர்தான்


உன்னிடம் வர
எண்ணி எத்தனிக்கும்
கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,

உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்

உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..

160 பின்னூட்டங்கள் பெற்ற இந்தக் கவிதையை எழுதியவரை இங்கே க்ளிக்கி படியுங்கள்.

*************************************************

ஹிஹிஹி. அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

   அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்

11 கருத்துக்குத்து:

A N A N T H E N on December 28, 2008 at 11:34 AM said...

பதிவு பழசு
முயற்சி புதுசு,
தொடருங்க!

sinthu on December 28, 2008 at 12:22 PM said...

"ஏதேதோ நினைத்து வரும் என்னிலிருந்து..."
என்ற பிரத்தான தலைப்பை எங்காவது புகுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் என்றால் உங்கள் தலைப்புக்கும் கவித்தைக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு என்று யோசித்து பார்த்து தோற்றேன். அப்புறம் I pressed the link. அதற்கு அப்புறம் தான் புரிந்தது பூர்ணிமா அக்கா அதற்கு வேறு தலைப்பிட்டு தான் இந்த கவித்தையை எழுதியிருக்கிறார் என்று ..
உங்கள் தலைப்புக்கும் கவித்தைக்கும் இடையிலான தொடர்பை விளக்கவும் அண்ணா..

கணினி தேசம் on December 28, 2008 at 12:29 PM said...

சாரலில் நனைந்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.

Thusha on December 28, 2008 at 12:59 PM said...

கவிதை நல்லா இருக்கு பூர்ணிமா அக்கா
நன்றி அண்ணா இதையும் தெரியப்படுத்தியதற்கு

ராம்.CM on December 28, 2008 at 1:37 PM said...

முயற்சி புதுசு,
தொடருங்க!

Thooya on December 28, 2008 at 3:20 PM said...

:)

கும்க்கி on December 28, 2008 at 6:34 PM said...

என்னம்மா ஆச்சு....?
வழக்கமான பதிவையும் காணோம்....

அதிரை ஜமால் on December 29, 2008 at 6:16 AM said...

நல்ல முயற்சி.

தாரணி பிரியா on December 29, 2008 at 9:24 AM said...

கவிதை, மொக்கை, கும்மி என எல்லா ஏரியாவிலும் பிரகாசிப்பவர் பூர்ணி .

ஆனாலும் பூர்ணி உங்க கவிதைகள்தான் உங்களோட மிகப்பெரிய பலம். அடிக்கடி கவிதை எழுதுங்க தாயி

கார்க்கி on December 29, 2008 at 9:44 AM said...

/ A N A N T H E N said...
பதிவு பழசு
முயற்சி புதுசு,
தொடருங்//

உங்கள் ஆதரவுக்கு நன்றி

*****************
/உங்கள் தலைப்புக்கும் கவித்தைக்கும் இடையிலான தொடர்பை விளக்கவும் அண்ணா.//

ஒரு தொடர்பும் கிடையாது.. தலைப்பு பதிவுக்காக..அதாவ்து பூர்ணிமா பற்றி..

******************

/ கணினி தேசம் said...
சாரலில் நனைந்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்//

உங்க பின்னூட்டங்களை அங்கே பார்த்திருக்கிறேன்

**********************

/ Thusha said...
கவிதை நல்லா இருக்கு பூர்ணிமா அக்கா
நன்றி அண்ணா இதையும் தெரியப்படுத்தியதற்//

நன்றி துஷா

கார்க்கி on December 29, 2008 at 9:47 AM said...

/ ராம்.CM said...
முயற்சி புதுசு,
தொடருங்க//

நன்றி ராம்..

****************

/ Thooya said...
:)//

உடல் நலம் தேறிவிட்டதா தூயா?

*****************

/ கும்க்கி said...
என்னம்மா ஆச்சு....?
வழக்கமான பதிவையும் காணோம்..//

இது யாருக்குங்க?

************************

/அதிரை ஜமால் said...
நல்ல முயற்சி/

நன்றி ஜமால்

********************

/ தாரணி பிரியா said...
கவிதை, மொக்கை, கும்மி என எல்லா ஏரியாவிலும் பிரகாசிப்பவர் பூர்ணி .
//

உண்மைதான்

 

all rights reserved to www.karkibava.com