Dec 27, 2008

ஆறாம் விரல்


    அரிச்சந்திரன் கோவிலைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது அந்தக் கூட்டம். கையில் தீச்சட்டியுடன் முன்னே நடந்துக் கொண்டிருந்தான் மதன். வாழ்க்கையில் அவனுக்கு வழிகாட்டியாக இருந்த அவன் தந்தை இவனுக்குப் பின்னால். மதனுக்கு எப்போதும் துணையாய் இருந்தவருக்கே அன்று நாலு பேரின் உதவி தேவையாயிருந்தது.   

     சம்பிராதாயங்களும் ஆயத்தங்களும் முடிந்து தீ மூட்ட வேண்டிய நேரம். கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது. யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக மதனின் கையைப் பிடித்து தீ வைத்தார். படுத்திருந்தவர் மதனுக்கு மட்டும் எழுந்து காட்சி கொடுத்து வழக்கமாய் அவர் சொல்லும் வசனத்தை சொன்னார். "கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்".

    மதனுக்கு எல்லாமே அவன் தந்தைதான்.சினிமாவில் வருவதைப் போல இருவரும் அமர்ந்து நண்பர்கள் போல உரையாடியதில்லை. அவரின் ஒவ்வொரு செயலும் மதனுக்கு பாடமாய் இருந்தது. ஒரு நல்ல கணவனாக, தந்தையாக வாழ்ந்தவரிடம் மதனுக்கு ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது. அவரின் புகைப் பழக்கம். முடிந்த வரையில் வீட்டில் புகைக்காமல் இருந்தாலும் சில நேரங்களில் மதனிடம் பிடிபட்டு விடுவார். கேள்விகளால் துளைக்கும் மதனுக்கு ஒற்றைச் சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் என்பான் மதன். ஆமாம். நீ உன்னைப் பார்த்துக் கொண்டால் போதும். வழக்கமாய் கொள்ளி வைப்பதற்காகவாது மகன் வேண்டுமென்பார்கள். அந்த கஷ்டம் கூட உனக்கு நான் வைக்க மாட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே.

  அவரிடம் இருந்த ஒரே ஒரு தீயப் பழக்கம் அவரின் உயிரையே பறித்து விட்டது என்பதை மதனால் நம்ப முடியவில்லை. முடங்கிப் போன அவன் தேற சில மாதங்கள் ஆனது. அவன் தந்தையின் விருப்பபடி திரைத்துறையில் சேர வேண்டும் என நினைத்தான். முதல் படியாக ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

  இயக்குனரிடம் அறிமுகப்படுத்தப் பட்டான். எல்லாம் எதிர்பார்த்தப்படியே நடந்தது. படப்பிடிப்பு நாளன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு ஒரு விளம்பரம் எடுக்க வேண்டியதாயிற்று. அதற்கும் மதனையே போடலாம் என முடிவெடுத்த இயக்குனர், மதனிடம் "தம்பி சிகரெட் பிடிங்க பார்க்கலாம்" என்றார்.

தடுமாறிய மதன் புகைப்பதில்லை என்றான்.

அட.. சும்மா ரெண்டு பஃப் ஸ்டைலா இழுத்து விடுங்க. புகை நல்லா வரணும்.

அதற்குள் யாரோ ஒருவர் பற்ற வைக்கப்பட்ட சிகரெட்டுடன் வந்தார். மதனின் கையில் திணிக்கப்பட்டது. செய்வதறியாத மதன் அதை தூக்கிப் போட்டுவிட்டு வேகமாய் வெளியேறினான்.

    இரண்டு நாட்கள் க‌ழித்து இயக்குனரை சென்று பார்த்தான். நடந்ததைக் கூறினான். அவன் தோளை அழுத்திய இயக்குனர் எடுக்கப்பட்ட விளம்பரத்தை போட்டார். புகையின் பாதிப்பை அழுத்தமாய் காட்டும் அந்த விளம்பரத்தின் முதல் காட்சியில் இளைஞன் ஒருவன் வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

24 கருத்துக்குத்து:

sayrabala on December 27, 2008 at 8:56 AM said...

valikkum unnmai

sayrabala on December 27, 2008 at 8:57 AM said...

ada naan thaan first pola irukku?

கும்க்கி on December 27, 2008 at 9:00 AM said...

ஹி..ஹி

கும்க்கி on December 27, 2008 at 9:17 AM said...

ராம கிருஷ்ணர் கிட்ட சின்ன பையன கூட்டிபோய்..இனிப்பு அதிகமா சாப்பிடுறான் கொஞ்சம் கண்டிச்சு விடுங்க..என ஒரு அம்மா கேட்டதற்க்கு ரெண்டு நாள் கழிச்சு வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தாறாம்.
ரெண்டு நாள் கழிச்சு அந்த பையனிடம்.. இனிப்பு அதிகம் சாப்பிடாதே தம்பி என அட்வைஸ் செய்தாறாம்.
இதை அப்பவே சொல்லியிருக்கலாமே என அந்த தாய் கேட்க .....


அதை சொல்வதற்க்கு முன் நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமல்லவா...என பதில் சொன்னாறாம்.

நம்ம கதை இப்படி இருக்கு..என்ன பண்றது..?

muru on December 27, 2008 at 9:19 AM said...

நல்லா கதை விடுறீங்க...

PoornimaSaran on December 27, 2008 at 9:41 AM said...

:))

VINOTH gowtham on December 27, 2008 at 9:56 AM said...

எப்படியோ கொண்டு போய் எப்படியோ முடிச்சிடிங்க.

நான் ஆதவன் on December 27, 2008 at 10:42 AM said...

ஒன்னு கேப் போட்டு இருக்கீங்க இல்ல இந்த மாதிரி தலையே தெரியாத மாதிரி போட்டாவ போடுறீங்க. தலையில முடியிருக்கா இல்லையான்னு தெரியாம இருக்க இந்த போட்டாவா.....ம்ம்ம்ம்ம்

அப்புறம் சிறுகதை நன்னாயிருக்கு...

narsim on December 27, 2008 at 11:11 AM said...

//கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது//

ரசித்தேன்..

//"கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்". //

முதலில் கோபமாய் பேசும் சாதாரண டயலாக் போல காட்டிவிட்டு.. அதற்கு நேர்மாறான சூழலில் சொன்னதுபோல் சொன்னது நன்றாக இருந்தது சகா..

அப்புறம் நான் ஆதவன் கிட்ட‌.. என்ன கோவம் நம்ம மேலனு கேளுங்க..

sinthu on December 27, 2008 at 11:37 AM said...

Anna,
புகை பிடிப்பதால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை விடுவதற்கு இந்த இளைஞர்கள் சமூதாயம் விடுவதாக இல்லை தானே..........
அவர்கள் திருந்தனும்
திருத்த படவேண்டும்
ஆனால் எப்படி என்பது தான் இப்போதைய கேள்வி..........
sinthu
Bagladesh

Thusha on December 27, 2008 at 1:27 PM said...

புகைப்பிடிப்பவன் தன் மரணத்திற்கு தானே நாள் குறிக்கிறான் என்பது உண்மையே
ஆனால் இதை இந்த இளைய சாமுதயம் புரிந்துகொண்டால் அவர்கள் எதிர்காலம் என்பது பிராகாசமனாதாக இருக்கும் அல்லது அவர்கள் வாழ்க்கை புகைமண்டலம் சூழ்ந்து விடும்

"அவர்கள் திருந்தனும்
திருத்த படவேண்டும்
ஆனால் எப்படி என்பது தான் இப்போதைய கேள்வி..........""""""""""

தொடங்கினால் விடமுடியாது என்பது உண்மை, முடிந்தால் தொடமால் இருக்க வேண்டும் அல்லது உங்களின் ................ போன்றவார்களால் தன் முடியும்..

சப்பா
நிறைய சொல்லிட்டன் யாருக்காச்சும் எதாவது புரியுதா

கணினி தேசம் on December 27, 2008 at 1:30 PM said...

சிலருக்கு சிகரெட் ஆறாம் விரலாகவே பாரிவிட்டதால் தானோ என்னவோ அதை விட மறுக்கின்றனர்.


நல்ல பதிவு,

நன்றி

கார்க்கி on December 27, 2008 at 4:07 PM said...

/sayrabala said...
valikkum unnmai
/

ஆம்..
*********************888
/ கும்க்கி said...
ஹி..ஹி
//

நீங்களும் அடிப்பிங்களா??????????????
*********************
/ muru said...
நல்லா கதை விடுறீங்க...//

என்ன சொல்ல வர்றீங்க சகா?

********************8

/PoornimaSaran said...
:))
//

என சிரிப்பு? சின்னப்புள்ளத்தனமா

கார்க்கி on December 27, 2008 at 4:10 PM said...

/VINOTH gowtham said...
எப்படியோ கொண்டு போய் எப்படியோ முடிச்சிடிங்க//

உண்மைய சொல்லனும்ன்னா எழுத ஆரம்பிச்சப்ப ஒன்னுமே முடிவு செய்யல.. அது போன போக்குல எழுதிட்டேன்

**************8

/நான் ஆதவன் said...
ஒன்னு கேப் போட்டு இருக்கீங்க இல்ல இந்த மாதிரி தலையே தெரியாத மாதிரி போட்டாவ போடுறீங்க. தலையில முடியிருக்கா இல்லையான்னு தெரியாம இருக்க இந்த போட்டாவா.....ம்ம்ம்ம்ம்//

எனக்கு லைட்டா முன்னால‌சொட்டைதான் ..ஆனா அத நானே கார்ட்டூன் கமென்ட்ல படத்தோட கிண்டல் செஞ்சேனே.. போய் பாருங்க..

********************8

/narsim said...
//கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது//

ரசித்தேன்..//

நன்றி தல‌

//"கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்". //

முதலில் கோபமாய் பேசும் சாதாரண டயலாக் போல காட்டிவிட்டு.. அதற்கு நேர்மாறான சூழலில் சொன்னதுபோல் சொன்னது நன்றாக இருந்தது சகா..//

நம்ம அலைவரிசையும் செட்டாவது தல..:))

//அப்புறம் நான் ஆதவன் கிட்ட‌.. என்ன கோவம் நம்ம மேலனு கேளுங்க..//


அவ‌ர‌ த‌னியா க‌வ‌னிச்சுக்க்றேன்

கார்க்கி on December 27, 2008 at 4:12 PM said...

/sinthu said...
Anna,
புகை பிடிப்பதால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை விடுவதற்கு இந்த இளைஞர்கள் சமூதாயம் விடுவதாக இல்லை தானே..........//

டென்ஷன் ஆவாத சிந்து.. :))))

***************8

//Thusha said...
புகைப்பிடிப்பவன் தன் மரணத்திற்கு தானே நாள் குறிக்கிறான் என்பது உண்மையே ..
சப்பா
நிறைய சொல்லிட்டன் யாருக்காச்சும் எதாவது புரியுதா//

ந‌ல்லாவே புரியுது..

*******************

/கணினி தேசம் said...
சிலருக்கு சிகரெட் ஆறாம் விரலாகவே பாரிவிட்டதால் தானோ என்னவோ அதை விட மறுக்கின்றனர்.
நல்ல பதிவு
//

ந‌ன்றி ச‌கா

கும்க்கி on December 27, 2008 at 6:06 PM said...

sinthu
Bagladesh
ஹூம்...எங்கிருந்தல்லாம் வாராங்கப்பா.

அண்ணா..

போட்டோவை மாத்துங்கண்ணா.......

ரசிகர்கள் கோரிக்கைகளையும் கொஞ்சம் ஏத்துக்கங்ணா.

அப்புறம்..மச்சி டைம்பாஸ் பண்ண தோதையும் கொஞ்சம்கவனிங்கண்ணா.

Karthik on December 27, 2008 at 6:50 PM said...

nice post karki.

i liked it really.

sinthu on December 27, 2008 at 10:21 PM said...

"டென்ஷன் ஆவாத சிந்து.. :)))"

என்னை டென்டின் ஆக்கி பக்க வேணும் என்று தான் எல்லாரும் நினைக்கினம்.... ஆனா அவங்களால் முடியல்ல..
ஆனா ஒரு கவலையான விடயம் தானே அண்ணா என என்றால் இந்த சமூதாயம் இப்படியே புகைத்தலுக்கு அடிமையாகி போனால் யாருக்கு இலாபம்.... இல்லையா? அப்புறன் நல்ல எழுதுங்க இதை பார்த்தாலாவது யாரும் திருந்திராங்களா என்று பாப்பம். உங்களின் வலைப்பூவில் யாராவது "நான் கார்க்கி (இதை நான் சொல்லவில்லை யாராவது என் என்றால் நீங்க எனக்கு அண்ணா அண்ணாவை பேர் சொல்லி கூப்பிட கூடாது தானே ) உங்களுடைய வலைப்பூவை பார்த்து புகை பிடிப்பதை விட்டுவிட்டேன் என்று சொன்னால் உங்களுக்கு சந்தோசம் தானே..

இது போதும் அப்புறம் பாக்கலாம்
வாசித்து திரும்பவும் comment பண்ணுங்க

sinthu on December 27, 2008 at 10:23 PM said...

"sinthu
Bagladesh
ஹூம்...எங்கிருந்தல்லாம் வாராங்கப்பா"
அண்ணே கும்மி அண்ணா நாங்க தமிழ்
எங்கயிருந்தும் எப்படியும் வருவம்
நாங்க எப்பவோ வந்திட்டமில்ல
வரட்டா.........?

தாரணி பிரியா on December 28, 2008 at 3:41 AM said...

//புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் //


இது நிஜமான வார்த்தை. அது மட்டுமில்லா பக்கத்துல இருக்கறவங்களுக்கு சேர்த்துதானே கொள்ளி வெக்கறாங்க. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்களே ?????????? :(((((((

கார்க்கி on December 28, 2008 at 11:34 AM said...

//Karthik said...
nice post karki.

i liked it reஅல்ல்ய்//

நன்றிப்பா..

************************8

@சிந்து,

உனக்கு ரொம்பவும்தான் பெரிய ஆசை..

*************************8
//தாரணி பிரியா said...
//புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் //


இது நிஜமான வார்த்தை. அது மட்டுமில்லா பக்கத்துல இருக்கறவங்களுக்கு சேர்த்துதானே கொள்ளி வெக்கறாங்க. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்களே ??//

கேட்கறவங்ககிட்ட மட்டும் சொல்லிப் பாருஙக்..

sinthu on December 28, 2008 at 4:16 PM said...

"@சிந்து,

உனக்கு ரொம்பவும்தான் பெரிய ஆசை.."
இதை எல்லாம் பெரிய ஆசை என்றால் உண்மையான பெரிய ஆசையை எல்லாம் எப்படி சொல்ல........
மற்றது பெரியவங்க சொல்லுவாங்க எதையும் பெருசா யோசித்தா தான் சின்னதாயாவது நடக்கும் என்று

அமிர்தவர்ஷினி அம்மா on December 29, 2008 at 1:08 PM said...

எத்தனை பேர் இந்த புத்தாண்டிற்கு ஆறாம் விரலை விட்டு விடுவதாய் (!?!) சபதம் மேற்கொள்வார்களோ...

நல்ல கதை...

கும்க்கி on December 29, 2008 at 6:07 PM said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
எத்தனை பேர் இந்த புத்தாண்டிற்கு ஆறாம் விரலை விட்டு விடுவதாய் (!?!) சபதம் மேற்கொள்வார்களோ...

நல்ல கதை...

இந்த மாதிரி சபதம் போடுவதை இந்த ஆண்டுடன் கண்டிப்பாக விட்டுவிடுகிறேன்...

 

all rights reserved to www.karkibava.com