Dec 26, 2008

காக்டெய்ல்


    சிங்கையில் பணிபுரிந்த போது "சூப்பர்ஸ்டார்" என்று ஒரு பாட்டுப் போட்டி நடை பெற்றது. ஆர்கெஸ்ட்ராவும், ஜோடிப் பாடல் என்றால் கூட பாடுவதற்கு பாடகியோ/பாடகரையும் போட்டியாளர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். திறந்த வெளியில் அனைவரின் முன் பாட வேண்டும். என் நண்பர்கள் சிலர் என்னை உசுப்பேற்றி விட நானும் பங்கேற்று முதல் ஆளாக சங்கீத ஜாதி முல்லையென்று கத்தினேன். மேட்டர் அதுவல்ல. அதற்கு முந்தைய நாள் நண்பன் ஒருவன் சொன்னான், பெண் பாடகி அவ‌னுடன் பாடுவதாக இருந்தால் அவன் பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஆலங்குயில் கூவும் ரயில் பாடலை பாடப் போகிறானாம்.

*************************************************    ஹைதையில் நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு திடிரென என் மீது பாசம் அதிகமாகி விட்டது. பாதாளத்திற்கு சென்று விட்டு ரியல் எஸ்டேட் ஒரு காரணம் என்றாலும், அவ்வபோது நாலும் மூனும் எவ்வளவு என‌ தவித்த அவருக்கு ஏழு என்று சொல்லி நான் செய்யும் சின்ன சின்ன உதவிகளும் ஒரு காரணம். ஒரு நாள் காலையிலே அவர்கள் வீட்டில் வெஜிடபிள் பிரியாணியாம். சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள். என்னை வெண்பூ என நினைத்துக் கொண்டு ஒரு குண்டாவில் கொண்டு வந்தார்கள். அதுக் கூட எனக்கு பயத்தை தரவில்லை, அதில் தெரிந்த பச்சை மிளகாயைப் பார்த்த போதே எனக்கு பயம் வந்து விட்டது. கொடுத்தது மட்டுமில்லாமல் பக்கத்திலே நின்று சாப்பிடு என்றார். பச்சடி இல்லையா என்றேன். எடுத்து வந்தப் பின்புதான் எனக்கு மயக்கம் வந்தது. அதிலும் துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய். அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல.

*************************************************

   சென்னை யூனிட் ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்கு Smart Card சேவை வெகு நாட்களாக பழக்கத்தில் இருக்கிறது. ஏனோ தெரியவில்லை அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக  இருக்கிறது. சனிக்கிழமை காலை பூங்கா ரயில் நிலையத்தில் நான் ஏறும் போதெல்லாம் பெரிய கூட்டம் இருக்கும். நான் நேராக சென்று ஸ்மார்ட் கார்டினால் டிக்கெட் எடுத்தால் படித்த மாதிரி தெரிபவர்களே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இந்த வாரம் ஒருவன் 4 ரூபாய் டிக்கெட்டை ஐந்து ரூபாய்க்கு அவன் Smart card  மூலம் எடுத்துக் கொடுக்கிறான். மக்களும் அவனிடத்தில் வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ரயில்வே நிர்வாகம் கண்டுக் கொள்ளவேயில்லை.

*************************************************   தமிழ்குறிஞ்சி என்ற இணையத்தளம் சினிமா,அரசியல், இலக்கியம்,வர்த்தகம் என பலதரப்பட்ட சேவைகள் வழங்கி வருகிறது. பதிவுகள் என்ற பிரிவில் என் புட்டிகதைகள் பதிவை என் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். மற்றும் பூர்ணிமாசரண் எனக்கு பட்டாம்பூச்சி(The coolest blog) விருது கொடுத்திருக்கிறார்கள். இருவருக்கும் என் நன்றிகள்.

*************************************************   வலையுலகில் நான் படிக்கும் ஒரே தொடர்கதை நர்சிம்மின் மாறவர்மன். தொடர்கதை என்றாலே பலரும் படிக்காமல் போவதற்கு காரணம் அதை தொடர்ந்து படிக்காவிட்டால் விளங்காது என்பதுதான். உண்மைதான். ஆனால் மாறவர்மனில் எனக்கு பிடித்தது வர்ணனைகள் தான். கதையை விடுங்கள். ஏதாவது ஒரு அத்தியாயத்தை மட்டும் படித்துப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். அவரின் வர்ணனைகளுக்காகவே அடுத்த பகுதியை நேரம் கிடைக்கும் போது படிப்பீர்கள். கலக்குங்க தல.

48 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on December 26, 2008 at 9:05 AM said...

hi me the first

தாரணி பிரியா on December 26, 2008 at 9:07 AM said...

அட நீங்க பாட்டு எல்லாம் பாடுவிங்களா? சரி பிரைஸ் வாங்கினீங்களா அதை சொல்லுங்க.

தாரணி பிரியா on December 26, 2008 at 9:08 AM said...

//அவ்வபோது நாலும் ஏழும் எவ்வளவு என‌ தவித்த அவருக்கு ஏழு என்று சொல்லி நான் செய்யும் சின்ன சின்ன உதவிகளும் ஒரு காரணம்//

என்னது ?????????????

அதிரை ஜமால் on December 26, 2008 at 9:09 AM said...

\\"காக்டெய்ல்"\\

இத்தலைப்பு அடிக்கடி இடம் பெறுது போல

கார்க்கி on December 26, 2008 at 9:10 AM said...

காலை வணக்கம் தா.பி. அந்த மேட்டர் சொல்லாத போதே புரிஞ்சிக்க வேண்டாமா? இதெல்லாம் பப்ளிக்ல கேட்க கூடாதுங்க..

இப்ப என்ன சொல்றது..ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்.. ஒரே சூப்பர்ஸ்டார்.. அதனால் எனக்கு வேணாம்னு சொல்லிட்டேன்

அதிரை ஜமால் on December 26, 2008 at 9:10 AM said...

\\சங்கீத ஜாதி முல்லையென்று\\

ஆஹா ஆஹா ...

நானும் அதிகமாக கத்துவது இதைத்தான்.

அதிரை ஜமால் on December 26, 2008 at 9:12 AM said...

\\பச்சடி இல்லையா என்றேன். எடுத்து வந்தப் பின்புதான் எனக்கு மயக்கம் வந்தது. அதிலும் துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்\\

அவர்களின் உணவிலே மிக பிடித்தது இதுவும்.

அதிரை ஜமால் on December 26, 2008 at 9:13 AM said...

\\ரயில்வே நிர்வாகம் கண்டுக் கொள்ளவேயில்லை. \\

அவன் அவர்களை கண்டுக்கொண்டிருப்பான்

அதிரை ஜமால் on December 26, 2008 at 9:14 AM said...

\\தமிழ்குறிஞ்சி என்ற இணையத்தளம் சினிமா,அரசியல், இலக்கியம்,வர்த்தகம் என பலதரப்பட்ட சேவைகள் வழங்கி வருகிறது. பதிவுகள் என்ற பிரிவில் என் புட்டிகதைகள் பதிவை என் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். மற்றும் பூர்ணிமாசரண் எனக்கு பட்டாம்பூச்சி(The collest blog) விருது கொடுத்திருக்கிறார்கள். இருவருக்கும் என் நன்றிகள்.\\

வாழ்த்துக்கள்

தாரணி பிரியா on December 26, 2008 at 9:14 AM said...

காலை வணக்கம் கார்க்கி

என்னது காரம் சாப்பிட பயமா? நீங்க அவ்வளவு சின்ன பையனா கார்க்கி?

கார்க்கி on December 26, 2008 at 9:14 AM said...

@தாரணி பிரியா,

எங்க வீட்டு நெட்டுல தமிலிஷ் தொறக்க மாட்டது.. கொஞ்சம் இந்த பதிவ தமிலிஷல போடறீங்களா?

*********************

/அதிரை ஜமால் said...
\\"காக்டெய்ல்"\\

இத்தலைப்பு அடிக்கடி இடம் பெறுது போல
//

அண்ணா காக்டெய்ல் என்பது வாராவாரம் கலந்து கட்டி பல மேட்டர் எழுதுவது. பரிச‌லின் அவியல் மாதிரி..(அவர மாதிரி சுவாராஸ்யமா இல்லையேன்னு சொன்னா அவ்ளொதான் சொல்லிப்புட்டேன்)

தாரணி பிரியா on December 26, 2008 at 9:19 AM said...

// அதிரை ஜமால் said...
\\ரயில்வே நிர்வாகம் கண்டுக் கொள்ளவேயில்லை. \\

அவன் அவர்களை கண்டுக்கொண்டிருப்பான் //

:) இதுதான் காரணமா இருக்கும்

அத்திரி on December 26, 2008 at 9:34 AM said...

///அதிலும் துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய். அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல.//


)))))))))))))))))))))))


http://rajkanss.blogspot.com/2008/12/2008_25.html
இதை படிச்சிட்டு எனக்கு பரிசு உண்டா இல்லையானு சொல்லு சகா

கும்க்கி on December 26, 2008 at 9:37 AM said...

அய்யா தங்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்றினை வலையில் பிரசுரித்தால் நலம்.

கும்க்கி on December 26, 2008 at 9:38 AM said...

ஆந்திரா வால்லு பச்சை மிளகாய் இல்லாம பல்லு கோட விலக்க மாட்டாங்களே..?

தாரணி பிரியா on December 26, 2008 at 9:43 AM said...

விருதுக்கு பாராட்டுகள் . இதோட முணு டிரீட் தரணும். ஞாபகம் வச்சுகோங்க.

ச‌ரித்திர‌ தொட‌ர்க‌தை. என‌க்கு ரொம்ப‌வே பிடிச்ச‌ விஷ‌யம். :) நான் அவ‌ருடைய‌தும் இப்ப‌தான் முத‌ல்ல‌ இருந்து வாசிச்சுட்டு வ‌ரேன்.

இராம்/Raam on December 26, 2008 at 9:46 AM said...

பாஸ்,

நான் ஹைதராபாத்'லே தங்கியிருக்கிறப்போ எங்க பக்கத்து வீட்டு அக்கா சமைச்சு கொடுத்தாங்க... அதை சாப்பிட்டு நாலு நாளைக்கு கண்ணு'லே தண்ணி வந்திட்டு இருந்துச்சு... இதிலே ஒனக்கு பிடிச்சமாதிரி காரம் கம்மியா போட்டேன்னு வேற சொல்லுச்சு... :(

இப்போ நினைச்சாலும் கிலி'யா இருக்கு.... :)

ஆளவந்தான் on December 26, 2008 at 9:54 AM said...

//
பெண் பாடகி அவ‌னுடன் பாடுவதாக இருந்தால் அவன் பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஆலங்குயில் கூவும் ரயில் பாடலை பாடப் போகிறானாம்.
//
அடிக்குது குளிருனு சூப்பர் ஸ்டார் மாதிரியும் பாடலாமே..

Anonymous said...

மனவாடுகள் நாட்டில இருந்துட்டு சாப்பாடு காரம் னு சொன்னா எப்படிங்க? காக்டெய்லோட காரமா சாப்பிட்ட நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.

அ.மு.செய்யது on December 26, 2008 at 10:16 AM said...

//இந்த வாரம் ஒருவன் 4 ரூபாய் டிக்கெட்டை ஐந்து ரூபாய்க்கு அவன் Smart card மூலம் எடுத்துக் கொடுக்கிறான். மக்களும் அவனிடத்தில் வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ரயில்வே நிர்வாகம் கண்டுக் கொள்ளவேயில்லை.
//

உண்மையிலேயே இந்த கருத்து "குத்து"தான்.

நல்ல தகவல்...

புதுகை.அப்துல்லா on December 26, 2008 at 10:29 AM said...

//காக்டெய்லோட காரமா சாப்பிட்ட நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
//

அக்கா உண்மையச் சொல்லுங்க...சொந்த அனுபவம்தான :)

கடைசி பக்கம் on December 26, 2008 at 10:48 AM said...

//அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல.//

:-))

தாமிரா on December 26, 2008 at 11:05 AM said...

இயல்பாக இருந்தது இந்த வார காக்டெயில்.!

narsim on December 26, 2008 at 11:08 AM said...

//பூர்ணிமாசரண் எனக்கு பட்டாம்பூச்சி(The collest blog) விருது கொடுத்திருக்கிறார்கள். //

வாழ்த்துக்கள் சகா.. அப்புறம் அந்த மாறவர்மன் மேட்டருக்கு நன்றி சகா..

ரமேஷ் வைத்யா on December 26, 2008 at 12:50 PM said...

நானும் ஆலங்குயில் பாட்டை சூப்பராகப் பாடுவேன்...

ரமேஷ் வைத்யா on December 26, 2008 at 12:50 PM said...

Me the 25th............

அனுஜன்யா on December 26, 2008 at 2:18 PM said...

இன்னிக்கி தான் எல்லா காக்டெயிலையும் கலந்து, சாரி, தனித் தனியா படிச்சு முடிச்சேன். கலக்குற கார்க்கி (பின்ன காக்டெயில்னா சும்மாவா). இது ஒவ்வொரு வாரமும், குறிப்பிட்ட கிழமையில் பதிவு செய்யப்படுகிறதா? செம்ம யூத்தா இருக்கு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா on December 26, 2008 at 2:51 PM said...

இந்த வாரம் ஒருவன் 4 ரூபாய் டிக்கெட்டை ஐந்து ரூபாய்க்கு அவன் Smart card மூலம் எடுத்துக் கொடுக்கிறான். மக்களும் அவனிடத்தில் வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ரயில்வே நிர்வாகம் கண்டுக் கொள்ளவேயில்லை//
நிர்வாகம் அதையெல்லாம் கண்டுக்காதுங்க. நாமத்தான் அத கண்டும் காணாம போகனும்

விருதுக்கு வாழ்த்துக்கள், நீங்கள் தகுதியுற்றவரே.

இராகவன் நைஜிரியா on December 26, 2008 at 3:17 PM said...

காக்டெய்ல் அருமையா..

அப்பப இதுமாதிரி கொடுங்க... நல்ல போதையா இருக்கும்.

நான் ஆதவன் on December 26, 2008 at 3:30 PM said...

சகா இளைய பல்லவனோட "சக்கர வியூகமும்" நல்லாயிருக்கும் டைம் கிடைச்சா படிங்க...

ஸ்ரீமதி on December 26, 2008 at 3:38 PM said...

காக்டெய்ல் சூப்பர் :))

Karthik on December 26, 2008 at 4:00 PM said...

கார்க்கி நீங்க பாடுவீங்களா? சீசன்ல ஏதாவது கச்சேரி?

//அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல.

முடியாது கார்க்கி. ஏன்னா, பச்சை மிளகாய் இனிக்கனும்னா, வீட்டுக்காரர் கொடுக்கக் கூடாது. சிவாஜி பார்த்தீங்கதானே??

Smart Card பத்தி நானும் ஆச்சர்யப் பட்டிருக்கிறேன். கிண்டியில் அவ்வப்போது ஆஞ்சனேயர் வால் மாதிரி நிற்கிறார்கள்.

விருதுக்கு வாழ்த்துக்கள்.

தொடர்கதை படித்துப் பார்க்கிறேன்.

Karthik on December 26, 2008 at 4:01 PM said...

காக்டெயில் கலக்கலாக இருந்தது.
:)

Kathir on December 26, 2008 at 4:24 PM said...

//ஹைதையில் நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு திடிரென என் மீது பாசம் அதிகமாகி விட்டது. //

எங்க ஆளு கூட இப்படித்தான் திடீர் ன்னு பாசத்தை அள்ளி கொட்டுவார்.....

//அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல. //

:-))

கார்க்கி on December 26, 2008 at 4:48 PM said...

//http://rajkanss.blogspot.com/2008/12/2008_25.html
இதை படிச்சிட்டு எனக்கு பரிசு உண்டா இல்லையானு சொல்லு ச//

இதோ பதில் சொல்லிட்டு வர்றேன் சகா..

**********************88

//கும்க்கி said...
அய்யா தங்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்றினை வலையில் பிரசுரித்தால் நலம்//

தல சத்தியமா இப்போ இருக்கிற ஃபோட்டோ போன வாரம் தான் லேப்டாப் கேம்ல எடுத்தேன்.. நம்புங்கப்பா..

***********************

//இராம்/Raam said...
பாஸ்,

நான் ஹைதராபாத்'லே தங்கியிருக்கிறப்போ எங்க பக்கத்து வீட்டு அக்கா சமைச்சு கொடுத்தாங்க... அதை சாப்பிட்டு நாலு நாளைக்கு கண்ணு'லே தண்ணி வந்திட்டு இருந்துச்சு... இதிலே ஒனக்கு பிடிச்சமாதிரி காரம் கம்மியா போட்டேன்னு வேற சொல்லுச்சு//

சேம் ப்ளட் சகா..

***************

//ஆளவந்தான் said...
//
பெண் பாடகி அவ‌னுடன் பாடுவதாக இருந்தால் அவன் பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஆலங்குயில் கூவும் ரயில் பாடலை பாடப் போகிறானாம்.
//
அடிக்குது குளிருனு சூப்பர் ஸ்டார் மாதிரியும் பாடலாமே.//

அதுல கூட ஒரு ராகம் இருக்குங்க.. நான் சொன்ன பாட்ட கேட்டுப் பாருங்க‌

வால்பையன் on December 26, 2008 at 4:52 PM said...

முதல் மேட்டருல்ல நீங்க சொல்ல வர்ர விசயம் என்ன?
நீங்க நல்லா பாடுவிங்கன்னா?

வால்பையன் on December 26, 2008 at 4:54 PM said...

//துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்//

ஆந்திரா என்றாலே எனக்கு காரம் தான் ஞாபகம் வரும்.
லாரியில் கிளினராக ஓடிய காலத்தில் நான் கர்நாடகாவிலேயே பார்சல் வாங்கி வைத்து கொள்வேன்.

இன்று ஆந்திரா சாப்பாடை நினைத்தாலும்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் on December 26, 2008 at 4:57 PM said...

//சென்னை யூனிட் ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்கு Smart Card சேவை வெகு நாட்களாக பழக்கத்தில் இருக்கிறது.//

மொட்ட ராசா குட்டயில விழுந்த கதை மாதிரி சொல்ல கூடாது!
அது என்ன திட்டம்
எப்படி பயன்படுத்துவது
எப்படி அதில் இணைவதுன்னு
தெளிவாக(அந்த தெளிவு இல்லை) ஒரு பதிவு தேவை

கார்க்கி on December 26, 2008 at 4:58 PM said...

//சின்ன அம்மிணி said...
மனவாடுகள் நாட்டில இருந்துட்டு சாப்பாடு காரம் னு சொன்னா எப்படிங்க? காக்டெய்லோட காரமா சாப்பிட்ட நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கே//

எனக்கு காரமும் பிடிக்காது.. காக்டெய்லும் பிடிக்காது:)))..(நான் எழுதறத சொல்லலைங்க அம்மினி)

**********************
//அ.மு.செய்யது said...

உண்மையிலேயே இந்த கருத்து "குத்து"தான்//

நன்றி செய்யது

***********

//புதுகை.அப்துல்லா said...
//காக்டெய்லோட காரமா சாப்பிட்ட நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
//

அக்கா உண்மையச் சொல்லுங்க...சொந்த அனுபவம்தான//

பதிவ படிக்க சொன்னா பின்னூட்டத்த படிக்கறீங்களா????

*********88

நன்றி கடைசி பக்கம்

******************

//தாமிரா said...
இயல்பாக இருந்தது இந்த வார காக்டெயில்.//

நன்றி சகா

வால்பையன் on December 26, 2008 at 4:58 PM said...

//பதிவுகள் என்ற பிரிவில் என் புட்டிகதைகள் பதிவை என் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள்.//

நல்ல செய்தி,
அதற்கு மட்டும் நான் பின்னூட்டம் போடுவதில்லை, காரணம் அறிவீர்களா?

வால்பையன் on December 26, 2008 at 4:59 PM said...

//வலையுலகில் நான் படிக்கும் ஒரே தொடர்கதை நர்சிம்மின் மாறவர்மன். //

விக்கி கூட ஒரு கதை எழுதுறாரு?
ஆனா படிக்க தான் யாரும் வர மாட்டிங்கிறாங்க

வால்பையன் on December 26, 2008 at 5:00 PM said...

இந்த காக்டெயிலில் போதை குறைவு!

மிக்சிங் சரி பார்க்கவும்

கார்க்கி on December 26, 2008 at 5:01 PM said...

// narsim said...
//பூர்ணிமாசரண் எனக்கு பட்டாம்பூச்சி(The collest blog) விருது கொடுத்திருக்கிறார்கள். //

வாழ்த்துக்கள் சகா.. அப்புறம் அந்த மாறவர்மன் மேட்டருக்கு நன்றி சகா//

நன்றி தல..

**********************

//ரமேஷ் வைத்யா said...
நானும் ஆலங்குயில் பாட்டை சூப்பராகப் பாடுவேன்.//

நீங்க எல்லாப் பாட்டும் நல்லாத்தான் பாடறீங்க..

******************

// அமிர்தவர்ஷினி அம்மா said...

விருதுக்கு வாழ்த்துக்கள், நீங்கள் தகுதியுற்றவரே//

நன்றி அமித்து அம்மா

******************

//இராகவன் நைஜிரியா said...
காக்டெய்ல் அருமையா..

அப்பப இதுமாதிரி கொடுங்க... நல்ல போதையா இருக்கும்//

கண்டிப்பா முயற்சி செய்றேன் சகா

கார்க்கி on December 26, 2008 at 5:10 PM said...

//Karthik said...
காக்டெயில் கலக்கலாக இருந்தது//

நன்றி கார்த்திக்

**********************

//Kathir said...
//ஹைதையில் நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு திடிரென என் மீது பாசம் அதிகமாகி விட்டது. //

எங்க ஆளு கூட இப்படித்தான் திடீர் ன்னு பாசத்தை அள்ளி கொட்டுவார்/

கதிர் முன்னமே கேட்கனுனு நினைச்சேன். நீங்களும் ஹைதையா?

*******************888


//வால்பையன் said...
முதல் மேட்டருல்ல நீங்க சொல்ல வர்ர விசயம் என்ன?
நீங்க நல்லா பாடுவிங்கன்னா//

ஹிஹிஹி...

//வால்பையன் said...
//சென்னை யூனிட் ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்கு Smart Card சேவை வெகு நாட்களாக பழக்கத்தில் இருக்கிறது.//

மொட்ட ராசா குட்டயில விழுந்த கதை மாதிரி சொல்ல கூடாது!
அது என்ன திட்டம்
எப்படி பயன்படுத்துவது
எப்படி அதில் இணைவதுன்னு
தெளிவாக(அந்த தெளிவு இல்லை) ஒரு பதிவு தே//

போட்டா போச்சு..

//நல்ல செய்தி,
அதற்கு மட்டும் நான் பின்னூட்டம் போடுவதில்லை, காரணம் அறிவீர்க//

ஏன் வால்? நீங்க‌தான் அந்த‌ பேரையே சொன்னிங்க‌..

Anonymous said...

கலக்கிறீங்க......

PoornimaSaran on December 26, 2008 at 11:33 PM said...

எல்லாமே சூப்பர், அதில் உங்க பிரண்டு பாடறேன்னு சொன்னது சூப்பரோ சூப்பர் :)))

MayVee on December 27, 2008 at 5:11 AM said...

comgrats....

i heard tht each station should show certain % of sales through smart card machine. so thy engage people for issuing ticket through tht

கார்க்கி on December 27, 2008 at 4:16 PM said...

/கவின் said...
கலக்கிறீங்க......
//

நன்றி கவின்

*************8

/PoornimaSaran said...
எல்லாமே சூப்பர், அதில் உங்க பிரண்டு பாடறேன்னு சொன்னது சூப்பரோ சூப்பர் :)))//

அவன்கிட்ட சொல்லிடறேன்

*************88

/ MayVee said...
comgrats....

i heard tht each station should show certain % of sales through smart card machine. so thy engage people for issuing ticket through tht
//

அது உண்மையென்றால் ஏன் அதிக விலைக்கு விற்க வேண்டும் சகா?

 

all rights reserved to www.karkibava.com