Dec 21, 2008

...போடா


சப்தமில்லாமல்
படித்துக்கொள்ள
ஆயிரமாயிரம்
கவிதைகள்
நம் காதலில்...
சப்தமிட்டு
அழுகின்ற
மௌனங்கள்
நம் பிரிவில்....
*
என் கண்ணீரையும்
கவிதையாக்கக்
கற்றுக்கொண்டேன்
நம் பிரிவிற்கு
பிறகு....
*
திடீரென நினைவிற்கு வந்து
பேனா தேடும் முன்
மறந்து போகும்
கவிதைகளாய் அல்லாமல்
உன் நினைவுகள்
ஊமைக்காயங்களாய்
மனதினுள் ஆறாமல்......
*
அம்மாவைத் தேடி
அழும்
குழந்தைப்போல் உன்னைத்தேடி
அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......??
*
கண்கலங்காமல்
பார்த்துக்கொண்டாய்
காதலிக்கும்
காலம் வரை
இன்று
கலங்கிய கண்களோடு
மட்டுமே நான்......
*
என் வாழ்க்கையின்
அழகான பக்கங்களை
நீதான் நிரப்பினாய்
ஆனால்
புத்தகத்தையே
இன்று கிழித்தாய்
முறையா.......??
*
நீ தந்த
ரோஜா செடிக்கு
நம் பிரிவை
சொன்னது யார்
வெறும் முட்செடியாய்
இன்று.....
*
நீ தந்த
முத்தங்களை
நீயே எடுத்துக்கொள்
பருக்களாக
இல்லாமல்
அவை
இன்று
வடுக்களாக......
*
உனக்காக
நான்
எழுதிய கவிதைகள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
அதற்காகவேணும்........
*
பசித்திருக்கிறேன்
தவி(னி)த்திருக்கிறேன்
விழித்திருக்கிறேன்
வேண்டாமே
இந்த பிரிவு......
*
நாம்
பிரிந்து விட்டோம்
நம்
காதல் குழந்தையை
என்ன செய்ய..??
*
காதலுக்குக்
காரணம்
தேவையில்லை என்றாய்
பிரிவுக்குமா.....??
*
உன்
காதல் கடிதங்களின்
வாசம் கூட மாறாமல்
என்னிடம்
நேசம் மாறிய நெஞ்சுடன்
நீ.......!!
*
பொம்மையைத்
தொலைத்துவிட்டு
அழும்
குழந்தையாய்
காதலைத்
தொலைத்துவிட்டு நான்.......

  இவரின் இன்னும் பலக் கவிதைகளை படிக்க இங்கே க்ளிக்குங்கள். இவரின் சமீபத்திய கவிதை உயிரோசையில் கூட வந்திருக்கிறது.

*************************************************

ஹிஹிஹி. அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

   அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

45 கருத்துக்குத்து:

அத்திரி on December 21, 2008 at 9:03 AM said...

))))))))))))))))

தமிழ் பிரியன் on December 21, 2008 at 9:13 AM said...

வாவ்! தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் on December 21, 2008 at 9:13 AM said...

அப்படியே கார்க்கிக்கும் வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் on December 21, 2008 at 9:13 AM said...

ஆமா, போன ஞாயிறு நீங்க ’வேற’ பதிவு போட்ட மாதிரி இருந்ததே.. ;)))

கார்க்கி on December 21, 2008 at 9:24 AM said...

நன்றி அத்திரி..

//
ஆமா, போன ஞாயிறு நீங்க ’வேற’ பதிவு போட்ட மாதிரி இருந்ததே.. ;)))/

போன வாரம் சனிக்கிழமையே போட்டுட்டேன்.. கிழமை கூட தெரிய மாட்டேங்குதுண்ணா...

PoornimaSaran on December 21, 2008 at 11:16 AM said...

கவிதை நல்லா இருக்கு:)

Shakthiprabha on December 21, 2008 at 2:21 PM said...
This comment has been removed by the author.
குசும்பன் on December 21, 2008 at 6:20 PM said...

//என் கண்ணீரையும்
கவிதையாக்கக்
கற்றுக்கொண்டேன்
நம் பிரிவிற்கு
பிறகு.//

அப்படியே கவிதைய புக்குக்கு அனுப்பி சில்லறையாக்கவும் கற்றுக்கவும்!

குசும்பன் on December 21, 2008 at 6:21 PM said...

//உன் நினைவுகள்
ஊமைக்காயங்களாய்//

சுவிசேச கூட்டங்களுக்கு அழைத்து சென்று பாருங்கள் ஒருவேளை பேசும்!

குசும்பன் on December 21, 2008 at 6:23 PM said...

//அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......?? //

உள்ளூரா இருந்தா ஒரு லோக்கல் கால் போட்டு சொல்லுங்க, பக்கத்து ஸ்டேட்டில் இருந்தால் ஒரு SMS அனுப்பி சொல்லுங்க, வெளி நாட்டில் இருந்தால் உங்க மனம் ஒரு மெயில் அனுப்பி சொல்லிடுங்க!

குசும்பன் on December 21, 2008 at 6:24 PM said...

//கலங்கிய கண்களோடு
மட்டுமே நான்...... //

கலங்கிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியுமாம் அதுபோல் உங்க கண்ணில் ஏதும் பிடிக்க முடியுமா என்று பாருங்க!!!

குசும்பன் on December 21, 2008 at 6:25 PM said...

//புத்தகத்தையே
இன்று கிழித்தாய்
முறையா.......?? //

இதுக்குதான் புத்தகம் வாங்கினா ஒழுங்கா அட்டை போட்டு அல்லது பைண்ட் செஞ்சு.. லேபிள் ஒட்டி கார்க்கி 2 ஆம் வகுப்பு ஆபிரிவு என்று எழுதி வெச்சுக்கனும்.

குசும்பன் on December 21, 2008 at 6:27 PM said...

நீ தந்த
ரோஜா செடிக்கு
நம் பிரிவை
சொன்னது யார்
வெறும் முட்செடியாய்
இன்று..... //

யோவ் அது பக்கத்து வீட்டு ஆடு வந்து மேஞ்சுட்டு போய்ட்டு, அது தெரியாம பிரிவு அது இதுன்னுக்கிட்டு, ஒழுங்கா வேலிய கட்டு!

குசும்பன் on December 21, 2008 at 6:30 PM said...

//நீ தந்த
முத்தங்களை
நீயே எடுத்துக்கொள் //

ஹி ஹி சாரி பில் இல்லாம எதையும் ரிட்டர்ன் எடுத்துப்பது இல்லை!

//பருக்களாக
இல்லாமல்
அவை
இன்று
வடுக்களாக...... //

மார்க் ரிமூவர் கிரீம் எல்லாம் இப்ப தாரளமாக அனைத்து மருந்து கடைகளிடும் கிடைக்கிறது!

குசும்பன் on December 21, 2008 at 6:31 PM said...

உனக்காக
நான்
எழுதிய கவிதைகள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
அதற்காகவேணும்........ ///

ஒரு 50 ரூபாய் கை மாத்தா?

குசும்பன் on December 21, 2008 at 6:33 PM said...

//பசித்திருக்கிறேன்
தவி(னி)த்திருக்கிறேன்
விழித்திருக்கிறேன்
வேண்டாமே
இந்த பிரிவு...... //

பிரண்டு ட்ரீட் வரும் வெள்ளி கிழமை என்றான் அதுக்காக சாப்பிடாம இருந்த முதல் நாளில் இருந்து.

//தவி(னி)த்திருக்கிறேன் //

உனக்கு முன்னாடி உச்சா போன போனவன் பாத்ரூமில் இருந்து வர ரொம்ப லேட் ஆகிட்டு அதனால் ரொம்ப தவிச்சு போன ரைட்டு!

//விழித்திருக்கிறேன் //

மிட் நைட் மசாலா பார்க்க விழித்து இருக்க அதுவும் ரைட்டு!

குசும்பன் on December 21, 2008 at 6:36 PM said...

//நாம்
பிரிந்து விட்டோம்
நம்
காதல் குழந்தையை
என்ன செய்ய..?? //

என்னமோ கடைக்கு போய் வாங்கி வந்த கத்திரிக்காயை என்ன செய்வது என்பது போல் கேட்கிறீங்க!

முதல்ல பேர் வையுங்க! சைக்கிள்கீ என்று

ஆயில்யன் on December 21, 2008 at 6:37 PM said...

//குசும்பன் said...
//நாம்
பிரிந்து விட்டோம்
நம்
காதல் குழந்தையை
என்ன செய்ய..?? //

என்னமோ கடைக்கு போய் வாங்கி வந்த கத்திரிக்காயை என்ன செய்வது என்பது போல் கேட்கிறீங்க!
//

அதானே?

குசும்பன் on December 21, 2008 at 6:38 PM said...

//உன்
காதல் கடிதங்களின்
வாசம் கூட மாறாமல்
//

ஏன் கடிதம் பியர்ஸ் சோப் போட்டு குளிச்சுதா?

ஆயில்யன் on December 21, 2008 at 6:39 PM said...

குசும்பன் நண்பா...! நீங்க ஒரு லைன்ல வாங்க நான் ஒரு லைன்ல வர்றேன் ரெண்டு பேரும் ஒரு லைன்ல மீட் பண்ணுவோம் ஒ.கேவா?

குசும்பன் on December 21, 2008 at 6:39 PM said...

// இவரின் இன்னும் பலக் கவிதைகளை படிக்க இங்கே க்ளிக்குங்கள்.///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

யோவ் கார்கி அப்ப மேல இருப்பது எல்லாம் உன் கவிதை இல்லையா?
இதுக்கு எல்லாம் மு.கு போடாத.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் on December 21, 2008 at 6:40 PM said...

//சப்தமில்லாமல்
படித்துக்கொள்ள
ஆயிரமாயிரம்
கவிதைகள்
///

எனக்கு கவிதை எழுதவே வர்லை :((

ஆயிரத்துல கொஞ்சூண்ண்டு கொடுங்களேன் :)

ஆயில்யன் on December 21, 2008 at 6:41 PM said...

//என் கண்ணீரையும்
கவிதையாக்கக்
கற்றுக்கொண்டேன் /

பயங்கரமான கவிதையாளர் போல!!!!

குசும்பன் on December 21, 2008 at 6:42 PM said...

ஆயில்யன் said...
குசும்பன் நண்பா...! நீங்க ஒரு லைன்ல வாங்க நான் ஒரு லைன்ல வர்றேன் ரெண்டு பேரும் ஒரு லைன்ல மீட் பண்ணுவோம் ஒ.கேவா?//

நீங்க 240W கரண்ட் போகும் லைன் கம்பிமேல ஏறி அந்த லைனில் வாங்க, நான் அதுக்கு கீழ நடந்து வாரேன்!

ஆயில்யன் on December 21, 2008 at 6:42 PM said...

//உன்னைத்தேடி
அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......?? ///சொன்ன பேச்சை கேட்கமாட்டீயான்னு அடிச்சுத்துதான் சொல்லணும்! (அம்மா இப்படித்தானே அடிப்பாங்க!)

குசும்பன் on December 21, 2008 at 6:43 PM said...

ஆயில்யன் அண்ணே கவிதை இவர் கவிதை இல்லைன்னே!! நானே தெரியாம கும்மி அடிச்சுட்டேன்
ஓடி வந்துடுங்க! கவிதைக்கு சொந்தகாரர் வந்து அடிக்கும் முன் ஓடி போய்விடுவோம்!

ஆயில்யன் on December 21, 2008 at 6:44 PM said...

//குசும்பன் said...
ஆயில்யன் said...
குசும்பன் நண்பா...! நீங்க ஒரு லைன்ல வாங்க நான் ஒரு லைன்ல வர்றேன் ரெண்டு பேரும் ஒரு லைன்ல மீட் பண்ணுவோம் ஒ.கேவா?//

நீங்க 240W கரண்ட் போகும் லைன் கம்பிமேல ஏறி அந்த லைனில் வாங்க, நான் அதுக்கு கீழ நடந்து வாரேன்!
//

என்ன சின்னபுள்ளதனமால்ல இருக்கு :(((((((((

குசும்பன் on December 21, 2008 at 6:45 PM said...

அய்யா கார்கி நீங்க கொடுத்த லிங்க கிளிக் செஞ்சு போனா அங்க கவிதையின் தலைப்பு

“பின்விளைவு ”

தெரியா தனமா உள்ளே வந்துட்டேன் அப்படியே எஸ்கேப் ஆகிக்கிறேன்!

ஆயில்யன் on December 21, 2008 at 6:47 PM said...

//குசும்பன் said...
ஆயில்யன் அண்ணே கவிதை இவர் கவிதை இல்லைன்னே!! நானே தெரியாம கும்மி அடிச்சுட்டேன்
ஓடி வந்துடுங்க! கவிதைக்கு சொந்தகாரர் வந்து அடிக்கும் முன் ஓடி போய்விடுவோம்!
//


அதெல்லாம் தெரிஞ்சவங்கதான் நண்பா!

கமிட் ஆகிட்டு கம்பி நீட்டப்படாது ஆமாம் சொல்லிப்புட்டேன்!

ஆயில்யன் on December 21, 2008 at 6:49 PM said...

//குசும்பன் said...
அய்யா கார்கி நீங்க கொடுத்த லிங்க கிளிக் செஞ்சு போனா அங்க கவிதையின் தலைப்பு

“பின்விளைவு ”

தெரியா தனமா உள்ளே வந்துட்டேன் அப்படியே எஸ்கேப் ஆகிக்கிறேன்!
//

எலேய் சிங்கம்ல நீயீ!

நீயாலே எஸ்ஸாகறது!

(நண்பா என்னிய மட்டும் தனியா வுட்டுட்டு போறீயாளே!)

ஆயில்யன் on December 21, 2008 at 6:53 PM said...

//கண்கலங்காமல்
பார்த்துக்கொண்டாய்
காதலிக்கும்
காலம் வரை //

அதுக்கு பிறகு அந்த பார்ட்டீ கண் கலங்க வேண்டியிருக்குமோன்னு பயந்து எஸ்ஸாகிடுச்சோ ????

ஆயில்யன் on December 21, 2008 at 6:54 PM said...

//எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும்.///

எங்களுக்கும் கும்மி அடிக்க மேட்டர் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்!
:)

ஆயில்யன் on December 21, 2008 at 6:56 PM said...

டூ குசும்பன்!

இப்பிடி தனியா வுட்டுட்டு எஸ்ஸாகிட்டீயே ராசா

பிளாக்கு சொந்தக்காரரு வந்து டைட்டில சொல்றதுக்கு மின்னாடியே நானும் எஸ்ஸாகிக்கிறேன் ! :))))))

ச்சின்னப் பையன் on December 21, 2008 at 7:14 PM said...

கவிதை சூப்பர்.

நீங்க எழுதியது திடீர்னு (!!!) சூப்பரா இருக்கேன்னு பாத்துக்கிட்டே வந்தாக்கா.. இது இன்னொருத்தர்துன்னு சொல்லிட்டீங்களே... அவ்வ்வ்...

ச்சின்னப் பையன் on December 21, 2008 at 7:14 PM said...

மீ த 35

மின்னல் on December 21, 2008 at 8:48 PM said...

படித்ததில் பிடித்தது என்ற label அப்பறம் தான் பார்த்தேன். என்ன கார்க்கி என்ன ஆச்சு உட்வாட்ஸ் வேணுமான்னு கேட்கும் முன்...

Shakthiprabha on December 21, 2008 at 9:52 PM said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... on December 21, 2008 at 10:29 PM said...

மெதுவா உள்ள வந்து அதிரடியா கலக்கிட்டிருக்காங்க...

தாரணி பிரியா on December 22, 2008 at 8:30 AM said...

ஸ்ரீமதியோட அழகான கவிதைகளோட தொகுப்பு

கதை கவிதைன்னு ஸ்ரீ இன்னும் கலக்க வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி on December 22, 2008 at 12:37 PM said...

மிக்க நன்றி அண்ணா.. :)) ஆணி கொஞ்சம் அதிகம்.. அதனால் இங்கயே கும்மின குசும்பன் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா அப்பறம் வாழ்த்து சொன்ன எல்லா அண்ணா மற்றும் அக்காக்களுக்கு என் நன்றிகள் சொல்லிக்கிறேன்... மறுபடியும் பதிவிற்கு நன்றி கார்க்கி அண்ணா.. :)))

வால்பையன் on December 22, 2008 at 1:39 PM said...

நல்ல முயற்சி

Karthik on December 22, 2008 at 5:34 PM said...

நல்லாருக்குங்க கார்க்கி.
:)

MayVee on December 22, 2008 at 10:33 PM said...

nice one...

அனுஜன்யா on December 23, 2008 at 8:53 AM said...

கார்க்கி, நல்ல முயற்சி. ஸ்ரீ பத்தி எல்லோருக்கும் தெரியும். பெருமையா இருக்கு. இதுல சில சமயம் உன்னோட பதிவுகள கூட போடணும். ஏன் சொல்றேன்னா, இன்னிக்குத்தான் உன்னோட 'நான் நான்தான்' படித்தேன் - உயிரோசையில். அதைப்பற்றி..

நல்ல கதை கார்க்கி. இன்று தான் உயிரோசையில் பார்த்தேன். பிறகு உன் வலைப்பூவுக்கு வந்து தேடினால், நாலு மாதம் முன்னாலேயே இந்தக் கதை எழுதியிருக்கிறாய். மிக அழகான, உளவியல் சார்ந்த கதை. நிறைய எழுது கார்க்கி. ஆழமான எழுத்து உனக்கு நிச்சயம் வருகிறது. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கார்க்கி on December 23, 2008 at 10:18 AM said...

/அனுஜன்யா said...
கார்க்கி, நல்ல முயற்சி. ஸ்ரீ பத்தி எல்லோருக்கும் தெரியும். பெருமையா இருக்கு. இதுல சில சமயம் உன்னோட பதிவுகள கூட போடணும். ஏன் சொல்றேன்னா, இன்னிக்குத்தான் உன்னோட 'நான் நான்தான்' படித்தேன் - உயிரோசையில். அதைப்பற்றி..

நல்ல கதை கார்க்கி. இன்று தான் உயிரோசையில் பார்த்தேன். பிறகு உன் வலைப்பூவுக்கு வந்து தேடினால், நாலு மாதம் முன்னாலேயே இந்தக் கதை எழுதியிருக்கிறாய். மிக அழகான, உளவியல் சார்ந்த கதை. நிறைய எழுது கார்க்கி. ஆழமான எழுத்து உனக்கு நிச்சயம் வருகிறது. வாழ்த்துக்க/

மிக்க நன்றி தல.. எனக்கே இந்தப் பின்னூட்டம் பார்த்துதான் தெரியும். உங்கள் தொடர் ஆதரவும் ஊக்கமும் எனக்கு தெம்பைத் தருகிறது. :)

 

all rights reserved to www.karkibava.com