Dec 20, 2008

பேய் பார்த்திருக்கிங்களா?


    வழக்கமாய் தெய்வங்கள் நிறைந்து காணும் அந்த பெருமாள் கோவில் வெள்ளிக்கிழமை ஆனால் மட்டும் தேவதைகளால் நிரம்பிப் காணப்படும். அப்படி ஒரு தினத்தில் மதனும் கோவிலுக்கு வந்திருந்தான். வராது வந்த நாயகன் வந்ததாலோ என்னவோ மழை வந்தது.

  ட்யூஷன் முடிந்து நேராக வந்ததால் கையில் சில புத்தகங்கள் வைத்திருந்தான். படித்து கிழிக்க வேண்டிய பக்கங்களை நனைய விடக்கூடாது என்பதற்காக கோபுரத்தை நோக்கி  திரும்பிய அவனை ஒரு குடை இடித்தது. கூண்டுக்குள் மட்டுமே கிளியைப் பார்த்த அவனுக்கு குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளியைப் பார்த்ததால்,அது என்ன சொல்வார்கள் ஆங்ங், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவள் உதடு பிரிந்தபோது உள்ளே இருந்த பற்களை பார்த்தான். "தங்கப்பல் தானே உண்டு, இவள் என்ன‌ வைரப்பற்களை வைத்திருக்கிறாள்". மைன்ட் வாய்ஸ் முடிந்த போதுதான் அவள் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

"ஒரு குடைக்குள்ள எப்படிங்க ரெண்டு பேரு? அதுவும் குடை சின்னதா இருக்கு" என்று சொல்லும்போது வழிந்ததை மழைத்துளி வந்து மறைத்தது.

  ஹலோ.புக்ஸ கொடுங்கனு சொன்னேன்.

    தேவதைகள் பேச மாட்டார்கள் என்று எப்போதோ படித்தது தப்பென்று தெரிந்துக் கொண்டான்.

    புக்ஸைக் வாங்கிக் கொண்டு கோபுரத்தை நோக்கி நகர்ந்தது அந்தச் சிலை. அவளுக்கு முன் வேகமாய் ஓடி நல்ல இடமாக பார்த்து நின்றுகொண்டான். அவன்ருகில் ஒரு பெரியவர் வர, ஆள் வராங்க என்று டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பது  போல் நகர்த்தினான். அம்மன் என்று பக்தரைத் தேடி வந்திருக்கிறது? நேராக தன் தோழிகளுடன் சென்று விட்டாள். கொஞ்ச நேரம் சினேகம் காட்டி சன் டீ.வி கழட்டிவிட்ட கேப்டன் போல ஆகி விட்டான் மதன்.

  நண்பனின் ஆளைப் பார்க்க கோவிலுக்கு வந்தவனுக்கு அருள் புரிந்த பெருமாளை (அவரில்லைங்க) சேவித்து விட்டு சந்தோஷமாய் வந்தான். அடுத்த வாரம் வந்தால் புடித்து விடலாம் என நினைத்தவனுக்கு உடனே அருள் புரிந்தார் பெருமாள். கோவில் வாசலில் கையில் புக்ஸூடன் சரஸ்வதியே நிற்பது போலிருந்தது.

புக்ஸ் வேணாமா? நிஜமா உங்களதுதானே?

ஆமாங்க. சாமி கும்பிட போயிட்டேன்.

உங்களுக்காக வெய்ட் பண்றேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போயிட்டாங்க.

மூளையில் பல்பெரிந்தது மதனுக்கு.

எங்க வீடுன்னு சொல்லுங்க. என்கிட்ட பைக் இருக்கு என்றான்.

சிறிது நேரத் தயக்கதுக்குப் பின், ஹவுஸிங் போர்ட் என்றாள்.

    இங்கேயே இருங்க, இதோ பைக் எடுத்துட்டு வர்றேன் என்றவன் ஓடினான். போன மாதம் தான் அந்த பல்சரை வாங்கித் தந்தார் அவன் அப்பா. "லவ் யூ டேட்" என்று வாரணம் ஆயிரம் சூர்யா ரேஞ்சுக்கு பீட்டர் விட்டு வண்டியைக் கிளப்பினான். மதனின் நண்பர்கள் வயிற்றெரிச்சல் புகையாய் வந்தது.

    தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது. வண்டியில் அவள் கைப்பட்டதும் மதனுக்கு லேசாய் சிலிர்த்தது. இதை கவனித்த அவள் புன்னகைக்க மதனின் கைகள் ஆக்ஸிலேட்டரை முறுக்கியது.புன்னகை தொடர்வதை கவனித்தான்.

     பேசிக்கொண்டே பயணித்தார்கள். உங்களுக்கு தாவனி ரொம்ப நல்லாயிருக்குங்க. மெல்ல ஆரம்பித்தான் மதன். அப்புறம் என்ன என்ப‌து போல அவளும் ம் சொல்ல, பட்டியல் இட்டான். பாரதிராஜா படத்து வெள்ளை தேவதைகள் அவனை சுற்றி வர, அனைத்தும் வெள்ளையிலே இருக்கும்படி வர்ணித்தான்.அவள் சத்தமின்றி சிரிப்பதை எல்லாம் ரியர் வியூ மிரரில் நோட்டமிடத் தவறவில்லை அவன்.

  ஹவுசிங் போர்டு. ஊருக்கு ஒதுக்கு புறமான ஏரியா. போகிற வழியில் விளக்குகள் எல்லாம் உண்டு என்றாலும் சாலையில் இருந்து சில மீட்டர் தூரத்திலே இடுகாடு. எப்படி தனியாக போவாள் என்று யோசித்தான். சரியாக இடுகாட்டின் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி இவன் பதிலுக்கு காத்திராமல் இடுகாட்டை நோக்கி நடந்தாள் அவள்.

     இவன் கண்களில் அகப்படாமல் ஒரு நிழலில் அவள் மறைய, பேயறைந்தவன் போல் ஆனான் மதன். சில வினாடிகளில் சுதாரித்தவன் ஒரு பெண்ணே தனியா போகும்போது நமக்கென்ன என்றபடி நகத்தை கடிக்கலானான். எங்கே போயிருப்பாள்? என்ன அவசரமோ என்றபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும். ஒரு பக்கம் கும்மிருட்டு. அவள் சென்ற திசையை நோக்கிப் பார்வையை மீண்டும் திருப்பியவன் அலறியடித்துக் கொண்டு வண்டியிலிருந்து சரிந்தான்.

    அங்கே.. அவள்.. வெள்ளை சேலை.. வெள்ளை ரவிக்கை... வெள்ளை வளையல் என அனைத்தும் வெள்ளையாய். ஆனால் சிரிப்பு மட்டும் வெள்ளையாய் இல்லை. இவன் கேட்டது போலவே அவள் வந்தும் மதனால் பார்க்க முடியவில்லை. அவள் சிரித்த முதல் சிரிப்பின் எதிரொலி அடுத்த சிரிப்போடு மோதும் போது மதனின் இதயம் ஒரு நிமிடம் நின்றே விட்டது.காரணமே இல்லாமல் அவளின் மெல்லிய புன்னகை ஒரு கணம் அவன் முன் நிழலாடி சென்றது. மதனை நோக்கி வர ஆரம்பித்தாள். அவள் நடக்கிறாளா இல்லை பறக்கிறாளா எனத் தெரியாத படி அவளின் வெள்ளை நிறச் சேலை தரையில் தவழ்ந்தது.

   கீழே கிடந்த பல்சரை தூக்கினான். அவனே நேராக நிற்க முடியாத போது 150 கிலோ பைக்கை எப்படி தூக்குவது? ஓடலாம் என்றால் கால் ஆனியடித்தது போல் அங்கேயே நின்றது. இதற்குள் அவள் மதனை நெருங்கிவிட்டாள். மீண்டும் அதே போல் ஒரு சிரிப்பு. ஏதோ சொல்ல அவள் எத்தனித்த போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டான்.

“.......”

   மெல்ல கண் திறந்தவன் அவளை பார்த்து கேட்டான் "என்ன சொன்னிங்க?"

அவள் மீண்டும் சிரித்து விட்டு சொன்னாள்

 நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்

(அவள் சொன்னதை படிக்க மேற்கோள் குறிக்குள் இருப்பதை செலக்ட் செய்யவும்.)

டிஸ்கி: கதை பிடித்ததா? உடனே மேலே போய் தமிழ்மண ஓட்டு போடுங்க. இல்லைன்னா இதுப் போல இன்னும் பலக் கொடுமைகள் தொடரக்கூடும்.

34 கருத்துக்குத்து:

thushanthini on December 20, 2008 at 10:17 AM said...

hey me than first

thushanthini on December 20, 2008 at 10:34 AM said...

"hey me than first"
பெரியவங்க எல்லாரும் மனிப்பர்கள் ஆக
hi anna, எதோ love story ஏன்னு வாசிக்க ஆரம்பிச்ச கடைசியில் இப்படி ஆக்கிட்டிங்க நீங்க

"நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்"
எங்கயோ போய்டிங்கா நீங்க
but a great creative thinking,,,,,,,,

vinoth on December 20, 2008 at 10:48 AM said...

//தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது.//
Hello
தலய வம்புக்கு இழுகலைனா உங்களக்கு தூக்கம் வராதா..

Anbu on December 20, 2008 at 11:04 AM said...

"நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்"

very super

கார்க்கி on December 20, 2008 at 11:05 AM said...

நன்றி துஷாந்தினி,

@வினோத்,

நிறைய பேர இழுத்திருக்கேனே? சரி அடுத்த முறை விஜயையும் ரஜினியையும் இழுக்கிறேன். கோச்சுக்காதீங்கண்ணா

Anonymous said...

உஜாலாவுக்கு மாற ஏன் சுடுகாட்டுக்கு போகணும். பு த செ வி

Shakthiprabha on December 20, 2008 at 11:21 AM said...

க்ல்லூரி நாட்களில் பொழுது போகாத பொம்மி / பொம்மர்-களாகிய நாங்கள் பலரை பயமுறுத்த/ அறுக்க / எங்கள் மேதவித்தனைத்தை காண்பிக்க / கவர / சும்மா பொழுது போக்க என்று ஏதோ ஒரு காரணத்திற்காக பகிர்ந்து கொண்டது இக்கதை. எனக்கு இது புதிதல்ல.

அப்பொழுது உஜாலா விளம்பரம் ரொம்பவும் பிரபலமாய் இருந்த காலம்.

இதே மாதிரி இன்னொன்றும் வரும். அதையும் அறுவை ரேஞ்சில் பகிர்ந்தது.

( அறுவை தான்... ஓடிடாதீங்க.... 2vE 2 mins)
___

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்குமான மாட்ச் கடைசி ஓவர். இந்தியா வெற்றி பெற 4 ரன்கள் வேண்டும். விக்கெட் கையிருப்பு ஏதும் இல்லை.

முதல் பந்து வாசிம் அக்ரம் பந்து வீச, மனிந்தர் சிங் எதிர்கொள்கிறார். ரன் ஏதும் இல்லை. அடுத்த பந்து மிட் ஆஃபை நோக்கி நகர, உடனே எடுத்து ஜாவேத் மியாந்தாத் பந்தை விக்கெட்டை நோக்கி வீசுகிறார். ரன் ஏதும் இல்லை. அடுத்த பந்தை லேசாக தட்டி விட்டு நான் - ஸ்டைகர் முனைக்கு செல்கிறார் மனிந்தர்.

இப்பொழுது 3 பந்துகள் 3 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு.

அய்யகோ! அடுத்த பந்தில் கோபால் ஷர்மா விக்கெட்டுக்கு வாரி கொடுத்து க்ளீன் பௌல்ட் ஆகிறார்.

தற்போது ஸ்டைக்கர் முனையில் சேத்தன் ஷர்மா.

இன்னும் இரண்டே பந்துகள் 3 ரன்கள்.

ஜாவேத் மியந்தாத் ஷார்ஜா டெஸ்டின், சேத்தன் பந்தில் கடைசி பந்தில் ஆறு அடித்ததை நினைத்து சிரிக்கிறார்.

இதை பார்த்த எரிச்சலில் ,சேத்தன் வழக்கம் போல் மொக்கை வைக்கிறார்.

கடைசி பந்து. வேகமாய் அக்ரம் பந்தை வீச அதை சரியாக நடு மட்டையில் அடித்து பௌண்ட்ரியை நோக்கி தள்ளிஉ விடுகிறார் சேத்தன்.

பந்து குறி பார்த்து இன்னொரு பாக்கிஸ்தானிய வீரரை நோக்கி சென்று கொண்டிருக்க, நேரம் குறைவாக இருக்க, வேகமாய் சேத்தன் ஓட, மறுமுனையிலிருந்து மனிந்தர் வர.....
எல்லோரும் நகத்தைக் கடித்தபடி, சீட்டு முனையில், BP ஏற பார்த்துக்கொண்டிருக்க...

ஓடி வந்த திடீரென்று நட்டநடுவில் தீவிரமாய் நின்று ஒரு ஆராய்ச்சி.

"உன்னுடைய சட்டை என்னுதை விட வெளுப்பா!!! எப்படி?!?!?"

உபயோகியுங்கள்!! சூப்பர் ரின்!!!!

(அக்காலத்தில் இந்த விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு இந்த காட்சி / அறுவை / மொக்கை புரியும் )

nostalgia. lol

நான் ஆதவன் on December 20, 2008 at 11:47 AM said...

என்ன கொடுமை இது...உஜாலாவ விட்டு வெளிய வாங்க சகா. இப்ப லேட்டஸ்ட் டிரெண்டில் "டைட்" "சர்ப் எக்ஸல்" ஏதாவது போட்டிருக்கலாம்.

போற போக்குல "தல"யை வேற கலாய்ச்சிட்டீங்க. வில்லு வரட்டும் அப்ப இருக்கு தல ரசிகர்களின் தாக்குதல் :-)

PoornimaSaran on December 20, 2008 at 12:20 PM said...

கதையா இருக்கும்னு நினச்சு படிச்சிட்டு வந்தா இப்படியா கலாய்க்கறது :)

PoornimaSaran on December 20, 2008 at 12:23 PM said...

// கதை பிடித்ததா? உடனே மேலே போய் தமிழ்மண ஓட்டு போடுங்க. இல்லைன்னா இதுப் போல இன்னும் பலக் கொடுமைகள் தொடரக்கூடும்.

//


நாங்கெல்லாம்...................................................

தராசு on December 20, 2008 at 1:05 PM said...

அய்யய்யோ,

இந்த மகிழுந்து சாவிக்கு யாராவது திருஷ்டி சுத்தி போடுங்கப்பா!!!
என்னமா கிலியடுச்சுப்போய் கெடக்குது புள்ள,

குஜாலா எதோ சொல்ல வர்றாருன்னு பார்த்தா உஜாலாவுக்கு மாறிட்டேன் ......!!!!

ம்ஹூம், முடியல.....

Karthik on December 20, 2008 at 3:20 PM said...

//"ஒரு குடைக்குள்ள எப்படிங்க ரெண்டு பேரு? அதுவும் குடை சின்னதா இருக்கு" என்று சொல்லும்போது வழிந்ததை மழைத்துளி வந்து மறைத்தது. ஹலோ.புக்ஸ கொடுங்கனு சொன்னேன்.

கார்க்கி, உங்களை?????

கணினி தேசம் on December 20, 2008 at 4:57 PM said...

//இவன் கண்களில் அகப்படாமல் ஒரு நிழலில் அவள் மறைய, பேயறைந்தவன் போல் ஆனான் மதன்.//

"பெண்ணே நீயும் பென்ன...பெண்ணாகிய பேயா..! " இப்பிடி ஒரு பாட்டு சீன் வெச்சிருக்கலாம்.


//மூளையில் பல்பெரிந்தது மதனுக்கு. //

இதுல சின்ன சந்தேகம்...! அப்போ..வெளிச்சம் வாய், மூக்கு, கண்ணு வழியாவா தெரியும்?ஆஹ்....! இப்போ உங்களுக்கு ஏன் காதுல புகை வருது?

உருப்புடாதது_அணிமா on December 20, 2008 at 5:31 PM said...

//உடனே மேலே போய் தமிழ்மண ஓட்டு போடுங்க. இல்லைன்னா இதுப் போல இன்னும் பலக் கொடுமைகள் தொடரக்கூடும்.///

கொடுமைக்கு ஒட்டு போட்டுட்டேன் ...
(மேல்நோக்கியா கீழ்நோக்கியான்னு கவலை வேண்டாம் அது மேல் நோக்கி தான் )
( ஆமா எதுக்கு நோக்கியா? பேசாமா மேல் motorola)

Kathir on December 20, 2008 at 6:17 PM said...

//தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது.//

கார்க்கி,
நமக்கு தல,தளபதி எல்லாம் ஒருத்தர் தான்.... அவரை விட்டுட்டு வேறு ஒருத்தரை தல ன்னு சொல்லக்கூடாது......

:))

கார்க்கி on December 20, 2008 at 6:25 PM said...

//Anbu said...
"நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்"

very sஉபெர்//

உங்கள் அன்புக்கு நன்றி அன்பு..

****************************

//சின்ன அம்மிணி said...
உஜாலாவுக்கு மாற ஏன் சுடுகாட்டுக்கு போகணும். பு த செ //

இது ஒரு நல்ல கேள்வி..

**************************8

@ஷக்திபிரபா,

நன்றி.

**********************

// நான் ஆதவன் said...
போற போக்குல "தல"யை வேற கலாய்ச்சிட்டீங்க. வில்லு வரட்டும் அப்ப இருக்கு தல ரசிகர்களின் தாக்குத//

ப்ளாகுல சைடுல போட்டிருக்கேனே.பார்க்கலையா? படம் ஹிட்டு. பெட்டு வைக்கிறவங்க உடனே தட்டுங்க‌ iamkarki@gmail.com

கார்க்கி on December 20, 2008 at 6:27 PM said...

//PoornimaSaran said...
கதையா இருக்கும்னு நினச்சு படிச்சிட்டு வந்தா இப்படியா கலாய்க்கறது ://

கடைசி லைன விட்டுடுங்க. கதை எப்படி?

********************

//தராசு said...
அய்யய்யோ,

இந்த மகிழுந்து சாவிக்கு யாராவது திருஷ்டி சுத்தி போடுங்கப்பா!!!
என்னமா கிலியடுச்சுப்போய் கெடக்குது புள்ள/

என்ன சுத்தி தூக்கிப் போடாம இருந்தா சரிதான்

*********************

//Karthik said...
//"ஒரு குடைக்குள்ள எப்படிங்க ரெண்டு பேரு? அதுவும் குடை சின்னதா இருக்கு" என்று சொல்லும்போது வழிந்ததை மழைத்துளி வந்து மறைத்தது. ஹலோ.புக்ஸ கொடுங்கனு சொன்னேன்.

கார்க்கி, உங்களை????//

விடு விடு. மேட்டர அப்புறம் சொல்றேன்

*****************

//கணினி தேசம் said...
//இவன் கண்களில் அகப்படாமல் ஒரு நிழலில் அவள் மறைய, பேயறைந்தவன் போல் ஆனான் மதன்.//

"பெண்ணே நீயும் பென்ன...பெண்ணாகிய பேயா..! " இப்பிடி ஒரு பாட்டு சீன் வெச்சிருக்கலாம்//

ஆஹா ஒரு டைரக்டர் கிடைச்சுட்டாரருப்பா.

கார்க்கி on December 20, 2008 at 6:28 PM said...

//உருப்புடாதது_அணிமா said...
//உடனே மேலே போய் தமிழ்மண ஓட்டு போடுங்க. இல்லைன்னா இதுப் போல இன்னும் பலக் கொடுமைகள் தொடரக்கூடும்.///

கொடுமைக்கு ஒட்டு போட்டுட்டேன் ...
(மேல்நோக்கியா கீழ்நோக்கியான்னு கவலை வேண்டாம் அது மேல் நோக்கி தான் )
( ஆமா எதுக்கு நோக்கியா? பேசாமா மேல் motorஒல)//

சாமி என்னை காப்பாத்து.. நான் செஞ்சது தப்புதான்..

*******************8

// Kathir said...
//தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது.//

கார்க்கி,
நமக்கு தல,தளபதி எல்லாம் ஒருத்தர் தான்.... அவரை விட்டுட்டு வேறு ஒருத்தரை தல ன்னு சொல்லக்கூடாது......

:))//

அதுவும் சரிதான் கதிர்..

செந்தழல் ரவி on December 20, 2008 at 7:31 PM said...

கலக்கல் !!!!!

தாமிரா on December 20, 2008 at 8:39 PM said...

ஏன் இந்த‌ கொலவெறி.!

Bendz on December 20, 2008 at 9:36 PM said...

Hi,

Change to UJala :(

Nice story.
Keep it up... But I'll vote for you.

:-)
Insurance Agent

ILA on December 20, 2008 at 10:50 PM said...

கதையை விட வர்ணனை அருமை.. Double Twist எதிர் பார்க்கலை.. :))

கார்க்கி on December 20, 2008 at 11:12 PM said...

///செந்தழல் ரவி said...
கலக்கல் !!//

தாங்க்ஸ் தல..

**********************
//தாமிரா said...
ஏன் இந்த‌ கொலவெறி//

இதற்காவது முதலிடம் கொடுத்திருக்கலாமில்ல வலைச்சரத்துல?

**************************
//Bendz said...
Hi,

Change to UJala :(

Nice story.
Keep it up... But I'll vote for யொஉ.//

நன்றி சகா..

**********

// ILA said...
கதையை விட வர்ணனை அருமை.. Double Twist எதிர் பார்க்கலை.. ://

ஸப்பா.. நீங்களாவது சொன்னிங்களே..

தாரணி பிரியா on December 21, 2008 at 12:09 AM said...

கார்க்கிகிகிகி நைட் 12.00 மணிக்கு இதுக்கு மேல கத்த முடியலை.

தாரணி பிரியா on December 21, 2008 at 12:13 AM said...

//வராது வந்த நாயகன் வந்ததாலோ என்னவோ மழை வந்தது//

அன்னிக்காவது மதன் குளிக்கட்டுமுன்னுதான்

//படித்து கிழிக்க வேண்டிய பக்கங்களை நனைய விடக்கூடாது//

என்னவொரு நல்ல எண்ணம்

// "தங்கப்பல் தானே உண்டு, இவள் என்ன‌ வைரப்பற்களை வைத்திருக்கிறாள்". //

இது எல்லாம் சரியா கணக்கெடுங்க‌

//கோவில் வாசலில் கையில் புக்ஸூடன் சரஸ்வதியே நிற்பது போலிருந்தது. //

எங்க வீட்டு போட்டாவுல எல்லாம் வீணையோடதான் நிற்பாங்க‌

தாரணி பிரியா on December 21, 2008 at 12:20 AM said...

// தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது//

இப்ப நிம்மதியா தூக்கம் வந்து இருக்குமே

//ஆனால் சிரிப்பு மட்டும் வெள்ளையாய் இல்லை//

இதுக்குதான் வெள்ளை கலர் கோல்கேட் பேஸ்ட் போட்டு பல்லு வெளக்கணும். சொல்லுங்க அந்த பொண்ணுகிட்ட‌.

// இல்லைன்னா இதுப் போல இன்னும் பலக் கொடுமைகள் தொடரக்கூடும்.//

இந்த மாதிரி கதை எழுதுனிங்கன்னா இந்த மாதிரி மொக்கை பின்னூட்டங்களும் தொடரப்படும்.

தாரணி பிரியா on December 21, 2008 at 12:21 AM said...

ஆனாலும் ஒரு உண்மை. நல்லாதான் இருக்குது

chinnappaiyan on December 21, 2008 at 6:36 AM said...

சூப்பர்.

அத்திரி on December 21, 2008 at 9:00 AM said...

//கொஞ்ச நேரம் சினேகம் காட்டி சன் டீ.வி கழட்டிவிட்ட கேப்டன் போல ஆகி விட்டான் மதன்.//

))))))))))))))))))))___

Anonymous said...

:)

கார்க்கி on December 22, 2008 at 1:29 PM said...

நன்றி தாரணிபிரியா

நன்றி அத்திரி

நன்றி சின்னப்பயைன்(இது அவரா??)

நன்றி கவின்

கும்க்கி on December 23, 2008 at 6:57 PM said...

ஹிஹி..ஹி...ஹி...ஹி

Namakkal Shibi on January 3, 2009 at 8:14 AM said...

:))

babu on May 6, 2009 at 6:41 PM said...

ஒரு கொலகாரன உருவாக்கிடாதீங்க.......

 

all rights reserved to www.karkibava.com