Dec 19, 2008

வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு


மு.கு:  வழக்கமான விஜய் படத்தின் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் தொடருங்கள்.

     பாடல்கள் வெளிவந்த முதல் நாள் ஒரு ஆர்வத்தில் இணையத்தில் இருந்து தரவிறக்கி கேட்டாலும் அன்று மாலையே ஒரிஜினல் சி.டி வாங்கியாச்சு. மொத்தம் 8 பாடல்கள். எனது விருப்பப் பாடல்களின் வரிசையில் சொல்கிறேன்

1)வாடா மாப்ளே( திப்பு,ரீட்டா, வடிவேலு):

      வழக்கமாக விஜய் படத்தில் கடைசி பாடல் வேகமான குத்துப் பாடலாகத்தான் இருக்கும். இது கொஞ்சம் ஸ்லோ என்றாலும் பட்டையை கிளப்புது. ஆங்காங்கே சுறாங்கனி பாடலின் வாசம் அடிக்கிறது. இசை சேனல்களில் அடிக்கடி பார்க்கலாம். வெகு நாட்களுக்கு பின் திப்பு. ஆனாலும் அதே பாணியில். பாடல் கேட்கும் போதெல்லாம் என் கால்கள் தானாக ஆடுகின்றன.

 2) ஜல்சா(பாபா சேகல்,ரீட்டா)

    தெலுங்கு ஜல்சாவில் எனக்கு பிடித்த பாடல். விஜய்க்கு கிடைத்தால் ஆடித் தீர்ப்பார் என்று அப்போதே நினைத்தேன். இதற்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தால் ரசிகர்களுக்கு அன்லிமிட்டட் மீல்ஸ்தான். ரசிகர்களை சூடேற்ற 'Lets rock the floor ilaya thalapthy' என்பது போன்ற வரிகளும் உண்டு. முதல் பாடல் பக்கா லோக்கல் என்றால் இது டோட்டலி ஆப்போஸிட். இதன் ரீமிக்ஸும் உண்டு. கார் வைத்திருப்பவர்கள் அடிக்கடி கேட்பார்கள்.

3) டாடி மம்மி (மம்தா மோகன்தாஸ்,நவீன்)

   இன்னோரு ட்ரேட் மார்க் தேவிபிரசாத்தின் பாடல். நடிகை மம்தாவின் குரல் பல‌ருக்கு பிடிக்கலாம், சிலருக்கு எரிச்சலை தரலாம். பாடலின் ரிதம்தான் கடைசி வரைக்கும் காப்பாற்றுகிறது. முதல் நாள் தொலைக்காட்சிகளில் இந்த பாடல் தான் அடிக்கடி ஒளிபரப்புவார்கள் என நினைக்கிறேன். டைம் பாஸ் பாடல்.

4) நீ கோபபட்டால் (சாகர்)

    படத்தில் இருக்கும் ஒரே மெலடி. கிட்டாரை அடிக்கடி உபயோகிக்கும் இந்த தலைமுறை ஆட்களில் ஒருவர் தேவி. ஆங்காங்கே ஒலிக்கும் கிட்டார் அருமை. ஒவ்வொரு முறை "நீ என்னை மறந்தால்" என்ற வரிக்குப் பின் வெவ்வேறு இசைக் கருவிகள் மீட்டுவது பழைய முறைதான் என்றாலும் கேட்க சுகமாக இருக்கிறது. சாகரின் குரல் ஓக்கே. பாடல் பா.விஜயாமே. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். 'நீ முத்தம் ஒன்று தந்தால்' பாடல் மாதிரி வேண்டுமென்று பிரபுதேவா கேட்டிருப்பார் என நினைக்கிறேன். அபப்டியென்றால் ஸாரி பிரபுதேவா.

5) ராமா ராமா (அமல் ராஜ், கோவை சரளா)

      வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு

     நில்லு நில்லு தில்லிருந்தா எதிர நில்லு

   ஒப்பனிங் சாங். அப்படியே ஆடுங்கடா பாடல். பீட்டில் மட்டுமல்ல பாடலை கம்போஸிங் செய்த முறையிலும். அதிரடி ஆரம்பம், பொறுமையாய் ஆரம்பிக்கும் சரணம், பின் வழக்கம் போல டும்ட்ட டக்கட டும்ட டக்கட.. தியேட்டரில் ரசிகர்களுக்கு சாமி வருவதற்கு அனைத்து வசதிகளும் செய்திருக்கிறார்கள். விஜய் எதிர்காலத்தில் கட்சி ஆரம்பித்தால் கபிலன் தான் கொ.ப.செ.

" பேரும் புகழும் கொன்டவங்க ஊருக்குள்ள ரொம்ப பேரு    பேரிலயே புகழ கொண்ட என்னப் போல வேற யாரு ஆண்டவன் தான் என்னை பார்த்து என்ன வேணும்னு கேட்டா

அகதியான் மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்".."

   வேறு ஏதாவ்து சொல்லனுமா? முதல் நாள் படத்துக்கு போனால் 15 நிமிஷம் லேட்டாப் போங்க. எப்படியும் ஒன்ஸ்மோர் உறுதி.

6) தீம்தனக்க (தேவி,திவ்யா)

  இருக்கும் அனைத்து வெஸ்டர்ன் இசைக் கருவிகளையும் உபயோகித்திருக்கிறார். கேட்க கேட்க நல்லாயிருக்கு. சினேகனின் வரிகள். ஒரே படத்தில் இரண்டு பாடல்கள் ஒரே மாதிரி இருப்பதால் அவ்வளவாக கவரவில்லை.

    ஏழாவது ஜல்ஸாவின் ரீமிக்ஸ். எட்டாவ‌து ஒரு நிமிட பாடல்.சும்மா லுல்லுலாயிக்கு. போக்கிரி பாடல்கள் உங்களை மகிழ்வித்திருந்தால் இதுவும் நிச்ச‌யம் உங்களுக்கு புடிக்கும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலும், போக்கிரி அளவுக்கு வரவில்லை என்றே நினைக்கிறேன். பாடல்களில் போக்கிரி சாயல் அடிப்பதால் படத்திலும் இருக்குமா?

30 கருத்துக்குத்து:

கணினி தேசம் on December 19, 2008 at 12:23 PM said...

Me the first !!

கணினி தேசம் on December 19, 2008 at 12:25 PM said...

//மு.கு: வழக்கமான விஜய் படத்தின் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் தொடருங்கள். //

விஜய் படங்கள் "எப்பவுமே" மொக்கைகளாக இருப்பினும் ..சில பாடல்கள் நன்றாக இருக்குமென்பதால்..தொடர்ந்து படிக்கிறேன்.

narsim on December 19, 2008 at 12:32 PM said...

//வழக்கமான விஜய் படத்தின் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் தொடருங்கள். //

க்கும்.. நெக்ஸ்ட்டு நெக்ஸ்ட்டு..

கணினி தேசம் on December 19, 2008 at 12:32 PM said...

//விஜய் எதிர்காலத்தில் கட்சி ஆரம்பித்தால் கபிலன் தான் கொ.ப.செ. " பேரும் புகழும் கொன்டவங்க ஊருக்குள்ள ரொம்ப பேரு பேரிலயே புகழ கொண்ட என்னப் போல வேற யாரு ஆண்டவன் தான் என்னை பார்த்து என்ன வேணும்னு கேட்டா அகதியான் மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்".."//

அரசியலுக்கு வர்றதுக்கான வேலைகள்ல இப்போவே அப்பாவும் மகனும் இறங்கிட்டதா சொன்னாங்க.. இந்த வரிகளை பார்த்தா... உண்மைதான் போல.!!

தமிழ்நாட்டுல இன்னொரு கட்சியா..தாங்காதுப்பா...!!

கணினி தேசம் on December 19, 2008 at 12:39 PM said...

//வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிர நில்லு ஒப்பனிங் சாங். அப்படியே ஆடுங்கடா பாடல்.//

கில்லி முதல் எல்லா படத்துலயும் இதே Formula தான்..ஒரே மாதிரி Opening பாட்டு !!

அனா..விஜய்யோட ஆட்டம் கலக்கலா இருக்கும்!

பரிசல்காரன் on December 19, 2008 at 1:09 PM said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது டாடி மம்மி வீட்டில் இல்ல பாட்டுதான். பல தடவை கேட்டுட்டு இருக்கேன். அதுவும் அந்த இன்பிட்வீன் பிஜிஎம் சூப்பர்!

கார்க்கி on December 19, 2008 at 1:15 PM said...

@பரிசல்,


ரெண்டு நாளா பல இட‌த்துல போய் வியாபாரம் செஞ்சிட்டு இருக்கீங்க..

இப்பதான் நம்ம கடைக்கு வர முடிஞ்சுதா? வச்சுக்கிறேன்..

சந்தர் on December 19, 2008 at 2:11 PM said...

ஜல்சா ரீமிக்ஸ்ஸையும் ஆர் யூ கிரேஸியையும் விட்டு விட்டீர்களே!
நான் டவுன்லோட் செய்தபோது 8 பாட்டுக்கள கிடைத்தது.

ஷங்கர் Shankar on December 19, 2008 at 2:21 PM said...

கார்க்கி சார்!
"டாடி மம்மி வீட்டில் இல்ல" பாட்டு ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த "அதிதி (Athiti) " என்ற படத்தில் வந்த ஐட்டம் பாட்டு தான் அது!
எல்லா பாடல்களிலுமே தெலுங்கு பாட்டுகளின் சாயல் இருக்கிறது.

கார்க்கி on December 19, 2008 at 2:24 PM said...

/சந்தர் said...
ஜல்சா ரீமிக்ஸ்ஸையும் ஆர் யூ கிரேஸியையும் விட்டு விட்டீர்களே!
நான் டவுன்லோட் செய்தபோது 8 பாட்டுக்கள கிடைத்தது//

முழுசா படிச்சிங்களாண்ணா?

"ஏழாவது ஜல்ஸாவின் ரீமிக்ஸ். எட்டாவ‌து ஒரு நிமிட பாடல்.சும்மா லுல்லுலாயிக்கு. "


கடைசி பத்தில சொல்லியிருக்கேனே

*********************************

/ஷங்கர் Shankar said...
கார்க்கி சார்!
"டாடி மம்மி வீட்டில் இல்ல" பாட்டு ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த "அதிதி (Athiti) " என்ற படத்தில் வந்த ஐட்டம் பாட்டு தான் அது!
எல்லா பாடல்களிலுமே தெலுங்கு பாட்டுகளின் சாயல் இருக்கிற//

ராமா ராமாவும், வாடா மாப்ளேவும் எனக்கு அப்படித் தோன்றவில்லை.

கருத்துக்கு நன்றி நண்பர்களே

வித்யா on December 19, 2008 at 2:26 PM said...

வில்லு படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பேசறேன். எப்படியும் சஞ்சய்க்கு ரெண்டு மூணு பாட்டாவது பிடிக்கும். அப்புறம் லிங்க் குடுக்கறீங்களா? ஜூனியரோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்:)

Anonymous said...

:)

கார்க்கி on December 19, 2008 at 3:24 PM said...

/வித்யா said...
வில்லு படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பேசறேன். எப்படியும் சஞ்சய்க்கு ரெண்டு மூணு பாட்டாவது பிடிக்கும். அப்புறம் லிங்க் குடுக்கறீங்களா? ஜூனியரோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கலா//

என் கணிப்பு வாடா மாப்ளேவும் ராமாவும் தான் புடிக்கும்.. ஜல்சாவும் வர வாய்ப்பிருக்கு

கும்க்கி on December 19, 2008 at 3:43 PM said...

வித்யா said...
வில்லு படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பேசறேன். எப்படியும் சஞ்சய்க்கு ரெண்டு மூணு பாட்டாவது பிடிக்கும். அப்புறம் லிங்க் குடுக்கறீங்களா? ஜூனியரோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்:)

:-))

கும்க்கி on December 19, 2008 at 3:44 PM said...

க்கும்.. நெக்ஸ்ட்டு நெக்ஸ்ட்டு..

கமான் பாஸ்ட்...பாஸ்ட்...ஓட்டுங்க ஓட்டுங்க...

ரமேஷ் வைத்யா on December 19, 2008 at 3:49 PM said...

யப்பா, அது ஜல்ஸா ரீமிக்ஸா, சல்ஸா ரீமிக்ஸா?

கார்க்கி on December 19, 2008 at 5:05 PM said...

// ரமேஷ் வைத்யா said...
யப்பா, அது ஜல்ஸா ரீமிக்ஸா, சல்ஸா ரீமிக்ஸா//

ஜல்சாதான் தல.. அப்படியே கடைசி மூனு பதிவையும் படிச்சு சொல்ற‌து..

வால்பையன் on December 19, 2008 at 5:10 PM said...

இதில் காப்பியடிக்கபட்ட மெட்டுகள் எதுவும் இல்லையா?

அ.மு.செய்யது on December 19, 2008 at 5:43 PM said...

அப்படியே படத்தோட DVD-யயும் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.
Good work...

Karthik on December 19, 2008 at 7:03 PM said...

அப்ப நீங்க ஜே.கே.ஆர் ரசிகர் இல்லையா??
:)

கும்க்கி on December 19, 2008 at 11:15 PM said...

Karthik said...
அப்ப நீங்க ஜே.கே.ஆர் ரசிகர் இல்லையா??
:)

ஹி ...ஹி..ஹிஹ்ஹி..ஹாஹ்ஹா
ஹோஹ்ஹோ ஹா ஹஹாஹ ஹ...ஹம்மம்மா...

PoornimaSaran on December 19, 2008 at 11:57 PM said...

படம் வரட்டும்:(

உவ்வே :(

தாரணி பிரியா on December 20, 2008 at 12:07 AM said...

எனக்கு விஜய் படத்துல பாட்டும் விஜயின் டான்ஸ் மட்டும்தான் பிடிக்குது.

ILA on December 20, 2008 at 2:57 AM said...

http://www.youtube.com/watch?v=Pk3E-W5rUso

raja on December 20, 2008 at 5:30 AM said...

டேய் அடங்குங்கடா ....குருவி குருவி குருவி அடிச்சா ......எப்போதும் விஜய் படம் போர் ,,,காது கிளியும்

Anbu on December 20, 2008 at 9:10 AM said...

all the songs are very superb.

குசும்பன் on December 20, 2008 at 12:13 PM said...

வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு //


கொல்லு கொல்லு கொல்லு பாக்குறவனை எல்லாம் கொல்லு!!!


//மு.கு: வழக்கமான விஜய் படத்தின் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் தொடருங்கள். //

ஹி ஹி ஹி சங்கமம் என்று ஒரு படம் பாட்டு எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டுங்கோ!!!

KATHIR = RAY on December 20, 2008 at 7:08 PM said...

ARE YOU CRAZY SONG PATHI ONNUM ELUTHALA.

ponnunga pasangala epdi ellam chellama thittuvanganu full lyrics

theriyatha ponnuga therinjukklama

Karthik on December 21, 2008 at 11:42 AM said...

வில்லு பட சண்ணடை காட்சிகள் , பாடல் காட்சிகள்- வீடியோ முதன்முதலாக இணையத்தில்....!

MayVee on December 22, 2008 at 10:31 PM said...

next american president vijay....
long live....

i have nt heard th songs. but will hear with ur suggestions

 

all rights reserved to www.karkibava.com