Dec 17, 2008

உடன்பிறப்புக்கு ஒரு கடிதம்


அன்பு அண்ணனுக்கு,

   எப்படி தொடங்குவது? சொல்ல முடியாத விதயங்களை கடிதம் மூலம் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி எதுவும் உன்னிடம் சொல்லாமல் விட்டதில்லை. நேரிடையாக சொல்லாவிட்டாலும் எப்படியாவது உன்னை வந்து சேர்ந்திருக்கிறது. சேர்த்திருக்கிறேன். அப்படி சொல்லாமல் போனவை கடிதம் மூலமும் சொல்ல இயலாதவைகளாக இருக்கும்.

  அலுவலக பார்ட்டியில் சற்று அதிக 'உற்சாகத்துடன்' கலந்துக் கொண்டுவிட்டு தவிர்க்க முடியாத நிலையில்  நண்பனுடன் வீட்டுக்கு வந்தேன். அமைதியாய் உள்ளே அழைத்து, வந்திருந்த உறவினர்களுக்குத் தெரியாமல் படுக்க வைத்தாய். காலையில் பயத்துடனே எழுந்த என்னை ஒருப் பார்வை பார்த்தாய்.அந்தப் பார்வையில் வழிந்த சின்னதோர் மன்னித்தலை மறக்கவா முடியும்?

  காலத்தின் கட்டாயத்தால் பல வருடங்களாகவே நீயோ நானோ ஒருவர் கடல் கடந்துதான் இருக்கிறோம். உனக்கும் எனக்கும் இடையே திட்டு திட்டாய் ரகசியங்கள் வளர்ந்தது அப்போதுதான் என்றாலும் இந்தப் பிரிவுதான் எனக்கு பலப் பொறுப்புகளைக் தந்திருக்கிறது. நேற்றைய வார்த்தைகளால் என்னை உச்சரித்துப் பார்த்தால் காது கொடுத்து கேட்கும்படியில்லை. உனதோ அல்லது நம் அப்பாவின் அகராதியிலிருந்து சில வார்த்தைகள் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டியிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் வெறும் பாலவனமாகத்தான் தெரிகிறது நான் கடந்து வந்தப் பாதை. ஆங்காங்கே பச்சை நிறம் தெரிகிறது என்றால் உன்னோடு இருந்த இடமாகத்தான் இருக்க வேண்டும்.

   இதுதான் பாடம் என்று ஆசிரியர் சொல்லும்போது புரிவதில்லை பலருக்கு. அதை அனுபவிக்கும்போதோ எதிர்கொள்ளும் போதோ அட!! அவர் சொன்னது இதைத்தானே என்கிறோம். உன்னிடம் நான் கற்ற அனைத்தும் இவ்வகையே. நான் நானாக இருக்க நீயும் ஒரு காரணமல்லவா?

"திறக்காத காடுகளின் ஒரு முனையில் தொடங்கும் காற்றைப் போல நம் பிறவி.தொடர்ச்சியான அறிமுகங்க‌ளில் இசையாகிறோம்".

      இதயம் வருடம் இளையராஜாவின் இசையைப் போல் ஆகிவிட்ட உனக்கு பிறந்த நாள் பாடல் பாடுகிறேன்.  எங்கேயோ கேட்டது போல் இருப்பதாக நினைக்காதே. அது உன் ராகமாகத்தான் இருக்கும்.

நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அபி.

 

முக்கிய குறிப்பு: இன்று பிறந்த நாள் கொண்டாடும் வலையுலக நகைச்சுவை மன்னன், நையாண்டி அரசன், குசும்பு கோவேந்தன், ஜாலி ஜானகிராமன், குசும்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.. இவர் இன்று போல என்றும் வாழ்ந்து பலரையும் கலாய்த்து சாபம் வாங்க வேண்டுமென வரம் தருகிறேன்.

38 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on December 17, 2008 at 9:47 AM said...

உங்க அண்ணனுக்கு பிறந்த நாளா கார்க்கி


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி

அதிரை ஜமால் on December 17, 2008 at 9:52 AM said...

அட முந்திகிட்டியளே ...

அதிரை ஜமால் on December 17, 2008 at 9:53 AM said...

ஆஹா முதல் ஓட்டு நான்தான்

அதிரை ஜமால் on December 17, 2008 at 9:55 AM said...

\\பல வருடங்களாகவே நீயோ நானோ ஒருவர் கடல் கடந்துதான் இருக்கிறோம்.\\

வருத்தமே

அதிரை ஜமால் on December 17, 2008 at 9:59 AM said...

\\பிறந்த நாள் பாடல் பாடுகிறேன். எங்கேயோ கேட்டது போல் இருப்பதாக நினைக்காதே. அது உன் ராகமாகத்தான் இருக்கும்\\

பிறந்த நாட்கள் கொண்டாடும் பழக்கம் இல்லை ...

ஆனாலும் உங்கள் அன்பு வெளிப்படுகிறது இங்கே ...

உங்களுக்கும் உங்கள் சகோக்கும் வாழ்த்துக்கள் என்றென்றும்.

ஸ்ரீமதி on December 17, 2008 at 10:22 AM said...

அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. :))

அருண் on December 17, 2008 at 10:32 AM said...

Happy B'Day!

கார்க்கி on December 17, 2008 at 10:49 AM said...

வாழ்த்து சொன்ன தா.பிரியா, அதிரை ஜமால்,ஸ்ரீமதி மற்றும் அருணுக்கு நன்றி

Anonymous said...

என் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் உடன்பிறப்புக்கு

narsim on December 17, 2008 at 11:32 AM said...

உடன்பிறப்புக்குனு பார்த்துட்டு என்னமோ ஏதோனு வந்தேன்.. ஆனால்..

மிக நல்ல வார்த்தைகளில் மிக நல்ல பதிவு சகா..

உடன்பிறந்தவர்களிடம் எத்தனையோ தருணங்களில் ஏதேதோ பேச வேண்டும் என்று நினைக்கும் நாம் நேரில் எதுவும் பேசாமல் இருப்பதே அதிகம்.. இதுபோன்ற கடிதங்களே அதற்கு தீர்வு.. வழக்கமாக எனக்கு பிடித்த வரிகளை எடுத்து நல்ல வரிகள் என்று கூறுவேன்.. இந்த பதிவின் அனைத்து வார்த்தைகளுமே மிக நல்ல வரிகள் சகா.. சகாவின் சகோவிற்கு வாழ்த்துக்கள்!!

sinthu on December 17, 2008 at 11:54 AM said...

அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - tamil
Wish your borther's Happy BIrthday.- English

Shobo jonmo din - this s Bangla language................
Sinthu
from Bangladesh

கோவி.கண்ணன் on December 17, 2008 at 11:57 AM said...

அட இங்கிட்டும் குசும்பாயணம் !

வாழ்க வாழ்க !

அத்திரி on December 17, 2008 at 12:02 PM said...

ஏலே எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துல>.................

thushanthini on December 17, 2008 at 12:06 PM said...

உடன் பிறப்புக்கள் அருகில் இருக்கும் பொது நாம் உணரமருத்த சிலவற்றை பிரிவுகள் எங்களுக்கு உணர்த்தும்

உங்களின் அண்ணனுக்கு என் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வித்யா on December 17, 2008 at 12:08 PM said...

அண்ணாத்தேக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க:)

Shakthiprabha on December 17, 2008 at 12:22 PM said...

////நேற்றைய வார்த்தைகளால் என்னை உச்சரித்துப் பார்த்தால் காது கொடுத்து கேட்கும்படியில்லை. உனதோ அல்லது நம் அப்பாவின் அகராதியிலிருந்து சில வார்த்தைகள் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டியிருக்கிறது.

இதுதான் பாடம் என்று ஆசிரியர் சொல்லும்போது புரிவதில்லை பலருக்கு. அதை அனுபவிக்கும்போதோ எதிர்கொள்ளும் போதோ அட!!

"திறக்காத காடுகளின் ஒரு முனையில் தொடங்கும் காற்றைப் போல நம் பிறவி.தொடர்ச்சியான அறிமுகங்க‌ளில் இசையாகிறோம்". ///

அழகான வார்த்தைக் கோர்வைகள். பாராட்டுக்கள்.

எங்கேயோ நான் மிகவும் ரசித்து மகிழ்ந்த ஒரு quote

Defintion of best friendship:

" When, u meet ur friend after 10 years, you do not exchange a word but hold hands for few seconds, enjoy the company wordlessly and walk away with the sensation of having had the BEST conversation ever"


சில நேரங்களில் நம் தாயோ, மகளோ, மகனோ, அண்ணனோ நம் சிறந்த தோழன்(ழி) ஆகின்றனர்.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

கார்க்கி on December 17, 2008 at 12:32 PM said...

/சின்ன அம்மிணி said...
என் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் உடன்பிறப்புக்கு//

நன்றி அம்மினி..

****************

/narsim said...
மிக நல்ல வார்த்தைகளில் மிக நல்ல பதிவு சகா.

வழக்கமாக எனக்கு பிடித்த வரிகளை எடுத்து நல்ல வரிகள் என்று கூறுவேன்.. இந்த பதிவின் அனைத்து வார்த்தைகளுமே மிக நல்ல வரிகள் சகா.. சகாவின் சகோவிற்கு வாழ்த்துக்கள்!//

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தல.. நன்றி

*************************
//sinthu said...
அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - tamil
Wish your borther's Happy BIrthday.- Engலிஷ்

Shobo jonmo din - this s Bangla language./

நன்றி‍ தன்யவாத்(ஹிந்தி)

**********************

//கோவி.கண்ணன் said...
அட இங்கிட்டும் குசும்பாயணம் !

வாழ்க வாழ்க//

வாங்க் வாங்க கோவியாரே

கார்க்கி on December 17, 2008 at 12:34 PM said...

/அத்திரி said...
ஏலே எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துல>...//

நன்றி சகா..

*******************

//thushanthini said...
உடன் பிறப்புக்கள் அருகில் இருக்கும் பொது நாம் உணரமருத்த சிலவற்றை பிரிவுகள் எங்களுக்கு உணர்த்தும்

உங்களின் அண்ணனுக்கு என் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்க//

நன்றி துஷாந்தினி

*******************

/வித்யா said...
அண்ணாத்தேக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க://

சொல்லிடலாம்.. சென்னை வ்ந்தாச்சா?

*********************
Shakthiprabha said...
சில நேரங்களில் நம் தாயோ, மகளோ, மகனோ, அண்ணனோ நம் சிறந்த தோழன்(ழி) ஆகின்றனர்.

தொடர்ந்து எழுதுங்கள். நன்//

தொடர் வருகைக்கு நன்றி..

அனுஜன்யா on December 17, 2008 at 1:37 PM said...

கார்க்கி,

பரிசலும், அய்சும் சேர்ந்து எழுதியது போல் இருக்கு. பிரமாதம். அண்ணன் 'அபி'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மிக அழகாக எழுதுகிறாய் கார்க்கி.

அனுஜன்யா

புதுகை.அப்துல்லா on December 17, 2008 at 1:57 PM said...

நம்ப வாழ்த்தையும் சொல்லிரு உடன்பிறப்புக்கிட்ட :)

Prosaic on December 17, 2008 at 2:17 PM said...

The best ever gift I have received from you. Thanks a lot. Wish you the greatest success in your life.

Abinandhan

கார்க்கி on December 17, 2008 at 3:23 PM said...

//அனுஜன்யா said...
கார்க்கி,

பரிசலும், அய்சும் சேர்ந்து எழுதியது போல் இருக்கு. பிரமாதம். அண்ணன் 'அபி'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மிக அழகாக எழுதுகிறாய் கார்க்கி//

தல.. ரெண்டு பெரிய தலைங்க பேரை இப்படி பண்ணிட்டிங்களே!! :))) ரொம்ப நன்றி..

********************
//புதுகை.அப்துல்லா said...
நம்ப வாழ்த்தையும் சொல்லிரு உடன்பிறப்புக்கிட்ட ://

சொல்லிடறேன்..

கார்க்கி on December 17, 2008 at 3:25 PM said...

/ Prosaic said...
The best ever gift I have received from you. Thanks a lot. Wish you the greatest success in your life.

Abinanட்ஹன்//

வந்துட்டியா? என்னுடையது மட்டுமில்லாம 15 பேர் வாழ்த்தும் சேர்த்து வாங்கிக் கொடுத்திருக்கேன்.. இன்னொரு தபா ஹேப்பி பர்த்டேண்ணா...

கார்க்கி on December 17, 2008 at 5:14 PM said...

ரமேஷ் என்பவர் அனுப்பிய மின்னஞ்சல்.

நண்பர் கார்க்கிக்கு,

நான் ரமேஷ்.சில நாட்களாக உங்கள் ப்ளாக்கில் அனானிமஸ் ஆப்ஷன் இல்லை. எனவே இந்த மெயில். உங்கள் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.அழகாக வாழ்த்து சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்.

ரமேஷ்.

கார்க்கி on December 17, 2008 at 5:17 PM said...

சில நாட்களுக்கு முன் அன்பர் ஒருவர் அனானியாக வந்து 75 முதல் 100 வரை வெறும் எண்களாக பின்னூட்டம் போட்டார். அது அடுத்த பதிவுக்கும் தொடர்ந்ததால் அனானி ஆப்ஷனை மூடிவிட்டேன். சிரமம் பாராமல் ஒரு ப்ளாகர் கணக்கை துவங்கிவிட்டால் நன்று. உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

இதுவரை இவ்வாறு பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நீங்களும் ப்ளாகர் கணக்கு துவங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா on December 17, 2008 at 5:55 PM said...

என் வாழ்த்துக்களும்

நல்ல பாட்டை தேர்ந்தெடுத்திருக்கீங்க

ஜே.கே.ஆர் ரசிகர்கள் on December 17, 2008 at 7:24 PM said...

அண்ண‌னுக்கு வாழ்த்துக்கள்.

Karthik on December 17, 2008 at 7:52 PM said...

வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!

:)

Kathir on December 17, 2008 at 9:25 PM said...

அண்ணனுக்கு என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.....
:))

குசும்பன் சாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

PoornimaSaran on December 17, 2008 at 9:33 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி அண்ணா..
என் பெரிய அண்ணனாக்கும் ..

SK on December 17, 2008 at 9:44 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

// சில நாட்களுக்கு முன் அன்பர் ஒருவர் அனானியாக வந்து 75 முதல் 100 வரை வெறும் எண்களாக பின்னூட்டம் போட்டார். அது அடுத்த பதிவுக்கும் தொடர்ந்ததால் அனானி ஆப்ஷனை மூடிவிட்டேன். சிரமம் பாராமல் ஒரு ப்ளாகர் கணக்கை துவங்கிவிட்டால் நன்று. உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. //

:-) :-)

விஜய் ஆனந்த் on December 17, 2008 at 10:19 PM said...

:-)))...

தம்பியண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!!

MayVee on December 18, 2008 at 6:52 AM said...

"இதுதான் பாடம் என்று ஆசிரியர் சொல்லும்போது புரிவதில்லை பலருக்கு. அதை அனுபவிக்கும்போதோ எதிர்கொள்ளும் போதோ அட!! அவர் சொன்னது இதைத்தானே என்கிறோம். உன்னிடம் நான் கற்ற அனைத்தும் இவ்வகையே. நான் நானாக இருக்க நீயும் ஒரு காரணமல்லவா?"

ya true. i was reminded of my nri brother. we shared a lot in our childhood days.

ths post was very much my heart. i am goin to call my brother after typin this post.

convey my regards to ur brother.

MayVee on December 18, 2008 at 6:54 AM said...

ths post touched my heart. i am goin to call my brother after typin this post.

கார்க்கி on December 18, 2008 at 10:15 AM said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
என் வாழ்த்துக்களும்

நல்ல பாட்டை தேர்ந்தெடுத்திருக்கீங்//

நன்றிம்மா..

*******************

/ஜே.கே.ஆர் ரசிகர்கள் said...
அண்ண‌னுக்கு வாழ்த்துக்க//

எந்த அண்ணனுக்குப்பா?

*******************

//Karthik said...
வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்..!

:)//

நன்றி
நன்றி
நன்றி

கார்க்கி on December 18, 2008 at 10:17 AM said...

//Kathir said...
அண்ணனுக்கு என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.....
:))

குசும்பன் சாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..//

நன்றி கதிர். நலமா?

*******************
/ PoornimaSaran said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி அண்ணா..
என் பெரிய அண்ணனாக்கும் //

நன்றி.. பெரியண்ணா யாரு கேப்டனா?

***********************
//SK said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

நன்றி எஸ்.கே..

***********

கார்க்கி on December 18, 2008 at 10:19 AM said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...

தம்பியண்ணனுக்கு வாழ்த்துக்கள்!//

அண்ணன்தம்பியின் நன்றிகள்..

*********************

//MayVee said...
"இதுதான் பாடம் என்று ஆசிரியர் சொல்லும்போது புரிவதில்லை பலருக்கு. அதை அனுபவிக்கும்போதோ எதிர்கொள்ளும் போதோ அட!! அவர் சொன்னது இதைத்தானே என்கிறோம். உன்னிடம் நான் கற்ற அனைத்தும் இவ்வகையே. நான் நானாக இருக்க நீயும் ஒரு காரணமல்லவா?"

ya true. i was reminded of my nri brother. we shared a lot in our childhood days.

ths post was very much my heart. i am goin to call my brother after typin this post.

convey my regards to ur broதெர்//

முதல் வருகைக்கு நன்றி சகா.. பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு.. உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும் வாழ்த்துகள்.

rapp on December 18, 2008 at 5:11 PM said...

belated bday wishes kusumban sir marrum unga annan:):):)

 

all rights reserved to www.karkibava.com