Dec 16, 2008

புட்டிக்கதைகள்


    புட்டிகதைகளின் நாயகன் ஏழுமலையைப் பற்றி தெரியாதவர்கள் இங்கே அவனை சந்தித்து விட்டு வாருங்கள்.  

*************************************************

    ஒரு வழியாக ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு அனுமதி வாங்கிக் கொண்டான். இரண்டு ஃபுல் எம்சியும் ஒரு டஜன் பியர்களும் அடிப்பதற்கு வெறும் எட்டு பேர் மட்டுமே இருந்தோம். வரவேண்டியவர்களில் மூவர் வராதது ஏழுவுக்கு அதீத சந்தோஷத்தை கொடுத்தது.

   சைட் டிஷ்களும்,சாப்பிட சப்பாத்திகளும் நிரம்பி வழிந்தன. சியர்ஸ் சொல்லி முதல் சிப் மட்டுமே அடித்திருந்தோம். முதல் சிப்பிலே ஹீரோ ஆட ஆரம்பித்தார். பர்த்டே பேபிக்கு ஏழுமலையின் லீலைகள் தெரியாது. சப்பாதியை ஒரு கடி கடித்த பேபி சொன்னார்

"மச்சி சப்பாத்தி சாஃப்ட்டா(soft) இருக்குடா. எங்க வாங்கின?"

"சாப்ட்டா எப்படிடா இருக்கும்? காலியாயுடுமே" என்றான் ஏழு.

"இல்ல. தின்னா(Thin) இருக்குன்னு சொன்னேன்"

"தின்னா மட்டும் எப்படிடா இருக்கும்"?.

ங்கொய்யால உனக்கு சப்பாத்தி கிடையாது 

மெஸ்சில் இருந்து கொண்டு வந்த‌ உப்புமாவே போதும்.

சும்மா சொன்னேன்டா. கோச்சிக்காத.

 அதுக்கில்லடா. உப்புமா வாரத்துல ஒரு நாள்தான் போடறாங்க. அதான் உப்புமா சாப்பிட்டாவாது என் உடம்பு "உப்பு-மான்னு” பார்க்கிறேன்

    இப்போது பேபியின் முகத்தில் சின்ன கோவத்தை பார்க்க முடிந்தது. உஷாரான ஏழுமலை பேச்சை மாற்றினான்.

    மச்சி, பியரும் உயிரும் ஒன்னுடா. இந்த பாட்டில்ல பியர் இருக்கிற வரைக்கும் இதுக்கு ரேட்டே வேற. அதுவே பியரை குடிச்சிட்டா, காலி பாட்டில். அதே மாதிரி உடம்புக்குள்ள உயிர் இருக்கிற வரைக்கும் தான் மவுசு. உயிர் போச்சுன்னா, அவ்ளோதான். இதத்தான் பெரியவங்க சொன்னாங்க

"இந்த பியரும் உயிரும் ஒன்னு
அறியாதவன் மண்டைல மண்னு".

  இதற்குள் நான் இரண்டாவது ரவுண்டை முடித்து மூன்றாம் ரவுண்டுக்கு போவதைப் பார்த்து ஏழு கோபமாக தனது இரண்டாவது சிப்பை இழுத்தான். ஏழுமலைக்கு 'சிப்' தான் ரவுண்டே.மீண்டும் தத்துவங்கள் பொழியத் தொடங்கினான்.

    மச்சி, மனுஷன் இந்த சரக்கு பாட்டல் மாதிரிதான் இருக்கணும். இப்போ நான் குவார்ட்டர்(?)அடிச்சதுக்கே தலை சுத்துது. ஆனா இந்த பாட்டில்குள்ள‌ ஃபுல் சரக்கு ராவா இருந்தாலும் ஆடாம இருக்குப் பார்த்தியா!! அந்த மாதிரி அடக்கமா இருக்கனும்.

   ஃபுல் க்ளாசையும் அடித்துவிட்டான். இதுவரை இவ்வளவு அடிச்சதில்லை. தன் காதலியை நினைத்து புலம்பத் தொடங்கினான் ஏழு.

 இன்னும் ஞாபகமிருக்கு மச்சி. கண்ணுக்குள்ளே இருக்கா.. என் தேவதை.. எவ்ளோ ட்ரை பண்ணியும் முடியல.. முழு போதையிலும் மனசு முழுக்க நிறஞ்சு இருக்கா.. விப்ரோல இருந்து போயிட்டா.. செல் நம்பர் மாத்திட்டா.. வழக்கமா கால் பண்ணி குரல மட்டும் கேட்பேன்.. அவ ஹலோ ஹலோன்னு சொல்ல மாட்ட.. ஒரு ஹலோக்கு பதில இல்லைன்னாலே நான் தான்னு தெரியும்..அட்வைஸ் பண்ணுவா..  நல்லயிருக்காளாம் மச்சி.. இப்போ என்ன செஞ்சிட்டு இருப்பா?.. என்ன பத்தி நினைப்பாளா? வழக்கம்போல ஒரு முட்டு சந்துல விழுந்து கிடப்பானே.. பாவம்.. கால் பண்ணுவாளா?  அழனும் போல இருக்கு... ஒரு வேளை என்னை கல்யானம் பண்ணியிருந்தா அவளுக்கு ஸ்டேட்ஸ் யூ.எஸ். போற வாய்ப்பில்லாம போயிருக்கலாம்.. ஆனா.. என்ன ஆனா.. போயிட்டாளே..எனக்கு யூ.எஸ்.போக விசா கொடுப்பாங்களா? கொடுத்தாலும் அவ புருஷன் கூட இருப்பாளே.. அடுத்தவன் காதலிய கல்யாணம் பண்ணவன விட்டுடறாங்க..என்னை மட்டும் அடுத்தவன் மனைவிய இன்னுமா காதலிக்கறன்னு கேட்கறாங்க.. தேவதைகள சாபம் ஒன்னும் பண்ணாது.. அதனால் சொல்றேன்.. என்ன தனியா அழ வச்சதுக்கு அனுபவிப்படி.. உள்ள போற தண்ணியெல்லாம் கண்ணு வழியா வெளில வர வச்சதுக்கு நல்ல அனுபவிப்ப... நல்லயிரு.. போங்கடா.. போய் காதலிச்சு செத்து போங்க.. பொண்ணு பின்னாடி சுத்தி சீரழிஞ்சு போங்க...

    சரியாக 38 மணி நேரம் கழித்து எழுந்த ஏழுமலை மறக்காமல் கேட்டான் மச்சி ஃபுல் அடிச்சிருப்பேனா?

 

59 கருத்துக்குத்து:

அத்திரி on December 16, 2008 at 9:32 AM said...

நாந்தான் மொதல்ல

அத்திரி on December 16, 2008 at 9:32 AM said...

நாந்தான் மொதல்ல

அத்திரி on December 16, 2008 at 9:32 AM said...

படிச்சிட்டு வாரேன்

தாரணி பிரியா on December 16, 2008 at 9:36 AM said...

//மச்சி சப்பாத்தி சாஃப்ட்டா(soft) இருக்குடா. எங்க வாங்கின?" "சாப்ட்டா எப்படிடா இருக்கும்? காலியாயுடுமே" என்றான் ஏழு. "இல்ல. தின்னா(Thin) இருக்குன்னு சொன்னேன்" "தின்னா மட்டும் எப்படிடா இருக்கும்"?. //

உங்க பிரெண்டுக்கு ஓவர் அறிவு கார்க்கி :)

தாரணி பிரியா on December 16, 2008 at 9:36 AM said...

முதல்ல படிச்சு பார்த்து கமெண்ட் போட்டது நாந்தான்.

அத்திரி on December 16, 2008 at 9:36 AM said...

//அதான் உப்புமா சாப்பிட்டாவாது என் உடம்பு "உப்பு-மான்னு” பார்க்கிறேன்//

எதுகை மோனையிலே ரணகளம்

அத்திரி on December 16, 2008 at 9:38 AM said...

//முதல்ல படிச்சு பார்த்து கமெண்ட் போட்டது நாந்தான்//

இதெல்லாம் கணக்கில வராது

தாரணி பிரியா on December 16, 2008 at 9:39 AM said...

எப்படிங்க இவ்வளவு தத்துவம்

அத்திரி on December 16, 2008 at 9:39 AM said...

//மச்சி, பியரும் உயிரும் ஒன்னுடா. இந்த பாட்டில்ல பியர் இருக்கிற வரைக்கும் இதுக்கு ரேட்டே வேற. அதுவே பியரை குடிச்சிட்டா, காலி பாட்டில். அதே மாதிரி உடம்புக்குள்ள உயிர் இருக்கிற வரைக்கும் தான் மவுசு. உயிர் போச்சுன்னா, அவ்ளோதான். இதத்தான் பெரியவங்க சொன்னாங்க//


பேசாம ஏழுமலை தலைமையில ஒரு ஆஸ்ரமம் ஆரம்பிங சகா. வசூல் பிச்சிக்கும்

அத்திரி on December 16, 2008 at 9:41 AM said...

//எப்படிங்க இவ்வளவு தத்துவம்//

சரக்கு உள்ள போனா எல்லாமே டன் கணக்கில வெளிய வரும்......!!!

அத்திரி on December 16, 2008 at 9:43 AM said...

//நல்லயிரு.. போங்கடா.. போய் காதலிச்சு செத்து போங்க.. பொண்ணு பின்னாடி சுத்தி சீரழிஞ்சு போங்க...//


இந்த விசயத்துல மட்டும் ஏழுமலை தெளிவா இருக்காப்ல

thushanthini on December 16, 2008 at 10:09 AM said...

உங்க நண்பர் ரொம்ப தன் தெரிட்டறு இதை தன் பெரியவங்க சொன்னாங்க போதையிலும் ஞனம் வரும் எண்டு

Udhayakumar on December 16, 2008 at 10:16 AM said...

//அடுத்தவன் காதலிய கல்யாணம் பண்ணவன விட்டுடறாங்க..என்னை மட்டும் அடுத்தவன் மனைவிய இன்னுமா காதலிக்கறன்னு கேட்கறாங்க.. //


நல்லா எழுதறீங்க கார்த்தி!!!!

nathas on December 16, 2008 at 10:19 AM said...

:)

அருண் on December 16, 2008 at 10:25 AM said...

Super!

ஸ்ரீமதி on December 16, 2008 at 10:31 AM said...

அண்ணா நல்லா சிரிச்சேன்.. சூப்பர் சூப்பர் சூப்பர்.. :)))))))

Shakthiprabha on December 16, 2008 at 10:32 AM said...

//அடுத்தவன் காதலிய கல்யாணம் பண்ணவன விட்டுடறாங்க..என்னை மட்டும் அடுத்தவன் மனைவிய இன்னுமா காதலிக்கறன்னு கேட்கறாங்க //

நல்லா இருக்கு. நியாயமான கேள்வி.

அடுத்தவன் கல்யாணம் பண்ணிட்டான் என்பதற்காக மறந்து விடவேண்டும் என்று நல்லொழுக்க போதனை சரிவராது. எல்லாம் அவனவன் அனுபவித்தால் தான் விளங்கும்.

__

மொத்த கதையில் காதல் சோகம் தப்பில்லை. காலாகாலமாய் அதுக்கும் alcoholக்கும் ஏன் தொடர்ப்பு? :(

வருத்தமா இருக்கு.

காதலிச்சு கைகூடாத காதலினால் பெண்கள் அவதிபட்டால், அவர்களும் தானே நொந்துகொண்டிருக்கிறார்கள். தனியாய். ரகசியமாய்.

அவர்களுக்கு எந்த alcohol தேவையும் இருப்பதில்லை.

ஆண்கள் மட்டும் ஏன்?

(அட்வைஸ் அம்புஜம் ன்னு நினைக்காதீங்க, ...கதையாக இருந்தாலும், I cant digest why guys get drunk to swallow unhappiness. Women also go thro innumerable failures, unhappiness and the like, even then, we brood just within ourselves or talk our heart out to best friends, even better write fictions in blogs)

மிச்சபடி கதையில் நீங்கள் தெளித்துள்ள ஹுமர் நல்ல இருக்கு.

கார்க்கி on December 16, 2008 at 10:37 AM said...

நன்றி அத்திரி..

*********************

நன்றி தா.பிரியா..

********************

/thushanthini said...
உங்க நண்பர் ரொம்ப தன் தெரிட்டறு இதை தன் பெரியவங்க சொன்னாங்க போதையிலும் ஞனம் வரும் எண்//

ஹிஹிஹி..

*********************

/Udhayakumar said...
//அடுத்தவன் காதலிய கல்யாணம் பண்ணவன விட்டுடறாங்க..என்னை மட்டும் அடுத்தவன் மனைவிய இன்னுமா காதலிக்கறன்னு கேட்கறாங்க.. //


நல்லா எழுதறீங்க கார்த்தி!!!//

நன்றி உதயகுமார். நான் கார்த்தி அல்ல. கார்க்கி.

கார்க்கி on December 16, 2008 at 10:39 AM said...

/athas said...
:)//

:))))))))))))))))))

***********************

// அருண் said...
Suபெர்!//

நன்றி அருண்.. ஆணிகள் குரைந்ததா இல்லையா?

***********************

//ஸ்ரீமதி said...
அண்ணா நல்லா சிரிச்சேன்.. சூப்பர் சூப்பர் சூப்பர்.. :))//

நன்றிக்கா..

சரவணகுமரன் on December 16, 2008 at 10:39 AM said...

:-)

கார்க்கி on December 16, 2008 at 10:42 AM said...

// Shakthiprabha said...
//அடுத்தவன் காதலிய கல்யாணம் பண்ணவன விட்டுடறாங்க..என்னை மட்டும் அடுத்தவன் மனைவிய இன்னுமா காதலிக்கறன்னு கேட்கறாங்க //

நல்லா இருக்கு. நியாயமான கேள்வி//

முதல் வருகைக்கு நன்றி..

//அடுத்தவன் கல்யாணம் பண்ணிட்டான் என்பதற்காக மறந்து விடவேண்டும் என்று நல்லொழுக்க போதனை சரிவராது. எல்லாம் அவனவன் அனுபவித்தால் தான் விளங்கும்//

சரியா சொன்னிங்க..

//மொத்த கதையில் காதல் சோகம் தப்பில்லை. காலாகாலமாய் அதுக்கும் alcoholக்கும் ஏன் தொடர்ப்பு?//

எந்தக் காரணம் இல்லையென்றாலும் தண்ணி யடிப்போம். இது ஒரு காரணம் அவ்வளவே..

//காதலிச்சு கைகூடாத காதலினால் பெண்கள் அவதிபட்டால், அவர்களும் தானே நொந்துகொண்டிருக்கிறார்கள். தனியாய். ரகசியமாய்.

அவர்களுக்கு எந்த alcohol தேவையும் இருப்பதில்லை//

உண்மைதான்.. அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் ஆண்களும் தண்ணியடிக்க கூடாதா என்ன?

/மிச்சபடி கதையில் நீங்கள் தெளித்துள்ள ஹுமர் நல்ல இருக்கு//

இது நகைச்சுவை தொடர்தான்.. சும்மா ஜாலிக்கு தான் அந்த க‌டைசி பத்தி.. பழைய புட்டிக்கதைகள் படித்துப் பாருங்கள்.. விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

ராம்சுரேஷ் on December 16, 2008 at 10:57 AM said...

ஏழுமலையோட உண்மையான பெயர் கார்க்கி இல்லைலே??? எல்லாம் சொந்த சரக்கு மாதிரி இருக்குது. (சே, இதிலயும் சரக்கா??).. Just kidding :)

விஜய் ஆனந்த் on December 16, 2008 at 11:03 AM said...

:-)))...

மிக்க நன்று!!!

இதுல கேரக்டர் அசாசினேஷன் எதுவும் இல்லியே??? (ச்சும்மா...லுல்லுல்லாயிக்கு!!!)

ராம்ஜி on December 16, 2008 at 11:12 AM said...

வருங்கால அமேரிக்க ஜனாதிபதி ஏழுமலை வாழ்க...

அருண் on December 16, 2008 at 11:34 AM said...

//
நன்றி அருண்.. ஆணிகள் குரைந்ததா இல்லையா?//

இல்ல சகா. இன்னும் ஜாஸ்தி ஆயிடுச்சு.

கார்க்கி on December 16, 2008 at 12:05 PM said...

/சரவணகுமரன் said...
:‍)//

அழகான சிரிப்புக்கு நன்றி சகா..

*********************

/ராம்சுரேஷ் said...
ஏழுமலையோட உண்மையான பெயர் கார்க்கி இல்லைலே??? எல்லாம் சொந்த சரக்கு மாதிரி இருக்குது. (சே, இதிலயும் சரக்கா??).. Just kiddinக் :)//

ஹிஹிஹி.. ஏழுமலை ரொம்ப ஒல்லினு சொல்லியிருக்கேனே..

*******************
/விஜய் ஆனந்த் said...
:-)))...

மிக்க நன்று!!!

இதுல கேரக்டர் அசாசினேஷன் எதுவும் //

ஹாஹாஹா.. அபப்டியெல்லாம் இல்லை..ச்சும்மா ட்டாமஷுக்கு..

*************

//ராம்ஜி said...
வருங்கால அமேரிக்க ஜனாதிபதி ஏழுமலை வாழ்க..//

வாழ்க.. வாழ்க.. அப்படியே அவரை உருவாக்கின கிங் மேக்கர் கார்க்கி வாழ்கனும் சொல்லுங்க சகா..

***************************************

/அருண் said...
//
நன்றி அருண்.. ஆணிகள் குரைந்ததா இல்லையா?//

இல்ல சகா. இன்னும் ஜாஸ்தி ஆயிடுச்சு//

உங்க வயித்தெரிச்சல கொட்டிக்க போறேன்.. நான் அநியாயத்துக்கு ஃப்ரீ

thushanthini on December 16, 2008 at 12:15 PM said...

"வருங்கால அமேரிக்க ஜனாதிபதி ஏழுமலை வாழ்க..."

ஏன் ஏழுமலை என்னும் ஓர் அப்பிராணி மேல் இவ்வளவு கொலை வெறி................

ஸ்ரீமதி on December 16, 2008 at 12:16 PM said...

//கார்க்கி said...
நன்றிக்கா..//

அண்ணா என்னக் கொடுமை இது?? :((

வித்யா on December 16, 2008 at 12:36 PM said...

கார்க்கி நீ இன்னும் ஏழுமலை போட்டோவப் போடல. வையாபுரி மாதிரி இருப்பாரா?? (நீங்க எழுதியிருக்கறதை வச்சு நானா கற்பனை பண்ணிக்கிட்டது.)

வித்யா on December 16, 2008 at 12:36 PM said...

me the 30th:)

கார்க்கி on December 16, 2008 at 1:31 PM said...

//thushanthini said...
"வருங்கால அமேரிக்க ஜனாதிபதி ஏழுமலை வாழ்க..."

ஏன் ஏழுமலை என்னும் ஓர் அப்பிராணி மேல் இவ்வளவு கொலை வெ//

அதானே!!!!

***********************

// ஸ்ரீமதி said...
//கார்க்கி said...
நன்றிக்கா..//

அண்ணா என்னக் கொடுமை இது?? //

நீ மட்டும் என்ன அண்னான்னு சொல்லலாம். நான் சொல்லக்கூடாதா? இனிமேல அக்காதான்.

**************************

/வித்யா said...
கார்க்கி நீ இன்னும் ஏழுமலை போட்டோவப் போடல. வையாபுரி மாதிரி இருப்பாரா//

உடல் அப்படித்தான்.. ஆனா முகம் அழகா இருக்கும்.. அடுத்த வாரம் நிச்ச்சயம்..

rapp on December 16, 2008 at 1:32 PM said...

நால்லாருக்கு, ஆனா நகைச்சுவை கொஞ்சம் குறைவு. அடுத்த ஏழுமலைக் கதையில் வழக்கம்போல நகைச்சுவையை ஜாஸ்தியாக்குங்க:):):)

narsim on December 16, 2008 at 2:34 PM said...

//ஃபுல் சரக்கு ராவா இருந்தாலும் ஆடாம இருக்குப் பார்த்தியா//

//தேவதைகள சாபம் ஒன்னும் பண்ணாது//

//போங்கடா.. போய் காதலிச்சு செத்து போங்க.. //

சகா.. சாகா வாரிகள்..

SK on December 16, 2008 at 2:57 PM said...

:) :) :)

sinthu on December 16, 2008 at 3:03 PM said...

அண்ணா உப்புமா என்று சொல்லிட்டீங்க இந்த பங்களாதேசத்தில் அப்படி ஒன்று இருப்பதாக நான் அறியவில்லை. உங்கள் மொக்கையை வாசித்ததால் சாப்பிட்ட ஒரு உணர்வு............
சில சமயங்களில் சூழ்நிலைகள் மனிதனின் குணங்களை மாற்றிவிடும் இல்லையா கார்க்கி அண்ணா......

கார்க்கி on December 16, 2008 at 3:20 PM said...

//rapp said...
நால்லாருக்கு, ஆனா நகைச்சுவை கொஞ்சம் குறைவு. அடுத்த ஏழுமலைக் கதையில் வழக்கம்போல நகைச்சுவையை ஜாஸ்தியாக்குங்க:):)//

உண்மைதான்.. அடுத்த தடவ கலக்கிடுவோம்..

*************************

/narsim said...
//ஃபுல் சரக்கு ராவா இருந்தாலும் ஆடாம இருக்குப் பார்த்தியா//

//தேவதைகள சாபம் ஒன்னும் பண்ணாது//

//போங்கடா.. போய் காதலிச்சு செத்து போங்க.. //

சகா.. சாகா வாரிகள்.//

என்ன மொக்கை போட்டாலும் இருக்கிற‌ ஒரு சில நல்ல வரிகள தேடி பாராட்டறீங்க.. நன்றி தல..

*****************************
/ SK said...
:) :) :)//

என்ன இது????????

***********************

//sinthu said...
அண்ணா உப்புமா என்று சொல்லிட்டீங்க இந்த பங்களாதேசத்தில் அப்படி ஒன்று இருப்பதாக நான் அறியவில்லை. உங்கள் மொக்கையை வாசித்ததால் சாப்பிட்ட ஒரு உணர்வு............
சில சமயங்களில் சூழ்நிலைகள் மனிதனின் குணங்களை மாற்றிவிடும் இல்லையா கார்க்கி அண்ணா.//

வாம்மா.. நீ சொன்னா சரிதான் :))))

ஸ்ரீமதி on December 16, 2008 at 3:45 PM said...

அண்ணா உங்க கவிதை பதிவு எங்க????

Karthik on December 16, 2008 at 4:23 PM said...

ஆஹா, ஏழுமலைன்னு பெயரை பார்த்தாலே ஒரு இன்டெரெஸ்ட் வருது. ஏழுமலைக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
:)

Karthik on December 16, 2008 at 4:26 PM said...

படிக்காமலே போட்டது முதல் கமெண்ட். :)

ஏழுமலையே புலம்பலாமா?? :(

கார்க்கி on December 16, 2008 at 4:33 PM said...

/ஸ்ரீமதி said...
அண்ணா உங்க கவிதை பதிவு எங்க????//

கவிதைகள்" லேபிளில் க்ளிக் பண்ணி பாரு. இருக்கும்.. அது மீள்பதிவு என்பதால் பழையா தேதிக்கே மாத்திட்டேன்..

*************************

//Karthik said...
ஆஹா, ஏழுமலைன்னு பெயரை பார்த்தாலே ஒரு இன்டெரெஸ்ட் வருது. ஏழுமலைக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்//

:))))..

//ஏழுமலையே புலம்பலாமா?? :(//

எல்லாம் கலந்து இருக்கட்டும்னு போட்டேன்

அத்திரி on December 16, 2008 at 4:50 PM said...

50 போடலாமா

அத்திரி on December 16, 2008 at 4:50 PM said...

50 போடலாமா

அத்திரி on December 16, 2008 at 4:51 PM said...

//சரியாக 38 மணி நேரம் கழித்து எழுந்த ஏழுமலை மறக்காமல் கேட்டான் மச்சி ஃபுல் அடிச்சிருப்பேனா?//

இதெல்லாம் ரொம்ப ஓவர்

அத்திரி on December 16, 2008 at 4:53 PM said...

ஏழுமலைய பத்தி கொஞ்சம் ஓவரா சொல்றீங்க..

அவருகிட்ட உங்களை பத்தி கேட்டா தெரியும்

அத்திரி on December 16, 2008 at 4:54 PM said...

உங்க அனுபவத்தை ஏழுமலை பேர்ல சொல்றிங்களோன்னு ஒரு சந்தேகம்

அத்திரி on December 16, 2008 at 4:56 PM said...

கடைசில புட்டிக்கதையிலயும் மீள்பதிவை கொண்டு வந்துட்டீங்களே?

அத்திரி on December 16, 2008 at 4:57 PM said...

சகா சென்னைக்கு எப்ப வருவீங்க??

அத்திரி on December 16, 2008 at 4:57 PM said...

48

அத்திரி on December 16, 2008 at 4:57 PM said...

49

அத்திரி on December 16, 2008 at 4:58 PM said...

50

அத்திரி on December 16, 2008 at 4:58 PM said...

50 போட்டுட்டேன். மீண்டும் வருவேன்

அமிர்தவர்ஷினி அம்மா on December 16, 2008 at 5:48 PM said...

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.

ம், இப்ப எப்படியிருக்கார் ஏழுமலை.

அடுத்தவன் காதலிய கல்யாணம் பண்ணவன விட்டுடறாங்க..என்னை மட்டும் அடுத்தவன் மனைவிய இன்னுமா காதலிக்கறன்னு கேட்கறாங்க
ம், புதுசா இருக்கு தத்துவம்.

கும்க்கி on December 16, 2008 at 6:01 PM said...

அடிக்கடி ஏழுமலய மீட பண்ணிட்டே இருக்கேன்......
எல்லா ஊர்லயும் இருப்பாங்க போல..

Anonymous said...

//மச்சி, பியரும் உயிரும் ஒன்னுடா. இந்த பாட்டில்ல பியர் இருக்கிற வரைக்கும் இதுக்கு ரேட்டே வேற. அதுவே பியரை குடிச்சிட்டா, காலி பாட்டில். அதே மாதிரி உடம்புக்குள்ள உயிர் இருக்கிற வரைக்கும் தான் மவுசு. உயிர் போச்சுன்னா, அவ்ளோதான்.//

//இப்போ நான் குவார்ட்டர்(?)அடிச்சதுக்கே தலை சுத்துது. ஆனா இந்த பாட்டில்குள்ள‌ ஃபுல் சரக்கு ராவா இருந்தாலும் ஆடாம இருக்குப் பார்த்தியா!! அந்த மாதிரி அடக்கமா இருக்கனும்.//

என்னப்பா மிலிட்டேரி சரக்கா? தத்துவம்ஸ் ஜாஸ்தியா இருக்கு?

PoornimaSaran on December 16, 2008 at 10:36 PM said...

// அத்திரி said...
உங்க அனுபவத்தை ஏழுமலை பேர்ல சொல்றிங்களோன்னு ஒரு சந்தேகம்

//

எனக்கும்

PoornimaSaran on December 16, 2008 at 10:39 PM said...

//இப்போ என்ன செஞ்சிட்டு இருப்பா?.. என்ன பத்தி நினைப்பாளா?
//

கேட்டு சொல்லவா??

PoornimaSaran on December 16, 2008 at 10:41 PM said...

நீங்க ஏழுமலைய வச்சு காமெடி பண்ணறது ஏழுமலைக்கு தெரியுமா???

கார்க்கி on December 17, 2008 at 9:56 AM said...

@அத்திரி,

சகா கிறிஸ்துமஸ் வார இறுதியில் சென்னைதான்..

********************

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு//

நன்றிம்மா..

************************

//கும்க்கி said...
அடிக்கடி ஏழுமலய மீட பண்ணிட்டே இருக்கேன்......
எல்லா ஊர்லயும் இருப்பாங்க போல.//

உண்மைதான்.. கிருஷ்ணகிரியில் ஏழுமலை பேரு கருணாகரன்..

************************

//வடகரை வேலன் said...


என்னப்பா மிலிட்டேரி சரக்கா? தத்துவம்ஸ் ஜாஸ்தியா இருக்கு//

ஏழுமலைக்கு எல்லா சரக்கும் மிலிட்டரி சரக்குதான் தல..

*********************

//PoornimaSaran said...
நீங்க ஏழுமலைய வச்சு காமெடி பண்ணறது ஏழுமலைக்கு தெரியுமா???/

ஹிஹிஹி தெரியாது.. அவன் கிட்ட சொல்லாமலே ஒரு பதிவர் சந்திப்புக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பது என் ஆசை..

Chuttiarun on December 17, 2008 at 4:06 PM said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

 

all rights reserved to www.karkibava.com