Dec 15, 2008

காக்டெய்ல் (ஹிட்ஸ் ஸ்பெஷல்)


   ஹிட்ஸ் என்றதும் எனக்கு பதிவர் அறிவிழி என்பவர்தான் நினைவுக்கு வருகிறார். கடந்த செப்டம்பர் மாத‌ம் எழுத தொடங்கினார் இவர். அதற்குள் 95000 ஹிட்ஸ் என்று அவரது தளத்தில் உள்ள கவுன்டர் காட்டுகிறது. அவர் இந்த ரேஞ்சில் போனால் நாளையே லட்சத்தை தொட்டுவிடுவார் என்பதால் இப்போதே பாராட்டை சொல்லிவிடுகிறேன். :))

*************************************************

     சாருவின் ஹிட்ஸைப் பற்றி இங்கே சொல்லியிருந்தேன். அக்டோபர் 20ஆம் தேதி எழுதிய இந்தப் பதிவின்படி அவரது ஹிட்ஸ் 513595.அப்போது அவரது தளத்தில் ஒரு நாளைக்கு 10,000 பேர் படிக்கும் தளம் என சொல்லி யிருந்தார். Google analytics ஆதாரம் என்றும் சொல்லியிருந்தார். அப்படியென்றால் இரண்டு மாதத்தில் ஆறு லட்சம் ஹிட்ஸ் கூடி 11லட்சம் ஆகியிருக்க வேண்டும். இன்று அவரது ஹிட்ஸ் 7,10,000. ஒரு நாளைக்கு 10,000 பேர் படிக்கும் தளம் என்றிருந்ததை பல ஆயிரம் என மாற்றி விட்டார். முதலில் சொன்னது உண்மையென்றால் சாருவின் கிராஃப் தாறுமாறாக கீழேப் போய் கொண்டிருக்கிறது. முதலில் சொன்னது பொய் என்றால் நாம் சொல்ல வேண்டியது " சாரு கொடி பறக்குதடா".

*************************************************

    ஹிட்ஸை பற்றி பேசிவிட்டு லக்கியைப் பற்றி சொல்லாமல் விட முடியுமா? எந்த நேரமும் 10 லட்சத்தை தொட்டு விடக் கூடிய தூரத்தில் இருக்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி 10 லட்சத்தை தொடப் போகும் முதல் தமிழ் பதிவர் இவர்தான். இட்லிவடை தொட்டு இருந்தாலும் அது ஒரு பதிவரின் சாதனையாகாது. ஹேட்ஸ் ஆஃப் லக்கி. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்.

*************************************************

  நான் பார்த்தவரை பதிவர்கள் அதிகம் பயன்படுத்துவது Histats.com என்ற ஹிட் கவுன்டர்தான். இது ஏற்கனவே ஒரு முறை பிரச்சனை வந்து பாதி நாள் ஹிட்ஸை கணக்கெடுக்காமல் போனது. இந்த விஷயம் பலருக்கு தெரியாது. நேற்று மீண்டும் ஒரு பிரச்சினை. 75000 ஹிட்ஸை கடந்து விட்டோம் என நினைத்த எனக்கு ஒரு அதிர்ச்சி. 66,545 என்று காட்டியது. பரிசலின் வலைக்கு சென்று பார்த்தால் அங்கேயும் குறைவாக காட்டியது. கொஞ்ச நேரம் எதுவுமே காட்டாமல் போனது. பதிவர்கள் இரண்டு வெவ்வேறு Hit counters  வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை. அதிஷாவின் தளத்தில் இது போல் இரண்டு கவுண்டர்கள் உண்டு. ஒரே சமயத்தில் ஒன்றில் 10Users online என்று காட்டும். மற்றொன்று 19users என்று காட்டும். என்ன செய்யலாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

************************************************

    எல்லோரையும் போலவே எனக்கும் தமிழ்மண நட்சத்திரம் ஆக வேண்டும் என்று ஆசை உண்டு. ஆனால் உண்மையாகவே நட்சத்திர அந்தஸ்து நமக்கு அதிக வாசகர்களை தருகிறதா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சமீபகாலமாக நடச்த்திர பதிவர் எழுதி சூடான இடுகை என் கண்களில் படவே இல்லை. மேலும் சமீபத்தில் எழுத ஆரம்பித்த பலருக்கு நட்சத்திரம் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.பலரும் நல்ல முறையில் அதை பயன்படுத்தினாலும் ஒரு சிலர் நோக்கியாவின் புதிய செல்லிட பேசியைப் பற்றி மட்டுமே பதிவிட்டு அந்த வாரம் முழுவதும் ஓட்டி விட்டார்கள். நட்சத்திரங்கள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? தமிழ்மணம் கொடுத்திருக்கும் விளக்கம் தெளிவாக இல்லை. புதிதாய் பலரும் நல்ல விதத்தில் எழுதிக் கொன்டிருக்கும்போது ஏற்கனவே இருந்தவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்கப்படுவதைப் பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகிகளின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடக்கிறதா என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மூத்தப் பதிவர்கள் விளக்குவார்களா?

51 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on December 15, 2008 at 9:58 AM said...

Me the first

தாரணி பிரியா on December 15, 2008 at 10:01 AM said...

அறிவிழி, லக்கி இருவருக்கும் வாழ்த்துக்கள்

ஹிட்ஸ்கவுண்டர், தமிழ்மண நட்சத்திரம் எல்லாம் எனக்கு புதிதான விஷயம் என்பதால் மீ தி எஸ்கேப்பு

(எனக்கு இதை பத்தியெல்லாம் நிஜமாவே என்னன்னு தெரியாது கார்க்கி)

சங்கரராம் on December 15, 2008 at 10:06 AM said...

லட்சம்னு எல்லாம் பேசுறிங்க நான் இன்னும் கணக்கை ஆரம்பிக்கவே இல்லைங்க
வாங்க வந்து ஆரம்பிச்சு வைங்க
www.nilakkalam.blogspot.com

Sridhar Narayanan on December 15, 2008 at 10:19 AM said...

//என்ன செய்யலாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

சில பதிவுகளை ஒருமுறை refresh செய்தால் சென்னை ஆட்டோ மீட்டர் போல ‘பட பட’வென பறக்கும்.

பொதுவாக இந்த மாதிரியான இலவச சேவைகளில் அதிகம் கேள்வி கேட்க முடியாது. Google Analytics ஓரளவிற்கு நம்பகமானது. மற்றபடி ஒரு இணைய தளத்தின் பிரபலத்தை அளப்பது அதன் பயன்பாட்டின் மூலமே. அதாவது adsense போன்ற விளம்பர சேவைகள் மற்றும் ஏதாவது பயன்பாட்டு நிரலி தரவிறக்க வைத்திருந்தீர்கள் என்றால் அதனை எத்தனை பேர் தரவிறக்கி வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற ‘நேரடி’ தகவல்கள். விளம்பர சேவைகளே அதிக நம்பகமானவை.

நான் ஆதவன் on December 15, 2008 at 10:20 AM said...

கார்க்கி Histats.com ல login பண்ணீங்கன்னா அங்க உங்களோட உண்மையான் நிலவரம் மட்டுமில்ல எந்தெந்த நாட்லயிருந்து வந்திருந்தாங்கன்னும் தெரிஞ்சுகலாம். அதுல மட்டும் மாறாது. இன்னும் நிறைய விசயம் அதுல இருக்கு சகா போய் பாருங்க....

PoornimaSaran on December 15, 2008 at 10:21 AM said...

போயிடு வந்து படிக்கறேன் :)

லக்கிலுக் on December 15, 2008 at 10:31 AM said...

சாருவின் ஹிட்ஸ் பற்றி :

ஒரு கட்டத்தில் அவரது தளத்தை ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் வாசித்துக் கொண்டிருந்தது உண்மை தான். ‘இடைவேளை' என்றொரு பதிவினை அவரிட்ட பின்னர் பலர் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். இருப்பினும் தட்ஸ்தமிழுக்கும், தினமலருக்கும் அடுத்து அதிக ஹிட்ஸ் வாங்கும் தளம் அவருடையதாக இருக்கும்.


லக்கிலுக் ஹிட்ஸ் பற்றி :

எனக்கே ஆச்சரியமான விஷயம். தமிழ்மணம் நட்சத்திரமான பின்னர் தான் என் தளத்துக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைத்தார்கள். இப்போதெல்லாம் பதிவிட வில்லை என்றாலும் ஒருநாளைக்கு ஆயிரம் பேர் சும்மா வந்து பார்த்துவிட்டு போகிறார்கள். எங்கேயோ எனக்கு மச்சமிருக்கு என்பதை உணர்கிறேன்.

narsim on December 15, 2008 at 10:31 AM said...

ஹிட்ஸ் குறித்த உங்கள் ஹிட்.. அருமை சகா..

கார்க்கி on December 15, 2008 at 10:49 AM said...

நன்றி தாரணி..

*************************

/சங்கரராம் said...
லட்சம்னு எல்லாம் பேசுறிங்க நான் இன்னும் கணக்கை ஆரம்பிக்கவே இல்லைங்க
வாங்க வந்து ஆரம்பிச்சு வைங்//

கண்டிப்பா வர்றோம் சகா..

****************************

/ Sridhar Narayanan said...
//என்ன செய்யலாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

சில பதிவுகளை ஒருமுறை refresh செய்தால் சென்னை ஆட்டோ மீட்டர் போல ‘பட பட’வென பறக்கு//

மேலதிக தகவலுக்கு நன்றி சகா.. நிச்சயாம் உபயோகமனா தகவல்களே..

************************

//PoornimaSaran said...
போயிடு வந்து படிக்கறேன் //

ஓக்கே ஓக்கே

கார்க்கி on December 15, 2008 at 10:57 AM said...

/நான் ஆதவன் said...
கார்க்கி Histats.com ல login பண்ணீங்கன்னா அங்க உங்களோட உண்மையான் நிலவரம் மட்டுமில்ல எந்தெந்த நாட்லயிருந்து வந்திருந்தாங்கன்னும் தெரிஞ்சுகலா//

அதெல்லாம் விடுவோமா? பார்த்துட்டுதான் இருக்கேன் சகா..இருந்தாலும் வலையில் இருப்பதைதானே அனைவரும் பார்க்க முடியும்? அதில் இப்படி தகவல் வந்தால் எப்படி?

***********************************

/லக்கிலுக் said...
சாருவின் ஹிட்ஸ் பற்றி :

ஒரு கட்டத்தில் அவரது தளத்தை ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் வாசித்துக் கொண்டிருந்தது உண்மை தான். ‘இடைவேளை' என்றொரு பதிவினை அவரிட்ட பின்னர் பலர் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். இருப்பினும் தட்ஸ்தமிழுக்கும், தினமலருக்கும் அடுத்து அதிக ஹிட்ஸ் வாங்கும் தளம் அவருடையதாக இருக்கும்//

எப்பவாது ஒரு சுமாரான பதிவு போட்டாலே நம்ம மக்கள் தொடர்ந்து வந்து ஆதரவு தர்றாங்க.. அப்படியிருக்கும் போது ஒரே ஒரு பதிவாலே சாரு வாசக்ர்கள் இழக்கிறார் என்றால்..... என்னவோ போங்க.. ஆனா அவரின் கிராஃப் கீழே போய்க் கொண்டிருப்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டீர்கள்.. :)))

//லக்கிலுக் ஹிட்ஸ் பற்றி :

எனக்கே ஆச்சரியமான விஷயம். தமிழ்மணம் நட்சத்திரமான பின்னர் தான் என் தளத்துக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைத்தார்கள். இப்போதெல்லாம் பதிவிட வில்லை என்றாலும் ஒருநாளைக்கு ஆயிரம் பேர் சும்மா வந்து பார்த்துவிட்டு போகிறார்கள். எங்கேயோ எனக்கு மச்சமிருக்கு என்பதை உணர்கிறேன்//

சும்மா வரவில்ல.. என்னைப் போல பலர் நேர‌ம் கிடைக்கும்போது பழைய பதிவுகளை படிக்க வருகிறார்கள் என நினைக்கிரேன்.. எனிவே, வாழ்த்துகள் லக்கி

***************************

/narsim said...
ஹிட்ஸ் குறித்த உங்கள் ஹிட்.. அருமை சகா.//

நன்றி சகா..

அர டிக்கெட்டு ! on December 15, 2008 at 11:00 AM said...

மலிவான படைப்புகளுக்கு வரக்கூடிய ஹிட்ஸ் கொண்டாடப்பட வேண்டியவையா?
அறிவிழி மரண மொக்கை ( சில பரவாயில்லை)
சாரு போர்னோ
இவர்களுக்கு ஹிட்ஸ் வருகிறதென்றால்
அது வாசகர்கள் தரம் இன்னமும் ஆபத்தான ஆழத்தில் இருப்பதாக கருதுகிறேன்.

மதிபாலா on December 15, 2008 at 11:07 AM said...

மக்கள் அனைவரும் மிக அதிக ஹிட்ஸ் வாங்க வாழ்த்துக்கள். தமிழ் மண நட்சத்திரம் பற்றிய உங்கள் ஆதங்கம் சரியே , தவறேதுமில்லை.. அதைப் பற்றிய சரியான விளக்கங்கள் தமிழ்மணத்தில் இல்லை.

அதே சமயம் , நிறைய இலவச சேவை கவுண்ட்டர்களின் தகவலை உங்கள் சவுகரியத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ள முடியும். உதா , நான் உபயோகிக்கும் ஸ்டேட்கவுண்ட்டரில் அந்தத் தளம் எத்தனை வருகைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றே கேட்கிறது. நீங்கள் அம்பதாயிரம் வருகைகளிலிருந்து கூட ஆரம்பித்துக் கொள்ளலாம்.

அதனால் , கவுன் ட்டர்களை மட்டும் நம்புவதென்பது சுப்பிரமணியம் சுவாமியின் குற்றச்சாட்டுக்களை ஆராயாமல் நம்புவதைப் போலவே ஆகும்.

மதிபாலா on December 15, 2008 at 11:11 AM said...

சொல்ல மறந்த ஒரு விடயம் ,

நீங்கள் எப்படி உங்கள் வருகைப் பதிவேட்டை நிர்யணிக்க விரும்புகிறீர்கள் என்பதும் முக்கியம் , பேஜ் க்ளிக்ஸ் ஆப்சனை செலக்ட் செய்தால் உங்கள் பதிவுகளில் செய்யப்படும் ஒவ்வொரு மவுஸ் க்ளிக்கும் ஒவ்வொரு வருகையாக காட்சியளிக்கும். அது உண்மையான வருகைப் பதிவேடல்ல.

யுனிக் விஸிட்டர்ஸை நிராகரித்தல் மட்டுமே உண்மையான வருகைப்பதிவேடாக இருக்க முடியும்

நியோ கவுன் ட்ட ர் ஓரளவுக்கு நம்பகமானது.....

rapp on December 15, 2008 at 11:14 AM said...

சூப்பர். ஆமாம் தமிழ்மண நட்சத்திரங்களின் இடுகைகளை நானே திறந்து பாக்கறதில்லை. வாசகர் பரிந்துரை, மறுமொழிகள், சூடான இடுகைகள்தான் இப்போல்லாம் நான் ஜாஸ்தி பாக்குறேன்.

அகநாழிகை on December 15, 2008 at 11:23 AM said...

கார்கி, உங்க பதிவு மிகவும் அருமை. பதிவிற்காக நிறைய உழைதிருக்கீங்க.. விரைவில் ஹிட்ஸ் அதிகம் பெற நாள் வாழ்த்துக்கள்... ! (நான்லாம் என்னத்த எழுதி... எப்போ... நடக்கிறது இதெல்லாம்)

கார்க்கி on December 15, 2008 at 11:47 AM said...

//அர டிக்கெட்டு ! said...
மலிவான படைப்புகளுக்கு வரக்கூடிய ஹிட்ஸ் கொண்டாடப்பட வேண்டியவையா?
அறிவிழி மரண மொக்கை ( சில பரவாயில்லை//

நண்பரே அந்த விமர்சண்த்துக்கு நான் வரவில்லை.. நான் சொல்ல வந்தது, அவர் அடிக்கடி ஹிட்கவுண்டடரை மாற்றியிருக்கிறார்.. உண்மையிலே அது 95000 ஆக வாய்ப்பே இல்லை..

*************************************

//அதே சமயம் , நிறைய இலவச சேவை கவுண்ட்டர்களின் தகவலை உங்கள் சவுகரியத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ள முடியும். உதா , நான் உபயோகிக்கும் ஸ்டேட்கவுண்ட்டரில் அந்தத் தளம் எத்தனை வருகைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றே கேட்கிறது//

சிலர் ஏற்கனவே 50000 ஹிட்ஸ் வாங்கியிருப்பார்கள். ஆனால் நல்ல சேவை கிடைக்கிரது என்பதற்காக புதிதாக வேறு ஹிட்கவுன்டர் மாறும்போது அந்த வசதி அவசியமாகிறது. ஆனால் தொடங்கிய பின் மாற்ற இயலாது..

//
யுனிக் விஸிட்டர்ஸை நிராகரித்தல் மட்டுமே உண்மையான வருகைப்பதிவேடாக இருக்க முடியும்//

எல்லா கவுன்டர்களும் இந்த வச்தியை தருகிறது.page visits,unique visitors என்று தனித்தனியாக reports உண்டு. உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி மதிபாலா

கார்க்கி on December 15, 2008 at 11:50 AM said...

//rapp said...
சூப்பர். ஆமாம் தமிழ்மண நட்சத்திரங்களின் இடுகைகளை நானே திறந்து பாக்கறதில்லை. வாசகர் பரிந்துரை, மறுமொழிகள், சூடான இடுகைகள்தா//

மூத்தப் பதிவ்ர்களை சொல்வதைப் பார்த்தால் முன்பெல்லாம் நட்சத்திர அந்தஸ்து பெரிய விஷயாம்க இருந்திருக்கிறது. லக்கியின் பின்னூட்டம் பாருங்கள். இப்போது ஏனோ சரியாக இல்லை..

பிறந்த நாள் எப்படி போனது ராப்?

*****************************
/அகநாழிகை said...
கார்கி, உங்க பதிவு மிகவும் அருமை. பதிவிற்காக நிறைய உழைதிருக்கீங்க.. விரைவில் ஹிட்ஸ் அதிகம் பெற நாள் வாழ்த்துக்கள்... ! (நான்லாம் என்னத்த எழுதி... எப்போ... நடக்கிறது இதெல்லாம்//

நன்றி சகா.. எனகும் அந்த ஆசை உண்டு.. ஆனால் இப்போதெல்லாம் ஹிட்ஸை விட புதிய நண்ப்ர்களும், தினமும் வரும் வாச்கர்களை சேர்ப்பதிலேதான் ஆரவாமாயிருக்கிரேன்..

கோவி.கண்ணன் on December 15, 2008 at 12:00 PM said...

//தமிழ்மணம் கொடுத்திருக்கும் விளக்கம் தெளிவாக இல்லை. புதிதாய் பலரும் நல்ல விதத்தில் எழுதிக் கொன்டிருக்கும்போது ஏற்கனவே இருந்தவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்கப்படுவதைப் பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகிகளின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடக்கிறதா என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.//

குழப்பமாகத்தான் இருக்கிறது, எனக்கு முன்பே பதிவெழுதவந்த வீஎஸ்கே வுக்கு இன்னும் நட்சத்திர அழைப்பு சென்று சேரவில்லை. பலர் மீண்டும் மீண்டும் நட்சத்திரம் ஆகி இருக்கிறார்கள். எல்லாம் தமிழ்மணத்துக்குத்தான் வெளிச்சம்

rapp on December 15, 2008 at 12:23 PM said...

பிறந்தநாள் சூப்பரா போச்சு. மசால் தோசை, கீ ரோஸ்ட், இந்த வாரம் முழுசுக்குமான பெப்பர் சிக்கன் பார்சல் என செவ்வனே சென்றது:):):)

கார்க்கி on December 15, 2008 at 12:25 PM said...

/rapp said...
பிறந்தநாள் சூப்பரா போச்சு. மசால் தோசை, கீ ரோஸ்ட், இந்த வாரம் முழுசுக்குமான பெப்பர் சிக்கன் பார்சல் என செவ்வனே சென்றது:):)://

சரி சரி இதே உற்சாகத்துடன் மன்றத்தலைவியா சீக்கிரம் தல பதிவுல ஒரு போஸ்ட் போடுங்க..


/குழப்பமாகத்தான் இருக்கிறது, எனக்கு முன்பே பதிவெழுதவந்த வீஎஸ்கே வுக்கு இன்னும் நட்சத்திர அழைப்பு சென்று சேரவில்லை. பலர் மீண்டும் மீண்டும் நட்சத்திரம் ஆகி இருக்கிறார்கள். எல்லாம் தமிழ்மணத்துக்குத்தான் வெளிச்ச//

ஆமாம் கோவியாரே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

பரிசல்காரன் on December 15, 2008 at 12:35 PM said...

அடே சகா!

கலக்கற! பதிவைப் போட்ட 40வது நிமிஷத்துல 20 பின்னூட்டம்!

அநேகமா, லக்கிக்கு அடுத்து பத்து லட்சத்தை தொடப்போற பதிவர் நீயாத்தான் இருக்கணும்.

எழுத்துல உன் எதிர்காலம் செம ப்ரைட்டா இருக்குப்பா! வாழ்த்துக்கள்!!!

கார்க்கி on December 15, 2008 at 12:49 PM said...

/பரிசல்காரன் said...
அடே சகா!

கலக்கற! பதிவைப் போட்ட 40வது நிமிஷத்துல 20 பின்னூட்டம்!//

சூடும் ஆயிடுச்சு சகா..:)))


//எழுத்துல உன் எதிர்காலம் செம ப்ரைட்டா இருக்குப்பா! வாழ்த்துக்கள்!//

இருட்டுல‌ 0 வாட்ஸ் பல்பு கூட பிரகாசமாத்தான் தெரியும்.. உங்கள மாதிரி பல சோடியம் வேப்பர்கள் இன்னைக்கு இன்னும் கடை தொறக்கல.. அதான்..

அப்புறம், மறுபடியும் நன்றினு சொல்லத் தோனுது சகா.. :(((

SK on December 15, 2008 at 2:32 PM said...

நல்லதொரு ஆராய்ச்சி :-)

தமிழ்மணத்தை கசக்கி பிழியரதுன்னு ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல :-)

ஸ்ரீமதி on December 15, 2008 at 2:45 PM said...

அருமை அண்ணா :))

இளைய பல்லவன் on December 15, 2008 at 3:04 PM said...

//
சமீபகாலமாக நடச்த்திர பதிவர் எழுதி சூடான இடுகை என் கண்களில் படவே இல்லை. மேலும் சமீபத்தில் எழுத ஆரம்பித்த பலருக்கு நட்சத்திரம் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.பலரும் நல்ல முறையில் அதை பயன்படுத்தினாலும் ஒரு சிலர் நோக்கியாவின் புதிய செல்லிட பேசியைப் பற்றி மட்டுமே பதிவிட்டு அந்த வாரம் முழுவதும் ஓட்டி விட்டார்கள்.
//

தல.. இதுல நம்மளப்பத்தி ஏதாவது உள்குத்து இருக்கா?

//
ராப் said...
சூப்பர். ஆமாம் தமிழ்மண நட்சத்திரங்களின் இடுகைகளை நானே திறந்து பாக்கறதில்லை. வாசகர் பரிந்துரை, மறுமொழிகள், சூடான இடுகைகள்தான் இப்போல்லாம் நான் ஜாஸ்தி பாக்குறேன்.
//

நீங்கள்லாம் இப்படி சொல்லிட்டா நாங்கல்லாம் எங்க போறது. நீங்கல்லாம் வந்தாதானே எங்க பதிவு சூடாகும். இல்லைன்னா மறுமொழில வரும். என்னமோ போங்க:((

அதிஷா on December 15, 2008 at 3:54 PM said...

கார்க்கி .. histatsல் ஏதோ மராமத்துப்பணிகள் நடக்கிறது போல.. என் வலைப்பூவிலும் கூட அது இயங்கவில்லை..

அறிவிழியின் எல்லா பதிவுகளும் தமிழிஷில் அதிக நேரம் முதல்பக்கத்தில் இருந்து வருவதை கவனித்தீரா.?

தமிழ்மணம் நட்சத்திரம் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறதுனு டக்வொர்த் லூயிஸ்க்குத்தான் வெளிச்சம்.. இப்பல்லாம் யாரு தமிழ்மணநட்சத்திரப்பதிவுலாம் படிக்கிறா முதல்ல...

மதிபாலா on December 15, 2008 at 4:08 PM said...

சிலர் ஏற்கனவே 50000 ஹிட்ஸ் வாங்கியிருப்பார்கள். ஆனால் நல்ல சேவை கிடைக்கிரது என்பதற்காக புதிதாக வேறு ஹிட்கவுன்டர் மாறும்போது அந்த வசதி அவசியமாகிறது. ஆனால் தொடங்கிய பின் மாற்ற இயலாது..
//

உண்மைதான் நண்பரே.. எல்லா நல்ல விடயங்களிலும் ஒரீரு ஓட்டைகள் இருக்கத் தான் செய்கிறது. அதை எப்படி உபயோகிப்பது என்பது பதிவர்களை பொறுத்துத்தான் இருக்கிறது.

OSAI Chella on December 15, 2008 at 4:40 PM said...

mika mika suvaarasiyamaana thakavalkal! Charu lucky!! ha ha! My vote to Lucky!

anbudan
Osai Chella

கார்க்கி on December 15, 2008 at 5:28 PM said...

/SK said...
நல்லதொரு ஆராய்ச்சி :-)

தமிழ்மணத்தை கசக்கி பிழியரதுன்னு ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல//

அப்படியெல்லாம் இல்லப்பா.. நீ வேற..

*************************

//ஸ்ரீமதி said...
அருமை அண்ணா :)//

நான் தான்.. சொல்லு என்ன விஷயம்?

********************

/இளைய பல்லவன் said...

தல.. இதுல நம்மளப்பத்தி ஏதாவது உள்குத்து இருக்கா//

அய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க..

**************************

//அதிஷா said...
கார்க்கி .. histatsல் ஏதோ மராமத்துப்பணிகள் நடக்கிறது போல.. என் வலைப்பூவிலும் கூட அது இயங்கவில்லை.//

ஆமாம் சகா.. இருந்தாலும் இன்னொன்ன்றில் பதிவு செய்து கொள்வதும் நல்லதே..

/
அறிவிழியின் எல்லா பதிவுகளும் தமிழிஷில் அதிக நேரம் முதல்பக்கத்தில் இருந்து வருவதை கவனித்தீரா//

இல்லை.அப்படியா?

கார்க்கி on December 15, 2008 at 5:30 PM said...

/உண்மைதான் நண்பரே.. எல்லா நல்ல விடயங்களிலும் ஒரீரு ஓட்டைகள் இருக்கத் தான் செய்கிறது. அதை எப்படி உபயோகிப்பது என்பது பதிவர்களை பொறுத்துத்தான் இருக்கிற//

ஆமாம் மதிபாலா அண்னே.. உண்மைதான்.

***********************

//OSAI Chella said...
mika mika suvaarasiyamaana thakavalkal! Charu lucky!! ha ha! My vote to Lஉச்க்ய்//

உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

*********************

சுனா on December 15, 2008 at 6:17 PM said...

கார்க்கி , என் கணிப்பு சரி என்றால் நீ திண்டிவனம் கார்க்கியாகத்தான் இருக்க வேண்டும்...
நீ St.Ann's -ல் தானே படித்தாய்?
நான் உன்னுடன் படித்த, அதிக பிரபலமில்லாத ஒரு திண்டிவனத்துக்காரன் !

சுனா

LOSHAN on December 15, 2008 at 6:21 PM said...

நல்லா இருக்கு.. வாசிச்சிட்டேன்.. பின்னூட்டம் கொஞ்சம் விளக்கமாகவே போடணும்.. ;)

கார்க்கி on December 15, 2008 at 6:57 PM said...

/சுனா said...
கார்க்கி , என் கணிப்பு சரி என்றால் நீ திண்டிவனம் கார்க்கியாகத்தான் இருக்க வேண்டும்...
நீ St.Ann's -ல் தானே படித்தாய்?
நான் உன்னுடன் படித்த, அதிக பிரபலமில்லாத ஒரு திண்டிவனத்துக்காரன் !//

அதே கார்க்கிதான்.. நீங்க????

***********************************

//LOSHAN said...
நல்லா இருக்கு.. வாசிச்சிட்டேன்.. பின்னூட்டம் கொஞ்சம் விளக்கமாகவே போடணு//

வாங்க சகா.. நலமா?

அன்புடன் அருணா on December 15, 2008 at 6:57 PM said...

நானெல்லாம் ஒண்ணு ரெண்டுன்னு வருகையைக் கணக்கெடுத்துக்கிட்டு இருப்பேன்...ம்ம்ம் நேற்று 5905 இருந்தது சரி ரெண்டு நாளில் 6000 கடந்துடும்னு கணக்குப் போட்டால்இன்று திடீரென்று 5395 காட்டுகிறது..ம்ம்ம் என்னவோ போங்க.
அன்புடன் அருணா

கும்க்கி on December 15, 2008 at 7:43 PM said...

இந்த ஆட்டத்துக்கு நா வரலைங்க சாமியோவ்.

வால்பையன் on December 15, 2008 at 8:27 PM said...

வாழ்த்துக்கள்
அறிவிழிக்கும், லக்கிக்கும்

வால்பையன் on December 15, 2008 at 8:30 PM said...

ஜுலை 2008-ல் ஆரம்பித்து அதற்க்குள் ஒரு பெரிய இடத்தை பிடித்து விட்டீர்கள்

அதனால் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

ச்சின்னப் பையன் on December 15, 2008 at 8:45 PM said...

நட்சத்திரமாவது எப்படி? - இன்னும் இதுக்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லையே???

புருனோ Bruno on December 15, 2008 at 8:45 PM said...

//நீங்க கமெண்ட் போட்டா மட்டும் போதும்...போட்டா மட்டும் போதும்.//

போட்டாச்சு.

SUREஷ் on December 15, 2008 at 9:29 PM said...

என்னமோ போங்க..............


ஒன்னும் புரியல........

நாம படிக்க பல மேட்டர் கிடைக்குது. நம்ம எழுதறதையும் படிக்க அதுவும் ஆர்வமா படிக்க ஆள் இருக்கு.

ஜாலியா காலம் தள்ள வேண்டியதுதான்

தாமிரா on December 15, 2008 at 9:35 PM said...

அருமையான செய்திகள், ஆழ்ந்த கருத்துகள்.!

ILA on December 15, 2008 at 9:59 PM said...

:)
(இப்படி Smiley போட்டா மூத்தப் பதிவர்ன்னு அர்த்தம்)

(சமாளிச்சுட்டோம்ல)

அது சரி on December 16, 2008 at 2:59 AM said...

//
நான் பார்த்தவரை பதிவர்கள் அதிகம் பயன்படுத்துவது Histats.com என்ற ஹிட் கவுன்டர்தான். இது ஏற்கனவே ஒரு முறை பிரச்சனை வந்து பாதி நாள் ஹிட்ஸை கணக்கெடுக்காமல் போனது. இந்த விஷயம் பலருக்கு தெரியாது. நேற்று மீண்டும் ஒரு பிரச்சினை.
//

எனக்கும் நேற்று இந்த பிரச்சினை..HiStats.com வெப்சைட்டில் இதன் விளக்கம் இருந்தது..

அதாவது அவங்க ஏதோ DNS database அப்டேட் செய்றாங்களாம்..அவங்களுக்கு மட்டுமில்ல, எல்லா கவுன்டர்சும் பிரச்சினைன்னு சொல்லியிருந்தாங்க...

செந்தழல் ரவி on December 16, 2008 at 3:58 AM said...

சாரு தம் போடப்போகும்போது, அவர் பதிவை ஓப்பன் செய்து, F5 கீ மேல் கல்லை வைத்துவிட்டு போகிறாராம்.

அதிரை ஜமால் on December 16, 2008 at 8:17 AM said...

நட்சத்திரம் மட்டும் தான் தெரியும்

அது தமிழ் மணத்தோடு இருக்கிறதா

மிக்க சந்தோஷம்.

எப்படி நுகர்வது

(எப்படி உபயோகிப்பது)

அத்திரி on December 16, 2008 at 9:00 AM said...

//பதிவிட வில்லை என்றாலும் ஒருநாளைக்கு ஆயிரம் பேர் சும்மா வந்து பார்த்துவிட்டு போகிறார்கள். எங்கேயோ எனக்கு மச்சமிருக்கு என்பதை உணர்கிறேன்.//

லக்கி என்ற பேர்ல தான் மச்சம் இருக்கும்னு நினைக்கிறேன்

அத்திரி on December 16, 2008 at 9:01 AM said...

உண்மையிலே அறிவிழி ஹிட்டான் ஆள் தான்

கார்க்கி on December 16, 2008 at 9:34 AM said...

//அன்புடன் அருணா said...
நானெல்லாம் ஒண்ணு ரெண்டுன்னு வருகையைக் கணக்கெடுத்துக்கிட்டு இருப்பேன்...ம்ம்ம் நேற்று 5905 இருந்தது சரி ரெண்டு நாளில் 6000 கடந்துடும்னு கணக்குப் போட்டால்இன்று திடீரென்று 5395 காட்டுகிறது..ம்ம்ம் என்னவோ போங்//

இப்போ சரியாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.. பாருங்க அருணா..

****************************

/கும்க்கி said...
இந்த ஆட்டத்துக்கு நா வரலைங்க சாமியோ//

எந்த ஆட்டத்துக்கு தல?

**************************

/வால்பையன் said...
ஜுலை 2008-ல் ஆரம்பித்து அதற்க்குள் ஒரு பெரிய இடத்தை பிடித்து விட்டீர்க//

நன்றி வால்..

*********************

/ச்சின்னப் பையன் said...
நட்சத்திரமாவது எப்படி? - இன்னும் இதுக்கு யாரும் சரியான பதி//

யாருக்கும் தெரியாதுன்னு எடுத்துக்க வேண்டியதுதான் சகா..

கார்க்கி on December 16, 2008 at 9:36 AM said...

/SUREஷ் said...
என்னமோ போங்க..............


ஒன்னும் புரியல..//

உண்மைதான்.. வருகைக்கு நன்று SUREஷ்

*******************************

//தாமிரா said...
அருமையான செய்திகள், ஆழ்ந்த கருத்துகள்.//

ஹிஹிஹிஹி..

********************************

/ ILA said...
:)
(இப்படி Smiley போட்டா மூத்தப் பதிவர்ன்னு அர்த்த//

நீங்க டிராக்டர் ஓட்டுற் அழகுலே தெரியுதுங்க நீங்க மூத்த்த பதிவர்னு

***********************


// அத்திரி said...
உண்மையிலே அறிவிழி ஹிட்டான் ஆள் தா//

அதுக்குதான் வாழ்த்துகள் சகா..

கார்க்கி on December 16, 2008 at 9:38 AM said...

/அது சரி said...

எனக்கும் நேற்று இந்த பிரச்சினை..HiStats.com வெப்சைட்டில் இதன் விளக்கம் இருந்த//

இப்போ சரியாயுடுச்சு..பாருங்க சகா..

************************
//செந்தழல் ரவி said...
சாரு தம் போடப்போகும்போது, அவர் பதிவை ஓப்பன் செய்து, F5 கீ மேல் கல்லை வைத்துவிட்டு போகிறாரா//

ஹிஹிஹி.. அவருக்கு F5 கீ எதுன்னு தங்கவேல் சொல்லியிருப்பாரோ?

*************************

/அதிரை ஜமால் said...
நட்சத்திரம் மட்டும் தான் தெரியும்

அது தமிழ் மணத்தோடு இருக்கிறதா
//

நட்சத்திரம் எப்பவும் மேல தான் இருக்கும் சகா.. பாருங்க..

Karthik on December 16, 2008 at 1:53 PM said...

ஹிட்ஸில் கலக்குபவர்களுக்கும், நாளைய தமிழ்மண நட்சத்திரம் கார்க்கிக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
:)

(omg!)

 

all rights reserved to www.karkibava.com