Dec 14, 2008

இதெல்லாம் ஒரு பொழப்பா?


    பரிசல் அவியலில் பாடல்கள் காப்பி அடிப்பதைப் பற்றி நாங்கள் பேசியதை குறிப்பிட்டிருந்தார்.எனக்கு இதில் பெரிய ஆர்வம். சிலப் பாடல்களை ராஜா தெரியாமலே இருமுறை போட்டதும் உண்டு. வேறு மொழியிலிருந்து அடிப்பதை விடுங்கள். தமிழிலே இது போன்று பலப் பாடல்கள் திருடப்பட்டுள்ளன.

1) தூங்காதே தம்பி தூங்காதேவில் வரும் "என்ன வேணும் தின்னுங்கடா டோய்" மெட்டும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் "வாழ வைக்கும் காதலுக்கு ஜே" மெட்டும் பல்லவியில் ஒன்றே.

2) அர்ஜுனர் வில்லு பாடலில் வரும் "தனியொரு மனிதனின் படை/ அதில் எழுவது விடுதலை விடை" என்ற வரியைக் கேட்கும் போது என் உதடுகள் முனுமுனுப்பது "அழகிய தமிழ் மகள் இவள்"

3) என்ன விலை அழகே என்ற அற்புதமான பாட்டின் மூலம் "தங்கப் பதக்கத்தின் மேலே..". ஆனால் இதைக் காப்பி என சொல்ல முடியாது.

4) தேவாவை எனக்கு ரொம்ப புடிக்கும். யார் யாரோ Fusion செய்கிறார்கள். தேவா செய்ததற்கு ஈடாக எவரும் செய்ததில்லை. குஷி படத்தில் வரும் மாக்கோரீனா பாடலின் பல்லவி ஒரு ஆங்கில ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி. ஆனால் சரணம் எங்கே இருந்து எடுத்தார் தெரியுமா? எம்.ஜி.ஆரின் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..

மாக்கோரீனா சரணம்:

தாகம் வந்து உதடு வறண்டால் அந்த மேகத்தின் நீர் குடிப்போம்..
விண்வெளியில் பசிதான் எடுத்தால் விண்மீன்களை கொத்தி தின்னுவோம்..

  இதை பாடுங்கள்.

  மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்..   ஒரு மாசு மருவற்ற தலைவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்

5) சமீபத்தில் வந்த ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் ஒரு பாட்டு "இன்னுமொரு வானம் இன்னுமொரு பூமி வேண்டுமடி உன்னைக் காதலிக்க". நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு மொக்கைப் பாட்டு. இதன் மூலம். "செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே" என்ற பாடல். என்ன படம் எனத் தெரியவில்லை. ஹரிஹரன் பாடிய தேவாவின் பாடல்.

6) தாமிரபரணி என்ற படத்தில் ஒரு பாட்டு. இது சொல்லி விட்டே செய்தார்களா இல்லையா என்பது தெரியாது. "கருப்பாக இருக்காளே" என்ற பாடல், பக்தி பாடலான "கற்பூர நாயகியே கனகவல்லி" என்ற மெட்டில அட்சரம் பிச‌காமல் இருக்கும்.

7) தமிழகத்தையே கலக்கிய வாள மீனுக்கும் பாட்டு கூட ஒரு பழைய பாடலின் அப்பட்டமான காப்பி. குட்டி பதிமினி சின்ன பெண்ணாக பாடிய ஒரு கருப்பு வெள்ளை பாடலின் காப்பி. வரிகள் நினைவலில்லை.

8) ஹாரிஸ் ஜெயராஜின் கிட்டதட்ட அனைத்துப் பாடல்களும் எங்கேயோ கேட்டதுண்டு என்றே நினைக்க வைக்கும். அஞ்சல பாடலில் வரும் "ஒன்னுக்குள்ள ஒன்னா என் நெஞ்சுக்குள்ள நின்னா. கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா" என்ற வரி பழைய பாடலில் இருந்து சுட்டதுதான். கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடுவேன்.

9) இந்த‌ ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் தெரிய‌வில்லை. "பொன்மான‌ தேடி நானும் பூவோடு வந்தேன்". இப்போது இதைப் பாடுங்க‌ள். "பாட்டுக்கு பாட்டெடுத்து நானும் பாடுவ‌தை கேட்டாயோ"

10) டீ.ஆரின் என் ஆசை மைதிலியேவும் சொன்னால்தான் காதலா சொல்லேன்டா வடிவேலாவும் ஒரே மெட்டு. இது ரீமிக்ஸ் இல்லை.

டிஸ்கி: தலைப்பு எனக்கு நானே சொல்லிக் கொன்டது. வேறு வேலையில்லாமல் இந்த ஆராய்ச்சி தேவைதானா?

50 கருத்துக்குத்து:

அத்திரி on December 14, 2008 at 9:17 AM said...

)))))))))

விஜய் ஆனந்த் on December 14, 2008 at 9:17 AM said...

:-)))...

நல்ல ஆராய்ச்சி...நல்ல பொழப்பு!!!

அத்திரி on December 14, 2008 at 9:18 AM said...

அய்யோ நாந்தான் மொதல்ல.
படிச்சிட்டு திரும்ப வர்றேன்.

தமிழ் பிரியன் on December 14, 2008 at 9:36 AM said...

தசாவாதாரம் கல்லை மட்டும் கண்டால் கூடத்தான் ஒரு மலையாளப் பாடலின் அப்பட்டமான காப்பி... என்ன செய்ய..;)

தமிழ்நெஞ்சம் on December 14, 2008 at 9:36 AM said...

சும்மா அதிருதுல்ல..

என்ன ஒரு உக்காந்து யோசித்த செயல். அருமை

SUREஷ் on December 14, 2008 at 9:37 AM said...

.// தேவா செய்ததற்கு ஈடாக எவரும் செய்ததில்லை//


ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ஒசையும் ஒரு இடத்திலிருந்து உருவி அழகாகச் செய்வார்.

SUREஷ் on December 14, 2008 at 9:39 AM said...

ஏழு ஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் என்று ஒரே வரியில் சொல்லி விடுவார்கள்.

SUREஷ் on December 14, 2008 at 9:40 AM said...

தமிழ் இரண்டாம்தாளில் வரும் ஆராய்ச்சி கட்டுரை என்பார்களே அதுதான் ஐயா இது.

தமிழ்நெஞ்சம் on December 14, 2008 at 9:42 AM said...

ஆகா! எங்கேயோ போகிட்டிங்க தலைவா

என்றும் அன்புடன்
வாழ்க வளமுடன்

தமிழ்நெஞ்சம்

//
தமிழ் இரண்டாம்தாளில் வரும் ஆராய்ச்சி கட்டுரை என்பார்களே அதுதான் ஐயா இது.

நான் ஆதவன் on December 14, 2008 at 9:45 AM said...

தமிழ் திரைப்பட பாடல் ஆராய்ச்சி கழ(ல)க தலைவர் டாக்டர் "கார்க்கி" வாழ்க....

அத்திரி on December 14, 2008 at 9:45 AM said...

//"பொன்மான‌ தேடி நானும் பூவோடு வந்தேன்". இப்போது இதைப் பாடுங்க‌ள். "பாட்டுக்கு பாட்டெடுத்து நானும் பாடுவ‌தை கேட்டாயோ" //


முதப்பாட்டு எங்க ஊரு ராசாத்தி

ரென்டாவது பாட்டு படகோட்டி

நல்ல ஆராய்ச்சி நம்ம கடை பக்கம் வரமாட்டுக்கீங்களே ஏன்?

Shakthiprabha on December 14, 2008 at 10:28 AM said...

They say the swaras are just 7. With variations of swaras( like anthara etc) we get lil more. Even then permutations combinations of these 7 gives rise to finite raagas (though innumerous in number)

அப்படி இருக்கும் போது, அவங்களும் பாவம் என்னங்க பண்ணுவாங்க?!?!

அன்புடன் அருணா on December 14, 2008 at 10:35 AM said...

ஆராய்ச்சி கட்டுரையில் M.Phil or Ph.D யா? நல்ல ஆராய்ச்சி.
அன்புடன் அருணா

அத்திரி on December 14, 2008 at 11:23 AM said...

அதிசயமா இருக்குப்பா யாருமே இன்னைக்கு கும்மி அடிக்கல

பிரேம்குமார் on December 14, 2008 at 11:36 AM said...

இசையுலகில இதெல்லாம் சாதாரணமப்பா ;)

கார்க்கி on December 14, 2008 at 11:51 AM said...

/அத்திரி said...
அதிசயமா இருக்குப்பா யாருமே இன்னைக்கு கும்மி அடிக்க//

ஞாயித்து கிழமை. பிஸியா இருப்பாங்க சகா..

***************************

/விஜய் ஆனந்த் said...
:-)))...

நல்ல ஆராய்ச்சி...நல்ல பொழப்பு!!//

நல்ல‌ கருத்து..

************************

/தமிழ் பிரியன் said...
தசாவாதாரம் கல்லை மட்டும் கண்டால் கூடத்தான் ஒரு மலையாளப் பாடலின் அப்பட்டமான காப்பி.//

ஆமாம். ஆனால் இந்தப் பதிவு தமிழ் பாட்டையே காப்பி அடித்ததைப் பற்றி..

************************

// தமிழ்நெஞ்சம் said...
சும்மா அதிருதுல்ல//

ஹிஹிஹிஹி

கார்க்கி on December 14, 2008 at 11:53 AM said...

//ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ஒசையும் ஒரு இடத்திலிருந்து உருவி அழகாகச் செய்வார்//

ஆமாங்க.. காய்கறி கடைல வாங்கினாலும் சமைப்பது அவர் வேலைதானே.. நல்ல செய்வாரு

***********************

/நான் ஆதவன் said...
தமிழ் திரைப்பட பாடல் ஆராய்ச்சி கழ(ல)க தலைவர் டாக்டர் "கார்க்கி" வாழ்க//

சரி சரி.. விடுங்க.. இதுக்கு போய் அசிங்கமா திட்டறீங்க..

******************

/
அப்படி இருக்கும் போது, அவங்களும் பாவம் என்னங்க பண்ணுவாங்க?!//

சாயல் இருக்கலாம்.. ஆனா மெட்டையே லவட்டறது? வருகைக்கு நன்றி

கார்க்கி on December 14, 2008 at 11:55 AM said...

//அன்புடன் அருணா said...
ஆராய்ச்சி கட்டுரையில் M.Phil or Ph.D யா? நல்ல ஆராய்ச்சி.
அன்புடன் அரு//

நன்றிங்க..

**********************

/பிரேம்குமார் said...
இசையுலகில இதெல்லாம் சாதாரணமப்பா ;//

அப்படி ஆக்கிட்டாங்க சகா

sinthu on December 14, 2008 at 12:00 PM said...

அண்ணா உங்களால் மட்டும் எப்படி இப்படி மொக்கை போடா முடிகிறது..
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

thushanthini on December 14, 2008 at 12:16 PM said...

"அண்ணா உங்களால் மட்டும் எப்படி இப்படி மொக்கை போடா முடிகிறது..
எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்"
இது மொக்கை இல்லப்பா எவ்வள்ளவு பெரிய ஆராச்சி உண்மை தன் anna சில நேரங்களில் எங்களாலும் உணரமுடியும்

தாமிரா on December 14, 2008 at 1:03 PM said...

ரொம்ப முக்கியம்.!

சரவணகுமரன் on December 14, 2008 at 2:07 PM said...

நல்ல ஆராய்ச்சி. இதுக்கு ரொம்ப நல்ல ஞாபக சக்தி தேவை. உங்களுக்கு இருக்கு.

தராசு on December 14, 2008 at 2:22 PM said...

பாட்டு எழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், !!!!!!!?????????///////////////@@@@@@@@@@@@@#############$$$$$$$$$$$$%%%%%%%%%%%^^^^^^^^^&&&&&&&&&&&&&&&&***********<<<<<>>>>>>>>((((((!!!!!!!!!!!

தராசு on December 14, 2008 at 2:35 PM said...

24

தராசு on December 14, 2008 at 2:35 PM said...

25

வித்யா on December 14, 2008 at 2:53 PM said...

நல்ல ஆராய்ச்சி. சீக்கிரமே அஞ்சல பாட்டோட ஆராய்ச்சி முடிவுகள வெளியிடுங்க:)

RAMYA on December 14, 2008 at 3:20 PM said...

ஒரு Sunday உட்கார்ந்து
ஆராச்சி செய்த உங்களுக்கு
என்ன பரிசு கொடுக்கலாம்னு யோசிக்கறேன்
அவங்கெல்லாம் ஏதோ கஷ்டப்பட்டு
பாட்டு எழுதிட்டாங்க
நம்ப என்னவோ,...............
ஏன் ஏன் ஏன் கொலை வெறி Attack?
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்

Karthik on December 14, 2008 at 5:22 PM said...

டாக்டர் கார்க்கி, வீரத்தளபதியின் போர்த்தளபதி வாழ்க..!
:)

LOSHAN on December 14, 2008 at 5:47 PM said...

"என்ன வேணும் தின்னுங்கடா டோய்" பாடல் உயர்ந்த உள்ளம் படம் .. :)

ஆனால் இவ்வளவு வேலை மினக்கெட்டு இத்தனை விஷயமும் கண்டுபிடித்ததால் உங்களுக்கு என்ன விருது கொடுத்தாலும் தகும்.. ;)

இதையெல்லாம் நானும் தேடிக் கண்டுபிடிச்சு pitch, melody எல்லாம் பார்த்து அழகா வானொலியில் தொகுத்துக் கொடுத்து வந்தேன்..

இப்ப பார்த்தால் எல்லாமே copy n paste தானே.. நான் நிறுத்தி விட்டன்.. ஒரு வாரத்தில் எத்தனை பாடலைத் தான் மிக்ஸ் செய்ய முடியும்?

நம்ம ஹாரிஸ் ஜெயராஜின் கம்ப்யூட்டர் மெமரியை ஒரு நாள் அழித்து விட்டாலாவது புது மெட்டு தருவாரா தெரியல

//They say the swaras are just 7. With variations of swaras( like anthara etc) we get lil more. Even then permutations combinations of these 7 gives rise to finite raagas (though innumerous in number)

அப்படி இருக்கும் போது, அவங்களும் பாவம் என்னங்க பண்ணுவாங்க?!?!//

;)நல்ல பொழப்பு!!!

Selva on December 14, 2008 at 6:13 PM said...

good. your vetti research is intersting. Why don't u do a doctorate on it?

PoornimaSaran on December 14, 2008 at 10:30 PM said...

இதெல்லாம் ஒரு பொழப்பா?

?????????????????????????

ரிப்பிட்டேய்.......

கோவி.கண்ணன் on December 15, 2008 at 6:20 AM said...

பாடல்கள் காபிக்கு பதிலாக
ரீமிக்ஸ் செய்யலாம் :)

மிஸஸ்.டவுட் on December 15, 2008 at 9:03 AM said...

அட எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்....
சினேகா வர்ற சரவணா கோல்ட் ஹௌஸ் விளம்பரத்துல"நா நா..நா
நான...நனனா...நான...நனனான...நா நன...நானான "
இது ஏதோ ஒரு பழைய பாடலை ஞாபகப் படுத்துது...அந்தப் பாடல் வரிகள் என்னான்னு யாராச்சும் சொல்லுங்கப்பா...?!

அமிர்தவர்ஷினி அம்மா on December 15, 2008 at 2:38 PM said...

யப்பா லீவ் போட்டு உக்காந்து ஆராய்ச்சி செய்வீங்களோ..

ம்.

சுபமூகா on December 15, 2008 at 4:59 PM said...

திருமதி சந்தேகம்,

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை..

சுபமூகா

கார்க்கி on December 15, 2008 at 5:20 PM said...

//சுபமூகா said...
திருமதி சந்தேகம்,

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை.//

அண்ணாத்த அது ஸ்ரேய வர்ற விளம்பரம். அக்கா கேட்டது சினேக வருவது.. வருகைக்கு நன்றி
***********************************

வருகை தந்த அனைவருக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய நன்றி..

ஸ்ரீமதி on December 15, 2008 at 5:28 PM said...

கண்கள் இரண்டால்- சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல்

கார்க்கி on December 15, 2008 at 5:38 PM said...

/ஸ்ரீமதி said...
கண்கள் இரண்டால்- சின்ன கண்ணன் அழைக்கிறான் பாட//

அவை இரண்டும் ஒரே ராகம்.. காப்பி என்று சொல்ல முடியாது.. காப்பி என்றால் "மலோயரம் மயிலே,,விளையாடும் குயிலே" பாடம் தெரியுமா? அதே மெட்டில் தேவன் படத்தில் ஒரு பாடம் "தாலாட்டும் காற்றே".. இரன்டுமே இலையராஜாவின் பாடல் என்பதால் பரவாயில்லை.. இதுவே வேறு ஒருவரின் பாடல் என்றால் அதுதான் காப்பி..

சுபமூகா on December 15, 2008 at 5:46 PM said...

என்ன விலை அழகே பாடல் பற்றி படித்த போது, ஏற்கனவே இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே ( ;-)))))) ) என்று கொஞ்சம் குழம்பிப் போனேன்.

அப்புறம் ஞாபகத்துக்கு வந்தே விட்டது, நான் தான் எழுதினேன். [2005 January 17]

http://puthupunal.blogspot.com/2005/01/blog-post.html

Prosaic on December 15, 2008 at 5:48 PM said...

ar rahman suttadhulaam podamaatteengala thambi? appuram enga nethu pota "pulambal" padhiva kaanom?

கார்க்கி on December 15, 2008 at 5:56 PM said...

/Prosaic said...
ar rahman suttadhulaam podamaatteengala thaம்பி?//

அண்ணா இந்த பதிவு தமிழில் இருந்து சுட்ட பாடல்கள் மட்டும்தான்.. ஏ.ஆர்.ஆர் எல்லாம் உலக திருடர் இல்லையா?

அப்புறம் அத ஒரு புனைவா போடலாம்னு பார்த்த மக்கள் திசை திருப்பிட்டாங்க.. அதான் டெலீட்டிட்டேன்.. ஜிடாக்ல இப்போ வரியா?

ஆ! இதழ்கள் on December 15, 2008 at 6:23 PM said...

@ஸ்ரீமதி //கண்கள் இரண்டால்- சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல்//

நானும் நாலு பேருட்ட சொல்லிப்பாத்தேன் பாட்ட கேட்டோனே. ஆனா சில பேரு கண்டுக்கிரவேயில்ல. ஆனா ரெண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கு.

ஸ்ரீமதி on December 15, 2008 at 6:32 PM said...

//ஆ! இதழ்கள் said...
@ஸ்ரீமதி //கண்கள் இரண்டால்- சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல்//

நானும் நாலு பேருட்ட சொல்லிப்பாத்தேன் பாட்ட கேட்டோனே. ஆனா சில பேரு கண்டுக்கிரவேயில்ல. ஆனா ரெண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கு.//

ஏதோ இல்ல அண்ணா ரொம்பவே ஒத்துமை இருக்கு.. நான் இந்த பாட்ட பாடிட்டு இருக்கும் போது தானா அந்த பாட்டோட லைன் வந்துடும் அவ்ளோ ஒத்தும.. :)

வால்பையன் on December 15, 2008 at 8:38 PM said...

அருமையான ஆராய்ச்சி!

பாட்டு கேட்பதற்க்கு இடையில் வேலை எதாவது செய்வீர்களா?

கார்க்கி on December 16, 2008 at 10:33 AM said...

/ஆ! இதழ்கள் said...
@ஸ்ரீமதி //கண்கள் இரண்டால்- சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல்//

நானும் நாலு பேருட்ட சொல்லிப்பாத்தேன் பாட்ட கேட்டோனே. ஆனா சில பேரு கண்டுக்கிரவேயில்ல. ஆனா ரெண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்//

ஒரே ராகம்..

************************

//ஏதோ இல்ல அண்ணா ரொம்பவே ஒத்துமை இருக்கு.. நான் இந்த பாட்ட பாடிட்டு இருக்கும் போது தானா அந்த பாட்டோட லைன் வந்துடும் அவ்ளோ ஒத்தும.. :/

இது புதுசா இருக்கே.. கேட்கிறேன்..

*****************************

//வால்பையன் said...
அருமையான ஆராய்ச்சி!

பாட்டு கேட்பதற்க்கு இடையில் வேலை எதாவது செய்வீர்க//

ஹிஹிஹி.. வேலையா ? அப்படின்னா?

கடைசி பக்கம் on December 16, 2008 at 11:07 AM said...

ada aamaa illa?

Kushi, vali all frm english album and solely copy frm whole album to one film

asaiyila paathi katti and one more song both frm ilayaraja

கார்த்திக் on December 16, 2008 at 7:47 PM said...

இதையும் பாருங்க தல

கார்க்கி on December 16, 2008 at 8:02 PM said...

நன்றி கார்த்திக்.. அங்கே பதில்ட முயன்றேன். சேர வேண்டுமாம். அதுவும் உடனே பின்னூட்டம் போட முடியவில்லை.. இதை அங்கே சேர்த்திடுங்கள்..
***********************

/சலோமியா சலோமியா
சுண்டக்கஞ்சி சோறுடா
சுரும்புக்கருவாடுடா

என்ற கண்ணெதிரே தோன்றினாள் பாட்டும்
மேகமாய் வந்து போகிறேன்
மின்னலாய் உன்னைத்தேடினே//

இரண்டுமே சயோனி என்ற பாகிஸ்தான் ஆல்பத்திலிருந்து சுட்டதுதான்..
********************

/ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒனப்புத்தட்டும் தாரேன் -

என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி..
ரெண்டும் ஒரே ராகம் தானே.//

மிகச்சரி.. இரண்டுமே ஒரு நாட்டுப்புற பாட்டின் காப்பி.
*************************

//அத்திந்தோம் திந்தாதி தந்தோம் சந்திரமுகி பாடல் கேட்கும்போது
மாங்குயிலே பூங்குயிலே பாடல் நினைவுக்கு வந்தா//

மெட்டு வேறு.. தாளம் ஒன்று.. அது பரவாயில்லை..
********************

/ஆச்சரியம்.. இரண்டும் ஒரே தாளலயம்... நந்தா முதலில்.. பின் மிகத் தாமதமாய்
காக்க காக்க
முன்னதில் ராசா பின்னதில் ஹாரிஸ்//

அது ராசா இல்லைங்க.. அவரின் புதல்வர்..

கார்த்திக் on December 16, 2008 at 8:08 PM said...

சேர்த்தாச்சு

ஆ! இதழ்கள் on December 17, 2008 at 2:06 PM said...

//

/ஆ! இதழ்கள் said...
@ஸ்ரீமதி //கண்கள் இரண்டால்- சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல்//

நானும் நாலு பேருட்ட சொல்லிப்பாத்தேன் பாட்ட கேட்டோனே. ஆனா சில பேரு கண்டுக்கிரவேயில்ல. ஆனா ரெண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கு//

ஒரே ராகம்..//

ராகத்தை கண்டுபிடிப்பது சிறு வயதில் தமிழ் வாத்தியார் சொல்லித்தரும்பொழுதே எனக்கு ததிக்கினத்தோம் தான்.

எப்பொழுது அவர் சொல்வதை முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளாமல் சண்டை பிடிப்பேன். காரணம் அவரே ஒரு புழுகு மூட்டையாய் இருந்ததாகக் கூட இருக்கலாம்.

இருந்தாலும் ராகத்தொடர்பை தெரிவித்ததற்கு நன்றி.

 

all rights reserved to www.karkibava.com