Dec 13, 2008

ஷோகேஸ் மனைவிகள்.!


     கல்யாணம் ஆகாதவங்கல்லாம் இங்கே கிட்டே வாங்கோ, (ஆனவங்க தூரப்போயிடுங்க, அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்க மாட்டேன். அப்பாலிக்கா அழக்கூடாது) ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டியிருக்கிறது. நாம எல்லோரும் எங்கேயாச்சும் வெளியே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறோம். ஷாப்பிங் காம்ப்ளெஸ்களில், பஸ் நிலையங்களில், ரயில்வே ஸ்டேஷன்களில், சிலர் ஏர்ப்போர்ட்களில் என பல இடங்களில் நாம் ஒரு அழகான காட்சியை சில சமயங்களில் காண நேர்கிறது.

     அது, ஒரு அழகான இளைஞன் நின்று கொண்டிருப்பான் (பெரும்பாலும் அவனுக்கு மீசை இருக்காது). அவனருகே ஒரு அழகான இளம்பெண் நின்றுகொண்டிருப்பாள். (உங்களுக்கு சேலை பிடிக்குமென்றால் இளநீலத்தில் முந்தானை அலைபாயும் சேலையணிந்திருப்பாள். உங்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் ஓகே என்றால் அநியாயத்துக்கு ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் அணிந்திருப்பாள். ச‌ம‌ய‌ங்க‌ளில் டீ ஷ‌ர்ட்டுக்கு ப‌திலாக‌ டாப்ஸும் அந்த‌ டாப்ஸுக்கும் ஜீன்ஸுக்கும் ந‌டுவே கேப்ஸும் இருக்கும்.)

    இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையே ஒரு பெண் குழ‌ந்தை நின்று கொண்டிருக்கும் .அது அழகான மிடியில் கடத்திக்கொண்டுபோய் கொஞ்சிக்கொண்டிருக்கலாம் போன்று அநியாய‌த்துக்கு அழ‌காக‌ இருக்கும். அவ‌ர்க‌ளைப் பார்த்த‌துமே அவ‌ர்க‌ள் ஜோடி என்ப‌தும் அந்த‌க்குழ‌ந்தை அவ‌ர்க‌ளோட‌துதான் என்பதும் புரிந்து போகும். இப்போதான் க‌ல்யாண‌ம் ஆன‌மாதிரியிருக்காங்க‌.. ஆனா குழ‌ந்தையைப்பாரேன்.. என்று வாயில் ஈ நுழைவ‌து தெரியாம‌ல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பீர்க‌ள். உள்ம‌ன‌தில் உங்க‌ளுக்கு நாமும் க‌ல்யாண‌‌ம் செய்துகொண்டு, இதுபோல‌.. என்று காட்சிக‌ளும் க‌ற்ப‌னைக‌ளும் எழும்.

ஸாரி..

     அவ‌ற்றை ம‌ற‌ந்துவிடுங்க‌ள், நீங்க‌ள் ஏமாந்து போக‌க்கூடும். பெரும்பாலும் அவ‌ர்க‌ள் விதிவில‌க்கில் வ‌ரும் ஷோகேஸ் ஜோடிக‌ள். நிஜ‌ம் எப்ப‌டி இருக்கிற‌தென்று உங்க‌ளுக்கு தெரிய‌வேண்டுமென்றால் நிறை கேஸ் ஸ்ட‌டி ப‌ண்ற‌ பொறுமையும், நேர‌மும் உங்க‌ளுக்கு வேண்டும். உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் 'ப‌ரிச‌ல்கார‌ன்' வீட்டுக்கு போக‌லாம்.

அல்ல‌து பெட்ட‌ர் ஆப்ஷ‌ன்.. என் வீட்டுக்கு வ‌ர‌லாம்!

*************************************************

 பி.கு: சாதா தாமிராவை தங்கமணி தாமிரா என மாற்றிய பதிவு இது. அவரின் மாஸ்டர் பீஸ் இதுவென்று சொல்ல மாட்டேன். ஆனால் மிகவும் ரசித்த பதிவு இது. இவரை இங்கே படியுங்கள்.

18 கருத்துக்குத்து:

ராம்சுரேஷ் on December 13, 2008 at 5:58 PM said...

எனக்கு எதுவும் புரியவில்லை. Sorry!!!

LOSHAN on December 13, 2008 at 6:18 PM said...

என்ன புரியுதோ,அது புரியும்.. எது புரியாதோ அது புரியாது.. ஹீ ஹீ..

எல்லாம் சரி.. கார்க்கி அந்த ஆடை விவரிப்பு சூபரப்பு.. குறிப்பாக gaps..;)

மிஸஸ்.டவுட் on December 13, 2008 at 6:26 PM said...

//"ஷோகேஸ் மனைவிகள்.//

இதை ஆட்சேபித்து "சூட்கேஸ் கணவர்கள்னு" ஒரு பதிவு போடப்போறோம் கார்க்கி வலையுலக பெண்பதிவர்கள் சார்பாக...சும்மா தமாஷெல்லாம் இல்லை நிஜமாத்தான்

Karthik on December 13, 2008 at 6:34 PM said...

:)

தராசு on December 13, 2008 at 7:33 PM said...

ஒண்ணும் புரியல.

எது ஷோகேஸு, எது சோபா, எது கட்டிலு, எது மெத்தை

ஒரே குழப்பமா இருக்குதுபா!!!

அன்புடன் அருணா on December 13, 2008 at 7:45 PM said...

//அல்ல‌து பெட்ட‌ர் ஆப்ஷ‌ன்.. என் வீட்டுக்கு வ‌ர‌லாம்!//

hahahaha....
anbudan aruNaa

கும்க்கி on December 13, 2008 at 7:59 PM said...

:-))
(மேட்டர் என்னன்னு உங்களுக்கே தெரியும்..)

கார்க்கி on December 13, 2008 at 10:17 PM said...

// ராம்சுரேஷ் said...
எனக்கு எதுவும் புரியவில்லை. Sorrய்!!!//

வாராவாரம் போடுறோமென்னூ குறிப்பு போடாதது என் தவறுதான். இது நான் படித்ததில் பிடித்த மற்றவ்ர்கள் பதிவு.

*****************8

@லோஷன்,

வாங்க சகா.நலமா?

***********************

//மிஸஸ்.டவுட் said...
//"ஷோகேஸ் மனைவிகள்.//

இதை ஆட்சேபித்து "சூட்கேஸ் கணவர்கள்னு" ஒரு பதிவு போடப்போறோம் கார்க்கி வலையுலக பெண்பதிவர்கள் சார்பாக...சும்மா தமாஷெல்லாம் இல்லை நிஜமாத்தான்//

அட பதிவ முழுசா படிங்க. அது தாமிரா எழுதியது

கார்க்கி on December 13, 2008 at 10:19 PM said...

//Karthik said...
:)
//

என்ன சிரிப்பு? இது நமக்குதான்.. ஏமாற கூடாது..

********************

// தராசு said...
ஒண்ணும் புரியல.

எது ஷோகேஸு, எது சோபா, எது கட்டிலு, எது மெத்தை
//

லூஸ்ல விடுப்பா..

********************

//hahahaha....
anbudan arஉணா//

பரிசல் அளவில்லா அன்புடன் ந்னு போடற மாதிரி நீங்க ஹாஹாஹா அன்புடுஅன் அருணாவா?

******************

//கும்க்கி said...
:-))
(மேட்டர் என்னன்னு உங்களுக்கே தெரியும்
//

என்ன தல? தெரியலையே!!!!!!

விஜய் ஆனந்த் on December 13, 2008 at 11:13 PM said...

:-)))...

ஹலோ...அவர் கடையில மொக்கைய தாங்க முடியாமத்தான் ஏற்கனவே பல பேரு மண்ட கொழம்பி திரியிறோம்...இதுல ரெஃப்பரன்சு வேறயா???நல்லா்ப்போடறாங்கய்யா படித்ததில் பி்டித்தது!!!

SUREஷ் on December 14, 2008 at 12:10 AM said...

உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் 'ப‌ரிச‌ல்கார‌ன்' வீட்டுக்கு போக‌லாம். //fine

Anonymous said...

என்ன கார்க்கி, நீங்களும் ரங்கு ஆகபோறீங்களா, ரொம்ப பீல் பண்ணி பதிவு போட்டிருக்கீங்க :)

அத்திரி on December 14, 2008 at 8:43 AM said...

இப்படியெல்லாம் ஐஸ் வச்சா நாங்க சங்கத்துல சேத்துக்கமாட்டோம். சகா.

அதுக்குனு ஒரு சில ரூல்ஸ் இருக்கு.!!!!!!!!!

தங்கமணி தாமிரா நற்பணி மன்றம்
சென்னை-100

நான் ஆதவன் on December 14, 2008 at 9:34 AM said...

அது சரி உங்களுக்கு கல்யாணம் எப்போ?

தாமிரா on December 14, 2008 at 12:54 PM said...

சிலர் புர்லன்றாங்களே.. கிளைமாக்ஸ்ல இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கணுமோ? பின்னவீனத்தின் தம்பி கிருமி என்னையும் கடிச்சிருக்குமோ?

நன்றி கார்க்கி.!

கார்க்கி on December 14, 2008 at 1:05 PM said...

// விஜய் ஆனந்த் said...
:-)))...

ஹலோ...அவர் கடையில மொக்கைய தாங்க முடியாமத்தான் ஏற்கனவே பல பேரு மண்ட கொழம்பி திரியிறோம்...இதுல ரெஃப்பரன்சு வேறயா?//

பொட்டி கொடுத்தாரு. போட்டேங்க..

*********************

/சின்ன அம்மிணி said...
என்ன கார்க்கி, நீங்களும் ரங்கு ஆகபோறீங்களா, ரொம்ப பீல் பண்ணி பதிவு போட்டிருக்கீங்க //

விதிய யாரால மாத்த முடியும்?

*************************

/அத்திரி said...
இப்படியெல்லாம் ஐஸ் வச்சா நாங்க சங்கத்துல சேத்துக்கமாட்டோம். சகா.

அதுக்குனு ஒரு சில ரூல்ஸ் இருக்//

பார்த்து செய்ங்க பாஸ்..

*************************

/நான் ஆதவன் said...
அது சரி உங்களுக்கு கல்யாணம் எப்போ?//

சொல்லம செய்வேனா??

**********************

//தாமிரா said...
சிலர் புர்லன்றாங்களே.. கிளைமாக்ஸ்ல இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கணுமோ? பின்னவீனத்தின் தம்பி கிருமி என்னையும் கடிச்சிருக்குமோ//

இல்ல ச்கா.. அவ்ங்களுக்கு தங்கம்னி மேட்டரே தெரியாது போல..

PoornimaSaran on December 14, 2008 at 11:20 PM said...

// மிஸஸ்.டவுட் said...
//"ஷோகேஸ் மனைவிகள்.//

இதை ஆட்சேபித்து "சூட்கேஸ் கணவர்கள்னு" ஒரு பதிவு போடப்போறோம் கார்க்கி வலையுலக பெண்பதிவர்கள் சார்பாக...சும்மா தமாஷெல்லாம் இல்லை நிஜமாத்தான்
//

என்னையும் சேர்த்துகோங்க...

Anonymous said...

I know what to expect from your house!!!!

 

all rights reserved to www.karkibava.com