Dec 9, 2008

புட்டிக்கதைகள்


    ஏழுமலைக்கு தண்ணியடிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஆசை. அது ஒரு நல்ல விஷயம் என்பதால் அடிக்கடி அதை செய்வான். மீண்டும் அடிக்கும்போது ஏன்டா மச்சி என்றால், மறுபடி அடிச்சாதானே மறுபடியும் நிறுத்த முடியும்? நல்லத எத்தன தடவ வேணும்னாலும் செய்யலாம் மச்சி என்பான்.

    அப்படி ஒரு நாள் மகாலட்சுமி பாருக்கு சென்றோம். வழக்கம்போல அரை பீர்(மினி பியர்) வாங்கிக் கொண்டான். இப்போதெல்லாம் ஏழுமலை பியரை ராவாக அடிக்க கற்றுக் கொண்டான். அரை பீரை முக்கால்வாசி அடித்த போதே முழு போதை ஏறி பார்ப்பவை எல்லாம் இரண்டாக தெரிந்த‌து மட்டுமில்லாமல் மூன்று முறை வாந்தியும் எடுத்து, நாலு பேர் முன்னாடி எங்க அஞ்சு பேரையும் அசிங்கபடுத்தியதற்கு ஆறுமுகத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டான் ஏழுமலை.(யப்பா போதும்.நான் கணக்குல வீக் கூட இல்ல,டே ங்க)

     எல்லோரும் வெளியே வந்தபோது ஏழுமலைக்கு மட்டும்தான் போதையேறி இருந்தது. எனக்கெல்லாம் வெறியேறி இருந்தது. பேசாமல் நடந்தோம். ஏழுமலையே ஆரம்பித்தான். "மச்சி இப்பதான் லைட்டா ஏற ஆரம்பிச்சிருக்கு.இன்னொரு பாருக்கு போலாமா?". ஆறுமுகத்தின் கண்ணில் கொலைவெறி தெரிந்தது. (சட்டக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை போலும்) கோபத்தில் அவன் சட்டையை பிடித்தவன் ஒரு உலுக்கு உலுக்கினான். சட்டையை விட்டபோது பொத்தென விழுந்தான் ஏழுமலை. அந்த ஒல்லியான் தேகத்துக்குள் எங்கே ஒளிந்திருந்தது எனத் தெரியவில்லை. ரத்தம் கொட்டியது.

    ஏழுமலையை தூக்குவதில் சிரமம் ஏதுமில்லை என்பதால் ஆட்டோவுக்கெல்லாம் காத்திராமல் ஆஸ்பிட்டலுக்கு ஓடினோம். கட்டுப் போட்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். ஆறுமுகம் மட்டும் மருந்து வாங்கிவர ஃபார்மஸி சென்றிருந்தான். ஒருவர் பதட்டமாக வந்து நர்ஸிடம் ஏதோக் கேட்டுக் கொண்டிருந்தார்.நர்சும் சத்தமாக " ICU ல இருக்கிறவங்கள எல்லாம் பார்க்க முடியாது" என்றார். நர்சு சுமாரக இருந்ததை கவனித்த ஏழு சொன்னான், "பார்க்க முடியாதுன்னா அப்புறம் எதுக்கு ICU சொல்றீங்க. I cant see you சொல்லுங்க" என்றான். சிம்புவைக் கண்ட நயந்தாராவைப் போல வெறுப்புடன் சென்றார் அந்த நர்சு. நாங்கள் எல்லாம் கோவம் மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

   அடுத்த முறை அந்த நர்சு எங்களைக் கடந்த போது ஏழுமலையை முறைத்துக் கொண்டே சென்று கதவில் முட்டிக் கொண்டார். தோள்பட்டையில் நல்ல இடி. ஒரு மாதிரி வளைந்து நெளிந்து, மீண்டும் எங்களை முறைத்துக் கொண்டே சென்றார். எதிரில் வந்த ஆறுமுகம் "என்னடா அப்படி போது. நீ ஏதாவது வம்பு செஞ்சியா" என்று ஏழுவை மிரட்டினான். நம்ம ஹீரோ அசால்ட்டாக சொன்னார் " ஒன்னுமில்லை மச்சி. அவள நம்ம கார்க்கி மடக்கிட்டான். அதான் அப்படி நடக்குது"

   இதற்கு மேலும் அங்கே இருந்தால் எங்களுக்கும் கட்டுப் போடப்படும் என்பதால் எஸ்கேப் ஆனோம். காலையில் எழுந்த‌தும் போதை குறையாத ஏழுமலை நேராக பாத்ரூம் சென்றான். வழக்கம்போல் மப்பு இறங்க, தொட்டியில் அனைவரும் குளிப்பதற்காக இருந்த தண்ணியில் தலையை மட்டும் கவிழ்த்துக் கொண்டான். கொஞ்ச நேரம் கழித்து தலையை எடுத்தவன் சொன்னான் "இனிமேல இந்த கருமத்த அடிக்கவே கூடாது மச்சி".

பி.கு: அவன் கருமம் என்று சொன்னது மினி பியரின் முக்கால்வாசி.

39 கருத்துக்குத்து:

Anonymous said...

:)

பரிசல்காரன் on December 9, 2008 at 9:32 AM said...

கலக்கல்டா மச்சி!

ICUவும் அரைலேர்ந்து, ஏழுவரைக்கும் எழுதின உன் சாமர்த்தியமும் சூப்பர் சகா!

புட்டிக்கதைகள் டாப் கியர்ல போகுது!

ஆளவந்தான் on December 9, 2008 at 9:50 AM said...

பின்னி பெடல் எடுக்கிறீங்க...

ஐயோ பாவம் அந்த சிம்பு.

அத்திரி on December 9, 2008 at 9:52 AM said...

//மறுபடி அடிச்சாதானே மறுபடியும் நிறுத்த முடியும்? நல்லத எத்தன தடவ வேணும்னாலும் செய்யலாம் மச்சி என்பான்//

ஏழுமலை சரியாத்தான் சொல்லியிருக்காப்ல..

//அந்த ஒல்லியான் தேகத்துக்குள் எங்கே ஒளிந்திருந்தது எனத் தெரியவில்லை. ரத்தம் கொட்டியது./

ரணகளத்திலும் காமெடி

அத்திரி on December 9, 2008 at 9:54 AM said...

//"இனிமேல இந்த கருமத்த அடிக்கவே கூடாது மச்சி".//


ஹிஹிஹிஹிஹிஹிஹி ))))))))))))))))

தாரணி பிரியா on December 9, 2008 at 9:58 AM said...

//ஏழுமலைக்கு தண்ணியடிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஆசை. அது ஒரு நல்ல விஷயம் என்பதால் அடிக்கடி அதை செய்வான். மீண்டும் அடிக்கும்போது ஏன்டா மச்சி என்றால், மறுபடி அடிச்சாதானே மறுபடியும் நிறுத்த முடியும்? நல்லத எத்தன தடவ வேணும்னாலும் செய்யலாம் மச்சி என்பான்.//

தெளிவானர் போல உங்க பிரெண்டு

தாரணி பிரியா on December 9, 2008 at 9:59 AM said...

//ஆறுமுகத்தின் கண்ணில் கொலைவெறி தெரிந்தது. (சட்டக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை போலும்) //

கேஸ் போட்டுட போறாங்க

தாரணி பிரியா on December 9, 2008 at 10:01 AM said...

//ICU ல இருக்கிறவங்கள எல்லாம் பார்க்க முடியாது" என்றார். நர்சு சுமாரக இருந்ததை கவனித்த ஏழு சொன்னான், "பார்க்க முடியாதுன்னா அப்புறம் எதுக்கு ICU சொல்றீங்க. I cant see you சொல்லுங்க"//

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க‌

தாரணி பிரியா on December 9, 2008 at 10:02 AM said...

கடவுளே முருகா முடியலை என்னை காப்பாத்து.

Karthik on December 9, 2008 at 10:03 AM said...

ஹா..ஹா.

கலக்கல் கார்க்கி...
:D

prakash on December 9, 2008 at 10:18 AM said...

//அப்படி ஒரு நாள் மகாலட்சுமி பாருக்கு சென்றோம்.//

இது எங்கப்பா இருக்கு? ஒரு நாள் போகணும். சும்மா பாக்கறதுக்கு தான் :))

prakash on December 9, 2008 at 10:20 AM said...

//"பார்க்க முடியாதுன்னா அப்புறம் எதுக்கு ICU சொல்றீங்க. I cant see you சொல்லுங்க"//

சூப்பரப்பு.....

prakash on December 9, 2008 at 10:22 AM said...

//நர்சு எங்களைக் கடந்த போது ஏழுமலையை முறைத்துக் கொண்டே சென்று கதவில் முட்டிக் கொண்டார். //

நர்சும் மகாலக்ஷ்மி பாருக்கு போய் வந்திருப்பார் போல :))

prakash on December 9, 2008 at 10:26 AM said...

//அவள நம்ம கார்க்கி மடக்கிட்டான்.//

போதையிலே இருந்தாலும் தெளிவா நோட் பண்ணிட்டான் ஏழுமலை :))

narsim on December 9, 2008 at 11:05 AM said...

// சிம்புவைக் கண்ட நயந்தாராவைப் போல வெறுப்புடன் சென்றார் அந்த நர்சு//

உவமைகள் அள்ளுதே சகா.. கலக்கல்!

Chuttiarun on December 9, 2008 at 11:20 AM said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Anonymous said...

Removed my name in
பின்னூட்ட பிதாமகன்கள்

why to hv in followers list??
remove in that too.

ஸ்ரீமதி on December 9, 2008 at 12:24 PM said...

அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் :))))))))))

கிழஞ்செழியன் on December 9, 2008 at 1:10 PM said...

கடவுளே முருகா என்னையும் காப்பி ஆத்தப்பா. கார்க்கி, எக்ஸலன்ட்!!!!!!!!!!!!!!!!!!! (இதற்கு மேல் இதுவரை நான் யாரையும் பார் ஆட்டியதில்லை.)

வித்யா on December 9, 2008 at 2:44 PM said...

உங்களை tag செய்திருக்கிறேன். முடிந்தால் எழுதுங்கள்.

வித்யா on December 9, 2008 at 2:44 PM said...

அப்புறம் ஏழுமலை போட்டோ இருந்தா ஒன்னு போடுங்களேன்:)

கார்க்கி on December 9, 2008 at 3:31 PM said...

//Anonymous said...
:)//

நன்றி அனானி

******************8

//பரிசல்காரன் said...
கலக்கல்டா மச்சி!

ICUவும் அரைலேர்ந்து, ஏழுவரைக்கும் எழுதின உன் சாமர்த்தியமும் சூப்பர் சகா!

புட்டிக்கதைகள் டாப் கியர்ல போகு//


நன்றி சகா.. எங்க ரெண்டு நாளா ஆளையேக் காணோம்? ஆணி அதிகமா?

**************************

//ஆளவந்தான் said...
பின்னி பெடல் எடுக்கிறீங்க//

ந‌ன்றி ஆள‌வ‌ன்தான்

கார்க்கி on December 9, 2008 at 3:33 PM said...

@அத்திரி,

நன்றி சகா..

********************8

@தாரணி பிரியா,

நன்றி தா.பி. முருகர் காப்பாத்துவார்.

*********************

// Karthik said...
ஹா..ஹா.

கலக்கல் கார்க்கி...
:ட்//

நன்றி CEO (ச்சும்மா.சீரியஸா எடுத்துக்காத :)))

கார்க்கி on December 9, 2008 at 3:37 PM said...

//
இது எங்கப்பா இருக்கு? ஒரு நாள் போகணும். சும்மா பாக்கறதுக்கு தான் //

அடையாறில் ராம்கோ சிஸ்டம் அருகில் உள்ள சந்தில் இருக்கு. இப்போதான் எல்லாமே டாஸ்மேக் ஆயிடுச்சே..

***********************

//narsim said...
// சிம்புவைக் கண்ட நயந்தாராவைப் போல வெறுப்புடன் சென்றார் அந்த நர்சு//

உவமைகள் அள்ளுதே சகா.. கலக்க//

ஹிஹிஹி.. இவைகளையும் உவமைகள் என கருதியமைக்கு நன்றி தல.

****************************

//Anonymous said...
Removed my name in
பின்னூட்ட பிதாமகன்கள்

why to hv in followers list??
remove in that டோ//

இது யுவான்னு எனக்குத் தெரியும்.பின்னூட்ட பிதாமகன்கள் என்பது யார் நிறைய பின்னூட்டமிடறாங்களோ அவங்க பேர் முதல்ல வரும். இப்போ நீங்க கமென்ட் போடாததால் மத்தவ்ங்க பேர் முன்னாடி வந்துடுச்சு. நான் ஒன்னும் செய்யல. நன்றி

கார்க்கி on December 9, 2008 at 3:39 PM said...

//ஸ்ரீமதி said...
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் :))))))))))//

ஆமாம். கலைஞரும் சூப்பர்தான்.

******************************

// கிழஞ்செழியன் said...
கடவுளே முருகா என்னையும் காப்பி ஆத்தப்பா. கார்க்கி, எக்ஸலன்ட்!!!!!!!!!!!!!!!!!!! (இதற்கு மேல் இதுவரை நான் யாரையும் பார் ஆட்டியதில்லை.//

ரொம்ப சந்தோஷமா இருக்கு தல. :))))))))))))))))))))

*******************************
//வித்யா said...
உங்களை tag செய்திருக்கிறேன். முடிந்தால் எழுதுங்கள்//

எழுதி முடிக்கிறேன்..


//வித்யா said...
அப்புறம் ஏழுமலை போட்டோ இருந்தா ஒன்னு போடுங்களேன்://

நிச்சயம்.

ஸ்ரீமதி on December 9, 2008 at 3:57 PM said...

//கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் :))))))))))//

ஆமாம். கலைஞரும் சூப்பர்தான்.//

:))))))))))

kumar on December 9, 2008 at 4:04 PM said...

ரசித்தேன் :-)

பதிவையும் பின்னோட்டதையும் :-)

Anonymous said...

\\யார் நிறைய பின்னூட்டமிடறாங்களோ அவங்க பேர் முதல்ல வரும். இப்போ நீங்க கமென்ட் போடாததால் மத்தவ்ங்க பேர் முன்னாடி வந்துடுச்சு. நான் ஒன்னும் செய்யல. நன்றி//
POI, less than mine is also there

Joe on December 9, 2008 at 6:16 PM said...

கலக்குறீங்க சகா!

மினி பீருக்கு இப்படி ஒரு போதையா?
வளர்ற பையன், பாவம், ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க!

கார்க்கி on December 9, 2008 at 6:21 PM said...

நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். மீதிய மெயில்ல சொல்றேன் யுவா

கார்க்கி on December 9, 2008 at 6:22 PM said...

வாங்க ஜோ. வளர்ற பிள்ளையா? ஆங்ங்ங்ங்ங்...

Anonymous said...

putikaithaikal are really good. i cant stop laughing. continue. Thanks

PoornimaSaran on December 9, 2008 at 7:46 PM said...

// கார்க்கி said...
//
இது எங்கப்பா இருக்கு? ஒரு நாள் போகணும். சும்மா பாக்கறதுக்கு தான் //

அடையாறில் ராம்கோ சிஸ்டம் அருகில் உள்ள சந்தில் இருக்கு. இப்போதான் எல்லாமே டாஸ்மேக் ஆயிடுச்சே..

//

அடையாறில் ராம்கோ சிஸ்டம் பேக் சைடுல தான் எங்க வீடு..

PoornimaSaran on December 9, 2008 at 7:47 PM said...

இப்போ காலி பண்ணிடோம் ஹி ஹி
:))

rapp on December 10, 2008 at 1:58 AM said...

செமக் கலக்கல். அதுலயும் பரிசல் சார் சொல்லிருக்காப்போல நம்பர் வார்த்தை விளையாட்டும் சூப்பர். அதேப்போல சட்டக் கல்லூரில இடம் கிடைக்கலப் போலருக்கு' மாதிரி கமெண்ட்ஸ் சூப்பரோ சூப்பர்:):):) ரொம்ப நல்லா இருந்தது. இந்த சிரீஸ்ல அந்த மொதோ கதை இப்பவும் ரொம்பப் பிடிக்கும்:):):)

கார்க்கி on December 10, 2008 at 12:04 PM said...

//அடையாறில் ராம்கோ சிஸ்டம் பேக் சைடுல தான் எங்க வீடு..//

பள்ளிப்பட்டா?

************************

// rapp said...
செமக் கலக்கல். அதுலயும் பரிசல் சார் சொல்லிருக்காப்போல நம்பர் வார்த்தை விளையாட்டும் சூப்பர். அதேப்போல சட்டக் கல்லூரில இடம் கிடைக்கலப் போலருக்கு' மாதிரி கமெண்ட்ஸ் சூப்பரோ சூப்பர்:):):) ரொம்ப நல்லா இருந்தது. இந்த சிரீஸ்ல அந்த மொதோ கதை இப்பவும் ரொம்பப் பிடிக்கும்:):)://

நன்றி ராப்

Joe on December 10, 2008 at 7:29 PM said...

இந்த மாதிரி ஆளுங்க எல்லா நண்பர் குழுவிலேயும் இருப்பாங்க போல.

அடுத்த தண்ணி பார்ட்டிக்கு நானும் வர்றேன்! ;-)

PoornimaSaran on December 10, 2008 at 7:54 PM said...

ஆமாங்கண்ணா..

கும்க்கி on December 10, 2008 at 8:33 PM said...

நொம்ப கஷ்டப்பட்டு ஏழுமலய கண்டுபிடிச்சிட்டன்.....
எப்போ கூட்டிக்கொண்டுவர..?

 

all rights reserved to www.karkibava.com