Dec 7, 2008

நீங்கள் ஒரு பின்நவீனத்துவவாதியா? ஒரு சிறு தேர்வு


   வெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.

நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.
மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி...
"
பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.

    பிரியாணி பிரியர், வலையுலக வைரம், சிறுகதை சக்கரவர்த்தி, தங்கமணிகள் பின்னேற்ற கழகத்தின் மூத்த' தலைவர்களில் ஒருவரான இவரின் பதிவுக்கு விழுந்த பல சுவையான பின்னூட்டங்களை இங்கே க்ளிக்கி படியுங்கள்.

*************************************************

ஹிஹிஹி. அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌  

 அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன். நிச்சயம் அதை எழுதியவரின் அனுமதி பெற்றே பதிவிடுவேன்.

63 கருத்துக்குத்து:

கோவி.கண்ணன் on December 7, 2008 at 9:36 AM said...

மீ த பர்ஸ்ட் !

உங்கப் பதிவுக்கு மீ த பர்ஸ்ட் போட பலத்த போட்டி.

எனக்கு எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கு தெரியுமா ? :))

கார்க்கி on December 7, 2008 at 9:44 AM said...

அப்படியா?????????

நீங்க போட்டது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. அப்படி சொல்லும்போது இன்னும் மகிழ்ச்சியா இருக்கு. நன்றி கோவியாரே :))))))))))))))))

விஜய் ஆனந்த் on December 7, 2008 at 9:53 AM said...

:-)))...

தமிழ்ல போட்டா, எதுக்குன்னு கேட்டுட்டு, இங்கிலிபிஷ்ல போட்டதுக்கு மட்டும் மகிழ்ச்சியா இருக்குன்னு சொல்ற கார்க்கிக்கு கடும் கண்டனங்கள்!!!

கும்க்கி on December 7, 2008 at 9:56 AM said...

ஜஸ்ட் மிஸ்ட்..

சென்ஷி on December 7, 2008 at 10:02 AM said...

:))

நல்லா இருக்குங்க

(இது நான் வெண்பூ பதிவுல போட்ட கமெண்டு.. :) )

கோவி.கண்ணன் on December 7, 2008 at 10:03 AM said...

//கார்க்கி said...
அப்படியா?????????

நீங்க போட்டது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. அப்படி சொல்லும்போது இன்னும் மகிழ்ச்சியா இருக்கு. நன்றி கோவியாரே :))))))))))))))))
//

தமிழ்மணத்தில் தெரியும் போது தான் பாய்ந்து வந்து 'மீ த பர்ஸ்ட்' போடுறாங்க என்று விளங்குது, நான் தமிழ்மணத்தில் தெரியும் முன்பே போட்டதால் தான் இந்த ரகசியம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

*****

பதிவை பற்றி, 10 பாயிண்டுக்கும் 10க்கு 10.

கும்க்கி on December 7, 2008 at 10:15 AM said...

ஓஸி பீஸா ஹை....49 comments:
வீரசுந்தர் said...
ஹய்.... நான் பத்துக்குமே “ஆம்” -தான் சொன்னேன்! அப்ப நான் எஸ்கேப்பா!!! :-)

பதிவு சூப்பர்!

July 14, 2008 10:40 PM
வால்பையன் said...
எட்டாவது கேள்வியை தவிர மற்ற அனைத்திற்கும் ஆம்

வால்பையன்

July 14, 2008 10:44 PM
வழிப்போக்கன் said...
நான்தான் பர்ஸ்ட்...:-))

July 14, 2008 10:55 PM
வெண்பூ said...
//வீரசுந்தர் said...
ஹய்.... நான் பத்துக்குமே “ஆம்” -தான் சொன்னேன்! அப்ப நான் எஸ்கேப்பா!!!
//

ஆமா வீரசுந்தர், சூப்பர் எஸ்கேப்பு...:)))

July 14, 2008 10:57 PM
வெண்பூ said...
//எட்டாவது கேள்வியை தவிர மற்ற அனைத்திற்கும் ஆம்

வால்பையன்//

ஹா...ஹா..ஏன் வால்,, இப்படி எதுனா ஏற்கனவே திரைவிமர்சனம் எழுதியிருக்கீங்களா என்ன???

July 14, 2008 10:58 PM
வழிப்போக்கன் said...
எனக்கு ஒரு கேள்வி கூட புரியல. அப்போ என்ன அர்த்தம் ??

எனக்கொரு சந்தேகம்...

என்னோட பின்னூட்ட அகராதி படிச்சுட்டு அது பின்நவீனத்துவமானு சொல்லுங்க ப்ளீஸ்...

July 14, 2008 10:59 PM
வெண்பூ said...
//
வழிப்போக்கன் said...
நான்தான் பர்ஸ்ட்...:-))
//

ஜஸ்ட் மிஸ்...வீரசுந்தர் முந்திகிட்டாரு..

July 14, 2008 10:59 PM
வெண்பூ said...
//வழிப்போக்கன் said...
எனக்கு ஒரு கேள்வி கூட புரியல. அப்போ என்ன அர்த்தம் ??//

ஆஹா... இவருகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கப்பு. இப்படி ஆரம்பிக்கரவுங்கதான் கடைசியில பெரிய எழுத்தாளர வந்து ரத்தம் வர அறுப்பாங்க!!! (இதுல உள்குத்தெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ)

// எனக்கொரு சந்தேகம்...

என்னோட பின்னூட்ட அகராதி படிச்சுட்டு அது பின்நவீனத்துவமானு சொல்லுங்க ப்ளீஸ்...
//

அதத்தான் நான் ஏற்கனவே படிச்சிட்டனே. எனக்கு நல்லா அது புரியுதுன்றப்ப அத எப்படி நான் "பின்நவீனத்துவம்"னு சொல்லுவேன்....

July 14, 2008 11:05 PM
வழிப்போக்கன் said...
//(இதுல உள்குத்தெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ)//

சொல்ல வேண்டியத சொல்லிபோட்டு இதுல டிஸ்கி வேறயா ??

:-))

விடாது வழிப்போக்கன்....

July 14, 2008 11:09 PM
வளர்மதி said...
அண்ணே ... எப்படீண்ணே!?

July 14, 2008 11:27 PM
வால்பையன் said...
//ஹா...ஹா..ஏன் வால்,, இப்படி எதுனா ஏற்கனவே திரைவிமர்சனம் எழுதியிருக்கீங்களா என்ன???//

பின்நவீன ஆராய்ச்சியே பண்ணியிருக்கேன்

வால்பையன்

July 14, 2008 11:28 PM
rapp said...
ஹா ஹா ஹா, நல்ல வேளை என்னை அந்தக் கிருமி தாக்கல. ஆனா சூப்பர் செல்ப் இவாளுவேஷனா இருக்கே. செம செமக் கலக்கல். நீங்க அந்தக் கிருமியால் தாக்கப் பட்டவரா, இல்ல பிழைச்சுக்கிட்டீங்களா?

July 14, 2008 11:41 PM
rapp said...
//இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு//
அவ்வ்வ்வ்வ்வ்......... எனக்கென்னமோ அந்தக் கிருமி உங்கள சீக்கிரமே தாக்கிடும்னு தோணுது

July 14, 2008 11:43 PM
கயல்விழி said...
//1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?//

அப்போ இல்லையா? நான் ஏதோ சாப்பாட்டுடைய பெயரா இருக்குமோனு நினைச்சேன். இதுக்கு இல்லை என்பதா, ஆமாம் என்பதா என்று குழப்பமாக இருக்கிறது. முதல் கேள்வியிலேயே சிக்கிக்கொண்டதால், எஸ்கேப்!!!

July 15, 2008 12:39 AM
ச்சின்னப் பையன் said...
11. எதுவுமே புரியலேன்னாக்கூட, வேறே வேலை எதுவுமே இல்லாததால், படிச்சதையே திரும்ப திரும்ப படிச்சிட்டு, அதே பதிவிலிருந்து கடைசி நாலு வரிகளை காப்பி செய்து, சூப்பர், அருமை அப்படின்னு போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவீங்களா?

July 15, 2008 1:38 AM
துளசி கோபால் said...
டீச்சர் தேர்வு எழுதலாமான்னு தெரியலை.

ஆனால் இந்த 'பின்' நவீனத்துவம் பற்றிச் சரியாத் தெரியலைன்னாலும் எல்லாருக்கும் செய்வது போல உங்களையும் 'ஊக்கு'விக்கின்றேன்:-))))

July 15, 2008 2:48 AM
பரிசல்காரன் said...
பின்நவீனத்துவம் குறித்த நிச்சயமற்ற போக்கும், தெளிவான சிந்தனையற்ற பிரளய மீட்சியின் பரிணாம பேதங்களும், பரிமாணப் புரிதலுமில்லாத சில கால இடைவெளியில் இது போன்ற கேள்விகள் நம்மைத் துரத்துவது இயல்பே!

இக் கேள்விகளுக்கு விடைதேடி நாம் செல்கையின் நம் எழுத்து, தெளிவற்ற குட்டை நீரின் அடியிலுள்ள முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மனிதனாக தவிக்கிறது. ஒற்றைப்புள்ளியாய் தூரதீரத்தில் எரியும் நட்சத்திரத்தின் அகண்ட பகுதிகளுக்கிடையேயான காலபேத இடைவெளியில்.............................................
.........................
.....................???
............................
...................
.....................
.......................!!
.....................
........................
...................
...................!!

ப்ளாங்க்ஸ் ஃபில் அப் பண்ண பின்நவீனத்துவ சக்கரவர்த்தி சென்ஷியை அழைக்கிறேன்!

July 15, 2008 9:42 AM
பரிசல்காரன் said...
இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட்டபிறகும்

நான் பின்நவீனத்துவவாதியா இல்லையா என்று தெளிவுறக் கூறாத இந்தப் பதிவரது எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவத்திற்குச் சமமான பிரளய மீட்சியின் பரிமாண பரிணாமங்களுக்கிடையேயான ரௌத்ரபூதாகார.......

பதில் சொல்றீங்களா இல்லையா?

July 15, 2008 12:20 PM
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஆத்தாடி....நான் எஸ்கேப்பு...

July 15, 2008 1:01 PM
வெண்பூ said...
//வளர்மதி said...
அண்ணே ... எப்படீண்ணே!?
//

அதெல்லாம் அப்படித்தான்... பின்நவீனத்துவத்தைப் பத்தி எழுதாம அப்புறம் எப்படி பெரும்பதிவர் ஆகுறதாம்????

July 15, 2008 3:56 PM
வெண்பூ said...
//பின்நவீன ஆராய்ச்சியே பண்ணியிருக்கேன்

வால்பையன்//

ஆமா..படிச்சி பார்த்தேன். ரொம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆராய்ச்சிதான்.. (பாதிதான் படிச்சிருக்கேன். முழுசும் படிச்சி முடிச்சிட்டு சொல்றேன்) :)))

July 15, 2008 3:57 PM
வெண்பூ said...
//rapp said...
ஹா ஹா ஹா, நல்ல வேளை என்னை அந்தக் கிருமி தாக்கல.

.
.
அவ்வ்வ்வ்வ்வ்......... எனக்கென்னமோ அந்தக் கிருமி உங்கள சீக்கிரமே தாக்கிடும்னு தோணுது//

ஹைய்யா...நானும் பெரிய எளக்கியவாதி ஆயிடுவேனா?????

July 15, 2008 3:58 PM
வெண்பூ said...
//கயல்விழி said...
--1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?--

அப்போ இல்லையா?
//

சரியாப் போச்சி...

//
நான் ஏதோ சாப்பாட்டுடைய பெயரா இருக்குமோனு நினைச்சேன். //

பாத்து.. ரெஸ்டாரண்ட் போயி ப்ரெட் ஆம்லெட் ஒண்ணு, பின்நவீனத்துவம் ரெண்டுன்னு ஆர்டர் பண்ணிடப்போறீங்க... :)))

July 15, 2008 4:02 PM
வெண்பூ said...
//ச்சின்னப் பையன் said...
11. எதுவுமே புரியலேன்னாக்கூட, வேறே வேலை எதுவுமே இல்லாததால், படிச்சதையே திரும்ப திரும்ப படிச்சிட்டு, அதே பதிவிலிருந்து கடைசி நாலு வரிகளை காப்பி செய்து, சூப்பர், அருமை அப்படின்னு போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவீங்களா?
//

சூப்பர், அருமை :)
.
.
நீங்க மறந்த ஸ்மைலியக்கூட நான் போட்டுடேன் பாருங்க..

July 15, 2008 4:04 PM
வெண்பூ said...
//துளசி கோபால் said...
டீச்சர் தேர்வு எழுதலாமான்னு தெரியலை.
//

தாராளமா எழுதலாம்..எந்த தப்பும் இல்ல.. என்ன ரிசல்ட மட்டும் உங்க ஸ்டூடண்ட்ஸ் கிட்ட காட்டீடாதீங்க..

//
ஆனால் இந்த 'பின்' நவீனத்துவம் பற்றிச் சரியாத் தெரியலைன்னாலும் எல்லாருக்கும் செய்வது போல உங்களையும் 'ஊக்கு'விக்கின்றேன்:-))))
//

நீங்கள் தொடர்ந்து 'ஊக்கு'வித்தால் நாங்கள் 'பின்'வாங்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன் டீச்சர்... :)

July 15, 2008 4:06 PM
வெண்பூ said...
// பரிசல்காரன் said...
பின்நவீனத்துவம் குறித்த நிச்சயமற்ற போக்கும், தெளிவான சிந்தனையற்ற பிரளய மீட்சியின் பரிணாம பேதங்களும், பரிமாணப் புரிதலுமில்லாத சில கால இடைவெளியில் இது போன்ற கேள்விகள் நம்மைத் துரத்துவது இயல்பே!
//

கரெக்ட்தான்.. அந்த பின்நவீனத்துவ‌ பக்கத்தை தொறந்த உடனே நம்மள துரத்தி விட்டுருதுல்ல‌.

//
இக் கேள்விகளுக்கு விடைதேடி நாம் செல்கையின் நம் எழுத்து, தெளிவற்ற குட்டை நீரின் அடியிலுள்ள முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மனிதனாக தவிக்கிறது. ஒற்றைப்புள்ளியாய் தூரதீரத்தில் எரியும் நட்சத்திரத்தின் அகண்ட பகுதிகளுக்கிடையேயான காலபேத இடைவெளியில்..

//

அடுத்த பின்நவீனத்துவ எளக்கியவாதி in making... be ready...

//

ப்ளாங்க்ஸ் ஃபில் அப் பண்ண பின்நவீனத்துவ சக்கரவர்த்தி சென்ஷியை அழைக்கிறேன்!
//

ஆஹா... இன்னொருத்தர வேற கூப்புடுறாரே!!!!! வசமா மாட்டுனமா???

July 15, 2008 4:09 PM
வெண்பூ said...
//பரிசல்காரன் said...
இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட்டபிறகும்

நான் பின்நவீனத்துவவாதியா இல்லையா என்று தெளிவுறக் கூறாத இந்தப் பதிவரது எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவத்திற்குச் சமமான பிரளய மீட்சியின் பரிமாண பரிணாமங்களுக்கிடையேயான ரௌத்ரபூதாகார.......

பதில் சொல்றீங்களா இல்லையா?
//

பரிசல்.... போதும், போதும்..

என்ன பண்றது,, ஆபிஸ்ல வேற ஆணி சேந்து போச்சி,, ஊருக்குப் போன தங்கமணி இன்னிக்கு திரும்பி வர்றாங்கன்னு சென்ட்ரல் போனா இன்டர் சிட்டி வேற லேட்.. என்ன பண்ண???

இருந்தாலும் அண்ணன் பரிசல் அவர்களுக்கு "பின்நவீனத்துவ புதையல்", "பின்னூட்டப் புலி", "திருப்பூர் தங்கம்", "கொங்கு நாட்டு சிங்கம்" மற்றும் இன்னபிற பட்டங்களை இந்த நேரத்திலே கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

போதுமா சாமி...:))))

July 15, 2008 4:14 PM
வெண்பூ said...
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஆத்தாடி....நான் எஸ்கேப்பு...
//

அப்பிடி தப்பிச்சிக்கணும். அதுதான் நல்ல புள்ளைக்கு அழகு :))

July 15, 2008 4:15 PM
வெண்பூ said...
எனக்கென்னமோ நான் கொடுத்த 10 கேள்வி மட்டும் இல்லாம ச்சின்னப்பையனோட கேள்வியையும் சேத்து 11 கேள்விக்கும் பரிசல் "இல்லை"ன்னு பதில் கொடுத்திருப்பாருன்னு நெனக்கிறேன்.. என்னா சொல்றீங்க?

July 15, 2008 4:16 PM
தாமிரா said...
என்னை விட்டுவிட்டு அப்படி என்ன இங்கே 'எளக்கியவாதி' சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. அப்படி எந்த 'தாரை' எளக்கி ரோடு போட்டீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அத்தனைக் கேள்விகளுக்குமே (ச்சின்னப் பையனோடதும் சேர்த்து) இல்லை என் பதில் சொல்லும் (பரிசலையா நக்கல் பண்ணுகிறீர்கள்?) என்னை என்ன செய்யப் போகிறீர்கள்.? (அண்ணன் சென்ஷி இருக்கும் துணிச்சல்தான்)

July 15, 2008 5:37 PM
வெண்பூ said...
//தாமிரா said...
என்னை விட்டுவிட்டு அப்படி என்ன இங்கே 'எளக்கியவாதி' சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.//

ஆஹா... வாங்க, வாங்க.. அதுதான் வந்துட்டீங்களே, இனிமே என்ன கவல?

// அப்படி எந்த 'தாரை' எளக்கி ரோடு போட்டீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அத்தனைக் கேள்விகளுக்குமே (ச்சின்னப் பையனோடதும் சேர்த்து) இல்லை என் பதில் சொல்லும் (பரிசலையா நக்கல் பண்ணுகிறீர்கள்?) என்னை என்ன செய்யப் போகிறீர்கள்.?
//

ஒண்ணும் பண்ண முடியாது.. விஜய்க்கு கொடுத்த மாதிரி டாக்டர் பட்டமோ இல்ல மேல பரிசலுக்கு கொடுத்த மாதிரி உங்களுக்கும் "தாமிரபரணி தந்த தமிழ்பெருந்தகை" அப்படின்னு ஒரு பட்டமோ குடுத்துட வேண்டியதுதான்...

இது என்னா பட்டமளிப்பு வாரமா? வரிசையா வந்து வந்து வாங்கி கட்டிக்கிறாங்க...ச்சீ...வாங்கிட்டு பெருமையா போறாங்க...

//
(அண்ணன் சென்ஷி இருக்கும் துணிச்சல்தான்)
//

ஓ...இன்னும் அவரு வேற வருவாரு போலிருக்கு டோய்..

July 15, 2008 5:46 PM
கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்லா யோசிச்சிருக்கீங்க.. ( நல்லா பாதிக்கப்பட்டிருக்க்கீங்க)

பரிசல் அவர்களுக்கு இந்த நோய் கொஞ்சமாக முற்றிக்கொண்டுவருகிறது..பரணில் இருக்கும் குறிப்புக்கள் காலியாகவுடன் சீக்கிரமே குழப்பமான பதிவுகள் வரும்....

July 15, 2008 6:20 PM
வெண்பூ said...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
( நல்லா பாதிக்கப்பட்டிருக்க்கீங்க)
//

ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்ம் (அழுகாச்சி) நீங்க ஒருத்தர்தான்..ம்ம்ம்.. என்னை...ம்ம்ம்.. நல்லா புரிஞ்சிட்டீங்க...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

July 15, 2008 6:26 PM
சென்ஷி said...
:)

நல்லா இருக்குங்க...

July 15, 2008 10:21 PM
வெண்பூ said...
// சென்ஷி said...
:)

நல்லா இருக்குங்க...
//

நன்றி சென்ஷி..

July 15, 2008 11:11 PM
SanJai said...
முடியலடா சாமி... :)

July 16, 2008 10:04 PM
வெண்பூ said...
//SanJai said...
முடியலடா சாமி... :)
//

ஹி...ஹி...என்னாலயும்தான். அதனாலதான் இப்படி ஒரு பதிவு போட வேண்டியதா போச்சி.

வருகைக்கு நன்றி சஞ்சய்..

July 16, 2008 10:11 PM
மோகன் கந்தசாமி said...
அஞ்சல குஞ்சல அருவக்கத்தாடி எழுவக்கமைனா எட்டாஸ்கோட்ட தொம்மிதி பேட்ட தொஷ்கிராஜா மொழம் பழம்

மேல இருக்கறத கண்டுக்காதிங்க வெண்பூ,
உங்க சுயபரிசோதனை கையேடு சூப்பர்.

July 17, 2008 2:25 AM
விஜய் said...
பின்நவினத்துவம் பற்றி சர்ச்சயை ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆம் நல்ல தொடக்கம் முடிவைப் பார்ப்போம்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

July 17, 2008 5:57 AM
வெண்பூ said...
//மோகன் கந்தசாமி said...
அஞ்சல குஞ்சல அருவக்கத்தாடி
//

என்னாது இது...

//
மேல இருக்கறத கண்டுக்காதிங்க வெண்பூ,
உங்க சுயபரிசோதனை கையேடு சூப்பர்.
//

வருகைக்கு நன்றி மோகன்.

July 17, 2008 9:09 AM
வெண்பூ said...
//பின்நவினத்துவம் பற்றி சர்ச்சயை ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆம் நல்ல தொடக்கம் முடிவைப் பார்ப்போம்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com//

வாங்க விஜய்...

நாங்க ஏதோ கும்மியடிச்சிட்டு இருக்கோம். நீங்க சீரியஸா(?) நினைச்சிட்டீங்க போல..

July 17, 2008 9:11 AM
Thooya said...
:) நீங்க எப்படி? எல்லா கேள்விக்கும் "ஆம்" பதிலா போட்டிங்களா? ;)

July 21, 2008 6:59 AM
வெண்பூ said...
//Thooya said...
:) நீங்க எப்படி? எல்லா கேள்விக்கும் "ஆம்" பதிலா போட்டிங்களா? ;)
//

வாங்க தூயா...நாம ரெண்டாவது டைப். அதனாலதான் தேடிப்புடிச்சி மொக்க பதிவா படிச்சிட்டு இருக்கேன்.. :)

July 21, 2008 12:05 PM
பரிசல்காரன் said...
என்னாச்சு! பின்நவீனத்துவம் பத்தியெல்லாம் எழுதினா இப்பிடித்தான்.. கொஞ்ச நாளைக்கு வேற பதிவே எழுத முடியாது..

வாங்க வெண்பூ.. மனம் தளராம மொக்கை போடுங்க..

July 22, 2008 1:08 PM
வெண்பூ said...
அட என்ன பரிசல்... மொக்க போடுறதுக்கெல்லாம் நாம மனம் தளர்ந்துடுவமா என்ன?? வந்துட்டேன்.. சேத்து வச்ச‌ ஆணியெல்லாம் புடுங்கிட்டு இந்த வாரமே வந்துடறேன்..

July 22, 2008 2:01 PM
யோசிப்பவர் said...
1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

ஆம்

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

ஆமாம்

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

சுமாராக(இது தமிழ் இல்லை)

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

No

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

Yes

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

அமாம்ப்பா

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

தெர்யாதுபா

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

நெல்ல படம்னு தெர்ஞ்சாக்க, அத்தொ பாக்குறதில்லேனு ஒரு வயக்கம்

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

அட, அமாய்யா.

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

Yes




நான் என்ன வியாதி?!

July 22, 2008 3:50 PM
குசும்பன் said...
பின்நவீனத்துவவாதின்னா என்னங்க அர்த்தம்? அதுவே தெரியாதே எனக்கு?

July 22, 2008 3:54 PM
வெண்பூ said...
//யோசிப்பவர் said...
நான் என்ன வியாதி?!//

வாங்க யோசிப்பவர்...

ஏறத்தாழ எல்லா கேள்விக்கும் ஆமாம்னு பதில் சொன்னதால உங்களுக்கு (இன்னும்) வியாதி வரலன்னு லேப்ல இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு. எஞ்ஜாய்...

July 22, 2008 4:37 PM
வெண்பூ said...
//குசும்பன் said... //

வாங்க குசும்பன். முதல் தடவையா வர்றீங்கன்னு நினைக்கிறேன். வருகைக்கு நன்றி..

//
பின்நவீனத்துவவாதின்னா என்னங்க அர்த்தம்? அதுவே தெரியாதே எனக்கு?
//

அப்படி போடு அறுவாள... அதுக்கான விளக்கம்தான் மொத கேள்வியிலயே இருக்கே...ஹி..ஹி..

கும்க்கி on December 7, 2008 at 10:21 AM said...

யாருக்கும் இம்சை தராத வலிகள் எங்கும் பரவட்டும்...............
(எங்கியோ படிச்சதா நெனப்பு)

கார்க்கி on December 7, 2008 at 10:43 AM said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...

தமிழ்ல போட்டா, எதுக்குன்னு கேட்டுட்டு, இங்கிலிபிஷ்ல போட்டதுக்கு மட்டும் மகிழ்ச்சியா இருக்குன்னு சொல்ற கார்க்கிக்கு கடும் கண்டனங்கள்!!//

எப்பண்ணா அப்படி கேட்டேன்?????????

**********************************

//கும்க்கி said...
ஜஸ்ட் மிஸ்//

எதங்க?

*************************************8
//சென்ஷி said...
:))

நல்லா இருக்குங்க

(இது நான் வெண்பூ பதிவுல போட்ட கமெண்டு..//

நன்றி சென்ஷி.

(இதுவும் வெண்பூ சொன்ன பதில்தான் தல)

கார்க்கி on December 7, 2008 at 10:46 AM said...

//பதிவை பற்றி, 10 பாயிண்டுக்கும் 10க்கு 1//

கோவியாரே.. பத்துக்கும் ஆமாவா இல்லையா?

****************************************************


//கும்க்கி said...
யாருக்கும் இம்சை தராத வலிகள் எங்கும் பரவட்டும்...............
(எங்கியோ படிச்சதா நெனப்//

நான் இங்கதாங்க படிச்சேன்.

muru on December 7, 2008 at 10:56 AM said...

பதிவு மிக நன்றாக இருக்கிறது. அதற்கும் மேலாக மில அருமையான நண்பர் கூட்டணி அமைத்துள்ளீர்.
வாழ்த்துக்கள்.

கும்க்கி on December 7, 2008 at 12:55 PM said...

ஹப்பா ஒரு பெர்ரிய்ய்ய்ய்ய்ய ஓஸி பின்னூட்டம் போட்டாச்சி......
(முறைக்காதீங்க மகிழுந்து திரவுகோள் காரரே.. நன்றி-ஸ்மைலி ஆனந்த்)

வால்பையன் on December 7, 2008 at 12:59 PM said...

ஏற்கனவே படித்திருந்தாலும் இன்றும் சுவை குன்றாமல் இருகிறது

அத்திரி on December 7, 2008 at 2:15 PM said...

அடப்பாவிகளா இப்பதான் தாமிராவோட மொக்கை தாங்க முடியாம இங்க வந்தா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. என்னத்த சொல்ல

வித்யா on December 7, 2008 at 2:59 PM said...

ஆஜர் மட்டும் போட்டுட்டு அப்பீட்டு ஆறேன்:)

தாமிரா on December 7, 2008 at 3:28 PM said...

நான் ரசித்த பதிவு கார்க்கி.!

உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.// இதை முதலில் வெண்பூதான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன். இன்று பலரும் உபயோகிப்பதைக்காண்கிறோம்.

கார்க்கி on December 7, 2008 at 4:07 PM said...

//muru said...
பதிவு மிக நன்றாக இருக்கிறது. அதற்கும் மேலாக மில அருமையான நண்பர் கூட்டணி அமைத்துள்ளீர்.//

நன்றி முரு.. நீங்களும் ஒருவர் ஆகிவிட்டதால் அபப்டி சொல்றீங்களே?

****************************

//(முறைக்காதீங்க மகிழுந்து திரவுகோள் காரரே.. நன்றி-ஸ்மைலி ஆனந்//

கும்க்கி அண்ணா அது திறவுகோல்

**************************************

//வால்பையன் said...
ஏற்கனவே படித்திருந்தாலும் இன்றும் சுவை குன்றாமல் இருகிற//

வெண்பூவிடம் சொல்லிடறேன் சகா..

**************************

கார்க்கி on December 7, 2008 at 4:08 PM said...

//அத்திரி said...
அடப்பாவிகளா இப்பதான் தாமிராவோட மொக்கை தாங்க முடியாம இங்க வந்//

உலகெங்கும் பரவி கிடக்குது மொக்கை.

**********************

//வித்யா said...
ஆஜர் மட்டும் போட்டுட்டு அப்பீட்டு ஆறேன்://

பாண்டியா சென்னையா?????????

*************************

//தாமிரா said...
நான் ரசித்த பதிவு கார்க்கி.//

எல்லோரும் ர‌சித்த‌ ஒன்றுதான் ச‌கா. அதான் தேடி பிடிச்சு போட்டேன்

RAMYA on December 7, 2008 at 4:09 PM said...

கார்க்கி, உங்களை பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை சொல்லவே முடியாது, பத்மாவும் கொஞ்சம் இதமாவும் பிடிச்சி இருக்கு.

ஆத்தி இம்புட்டு வார்த்தை பிரயோகமா? எப்பிடி கார்க்கி ?

வித்யாவோட பதிவிலே அடிச்ச கும்மி இங்கே ஆரம்பிக்குதா? பாவி மக்கா

படிச்சிட்டு எனக்கு தலையை சுத்துது.. அப்பா எனக்கு கண்ணே கட்டுதே.

இன்னும் என்னென்ன இந்த கார்க்கி...... கடவுளே கடவுளே!!

RAMYA on December 7, 2008 at 4:13 PM said...

// விஜய் ஆனந்த் said...
:-)))...

தமிழ்ல போட்டா, எதுக்குன்னு கேட்டுட்டு, இங்கிலிபிஷ்ல போட்டதுக்கு மட்டும் மகிழ்ச்சியா இருக்குன்னு சொல்ற கார்க்கிக்கு கடும் கண்டனங்கள்!!!
//


கண்டனம் போட்ட மட்டும் அடங்கவா போறோம்?
நாங்க யாரு? தெரயுமில்லே......

இது விஜய் ஆனந்த்க்கு இன்னும் தெரியலை.

பாவம் விஜய் ஆனந்த் .. இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்காரு.

கார்க்கியோட ரேஞ்சே இன்னும் புரியலை.....

கார்க்கி on December 7, 2008 at 4:13 PM said...

//பத்மாவும் கொஞ்சம் இதமாவும் பிடிச்சி இருக்கு//

பார்த்து டைப் பண்ணும்மா.. பதமாவும் சொல்றது பதிலா பதிமாவுன் அடிச்சிருக்கிங்க.. என்னை தப்பா நினைக்க போறாங்க‌

கார்க்கி on December 7, 2008 at 4:14 PM said...

//கார்க்கியோட ரேஞ்சே இன்னும் புரியலை....//

ஆஹா.. பள்ளம் ரெடி.. நான் உள்ள விழ் வேண்டியதுதான் பாக்கியா????????????????

RAMYA on December 7, 2008 at 4:30 PM said...

//
கார்க்கி said...
//பத்மாவும் கொஞ்சம் இதமாவும் பிடிச்சி இருக்கு//

பார்த்து டைப் பண்ணும்மா.. பதமாவும் சொல்றது பதிலா பதிமாவுன் அடிச்சிருக்கிங்க.. என்னை தப்பா நினைக்க போறாங்க‌

//


Spelling Mistake sry,

அது இருக்கட்டும் .....
தமிழ் தெரியும் தானே, சரியா படிங்க,

நாங்க தப்பா டைப் செய்தாலும், தப்பா நினைக்காம, தப்பு தப்பா கற்பனை பண்ணாமே, சரியா புரிஞ்சுக்கணும். சரியா?

RAMYA on December 7, 2008 at 4:32 PM said...

//
கார்க்கி said...
//கார்க்கியோட ரேஞ்சே இன்னும் புரியலை....//

ஆஹா.. பள்ளம் ரெடி.. நான் உள்ள விழ் வேண்டியதுதான் பாக்கியா????????????????
//

பள்ளமா எவ்வளவு அடி நீளம் அகலம், அது தெரிய வேண்டாமா, ?

என்னா சத்தமா சொல்லுங்கோ, எனக்கு காது கொஞ்சம்.... ஹி ஹி ஹி.....

கார்க்கி on December 7, 2008 at 4:36 PM said...

//நாங்க தப்பா டைப் செய்தாலும், தப்பா நினைக்காம, தப்பு தப்பா கற்பனை பண்ணாமே, சரியா புரிஞ்சுக்கணும். சரியா?//

நான் சரியாதாங்க புரிஞ்சிக்கிட்டேன்.. வர்றவங்க உங்கள் மாதிரியே(ச்சும்மா) இருந்தா தப்பா நினைக்க மாட்டாங்களா? :))))

//என்னா சத்தமா சொல்லுங்கோ, எனக்கு காது கொஞ்சம்.... ஹி ஹி ஹி.//

காதுமா??????????????????//

RAMYA on December 7, 2008 at 4:43 PM said...

//
கார்க்கி said...
//நாங்க தப்பா டைப் செய்தாலும், தப்பா நினைக்காம, தப்பு தப்பா கற்பனை பண்ணாமே, சரியா புரிஞ்சுக்கணும். சரியா?//

நான் சரியாதாங்க புரிஞ்சிக்கிட்டேன்.. வர்றவங்க உங்கள் மாதிரியே(ச்சும்மா) இருந்தா தப்பா நினைக்க மாட்டாங்களா? :))))

//என்னா சத்தமா சொல்லுங்கோ, எனக்கு காது கொஞ்சம்.... ஹி ஹி ஹி.//

காதுமா??????????????????//

//

காதுமா???????????????

இல்லே காதுமட்டுதான்.........

RAMYA on December 7, 2008 at 4:47 PM said...

//
//நாங்க தப்பா டைப் செய்தாலும், தப்பா நினைக்காம, தப்பு தப்பா கற்பனை பண்ணாமே, சரியா புரிஞ்சுக்கணும். சரியா?//

நான் சரியாதாங்க புரிஞ்சிக்கிட்டேன்.. வர்றவங்க உங்கள் மாதிரியே(ச்சும்மா) இருந்தா தப்பா நினைக்க மாட்டாங்களா? :))))
//


கண்ணு ரொம்ப சுத்தமா இருக்கு போல,

கூர்ந்து பார்த்தாதான் தெரியுது, அதே எப்படிப்பா படிக்கும்போதே.....

என்ன நமக்கு சாதகமா இருக்கு பாத்துகிட்டே படிப்பீங்களா.

தாங்க முடியலைப்பா.

நல்லா இருங்கப்பு..........

கார்க்கி on December 7, 2008 at 4:51 PM said...

//
தாங்க முடியலைப்பா.

நல்லா இருங்கப்பு.....//

உங்க ஆசிர்வாதாம் தாயீ

RAMYA on December 7, 2008 at 4:54 PM said...

//
கார்க்கி said...
//
தாங்க முடியலைப்பா.

நல்லா இருங்கப்பு.....//

உங்க ஆசிர்வாதாம் தாயீ
//

சரியா போச்சு.........

கார்க்கி on December 7, 2008 at 5:00 PM said...

ஹிஹிஹி

RAMYA on December 7, 2008 at 5:04 PM said...

//
கார்க்கி said...
ஹிஹிஹி
//

ரொம்ப சிரிக்க வேணாம், பல்லு சுளுக்கிடும்.

கார்க்கி on December 7, 2008 at 5:05 PM said...

//ரொம்ப சிரிக்க வேணாம், பல்லு சுளுக்கிடும்//

இந்த சிரிப்புக்கு கைதான் சுளுக்கும்.

RAMYA on December 7, 2008 at 5:09 PM said...

//
கார்க்கி said...
//ரொம்ப சிரிக்க வேணாம், பல்லு சுளுக்கிடும்//

இந்த சிரிப்புக்கு கைதான் சுளுக்கும்.

//

ஏன் கார்க்கி பதில் டைப் செய்து செய்து கை சுளுக்குமோ,

சன்ஜீவனத்துலே சுளுக்கு எடுக்குறாங்களாம், அங்கே போக வழி தெரியுமா?

கார்க்கி on December 7, 2008 at 5:12 PM said...

//ஏன் கார்க்கி பதில் டைப் செய்து செய்து கை சுளுக்குமோ,

சன்ஜீவனத்துலே சுளுக்கு எடுக்குறாங்களாம், அங்கே போக வழி தெரியுமா//

ஆமாங்க..

எனக்கு சஞீவனே தெரியாது. அப்புறம் எங போய் வழி சொல்றது?

RAMYA on December 7, 2008 at 5:15 PM said...

//
ஆமாங்க..

எனக்கு சஞீவனே தெரியாது. அப்புறம் எங போய் வழி சொல்றது?
//

என்னா பசியா, அம்மா இந்த வாலு பையனுக்கு சாப்பாடு போட வில்லையா?

வார்த்தைகள் முழுமை அடையவில்லை.
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்

கார்க்கி on December 7, 2008 at 5:17 PM said...

//என்னா பசியா, அம்மா இந்த வாலு பையனுக்கு சாப்பாடு போட வில்லையா?

வார்த்தைகள் முழுமை அடையவில்லை.
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்//

நீங்க அறிவுஜீவிங்க.. எப்படி சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டிங்களா? காது மந்தம்ன்னாலும் அறிவுக் கொழுந்து இல்ல..

அத்திரி on December 7, 2008 at 5:17 PM said...

கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு

அத்திரி on December 7, 2008 at 5:18 PM said...

கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களாடே

அத்திரி on December 7, 2008 at 5:18 PM said...

கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களாடே

கார்க்கி on December 7, 2008 at 5:18 PM said...

//அத்திரி said...
கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு//

எந்தக் கேள்விங்க? ஆம் இல்லைன்னு சொல்லுங்க...

அத்திரி on December 7, 2008 at 5:18 PM said...

கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களாடே

அத்திரி on December 7, 2008 at 5:18 PM said...

கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களாடே

அத்திரி on December 7, 2008 at 5:19 PM said...

கும்மி அடிக்கிற மூடுல இருக்கேன் இப்பதான் தாமிரா பதிவுல இருந்து வாரேன்

அத்திரி on December 7, 2008 at 5:19 PM said...

கும்மி அடிக்கிற மூடுல இருக்கேன் இப்பதான் தாமிரா பதிவுல இருந்து வாரேன்

கார்க்கி on December 7, 2008 at 5:20 PM said...

//அத்திரி said...
கும்மி அடிக்க யாராவது இருக்கீங்களாடே//

ரம்யாவும் நானும் இருக்கோங்க‌

அத்திரி on December 7, 2008 at 5:20 PM said...

கேள்விய அப்புறமா பாத்துக்கலாம்

அத்திரி on December 7, 2008 at 5:21 PM said...

எல்லா சேனலயும் மொக்க பாட்டு தான் போவுது

அத்திரி on December 7, 2008 at 5:21 PM said...

48

அத்திரி on December 7, 2008 at 5:21 PM said...

49

அத்திரி on December 7, 2008 at 5:21 PM said...

50

அத்திரி on December 7, 2008 at 5:22 PM said...

50 போட்டாச்சு அப்ப நான் போய்ட்டு வர்றேன்

அத்திரி on December 7, 2008 at 5:23 PM said...

ஏன்ல ரெண்டு பேரும் சைலன்ட்டா இருக்கீங்க

அத்திரி on December 7, 2008 at 5:24 PM said...

இசை அருவியில நல்ல பாட்டு போவுது சகா

கார்க்கி on December 7, 2008 at 5:24 PM said...

//அத்திரி said...
ஏன்ல ரெண்டு பேரும் சைலன்ட்டா இருக்கீங்//

நாங்க சொல்றதெல்லாம் கேட்காம நீங்க அடிச்சு போயிட்டே இருக்கிங்க..

RAMYA on December 7, 2008 at 5:28 PM said...

//
நீங்க அறிவுஜீவிங்க.. எப்படி சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டிங்களா? காது மந்தம்ன்னாலும் அறிவுக் கொழுந்து இல்ல..
//

ஹையோ ஹையோ, கும்மி நல்லா இருக்கு நான் 50 போடனும்னு நினைச்சேன்

ம்ம்ம்ம் அத்திரி வந்து முடிச்சாச்சு
போனால் போகட்டும் போடா....

அத்திரி on December 7, 2008 at 5:29 PM said...

இப்ப சொல்லு சகா

அத்திரி on December 7, 2008 at 5:30 PM said...

தாமிரா பதிவுல வேற போய்க்கிட்டு இருக்கு

அத்திரி on December 7, 2008 at 5:31 PM said...

யாரு நூறு அடிக்கலாம்னு பாக்கலாமா

அத்திரி on December 7, 2008 at 5:32 PM said...

இப்ப சொல்லு சகா ஏன் இந்த அமைதி

மொக்கைகளின் தலைவனே

தாமிராவையும் கெடுத்திட்டியே

அத்திரி on December 7, 2008 at 5:34 PM said...

இப்ப சொல்லு சகா ஏன் இந்த அமைதி

அத்திரி on December 7, 2008 at 5:35 PM said...

நான் ஒரு பதிவு எழுதிட்டு வாறேன்

கார்க்கி on December 7, 2008 at 7:46 PM said...

நன்றி அத்திரி

தாரணி பிரியா on December 7, 2008 at 10:22 PM said...

ஹை எல்லாம் கேள்விக்கும் இல்லைதான் சொன்னேன்.

 

all rights reserved to www.karkibava.com