Dec 4, 2008

இந்த வார விகடனும் நானும்


     இந்த வாரம் ஆனந்த விகடனை மேய்ந்த போது ஏனோ தெரியவில்லை பல பழைய விதயங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தன.

1) ஆறாம் பக்கத்தில் ஏ.பி.பரதன் சொன்னதாக இருந்த தகவல் " இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறது". இவரேதான் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்றார். பாவம் தோழர்கள்.

2) அவர்தான் அரசியல்வாதி.பதினாறாவது பக்கத்தில் ஜீ.வி.பிரகாஷின் பேட்டி. அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக "அதோ அந்தப் பறவை போல" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறாராம். இவரிடம் இதே விகடன் ரீமிக்ஸ் பற்றி கருத்துக் கேட்டபோது அது ஒரு பாவச் செயல் போல சொல்லியிருந்தார். பொல்லாதவன் படத்தில் வந்த எங்கேயும் பாடலைக் கூட இவர் கம்போஸ் செய்யவில்லை. யோகி பி தான் செய்திருந்ததாக சொல்லியிருந்தார். இப்போ என்ன ஆச்சு ஜீ.வி?

   இதேப் போல் போன வாரம் ஹாரிஸ் ஜெயராஜ் ரீமிக்ஸ் பற்றி சொன்னபோது அது ஒரு கீழ்த்தரமான செயல் என்று சொன்னார். இவரு மற்ற மொழி பாடல்களை சுட்டு போடுவது உயர்ந்த செயலாம். உரிமை வாங்கி ரீமிக்ஸ் செய்வது கீழ்த்தரமான செயலாம். என்னங்க செய்யலாம் இவங்கள?

3)  நாற்பத்தி ஆறாவது பக்கத்தில் நடிகை சிந்து மேனனின் பேட்டி.இவர் கடல்பூக்கள்,யூத்,சமுத்திரம் மற்றும் பல படங்களில் நடித்தவர். சமுத்திரம் படம் வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம். அவர் சொல்ல வருவது அவருக்கு இப்போது வயது 20தானாம். ங்கொய்யால.

4) ஐம்பத்தி நாலாவது பக்கத்தில் வேலு பிரபாகரனின் பேட்டி. ஒரு காலத்தில் ரஜினி ஒரு நடிகனே அல்ல என்றவர் இன்று இப்படி சொல்கிறார் "பகுத்தறிவு பிரச்சாரம் செய்த நான் வீடு இல்லாமல் நடுத்தெருவில் நின்றபோது, நண்பர் ரஜினி செய்த உதவி செய்தார். சூப்பர் ஸ்டார் செய்த உதவி வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது.” 150 படங்கள் நடித்து நடிகன் என்று கூட இவரிடம் பேர் வாங்க முடியாத ரஜினி இவருக்கு உதவி செய்தபின் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார். எல்லா சொத்தையும் விட்டு நடுத்தெருவுக்கு வரும்படி நடந்த இவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவராம். போங்கண்ணே போய் உங்க புள்ளக்குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க.

  5) நம்ம கேப்டன் வாராவாரம் ஊர்வலம் போகிறார். இந்த வாரம் விழுப்புரமருகே ஒரு பள்ளிக்கூடம். அங்கே போய் அவர் சொன்னது ,சேலம் மாவட்டத்துல பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் தண்ணியடித்துக் கொண்டிருந்தார்களாம். தலைவா, நீங்கப் போய் நின்னப்ப கூட பள்ளி நடந்துக் கொண்டிருந்தது. அதுக்காக அவங்க செஞ்சது நியாயம்னு சொல்ல வரல. நீங்க மாலை 5 மணிக்கு மேல போயிருக்கலாமே?

   6) இந்த வார இதழில் எனக்கு மிகவும் பிடித்தது ஆனந்தின் பேட்டி. செஸ் காய்களில் உங்களுக்கு பிடித்தது எது என்ற கேள்விக்கு அவரின் பதில். " சிப்பாய்! செஸ்ஸில் ஒரு ராஜா கடைசி வரை ஓடி ஒளிந்துக் கொண்டே இருப்பார். பிஷப் ராஜாவைக் காப்பாற்ற வியூகங்களை வகுப்பார். தேவைப்பட்டால் பின்வாங்குவார். ஆனால் சிப்பாய் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிர்கொடுப்பார். நான் என்னை சிப்பாயாக நினைத்துக் கொள்வதாலே என் ராஜாவைக் காப்பாற்ற முடிந்தது. ராஜாவாக வேண்டுமானால் முதலில் சிப்பாயாக வேண்டும்" நீங்க எப்பவும் ராஜாதாங்க‌

80 கருத்துக்குத்து:

அருண் on December 4, 2008 at 11:09 AM said...

Me the First :)

அருண் on December 4, 2008 at 11:09 AM said...

இப்போ போஸ்ட் படிக்கலாம்.

அருண் on December 4, 2008 at 11:17 AM said...

//ல்லா சொத்தையும் விட்டு நடுத்தெருவுக்கு வரும்படி நடந்த இவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவராம். போங்கண்ணே போய் உங்க புள்ளக்குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க. //

நல்ல punch. பகுத்தறிவு பிரச்சாரம் செய்யரவங்களுக்கு இது தான் கதியோ?

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:20 AM said...

ஹை மீ த 4?

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:20 AM said...

அண்ணா சூப்பர் போஸ்ட் :))

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:22 AM said...

உங்களுக்கு நிஜமாவே ஞாபக சக்தி அதிகமா?? எப்படி எல்லா விஷயத்தையும் அதோட தொடர்புடைய விஷயங்களையும் ஞாபகம் வெச்சிருக்கீங்க?? Really great.. :))

அருண் on December 4, 2008 at 11:22 AM said...

//இதேப் போல் போன வாரம் ஹாரிஸ் ஜெயராஜ் ரீமிக்ஸ் பற்றி சொன்னபோது அது ஒரு கீழ்த்தரமான செயல் என்று சொன்னார். இவரு மற்ற மொழி பாடல்களை சுட்டு போடுவது உயர்ந்த செயலாம். உரிமை வாங்கி ரீமிக்ஸ் செய்வது கீழ்த்தரமான செயலாம்.//

இங்கிட்ட பெரிய லிஸ்டே இருக்கு, நம்ம ஹாரிஸ் எங்க இருந்து சுடராருன்னு.

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:22 AM said...

நானும் அதே விகடன்தான் மேஞ்சேன் எனக்கு.. ம்ஹும் ஒன்னும் தேரல.. :((

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:24 AM said...

//1) ஆறாம் பக்கத்தில் ஏ.பி.பரதன் சொன்னதாக இருந்த தகவல் " இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறது". இவரேதான் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்றார். பாவம் தோழர்கள்.//

இந்த அரசியல் விஷயமெல்லாம் ஏனோ எனக்கு புரியவேமாட்டேங்குது.. :(((

அருண் on December 4, 2008 at 11:24 AM said...

வாங்க ஸ்ரீமதி அக்கா. நீங்க மற்றும் கவிதைகள் எல்லாம் சுகமா?

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:24 AM said...

//2) அவர்தான் அரசியல்வாதி.பதினாறாவது பக்கத்தில் ஜீ.வி.பிரகாஷின் பேட்டி. அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக "அதோ அந்தப் பறவை போல" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறாராம். இவரிடம் இதே விகடன் ரீமிக்ஸ் பற்றி கருத்துக் கேட்டபோது அது ஒரு பாவச் செயல் போல சொல்லியிருந்தார். பொல்லாதவன் படத்தில் வந்த எங்கேயும் பாடலைக் கூட இவர் கம்போஸ் செய்யவில்லை. யோகி பி தான் செய்திருந்ததாக சொல்லியிருந்தார். இப்போ என்ன ஆச்சு ஜீ.வி? இதேப் போல் போன வாரம் ஹாரிஸ் ஜெயராஜ் ரீமிக்ஸ் பற்றி சொன்னபோது அது ஒரு கீழ்த்தரமான செயல் என்று சொன்னார். இவரு மற்ற மொழி பாடல்களை சுட்டு போடுவது உயர்ந்த செயலாம். உரிமை வாங்கி ரீமிக்ஸ் செய்வது கீழ்த்தரமான செயலாம். என்னங்க செய்யலாம் இவங்கள?//

இத நானும் கவனிச்சேன் :((

சரவணகுமரன் on December 4, 2008 at 11:25 AM said...

//அவருக்கு இப்போது வயது 20தானாம். ங்கொய்யால. //

//எல்லா சொத்தையும் விட்டு நடுத்தெருவுக்கு வரும்படி நடந்த இவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவராம். போங்கண்ணே போய் உங்க புள்ளக்குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க.//

சூப்பர், கார்க்கி...

நாடோடி இலக்கியன் on December 4, 2008 at 11:25 AM said...

நல்ல கேள்விகள்.
1ம்,5ம் சூப்பரோ சூப்பர்.

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:27 AM said...

//3) நாற்பத்தி ஆறாவது பக்கத்தில் நடிகை சிந்து மேனனின் பேட்டி.இவர் கடல்பூக்கள்,யூத்,சமுத்திரம் மற்றும் பல படங்களில் நடித்தவர். சமுத்திரம் படம் வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம். அவர் சொல்ல வருவது அவருக்கு இப்போது வயது 20தானாம். ங்கொய்யால.//

எனக்கும் இதப்படிச்சு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு.. அது அப்போவே ஆன்டி மாதிரி தான் இருந்தது.. இப்ப கொஞ்சம் இளைசிருக்கு.. அதுக்காக இப்படியா பொய் சொல்லும்?? என்னைவிட பெரிய தில்லாலங்கடியா இருப்பா போலிருக்கு.. ;))

கார்க்கி on December 4, 2008 at 11:27 AM said...

@அருண் & ஸ்ரீமதி

இத்தணை பின்னூட்டம் போடறீங்க. அப்படியே மேல தமிழ்மனத்துல ஒரு வோட்டும் போட்டா நல்லயிருக்குமில்ல??????????

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:28 AM said...

//4) ஐம்பத்தி நாலாவது பக்கத்தில் வேலு பிரபாகரனின் பேட்டி. ஒரு காலத்தில் ரஜினி ஒரு நடிகனே அல்ல என்றவர் இன்று இப்படி சொல்கிறார் "பகுத்தறிவு பிரச்சாரம் செய்த நான் வீடு இல்லாமல் நடுத்தெருவில் நின்றபோது, நண்பர் ரஜினி செய்த உதவி செய்தார். சூப்பர் ஸ்டார் செய்த உதவி வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது.” 150 படங்கள் நடித்து நடிகன் என்று கூட இவரிடம் பேர் வாங்க முடியாத ரஜினி இவருக்கு உதவி செய்தபின் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார். எல்லா சொத்தையும் விட்டு நடுத்தெருவுக்கு வரும்படி நடந்த இவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவராம். போங்கண்ணே போய் உங்க புள்ளக்குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க.//

சாரி இவர் யாருன்னே எனக்கு தெரியல அண்ணா.. :((

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:29 AM said...

// கார்க்கி said...
@அருண் & ஸ்ரீமதி

இத்தணை பின்னூட்டம் போடறீங்க. அப்படியே மேல தமிழ்மனத்துல ஒரு வோட்டும் போட்டா நல்லயிருக்குமில்ல??????????//

போடுவோம் அண்ணா வெயிட் பண்ணுங்க.. எவ்ளோ சீரியஸ்சா பின்னூட்டம் போட்டுட்டு இருக்கேன்.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. ;))))))

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:29 AM said...

ம்ம்ம் எங்கவிட்டேன்??

அருண் on December 4, 2008 at 11:31 AM said...

// கார்க்கி said...
@அருண் & ஸ்ரீமதி
இத்தணை பின்னூட்டம் போடறீங்க. அப்படியே மேல தமிழ்மனத்துல ஒரு வோட்டும் போட்டா நல்லயிருக்குமில்ல??????????//

போட்டாச்சு. போட்டாச்சு.

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:31 AM said...

//5) நம்ம கேப்டன் வாராவாரம் ஊர்வலம் போகிறார். இந்த வாரம் விழுப்புரமருகே ஒரு பள்ளிக்கூடம். அங்கே போய் அவர் சொன்னது ,சேலம் மாவட்டத்துல பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் தண்ணியடித்துக் கொண்டிருந்தார்களாம். தலைவா, நீங்கப் போய் நின்னப்ப கூட பள்ளி நடந்துக் கொண்டிருந்தது. அதுக்காக அவங்க செஞ்சது நியாயம்னு சொல்ல வரல. நீங்க மாலை 5 மணிக்கு மேல போயிருக்கலாமே? //

இந்த தாத்தா திடீர்ன்னு பார்த்தா வயல்ல நிக்கிறாரு.. திடீர்ன்னு ஸ்கூல்க்கெல்லாம் போறாரு.. ம்ம்ம்ம் தமிழன் நிலைமை என்னாகுமோ?? :((

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:32 AM said...

//6) இந்த வார இதழில் எனக்கு மிகவும் பிடித்தது ஆனந்தின் பேட்டி. செஸ் காய்களில் உங்களுக்கு பிடித்தது எது என்ற கேள்விக்கு அவரின் பதில். " சிப்பாய்! செஸ்ஸில் ஒரு ராஜா கடைசி வரை ஓடி ஒளிந்துக் கொண்டே இருப்பார். பிஷப் ராஜாவைக் காப்பாற்ற வியூகங்களை வகுப்பார். தேவைப்பட்டால் பின்வாங்குவார். ஆனால் சிப்பாய் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிர்கொடுப்பார். நான் என்னை சிப்பாயாக நினைத்துக் கொள்வதாலே என் ராஜாவைக் காப்பாற்ற முடிந்தது. ராஜாவாக வேண்டுமானால் முதலில் சிப்பாயாக வேண்டும்" நீங்க எப்பவும் ராஜாதாங்க‌//

வாவ் சேம் ஸ்வீட் அண்ணா.. :)) எனக்கும் இது தான் பிடிச்சிருந்தது.. :))

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:33 AM said...

அண்ணா ஓட்டு போட்டுட்டேன் :))

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:34 AM said...

ஆனா, யாருக்கு போட்டேன்னு சொல்லமாட்டேன்.. அது ரகசியமா வெச்சிக்கனுமாம்ல?? ;))))))

கார்க்கி on December 4, 2008 at 11:38 AM said...

காலை வணக்கம் அருண்

*************************

//சூப்பர், கார்க்கி..//

நன்றி சரவனகுமரன்
********************

//நாடோடி இலக்கியன் said...
நல்ல கேள்விகள்.
1ம்,5ம் சூப்பரோ சூப்பர்//

நன்றி இலக்கியன்.
********************

விரிவான பின்னூட்டதிற்கும் வோட்டிற்கும் நன்றி ஸ்ரீமதி

வித்யா on December 4, 2008 at 11:40 AM said...

நான் விகடன் வாங்குவதற்க்கு ஒரே காரணம் கிருஷ்ணவேனி தொடர்கதை தான்???!!!! மத்தபடி எல்லாம் குப்பை. பழைய தரம் மிஸ்ஸிங்.

வித்யா on December 4, 2008 at 11:42 AM said...

me the 25th:)))))))

வித்யா on December 4, 2008 at 11:43 AM said...

\\அவர் சொல்ல வருவது அவருக்கு இப்போது வயது 20தானாம். ங்கொய்யால.//

ஹூம் அர்ஜூன் படத்துல நடிக்கும்போது அபிராமி நான் 12th சொன்னதுக்கு இது எவ்ளோவோ மேல்:)

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:55 AM said...

//அருண் said...
வாங்க ஸ்ரீமதி அக்கா. நீங்க மற்றும் கவிதைகள் எல்லாம் சுகமா?//

ஓஓ எல்லாம் சுகமே.. :))(சாரி இப்ப தான் கவனிச்சேன்.. :(( )

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:56 AM said...

29

ஸ்ரீமதி on December 4, 2008 at 11:56 AM said...

me the 30??

prakash on December 4, 2008 at 12:13 PM said...

//இவரேதான் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்றார். பாவம் தோழர்கள். //

அம்மா கம்யுனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்தால் மட்டும் ஜெயித்து விட முடியுமா?

உகண்டாவிலே தனக்கென பெரும் ஒட்டு வங்கி வைத்திருக்கும் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் அவர்களின் ஆசியும் கூட்டணியும் மிக அவசியம்..

prakash on December 4, 2008 at 12:19 PM said...

//அப்போது இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம். அவர் சொல்ல வருவது அவருக்கு இப்போது வயது 20தானாம். ங்கொய்யால.//

டென்ஷன் ஆகாதப்பா ஒம்போதாம் வகுப்பு படிச்சேன் தானே சொன்னாங்க. ஒவ்வொரு வகுப்புலேயும் 3 வருஷம் படிச்சிருப்பாங்க.

prakash on December 4, 2008 at 12:24 PM said...

//தலைவா, நீங்கப் போய் நின்னப்ப கூட பள்ளி நடந்துக் கொண்டிருந்தது. //

இதுல எதாவது உள்குத்து இருக்கா கார்க்கி? அவரும் அந்தமாதிரி தான் போனார்னு சொல்றியா?

கார்க்கி on December 4, 2008 at 12:26 PM said...

/வித்யா said...
நான் விகடன் வாங்குவதற்க்கு ஒரே காரணம் கிருஷ்ணவேனி தொடர்கதை தான்???!!!! மத்தபடி எல்லாம் குப்பை. பழைய தரம் மிஸ்ஸி//

நன்றி வித்யா.. சில சமயம் நல்லாயிருக்கு. கன்ஸிச்டென்ஸி இல்லைன்னு நினைக்கிறேன். நன்றி வித்யா..

*******************************

/உகண்டாவிலே தனக்கென பெரும் ஒட்டு வங்கி வைத்திருக்கும் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் அவர்களின் ஆசியும் கூட்டணியும் மிக அவசியம்..//

தலைவர் சரத்குமார்?

//டென்ஷன் ஆகாதப்பா ஒம்போதாம் வகுப்பு படிச்சேன் தானே சொன்னாங்க. ஒவ்வொரு வகுப்புலேயும் 3 வருஷம் படிச்சிருப்பாங்க//

ஓ உங்க செட்டா அண்ணே?

/இதுல எதாவது உள்குத்து இருக்கா கார்க்கி? அவரும் அந்தமாதிரி தான் போனார்னு சொல்றியா?//

எந்தக் குத்தும் இல்லை சாமி.. என்னை குத்து வாங்க வச்சிடாதீங்க :)))

prakash on December 4, 2008 at 12:30 PM said...

//சிப்பாய் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிர்கொடுப்பார். //

இங்கே நம் நாட்டு சிப்பாய்களின் உயிர் நம் நாட்டு அரசியல் காமடியன்களின் உயிரை காப்பற்ற வீணாகி கொண்டிருக்கிறது.

prakash on December 4, 2008 at 12:33 PM said...

//ஓ உங்க செட்டா அண்ணே?//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
பப்ளிக் பப்ளிக்...::))

prakash on December 4, 2008 at 12:37 PM said...

//தலைவர் சரத்குமார்?//

அவருக்கு சோமாலியாவிலே நல்ல செல்வாக்கு இருக்கு ஆனா அது இந்திய அரசோட கட்டுப்பாட்டிலே இல்லாததால் அவருடன் கூட்டணியால் எந்த பயனும் இல்லை :))

prakash on December 4, 2008 at 12:41 PM said...

அப்புறம் தமிழக மக்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன்..
திறமையானவருக்கு, நல்லவருக்கு உங்கள் வோட்டை அளியுங்கள்

ஹி ஹி... நான் கார்க்கிக்கு வோட்டு போட்டுட்டேன்..

நான் ஆதவன் on December 4, 2008 at 12:47 PM said...

அரசியல் நெடி ஜாஸ்தியா இருக்கே சகா...

ஆனாலும் ரொம்ப நல்லா இருக்கு

முரளிகண்ணன் on December 4, 2008 at 1:08 PM said...

பதிவு சூப்பர். பின்னூட்ட கும்மி சூப்பரோ சூப்பர்.

narsim on December 4, 2008 at 1:14 PM said...

//சிப்பாய் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிர்கொடுப்பார். நான் என்னை சிப்பாயாக நினைத்துக் கொள்வதாலே என் ராஜாவைக் காப்பாற்ற முடிந்தது. ராஜாவாக வேண்டுமானால் முதலில் சிப்பாயாக வேண்டும்" நீங்க எப்பவும் ராஜாதாங்க‌
//

சகா... நல்ல வரிகள்.. ஊருக்குப்(குற்றாலம்) போய்ட்டு வந்தாச்சு சகா..

கார்க்கி on December 4, 2008 at 2:32 PM said...

/நான் ஆதவன் said...
அரசியல் நெடி ஜாஸ்தியா இருக்கே சகா...

ஆனாலும் ரொம்ப நல்லா இருக்//

ரென்டு மேட்டர் தானே அரசியல் ச்கா?

*********************************

//முரளிகண்ணன் said...
பதிவு சூப்பர். பின்னூட்ட கும்மி சூப்பரோ சூப்பர்.//

நன்றி. கும்மியர்கள் சார்பா இன்னொரு நன்றி

***************************************

/சகா... நல்ல வரிகள்.. ஊருக்குப்(குற்றாலம்) போய்ட்டு வந்தாச்சு சகா..//

மழைல சென்னையிலே குற்றாலாம் வந்ததே தல.. நான் கூட அஃபிசியல் டிரிப்போனு நினைச்சேன். சீக்கிரம் ஆட்டத்த ஆரம்பிங்க மாற‌வர்மனோட‌

SK on December 4, 2008 at 2:54 PM said...

இந்த பதிவு நல்ல இருக்கு சகா.

எல்லா பத்திரிக்கையும் இதே மாதிரி தான் இருக்கு போல. இந்த வார குமுதம்ளையும் விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி வந்து இருக்கு.

SK on December 4, 2008 at 2:55 PM said...

நேத்து பதிவு எல்லாம் படிச்சேன் சகா. பதில் சொல்ற அளவுக்கு திறமை இல்லாத துறை அப்படிங்கறதால அமைதியா இருந்துட்டேன் :)

SK on December 4, 2008 at 2:58 PM said...

கார்க்கி பதிவுல 45la கமெண்ட் நிக்கறதா

SK on December 4, 2008 at 2:59 PM said...

// டென்ஷன் ஆகாதப்பா ஒம்போதாம் வகுப்பு படிச்சேன் தானே சொன்னாங்க. ஒவ்வொரு வகுப்புலேயும் 3 வருஷம் படிச்சிருப்பாங்க. //

நச் பதில்

SK on December 4, 2008 at 3:00 PM said...

// ஓ உங்க செட்டா அண்ணே? //

அதுக்கும் பதில் நச் ..

SK on December 4, 2008 at 3:01 PM said...

தம்பிங்களா கஷ்டப்பட்டு 47 போட்டுட்டேன்.. இன்னும் ஜஸ்ட் த்ரீ விட்டுடுங்க இன்னைக்கு எனக்கு ஓகேவா

SK on December 4, 2008 at 3:01 PM said...

டூ மோர்

SK on December 4, 2008 at 3:01 PM said...

50,........

கார்க்கி on December 4, 2008 at 3:08 PM said...

வாங்க எஸ்.கே. நலமா? 50க்கு நன்றி

Karthik on December 4, 2008 at 3:14 PM said...

நான் என்ன சொல்றது கார்க்கி?
:)

ஒரு ஓட்டு போட்டுட்டு கிளம்பறேன்.

SK on December 4, 2008 at 3:31 PM said...

மிக்க நலம். நீங்க எப்படி இருக்கீங்க. :-)

rapp on December 4, 2008 at 3:36 PM said...

இருக்கறதுலேயே செமக்கடுப்பு கேப்டன் ஊர்வலம்தான். விகடன் வரவர ஒன்னுமே இல்லாமப் போய்கிட்டு இருக்கு. பொக்கிஷம் விகடன் படிக்க எடுத்துக்கற டைம்ல கால்வாசிக் கூட புதுசு படிக்க செலவிட தேவைப்படல:(:(:(

rapp on December 4, 2008 at 3:37 PM said...

புக்கு வாங்கி படிக்கிறவங்க (அதாவது நெட்ல இல்லாம) புதுசோட வடிவமும் நல்லால்லைங்கறாங்க:(:(:(

SK on December 4, 2008 at 3:39 PM said...

காலைலயே ஒரு துக்க சேதி..

பிரபு தேவ பையன் இறந்துட்டாரு போல. அதுவும் கான்செர். :( :(

அமிர்தவர்ஷினி அம்மா on December 4, 2008 at 3:39 PM said...

ம், நல்லா இருக்கு.
இப்படியே வாரா வாரம் போட்ருங்களேன்.
நான் இங்கனயே வந்து விகடன் படிச்சிக்கிறேன்.

prakash on December 4, 2008 at 4:02 PM said...

வணக்கம் SK...

//பிரபு தேவ பையன் இறந்துட்டாரு போல. அதுவும் கான்செர். :( :(//

பிரபு தேவாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? (காந்தி செத்துட்டாரா மாதிரி இருக்கோ? உண்மையிலே தெரியாதுப்பா)

பிள்ளையின் வயது என்ன?

SK on December 4, 2008 at 4:03 PM said...

13 prakash

SK on December 4, 2008 at 4:04 PM said...

அவருக்கு மூணு கொழந்தைங்கலாம் :( எனக்கே இன்னைக்கு தான் தெரியும் :( :(

prakash on December 4, 2008 at 4:11 PM said...

//13 prakash//

மிகவும் வருத்தமான விஷயம்
எதிரிக்கும் வரக்கூடாத நோய்களில் ஒன்று அது..

ம்ம்ம்ம்ம்.......

கார்க்கி on December 4, 2008 at 4:13 PM said...

/ Karthik said...
நான் என்ன சொல்றது கார்க்கி?
:)

ஒரு ஓட்டு போட்டுட்டு கிளம்பறே//

அது மேட்டரு.. நன்றி கார்த்திக்..

************************************
// SK said...
மிக்க நலம். நீங்க எப்படி இருக்கீங்க. :‍)//

அதான் அப்துல்லா அண்ணன் பதிவுல பார்த்திங்களே.. குஜாலா கீறேன்

***********************************

/ rapp said...
புக்கு வாங்கி படிக்கிறவங்க (அதாவது நெட்ல இல்லாம) புதுசோட வடிவமும் நல்லால்லைங்கறாங்க:(:(:(//

சிலர் சொன்னாலும் எனக்கு புடிச்சிருக்குங்க..

கார்க்கி on December 4, 2008 at 4:14 PM said...

//SK said...
காலைலயே ஒரு துக்க சேதி..

பிரபு தேவ பையன் இறந்துட்டாரு போல. அதுவும் கான்செர். :(//

ஆமாங்க.. பாவம்..

*********************

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ம், நல்லா இருக்கு.
இப்படியே வாரா வாரம் போட்ருங்களேன்.
நான் இங்கனயே வந்து விகடன் படிச்சிக்கிறேன்//

:))))))

***************

//பிரபு தேவாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? (காந்தி செத்துட்டாரா மாதிரி இருக்கோ? உண்மையிலே தெரியாதுப்பா)//

ஆமாங்க.. 1996லயே குர்ருப் டான்சர் ஒருத்தர கலயானம் பண்ணிகிட்டார்ரு

அருண் on December 4, 2008 at 4:20 PM said...

//ஆமாங்க.. 1996லயே குர்ருப் டான்சர் ஒருத்தர கலயானம் பண்ணிகிட்டார்ரு//

1996ல கல்யாணமானவருக்கு எப்படி 13 வயசுல மகன்?

தாமிரா on December 4, 2008 at 4:30 PM said...

ஆஜர்.!

அத்திரி on December 4, 2008 at 4:50 PM said...

//இவரேதான் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்றார். பாவம் தோழர்கள்//

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.......

ஜெயிக்கிற கட்சியோடத்தான் கம்யூனிஸ்ட்காரவுக கூட்டணி வைப்பாங்களாம்.......

கார்க்கி on December 4, 2008 at 5:54 PM said...

//1996ல கல்யாணமானவருக்கு எப்படி 13 வயசுல மகன்?//

நல்லா கேட்காறாங்கப்பா டீட்டெயில்.. 1996 ஜனவரில கல்யானம்.. 1996 நவம்பர்ல குழந்தை.. அதுக்கு 2008 நவம்பர்ல 12 வயசு முடிஞ்சு 13 ஆவுது.. கரீக்டா?

***********************************

@தாமிரா,

ஆஜர் போட்டா வேற அர்த்தம் ஆச்சே!!!!!!!!!!

*********************************
//ஜெயிக்கிற கட்சியோடத்தான் கம்யூனிஸ்ட்காரவுக கூட்டணி வைப்பாங்களாம்.//

அத்திரி, அவங்க என்னவோ அவங்க சேரதாலாதான் ஜெய்க்கிரதா நினைக்க போறாங்க சகா

ஆட்காட்டி on December 4, 2008 at 6:17 PM said...

ஓசியில படிச்சீங்களா? காசு குடுக்குறது வீண் எண்டு தெரியாதா?

அக்னி பார்வை on December 4, 2008 at 6:21 PM said...

///ராஜாவாக வேண்டுமானால் முதலில் சிப்பாயாக வேண்டும்///

பாராட்டுக்கள், சொன்ன ஆன்ந்துக்கு , தெரிய படுத்திய கார்கிக்கு....

ஆம, ஸ்னிகித்தா அட்டை படம் எப்படி என்று சொல்லவே இல்லை

கார்க்கி on December 4, 2008 at 6:42 PM said...

//ஆட்காட்டி said...
ஓசியில படிச்சீங்களா? காசு குடுக்குறது வீண் எண்டு தெரியாதா?//

காசு கொடுத்துதான் வாங்கினேன். ட்ரெய்ன்ல வரும் போது படிக்க..

*********************************

//அக்னி பார்வை said...
///ராஜாவாக வேண்டுமானால் முதலில் சிப்பாயாக வேண்டும்///

பாராட்டுக்கள், சொன்ன ஆன்ந்துக்கு , தெரிய படுத்திய கார்கிக்கு....//

நன்றிங்க..


//ஆம, ஸ்னிகித்தா அட்டை படம் எப்படி என்று சொல்லவே இல்//

என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களும் அழகுதான். ஆனா இந்த படம் கொஞ்சம் சரியில்ல..

கும்க்கி on December 4, 2008 at 6:50 PM said...

சைலண்ட்...சைலண்ட்....
வீணா போன பூனை ஆஜர்.

கும்க்கி on December 4, 2008 at 6:52 PM said...

இப்படித்தான் பதிவ போட்டுட்டு .....

தைரியமா மாடுரேஷன ஆன்ல வைக்கணும்..

(ஹைதை யிலருந்து சென்னைக்கு வர எண்ணமில்லை போலருக்கே..?)

LOSHAN on December 4, 2008 at 8:35 PM said...

இதெல்லாம் சகஜம் சகா.. எல்லாருமே இப்போ அரசியல் செய்யிறாங்க.. நடிக்கிறாங்க.. காதுல பூ சுத்துறாங்க..

எங்களை மாதிரி அப்பாவிங்க ஞாபக மறதி மேல அவ்வளவு நம்பிக்கை..

ஆனந்த் தான் மனதைத் தொட்டார்..
நீங்க அவருக்குக் கொடுத்த வாழ்த்து அருமை..

செல்வேந்திரன் on December 4, 2008 at 10:37 PM said...

:)

கோவி.கண்ணன் on December 5, 2008 at 8:54 AM said...

மீ த 75

கார்க்கி on December 5, 2008 at 9:38 AM said...

/கும்க்கி said...
சைலண்ட்...சைலண்ட்....
வீணா போன பூனை ஆஜர்//

வீணா ய்ர்ருங்க?

***************************

//
ஆனந்த் தான் மனதைத் தொட்டார்..
நீங்க அவருக்குக் கொடுத்த வாழ்த்து அருமை.//

நன்றி லோஷன்.. வானொலி எப்படி போய்ட்டிருக்கு?

*********************************

நன்றி செல்வேந்திரன்..

*****************

75க்கு நன்றி கோவியாரே

SP.VR. SUBBIAH on December 5, 2008 at 10:46 AM said...

நல்ல பதிவு!பாராட்டுக்கள்!

கார்க்கி on December 5, 2008 at 11:22 AM said...

/SP.VR. SUBBIAH said...
நல்ல பதிவு!பாராட்டுக்கள்!//

ரொம்ப நன்றி

Joe on December 5, 2008 at 8:30 PM said...

//போங்கண்ணே போய் உங்க புள்ளக்குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க.//

ஹாஹாஹா...

விஜய் on February 17, 2009 at 3:16 PM said...

80th ma

 

all rights reserved to www.karkibava.com