Dec 2, 2008

புட்டிக்கதைகள்


   ஒரு முறை ஏழுமலை பிறந்த நாளன்று டப்பா கஞ்சி குடிக்க ஆசைப்பட்டான். அவன் ஆசை என்பது ஒரு புறமிருக்க நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் பட்ஜெட்டுக்குள் முடிக்க பெசன்ட் நகரை நோக்கி கிள‌ம்பினோம். அடிக்கப் போவது டப்பா கஞ்சி என்றாலும் பிறந்து நாளல்லவா, பளிச்சென்று சட்டை அணிந்து வந்தான். போகும்போதே எவ்வளவு அடிக்கனும் என்பதிலே குறியாய் இருந்தான் ஏழுமலை.

   கடற்கரையில் ஓரமாய் சில குடிசைகள் தென்பட்டன. சரியாய் ஒரு குடிசைக்கு அழைத்து சென்றான் நடராஜ். 12 வயது சிறுவன் ஒருவன், எத்தனை பேர் எவ்வளவு வேண்டும் என்ற கணக்கை வாங்கிக் கொண்டு சென்றி சிறிது நேரத்தில் ஒரு ப்ளாஸ்டிக் குடமும் சில டம்ளர்களும் எடுத்து வந்தான். பர்த்டே 'கேடிக்கு' முதல் க்ளாஸ் கொடுக்க சொன்னோம். அந்த சிறுவன் புரிந்துக் கொண்டு அவனிடம் க்ளாஸை கொடுத்துவிட்டு "சட்டை சூப்பர்ண்ணா" என்றான் டிப்சுக்காக. ஏழுமலை புரியாமல் என்னைப் பார்க்க "அது ஒன்னுமில்லை மச்சி. ஏஸி பார்ல சரக்கோட Compliment  தருவாங்க இல்ல. அதான் இது" என்றேன்.

   அனைவரின் கைக்கும் க்ளாசோடு கஞ்சி வந்து சேர்ந்துவிட "சியர்ஸ்" சொல்லி அடிக்க ஆரம்பித்தோம். க்ளாஸையே முறைத்துப் பார்த்த ஏழுமலை குடிக்க முடியாமல் தவித்தான். பியரையே கசப்பு என்பவன் டப்பா கஞ்சி எப்படி அடிப்பான்? ஒரே ஒரு வாய் மட்டும் அடித்துவிட்டு வேண்டாம் என்றான். ஆனால் சரியாய் ஒரு நிமிடத்தில் ஏழு "மலையேற" தொடங்கினான்.

  மச்சி, இந்த மாசம் யாருடா உன் ஆளு?

மேகலை மச்சி. ECE டிபார்ட்மெண்ட்.

 அடுத்த மாசம் மச்சி?

 ஆங்.. ஜூன்கலை. நக்கலா? அவதான்டா என் லைஃபு.

மச்சி நீதான் நல்லா பாடுவியே.அவள பத்தி பாடுடா.

    டேய்.இப்போ எதுக்கு அவ? நான் சரக்க பத்தி பாடப் போறேன். நீ போய் எனக்கு இன்னோரு க்ளாஸ் வாங்கிட்டு வா. மச்சி.கணக்குல் வரவு வை. இதோட எத்தனை மூனு ஆச்சா?

    எனக்கு அவனை அப்படியே கடலில் தள்ளி விட வேண்டும் போலிருந்தது. பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக இருப்பவனுக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்ததால் மன்னித்தேன். ஆனால் அவன் எங்களை மன்னிக்காமல் பாடத் தொடங்கினான்.

கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்திக் கேட்டேன்
வாசம் வீசும் வொயினை கேட்டேன்
கும்முனு ஏறும் ரம்மைக் கேட்டேன்
ஜம்முனு ஒரு ஷாம்பெய்ன் கேட்டேன்

கின்னுனு இருக்கும் ஜின்னைக் கேட்டேன்
குளிருக்கேத்த ஸ்காட்ச்சைக் கேட்டென்
ஆரஞ்சு ஜூஸோட வோட்கா கேட்டேன்
லெம‌ன் சால்ட்டோட‌ ட‌க்கீலா கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் அடிக்கவில்லை
சரக்கே வேண்டாம் வேண்டாம் என்று
சுண்டக்கஞ்சி சுண்டக்கஞ்சி  கேட்டே ஏஏஏஏஎஏன்

   வேறு வழியில்லாமல் அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு புற‌ப்பட்டோம். எதிரில் இருவர் நல்ல மப்புபுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஏழுமலை அவர்களிடம் என்ன பிரச்சனை என்றான்.

 நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?

  கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல".

 

26 கருத்துக்குத்து:

விஜய் ஆனந்த் on December 2, 2008 at 1:13 PM said...

:-)))...

நாந்தான் மொதல்ல!!!

பரிசல்காரன் on December 2, 2008 at 1:48 PM said...

ஏழுமலையை கண்ணதாசனுக்கு நன்றி சொல்லச் சொல்லுங்கள். நீங்களும் சொல்லுங்கள்.

கார்க்கி on December 2, 2008 at 1:48 PM said...

// விஜய் ஆனந்த் said...
:-)))...

நாந்தான் மொதல்ல!!!//

எதுக்கு சகா?

வித்யா on December 2, 2008 at 1:52 PM said...

\\நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?

கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல".

\\
:))))

வித்யா on December 2, 2008 at 1:53 PM said...

me the 5th.
எனக்கு டப்பா கஞ்சி வேணாம்.

Anonymous said...

as usual good comedy. congrats

rapp on December 2, 2008 at 2:32 PM said...

me the 7th:):):)

நானும் ஒருவன் on December 2, 2008 at 2:46 PM said...

மேகலை மச்சி. ECE டிபார்ட்மெண்ட்.

அடுத்த மாசம் மச்சி?

ஆங்.. ஜூன்கலை

chance less. elumalai padicha unakku sanguthaandi

அருண் on December 2, 2008 at 2:49 PM said...

நல்ல காமெடி.

அருண் on December 2, 2008 at 2:51 PM said...

கார் கீ or நானும் ஒருவன், ஏழுமலை உண்மையான characterஆ?

நானும் ஒருவன் on December 2, 2008 at 3:04 PM said...

charector is true.but karki is adding some incidents to make the post interesting.

கோவி.கண்ணன் on December 2, 2008 at 3:13 PM said...

எப்படி இப்படியெல்லாம் ?

கவிஜை அசத்தல் !

அருண் on December 2, 2008 at 3:17 PM said...

//நானும் ஒருவன் said...
charector is true.but karki is adding some incidents to make the post interesting//

அப்போ ஏழுமலை இந்த blog படிச்சாருன்னா, கார் கீக்கு சங்கு தானா?

அத்திரி on December 2, 2008 at 3:24 PM said...

//இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை //

தங்கமணி தொல்லை தாங்க முடியவில்லை...

அடுத்தவாட்டி ஏழுமலையை பதிவர் சந்திப்புக்கு கூட்டிட்டு வாங்கச் சகா.

புட்டிக்கதை-- ரகளையானகதை

வெண்பூ on December 2, 2008 at 3:30 PM said...

கார்க்கி,

நல்லா வித்தியாசமா இருக்கு.. தொடரவும்..

Karthik on December 2, 2008 at 4:02 PM said...

நல்லா இருக்கு கார்க்கி.
:)

தாமிரா on December 2, 2008 at 4:03 PM said...

ரசித்தேன். பாடலும் நல்லாயிருந்தது.

(அந்த லிஸ்ட்டில் டக்கீலாவும், சுண்டக்கஞ்சியும்தான் பாக்கி, ஏற்பாடு பண்ணவும்..)

கார்க்கி on December 2, 2008 at 4:30 PM said...

//பரிசல்காரன் said...
ஏழுமலையை கண்ணதாசனுக்கு நன்றி சொல்லச் சொல்லுங்கள். நீங்களும் சொல்லுங்கள்//

எதுக்கு சகா? புரியலையே..

/வித்யா said...
me the 5th.
எனக்கு டப்பா கஞ்சி வேணாம்//

இதுக்கு பொன்ணுங்க பாஷைல என்ன அர்த்தம்ங்க?

/ Anonymous said...
as usual good comedy. congரட்ச்//

நன்றி அனானி

கார்க்கி on December 2, 2008 at 4:34 PM said...

// rapp said...
me the 7th:):):)//

அப்போ பதிவ படிக்கல. உங்க பேச்சு டூ தலைவி..

//chance less. elumalai padicha unakku sanguthaஅன்டி//

முந்தைய பாகங்களை படிச்சானா இன்னும் கடுப்பாயிடுவான் மச்சி..

//அருண் said...
கார் கீ or நானும் ஒருவன், ஏழுமலை உண்மையான charactஎர்ஆ?.//

ஆமாங்க.. அவன் நம்பர் வேனும்ன்னா எனக்கு கால் பன்னுங்க..அவன் நம்ப‌ருக்கு கால் பண்ணி பீருக்கு தண்ணி கலக்கலாமனு கேளுங்க.. நீங்க யாருன்னா கார்க்கி நண்பன்னு மட்டும் சொல்லாதீங்க.. அவனுக்கு இந்த ப்ளாக் மேட்டர் எல்லாம் தெரியாது

கார்க்கி on December 2, 2008 at 4:36 PM said...

//கோவி.கண்ணன் said...
எப்படி இப்படியெல்லாம் ?

கவிஜை அசத்தல் //

வாங்க கோவியாரே.. மிக்க நன்றி

//அத்திரி said...

புட்டிக்கதை-- ரகளையானகதை//

நன்றி சகா..

// வெண்பூ said...
கார்க்கி,

நல்லா வித்தியாசமா இருக்கு.. தொடரவும்..//

நன்றி சகா.. வாரம் ஒன்னு போட திட்டம்..

கார்க்கி on December 2, 2008 at 4:47 PM said...

// Karthik said...
நல்லா இருக்கு கார்க்கி.
:)//

நன்றி கார்த்திக்..

//தாமிரா said...
ரசித்தேன். பாடலும் நல்லாயிருந்தது.//

நன்றி சக..


//(அந்த லிஸ்ட்டில் டக்கீலாவும், சுண்டக்கஞ்சியும்தான் பாக்கி, ஏற்பாடு //

பண்ணிடுவோம்

Anonymous said...

டமாஷா கீதுப்பா

கார்க்கி on December 2, 2008 at 6:14 PM said...

என்னப்பா இது? மூனு நாள் போய்ட்டு வந்த மறந்துடுறாங்க.. போன வாரம் 100 200 பார்த்துட்டு இப்ப 30க்கே முக்குறத பார்க்க என்னவோ போல இருக்கு. ஹிட்ஸூம் 300 தான் ஆயிருக்கு. :)))))

Joe on December 2, 2008 at 8:37 PM said...

//கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல".//

ஹாஹாஹா
விழுந்து விழுந்து சிரிச்சேன்!
கலக்குறீங்க கார்க்கி!

வித்யா on December 2, 2008 at 9:47 PM said...

me the 25th:))

கார்க்கி on December 2, 2008 at 10:50 PM said...

நன்றி ஜோ

நன்றி வித்யா

 

all rights reserved to www.karkibava.com