Dec 1, 2008

கிடைச்ச கேப்புல சின்ன மொக்கை


மு.கு: எங்கள் விட்டிலே ஒரு சின்ன நிகழ்ச்சி என்பதால் வீடு முழுவதும் ஆட்களும் எனக்கு வேலையும் நிரம்பி வ்ழிந்தன. இணைய பொருட்கள் அனைத்தையும் என் அம்மா நான் வரும் முன்னே மூட்டை கட்டி வைத்து விட்டார். கிடைத்த கேப்பில் ரெடி செஞ்ச  மேட்டர் இது. ப்ரூஃப் ரீடிங் கூட செய்யலைங்க. 

************************************************

அப்படியே ஒரு 30 வருஷத்துக்கு பின்னாடி போங்க.. 

   தீபாவளி வரப்போகிறது என்பதெல்லாம் மதனுக்கு காலண்டரைப் பார்த்தோ,அது நவம்பர் அக்டோபரில்தான் வருமென்றோ தெரியாது. டெய்லர் பாபு வீட்டுக்குள் வரும்போதுதான் தெரியும். காதில் பென்சிலோடும் கையில் நோட்டோடும் அவர் வரும்போது டெய்லரின் டிர‌யிலராக காஜா எடுக்கும் சிறுவன் குட்டி பாபுவும் வருவான்.

   மனைவி ஒன்று மற்றது இரண்டு என்று இருக்கும் டெய்லர் ஏனோ தைப்பதில் ஆண்கள் மட்டும் என்று சொல்வார். 12..25..16.. என்று இன்ச் டேப்பால் அளந்துக் கொன்டே அவர் சொல்ல குட்டி பாபு, "குடியை மறக்க இங்கே வாருங்கள்" என்ற துண்டு நோட்டிஸின் பின்னால் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். மதன் மெல்ல டெய்லரை அழைத்தான். அவர் என்ன்டா என்பது போல் குனிய அவர் காதில் கிசுகிசுத்தான் "போன வருஷம் என் டிராயிரல பட்டன் வைக்காம விட்டுட்டிங்க. பக்கத்த் வீட்டு மாமி பார்த்துட்டு ஷேம் ஷேம் நு சொன்னா. இந்த தடவ மறக்காதீங்க மாமா".

   "சரி தம்பி. நீயும் வள‌ர்ந்துட்ட. இந்த தடவ முழுப்பேன்ட்டா தைச்சிடுவோம்" என்று ஆசையை வள‌ர்த்தார்.

   "டேய் போன வருஷம் மாதிரி தீபாவளி அன்னைக்கு காலைல கொண்டு வராதடா. ஒரு நாள் முன்னாடியே வந்துருனும்".இது தாத்தா. தலையை சொறிந்துக் கொண்டே "வந்துருங்க" என்று இழுத்தார் டெய்லர். தாத்தா முன்பணம் கொடுக்க கிளம்பினார் டெய்லர். இந்த தீபாவளிக்கு முழுப்பேன்ட் என்று தெரு முழுக்க சொல்லிக் கொண்டு திரிந்தான் மதன்.

   தீபாவளியும் வந்தது. டெய்லரை மட்டும் காணவில்லை. பேன்ட்டில்லாமல் வெளியே போக மாட்டேன் என்று மதன் வீட்டுக்குள்ளேயே திரிந்தான். ஒரு வழியாய் காலை 11 மணிக்கு துணியுடன் வந்தான் குட்டி பாபு. தாத்தாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போதே தன் பேன்ட்டை உருவிக் கொண்டு ஓடினான் மதன். கச்சிதமாய் தைத்திருந்தார் டெய்லர். வீட்டில் யாரிடமும் காட்டாமால் தெருவுக்கு ஓடி வந்தான். எதிரில் மாமி வர அவசர அவசரமாய் பட்டனை தேடினான் மதன். பட்டன்கள் இருப்பதை உறுதி செய்தவன் ஹாயாக பாக்கெடுக்குள் படு ஸ்டைலாக கைகளை விட்டான்.

  "படுபாவி" . கைகள் தொடையை தொட்டன. இந்த முறை பாக்கெட்டை வைக்க மறந்திருந்தார் டெய்லர்.

55 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on December 1, 2008 at 9:02 AM said...

சகா.. உங்க கடமையை நெனச்சு புல்லரிக்குது. இவ்ளோ பிளிலயும் எங்களுக்காக கடமையைச் செய்யறீங்களே...

பரிசல்காரன் on December 1, 2008 at 9:03 AM said...

அருமையான மேட்டர் சகா.. நல்லாயிருந்தது படிக்க.

உங்க வீட்டு நிகழ்ச்சி குறித்து..

சிஸ்டருக்கு வாழ்த்து சொல்லிடுங்க...

அத்திரி on December 1, 2008 at 9:31 AM said...

தீபாவளி,புது டிரெஸ்,டெய்லர்.

இதுக்கெல்லாம் காத்திருப்பது ஒரு வித சுகம்.

நல்லா இருக்கு.

அதிரை ஜமால் on December 1, 2008 at 9:31 AM said...

\\ப்ரூஃப் ரீடிங் கூட செய்யலைங்க. \\

பொறுப்புதான் ...

Anonymous said...

இந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பா ?

வெண்பூ on December 1, 2008 at 10:40 AM said...

30 வருசத்துக்கு முன்னால முழு பேன்ட் போட்டியா? யோவ்.. உனக்கு என்னய்யா வயசாகுது? நீ சின்னப் பையன்னு (சத்யா இல்லை) நெனச்சி ஏமாந்துட்டனே? :((((

ஆட்காட்டி1 on December 1, 2008 at 10:53 AM said...

>>>>

முகமது பாருக் said...

யப்பா!! நீங்கெல்லாம் எந்த ஊருப்பு?..நல்ல நகைச்சுவை..


வாழ்த்துக்கள்

முகமது பாருக்

narsim on December 1, 2008 at 11:42 AM said...

மிகவும் ரசித்தேன் சகா.. ஆம்.. டெய்லர் கடைகள் மறக்க முடியாத அனுபவம்..

Chuttiarun on December 1, 2008 at 12:54 PM said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Karthik on December 1, 2008 at 1:53 PM said...

//இந்த முறை பாக்கெட்டை வைக்க மறந்திருந்தார் டெய்லர்.

Oops!

உங்க கஸினுக்கு வாழ்த்துக்கள்.

Bleachingpowder on December 1, 2008 at 2:04 PM said...

// "படுபாவி" . கைகள் தொடையை தொட்டன. இந்த முறை பாக்கெட்டை வைக்க மறந்திருந்தார் டெய்லர்.//

தல எனக்கென்னவோ டெய்லர் மறந்த மாதிரி தெரியல, வேனும்னே சாரி வேண்டாம்னே வைக்காம வுட்டுட்டாரோனு தோனுது :))

// கைகள் தொடையை தொட்டன.//

இதோட பதவ முடிச்சு ஏமாத்திடீங்களே, சஸ்பென்ஸ் தாங்க முடியல அப்புறம் என்னாச்சு சீக்கிரமா சொல்லுங்க

ஸ்ரீமதி on December 1, 2008 at 2:40 PM said...

:)))))))))))

குசும்பன் on December 1, 2008 at 3:17 PM said...

//ஆண்கள் மட்டும் என்று சொல்வார். 12..25..16.. என்று //

என்ன சகா ஒரே கொயப்பமா இருக்கே!!!:)))

தாமிரா on December 1, 2008 at 4:07 PM said...

ரசித்தேன்.

வீட்ல என்ன விசேஷம்னு சொல்லவேயில்லை..

Sundar on December 1, 2008 at 5:51 PM said...

நல்லா இருக்கு. டெய்லர் கிட்ட போய் ரொம்ப நாளாயிடிச்சி. தீபாவளி டைம்ல டெய்லர் பந்தா எல்லாம் உங்க பதிவை பார்த்தும் ஞாபகம் வருது.

கும்க்கி on December 1, 2008 at 7:46 PM said...

அய்யா சாமி ...இந்த கதையில ஏகப்பட்ட உள்குத்து இருக்கும்போல்ருக்கே.....

rapp on December 2, 2008 at 5:02 AM said...

இது சாதா கதையா, இல்ல கும்க்கி சர் சொல்லிருக்காப்போல எதாவது இருக்கா?:):):)

கார்க்கி on December 2, 2008 at 1:39 PM said...

// பரிசல்காரன் said...
சகா.. உங்க கடமையை நெனச்சு புல்லரிக்குது. இவ்ளோ பிளிலயும் எங்களுக்காக கடமையைச் செய்யறீங்களே.//

இது உண்மைதானே?????

//பரிசல்காரன் said...
அருமையான மேட்டர் சகா.. நல்லாயிருந்தது படிக்க.//

நன்றி சகா..

நன்றி அத்திரி..

நன்றி ஜமால்..

// Anonymous said...
இந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பா ?//

எது ரணகளம் எது கிளுகிளுப்பு அனானி?

கார்க்கி on December 2, 2008 at 1:41 PM said...

/வெண்பூ said...
30 வருசத்துக்கு முன்னால முழு பேன்ட் போட்டியா? யோவ்.. உனக்கு என்னய்யா வயசாகுது? நீ சின்னப் பையன்னு (சத்யா இல்லை) //

அண்ணே இது என் கதை இல்லை.. உங்க கதைதான்.. :)))

// ஆட்காட்டி1 said...
>>>>//

<<<<<<


//முகமது பாருக் said...
யப்பா!! நீங்கெல்லாம் எந்த ஊருப்பு?..நல்ல நகைச்சுவை..//

பொறந்தது திண்டிவனம்

வள‌ர்ந்தது பான்டிச்சேரி

படிச்சது சென்னை

கொஞ்ச நாள் சிங்கை

இப்போ பொட்டி தட்டுறது ஹைதராபத்ங்க..

கார்க்கி on December 2, 2008 at 1:43 PM said...

//narsim said...
மிகவும் ரசித்தேன் சகா.. ஆம்.. டெய்லர் கடைகள் மறக்க முடியாத அனுபவம்..//

வாங்க தல.. எனக்கு இவை கேள்வி ஞானம் மட்டுமே..

***********************

சொல்லிடறேன் கார்த்திக்..

***************

/தல எனக்கென்னவோ டெய்லர் மறந்த மாதிரி தெரியல, வேனும்னே சாரி வேண்டாம்னே வைக்காம வுட்டுட்டாரோனு தோனுது :))//

இருக்கலாம்.. வேலை எப்படி இருக்கு சகா? ஃப்ரீயா ஆயிட்டிங்களா?

************************

/ ஸ்ரீமதி said...
:)))))))))))//

:((((((((((((

கார்க்கி on December 2, 2008 at 1:45 PM said...

/என்ன சகா ஒரே கொயப்பமா இருக்கே!!!:)))//

டெய்லர் பசங்களுக்கு அளவு அப்படித்தான் எழுதுவாங்க.. எது எந்த அளவுனு தெரியல தல..

***************************

/தாமிரா said...
ரசித்தேன்.//

அப்போ உண்மையா நல்லயிருக்குப்பா பதிவு.. நன்றி சகா..

********************

நன்றி சுந்தர்..

**************

கார்க்கி on December 2, 2008 at 1:47 PM said...

//கும்க்கி said...
அய்யா சாமி ...இந்த கதையில ஏகப்பட்ட உள்குத்து இருக்கும்போல்ருக்கே...//

அய்யோ டிஸ்கி போட மற‌ந்துட்டேனே.. இப்போ சொல்லிட‌லாம்..

"இந்தக் கதையில் வரும் சம்பவம் யாவும் உண்மை. எல்லோரையும் புண்படுத்தும் நோக்கில்தான் எழுதப்பட்டது"

************************************
// rapp said...
இது சாதா கதையா, இல்ல கும்க்கி சர் சொல்லிருக்காப்போல எதாவது இருக்கா?:):):)//

ஆமாங்க சாதா இல்ல.. ஸ்பெஷல் சாதா..

Anonymous said...

ஜூப்பரு.

கார்க்கி on December 2, 2008 at 8:16 PM said...

நன்றி வேலனண்னா

ஸ்ரீமதி on December 3, 2008 at 10:28 AM said...

//கார்க்கி said...
/ ஸ்ரீமதி said...
:)))))))))))//

:((((((((((((//

என்ன ஆச்சு அண்ணா?? :((

கார்க்கி on December 3, 2008 at 10:42 AM said...

ச்சும்மாதான்.. வெறும் ஸ்மைலி மட்டும் போட்டு எஸ்கேப் ஆன உன்னை பேச வச்சிட்டேன் இல்ல. அதுக்குதான் :)))))))))

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:14 PM said...

//கார்க்கி said...
ச்சும்மாதான்.. வெறும் ஸ்மைலி மட்டும் போட்டு எஸ்கேப் ஆன உன்னை பேச வச்சிட்டேன் இல்ல. அதுக்குதான் :)))))))))//

:)))))))

கார்க்கி on December 3, 2008 at 12:17 PM said...

மறுபடியுமா??????????????

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:18 PM said...

நோ டென்ஷன் இது சும்மா போட்டது ;))

கார்க்கி on December 3, 2008 at 12:19 PM said...

//நோ டென்ஷன் இது சும்மா போட்டது ;))//

:)))))))))))))))))

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:20 PM said...

என்ன ஆச்சு அண்ணா?? ஏன் திடீர்ன்னு இவ்ளோ பதிவு போட்டுட்டீங்க?? எதுல என்ன பின்னூட்டம் போட்டேன்.. அதுக்கு நீங்க என்ன ரிப்ளே பண்ணீங்கன்னு நான் தேடரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுது... :((

கார்க்கி on December 3, 2008 at 12:22 PM said...

போன வாரம் மூனு நாள் எதுவும் போடல.. அதான் ஒரு மீள்பதிவு போட்டேன்.. அப்போ கூட நேத்து மட்டும்தான் 2 பதிவு போட்டேன்.. மத்தபடி இன்னைக்கு ஒன்னு, திங்கள்கிழமை ஒன்னுதானே..

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:23 PM said...

ஏழுமலை கதை இப்பதான் படிச்சேன்.. சூப்பர்.. :)) ம்ம்ம் அப்பறம் ஒரு மீள்பதிவு அத இன்னும் படிக்கல பெரிசா இருந்தது.. அதோட என்னோட PM இப்ப என்ன வாட்ச் பண்ணிட்டு இருக்கு.. இப்ப நான் அத பதிச்சு சிரிச்சா அவ்ளோ தான்.. அதான் அந்த வேலைய ஈவினிங்க்கு ஒத்திப் போட்டுட்டேன்.. ;)))

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:23 PM said...

//கார்க்கி said...
போன வாரம் மூனு நாள் எதுவும் போடல.. அதான் ஒரு மீள்பதிவு போட்டேன்.. அப்போ கூட நேத்து மட்டும்தான் 2 பதிவு போட்டேன்.. மத்தபடி இன்னைக்கு ஒன்னு, திங்கள்கிழமை ஒன்னுதானே..//

:))))

கார்க்கி on December 3, 2008 at 12:24 PM said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:25 PM said...

எங்க அண்ணா உங்க தங்க தளபதிகள் நானும் ஒருவன், அருண், பிரகாஷ் இவங்க யாரையும் காணல?? கும்மியும் ரொம்ப கம்மியா இருக்கு.. (வாவ் கும்மி கம்மி.. நானும் அழகா கவிதை சொல்றேன்ல??;)))

கார்க்கி on December 3, 2008 at 12:27 PM said...

கலைஞர் பதிவுல கும்மிட்டு இருக்காங்க.. போய் பாரு..

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:27 PM said...

//கார்க்கி said...
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//

என்னதிது சின்ன புள்ளத்தனமா?? தங்கச்சி கஷ்டப்பட்டு டைப் பண்றாலேங்கரதுக்காகவாவது ஏதாவது ரிப்ளே போடறதில்ல??

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:28 PM said...

//கார்க்கி said...
கலைஞர் பதிவுல கும்மிட்டு இருக்காங்க.. போய் பாரு..//

அச்சச்சோ அப்படியா?? :))

கார்க்கி on December 3, 2008 at 12:28 PM said...

//
என்னதிது சின்ன புள்ளத்தனமா?? தங்கச்சி கஷ்டப்பட்டு டைப் பண்றாலேங்கரதுக்காகவாவது ஏதாவது //

பின்னூட்டதுக்கு கோவம் வருதே உனக்கு.. பதிவ படிச்சிட்டு ஸ்மைலி போட்டா எனக்கு எவ்ளோ கோவம் வரனும்?

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:31 PM said...

//கார்க்கி said...
//
என்னதிது சின்ன புள்ளத்தனமா?? தங்கச்சி கஷ்டப்பட்டு டைப் பண்றாலேங்கரதுக்காகவாவது ஏதாவது //

பின்னூட்டதுக்கு கோவம் வருதே உனக்கு.. பதிவ படிச்சிட்டு ஸ்மைலி போட்டா எனக்கு எவ்ளோ கோவம் வரனும்?//

எனக்கு கோவமெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா.. அந்த பதிவ படிச்சு நல்லா சிரிச்சேன் இத நான் சொன்னா நீங்க எப்பவும் இத தானே நீ செய்யறன்னு சொல்வீங்க.. அதான் வெறும் ஸ்மைலி மட்டும்.. அதோட பதிவு ரொம்ப நல்லா இருந்தா எனக்கு சொல்ல வார்த்தைகளே வராது..

கார்க்கி on December 3, 2008 at 12:33 PM said...

//அதோட பதிவு ரொம்ப நல்லா இருந்தா எனக்கு சொல்ல வார்த்தைகளே வராது..//

அப்போ இனிமேல ஸ்மைல்ய் மட்டும் போடு..

ஆமா,உங்க ஆஃபிஸ்லயும் நீ எல்லொரையும் அண்னானுதான் கூப்பிடுவியா?

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:35 PM said...

என் ப்ராஜெக்ட்ல பசங்களே கிடையாது.. மத்தபடி வெளில பார்க்கற, பழகற எல்லாரையும் அண்ணான்னு தான் கூப்பிடுவேன்..

கார்க்கி on December 3, 2008 at 12:39 PM said...

பசங்க தப்பிச்சாங்க..நல்ல பழக்கம்..

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:41 PM said...

உங்களுக்கு நான் அப்படி கூப்பிடறது பிடிக்கலியா??

கார்க்கி on December 3, 2008 at 12:42 PM said...

/ ஸ்ரீமதி said...
உங்களுக்கு நான் அப்படி கூப்பிடறது பிடிக்கலியா//

நான் அப்படி சொல்லல தங்கச்சி..எப்பவுமே தங்கச்சி தான் தன் கட்சி.. :))))))))))

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:43 PM said...

//கார்க்கி said...
/ ஸ்ரீமதி said...
உங்களுக்கு நான் அப்படி கூப்பிடறது பிடிக்கலியா//

நான் அப்படி சொல்லல தங்கச்சி..எப்பவுமே தங்கச்சி தான் தன் கட்சி.. :))))))))))//

ம்ம்ம்ம் ஓகே அண்ணா :))

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:43 PM said...

49?

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:44 PM said...

ஹை நான் தான் 50?

கார்க்கி on December 3, 2008 at 12:45 PM said...

ஆமாம் நீ தான் 50.. தாங்க் யூ

ஸ்ரீமதி on December 3, 2008 at 12:52 PM said...

//கார்க்கி said...
ஆமாம் நீ தான் 50.. தாங்க் யூ//

என்ன அண்ணா தங்கைக்கு போயி தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு.. :))

கார்க்கி on December 3, 2008 at 12:55 PM said...

ரைட் விடு

முரளிகண்ணன் on December 3, 2008 at 1:02 PM said...

பதிவை விட பின்னூட்டங்கள்தான் சுவையா இருக்கு

கார்க்கி on December 3, 2008 at 1:04 PM said...

நீங்க பதிவ படிக்கலைனு இதன் மூலம் தெரிய வருகிறது :)))))))))

 

all rights reserved to www.karkibava.com