May 30, 2009

இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்


சில நாட்களாகவே எனக்குள் ஒரு உறுத்தல் என்னன்னு கடைசில் சொல்றேன்.

நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து ஹைடெக் சிட்டிக்கு ஷேர் ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். பின்பக்கம் மூவரையும் ஓட்டுனருக்கு அருகில் இருவரையும் ஏற்றிக் கொன்டுதான் சென்றால்தான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும். பெண்கள் வந்தால் பின்னாடி அம்ர்ந்திருக்கும் ஆண்கள் முன்னால் அமர வேண்டும். அன்று நான் கையில் பெரிய பையுடன் வந்ததால் முன்னாடி அமர முடியாது என ஆட்டோக்காரரிடம் சொல்லிவிட்டுதான் ஏறினேன். என்னருகே ஒரு அழகிய பெண் வந்தமர்ந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு பெண் வர இவர் என்னருகில் நகர்ந்தார்.

முன்னாடி இருந்த கண்ணாடி வழியாக பின்னாடி இருந்த அந்தப் பெண்ணை பார்த்துக் கொன்டிருக்கும்போது அவர் என்னைப் பார்த்துவிட்டார். என்னாடி என்பதுபோல் கண்ணாடி வழியாகவே பின்னாடி இருந்தவரை நான் பார்க்க, முன்னாடி போங்கனு ஒரு குரல் கேட்டது. திரும்பினால் என் அலுவலகத்தில் வேலை செய்யும் மதுரைப் பெண் ஒருவர் என்னை முன்னால் என்று அமர சொன்னார். நான் என்னிடம் பை இருப்பதை சொல்லிப் போக முடியாதென்றென். ஓட்டுனரே அமைதியா இருக்கும் போது இவர் சத்தம் போட்டது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எனக்கு பக்கத்தில் இருந்த பெண் அவருக்காகத்தான் பின்னால் அமர்வதாக நினைத்துக் கொண்டார் போலும். முன்னால் அமர்பவர்கள் என்ன காசு கம்மியாகவா கொடுக்கறாங்கனு கேட்டேன். அவர்கள் பெண்களாம். நான் விடுவேனா? அந்த வண்டியில் இருந்து இறங்கி வேற வண்டியில்தான் சென்றேன்.

இதேப் போல் ஒரு சம்பவம் நான் ட்ரெயினில் போகும்போதும் நடந்தது. சார்மினார் விரைவு வண்டியில் சைடு அப்பர், லோயர் இருந்த இடத்தில் நடுவே இன்னொரு படுக்கை சேர்த்து மூன்றாக்கி விட்டார்கள்.அதில் அப்பர் பெர்த் கிடைத்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்.அன்று பார்த்து என்னை சுற்றி எல்லோருமே பெண்கள்.(20 25 வயதுக்குள்). ஒரே குஜாலா லேப்டாப் திறந்து என் வலையை மேய்ந்தேன். "எக்ஸ்க்யூஸ் மீ" என ஒருப் பாட்டு சத்தம் கேட்டது. நிமிர்ந்தால் நயந்தாராவின் தங்கை நின்று கொண்டிருந்தார். அவர்கள் குழுவாக வந்திருப்பாதாகவும், அடுத்த கோச்சுக்கு செல்ல முடியுமா எனக் கேட்டார். எப்படி முடியும் என சொல்ல முடியும்? இந்த பரிசலோடு சேர்ந்து நானும் நல்ல்லவனாகி விட்டேன் போலும். சரி ஆனா எந்த பெர்த் என்றேன். அப்பர் பெர்த்தை காண்பித்தார்.செக்கிங் முடிந்தவுடனே போகிறேன் என்றேன்.

அவர் சென்று அவரது உடைமைகளை எடுத்து வந்துவிட்டார். எல்லாம் முடிந்து நான் அங்கேப் போனால் அது சைடு அப்பர். அவர் காட்டியது அதுவல்ல.கடுப்புடன் இவரை வந்துக் கேட்டால் ரெண்டுமே அப்பர்தானே என்றார். நாங்க பொண்ணுங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோங்க என்றார். ஏறியதில் இருந்தே என்னைப் பார்த்து புகைந்துக் கொன்டிருந்த நடுத்தர வயது ஆசாமி ஒருவர் பஞ்சாயத்துக்கு வந்து "லேடீஸ் சார். அட்ஜஸ்ட் பண்ணுங்க என்றார். சரி, நீங்க போய் அதுல படுங்க என்றேன். நான் ஏதோ பெரிய தேசத்துரோகம் செய்வது போல் அனைவரும் பார்த்தார்கள். அதுவரை என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொன்டிருந்த அவரின் தோழிகளும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.

முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?

37 கருத்துக்குத்து:

விலெகா on November 14, 2008 at 8:20 PM said...

No:1

விலெகா on November 14, 2008 at 8:21 PM said...

நம்பர் 2வெல்லாம் நான் போடமுடியாது:-)))

விலெகா on November 14, 2008 at 8:27 PM said...

நாங்கெல்லாம் நயந்தாராவை கண்டாலே நாங்க சலனப்படமாட்டோம்,நீங்க போயி ஹி,ஹி,ஹி.

நசரேயன் on November 14, 2008 at 8:56 PM said...

/*முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?*/
உங்களை நேரிலே பார்த்தா சொல்லலாம்

அமர பாரதி on November 14, 2008 at 9:06 PM said...

//ஓட்டுனரே அமைதியா இருக்கும் போது இவர் சத்தம் போட்டது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது//

_னியனுகள திருத்த முடியாது,

//லேடீஸ் சார். அட்ஜஸ்ட் பண்ணுங்க என்றார்// அவனவன் பொன்னுங்க முன்னாடி அவனுகளே நீதிபதி ஆயிடுவாங்க.

முரளிகண்ணன் on November 14, 2008 at 10:02 PM said...

cool

win on November 14, 2008 at 10:12 PM said...

//முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?//

அதில் இன்னுமா சந்தேகம் உமக்கு ...
:-))

Sundar on November 14, 2008 at 10:20 PM said...

//நான் விடுவேனா? அந்த வண்டியில் இருந்து இறங்கி வேற வண்டியில்தான் சென்றேன். //
...ஆக மண் ஒட்டலே!
//அதுவரை என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொன்டிருந்த அவரின் தோழிகளும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். //
//வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன். //
புன்னகை பார்த்த ஞாபகத்திற்கே இப்படியா?
//என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?//
கண்ணாடி பார்த்துடீங்க போலிருக்கு! ..ம்ம்ம் தெரிஞ்சா சரி தான்!

dharshini on November 14, 2008 at 11:13 PM said...

நல்ல வேளை தப்பிச்சிடீங்க!
உங்க ஆபிஸ்ல வேலை செயிரவங்கள இப்படி (..................) வன்மையாக கண்டிக்கிறேன்
"8தாரவ" பார்த்துடீங்களா :)

Bleachingpowder on November 14, 2008 at 11:16 PM said...

//நான் விடுவேனா? அந்த வண்டியில் இருந்து இறங்கி வேற வண்டியில்தான் சென்றேன்.
//

எப்படி தல உங்கனால மட்டும் இப்படியெல்லாம். ஆனாலும் உங்களுக்கு கோவம் ரொம்ப தான் வருது.

//என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?//

உங்க முகவெட்டே அப்படிதான் விடுங்க ;))

நானும் எப்ப ட்ரெயின்ல போகனும்னாலும் லோயர் பெர்த் புக் பண்ணுவேன் சரி தாய்குலம் கேட்டா, நோ ப்ராபளம் அட் ஆல்னு ஒரு சீனை போடலாம்னு ஆனா என் நேரம் எல்லாம் கிழம் போல்ட்டு தான் மாட்டும். ஆனா என்ன சொன்னாலும் அந்த சைட் அப்பருக்கு மட்டும் போக மாட்டேன், கர்மம் காலையும் நீட்ட முடியாது அது போக பெர்த் நம்மர் 7,8 இல்ல 71,72 வந்தா முஞ்சிக்கு நேர லைட் அடிக்கும், இந்த லட்சனத்துல பாத்ரூம் போற எந்த கபோதியும் கதவ வேற ஒழுங்கா சாத்த மாட்டானுங்க அப்புறம் என்னா ராத்திரி பூரா சிவராத்திரி தான்.

விஜய் ஆனந்த் on November 15, 2008 at 12:55 AM said...

:-)))...

// முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ? //

இந்த அனுபவம் உங்களுக்கு மட்டுமில்ல பாஸு...

SK on November 15, 2008 at 5:36 AM said...

அப்பாடா இன்னைக்கு நான் மொதோ இருபத்தி அஞ்சுக்குள்ள வந்துட்டேன் :-)

SK on November 15, 2008 at 5:37 AM said...

இட்ஸ் ஆல் இன் த கேம். கார்க்கி. ஆல் பசங்க ஒன்லி இளிச்சவாயன் .. சோ நோ ப்ராப்ளெம்.. சேம் ப்ளட் யு நோ

SK on November 15, 2008 at 5:38 AM said...

மீதி கும்மி விடிஞ்ச ஒடனே கும்மில ஐக்கியம் ஆகிக்கறேன் :-)

narsim on November 15, 2008 at 12:01 PM said...

ஆஜர் சகா.. இன்று சந்திப்பு வர்ரீங்களா??

கோபிநாத் on November 15, 2008 at 7:53 PM said...

விடு சகா...எல்லாம் நம்ம HL அப்படி ;((

சரி தலைப்பில் இருக்கும் வசனம் பாதியிலேயே இருக்கே!!?

குத்துங்க எசமான் குத்துங்க கொல்லுங்க எசமான் கொல்லுங்க...இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்.

Ravee on November 16, 2008 at 5:28 PM said...

ஆம்பளைய பொறந்த அத்தனை பேருக்கும்
இந்த அசம்பாவிதம் நடந்திருக்கும்,
விடுங்க... அவங்க கொடுத்துவச்சது அவ்ளோதான்.

கார்க்கி on November 17, 2008 at 10:20 AM said...

நன்றி விலேகா

நன்றி நசரேயன்

நன்றி அமரபாரதி

நன்றி முரளி

நன்றி வின்

நன்றி சுந்தர்

நன்றி தர்ஷினி

நன்றி ப்ளீச்சிங்

நன்றி எஸ்.கே

நன்றி விஜய் ஆனந்த்

நன்றி நர்சிம்

நன்றி கோபினாத்

நன்றி ரவீ

கார்க்கி on November 17, 2008 at 10:21 AM said...

மன்னிக்கனும் நண்பரகளே.. ரிலயன்ஸ் டேட்டா கார்ட் சொதப்பியதால் உடனுக்குடன் உங்களுக்கு பதிகள் போட முடியவில்லை.

ஸ்ரீமதி on November 17, 2008 at 11:00 AM said...

:))))))

நான் on November 17, 2008 at 12:06 PM said...

தாய்குலத்துக்கு ஒண்ணுன்னா எங்களால தாங்கிக்கவே முடியாது..

இழிச்சவாயர்கள் சங்கம்

selva said...

Sir life niraya parthutten ithu pola .
niraya travel panni kittu iruthen ippavum share auto travel pannuren

daily niraya pakkuren .yenna panna .yenna namma neram .

parthu sir jeans potta ponna vanthuna ungal next autovilla vara solluvanga

anupavam sir anupavam

selva

வால்பையன் on November 18, 2008 at 5:09 PM said...

விட்டு கொடுத்து வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கு சகா! அதுக்கு பேரு இளிச்சவாய்தனமில்லை

வால்பையன் on November 18, 2008 at 5:11 PM said...

24

வால்பையன் on November 18, 2008 at 5:12 PM said...

இன்னைக்கு சகா புண்ணியத்துல இங்கே தான் குவாட்டரு

லக்கிலுக் on May 30, 2009 at 10:46 AM said...

//முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?//

டைமிங் மீள்பதிவு. ரசித்தேன் :-)

அத்திரி on May 30, 2009 at 11:11 AM said...

//முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?//


உன் நெத்தி பரப்பளவு கொஞ்சம் அதிகமாச்சே.அதான்

mythees on May 30, 2009 at 11:34 AM said...

எதுக்கு இந்த மீள்பதிவு .........?

அன்புடன் அருணா on May 30, 2009 at 12:01 PM said...

//சார்மினார் விரைவு வண்டியில் சைடு அப்பர், லோயர் இருந்த இடத்தில் நடுவே இன்னொரு படுக்கை சேர்த்து மூன்றாக்கி விட்டார்கள்.அதில் அப்பர் பெர்த் கிடைத்தவர்கள் பாடு திண்டாட்டம் //

இந்தத் திண்டாட்டத்தைப் பற்றி ஒரு பதிவே இருக்குப்பா!!!
ஆனாலும் மக்கள் பெண்களுக்கு அவ்வளவா சப்போர்ட்டா பண்றாங்க??
அன்புடன் அருணா

ஜெகதீசன் on May 30, 2009 at 12:35 PM said...

:)

P.K.K.BABU on May 30, 2009 at 12:45 PM said...

ENNA IDHU CHINNAPPILLATHANAMAA IRUKKU?. THALA EZUTTHAI ADACHE NITHIYILA EZHUDHI IRUKKURADHAI ACCEPT PANRADHUKKU IVVALAVU `FEELINGS` AA? LOOSA UDUNGHA......

MayVee on May 30, 2009 at 7:00 PM said...

"கார்க்கி said...
நன்றி விலேகா

நன்றி நசரேயன்

நன்றி அமரபாரதி

நன்றி முரளி

நன்றி வின்

நன்றி சுந்தர்

நன்றி தர்ஷினி

நன்றி ப்ளீச்சிங்

நன்றி எஸ்.கே

நன்றி விஜய் ஆனந்த்

நன்றி நர்சிம்

நன்றி கோபினாத்

நன்றி ரவீ"


சொல்லவே இல்லை ....
எம்.பி. அகிடிங்கள ????
ஒரே முச்சு ல இவ்வளவு நன்றி சொல்லுதே..
அதான் விசாரிச்சேன்

MayVee on May 30, 2009 at 7:02 PM said...

உங்களை பற்றி கூடிய சிக்கிரம் ஒரு பதிவு போடா போறேன்....
draft ல இருக்கு

Suresh on May 30, 2009 at 7:18 PM said...

ஹா ஹா ;)

Anonymous said...

//*முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?*/

நேர்ல பாத்தாதான் சொல்ல முடியும் :)

தீப்பெட்டி on May 31, 2009 at 9:30 PM said...

ஆமா இது என்ன மீள் பதிவா ஏற்கனவே படிச்சமாதிரி இருக்கே..

தமிழ்ப்பறவை on May 31, 2009 at 10:09 PM said...

////*முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?*/

நேர்ல பாத்தாதான் சொல்ல முடியும் :)//
அதான் ஃபோட்டோவே போட்டிருக்காரே நெத்திய மூடிக்கிட்டு...
அதென்ன டைமிங் மீள்பதிவு...?

 

all rights reserved to www.karkibava.com