Nov 29, 2008

"ஹேய் கார்த்திக், பார்க் பீச்சுனு யார்கூட சுத்திட்டிருக்கே?"


    அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன். நிச்சயம் அதை எழுதியவரின் அனுமதி பெற்றே பதிவிடுவேன்.

************************************************      சென்னையில் ஒரு வீக் எண்ட்ட தனியா எப்படி கழிக்கிறதுன்னு நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அவர்களும் பல யோசனைகள் சொல்லியிருந்தார்கள். நான் போன பதிவில் எழுதியிருந்தவாறு, அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Jokes apart, I really thank them all. Thank you friends!
சனிக்கிழமை காலையில் நான் எழுந்தேன். எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்த என் நண்பன் Good afternoon என்றான். What?
Oops! மணி 11:50.
     சடாரென்று எழுந்தேன். காலையில் செய்ய வேண்டியவைகளை செய்து முடித்து, சாப்பிடும் போது கிட்டத்தட்ட சாயங்காலம் ஆகிவிட்டது. என்னுடைய ப்ளாக்கை திறந்து நண்பர்கள் சொன்ன யோசனைகளை மறுபடி ஒருமுறை படித்தேன். பெசன்ட் நகர் பீச் போவதுதான் ஒரே வழி என்று தெரிந்தது.
பெசன்ட் நகர் பீச்...மெரினா போலவே இங்கேயும் கூட்டமாகத்தான் இருந்தது. என்ன கொஞ்சம் வேறு மாதிரியான கூட்டம். கைகளை பாக்கெட்டில் விட்டுக் கொண்டு மெதுவாய் நடந்தேன்.
என்னைப்போல் யாரும் கைகளை பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு பிடித்துக்கொள்ள யாராவது இருந்தார்கள்.
Seems, Remaining single is a sin.
   கூட்டத்தை விட்டு விலகி நடந்தேன். தனியாக ஓரிடத்தில் நின்று கொண்டு கடலை பார்க்க ஆரம்பித்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். கடலுக்கு நம் எண்ணங்களை கிளரும் சக்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ரொம்ப நேரம் நின்று கொண்டே இருந்திருப்பேன் போல. மனதுக்குள் கவிதை ஒன்று உருவாவதுபோல் இருந்தது. பயம் பற்றிக் கொள்ள இடத்தை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தேன்.
     சட்டென்று என் பேண்ட்டை யாரோ பிடித்தார்கள். நான் திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன். சிரித்துக் கொண்டிருந்த ஒரு சின்னக் குழந்தை ஏதோ மொழியில் என்னவோ சொன்னது. எனக்கு அது சிரித்த மொழி மட்டும் தான் புரிந்தது. பேசிய மொழி? ம்ஹும்....
நான் குழம்பிப் போய் பார்க்க, சற்று பெரிய சைஸில் அந்த குழந்தையின் அம்மா ஓடிவந்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு என்னை பார்த்து ஏதோ மொழியில் என்னவோ சொன்னார்கள். நான் ஏதும் சொல்வதற்க்குள் போய்விட்டார்கள். குழ்ந்தையை மணலில் நடக்கவிட்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். எனது முதல் போட்டோ எப்போது எடுத்தது என்று யோசித்தேன். 6 வயது இருக்கும்.
    ஒரு காபி குடித்து விட்டு போகலாம் என்று கிளம்பினேன். Barista நிரம்பி வழிந்தது. அந்த கூட்டத்திற்க்குள் போக மனமில்லாமல் பார்த்தேன். சற்று தொலைவில் Coffee Day தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன். நான் மட்டும்தான் தனியாக நடப்பது போல் இருந்தது.
நிறுத்தப்பட்டிருந்த கார்களை சுற்றி சுற்றி கடந்து வந்தால் Coffee Dayம் சந்தைக்கடை மாதிரி தான் இருந்தது. காபி மட்டும் குடித்துவிட்டு வெளியே வந்தேன்.
ரொம்ப அமைதியாக ஃபீல் பண்ணினேன். வேறு எதுவும் செய்ய தோன்றவில்லை. வீட்டுக்கு போன் செய்தபடியே திரும்பி நடந்தேன்.
  என் தங்கை போனை எடுத்தாள்.

"ஹேய் கார்த்திக், பார்க் பீச்சுனு யார்கூட சுத்திட்டிருக்கே?"

***********************************************

   இந்த பதிவுக்கான பின்னூட்டங்களை படிக்க இங்கே கிளிக்குங்கள்

14 கருத்துக்குத்து:

Anonymous said...

excellent write up.thanks for the link

பரிசல்காரன் on November 29, 2008 at 8:55 AM said...

அருமையா இருந்துச்சு சகா.

இதுதான் சுருக்கமா நச்-னு எழுதி ஜெயிக்கற வித்தை!!!

வித்யா on November 29, 2008 at 9:27 AM said...

\\Seems, Remaining single is a sin\\
Married ppl or coupled ones dont think so:))

பிரேம்குமார் on November 29, 2008 at 10:41 AM said...

கடைக்குட்டி பதிவர் என்றாலும் கார்த்திக்கின் எழுத்து நடை எப்போதும் ரசிக்க வைக்கும் ஒன்று

அத்திரி on November 29, 2008 at 12:25 PM said...

//என்னைப்போல் யாரும் கைகளை பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு பிடித்துக்கொள்ள யாராவது இருந்தார்கள்.
Seems, Remaining single is a sin. //


ரொம்ப feel பண்ணிட்டீங்களே சகா???????? ஜாக்கிரதை.

அத்திரி on November 29, 2008 at 12:26 PM said...

இடுக்கன் வருங்கால் நகுக

இதையே ஞாபகம் வைக்க.

K.Ravishankar on November 29, 2008 at 1:05 PM said...

அன்புள்ள கார்த்திக்,

//அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம்//

நம்ம பதிவு ஏதாவது படிச்சிங்களா?
“மீண்டும் ஒரு காதல் கதை” படிங்க

இந்த பக்கமும் வாங்க.

த.மணம் ஒரு சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி.unreserved to First A/C வரை ஒரு நடை வாங்க. பாதி பேர் S1 லேயே கும்மி அடிச்சுட்டு இருக்காங்க.

ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட்சிறுகதை.சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்
கே .ரவிஷங்கர்

தாமிரா on November 29, 2008 at 3:57 PM said...

ர‌ச‌னையான‌ ப‌திவு.!

Karthik on November 29, 2008 at 4:45 PM said...

Thanks Karki for bringing my blog for the broader readership.

அன்புடன் அருணா on November 29, 2008 at 6:47 PM said...

//இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்.//

ம்ம்ம் வாராவாரம் பதிவுக்கு விஷயம் ரெடி பண்ணிட்டீங்க!!! ஐடியா நல்லாருக்கு.
அன்புடன் அருணா

அக்னி பார்வை on November 30, 2008 at 12:16 AM said...

உங்கள் சேவை எங்களுக்கு தேவை..இனி(மேயவது) ஒவ்வொரு ஞயிற்று கிழமை நல்ல பதிவை படிக்கலாம்...

:))))))))))

ஸ்ரீமதி on November 30, 2008 at 5:27 PM said...

யு ஆர் ரியலி கிரேட் அண்ணா.. புதுசு புதுசா செய்றீங்க.. Keep up :))

Sundar on November 30, 2008 at 11:29 PM said...

//Seems, Remaining single is a sin. //
//""ஹேய் கார்த்திக், பார்க் பீச்சுனு யார்கூட சுத்திட்டிருக்கே?""//

wishing u all the best!

கார்க்கி on December 1, 2008 at 8:29 AM said...

நன்றி அனானி

நன்றி பரிசல்

நன்றி வித்யா

நன்றி பிரேம்குமார்

நன்றி அத்திரி

நன்றி ரவிஷ்ங்கர்

நன்றி தாமிரா

நன்றி அத்திரி

நன்றி அக்னிபார்வை

ந‌ன்றி ஸ்ரீமதி

ந‌ன்றி சுன்த‌ர்

 

all rights reserved to www.karkibava.com