Nov 27, 2008

வலையுலக தர்பார்


   அரசராக கோவி.கண்ணன், தலைமையமைச்சராக குசும்பன், மற்றும் உங்கள் அபிமான பதிவர்கள் வீற்றிருக்கும் தர்பாரில் ஒரு நாள்

*************************************************

   ராஜாதி ராஜ‌
   ராஜ மார்த்தாண்ட‌
   ராஜ கம்பீர‌
   ராஜ குலத்துலோத்துங்க‌
   மாமன்னன் ஆவி.கண்ணன் ச்சே.. பாவி.கண்ணன்..    ச்சேசே.. கோவி.கண்ணன் பராக்..பராக்..ப்ராக்..

அரசர்: என்ன குசும்பரே.. கவனித்தீரா?

குசும்பன்: ஆம். மன்னா.இவன் தலை வகிடை வலப்பக்கம் எடுத்துள்ளான். நுட்பமான விதயங்களையும் கவனிப்பதுதான் எனக்கு கை வந்த கலையாச்சே..ஹிஹிஹி

அர‌ச‌ர்: உன்னைப் போய் த‌லைமைய‌மைச்ச‌ராக‌ வைத்தால் இவ‌ன் இப்ப‌டித்தான் செய்வான். வாரும்.

குசும்ப‌ன்: (வீர‌னிட‌ம்) கேட்டாயா? அர‌ச‌ரே வாரும் என‌ சொல்லிவிட்டார். இதோ இப்பொதே உன‌க்கு இட‌ப்ப‌க்க‌ம் வ‌கிடெடுத்து வாரி விடுகிறேன். சீப்பு இருக்கிற‌தா?

(மன்னர் அரியணையில் அமர சபை தொடங்குகிறது)

மன்னர்: குசும்பா.. இன்றைய திட்டம் என்ன?

குசும்பன்: மன்னா. அந்த உடை விவகாரம்.

மன்னர்: ஆம். அமைச்சர்களே!!!நான் ஒரு மாபெறும் வீரன் என்பது ஒரு புறமிருக்க, சமீப காலமாக அபரிதமாக வளர்ந்து வரும் என் தொப்பை அந்த கம்பீரத்தை கெடுப்பதாக உள்ளது. எனவே இனிமேல் அனைவரும் தொளதொளவென உடை அணிய வேண்டும்.கழுத்திலிருந்து கால் வரைக்கும் ஒரே உடையாக இருக்க வேண்டும்.எவருக்கு தொப்பை என்பது தெரியாத அளவுக்கு அது இருக்க வேண்டும்.

நர்சிம் : மன்னா இது அநியாயம்.டவுசர் எனப்படும் கீழாடையின் உள்ளே மேலாடையை சொருகி வருவது என் வழக்கம். அவ்வாறு செய்யாமல் என்னால் கழிவறைக்கு கூட செல்ல முடியாதே.

மன்னர்: அரசரையே எதிர்த்து பேசும் தைரியம் யார் தந்தது நர்சிம்மரே? உங்களுக்கும் மாறவர்மனுக்கும் தொடர்பு உண்டு என்று வந்த தகவல் உண்மை போல உள்ளதே?அமைதியாக அமரும்.

 குசும்பர்: மன்னா உங்களை வாழ்த்திப் பாட அய்யணார் என்ற புலவர் வந்துள்ளார்.

 மன்னர்: புலவரா? வரச்சொல்லும். வந்து பாட சொல்லும்.

 அய்யணார்: திட்டமிடுதல்களைப் பற்றிய பிரக்ஞைகள்
                  மீப்பெருவெளியின் இசைத்தன்மை மீது
                  பெரும்திரையெனக் கவிழ்கிறது
                  தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து
                  பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை
                  இன்னும் ஒருதரம்
                  சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.

 மன்னர்: என்ன சொல்கிறான் இவன்? தமிழ்நாட்டு மண்ணில் தமிழிலே கவி பாடலாமே? இவன் ஏன் பிராகிருத மொழியில் பாடிகிறான்.

குசும்பன்: மன்னா உங்களுக்கு பிராகிருத மொழி கூடத் தெரியுமா?

மன்னர்: உங்களுக்குத் தெரியுமா?

குசும்பன்: இல்லை மன்னா

மன்னர்: அப்படியென்றால் எனக்குத் தெரியும்

முரளி: (நடுவில்) இது தில்லிமுல்லுவில்..

மன்னர்: படம் காட்டாமல் அமரும்.

குசும்பன்: இவர் வேண்டாம் மன்னா. இன்னொரு பெண்கவி வந்துள்ளார்

மன்னர்: ஆச்சரியம்? பெண் புலவரா? கவிதாயினி.. கவி தா இனி..

ராப் : பார் போற்றும் எங்கள் மன்னனே
      வானளாவிய புகழுடைய விண்னனே
      தங்கை துயர் துடைக்கும் அண்ணனே
      சிங்க நிகர் வீரன் கோவி.கண்ணனே

மன்னர்: ஆஹா.. அற்புதம்.. முதல் முறையாக எனக்குப் பிடித்த கவிதை சொன்ன புலவர் நீ.பிடியும் 1000 பொற்காசுகள்.

ராப்: ஹை.மீ த ஃப்ர்ஸட்டா?நன்றி மன்னா.

குசும்பன்: மன்னா.. நீங்கள் ஏன் மகாராணியைப் பார்த்து ஒரு கவி பாட கூடாது?

மன்னர்: அனைத்தும் அறிவான் கண்ணன். இதோ..

        மதி முக நாயகியே..

லக்கி: (குறுக்கிடுகிறார்) மன்னா..மன்னிக்க வேண்டுகிறேன். மகாராணி வைகோவின் ஆதரவாளரா?

மன்னர்: (கோவமாக) யார் சொன்னது?

லக்கி: நீங்கள்தான் அவரை ம.தி.மு.க நாயகி என்றீரே?

மன்னர்: ஆவ்வ்வ்வ்.நல்ல கவிதையை இழந்து விட்டோமே. குசும்பா மதிய உணவென்ன?

ஒருவர்: பிரியாணி மன்னா

மன்னர்: யாரது? வெண்பூவா?

வெண்பூ: ஆம் மன்னா. நானே ருசி பார்த்து தங்களுக்கு பிடிக்கும் வண்னம் செய்ய சொல்லியிருக்கிறேன்.

மன்னர்: ருசி பார்த்தீரா? பின் எங்களுக்கு எங்கே இருக்கப் போகிறது?

குசும்பன்: மன்னா.ஒரு பிரச்சனை. இளவரசர் தேர்வு எழுத மாட்டேன் என்கிறாராம். அவருக்கு உடனே திருமணம் செய்ய வேண்டுமாம்.

மன்னர்: என்ன திருமணமா? அவரை உடனே குருகுலத்திலிருந்து மாற்றி முனிவர் தாமிராவிடம் சில காலம் விட்டுவிடுங்கள். எல்லாம் சரியாய் போகும். தேர்வு எழுத வேறு ஆளை தயார் செய்யுங்கள்.

குசும்பர்: ஒருவர் இருக்கிறார் மன்னா. இதோ வரச் சொல்கிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் பெய‌ரென்ன‌ ?

அப்துல்லா: வணக்கம் மன்னா.நான் புதுகை.அப்துல்லா. பிறருக்காக தேர்வு எழுதுவது என் விருப்பமான பணி.

ம‌ன்ன‌ர்: என்ன‌ புதுகையா? அப்ப‌டியென்றால் உன் ப‌ழைய‌ கை என்ன‌ ஆன‌து? யார் வெட்டினார்க‌ள்?

குசும்ப‌ன்: ம‌ன்னா புதுகை என்ப‌து அவ‌ர் ஊரின் பெய‌ர்.

ம‌ன்ன‌ர்: அப்போ துல்லா என்றால்?

குசும்ப‌ன்: அது அப்துல்லா. அப்போ துல்லா அல்ல‌ ம‌ன்னா.

ம‌ன்ன‌ர்: தெரியும் குசும்பா. அப் என்றால் இப்போது என்று பொருள். அத‌னால் தான் துல்லாவுக்கு ம‌ட்டும் அர்த்த‌ம் கேட்டேன்.

குசும்ப‌ன்: அய்யோ அய்யோ

ம‌ன்ன‌ர்: என்ன‌ துல்லா என்றால் அய்யோ என்று பொருளோ? என‌க்கு தெரியாதே..

 ஜோஸப் பால்ராஜ்: நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை.எங்கும் திருட்டு.பஞ்சம்.. பாவம் மக்கள்.

மன்னர்: போதும். பதிவர் சந்திப்பு சபையில் சம்மனமிட்டு அமர்ந்து சத்தம் போட்டு சங்கை முழங்கிவிட்டு, பின்புறம் போய் பீர் வேண்டுமென பிறரை பிறான்டி எடுப்பது நீர்தான் என்பது எனக்கு ஒற்றன் கொடுத்த தகவல். உண்மைதானே?

(தலையாட்டுகிறார்)

மன்னர்: குசும்பா. இவர்கள் என்னை கடுப்பேத்துகிறார்கள். வாரும் நாம் வேட்டைக்கு செல்வோம்.

குசும்பன் : நிஜமாகத்தான் சொல்கிறீர்களா அரசே?

மன்னர்: உம் நக்கலை சஞ்ச‌யிடமும், நந்துவிடமும் வைத்துக் கொள்.புறப்படு

(ஆற்றுகருகில்)

பரிசல்: அரசே!! இது போல வேட்டைக்கு போகும் போது என் குதிரை பாதியிலே நின்றுவிடும். அது போல் உங்களுக்கு ஆகி இருக்கிறதா?

மன்னர்: இவன் யாரடா. புறப்படும் போதே அபசகுனாமாக கேட்கிறான்?

குசும்பன்: இவருக்குத்தான் நாம் ராஜகுரு பதவி தருவதாக கேலி ஓலை அனுப்பி சபையே சிரிக்க வைத்தோம் அரசே.

மன்னர்: ஓ அவரா? இன்னொருவருக்கும் அனுப்பினோமே?

குசும்பன்: அவர் அந்தப்புரத்தில் இருப்பார்

மன்னர்: என்ன?

குசும்பன்: இல்லை மன்னா. கரைக்கு அந்த புறத்தில் இருப்பார் என்றேன்

***********************************************

டிஸ்கி: 1) ரொம்ப பெருசா இருக்கு. நீங்கள் விரும்பினால் அடுத்த பாகத்தையும் வெளியிடுவேன்.

       2) நேற்று மேட்ச் பார்த்துவிட்டு ஒரு மணி வரை கண் விழித்து எழுதிய பதிவிது.பிடித்திருந்தால் பதிவின் தலைப்பில் கிளிக்கி த‌மிழ்ம‌ண‌ ப‌ட்டையில் ஓட்டுக் குத்துங்கோ.

131 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on November 27, 2008 at 8:30 AM said...

நெஜமாவே சூப்பர்டா சகா!
கலக்கலோ கலக்கல்!

பரிசல்காரன் on November 27, 2008 at 8:31 AM said...

ஆஹா.. ஒனக்கு மீ த ஃபர்ஸ்ட் போடும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பூரிவிக்கிறேன்.. ச்சே.. பூரிக்கிறேன்!

பரிசல்காரன் on November 27, 2008 at 8:35 AM said...

சகா... ஒரு கேள்வி.. உண்மையைச் சொல்லணும். அதாவது இந்த மேட்டர் ஒரே ராத்திரில கருவாகி, உருவானதா? இல்லை கொஞ்ச நாளா இந்த திங்கிங் - மதிமுக - ம.தி.மு.க/ = இதை லக்கிக்கு எழுதணும், ஓலை அனுப்பி ஏமாத்தினதுன்னு பரிசலுக்கு எழுதணும்... - இப்படி Knots மொதல்ல மனசுல இருந்ததா?

SP.VR. SUBBIAH on November 27, 2008 at 8:35 AM said...

/////குசும்பன்: மன்னா உங்களுக்கு பிராகிருத மொழி கூடத் தெரியுமா?

மன்னர்: உங்களுக்குத் தெரியுமா?

குசும்பன்: இல்லை மன்னா

மன்னர்: அப்படியென்றால் எனக்குத் தெரியும்////

Super!:-)))))))

பரிசல்காரன் on November 27, 2008 at 8:36 AM said...

ஓட்டுப் போட்டாச்சு. ஆஃபீஸ் போய் இன்னொரு ஓட்டு போட்டுடறேன்..

பை..பை!!

Anonymous said...

சூப்பரா இருக்கு, கண்டிப்பா தொடருங்க

தமிழ் பிரியன் on November 27, 2008 at 8:50 AM said...

கலக்கல்...:)
அடுத்த பகுதியும் போடுங்க... ஆனா இதில் கார்க்கியையே காணோமே..;))

கோவி.கண்ணன் on November 27, 2008 at 8:50 AM said...

//பரிசல்: அரசே!! இது போல வேட்டைக்கு போகும் போது என் குதிரை பாதியிலே நின்றுவிடும். அது போல் உங்களுக்கு ஆகி இருக்கிறதா? //

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கார்க்கி அஅஅஅஅஅஅஅஅஅஅஅசத்தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

பாபு on November 27, 2008 at 8:53 AM said...

ரசித்தேன்,தொடரவும்

RAHAWAJ on November 27, 2008 at 9:02 AM said...

சூப்பர் மாமு இதகாண்டி சென்னை தமிழில் இருந்தால் இன்னும் சூப்பர்

கோவி.கண்ணன் on November 27, 2008 at 9:04 AM said...

//அய்யணார்: திட்டமிடுதல்களைப் பற்றிய பிரக்ஞைகள்
மீப்பெருவெளியின் இசைத்தன்மை மீது
பெரும்திரையெனக் கவிழ்கிறது
தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து
பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை
இன்னும் ஒருதரம்
சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.//

பின்னவீனத்துவம்...நன்றாக வருதே. அவிங்களுக்கே புரியாத பின் பின் பின்னவினத்துவம் இது.

கோவி.கண்ணன் on November 27, 2008 at 9:06 AM said...

எனக்கு தொப்பை இருப்பதாக சொல்வதை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்காகவே இந்தவாரம் பீச் சார்ட்ஸுடன் டி சர்ட் போட்டு புகைப்படம் எடுத்து பதிவில் போடுறேன். அப்ப தொப்ப இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்

கெக்கேபிக்குணி (05430279483680105313!) on November 27, 2008 at 9:08 AM said...

ரொம்ப நல்லா இருந்தது, தொடருங்க!! (அடுத்த பதிவும் இம்புட்டு நீளமா இருக்குமா?:-)

கார்க்கி on November 27, 2008 at 9:23 AM said...

//பரிசல்காரன் said...
நெஜமாவே சூப்பர்டா சகா!
கலக்கலோ கலக்கல்!//

நன்றி சகா..எனக்குப் பிடித்திருந்தாலும் ஒரு சந்தேகத்துடன் தான் பதிவேற்றினேன்.

//பரிசல்காரன் said...
சகா... ஒரு கேள்வி.. உண்மையைச் சொல்லணும். அதாவது இந்த மேட்டர் ஒரே ராத்திரில கருவாகி, உருவானதா? இல்லை கொஞ்ச நாளா இந்த திங்கிங் - மதிமுக - ம.தி.மு.க/ = இதை லக்கிக்கு எழுதணும், ஓலை அனுப்பி ஏமாத்தினதுன்னு பரிசலுக்கு எழுதணும்... - இப்படி Knots மொதல்ல மனசுல இருந்ததா?//

நேத்து மேட்ச் பார்த்துட்டு வீட்டுக்கு போகும் போது உருவானது இந்த ஐடியா. முதலில் நர்சிம் மேட்டர் மட்டுமே மனதில் இருந்தது. எழுத உக்கார்ந்த பிறகு மத்த ஐடியா வந்தது. லக்கி,உங்க மேட்ட‌ர், அப்துல்லா மேட்டர் எல்லாம் எழுதும்போது வ்ருவானதுதான். உண்மைதான் சகா..

கார்க்கி on November 27, 2008 at 9:25 AM said...

//SP.VR. SUBBIAH said...

Super!:-)))))))

நன்றி வாத்தியாரே...

//சின்ன அம்மிணி said...
சூப்பரா இருக்கு, கண்டிப்பா தொடருங்க//

நன்றி அம்மிணி.. நிச்சயாமாக‌

//தமிழ் பிரியன் said...
கலக்கல்...:)
அடுத்த பகுதியும் போடுங்க... ஆனா இதில் கார்க்கியையே காணோமே..;))//

நன்றி சகா.. அடுத்த பகுதியில் சேர்த்து விடலாம்.

//பாபு said...
ரசித்தேன்,தொடரவும்//

நன்றி பாபு

பரிசல்காரன் on November 27, 2008 at 9:27 AM said...

//நேத்து மேட்ச் பார்த்துட்டு வீட்டுக்கு போகும் போது உருவானது இந்த ஐடியா. முதலில் நர்சிம் மேட்டர் மட்டுமே மனதில் இருந்தது. எழுத உக்கார்ந்த பிறகு மத்த ஐடியா வந்தது. லக்கி,உங்க மேட்ட‌ர், அப்துல்லா மேட்டர் எல்லாம் எழுதும்போது வ்ருவானதுதான். உண்மைதான் சகா..//

இது உண்மைன்னா நெக்ஸ்ட்மீட்ல ஒரு ராஜமீன் இருக்கு ஒனக்கு! சபாஷ்!!!

கார்க்கி on November 27, 2008 at 9:28 AM said...

/கோவி.கண்ணன் said...
//பரிசல்: அரசே!! இது போல வேட்டைக்கு போகும் போது என் குதிரை பாதியிலே நின்றுவிடும். அது போல் உங்களுக்கு ஆகி இருக்கிறதா? //

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கார்க்கி அஅஅஅஅஅஅஅஅஅஅஅசத்தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//

நன்றி மன்னா.. பிற்கிழி ஏது கிடையாதா?

//எனக்கு தொப்பை இருப்பதாக சொல்வதை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்காகவே இந்தவாரம் பீச் சார்ட்ஸுடன் டி சர்ட் போட்டு புகைப்படம் எடுத்து பதிவில் போடுறேன். அப்ப தொப்ப இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்//

நீங்க எல்லா படத்திலும் அப்படித்தானே இருக்கிங்க. உங்க அமைச்சர் நடத்திய போட்டி இன்னும் மறக்கவில்லை மன்னா.

பரிசல்காரன் on November 27, 2008 at 9:29 AM said...

//நேத்து மேட்ச் பார்த்துட்டு வீட்டுக்கு போகும் போது//

இதைப் படிச்சது, ஒரு சர்வே ஞாபகத்துக்கு வருது.

செக்ஸ்க்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க-ன்னு சர்வே எடுத்தாங்களாம்.

பாத்ரூம் போவோம், அப்படியே மனைவி தோள்ல சாய்ஞ்சு தூங்கீடுவோம் இப்படி பதில்கள் வந்ததாம். 45%க்கு மேல ‘வீட்டுக்குப் போவோம்'ன்னு வந்ததாம்!

ஆமா, நீ எங்க மேட்ச் பார்க்கற?

கார்க்கி on November 27, 2008 at 9:30 AM said...

//RAHAWAJ said...
சூப்பர் மாமு இதகாண்டி சென்னை தமிழில் இருந்தால் இன்னும் சூப்ப//

அப்படியா? நல்ல மேட்டர் கொடுத்திருக்கிங்க. ட்ரை பன்ண்ணுவோம். நன்றி

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ரொம்ப நல்லா இருந்தது, தொடருங்க!! (அடுத்த பதிவும் இம்புட்டு நீளமா இருக்குமா?:‍)//

இத‌ எப்படி எடுத்துகிறது????????? எனிவே நன்றி

கார்க்கி on November 27, 2008 at 9:33 AM said...

//ஆமா, நீ எங்க மேட்ச் பார்க்கற?//

இது ஜோக்கா நான் படிச்சேன். நீங்க சர்வேனு சொல்லிட்டிங்க..

எங்க ஆஃபீஸ் கஃஃபேடேரியாவில் டிவி உண்டு. அங்குதான் பார்த்தேன். அடுத்து இன்னொரு சர்வேயில் அலுவலகத்திலே இப்படியெல்லாம் நடக்குதுனு சொல்லிடாதீங்க..ஹிஹிஹி..

ராஜமீனுக்கு தொட்டுக்க வறுத்த மீன்? ஐ மீன் சைடிஷ் மேன்

விஜய் ஆனந்த் on November 27, 2008 at 9:41 AM said...

:-)))...

கார்க்கியையும் உள்ள இழுங்கப்பா...

குசும்பன் on November 27, 2008 at 9:46 AM said...

//குசும்பன்: இவருக்குத்தான் நாம் ராஜகுரு பதவி தருவதாக கேலி ஓலை அனுப்பி சபையே சிரிக்க வைத்தோம் அரசே. //

வாய்விட்டு சிரித்தேன் கார்க்கி!

செம கலக்கல்!

குசும்பன் on November 27, 2008 at 9:52 AM said...

//நர்சிம் : மன்னா இது அநியாயம்.டவுசர் எனப்படும் கீழாடையின் உள்ளே மேலாடையை சொருகி வருவது என் வழக்கம். அவ்வாறு செய்யாமல் என்னால் கழிவறைக்கு கூட செல்ல முடியாதே. //

டக்கின் செஞ்சுக்கிட்டு பதிவர் சந்திப்புக்கு போனது ஒரு குத்தம்மாய்யா? இதை எல்லாம் யார் ஆரம்பிச்சு வெச்சது என்று தெரியும் வொய், அவரை சென்னை வரும் பொழுது லீ மெரிடியனில் வெச்சு நல்லா குளிர குளிர கவனிக்கனும்:)

அப்படின்னு நர்சிம் சொல்லுவார் பாருங்களேன்!

குசும்பன் on November 27, 2008 at 10:08 AM said...

//நீங்க எல்லா படத்திலும் அப்படித்தானே இருக்கிங்க. உங்க அமைச்சர் நடத்திய போட்டி இன்னும் மறக்கவில்லை மன்னா.//
இப்படி கோவி.கண்ணனை

//நர்சிம் : மன்னா இது அநியாயம்.டவுசர் எனப்படும் கீழாடையின் உள்ளே மேலாடையை சொருகி வருவது என் வழக்கம். அவ்வாறு செய்யாமல் என்னால் கழிவறைக்கு கூட செல்ல முடியாதே. //

இப்படி நர்சிம்மை


//எழுத வேறு ஆளை தயார் செய்யுங்கள். குசும்பர்: ஒருவர் இருக்கிறார் மன்னா.//

இப்படி அத்துல்லாவை

//மன்னர்: உம் நக்கலை சஞ்ச‌யிடமும், நந்துவிடமும் வைத்துக் கொள்.//

இப்படி நண்டு:) & சஞ்சய்யை


//ராஜகுரு பதவி தருவதாக கேலி ஓலை அனுப்பி சபையே சிரிக்க வைத்தோம் அரசே. மன்னர்: ஓ அவரா? இன்னொருவருக்கும் அனுப்பினோமே? //

இப்படி பரிசல் & அதிஷா

இவர்கள் எல்லாம் மறந்து போய் இருக்கும் விசயங்களை எல்லாம் ஏனப்பா கிளறி என்னை நொங்கெடுக்க வைக்க போகிறீர்!!!

ஸ்ரீமதி on November 27, 2008 at 10:14 AM said...

அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்.. படிச்சு சிரிச்சிகிட்டே இருக்கேன்.. :)))))))

coolzkarthi on November 27, 2008 at 10:17 AM said...

ஹி ஹி ஹி...கலக்கல் நண்பரே....

அருண் on November 27, 2008 at 10:22 AM said...

கலக்கல் கார் கீ!

அருண் on November 27, 2008 at 10:26 AM said...

வீரனாக வருவது கார் கீ தான்.

Anonymous said...

கிகிக்கிகிகி
அருமை கார்க்கி
லக்கிண்ணா, பரிசல் பற்றியதெல்லாம்....கிகிகி

நான் on November 27, 2008 at 10:28 AM said...

கலக்கிட்டே இருக்கீங்க சகா...தொடருங்கள்

அருண் on November 27, 2008 at 10:30 AM said...

//பரிசல்: அரசே!! இது போல வேட்டைக்கு போகும் போது என் குதிரை பாதியிலே நின்றுவிடும். அது போல் உங்களுக்கு ஆகி இருக்கிறதா? //

ஜூப்பர்!

அருண் on November 27, 2008 at 10:31 AM said...

அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுங்க பாஸ்.

அருண் on November 27, 2008 at 10:33 AM said...

ஆபிஸ்ல எல்லோரும் என்னய ஒரு மாதிரியா பாக்கறாங்க. ஓவர சிரிப்பு வருது. செம நக்கல் பாஸ்.

கும்க்கி on November 27, 2008 at 10:36 AM said...

AE JUPPERU....

கும்க்கி on November 27, 2008 at 10:38 AM said...

MARUBADI ACHARYAM.....NALLA KARPANAIVALAM .. ...THODARAVUM.

கார்க்கி on November 27, 2008 at 10:50 AM said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...

கார்க்கியையும் உள்ள இழுங்கப்பா...//

அடுத்த பாகத்தில் நிச்சயம் சகா..

//வாய்விட்டு சிரித்தேன் கார்க்கி!

செம கலக்கல்!//

குசும்பன் வாயால் இப்படி சொல்ல வைப்பதென்ன அவ்வள்வு எளிதா? நன்றி தல..

//டக்கின் செஞ்சுக்கிட்டு பதிவர் சந்திப்புக்கு போனது ஒரு குத்தம்மாய்யா? இதை எல்லாம் யார் ஆரம்பிச்சு வெச்சது என்று தெரியும் வொய், அவரை சென்னை வரும் பொழுது லீ மெரிடியனில் வெச்சு நல்லா குளிர குளிர கவனிக்கனும்:)

அப்படின்னு நர்சிம் சொல்லுவார் பாருங்களேன்!//

ஆசை தோச..

கார்க்கி on November 27, 2008 at 10:52 AM said...

//ஸ்ரீமதி said...
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்.. படிச்சு சிரிச்சிகிட்டே இருக்கேன்.. :)))))))//

நீ சும்மாவே சிரிச்சுக்கிட்டுதானே இருப்ப.. ஹிஹிஹி

//coolzkarthi said...
ஹி ஹி ஹி...கலக்கல் நண்பரே....//

நன்றி சகா..

/அருண் said...
கலக்கல் கார் கீ!//

நன்று அருண். காலை வணக்கம்.

கார்க்கி on November 27, 2008 at 10:54 AM said...

//Thooya said...
கிகிக்கிகிகி
அருமை கார்க்கி
லக்கிண்ணா, பரிசல் பற்றியதெல்லாம்....கிகிகி//

நன்றி தூயா

//நான் said...
கலக்கிட்டே இருக்கீங்க சகா...தொடருங்கள்//

தொடர் ஆதரவுக்கு நன்றி சகா..

/கும்க்கி said...
MARUBADI ACHARYAM.....NALLA KARPANAIVALAM .. ...THODARAவூம்.//

thanks த‌ல.. இன்னும் கப்பூட்டருக்கு ஒம்பு சரியாவலையா? English ல type பண்றீங்க‌

கார்க்கி on November 27, 2008 at 10:54 AM said...

//அருண் said...
ஆபிஸ்ல எல்லோரும் என்னய ஒரு மாதிரியா பாக்கறாங்க. ஓவர சிரிப்பு வருது. செம நக்கல் பாஸ்//

அது எப்பவும் பார்க்கரதுதானே சகா..:))))

கும்க்கி on November 27, 2008 at 11:01 AM said...

WISDA VA POTTU THOLACHITTEEN..E KALAPPAY MAKKAR PANNUTHU.

சரவணகுமரன் on November 27, 2008 at 11:03 AM said...

கலக்கல்

அருண் on November 27, 2008 at 11:05 AM said...

// கும்க்கி said...

WISDA VA POTTU THOLACHITTEEN..E KALAPPAY MAKKAR PANNUTHU.//

NHM யூஸ் பண்ணுங்க. இது Vistaல நல்லா வேலை செய்யுது.

முரளிகண்ணன் on November 27, 2008 at 11:08 AM said...

சகா கலக்கீட்டிங்க.

\\பரிசல்காரன் said

நெஜமாவே சூப்பர்டா சகா!
கலக்கலோ கலக்கல்!\\

அப்போ இதுக்கு முன்னால நீங்க சூப்பர்னு சொன்னதெல்லாம் கலைஞர் பாணி லுலுலாயியா?

கார்க்கி on November 27, 2008 at 11:14 AM said...

//கும்க்கி said...
WISDA VA POTTU THOLACHITTEEN..E KALAPPAY MAKKAR PANNUதூ.//

www.tamileditor.org இந்த இணையத்தளத்தை பயண்படுத்தி தமிழில் டப்பலாம். எதையும் டவுன்லோடு செய்யத் தேவையில்லையே..

//சரவணகுமரன் said...
கலக்க//

நன்றி சரவணகுமரன்..

//முரளிகண்ணன் said...
சகா கலக்கீட்டிங்க//

நன்றி சகா..

/அப்போ இதுக்கு முன்னால நீங்க சூப்பர்னு சொன்னதெல்லாம் கலைஞர் பாணி லுலுலாயியா?//

ஆவ்வ்வ்வ் இத நான் யோசிக்கலையே..

நானும் ஒருவன் on November 27, 2008 at 12:12 PM said...

இந்தா பிடி 1000000000 பொற்காசுகள். மனமுவந்து சிரித்தேன். அருமை

நானும் ஒருவன் on November 27, 2008 at 12:14 PM said...

"பாத்ரூம் போவோம், அப்படியே மனைவி தோள்ல சாய்ஞ்சு தூங்கீடுவோம் இப்படி பதில்கள் வந்ததாம். 45%க்கு மேல ‘வீட்டுக்குப் போவோம்'ன்னு வந்ததாம்!"


இன்னொரு சர்வே சொல்வது இந்தியர்கள் தான் செய்வதை பிறர் செய்தது போல சொல்வார்களாம்.

no no bad words friend

நானும் ஒருவன் on November 27, 2008 at 12:16 PM said...

// அருண் said...
வீரனாக வருவது கார் கீ தான்."

இடிக்குதே. வீரானாக கார்க்கியா?????

நானும் ஒருவன் on November 27, 2008 at 12:18 PM said...

"மன்னர்: அனைத்தும் அறிவான் கண்ணன். இதோ..
மதி முக நாயகியே..
லக்கி: (குறுக்கிடுகிறார்) மன்னா..மன்னிக்க வேண்டுகிறேன். மகாராணி வைகோவின் ஆதரவாளரா?
மன்னர்: (கோவமாக) யார் சொன்னது?
லக்கி: நீங்கள்தான் அவரை ம.தி.மு.க நாயகி என்றீரே?"

சான்சே இல்லை. சூப்பர்

நானும் ஒருவன் on November 27, 2008 at 12:20 PM said...

என்ன.இன்று சபையில் யாருமே காண‌வில்லை. மழையால் விடுமுறையா?

நானும் ஒருவன் on November 27, 2008 at 12:20 PM said...

ஓக்கே. மீ த 50 போட்டு கிள‌ம்பறேன்

prakash on November 27, 2008 at 12:31 PM said...

ஹா ஹா ஹஹா
ஹோ ஹோ ஹோ
ஐய்யய்யோ என்னால முடியலப்பா :)))))))))))

prakash on November 27, 2008 at 12:34 PM said...

யாரங்கே! ! நல்ல பதிவில் கும்மியடிக்க முடியாமல்
சதி செய்த Project Manager காதில் கால் வீசம் கட்டெறும்பை விடுங்கள்...

prakash on November 27, 2008 at 12:38 PM said...

நகைச்சுவை சார்ந்த உன்னடைய பதிவில் இது தான் சிறந்தது என்பேன்...

தாமிரா on November 27, 2008 at 12:39 PM said...

முனிவர் :

நன்றாக எழுதியுள்ளாய் பிள்ளாய். தொடர்க உன் பணி. ஆயுஷ்மான் பவ.!

தாமிரா on November 27, 2008 at 12:40 PM said...

கலாசல் கார்க்கி.

ரசித்துச்சிரித்தேன். இது போன்ற பதிவுகளில் நீளம்தான் பிளஸ் பாயிண்டே.. கவலைப்படாமல் நீளமாக எழுதலாம். ஏனெனில் விறுவிறுப்பு, நகைச்சுவை.. அடுத்து யாரு வரப்போறாங்க? அவங்களை எப்படி கலாய்ச்சிருக்கான்னு.. ரொம்ப வேகமா எதிர்பார்ப்புகளோட போகும். அருமை.!

தாமிரா on November 27, 2008 at 12:40 PM said...

இது உண்மைன்னா நெக்ஸ்ட்மீட்ல ஒரு ராஜமீன் இருக்கு ஒனக்கு!// அதென்ன ராஜமீன்.? புரியலையே.. ஏதாவது அயிரை மீன் மாதிரியா? அப்பிடின்னா எனக்கும் வேணும்..

prakash on November 27, 2008 at 12:46 PM said...

போட்டாச்சு போட்டாச்சு (ஓட்டு தான்பா)

கார்க்கி on November 27, 2008 at 12:53 PM said...

வா மச்சி.. நல்ல மழையோ சென்னைல?

********

/prakash said...
ஹா ஹா ஹஹா
ஹோ ஹோ ஹோ
ஐய்யய்யோ என்னால முடியலப்பா :)))))))))))//

பாவம்.. என்ன ஆச்சோ இவருக்கு?

//prakash said...
நகைச்சுவை சார்ந்த உன்னடைய பதிவில் இது தான் சிறந்தது என்பேன்...//

நன்றி பெரியவரே..

// prakash said...
போட்டாச்சு போட்டாச்சு (ஓட்டு தான்பா)//

நன்றி.. பாருங்க அப்பக் கூட 9 ஓட்டு தான் ஆயிருக்கு.. இதுக்கும் 2 எதிர் ஓட்டு போடிருக்காங்க.. பார்த்து செய்யுங்கப்பா.. பின்னூட்டம் போட்ட்வங்க போட்டிருந்தாலே 30 ஓட்டு ஆயிருக்கனும் :((

கார்க்கி on November 27, 2008 at 12:58 PM said...

//தாமிரா said...
கலாசல் கார்க்கி.

ரசித்துச்சிரித்தேன். இது போன்ற பதிவுகளில் நீளம்தான் பிளஸ் பாயிண்டே.. கவலைப்படாமல் நீளமாக எழுதலாம். ஏனெனில் விறுவிறுப்பு, நகைச்சுவை.. அடுத்து யாரு வரப்போறாங்க? அவங்களை எப்படி கலாய்ச்சிருக்கான்னு.. ரொம்ப வேகமா எதிர்பார்ப்புகளோட போகும். அருமை.!//

உண்மைதான். ஆனா ரெண்டா போட்டா நம்ம வேலை குறையுமே!!! நன்றி சகா..

/// அதென்ன ராஜமீன்.? புரியலையே.. ஏதாவது அயிரை மீன் மாதிரியா? அப்பிடின்னா எனக்கும் வேணும்.//

அட என்ன சகா? kingfisher தெரியாதா? நீங்க எல்லாம் சூடா குடிக்கறவங்க..

Anonymous said...

you are rocking man. I cant stop laughing while reading. great

Sundar on November 27, 2008 at 1:06 PM said...

செம கலக்கல்! ரொம்ப நல்லாயிருக்கு. சும்மா தொடர்ந்து எழுதுங்க கார்க்கீ!

Ŝ₤Ω..™ on November 27, 2008 at 1:12 PM said...

Sen: அய்யோ அய்யோ.. ஒரே நகைச்சுவையாக உள்ளது..
CarKey: அதுக்கு என்ன இப்போ??
Sen: ஏன்யா நான் என்ன சொல்லிபுட்டேன்.. நல்லா இருக்குன்னு தான சொல்ல வாரேன்..
CarKey: சரி சரி.. சொல்ல வந்தத சட்டுன்னு சொல்லிட்டு கிளம்பு..
Sen: ஏன்யா?? உனக்கு ஏன் இந்த கொல வெறி??
CarKey: டேய்ய்ய் வேண்டாம்.. அடிவாங்குவ..
Sen: ஆமாய்யா.. உனக்கு எல்லாம் என்ன மாதிரி ஒரு அப்பாவி தான் கிடைப்பான்..
CarKey: அப்பாவியா நீ?? அடப்பாவி..
Sen: குசும்புயா உனக்கு..
CarKey: டேய்.. இப்போ என்னான்ற நீ??
Sen: எனக்கு ஒரு சந்தேகம்.. விளக்கம் வேணும்..
CarKey: அட ஓட்ட வாய் நாராயணா.. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.. என்னடா உனக்கு சந்தேகம்??
Sen: ஜோசப் பால்ராஜ் - ”பீர்பால்”ன்னு உமக்கு எப்படி தெரியும்???
CarKey: அத சொல்ல மாட்டேன்.. அது சஸ்பென்ஸ்..
Sen: போங்கய்யா.. போய் புள்ளக் குட்டியல படிக்க வைங்க..

நான் ஆதவன் on November 27, 2008 at 1:19 PM said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சகா....

சான்ஸே இல்லை.

அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்

வித்யா on November 27, 2008 at 1:46 PM said...

செம கலக்கல். Screen பார்த்து சிரித்ஹ்டுக்கொண்டிருக்கிர என்னை ரங்கமணி ஒரு மாதிரியான பயத்துடன் பார்க்கிறார்:(

கிழஞ்செழியன் on November 27, 2008 at 1:59 PM said...

அருமே... அருமே... அருமே...
(கமென்ட் போடலாம்னு பாத்தா, கண் இமைக்கிறதுக்குள்ளே 74, 84ன்னு கருத்துக் குத்து!

narsim on November 27, 2008 at 2:04 PM said...

wow!!! lovly post!! kallakkal saga.. contini..

narsim(tamil font not avbl.. rain rain..)

prakash on November 27, 2008 at 2:15 PM said...

//பாவம்.. என்ன ஆச்சோ இவருக்கு?//

ஆபீஸ்ல எல்லாருக்கும் அதே சந்தேகம் தான். உன்னோட பதிவ படிச்சுதான் இப்படி ஆகிபோச்சு. மரியாதையா வயித்து வலிக்கு ஆன டாக்டர் பில்ல செட்டில் பண்ணிடு :)))

prakash on November 27, 2008 at 2:19 PM said...

//நன்றி பெரியவரே..//

ஏய் இதெல்லாம் நோட் பண்ணாதீங்கப்பா...
எதோ என்ன விட 6 மாசம் சின்னவன்றதால இப்படியா கூப்டறது...

கார்க்கி on November 27, 2008 at 2:22 PM said...

// Anonymous said...
you are rocking man. I cant stop laughing while reading. gரெஅட்//

தொடர்ந்து கமெண்ட் போடறீங்க..அப்படியே பேரையும் போடுங்க நண்பரே.. நன்றி

/Sundar said...
செம கலக்கல்! ரொம்ப நல்லாயிருக்கு. சும்மா தொடர்ந்து எழுதுங்க கார்க்கீ!//

நன்றி சகா..

//ஜோசப் பால்ராஜ் - ”பீர்பால்”ன்னு உமக்கு எப்படி தெரியும்???//

அதான் சொன்னேனே சகா ஒற்றன் சொன்ன தகவல். யார் ஒற்ரனு நீங்க கேட்கவே இல்லையே!!!

VIKNESHWARAN on November 27, 2008 at 2:28 PM said...

சூப்பரு... அடுத்த பாகத்தை போடுங்கள்...

Bleachingpowder on November 27, 2008 at 2:32 PM said...

யாரங்கே...முழு பதிவையும் முழுசா போடாமல் நம்மை காக்க வைத்த கார்க்கியை இண்டெர்நெட் வசதி இல்லாத நாட்டிற்கு உடனே நாடு கடத்துங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் on November 27, 2008 at 2:38 PM said...

fantastic!

கார்க்கி on November 27, 2008 at 2:50 PM said...

//narsim said...
wow!!! lovly post!! kallakkal saga.. contini..

narsim(tamil font not avbl.. rain raiந்..)//

பரவாயில்ல தல.. எனக்கு ம் தெரியும்னு காட்ட‌ வேணாம்?

//ஆபீஸ்ல எல்லாருக்கும் அதே சந்தேகம் தான். உன்னோட பதிவ படிச்சுதான் இப்படி ஆகிபோச்சு. மரியாதையா வயித்து வலிக்கு ஆன டாக்டர் பில்ல செட்டில் பண்ணிடு :)))//

குடுங்க. நான் குழந்தையா இருந்த‌ப்ப அதான் குடிச்சேன்.

////நன்றி பெரியவரே..//

ஏய் இதெல்லாம் நோட் பண்ணாதீங்கப்பா...
எதோ என்ன விட 6 மாசம் சின்னவன்றதால இப்படியா கூப்டறது..//

ஹிஹிஹி அப்போ உங்களுக்கு 18 வயசுதானா?

கார்க்கி on November 27, 2008 at 2:53 PM said...

// VIKNESHWARAN said...
சூப்பரு... அடுத்த பாகத்தை போடுங்கள்...
//

வெகு விரைவில்.. நன்றி சகா..

//Bleachingpowder said...
யாரங்கே...முழு பதிவையும் முழுசா போடாமல் நம்மை காக்க வைத்த கார்க்கியை இண்டெர்நெட் வசதி இல்லாத நாட்டிற்கு உடனே நாடு கடத்துங்கள்//

ஏங்க மின்சாரமில்லாத நாட்டுக்கு கடத்துங்க.. ஹைதை போரடிக்குது... சென்னை போலாம்.

/ஜ்யோவ்ராம் சுந்தர் said...
fantasடிச்!//

பெரிய தலைங்க எல்லாம் வந்து சொல்றத பார்த்தா உண்மையிலே நல்லாயிருக்கு போல. நன்றி தல..

நானும் ஒருவன் on November 27, 2008 at 3:22 PM said...

கும்மி இல்லாமலே 100 போயிடும். நமக்கு வேலை இல்லை கும்மி friends

Balachander said...

nice karki...

Balachander said...

hi நானும் ஒருவன்...

அருண் on November 27, 2008 at 3:24 PM said...

// நானும் ஒருவன் said...

கும்மி இல்லாமலே 100 போயிடும். நமக்கு வேலை இல்லை கும்மி friends//

அப்படியா சொல்லரீங்க?

Balachander said...

anybody there...??
நானும் ஒருவன்.
அருண்..

Balachander said...

தனிய இருக்க பயமா இருக்கு யாராவது வாங்க சகா....

அருண் on November 27, 2008 at 3:30 PM said...

எஸ். ஐ யாம் ஹியர்.

Balachander said...

welcome

Balachander said...

ஒரு 100 அடிப்போமா !!!

முத்துலெட்சுமி-கயல்விழி on November 27, 2008 at 3:32 PM said...

சூப்பரா இருக்கு.. :)

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

அடிங்க... எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு.

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

86

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

87

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

88

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

89

Balachander said...

ok..

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

90

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

92

Balachander said...

100

அருண் on November 27, 2008 at 3:34 PM said...

94

அருண் on November 27, 2008 at 3:35 PM said...

95

Anonymous said...

100

அருண் on November 27, 2008 at 3:35 PM said...

96

Balachander said...

100

அருண் on November 27, 2008 at 3:35 PM said...

98

அருண் on November 27, 2008 at 3:35 PM said...

100

Anonymous said...

100

Balachander said...

congrats arun

அருண் on November 27, 2008 at 3:35 PM said...

ஓகே, நூறு அடிச்சாச்சு. வரட்டா.

Balachander said...

வாங்க...

prakash on November 27, 2008 at 3:37 PM said...

ஐ!!! எனக்கு ஆபீஸ் லீவ் உட்டுட்டாங்கோ...
பை பை பிரெண்ட்ஸ்...
கரண்ட் இருந்தா வீட்டுல இருந்து கும்மி அடிக்கறேன்...

நானும் ஒருவன் on November 27, 2008 at 3:54 PM said...

Balachander said...
hi நானும் ஒருவன்...


வணக்கம்.

"அப்படியா சொல்லரீங்க?"

அப்படித்தான் தெரியுது..

கார்க்கி on November 27, 2008 at 3:57 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
சூப்பரா இருக்கு.. :)//

நன்றி..

******************

வேறென்ன.. அதான் அதேதான்.. 100க்கு நன்றி அருண்,பால்சந்தர், பிரகாஷ்

கார்க்கி on November 27, 2008 at 4:51 PM said...

ஒக்கே நண்பர்களே.. சென்னைக்கு இன்னும் சில மணி நேரத்தில் ட்ரெய்ன் ஏறிவிடுவேன். நல்லபடியாக குண்டு ஏதும் வெடிக்காமல் இருந்தால் நாளை வந்து அடுத்த பதிவு போடலாம். இந்த வாரம் போட்ட எல்லாப் பதிவிலும் 100 போட்ட கும்மி சங்கத்து சிங்கங்களுக்கும் மற்ர நண்பர்களுக்கு பெரிய நன்றி..

Karthik on November 27, 2008 at 7:27 PM said...

ஒண்ணுமே புரியல. இதெல்லாம் என்ன???

:P

புதுகை.அப்துல்லா on November 28, 2008 at 2:57 AM said...

//சின்ன அம்மிணி said...
சூப்பரா இருக்கு, கண்டிப்பா தொடருங்க

//

அவ்வ்வ்வ்வ்... சின்ன அம்மினி எங்களையெல்லாம் நக்கல் அடிச்சா உங்களுக்கு சூப்பர்ரா இருக்கா :))

Anonymous said...

//புதுகை.அப்துல்லா said...
//சின்ன அம்மிணி said...
சூப்பரா இருக்கு, கண்டிப்பா தொடருங்க

//

அவ்வ்வ்வ்வ்... சின்ன அம்மினி எங்களையெல்லாம் நக்கல் அடிச்சா உங்களுக்கு சூப்பர்ரா இருக்கா :))
//

சும்மா தமாஷ் தானே அப்துல்லா, மனசு விட்டு நீங்களும் சிரிச்சீங்கதானே!!!

dharshini on November 28, 2008 at 2:33 PM said...

இந்த தர்பாரில் பீர்பால்(கார்கி அண்ணன்) இல்லாததை வன்மையாக கன்டிக்கிறேன்.


ha! ha! ha! (^_^)
:)

விலெகா on November 28, 2008 at 6:09 PM said...

ரொம்ப நல்லா இருக்குங்க:))))

தமிழ்ப்பறவை on November 29, 2008 at 1:52 AM said...

excellent

வெண்பூ on November 29, 2008 at 3:55 PM said...

கலக்கல் கார்க்கி... இதுவரைக்கும் பதிவர்களை கிண்டலடிச்சி வந்த பதிவுகள்ல ஒன் ஆஃப் தி பெஸ்ட் இது.. அடுத்தததையும் படிக்கிறேன்.. :)))

வடிவேலன் .ஆர் on December 1, 2008 at 1:01 PM said...

கலக்கிட்டிங்க என்னால சிரிப்பை அடக்க முடியல அலுவலகத்தில் எல்லோரும் என்னையே ஒரு மாதிரி பார்த்தார்கள்

rapp on December 2, 2008 at 5:09 AM said...

ஹா ஹா ஹா, சூப்பரோ சூப்பர்:):):) லேட்டா வந்ததிற்கு மன்னிச்சுக்கங்க:):):)

rapp on December 2, 2008 at 5:10 AM said...

ம.தி.மு.க மற்றும், பிரியாணி எல்லாம் அல்டிமேட்:):):)

rapp on December 2, 2008 at 5:12 AM said...

அப்துல்லா அண்ணா விளக்கம் சூப்பர்:):):) இளவரசன் மேல என்ன கொலைவெறி?:):):)அண்ணன் பரீட்சை எழுதுவார் சரி, ரிசல்ட் எப்டின்னு யாராவது பாத்தீங்களா?:):):)

rapp on December 2, 2008 at 5:13 AM said...

// மீ த ஃபர்ஸ்ட் போடும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பூரிவிக்கிறேன்//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் ஊர்ல இல்லைன்னா, எல்லாரும் என்னமோ சாதனை செஞ்சதாட்டம் பீத்திக்கிறாங்க:):):)

rapp on December 2, 2008 at 5:13 AM said...

என் கவுஜ சுமார்தான்:(:(:( அடுத்த தரம் சூப்பரா இருக்கணும். அப்டியே டயலாக்க ஜாஸ்தி கொடுங்க:):):)

கார்க்கி on December 2, 2008 at 1:32 PM said...

// Karthik said...
ஒண்ணுமே புரியல. இதெல்லாம் என்ன???//

ஹிஹிஹி.. லுல்லுலாயி..

//அவ்வ்வ்வ்வ்... சின்ன அம்மினி எங்களையெல்லாம் நக்கல் அடிச்சா உங்களுக்கு சூப்பர்ரா இருக்கா :))//

அதானே???????

//dharshini said...
இந்த தர்பாரில் பீர்பால்(கார்கி அண்ணன்) இல்லாததை வன்மையாக கன்டிக்கிறேன்.//

என் அண்ணன் லண்டன்ல இருக்காரு தர்ஷினி

கார்க்கி on December 2, 2008 at 1:33 PM said...

நன்றி விலேகா

நன்றி தமிழ்பறவை

//வெண்பூ said...
கலக்கல் கார்க்கி... இதுவரைக்கும் பதிவர்களை கிண்டலடிச்சி வந்த பதிவுகள்ல //

ரொம்ப நன்றி சகா..

// வடிவேலன் .ஆர் said...
கலக்கிட்டிங்க என்னால சிரிப்பை அடக்க முடியல அலுவலகத்தில் எல்லோரும் என்னையே ஒரு மாதிரி பார்த்தார்கள்//

வருகைக்கும் சிரிப்பிற்கும் நன்றி வடிவேலன்

கார்க்கி on December 2, 2008 at 1:36 PM said...

// rapp said...
ஹா ஹா ஹா, சூப்பரோ சூப்பர்:):):) லேட்டா வந்ததிற்கு மன்னிச்சுக்கங்க:):):)//

ஹிஹிஹி.. என்ன இதெல்லாம்??

//ம.தி.மு.க மற்றும், பிரியாணி எல்லாம் அல்டிமேட்:):):)//

//rapp said...
அப்துல்லா அண்ணா விளக்கம் சூப்பர்:):):) //


வெண்பூ,அப்துல்லா நோட் பண்ணுங்க..

// rapp said...
என் கவுஜ சுமார்தான்:(:(:( அடுத்த தரம் சூப்பரா இருக்கணும். அப்டியே டயலாக்க ஜாஸ்தி கொடுங்க:):)://

உங்கள மாதிரி எழுதுனும்னா சுமாராத்தானே எழுதனும்.. சூப்பரா எழுத நீங்க என்ன கார்க்கியா?

rapp on December 6, 2008 at 6:11 AM said...

me the 125th:):):)

rapp on December 6, 2008 at 6:11 AM said...

Y comment moderation?????????

rapp on December 6, 2008 at 6:14 AM said...

//உங்கள மாதிரி எழுதுனும்னா சுமாராத்தானே எழுதனும்.. சூப்பரா எழுத நீங்க என்ன கார்க்கியா?//

அதேதான் நானும் கேக்குறேன், என்னைய மாதிரி சுமார்ல சூப்பரா இல்லாம, உங்கள மாதிரி சூப்பர்ல சுமாரா ஏன் இருக்குங்கறேன்?:):):)

கார்க்கி on December 6, 2008 at 6:56 PM said...

ஏழு நாளுக்கு முந்தைய பதிவுக்கு மட்டும்தான் மாடரேஷன்.. பழைய பதிவுக்கு யாரு பின்னூட்டமிடறங்கணு தெரிய மாட்டது..

//அதேதான் நானும் கேக்குறேன், என்னைய மாதிரி சுமார்ல சூப்பரா இல்லாம, உங்கள மாதிரி சூப்பர்ல சுமாரா ஏன் இருக்குங்கறேன்?:):):)//

ஹிஹிஹி.. சூப்பர்..

Anonymous said...

யாரையும் நோகடிக்காத நல்ல நையாண்டி.
அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்.

கார்க்கி on December 7, 2008 at 9:52 AM said...

//வடகரை வேலன் said...
யாரையும் நோகடிக்காத நல்ல நையாண்டி.
அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்//

அடுத்த பாகம் வந்துடுச்சு அண்ணா.. பாருங்க‌

ஆதவா on February 28, 2009 at 7:06 PM said...

இம்சை அரசனைப் பார்த்தவாறு இருக்கிறது.. ஒருவாறு எல்லா பதிவர்களையும் இழுத்து போட்டிருக்கிறீர்கள்... (நான் தான் இல்லை!!!!ம்ஹூம்..)

எனிவே... வாழ்த்துகள்!!!!

 

all rights reserved to www.karkibava.com