Nov 26, 2008

எல்லாம் வெளம்பரம்தான்


    விளம்பரங்கள் என்றால் எனக்கு ஒரு வயதில் இருந்தே புடிக்கும். எல்லாக் குழந்தைகளை போல நானும் சின்ன வயதில் விளம்பரங்களை மட்டும் தான் பார்ப்பேனாம். இப்போதும் நல்ல விளம்பரங்களை அவ்வபோது யுட்யூபில் பார்த்து ரசிப்பதுன்டு.

1) ஏர்டெல்.

   சமீபத்தில் என்னை கவர்ந்த பல விளம்பரங்கள் இவர்களுடையதே. நல்ல விளம்பரத்திற்கு பிரபலமானவர்கள் தேவை இல்லை என்றாலும், அவர்களை வைத்தும் பல நல்ல விள‌ம்பரங்களை எடுத்துள்ள‌னர். இவர்களுடைய பலமே ஏ.ஆர்.ரகுமான் போட்டு தந்த தீம் மீயூஸீக்.(இது ஒரு தமிழ் பாடலின் சாயலில் போடப்பட்டது. விடை இறுதியில்) பல இசைக் கருவிகளில் அதைக் கேட்கும்போது விளம்பரத்திற்கு அது மேலும் அழகு சேர்க்கிறது. மாதவன், வித்யா பாலன் வரும் விளம்பரங்களும், DTH சேவைக்காக பல பிரபலங்கள் வரும் விளம்பரமும், அப்பா மகனின் கையில் கயிறு கட்டி அழைத்து செல்லும் புதுவரவு வரை பல என் மனதை கொள்ளை அடித்திருக்கின்றன. ஆனால் அல்டிமேட் என நினைப்பது கீழிருக்கும் விளம்பரம்தான். சென்னை சத்யம் திரையரங்கில் முதன் முதலாக இது திரையிட்டபோது என்னையறியாமல் நான் கைதட்ட, கடைசியில் அரங்கம் அதிர கைதட்டல்கள் எழுந்தன‌.

2) வோடோஃபோன்

    ஏர்டெல்லிற்கு அடுத்தபடி இவர்கள் கலக்குகிறார்கள்.இதன் விளமபரத்தில் வரும் நாய்குட்டிக்கு ஆர்குட்டில் ஒரு கம்யூனிட்டியே உண்டு. இர்ஃபான் கான் வரும் இந்தி விளம்பரங்கள் நச்சென்று இருக்கும். அதை பிரகாஷ் ராஜ் வைத்து தமிழில் செய்த போது அந்த Impact  வரவில்லை. காலர் ட்யுனுக்காக நான்கு பெண்கள் கிடார் வாசிக்கும் விளம்பரமும், நாய்குட்டி வரும் அனைத்துமே அருமை என்றாலும் எனக்கு பிடித்தது இதுதான்.

3) ஃபெவிகால்

     இவர்களுக்கு கான்செப்ட் வெகு எளிதில் கிடைக்க கூடியது என்றாலும் அதை தவற விடாமல் அசத்துகிறார்கள். ஆனால் எல்லா விளம்பரமும் அதே மையக்கரு என்பது மைனஸே. அவர்கள் Product அப்படி . முட்டை உடையாமல் இருக்கும் விள‌மபரம், (ஃபெவிக்விக்)மீன் பிடிக்க ஒரு குச்சியில் நான்கு சொட்டு விட்டு பிடிக்கும் விள‌மபரம் என பல சாய்ஸ் இருந்தாலும் என் சாய்ஸ் இதுதான்

4) சரவணா ஸ்டோர்ஸ்

   பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஜெடி ஜெர்ரி இயக்கத்தில் ஸ்ரேயா வரும் அனைத்து விளம்பரங்களும் எனக்கு பிடிக்கும். ஏதோ மோகம் பாடலின் ரீமிக்ஸும் அருமை. இந்த விள‌மபரத்தை கணிணியிலோ தொலைக்காட்சியிலோ பார்ப்பதை விட திரையரங்கில் பார்ப்பது அலாதியானது.

   இவை மட்டுமல்லாமல் Happy dent பற்களை விளக்காக பயன்படுத்தும் விள‌ம்பரம், Sant gobain, HDFC என நிறைய நல்ல விள‌மபரங்கள் உண்டு. மக்களின் ஆதரவைப் பொறுத்து அவைப் பற்றியோ அல்லது உலக அளவில் சிறந்த விளமபரங்கள் பற்றியோ வேறொரு பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்த விளம்பரங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

ஏர்டெல் பாடலுக்கான விடை:  தேவதை படத்தில் வரும் "தீபங்கள் பேசும்.. திரு கார்த்திகை மாசம்" என்ற பாடலில் வரும் "முத்து முத்து விளக்கு முற்றத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்துல" என்ற வரியை பாடிப் பாருங்கள்.

Last but not least.Ever green .Woodwards gripe water.இந்த வீடியோவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறக்க முடியுமா? யாரிடமாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.

170 கருத்துக்குத்து:

Balaji said...

என்ன ஆச்சு? குழந்தை அழுவுது..................அதான் woodwards குடுத்தேன். இதை தவிர என்னிடம் video இல்லை Sorry my friend

தாமிரா on November 26, 2008 at 9:50 AM said...

என்னடா அதிசயம்.. டீம்லாம் தூங்கிருச்சா..

தமிலிஷ்லயே நாலு ஓட்டு விழுந்த பின்னும் இன்னும் பின்னூட்ட மழையை காணவில்லை..

மீ த பர்ஸ்ட்டா..?

தாமிரா on November 26, 2008 at 9:54 AM said...

அதானே பாத்தேன்.. அப்புறம் வெளம்பரமெல்லாத்தையுமே ரசித்தேன். (யூடியூப் ஆபிஸ்ல தெரியாது ராசா..) இருப்பினும் கெஸ் பண்ணமுடிகிறது. ஸ்ரேயா விளம்பரத்தைத்தவிர அனைத்துமே நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

(ஸ்ரேயாவைப்பார்த்தாலே கடுப்பாகிவிடுகிறது, அவர் இடுப்பை ஆட்டும் லட்சணமும், உதட்டை சுழிக்கும் லட்சணமும் சகிக்கமுடியவில்லை.. ஸாரி பிரெண்ட்!)

Anonymous said...

பெவிகால் விளம்பரம் சூப்பர்

அருண் on November 26, 2008 at 10:14 AM said...

Me the 5th.

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:16 AM said...

ஸ்ரேயாவ பார்த்தா போதுமே உனக்கு. அப்புறம் என்ன வெளமபரம்?

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:18 AM said...

என்ன ஆச்சு?

கார்க்கி பதிவு போட்டான்..

திட்டி பின்னூட்டம் போடு. அவன் எழுதற மொக்கைக்கு எல்லோரும் அதான் செய்யறாங்க.

prakash on November 26, 2008 at 10:19 AM said...

ஆஜர்...
அப்பப்பா இன்னா மழை....

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:20 AM said...

// prakash said...
ஆஜர்...
அப்பப்பா இன்னா மழை....//

வட கிழக்கு பருவ மழை. வாங்க பிரகாஷு

அருண் on November 26, 2008 at 10:22 AM said...

கார் கீ, தர வரிசை மேலிருந்து கீழா இல்ல, கீழிருந்து மேலா?

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:24 AM said...

//அருண் said...
கார் கீ, தர வரிசை மேலிருந்து கீழா இல்ல, கீழிருந்து மேலா?"

சார் போர்ட் மீட்டிங்க்ல இருக்கார்ராம். எதுல கேட்கறீங்க? தமிழ்மண‌த்திலா? இப்போ புட்டிக்கதைகள் தான் மொத ராங்க்

prakash on November 26, 2008 at 10:24 AM said...

ஷாருக்கான் ஒரு விளம்பரத்துக்கு வருவார்
HP printerkunnu நினைக்கிறேன்..
அனிமேஷன், டெக்னிக்கல் ஆஸ்பக்ட் நல்ல இருக்கும்

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:25 AM said...

"prakash said...
ஷாருக்கான் ஒரு விளம்பரத்துக்கு வருவார்
HP printerkunnu நினைக்கிறேன்..
அனிமேஷன், டெக்னிக்கல் ஆஸ்பக்ட் நல்ல இருக்கும்"

எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்க. பிரகாஷ் பதிவ படிச்சிட்டாரு

அருண் on November 26, 2008 at 10:25 AM said...

// prakash said...
ஆஜர்...அப்பப்பா இன்னா மழை..../

பெங்களுருல ஓரே மோடமா இருக்கு.

prakash on November 26, 2008 at 10:26 AM said...

//வட கிழக்கு பருவ மழை. வாங்க பிரகாஷு//

வர்றங்க ஆபீசர் வர்றன் :))

Anonymous said...

தமிழ்மண மகுடம் புட்டிக்கதைகள். வாழ்த்துக்கள் கார்க்கி

அருண் on November 26, 2008 at 10:27 AM said...

//எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்க. பிரகாஷ் பதிவ படிச்சிட்டாரு//

அப்போ நீங்க?

prakash on November 26, 2008 at 10:27 AM said...

//பெங்களுருல ஓரே மோடமா இருக்கு.//

இன்டர்நெட் கனக்ஷன் நெறைய இருக்கா அருண் :))

அருண் on November 26, 2008 at 10:29 AM said...

கங்கிராட்ஸ் கார் கீ, தமிழ் மண மகுடத்திற்கு. மேலும் பலப் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

அருண் on November 26, 2008 at 10:30 AM said...

//இன்டர்நெட் கனக்ஷன் நெறைய இருக்கா அருண் :))//

ஹா ஹா ஹா, போதுமா?

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:30 AM said...

"அருண் said...
கங்கிராட்ஸ் கார் கீ, தமிழ் மண மகுடத்திற்கு. மேலும் பலப் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்."

என்ன அருண் சீரியஸ் ஆயிட்டிங்க.. புட்டிக்கதைகளுக்கு ஓட்டு போட்டிங்களா?

prakash on November 26, 2008 at 10:30 AM said...

//எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்க. பிரகாஷ் பதிவ படிச்சிட்டாரு//

அடங்கொக்கமக்கா. நம்மள கடேசி வரைக்கும் ஜோக்கராவே மெயின்டைன் பன்ராங்கலேப்பா...

prakash on November 26, 2008 at 10:33 AM said...

//ஹா ஹா ஹா, போதுமா?//
என்னாச்சு அருண் சீரியஸ் இல்ல காமடி?

அருண் on November 26, 2008 at 10:36 AM said...

//
என்ன அருண் சீரியஸ் ஆயிட்டிங்க.. புட்டிக்கதைகளுக்கு ஓட்டு போட்டிங்களா?//

நாம தான IPய Hide பண்ணி ஓட்ட ஏத்தி வுட்டது.

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:38 AM said...

"நாம தான IPய Hide பண்ணி ஓட்ட ஏத்தி வுட்டது."

சரி சரி வெளிய சொல்லாதிங்க. கார்க்கிக்கிட்ட பேசி ஏதாவ்து ரெடி பண்ணுவோம்.

அருண் on November 26, 2008 at 10:39 AM said...

// prakash said...
//ஹா ஹா ஹா, போதுமா?//
என்னாச்சு அருண் சீரியஸ் இல்ல காமடி?//

நல்ல ஜோக் சொன்னிங்க. அதான் இவ்வளவு சிரிப்பு. நம்ம எல்லாம் எப்பவுமே சீரியஸ் ஆவது கிடையாது.

அருண் on November 26, 2008 at 10:39 AM said...

//நானும் ஒருவன் said...
சரி சரி வெளிய சொல்லாதிங்க. கார்க்கிக்கிட்ட பேசி ஏதாவ்து ரெடி பண்ணுவோம்.//

ரொம்ப நாள் முன்னாடியே டீல் போட்டாச்சு.

prakash on November 26, 2008 at 10:39 AM said...

//கங்கிராட்ஸ் கார் கீ, தமிழ் மண மகுடத்திற்கு. மேலும் பலப் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.//

repeatuu......

Bleachingpowder on November 26, 2008 at 10:42 AM said...

தல I AM BACK !!
பத்து நாளா ஆபிஸ்ல பெண்ட கழட்டீடாங்க :((

நீங்க இவ்வளோ விளம்பர பிரியரா இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை :))

நானும் ஒருவன் on November 26, 2008 at 10:42 AM said...

சரி.கொஞ்சம் வேலை செஞ்சிட்டு வர்றேன்.

prakash on November 26, 2008 at 10:42 AM said...

//ரொம்ப நாள் முன்னாடியே டீல் போட்டாச்சு.//
என்ன டீல்?

prakash on November 26, 2008 at 10:44 AM said...

//சரி.கொஞ்சம் வேலை செஞ்சிட்டு வர்றேன்.//

No No Bad words...

அருண் on November 26, 2008 at 10:47 AM said...

// நானும் ஒருவன் said...
சரி.கொஞ்சம் வேலை செஞ்சிட்டு வர்றேன்.//

அதான் மழை கொட்டி தீக்குது.

prakash on November 26, 2008 at 10:49 AM said...

அருண் உங்களுக்கு வேல இருக்கா?
50 போடலாமா?

அருண் on November 26, 2008 at 10:52 AM said...

// prakash said...
அருண் உங்களுக்கு வேல இருக்கா?
50 போடலாமா?//

50 என்ன, நூறே போடலாம்.

prakash on November 26, 2008 at 10:58 AM said...

ஆனா பதிவுக்கு சம்பந்தமா தான் பின்னூட்டம் போடணும்

ட்ரை பண்ணுவோமா?

அருண் on November 26, 2008 at 11:03 AM said...

// prakash said...
ஆனா பதிவுக்கு சம்பந்தமா தான் பின்னூட்டம் போடணும் ட்ரை பண்ணுவோமா?//

ஓகே. கொஞ்சம் கஷ்டதான்.

prakash on November 26, 2008 at 11:06 AM said...

இப்போதிருக்கும் சூழ்நிலையில் எந்த ஊடகத்தில் வரும் விளம்பரங்கள் அதிக மக்களின் கவனத்தை ஈர்க்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

prakash on November 26, 2008 at 11:11 AM said...

தொலைகாட்சி, FM ரேடியோ, இணையம், சாலை விளம்பரங்கள்.
(முடியல...)

raman- Pages on November 26, 2008 at 11:41 AM said...

(ஸ்ரேயாவைப்பார்த்தாலே கடுப்பாகிவிடுகிறது, அவர் இடுப்பை ஆட்டும் லட்சணமும், உதட்டை சுழிக்கும் லட்சணமும் சகிக்கமுடியவில்லை.. ஸாரி பிரெண்ட்!) -for me too ..!

கார்க்கி on November 26, 2008 at 11:46 AM said...

//Balaji said...
என்ன ஆச்சு? குழந்தை அழுவுது..................//

இது யாரு துபாய் பாலாஜியா?

//தாமிரா said...
என்னடா அதிசயம்.. டீம்லாம் தூங்கிருச்சா..

தமிலிஷ்லயே நாலு ஓட்டு விழுந்த பின்னும் இன்னும் பின்னூட்ட மழையை காணவில்லை..//

அது இல்ல சகா.. மழையில்லையா? அதான் லேட்டா வர்றாங்க ஆஃபீஸூக்கு.

கார்க்கி on November 26, 2008 at 11:47 AM said...

//சின்ன அம்மிணி said...
பெவிகால் விளம்பரம் சூப்பர்//

வாங்க அம்மிணி.. உண்மைதான்.

காலை வணக்கம் அருண், மச்சி, பிரகாஷ்.

/Anonymous said...
தமிழ்மண மகுடம் புட்டிக்கதைகள். வாழ்த்துக்கள் கார்க்கி//

நன்றி அனானி.

கார்க்கி on November 26, 2008 at 11:49 AM said...

// Bleachingpowder said...
தல I AM BACK !!
பத்து நாளா ஆபிஸ்ல பெண்ட கழட்டீடாங்க :((//

வாங்க சகா.. ஆளையேக் காணோம்னு நினைச்சேன்.. பெண்ட கழட்டனாங்களா இல்ல பேன்ட்ட கழட்டுனாங்களா?

//நீங்க இவ்வளோ விளம்பர பிரியரா இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை :))//

ஹிஹிஹி

//aman- Pages said...
(ஸ்ரேயாவைப்பார்த்தாலே கடுப்பாகிவிடுகிறது, அவர் இடுப்பை ஆட்டும் லட்சணமும், உதட்டை சுழிக்கும் லட்சணமும் சகிக்கமுடியவில்லை.. ஸாரி பிரெண்ட்!) -for me too ..!//

வருகைக்கு நன்றி நண்பரே..அவருக்கு ஜெயம் ரவி புடிக்குமாம். உங்களுக்கு?

narsim on November 26, 2008 at 12:00 PM said...

சகா.. எல்லார் மனதிலும் இருப்பதை பதிவாக எழுதியது நல்ல மேட்டர்.. விளம்பரங்களுக்கே விளம்பரம்??..

அந்த விசில் ஊதும் தாத்தா விளம்பரம் & கை சொடுக்கும் சிறுமி இன்னும் பாக்கலையா தல.. லிஸ்ட்ல ஏத்துங்க.. கலக்கல் பதிவு சகா

புதுகை.அப்துல்லா on November 26, 2008 at 12:22 PM said...

என்னப்பா இந்த வாரம் பெருந்தலைகள் எல்லாம் விளம்பரப் பதிவாப் போட்டு தாக்குறீங்க???
:)

அருண் on November 26, 2008 at 12:27 PM said...

46

அருண் on November 26, 2008 at 12:27 PM said...

47

அருண் on November 26, 2008 at 12:27 PM said...

48

அருண் on November 26, 2008 at 12:27 PM said...

49

அருண் on November 26, 2008 at 12:28 PM said...

50

நான் ஆதவன் on November 26, 2008 at 12:32 PM said...

//விளம்பரங்களுக்கே விளம்பரம்??..//

அதானே..

எனக்கு அந்த SBI விளம்பரம் பிடிக்கும். திருடன் ஒருத்தன் "எல்லாரும் பர்ஸிக்கு பதிலா SBI கார்டு வச்சிருக்கறதுனால" வேற வழியில்லாம உழைச்சு வாழ்வானே...

நான் ஆதவன் on November 26, 2008 at 12:34 PM said...

உங்க பதிவுக்கு கொஞ்சம் லேட்டா வந்து பின்னூட்டம் போட்டா கடல்ல கரைஞ்ச பெருங்காயம் மாதிரி ஆகிப்போது....

கார்க்கி on November 26, 2008 at 12:42 PM said...

//narsim said...
சகா.. எல்லார் மனதிலும் இருப்பதை பதிவாக எழுதியது நல்ல மேட்டர்.. விளம்பரங்களுக்கே விளம்பரம்??..

அந்த விசில் ஊதும் தாத்தா விளம்பரம் & கை சொடுக்கும் சிறுமி இன்னும் பாக்கலையா தல.. லிஸ்ட்ல ஏத்துங்க.. கலக்கல் பதிவு சகா
//

நன்றி தல.. இன்னும் நிரைய உன்டு. இன்னோரு பதிவா போடலாம். :))

//புதுகை.அப்துல்லா said...
என்னப்பா இந்த வாரம் பெருந்தலைகள் எல்லாம் விளம்பரப் பதிவாப் போட்டு தாக்குறீங்க???
:)

லக்கியை பெருந்தலையாகிய என்னோடு ஒப்பிட்டதை கண்டிக்கிறேன்

கார்க்கி on November 26, 2008 at 12:44 PM said...

/அருண் said...
50
//

நன்றி அருண்..

// நான் ஆதவன் said...
உங்க பதிவுக்கு கொஞ்சம் லேட்டா வந்து பின்னூட்டம் போட்டா கடல்ல கரைஞ்ச பெருங்காயம் மாதிரி ஆகிப்போது....//

அப்படியெல்லாம் இல்லை சகா.. எங்க இருந்தாலும் தேடி பதில் போடுவேன்.

லெனின் பொன்னுசாமி on November 26, 2008 at 12:47 PM said...

நல்ல தகவல் கார்க்கி.. ஜூப்பர். எனக்கு பிடித்தது ஓடாபோனு வெளம்பரம்தான்.

வால்பையன் on November 26, 2008 at 1:15 PM said...

எல்லாமே அருமையான விளம்பரங்கள்,
ஏர்டெல்லின் தீம் மியூசிக் சான்ஸே இல்லை, நீங்க உளவுதுறையில இருக்க வேண்டியவர்.

மிஸஸ்.டவுட் on November 26, 2008 at 1:22 PM said...

1.ஒரு ராஜஸ்தானி குட்டிப் பொண்ணுக்காக ரிச்சர்ட் கெயர் நிறைய புறாக்களை கூண்டோட விலைக்கு வாங்கி அந்தப் குட்டிப் பொண்ணு அதைப் பறக்க விடுவாளே ஒரு "விசா கார்டு" விளம்பரம் ...அந்தப் புறாக்களோட நாமளும் சேர்ந்து பறக்கற மாதிரியே ஒரு பீல் வரும் (எனக்கு) ...எல்லாருக்குமே அந்த விளம்பரம் பிடிக்கும்னு தான் தோணுது.
2.நீங்கள் பதிவேற்றிய எல்லா விளம்பரங்களுமே ஆகா ராகம் தான் .
"உட்வார்ட்ஸ் வாட்டரை" மறக்க முடியுமா என்ன? நீ சின்னவளா இருகரச்சே நான் அதான் கொடுத்தேன்ன்னு அஞ்சு தலைமுறை வந்து நிக்குமே!!!
என்னவோ அதை தடை பண்ணிட்டாங்களா என்ன?
3.முன்னாடி சுசித்ரா பிள்ளை மழைல நனைஞ்ச குட்டி நாயைக் காப்பாத்தி எடுத்துட்டுப் போய் தன் கணவரோட"சன் ரைஸ்" காபி குடிகறதா ஒரு விளம்பரம் வரும் கொஞ்சம் கவிதை மாதிரி இருக்கும் .
இப்படி நிறைய சொல்லிட்டே போலாம் ...
சில நேரம் ரெண்டரை மணி நேரப் படத்தை விடவும் ரெண்டு நிமிஷ விளம்பரம் ரொம்ப அருமையா இருக்கற மாதிரி படும் ...நிஜம் அதான் ...!

ஸ்ரீமதி on November 26, 2008 at 2:31 PM said...

எனக்கு ஹமாம் விளம்பரம் பிடிக்கும்... :)) "அம்மா பாப்பாக்கு உள்ள பயம்மா இக்காதா??" "ம்ஹும் நான் இருக்கேன்ல பாதுகாப்பு தர.." "அப்ப எனக்கு??" "உனக்கு தான் முதல்ல... இப்ப கைக்கு பாதுக்காப்பு.. இப்ப.. இப்ப.. இப்ப.." இப்படி வரும்.. ரொம்ப கியூட்டான குட்டி பாப்பா வரும்... அப்பறம் ஹோர்லிக்ஸ், "மன்னு.." "நான் நொம்ப பிச்சி" சொல்ற குட்டி பையன் சோ ஸ்வீட்... :))))))

ஸ்ரீமதி on November 26, 2008 at 2:31 PM said...

//தாமிரா said...
அதானே பாத்தேன்.. அப்புறம் வெளம்பரமெல்லாத்தையுமே ரசித்தேன். (யூடியூப் ஆபிஸ்ல தெரியாது ராசா..) இருப்பினும் கெஸ் பண்ணமுடிகிறது. ஸ்ரேயா விளம்பரத்தைத்தவிர அனைத்துமே நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும். //

Repeattuuuuuuu ;))))

ஸ்ரீமதி on November 26, 2008 at 2:31 PM said...

60 :)

அருண் on November 26, 2008 at 2:34 PM said...

மதிய வணக்கம் ஸ்ரீமதி அக்கா.

அருண் on November 26, 2008 at 2:35 PM said...

சாப்பாடு ஆச்சா?

ஸ்ரீமதி on November 26, 2008 at 2:41 PM said...

மதிய வணக்கம் அருண் :)))))சாப்டேன்... நீங்க??

கும்க்கி on November 26, 2008 at 2:45 PM said...

கம்பூட்டாருக்கு ஒம்பு சரில்ல...டாக்குட்ரு வந்துகுறாரு...
அப்பாலிக்க வர்ரனே.
(நீ வல்லைனு யார் அழுதா..? உஸ் அமைதி)

அருண் on November 26, 2008 at 2:46 PM said...

ஆச்சு அக்கா.

அருண் on November 26, 2008 at 2:47 PM said...

கார் கீ, ராப் அக்கா இதப்பாருங்கோ

http://vidhyascribbles.blogspot.com/2008/11/blog-post_26.html

ஸ்ரீமதி on November 26, 2008 at 2:56 PM said...

//அருண் said...
ஆச்சு அக்கா.//

:))

வால்பையன் on November 26, 2008 at 2:57 PM said...

என்ன கொடும சரவணா இது!
இன்னொருத்தர் ப்ளாக்குல வந்து சாப்பிட்டாச்சான்னு ஒரு கமெண்டா?

கும்க்கி on November 26, 2008 at 3:01 PM said...

அரெ வால்...
புச்சா வந்தா இப்டிதான் இக்கும்.
கொஞ்சம் அஜீஸ் பன்ணிக்குங்கோ..

அருண் on November 26, 2008 at 3:06 PM said...

// வால்பையன் said...

என்ன கொடும சரவணா இது!
இன்னொருத்தர் ப்ளாக்குல வந்து சாப்பிட்டாச்சான்னு ஒரு கமெண்டா?//

சரி, சரக்கடிச்சாச்சானு கேக்கலாமா?

வால்பையன் on November 26, 2008 at 3:11 PM said...

//சரி, சரக்கடிச்சாச்சானு கேக்கலாமா? //

இது மேட்டரு
கேக்ககும் போதே ஒரு கிக்கு ஏறுதுல்ல

முரளிகண்ணன் on November 26, 2008 at 3:11 PM said...

nice one

SK on November 26, 2008 at 3:14 PM said...

இன்னும் சில விளம்பரங்கள் இருக்கு கார்க்கி ரொம்ப அழகா யோசிச்சு எடுத்து இருப்பாங்க.

ஒரு கண்ணாடி விளம்பரம் இருக்குமே :) எனக்கு பேரு மறந்து போச்சு நெனைப்பு வந்த ஒடனே இங்கே சொல்லுறேன் :)

rapp on November 26, 2008 at 3:15 PM said...

super:):):)

rapp on November 26, 2008 at 3:15 PM said...

me the 75th:):):)

அருண் on November 26, 2008 at 3:17 PM said...

//
ஒரு கண்ணாடி விளம்பரம் இருக்குமே :) எனக்கு பேரு மறந்து போச்சு நெனைப்பு வந்த ஒடனே இங்கே சொல்லுறேன் :)//

Saint gobain ?

அருண் on November 26, 2008 at 3:18 PM said...

//இது மேட்டரு
கேக்ககும் போதே ஒரு கிக்கு ஏறுதுல்ல//

பாத்துங்க, சூதானமா இருக்கோனும், இல்லாட்டி, flat ஆயிரபோரீங்க.

வால்பையன் on November 26, 2008 at 3:19 PM said...

//பாத்துங்க, சூதானமா இருக்கோனும், இல்லாட்டி, flat ஆயிரபோரீங்க. //

அதுக்கு தான் தூக்கிட்டு போக நாலு பேத்த கூடவே வச்சிருக்கேன்

SK on November 26, 2008 at 3:19 PM said...

// மன்னு.." "நான் நொம்ப பிச்சி" சொல்ற குட்டி பையன் சோ ஸ்வீட்... :)))))) //

அப்போ காரம் கிடையாதா :) :)

வால்பையன் on November 26, 2008 at 3:19 PM said...

கடைசியிலும் அந்த நாலு பேரு தான்

SK on November 26, 2008 at 3:20 PM said...

எஸ் அதே தான் அருண்

SK on November 26, 2008 at 3:21 PM said...

அருண் ஜஸ்ட் 20 மோர் யா. :)

SK on November 26, 2008 at 3:22 PM said...

// நாம தான IPய Hide பண்ணி ஓட்ட ஏத்தி வுட்டது. //

அடங்கொய்யால

அருண் on November 26, 2008 at 3:22 PM said...

// SK said...
அருண் ஜஸ்ட் 20 மோர் யா. :)//

18 மோர்.

SK on November 26, 2008 at 3:23 PM said...

நல்ல இருங்கப்பு :)

நல்ல இருங்க

வால்பையன் on November 26, 2008 at 3:23 PM said...

//அருண் ஜஸ்ட் 20 மோர் யா. :) //

20 பீர் என்றால் நான் ரெடி

SK on November 26, 2008 at 3:24 PM said...

என்ன வால் ஜஸ்ட் பீர் தானா :) :)

SK on November 26, 2008 at 3:24 PM said...

உங்க லெவெலுக்கு டக்கிலா (ஷகிலா இல்லை) அப்படின்னு எறங்க வேணாமா

அருண் on November 26, 2008 at 3:25 PM said...

//20 பீர் என்றால் நான் ரெடி//

வெரும் 20 பீர் தானா உங்க கெபாசிடி?

rapp on November 26, 2008 at 3:25 PM said...

எனக்கு ரொம்பப் பிடிச்ச டாபிக். கொஞ்ச நாள் முன்ன நெறயப் பதிவர்கள் விளம்பரங்கள்(டிவியில் வருவது) பத்தி எழுதியிருந்தாங்க:):):) அதுல மாதவிப் பந்தல் கே.ஆர்.எஸ் சாரோடது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சது. நீங்க சொல்லிருக்கறதுல பெவிகால் மற்றும் வோடோபோன் விளம்பரங்கள் ரொம்பப் பிடிக்கும். பெவிகால் விளம்பரம் ஒன்னு, ரொம்பப் பழசு, Rajkumar Hirani நடிச்சது, நடுவுல நிறுத்தி வெச்சிருந்தது, திரும்ப முன்னாபாய் ரிலீஸ் ஆனப்ப போட ஆரம்பிச்சாங்க. அதேப் போல வுட்வார்ட்ஸ் விளம்பரமும் ரொம்பப் பிடிக்கும். நான் சின்ன பொண்ணா இருக்கும்போது, கிட்டத்தட்ட யாருமே, 'என்னாச்சுன்னு' கேக்கமுடியாது. அவ்ளோ எபெக்ட் இந்த விளம்பரத்துக்கு.

SK on November 26, 2008 at 3:25 PM said...

என்ன அருண் ஸ்பீட் கம்மியா இருக்கறா போல இருக்கு :):)

எமி சங்கதிலு

அருண் on November 26, 2008 at 3:26 PM said...

நா எதோ 3 ஃபுல் அடிச்சாலும் ஆடாம இருப்பீங்கன்னு நெனச்சேன்.

அருண் on November 26, 2008 at 3:27 PM said...

//SK said...
என்ன அருண் ஸ்பீட் கம்மியா இருக்கறா போல இருக்கு :):)
எமி சங்கதிலு//

அப்ப அப்ப வேலயும் பாக்கா வேணாமா ?

அருண் on November 26, 2008 at 3:27 PM said...

94

rapp on November 26, 2008 at 3:27 PM said...

அதே மாதிரி, எனக்கு ரொம்பப் பிடிச்ச இன்னொன்னு பஜாஜோட இந்த விளம்பரம். அவ்ளோ பிடிக்கும்.

http://fr.youtube.com/watch?v=FWya9gmQVi0&feature=related

SK on November 26, 2008 at 3:28 PM said...

வெறும் மூணு புல்'ஆ

வாட் எ பிட்டி ? வாட் எ பிட்டி ?

அருண் on November 26, 2008 at 3:28 PM said...

100

அருண் on November 26, 2008 at 3:28 PM said...

100

அருண் on November 26, 2008 at 3:28 PM said...

100?

அருண் on November 26, 2008 at 3:28 PM said...

100

வால்பையன் on November 26, 2008 at 3:28 PM said...

//வெரும் 20 பீர் தானா உங்க கெபாசிடி? //

இதுக்கு அந்த நாலு பேரு பத்தாது,
ஊருக்கெல்லாம் சொல்லி அனுப்பனும்.

SK on November 26, 2008 at 3:28 PM said...

100

வால்பையன் on November 26, 2008 at 3:29 PM said...

அட நான் தான் 100-ஆ

rapp on November 26, 2008 at 3:29 PM said...

அடுத்தது, இந்த dairy milk விளம்பரம். தமிழ்ல'என்ன விசேஷமோ வாழ்விலே'ன்னு வரும்:):):)http://fr.youtube.com/watch?v=cOjoiX9A7yg&feature=related

வால்பையன் on November 26, 2008 at 3:29 PM said...

இதெக்கெல்லாம் வேணும் மக்கா தனியா
மூளை

SK on November 26, 2008 at 3:30 PM said...

வால் அண்ணே,

அருண் தான் நூறு :)

கார்க்கி பதிவிலே வந்து பதிவை பற்றி மட்டுமே பேசும் ராப் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் :) :) :)

அருண் on November 26, 2008 at 3:31 PM said...

ஹலோ, நா தான் 100. நல்லா பாருங்கோ.

SK on November 26, 2008 at 3:31 PM said...

ராப் அக்கா,

நீங்க வித்யா போட்டு இருக்கற பதிவுல வந்து பதில் சொல்லுங்க மொதல்ல :) :)

அகிலாண்ட நாயகன் ரசிகர் கோடியில் ஒருவன் :) :)

அருண் on November 26, 2008 at 3:32 PM said...

//கார்க்கி பதிவிலே வந்து பதிவை பற்றி மட்டுமே பேசும் ராப் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் :) :) :)//

அதை நான் வழிமொழிகிறேன்.

rapp on November 26, 2008 at 3:32 PM said...

அடுத்தது இந்த nescafe விளம்பரம், ரொம்பப் பிடிக்கும்:):):)http://fr.youtube.com/watch?v=_qwBBmjgCYo&feature=related

SK on November 26, 2008 at 3:34 PM said...

என்ன அருண், பிரகாஷ், ஸ்ரீமதி, நானும் ஒருவன் எல்லாம் மிஸ்ஸிங் போல :)

அருண் on November 26, 2008 at 3:34 PM said...

// rapp said...
அடுத்தது இந்த nescafe விளம்பரம், ரொம்பப் பிடிக்கும்:):):)http://fr.youtube.com/watch?v=_qwBBmjgCYo&feature=related//

அப்பா, இது ரொம்ப ஓவர்.

அருண் on November 26, 2008 at 3:35 PM said...

// SK said...
என்ன அருண், பிரகாஷ், ஸ்ரீமதி, நானும் ஒருவன் எல்லாம் மிஸ்ஸிங் போல :)//

ஹலோ, நா இங்கன தான் இருக்கேன்.

SK on November 26, 2008 at 3:37 PM said...

// ஹலோ, நா இங்கன தான் இருக்கேன்.//

அட

உங்கள கேட்டேங்க, எங்க மத்த எல்லாரும் காணும்னு ??

வால்பையன் on November 26, 2008 at 3:37 PM said...

என் சார்பா அருண் இருக்குறதால
என்னை தேட வேண்டிய அவசியமில்லை

என்னா நானும் அருணும் வேற வேற இல்லை

SK on November 26, 2008 at 3:39 PM said...

// என் சார்பா அருண் இருக்குறதால
என்னை தேட வேண்டிய அவசியமில்லை

என்னா நானும் அருணும் வேற வேற இல்லை //

இது எப்போலேந்து ??

அருண் on November 26, 2008 at 3:39 PM said...

//வால்பையன் said...
என் சார்பா அருண் இருக்குறதால
என்னை தேட வேண்டிய அவசியமில்லை
என்னா நானும் அருணும் வேற வேற இல்லை//

ஆமாங்க வாலு, நானும் ஈரோடு மாவட்டம் தான்.

ஸ்ரீமதி on November 26, 2008 at 3:39 PM said...

:))

rapp on November 26, 2008 at 3:41 PM said...

நான் ரொம்ப ரொம்ப சின்னதா இருக்கும்போது, இது ஒண்ணுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே சாப்ட் டிரிங்க்:):):)http://fr.youtube.com/watch?v=8J_qvZazFbw&NR=1


பெப்சில்லாம் கபிலோட இந்த http://fr.youtube.com/watch?v=5gYmP2e3QE0 விளம்பரமும்(அப்போல்லாம் ரெமோ யாருன்னே தெரியாது:):):)),

ஐஸ்வர்யா ராய் யாருன்னே தெரியாதப்போ ஆமிரோட வந்த இந்த http://fr.youtube.com/watch?v=DmfL4De6hjM
விளம்பரமும் வந்தப்புறம்தான் தெரிஞ்சது:):):) ஆனா இப்போ ரெண்டு பேருமே கோக் ஆளுங்க ஆகிட்டாங்க:):):)

வால்பையன் on November 26, 2008 at 3:43 PM said...

//ஆமாங்க வாலு, நானும் ஈரோடு மாவட்டம் தான். //

சொல்லவேயில்லை

ஒரே ஊர்ல இருந்துகிட்டு இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து சரக்கடிக்காம இருக்குறதா?

வால்பையன் on November 26, 2008 at 3:44 PM said...

ராப்போட பொறுப்புணர்சிக்கு அளவே இல்லாம போச்சு

SK on November 26, 2008 at 3:44 PM said...

மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன ஸ்ரீமதி :)

SK on November 26, 2008 at 3:45 PM said...

தலைவி விடறதா இல்லை :)

ஏதோ நல்ல இருந்த சரி :) :)

rapp on November 26, 2008 at 3:45 PM said...

இந்த டைடன் அனுபவத்தை மறக்கமுடியுமா, மூணு மணி நேர படத்த எடுத்தும் அப்பா பாசத்தை ஒழுங்கா சொல்ல மாட்டேங்குறாங்க:):):) இது எவ்ளோ க்யூட்:):):) எனக்கு அப்போ சுத்தமா மேற்கத்திய இசை பரிச்சயம் இல்லை, அதால இது ரொம்பப் புதுமையான இசையா தெரிஞ்சுது:):):) http://fr.youtube.com/watch?v=Nvx8pB9Ivoo&NR=1

rapp on November 26, 2008 at 3:45 PM said...

me the 125

அருண் on November 26, 2008 at 3:45 PM said...

//சொல்லவேயில்லை

ஒரே ஊர்ல இருந்துகிட்டு இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து சரக்கடிக்காம இருக்குறதா?//

ஒரு பதிவர்/கும்மியர் சந்திப்பு ஏற்பாடு பண்ணுங்க. அப்போ அடிப்போம்.

SK on November 26, 2008 at 3:45 PM said...

தலைவி நேயர் விருப்பம் மாதிரி உங்க கமெண்டும் செத்து இதை எல்லாம் ஒரு பதிவா போட்டுடுங்க :) :) புன்னியிமா போகும் :)

SK on November 26, 2008 at 3:46 PM said...

ஹலோ அருண் நீங்க அவரு பதிவு படிக்கலைன்னு நினைக்குறேன் :) :)

அருண் on November 26, 2008 at 3:47 PM said...

நடத்துங்க ராப் அக்கா, நடத்துங்க. கார் கீ, இன்னிமே இதப் பத்தி பதிவே போடக்கூடாது, இல்லயா?

அருண் on November 26, 2008 at 3:47 PM said...

// SK said...

ஹலோ அருண் நீங்க அவரு பதிவு படிக்கலைன்னு நினைக்குறேன் :) :)//

யார் பதிவுங்க SK?

SK on November 26, 2008 at 3:50 PM said...

வால்

rapp on November 26, 2008 at 3:50 PM said...

இந்த sunrise விளம்பரங்களை நான் பயங்கரமா ரசிப்பேன். நாலாங்கிளாஸ்,அஞ்சாங்கிலாசு படிக்கும்போதே நமக்குக் கல்யாணமானா இப்டி இருக்கணும்னு தோணும்:):):)மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் பெர்பெக்ட் கப்புள் :):):) இப்போ அதே மாதிரி இருப்பதில் பெருமை:):):)

http://fr.youtube.com/watch?v=E6uy5PC5h-E

rapp on November 26, 2008 at 3:54 PM said...

இப்போ மீ த எத்தனாவது:):):)

rapp on November 26, 2008 at 3:55 PM said...

எல்லாரும் கெளம்பிட்டீங்களா?:):):) ஓகே பை பை:):):)

rapp on November 26, 2008 at 3:55 PM said...

me the 135th

SK on November 26, 2008 at 3:55 PM said...

இது எல்லாம் டூ மச் அம்மணி

அருண் on November 26, 2008 at 3:56 PM said...

அக்கா, உங்க கருத்துக்குத்து தாங்கம எல்லாரும் ஓடிட்டாங்க.

dharshini on November 26, 2008 at 4:09 PM said...

என்ன அண்ணா உங்களவிட rapp madam நிறைய விளம்பரங்கள போட்டு தாக்குறாங்க...
நான் T.V. பாக்கறது இல்ல.. அதனால நிறைய விளம்பரங்கள பத்தி தெரியல..
ஒரு சில விளம்பரங்கள் பார்திருக்கிரேன்...
அதுல‌ எனக்கு பிடித்தது
Hutch, Hamaam, narasus(பேஷ் பேஷ் ரொம்ப நன்னாஇருக்கு..)
sunrise(ajit with simran),
kaarki bro_சண்டைக்கு வந்துறாதீங்க!

அருண் on November 26, 2008 at 4:10 PM said...

SK, இருக்கீங்களா?

கார்க்கி on November 26, 2008 at 4:25 PM said...

//லெனின் பொன்னுசாமி said...
நல்ல தகவல் கார்க்கி.. ஜூப்பர். எனக்கு பிடித்தது ஓடாபோனு //

நன்றி லெனின்..

//வால்பையன் said...
எல்லாமே அருமையான விளம்பரங்கள்,
ஏர்டெல்லின் தீம் மியூசிக் சான்ஸே இல்லை, நீங்க உளவுதுறையில இருக்க வேண்டியவர்.//

என மேல என்ன கோவம் சகா?????????????

/மிஸஸ்.டவுட் said...
1.ஒரு ராஜஸ்தானி குட்டிப் பொண்ணுக்காக ரிச்சர்ட் கெயர் நிறைய புறாக்களை கூண்டோட விலைக்கு வாங்கி அந்தப் குட்டிப் பொண்ணு அதைப் பறக்க விடுவாளே ஒரு "விசா கார்டு//

நன்றிங்க.. இன்னும் நிறைய இருக்கு...

கார்க்கி on November 26, 2008 at 4:26 PM said...

//ஸ்ரீமதி said...
எனக்கு ஹமாம் விளம்பரம் பிடிக்கும்... :)) "அம்மா பாப்பாக்கு உள்ள பயம்மா இக்காதா??" "ம்ஹும் நான்//

ஆமாம்.. அதுவும் அருமையான் ஒன்றுதான்..

//கும்க்கி said...
கம்பூட்டாருக்கு ஒம்பு சரில்ல...டாக்குட்ரு வந்துகுறாரு...
அப்பாலிக்க வர்ரனே.//

ரைட்..

//கும்க்கி said...
அரெ வால்...
புச்சா வந்தா இப்டிதான் இக்கும்.
கொஞ்சம் அஜீஸ் பன்ணிக்குங்கோ..//

ரீப்பிட்ட்டே

கார்க்கி on November 26, 2008 at 4:28 PM said...

/ முரளிகண்ணன் said...
nice ஒனெ//

நன்றி முரளி..

//SK said...
இன்னும் சில விளம்பரங்கள் இருக்கு கார்க்கி ரொம்ப அழகா யோசிச்சு எடுத்து இருப்பாங்க.

ஒரு கண்ணாடி விளம்பரம் இருக்குமே :) எனக்கு பேரு மறந்து போச்சு நெனைப்பு வந்த ஒடனே இங்கே சொல்லுறேன் ://

அதையும் சொல்லியிருக்கேனே.. படம்தான் போடல சகா..

/ rapp said...
super:):):)//

நன்றி ராப். பல அருமையான சுட்டி கொடுத்து இருக்கிங்க. எந்த அளவுக்கு பதிவு உங்களுக்கு (அத யாருக்கு புடிச்ச்து. விள‌ம்பரம் நல்லாயிருந்தது)புடிக்குதுனு தெரியுது..

கார்க்கி on November 26, 2008 at 4:32 PM said...

//rapp said...
இந்த sunrise விளம்பரங்களை நான் பயங்கரமா ரசிப்பேன். நாலாங்கிளாஸ்,அஞ்சாங்கிலாசு படிக்கும்போதே நமக்குக் கல்யாணமானா இப்டி இருக்கணும்னு தோணும்:):):)மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் பெர்பெக்ட் கப்புள் :):):) இப்போ அதே மாதிரி இருப்பதில் பெருமை:):):)//

வாழ்த்துகள் அக்கா... (நீங்க சொல்றதுக்கெல்லாம் சரி சரின்னு தலையாட்டினா பர்பெக்ட் கப்புளா?)

//Hutch, Hamaam, narasus(பேஷ் பேஷ் ரொம்ப நன்னாஇருக்கு..)
sunrise(ajit with simran),
kaarki bro_சண்டைக்கு வந்துறாதீங்க!//

சன்டைக்கு வரல.. ஆனா வேற யாராவ்து ஒருத்தர அது நல்லாயிருக்குனு சொல்ல சொல்லு.. அஜித் அழகுதான். ஆனா அது மொக்கை AD( இப்போ நீ சன்டைக்கு வராதடா..ச்சும்மா)

கார்க்கி on November 26, 2008 at 4:35 PM said...

அப்புறம் நம்ம கும்மி சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய நன்றி.. அது மட்டுமில்லாமல் தமிழ்மண மகுடத்தை புட்டிக்கதைகள் சுமக்குது. அதனால இன்றைய வருகை மட்டுமே 1200 ஐ தாண்டி போயிட்டிருக்குது.. இந்த மாசம் என் டார்கெட் 15000 ஹிட்ஸ். இன்னும் அஞு நாள் இருக்கு அதுக்குள்ள 16000 ஆயாச்சு.. வெரி ஹேப்பி.. ஸ்டார்ட் மீஸிக்..

அருண் on November 26, 2008 at 4:38 PM said...

//கார்க்கி said...

அப்புறம் நம்ம கும்மி சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய நன்றி.. அது மட்டுமில்லாமல் தமிழ்மண மகுடத்தை புட்டிக்கதைகள் சுமக்குது. அதனால இன்றைய வருகை மட்டுமே 1200 ஐ தாண்டி போயிட்டிருக்குது.. இந்த மாசம் என் டார்கெட் 15000 ஹிட்ஸ். இன்னும் அஞு நாள் இருக்கு அதுக்குள்ள 16000 ஆயாச்சு.. வெரி ஹேப்பி.. ஸ்டார்ட் மீஸிக்..//

கலக்குங்க கார் கீ. உங்க எழுத்து நடை, கவுஜ, ஜோக்ஸ் எல்லாம் தான் இதுக்கு காரணம்.

அருண் on November 26, 2008 at 4:38 PM said...

146

அருண் on November 26, 2008 at 4:38 PM said...

147

அருண் on November 26, 2008 at 4:38 PM said...

148

அருண் on November 26, 2008 at 4:38 PM said...

149

அருண் on November 26, 2008 at 4:38 PM said...

150

அருண் on November 26, 2008 at 4:38 PM said...

ஓகே, 150ம் அடிச்சாச்சு.

dharshini on November 26, 2008 at 4:43 PM said...

150 அடிக்கலாம்னா விடமாட்டன்றாங்கப்பா! (^_^)

தாமிரா on November 26, 2008 at 5:12 PM said...

rapp said...
அடுத்தது, இந்த dairy milk விளம்பரம். தமிழ்ல'என்ன விசேஷமோ வாழ்விலே'ன்னு வரும்:):):)//

ஒரு பெரிய‌ ர‌க‌சிய‌த்தை க‌ண்டுபுடிச்சிட்டேன்.. ராப் மேடத்துக்கு கொற‌ஞ்ச‌து 40 வ‌ய‌சு இருக்கும்னு? என்ன‌ சொல்றீங்க‌..

தாமிரா on November 26, 2008 at 5:14 PM said...

இந்த மாசம் என் டார்கெட் 15000 ஹிட்ஸ். இன்னும் அஞ்சு நாள் இருக்கு அதுக்குள்ள 16000 ஆயாச்சு..// அட‌ப்பாவிக‌ளா..? ஒரு மாச‌த்துல‌ 3000, 4000 ஹிட்ஸ் வாங்குற‌துக்குள்ள‌ மூச்சு வாங்கிடுது ந‌ம‌க்கு... வாழ்த்துக‌ள்ப்பா..

வால்பையன் on November 26, 2008 at 5:16 PM said...

//rapp said...
அடுத்தது, இந்த dairy milk விளம்பரம். தமிழ்ல'என்ன விசேஷமோ வாழ்விலே'ன்னு வரும்:):):)//

ஒரு பெரிய‌ ர‌க‌சிய‌த்தை க‌ண்டுபுடிச்சிட்டேன்.. ராப் மேடத்துக்கு கொற‌ஞ்ச‌து 40 வ‌ய‌சு இருக்கும்னு? என்ன‌ சொல்றீங்க‌.. //

எனக்கு கூடத் தான் அந்த விளம்பரம் பிடிக்கும், அதனால எனக்கு 40-ஆ என்ன

18 தாம்பா ஆகுது

Anonymous said...

No pictures.........
not able to view

ஸ்ரீமதி on November 26, 2008 at 5:48 PM said...

:))

வித்யா on November 26, 2008 at 6:37 PM said...

வோடோபோன் விளம்பரத்தில் அந்த பையனின் expressions தான் அல்டிமேட். parrys sugar விளம்பரம் பார்த்திருக்கிங்களா? சூப்பரா இருக்கும்.

ரோஜா காதலன் on November 26, 2008 at 6:55 PM said...

//உலக அளவில் சிறந்த விளமபரங்கள் பற்றியோ வேறொரு பதிவில் பார்க்கலாம். //

சகா உங்களுக்குமா இந்த ”ஒலக” விளம்பர மோகம்?

rapp on November 26, 2008 at 7:22 PM said...

me the 160TH

rapp on November 26, 2008 at 7:27 PM said...

//ஒரு பெரிய‌ ர‌க‌சிய‌த்தை க‌ண்டுபுடிச்சிட்டேன்.. ராப் மேடத்துக்கு கொற‌ஞ்ச‌து 40 வ‌ய‌சு இருக்கும்னு? என்ன‌ சொல்றீங்க‌..//

ஆமாம் தாமிராண்ணே, கண்டுபிடிச்சிட்டீங்களே, செம ஷார்ப் நீங்க:):):) உங்களைவிட நாப்பத்தஞ்சு வயசு கம்மிதான, அதாலதான் உங்க அனுபவ அறிவை வெச்சு கண்டுபிடிச்சீட்டீங்க போல:):):)

கார்க்கி on November 26, 2008 at 8:05 PM said...

/dharshini said...
150 அடிக்கலாம்னா விடமாட்டன்றாங்கப்பா//

மொதல்ல 90 அடிங்க.. அப்புறம் 150துக்கு வரலாம்..ஹிஹிஹி

//ஒரு பெரிய‌ ர‌க‌சிய‌த்தை க‌ண்டுபுடிச்சிட்டேன்.. ராப் மேடத்துக்கு கொற‌ஞ்ச‌து 40 வ‌ய‌சு இருக்கும்னு? என்ன‌ சொல்றீங்க..//

இது ரகசியமா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

//அட‌ப்பாவிக‌ளா..? ஒரு மாச‌த்துல‌ 3000, 4000 ஹிட்ஸ் வாங்குற‌துக்குள்ள‌ மூச்சு வாங்கிடுது ந‌ம‌க்கு... வாழ்த்துக‌ள்ப்பா..//

தாங்க்ஸ்ப்பா..

கார்க்கி on November 26, 2008 at 8:07 PM said...

/எனக்கு கூடத் தான் அந்த விளம்பரம் பிடிக்கும், அதனால எனக்கு 40-ஆ என்ன

18 தாம்பா ஆகுது//

நம்பர் டப் பண்ற்துல கூடவா ஸ்பெல்லிங்(?) மிஸ்டேக். 81ன‌ நீங்க 18னு தப்பா டைப் பண்ணியிருக்கிங்க..

/Anonymous said...
No pictures.........
not able to விஎந்//

அது வீடியோங்க.. எல்லோருக்கும் தெரியுதே..

கார்க்கி on November 26, 2008 at 8:09 PM said...

//வித்யா said...
வோடோபோன் விளம்பரத்தில் அந்த பையனின் expressions தான் அல்டிமேட். parrys sugar விளம்பரம் பார்த்திருக்கிங்களா? சூப்பரா இருக்கும்.//

சரியா சொன்னிங்க. அதுவும் எடுத்துக்கோனு சொல்ர மாதிரி பார்ப்பான் பாருங்க.. சூப்பர்.. ம் எனக்கு பிடித்த ஒன்றுதான்

/சகா உங்களுக்குமா இந்த ”ஒலக” விளம்பர மோகம்?//

ஹிஹிஹி.. அது மூலமா நம்க்கு ஒரு விளமபரம்தான்.. நாங்க எல்லாம் ஜே.கே.ஆர் ரசிகர்கள் இல்லையா..

/ஆமாம் தாமிராண்ணே, கண்டுபிடிச்சிட்டீங்களே, செம ஷார்ப் நீங்க:):):) உங்களைவிட நாப்பத்தஞ்சு வயசு கம்மிதான, அதாலதான் உங்க அனுபவ அறிவை வெச்சு கண்டுபிடிச்சீட்டீங்க போல:):):)//

ஆமாம். அதனால தான் அவர பார்க்கிறப்ப எல்லாம் தொட்டு பேச மாட்டேன்..

Anonymous said...

எல்லா விளம்பரமும் நல்லா இருக்கு. ஆனா சரவணா ஸ்டோர்ஸ்தான் எனக்குப் பிடிக்காது.

அக்னி பார்வை on November 26, 2008 at 10:24 PM said...

///தேவதை படத்தில் வரும் "தீபங்கள் பேசும்.. திரு கார்த்திகை மாசம்" என்ற பாடலில் வரும் "முத்து முத்து விளக்கு முற்றத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்துல" என்ற வரியை பாடிப் பாருங்கள்.
//

இத எப்படி கண்டுபிடிச்சீங்கா..செம அறிவுப்பா!!!!

அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்.. எங்கயிருந்து லவுட்டன?

“விஜய் டீவி ‘ஜோக்ஸ் கிள்ப்ல’ மோட்டை பாஸ்கி சொன்னது தானே”!!!

விலெகா on November 27, 2008 at 6:36 AM said...

ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.,

விலெகா on November 27, 2008 at 6:36 AM said...

ஏர்டெல் மேட்டர் சூப்பர்.

கார்க்கி on November 27, 2008 at 9:38 AM said...

//வடகரை வேலன் said...
எல்லா விளம்பரமும் நல்லா இருக்கு. ஆனா சரவணா ஸ்டோர்ஸ்தான் எனக்குப் பிடிக்காது.//

வருகைக்கு நன்றி தல.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. (நேத்துதான்)

/அக்னி பார்வை said...
///தேவதை படத்தில் வரும் "தீபங்கள் பேசும்.. திரு கார்த்திகை மாசம்" என்ற பாடலில் வரும் "முத்து முத்து விளக்கு முற்றத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்துல" என்ற வரியை பாடிப் பாருங்கள்.
//

இத எப்படி கண்டுபிடிச்சீங்கா..செம அறிவுப்பா!!!!

அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்.. எங்கயிருந்து லவுட்டன?

“விஜய் டீவி ‘ஜோக்ஸ் கிள்ப்ல’ மோட்டை பாஸ்கி சொன்னது தானே”!!!//

பாட்டுன்னு எனக்கு உசுருங்க.. வேணும்ன்னா ஒரே மெட்டுல போட்ட தம்ழ்பாடல்கள் பத்தி ஒரு பதிவு போடறேன்ன் அப்பவாச்சு நம்புங்க..

/விலெகா said...
ஏர்டெல் மேட்டர் சூப்பர்.//

நன்றி விலேகா..

Chuttiarun on November 27, 2008 at 6:30 PM said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

 

all rights reserved to www.karkibava.com