Nov 25, 2008

புட்டிக்கதைகள்


மு.கு: இனி வாராவாரம் புட்டிக்கதைகளை தொடரலாம் என நினைக்கிறேன். புதிதாய் வந்த அன்பர்களுக்கு நம்ம ஏழுமலையை அறிமுகம் செய்துவிட்டு அடுத்த வாரத்திலிருந்து ‘ஆட’ ஆரம்பிப்போம்.

**********************************************

   முதலாண்டில் இருந்து இரண்டாமாண்டில் காலடி எடுத்த வைத்த நேரம். நாங்களும் பெரியவங்கதான்னு காட்ட துடித்துக் கொண்டிருந்தோம் நானும் எனது நண்பர்களும். முதலாமாண்டு மாணவர்களும் அப்போது இல்லை. ஏதாவது செய்யனும் மச்சி என்று ஓவ்வொருவரும் சொல்லிக் கொண்டே இருந்தோமே தவிர ஒருவரும் என்ன செய்வதென்று சொல்லவில்லை. அப்போதுதான் ஏழுமலை அந்த "திட்டத்தை" சொன்னான். ஏழுமலையை பற்றி சொல்லிவிடுகிறேன். (துள்ளுவதோ இளமை) தனுஷ் உயரம் குறைவாய் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பான். அவன்தான் எங்கள் கேங்கிலே வயதில் "பெரியவன்". பிரம்மன், வெறும் நான்கு எலும்புகளும் ரெண்டு மீட்டர் தோலும் வைத்து கின்னஸ் முயற்சியாக செய்தது போலிருப்பான். அவனிடம் இருந்து அப்படி ஒரு திட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

     "தண்ணியடிக்கலாம் மச்சி" என்று அவன் சொல்லியதும் அனைவரின் வயிற்றிலும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது. துணைக்கு முன் அனுபவமிக்க ஒருவனை ( நடராஜ்) அழைத்துக் கொண்டு மஹாலட்சுமி ஒயின்ஸை ( நல்லா வைக்கிறாங்கப்பா பேர்) நோக்கி நடக்க ஆரம்பித்தோம். தன் வீர தீர பராக்கிராமங்களை சொல்லிக் கொண்டே வந்தான் நடராஜ். முதன்முதலாக பத்தாவது படிக்கும் போதே குவார்ட்டர் மானிட்டரை ராவா அடிச்சேன் என்று அவன் சொன்னதை எல்லோரும் ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் மட்டும் சும்மா கத விடாதடா. அப்படி அடிச்சா வயிறெரிஞ்சு போய்டும் என என்னுடைய பொது அறிவை சபையில் சமர்ப்பித்தேன். அவன் சொல்கிற மாதிரி அடிக்க வேண்டாம் என நண்பர்களுக்கும் கூறினேன். அவனோ அப்படி அடிச்சாதான்டா கிக்கு என் உசுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

      ஒரு வழியாய் பாருக்குள் நுழைந்தோம். அங்கே இருந்த சிறுவனிடம்(பாவம்!!) எல்லோரும் வேண்டியதை ஆர்டர் செய்தோம். நடராஜ், தனக்கொரு குவார்ட்டர் ஓல்ட் மன்க் என்றான். "மிக்சிங் சார்" என்றவனிடம் வேண்டாம் ஒரு ஊறுகாய் பாக்கெட் மட்டுமென்றான். அடுத்து ஏழுமலை சொன்னான் "எனக்கொரு பீரு, ஒரு வாட்டர் பாக்கெட்". எல்லோரும் அவனை ஒரு மாதிரியாய் பார்க்க அவ‌ன் என்னைப் பார்த்து பாவமாய் சொன்னான் " ராவா அடிச்சா என் உடம்பு தாங்காதில்ல மச்சி"

***********************************************          இந்த முறை ஏழுமலையின் "நீர்ப்பாசனத்திற்கு" சுதர்சன் வழி செய்தான். அவனுடைய அக்காவின் திருமணத்திற்காக (அப்படி சொல்லித்தான் போனோம்) பாண்டிச்சேரி சென்றோம். மலிவு விலை மதுவையும் அட்டகாசாமன "ராம் இன்டெர்னேஷனல்" ரூமையும் பார்த்த ஏழுமலை, அன்று மலை ஏறுவது என‌ முடிவு செய்தான். வழக்கமாய் "சொட்டு நீர்ப் பாசனமே" செய்யும் அவன், அன்று பம்ப் செட்டைப் போல அடிக்க போவதாக சபதமிட்டான்.

    அதற்கு முதல் நாள்தான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பார்த்திருந்தான். 8 PM ஆஃபை பார்த்தவுடன் அவன் மனதும் படத்தின் பெயரைப் போல ஆனது. மணிவண்ணன் ஞாபகம் வர, கொடுடா நான் திறக்கிறேன் என்றான். "மச்சி இத எப்படி திறக்கனும் தெரியுமா? கீழ‌ ஒரு தட்டு இப்படி..மேல ஒரு தட்டு" அவ்ளோதான் தட்டின வேகத்தில் பாட்டில் கீழே விழ மொத்த க்ரூப்பும் அவனை குரூரமாக பார்த்தது. வேறு வழியில்லாமல் அவனை அடிக்க முடிந்த அளவு அடித்து விட்டு , சரக்கடிக்க நல்ல பாரை தேடி வெளியே வந்தோம்.   

       உள்ளே நுழைந்தவுடன் என காதை கடித்தான் "மச்சி, நான் நிறைய அடிக்க போறேன். எவ்ளோ அடிக்கிறேனு கணக்கு வச்சிக்கோ. காலைல கேட்பேன்" என்றான்.

     எனக்கு அநியாயத்திற்கு சிரிப்பு வர, அதற்குள் சரக்கு வந்த்தால் அடக்கிகொண்டேன். நாலு பேருக்கு ஒரு ஃபுல் வாங்கினோம். "மச்சி போதுமா, நான் நிறைய அடிக்க போறேன் என்றான். எங்கள் ரியாக்ஷனை கண்டு மூடிக்கொண்டான். முதல் ரவுண்ட் முடியுமுன்னரே அவன் சவுண்ட் அதிகமானது. அவன் அந்த முதல் க்ளாசையே மூக்கை மூடிக்கொண்டு ஒரு முறை, கண்ணை மூடிக்கொண்டு ஒரு முறை, வழக்கம் போல் சொட்டு சொட்டாய் ஒரு முறை அடித்தும் மீதி இருந்தது. மீதி மூவரும் ஒரு வழியாய் ஃபுல்லை முடித்தோம். "மச்சி கிளம்பலாமா?" என்றேன் ஏழுமலையிடம். "எதுக்கும் ஒரு குவார்ட்டர் வாங்க்கிகலாம் மச்சி. ரூமுக்கு போய் அடிப்பேன்" என்றான்.

  வெளியே வரும்போது ஆடிகொண்டே வந்தான். அந்த பார் கட‌ற்கரைக்கு அருகில் இருந்ததால் அதனால்தான் ஆடுகிறான் என்று நினைத்துக் கொண்டோம். அவ்வழியே சென்ற ஒரு பெரியவரிடம் "பொட்டி இருக்கா தாத்தா" என்றான் ஏழுமலை. அவரும் "என்ன பெட்டிப்பா?" என்றார். 

உன் உருவத்துக்கு ரயில் பொட்டியா தூக்குவ?தீப்பொட்டிதான்.

  ஏன்ப்பா உன் வயசு பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. என் பேரன் பேரு கூட போனா வாரம் புக்ல எல்லாம் வந்தது என்று அவர் பேச ஆரம்பித்தார். (ஒரு வேளை பரிசலை சொல்லியிருபாரோ)

"போ பெருசு நான் ஸ்கூல் படிச்சப்பா கூடத்தான் எல்லா புகலயும் என் பேரு இருந்தது" என்று பதிலடி தந்து கிளம்பினான்.

   அடுத்து நேராக ஒரு ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றான். "ஆட்டோக்கார், வண்டி ராம் இன்டெர்னேஷனலுக்கு போவுமா?

    போகும் என்ற அவ‌ரிடம், "அப்ப போக வேன்டிதானே? இங்க ஏன் வெட்டிய இருக்கீங்க" என்றான். சும்ம விடுவாரா ஆட்டோக்கார், பின் அவரிடம் கெஞ்சி மண்ணிப்புபக் கேட்டு அவ‌னை மீட்டு வந்தோம். ஒரு வழியாய் அவனை ரூமில் அடைத்தோம். நள்ளிரவில் எழுந்து வாந்தி எடுத்தான். உண்மையாக அவன் அடித்த்தை விட அதிகம் எடுத்தான்.

     மறு நாள் காலை அனைவரும் திருமணத்திற்கு சென்றோம். ஏழுமலை மட்டும் பாதி மப்பிலே வந்தான். மண்டபத்தில் வாசலில் நின்று கொன்டிருந்த அவனிடம் ஒரு பாட்டி " தம்பி தள்ளுப்பா" என்றார்.

"நான் தள்ளுனா நீ விழுந்துடுவ பாட்டி" என்றான். சொன்னது மட்டுமில்லாமல் ஒரு வில்ல சிரிப்பு சிரித்தான்.

    " ஃபேன் காத்து இப்படி வருது, பறந்துடிவியே சொன்னேன். அப்புறம் உன் இஷ்டம் " என்று பதிலடித்துவிட்டு சென்ற பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தவன் திடிரென்று கேட்டான்.

"நைட் எவ்ளொ மச்சி அடிச்சேன். இன்னும் சுத்துது"

119 கருத்துக்குத்து:

முரளிகண்ணன் on November 25, 2008 at 8:45 AM said...

me the first

முரளிகண்ணன் on November 25, 2008 at 8:46 AM said...

\\நான் ஸ்கூல் படிச்சப்பா கூடத்தான் எல்லா புகலயும் என் பேரு இருந்தது\\

ultimate

அத்திரி on November 25, 2008 at 8:47 AM said...

நைட் எவ்ளொ மச்சி அடிச்சேன். இன்னும் சுத்துது"

சிரிப்பு சிரிப்பா வருது சகா,

தொடரட்டும் ஏழுமலையின் லீலைகள்.

நான் முதன் முதலில் பீர் குடிக்கும் போது Fanta கலந்து குடிச்சேன் சகா. ஹி ஹி ஹி

விஜய் ஆனந்த் on November 25, 2008 at 8:57 AM said...

:-)))...

// ஏன்ப்பா உன் வயசு பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. என் பேரன் பேரு கூட போனா வாரம் புக்ல எல்லாம் வந்தது என்று அவர் பேச ஆரம்பித்தார். (ஒரு வேளை பரிசலை சொல்லியிருபாரோ) //

திருத்தம்...

பரிசலை சொல்லியிருந்தா, ஃப்ரெண்டுன்னோ, க்ளாஸ்ம்மேட்னோதான் சொல்லியிருப்பாரு....பேரன்னா வயசு இடிக்குதில்ல!!!!

Anonymous said...

hilarious.

கார்க்கி on November 25, 2008 at 10:13 AM said...

//முரளிகண்ணன் said...
\\நான் ஸ்கூல் படிச்சப்பா கூடத்தான் எல்லா புகலயும் என் பேரு இருந்தது\\

ultiமடெ//

நன்றி சகா..

//அத்திரி said...
நைட் எவ்ளொ மச்சி அடிச்சேன். இன்னும் சுத்துது"

சிரிப்பு சிரிப்பா வருது சகா,//

அப்ப சிரிங்க.. அதானே வேணும் எனக்கு..

//தொடரட்டும் ஏழுமலையின் லீலைகள்.

நான் முதன் முதலில் பீர் குடிக்கும் போது Fanta கலந்து குடிச்சேன் சகா. ஹி ஹி ஹி//

இப்ப கூட அப்படித்தான் அடிக்கறீங்கனு உளவுத்துறை தகவல்கள் சொல்லுது சகா..

கார்க்கி on November 25, 2008 at 10:14 AM said...

//பரிசலை சொல்லியிருந்தா, ஃப்ரெண்டுன்னோ, க்ளாஸ்ம்மேட்னோதான் சொல்லியிருப்பாரு....பேரன்னா வயசு இடிக்குதில்ல!!!!//

இருங்க சிரிச்சு முடிச்சுட்டு வந்து பதில் சொல்றேன். :)))))))

//Anonymous said...
hilariஒஉச்.//

நன்றி அனானி..

prakash on November 25, 2008 at 10:37 AM said...

சூப்பரப்பு....

narsim on November 25, 2008 at 10:49 AM said...

//கீழ‌ ஒரு தட்டு இப்படி..மேல ஒரு தட்டு" அவ்ளோதான் தட்டின வேகத்தில் பாட்டில் கீழே விழ மொத்த க்ரூப்பும் அவனை குரூரமாக பார்த்தது//

சகா.. அந்த சூழ்நிலையில் இருந்தால் இந்த நிகழ்வின் தாக்கம் புரியும்..
கலக்கலான சரக்கு சகா..

Sundar on November 25, 2008 at 10:54 AM said...

:) LOL!

அருண் on November 25, 2008 at 10:55 AM said...

கலக்கல் கார் கீ. ரொம்ப சூப்பரா இருக்கு.

அருண் on November 25, 2008 at 11:01 AM said...

லக்கி அண்ணனுக்கு ஒரு காண்டு கஜேந்திரன், உங்களுக்கு ஒரு ஏழுமலையா?

அருண் on November 25, 2008 at 11:02 AM said...

லக்கி அண்ணன் டமாரு கொமாரும் எழுதுவாரு.

கார்க்கி on November 25, 2008 at 11:43 AM said...

//prakash said...
சூப்பரப்பு...//

தாங்க்ஸ்ப்பா..(புது ஃபோட்டோ கலக்கல்)

//சகா.. அந்த சூழ்நிலையில் இருந்தால் இந்த நிகழ்வின் தாக்கம் புரியும்..
கலக்கலான சரக்கு சகா..//

சேம் ப்ளட்டா தல? நன்றி..

//Sundar said...
:) ளோள்!//

என்னங்க..

அருண் on November 25, 2008 at 11:45 AM said...

யாராவது இருக்கீங்களா?

கிழஞ்செழியன் on November 25, 2008 at 11:45 AM said...

சின்னப் புள்ளைக இப்பத்தான ஆரம்பிச்சிருக்குக... போகப் போகத் தெரியும்.
இப்படிக்கு,
பரிசலுக்கு ஒரு செட் சீனியர்

கிழஞ்செழியன் on November 25, 2008 at 11:47 AM said...
This comment has been removed by the author.
prakash on November 25, 2008 at 11:54 AM said...

//புது ஃபோட்டோ கலக்கல்//
ஹி ஹி நன்றி ..

prakash on November 25, 2008 at 11:55 AM said...

யாராவது இருக்கீங்களா?
உள்ளேன் அய்யா...

prakash on November 25, 2008 at 11:57 AM said...

//Anonymous said...
hilarious.//

ஹிலாரி தான் தோத்துட்டங்களே :))

அருண் on November 25, 2008 at 12:01 PM said...

//யாராவது இருக்கீங்களா?
உள்ளேன் அய்யா...//

நா இருக்கேன்.

அருண் on November 25, 2008 at 12:01 PM said...

நீங்க?

prakash on November 25, 2008 at 12:03 PM said...

கார்க்கி பிக்காஸா வெப்ல எல்லா படமும் தூள்
அதுவும் அந்த மலைல நிக்கற படம் சூப்பர். ஆனா எனக்கு அத பார்த்ததும் அமர்க்களம் அஜீத் ஞாபகம் வந்தது:))

prakash on November 25, 2008 at 12:05 PM said...

அருண் உங்களுக்கு சொன்ன பதில் தான் அது.இப்படி இருந்திருக்கணும்

//யாராவது இருக்கீங்களா?//

உள்ளேன் அய்யா...

அருண் on November 25, 2008 at 12:12 PM said...

எனக்கு சிம்பு மாதிரி தெரியரார். தண்ணிக்குள்ள இருந்து வர ஃபோட்டோல.

அருண் on November 25, 2008 at 12:17 PM said...

தமிழ் பதிவர்களில் கார் கீ தான் Fit and Smart. என்ன சொல்ரீங்க ப்ரகாஷ்?

prakash on November 25, 2008 at 12:21 PM said...

நான் மது அருந்துவதில்லை...
நீங்க அருண்....

கார்க்கி on November 25, 2008 at 12:22 PM said...

//அருண் said...
கலக்கல் கார் கீ. ரொம்ப சூப்பரா இருக்கு.//

நன்றி அருண். நேத்து மாதிரி இன்னும் பெட்டரா வேணும்ன்னு சொல்லிடுவீங்களோனு பயந்தேன்.. :))

//அருண் said...
லக்கி அண்ணனுக்கு ஒரு காண்டு கஜேந்திரன், உங்களுக்கு ஒரு ஏழுமலையா?//

வெறும் ஏழுமலை நல்லயில்லையே!! ஏக் தம் ஏழுமலை.. அது மாதிரி ஏதாவ்து சொல்லுங்கப்பா..

அருண் on November 25, 2008 at 12:23 PM said...

// prakash said...
நான் மது அருந்துவதில்லை...
நீங்க அருண்....//

ஆமாங்க. நானும் தான். ரொம்ப நாளாச்சு நிறுத்தி.

prakash on November 25, 2008 at 12:23 PM said...

//தமிழ் பதிவர்களில் கார் கீ தான் Fit and Smart. என்ன சொல்ரீங்க ப்ரகாஷ்?//

Definitely!!!!

அத்திரி on November 25, 2008 at 12:24 PM said...

//இப்ப கூட அப்படித்தான் அடிக்கறீங்கனு உளவுத்துறை தகவல்கள் சொல்லுது சகா..//


இப்ப எப்படி சகா அப்படி இருக்க முடியும்?

அய்யய்யோ தங்கமணிக்கு தெரிஞ்சிடிச்சினா???!(((((((((((||||||\\\\

எஸ்கேப்.....................

கார்க்கி on November 25, 2008 at 12:24 PM said...

// கிழஞ்செழியன் said...
சின்னப் புள்ளைக இப்பத்தான ஆரம்பிச்சிருக்குக... போகப் போகத் தெரியும்.
இப்படிக்கு,
பரிசலுக்கு ஒரு செட் சீனியர்//

வாங்க தல.. பரிசலுக்கே சீனியரா? அப்போ கலைஞர் செட்டா நீங்க?

//prakash said...
கார்க்கி பிக்காஸா வெப்ல எல்லா படமும் தூள்//

ஹிஹிஹி.. நன்றிங்கண்ணா..

//அதுவும் அந்த மலைல நிக்கற படம் சூப்பர். ஆனா எனக்கு அத பார்த்ததும் அமர்க்களம் அஜீத் ஞாபகம் வந்தது:))

அதானே.. அடுத்த வரியில ஆப்பு வச்சுடுவீங்களே..

prakash on November 25, 2008 at 12:25 PM said...

//ஏக் தம் ஏழுமலை.. அது மாதிரி ஏதாவ்து சொல்லுங்கப்பா..//

ஏழு பீரு ஏழுமலை...

கார்க்கி on November 25, 2008 at 12:26 PM said...

//அருண் said...
// prakash said...
நான் மது அருந்துவதில்லை...
நீங்க அருண்....//

ஆமாங்க. நானும் தான். ரொம்ப நாளாச்சு நிறுத்தி.//

அது ரொம்ப ஏஸிங்க.. நான் நிறைய தடவ அத நிறுத்தி இருக்கேன்..

//இப்ப எப்படி சகா அப்படி இருக்க முடியும்?

அய்யய்யோ தங்கமணிக்கு தெரிஞ்சிடிச்சினா???!(((((((((((||||||\\\\

எஸ்கேப்.................//

ஹலோ உள‌வுத்துறை என்பதே தங்கமணின்னு தெரியாதா?

prakash on November 25, 2008 at 12:28 PM said...

//அதானே.. அடுத்த வரியில ஆப்பு வச்சுடுவீங்களே..//
நான் போஸ் பத்தி மட்டும்தான் சொன்னேன்பா. அந்த பாட்டுல exacta அதே போஸ் கொடுப்பார் தல.

அருண் on November 25, 2008 at 12:29 PM said...

//அது ரொம்ப ஏஸிங்க.. நான் நிறைய தடவ அத நிறுத்தி இருக்கேன்..//

நான் மறுபடியும் ஆரம்பிக்கலயே.

அருண் on November 25, 2008 at 12:30 PM said...

//அருண் said...
எனக்கு சிம்பு மாதிரி தெரியரார். தண்ணிக்குள்ள இருந்து வர ஃபோட்டோல.//

சாணக்கியா பாட்டு.

prakash on November 25, 2008 at 12:30 PM said...

கும்பலா நடந்து வர்ற போட்டோல கில்லி தான் :))

prakash on November 25, 2008 at 12:32 PM said...

////அது ரொம்ப ஏஸிங்க.. நான் நிறைய தடவ அத நிறுத்தி இருக்கேன்..//
நான் மறுபடியும் ஆரம்பிக்கலயே.//

ஹி ஹி நான் எப்பவுமே தொட்டதில்லை..

கார்க்கி on November 25, 2008 at 12:33 PM said...

//prakash said...
//ஏக் தம் ஏழுமலை.. அது மாதிரி ஏதாவ்து சொல்லுங்கப்பா..//

ஏழு பீரு ஏழுமலை..//

பேரு நல்லாயிருக்கு.. ஆனா அவன் இதுவரைக்கும் மொத்தமா ஏழு பீரு அடிச்சிருப்பானானு எனக்கு ஒரு சந்தேகம்.. :))

//நான் போஸ் பத்தி மட்டும்தான் சொன்னேன்பா. அந்த பாட்டுல exacta அதே போஸ் கொடுப்பார் தல.//

அப்படியா? அப்போ இதாங்க பாட்டு

கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்தி கேட்டேன்
வாசம் மணக்கும் வைனை கேட்டேன்..

எப்படி???????????

அருண் on November 25, 2008 at 12:33 PM said...

// prakash said...
ஹி ஹி நான் எப்பவுமே தொட்டதில்லை.. //

நீங்க ரொம்ப நல்லவரா ப்ரகாஷ்?

கார்க்கி on November 25, 2008 at 12:35 PM said...

//ஹி ஹி நான் எப்பவுமே தொட்டதில்லை.

ஸ்ட்ரா போட்டுக் குடிப்பிங்களோ?

//கும்பலா நடந்து வர்ற போட்டோல கில்லி தான் :)//

:))))))))

prakash on November 25, 2008 at 12:35 PM said...

//வாங்க தல.. பரிசலுக்கே சீனியரா? அப்போ கலைஞர் செட்டா நீங்க?//

நெடுஞ்செழியன் தான் கலைஞர் செட். கிழஞ்செழியனுமா?

அருண் on November 25, 2008 at 12:36 PM said...

உங்க குரூப் ஃபோட்டால நானும் ஒருவன் இருக்காரா?

prakash on November 25, 2008 at 12:36 PM said...

//நீங்க ரொம்ப நல்லவரா ப்ரகாஷ்?//
அப்படிதான் எல்லாரும் சொல்றாங்க

அருண் on November 25, 2008 at 12:37 PM said...

46

அருண் on November 25, 2008 at 12:38 PM said...

47

அருண் on November 25, 2008 at 12:38 PM said...

48

அருண் on November 25, 2008 at 12:38 PM said...

49

அருண் on November 25, 2008 at 12:38 PM said...

50

prakash on November 25, 2008 at 12:38 PM said...

50

அருண் on November 25, 2008 at 12:38 PM said...

ஓகே. 50 அடிச்சாச்சு. இப்போ சாப்பாடுக்கு போகோனும். வரட்டா.

கார்க்கி on November 25, 2008 at 12:40 PM said...

//அருண் said...
உங்க குரூப் ஃபோட்டால நானும் ஒருவன் இருக்காரா?//

இல்லைங்க.. இந்த ஃபோட்டோ சிங்கப்பூர்ல இருந்தப்ப எடுத்தது. அவன் அங்க வரல..

50க்கு நன்றி அருண்,பிரகாஷ்

prakash on November 25, 2008 at 12:41 PM said...

அருண்
ஹை ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷனா?
congrats

நானும் ஒருவன் on November 25, 2008 at 12:50 PM said...

"கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்தி கேட்டேன்
வாசம் மணக்கும் வைனை கேட்டேன்"

ஆஹா.என்ன ஒரு அருமையான பாடல்.கேட்கும்போதே கிக் ஏறுதே. (டீ.ஆர். மகாலிங்கம் குரலில் படிக்கவும்)

நானும் ஒருவன் on November 25, 2008 at 12:51 PM said...

"அருண் said...
ங்க குரூப் ஃபோட்டால நானும் ஒருவன் இருக்காரா?"

நான் இல்லை. அதனால்தான் அவன் நல்லாயிருக்கிற மாதிரி தெரியுது

prakash on November 25, 2008 at 12:54 PM said...

//கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்தி கேட்டேன்
வாசம் மணக்கும் வைனை கேட்டேன்..//

சூப்பர் என்று சொல்லவும் வேண்டுமோ?

prakash on November 25, 2008 at 12:56 PM said...

//நான் இல்லை. அதனால்தான் அவன் நல்லாயிருக்கிற மாதிரி தெரியுது//

:)))

நானும் ஒருவன் on November 25, 2008 at 12:58 PM said...

பிரகாஷ் லன்ச்சுக்கு போகலையா? நான் இதோ போயிட்டே இருக்கேன்

prakash on November 25, 2008 at 1:03 PM said...

//கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்தி கேட்டேன்
வாசம் மணக்கும் வைனை கேட்டேன்..//

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
சரக்கே வேண்டாம் வேண்டாம் என்று
சுண்டக்கஞ்சி சுண்டக்கஞ்சி சுண்டக்கஞ்சி கேட்டே ஏஏஏஏஎஏன்

rapp on November 25, 2008 at 1:23 PM said...

வேலை ஜாஸ்தியா, இன்னைக்கும் மீள் பதிவு?

rapp on November 25, 2008 at 1:24 PM said...

இந்த ஏழுமலை கேரெக்டர் ரொம்பப் பிடிச்சிருக்கு, அடிக்கடி அவர வெச்சு எழுதுங்க:):):)

புதுகை.அப்துல்லா on November 25, 2008 at 1:25 PM said...

விஸ்கியானாலும் பேக்ப்பைப்பரில் நான் விஸ்கியாவேன்!
ஒரு பிராந்தியானாலும் மெக்டல் குவாட்டர் பிராந்தியாவேன்!
ஃபாரின் சரக்கானாலும் ஜானிவாக்கர் சரக்காவேன்!
ஒரு பட்டையானாலும் பதராமல் நான் அடித்திடுவேன்!

:))

அத்திரி on November 25, 2008 at 1:41 PM said...

அப்பிடியா!!!!!!

உளவுத்துறை இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை சகா.

உளவுத்துறையையே ஏமாத்துவமில்ல..........................( மீசையில மண் ஒட்டல"""""")..

prakash on November 25, 2008 at 1:44 PM said...

//பிரகாஷ் லன்ச்சுக்கு போகலையா? //
அப்பாடா... லஞ்ச் முடிச்சாச்சி...

பரிசல்காரன் on November 25, 2008 at 1:47 PM said...

ஒனக்கு ஏழுமலைங்கற பேரும் சூப்பராத்தாம்ப்பா இருக்கு. எல்லாரும் கண்ணாயிரம் பெருமாளாய்ட்டீங்கன்னா நாடு தாங்காது.

(க.பெ. யாருன்னு விளக்கம் வேணும்ன்னா நர்சிம்மைக் கேட்கவும்!)

கார்க்கி on November 25, 2008 at 1:58 PM said...

//rapp said...
வேலை ஜாஸ்தியா, இன்னைக்கும் மீள் பதிவு?//

இல்லைங்க. அடுத்த பதிவும் ரெடி. புது நண்பர்களுக்கு ஏழுமலையை அறிமுகம் செய்யவே இந்த மறுபதிவு.

// rapp said...
இந்த ஏழுமலை கேரெக்டர் ரொம்பப் பிடிச்சிருக்கு, அடிக்கடி அவர வெச்சு எழுதுங்க:):):)//

இனி வாரம் ஒரு முறை வருவார்.. நன்றி ராப்

கார்க்கி on November 25, 2008 at 1:59 PM said...

வாங்க அப்துல்லா அண்ணே..

@அத்திரி,

பார்க்கலாம் எத்தணை நாள்ன்னு..

//பரிசல்காரன் said...
ஒனக்கு ஏழுமலைங்கற பேரும் சூப்பராத்தாம்ப்பா இருக்கு. எல்லாரும் கண்ணாயிரம் பெருமாளாய்ட்டீங்கன்னா நாடு தாங்காது.//

சகா, நான் என்ன அவ்வளவு ஒல்லியாவா இருக்கேன்?

அருண் on November 25, 2008 at 2:17 PM said...

//நான் இல்லை. அதனால்தான் அவன் நல்லாயிருக்கிற மாதிரி தெரியுது//

உங்க profile ஃபோட்டோலயே நீங்க சூப்பரா கார் கீயோட ஸ்மார்ட்டா இருக்கீங்க.

அத்திரி on November 25, 2008 at 2:21 PM said...

//பார்க்கலாம் எத்தணை நாள்ன்னு..//தங்கமணி சென்னையில இல்லாதப்பதான் எல்லாம் ஹி ஹி ஹிஹி (((((()__________))))))))))

நானும் ஒருவன் on November 25, 2008 at 3:33 PM said...

"உங்க profile ஃபோட்டோலயே நீங்க சூப்பரா கார் கீயோட ஸ்மார்ட்டா இருக்கீங்க."

எனக்கு கூச்சமா இருக்கு அருண். ரொம்ப புகழாதீங்க‌

நானும் ஒருவன் on November 25, 2008 at 3:35 PM said...

யாராவது இருக்கிங்களா? 100 அடிக்கலாம்.. கும்க்கி srimathi எல்லாம் எங்க போய்ட்டாங்க?

அருண் on November 25, 2008 at 3:56 PM said...

//நானும் ஒருவன் said...
யாராவது இருக்கிங்களா? 100 அடிக்கலாம்.. கும்க்கி srimathi எல்லாம் எங்க போய்ட்டாங்க?//

உள்ளேன் அய்யா.

அருண் on November 25, 2008 at 3:57 PM said...

//நானும் ஒருவன் said... எனக்கு கூச்சமா இருக்கு அருண். ரொம்ப புகழாதீங்க‌//

ரொம்ப வெக்கப்படாதீங்க.

விலெகா on November 25, 2008 at 4:05 PM said...

ஐயா கார்-‍‍கீ(உபயம்:பரிசல்) கலக்குரீங்க போங்க!!
:-))))))))))))

விலெகா on November 25, 2008 at 4:07 PM said...

என் பேரு கூட‌ தான் போலிஸ் ஸ்டேஷன் ரிஷிஸ்டரில் இருந்துச்சு:--)))

முகமது பாருக் said...

யப்பா இத படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியல ஏன நம்ம வாழ்க்கையிலேயும் நிறைய நடந்துருக்கு..என்னோட நண்பன் தங்கச்சி கல்யாணத்துக்குப் போனபோது இப்படி ஏத்திவிட்டு மட்டையா ஆக்கிடாங்க..அடுத்த நாள் கல்யாணத்துல ஏழுமலை மாதிரித்தான் "பே" னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்...

நல்ல ரசிக்கும்படி எழுதிரிகீங்க..படிக்கும்போதே சிரிப்பு வருது..

வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி on November 25, 2008 at 4:43 PM said...

//நானும் ஒருவன் said...
யாராவது இருக்கிங்களா? 100 அடிக்கலாம்.. கும்க்கி srimathi எல்லாம் எங்க போய்ட்டாங்க?//

ஹாய் நானும் ஒருவன் :))

அருண் on November 25, 2008 at 4:54 PM said...

//ஹாய் நானும் ஒருவன் :))//

வணக்கம் ஸ்ரீமதி அக்கா.

prakash on November 25, 2008 at 5:16 PM said...

என்னப்பா இது 79 லையே இருக்கு
எல்லாருக்கும் ரொம்ப வேலை செய்யறாங்க போல :))

prakash on November 25, 2008 at 5:17 PM said...

அருண் வாங்க. பேர காப்பாத்துவோம்.

அருண் on November 25, 2008 at 5:17 PM said...

//prakash said...
என்னப்பா இது 79 லையே இருக்கு
எல்லாருக்கும் ரொம்ப வேலை செய்யறாங்க போல :))//

வாங்க ப்ரகாஷ். 100 அடிப்போமா?

அருண் on November 25, 2008 at 5:18 PM said...

//prakash said...
அருண் வாங்க. பேர காப்பாத்துவோம்.//

வாங்க வாங்க..

prakash on November 25, 2008 at 5:19 PM said...

"உங்க profile ஃபோட்டோலயே நீங்க சூப்பரா கார் கீயோட ஸ்மார்ட்டா இருக்கீங்க."

அவர விட கையில இருக்க சரக்கு நல்லா இருக்கு:))

அருண் on November 25, 2008 at 5:20 PM said...

//அவர விட கையில இருக்க சரக்கு நல்லா இருக்கு:))//

அவரு தனியா சரக்கு செய்வார் போல இருக்கு.

prakash on November 25, 2008 at 5:21 PM said...

நீங்க ஹை ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன் வச்ரிக்கிங்க
எனக்கு 100 விட்டு கொடுங்க:))

prakash on November 25, 2008 at 5:22 PM said...

//அவரு தனியா சரக்கு செய்வார் போல இருக்கு.//
சொந்தமா சரக்குள்ள ஆளுன்னு சொல்றிங்களா?

அருண் on November 25, 2008 at 5:22 PM said...

//prakash said...
நீங்க ஹை ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன் வச்ரிக்கிங்க
எனக்கு 100 விட்டு கொடுங்க:))//

ஓகே, நீங்களே 100 அடிங்க.

அருண் on November 25, 2008 at 5:23 PM said...

//சொந்தமா சரக்குள்ள ஆளுன்னு சொல்றிங்களா//

அத கார் கீ தான் சொல்லணும்.

prakash on November 25, 2008 at 5:24 PM said...

கார்க்கி ஆள காணோம்?

அருண் on November 25, 2008 at 5:24 PM said...

கார் கீ, வேலையில ரொம்ப பிசியா?

prakash on November 25, 2008 at 5:24 PM said...

இன்னிக்கும் WAH ஆ ?

அருண் on November 25, 2008 at 5:25 PM said...

இப்போதான் ஸ்ரீமதி அக்கா ப்ளாக்ல 100 அடிச்சேன்.

prakash on November 25, 2008 at 5:26 PM said...

//இப்போதான் ஸ்ரீமதி அக்கா ப்ளாக்ல 100 அடிச்சேன்.//

தொழில விடமுடியுமா?

அருண் on November 25, 2008 at 5:26 PM said...

// prakash said...
இன்னிக்கும் WAH ஆ ?//

இல்லங்க. இன்னிக்கு WAO (Work at Office) அதனால தான் கொஞ்சம் ஃபிரியா இருக்க முடியுது.

prakash on November 25, 2008 at 5:27 PM said...

ok
96

prakash on November 25, 2008 at 5:27 PM said...

97

prakash on November 25, 2008 at 5:27 PM said...

98

prakash on November 25, 2008 at 5:28 PM said...

99

prakash on November 25, 2008 at 5:28 PM said...

100

அருண் on November 25, 2008 at 5:28 PM said...

ஜாக்கிரதையா இருங்க ப்ரகாஷ், கடசில வந்து நானும் ஒருவன்/SK 100 அடிச்சிடப்போறங்க.

prakash on November 25, 2008 at 5:29 PM said...

100 அடித்த பிரகாஷ்க்கும் உதவிய அருணுக்கும் நன்றி
-கார்க்கி

அருண் on November 25, 2008 at 5:29 PM said...

Congrats Prakash.

prakash on November 25, 2008 at 5:30 PM said...

//ஜாக்கிரதையா இருங்க ப்ரகாஷ், கடசில வந்து நானும் ஒருவன்/SK 100 அடிச்சிடப்போறங்க//

போட்டாச்சு அருண்
Thanks for the help

அருண் on November 25, 2008 at 5:32 PM said...

Ok, Bye bYe!

prakash on November 25, 2008 at 5:33 PM said...

Bye Arun

Karthik on November 25, 2008 at 6:03 PM said...

சீரியஸா சொல்றேன், பயங்கர காமெடி கார்க்கி.

:P

கார்க்கி on November 25, 2008 at 6:34 PM said...

// விலெகா said...
ஐயா கார்-‍‍கீ(உபயம்:பரிசல்) கலக்குரீங்க போங்க//

நன்றி விலேகா.. அருண் கூட அப்படித்தா சொல்வாரு..

//முகமது பாருக் said...

நல்ல ரசிக்கும்படி எழுதிரிகீங்க..படிக்கும்போதே சிரிப்பு வருது//

நன்றி பாரூக்..

//ஸ்ரீமதி said...

ஹாய் நானும் ஒருவன் :))//

எங்களுக்கெல்லாம் ஹாய் சொல்ல மாட்டிங்களா?

கார்க்கி on November 25, 2008 at 6:36 PM said...

//prakash said...
100 அடித்த பிரகாஷ்க்கும் உதவிய அருணுக்கும் நன்றி
-கார்க்கி//

ஹிஹிஹி.. என் வேலைய மிச்சப்படுத்தினதுக்கு நன்றி

/ Karthik said...
சீரியஸா சொல்றேன், பயங்கர காமெடி கார்க்கி.//

நன்றி கார்த்திக்

rapp on November 25, 2008 at 7:03 PM said...

me the 110th:):):)

Pondy-Barani on November 25, 2008 at 7:08 PM said...

very nice
நல்ல நகைச்சுவை

தொடரை தொடர வாழ்த்துக்கள்

கார்க்கி on November 25, 2008 at 9:19 PM said...

வாங்க பரணி.. நன்றி.. இந்த வாரமே வரக்கூடும் அடுத்த பகுதி

தமிழ்ப்பறவை on November 25, 2008 at 10:37 PM said...

நல்ல நகைச்சுவையாக இருந்தது பதிவு.
இப்பயே அடிச்சு ஆட ஆரம்பிச்சுட்டீங்க. தொடரை எதிர்பார்த்து நானும்.....

SK on November 25, 2008 at 11:23 PM said...

:) :)

Anonymous said...

தமிழ்மண மகுடம் புட்டிக்கதைகள். வாழ்த்துக்கள் கார்க்கி

ரோஜா காதலன் on November 26, 2008 at 6:52 PM said...

சகா... பட்டைய கெளப்பறிங்க...

லேட்டா வந்துட்டேனே...

பாசகி on December 30, 2008 at 1:37 PM said...

பயங்கரமா சிரிச்சேங்க :)))))) நீங்க சிரிச்சா பயங்கரமா இருக்குமான்னெல்லாம் கேட்கப்படாது.

முகில் on November 21, 2011 at 10:05 AM said...

//கீழ‌ ஒரு தட்டு இப்படி..மேல ஒரு தட்டு" அவ்ளோதான் தட்டின வேகத்தில் பாட்டில் கீழே விழ மொத்த க்ரூப்பும் அவனை குரூரமாக பார்த்தது//

இங்கயும் அதே கதைதான். என்ன ஒன்னு நட்புகள் அடிச்சதுதான் ரொம்ப வலிச்சது. பின்ன... கீழே போட்டு உடைச்சது நானாச்சே....

sum1 spcl on October 7, 2012 at 1:02 AM said...

//அந்த பார் கட‌ற்கரைக்கு அருகில் இருந்ததால் அதனால்தான் ஆடுகிறான் என்று நினைத்துக் கொண்டோம். // அமேசிங்..!!
சந்து

 

all rights reserved to www.karkibava.com