Nov 23, 2008

பிரவாகத் தமிழும்.. திராவிட கழகங்களும்.. இன்று???


    அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன். நிச்சயம் அதை எழுதியவரின் அனுமதி பெற்றே பதிவிடுவேன். இந்த பதிவு நம்ம தல நர்சிம்மின் பதிவென்பதால் உரிமையுடன் போடுகிறேன். 

************************************************

    "பேஷா" பண்ணிடலாம், "ஷரத்து" வாபஸ், மெட்ராஸ் மாகணம்...என்று இருந்த ஆட்சிமொழியையும் மக்களையும்.. தங்கள் பிரவாகத் தமிழால்,துள்ளல் மொழியால், இலக்கியத்தால்,எதுகை மோனையால் தன்பால் வசீகரித்து திருப்பிக் கொண்டது அன்றைய பேச்சாற்றல். ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது அவர்களின் தமிழ். அந்தத் துள்ளல் தமிழில் அவர்களின் கொள்கை முழக்கங்கள் மக்களை எளிதாக சென்றடைந்தது. தந்தை பெரியார் விதைத்த விதை வேர்விட்டு பெருமரமாகி உருமாறியிருக்கிறது..

அறிஞர் அண்ணா :

"மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."
இந்த எதுகை மோனை அந்த பொதுக்கூட்ட தாமத்தையும் மறக்கடித்து மக்களையும் கிரங்கடித்தது... தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என வர்ணிக்கப்பட்ட அண்ணாவின் தமிழ் பேச்சில் மயங்காதார் யாரும் இல்லை..

கலைஞர் கருணாநிதி : எம்ஜியார் முதலைமைச்சராக இருந்த பொழுது சட்டசபை விவாதத்தில் கூச்சல் எழுந்தவுடன் "உங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என்று எம்ஜியார் சொன்ன மறு நிமிடம் எதிர்கட்சி தலைவராய் இருந்த கலைஞர் எழுந்து.."இதற்கு முன் தமிழ் நாட்டை "ஆண்டவன்" என்று என்னை சொல்வாதல்.. நான் இருக்கிறேன் காப்பாற்ற" என்று கூறியதை கேட்டு மொத்த சபையும் ரசித்தது..
     இப்படி சிலேடை பேச்சானாலும் சரி,இலக்கியமானாலும் சரி தமிழ் தங்குதடையில்லாமல் தங்கிய இடம் கலைஞரின் நாக்கு.. இன்றுவரை மேடைப்பேச்சில் கோலேட்சும் இவரின் அன்றைய தமிழ் மேடைப் பேச்சு இளைஞர்களின் மூச்சாகவே இருந்தது..இவரின் பேச்சால் திமுக விலும் இவரின் தமிழ் வசனம் கேட்டு திரைத்துறைக்கும் வந்தவர்கள் ஏராளம்.

காளிமுத்து : "மயிலுக்கு தோகை கன‌க்கிறது என்று குயிலுக்கு என்ன கவலை?" என்று இவர் தமிழ் பேச ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்ததெல்லாம் கூட்டம் சேர்ந்துவிடும்..
உலகத்தமிழ் மாநாட்டில் இவர் மூச்சுவிடாமல் பேசிய பேச்சைக் கேட்டு மூர்ச்சையாய்போய் நின்றது மாநாடு. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை இவர் பட்டியல் இட்டதை பார்த்து நெடுநேரம் தட்டிக்கொண்டிருந்தது முதல்வர் எம்ஜிஆரின் கரங்கள்.. "கருவாடு மீனாகாது,கறந்த பால் மடி புகாது" இன்றும் வழக்கில் உள்ள இவரது வார்த்தைகள்.

நாவலர் : எதைப்பற்றி பேசினாலும் அதன் முழு விபரத்தையும் கொடுக்கும் பாங்கு நாவலரின் தமிழ். நிதானமாக ஆனால் அழுத்தமாக இவர் பதிந்த பேச்சுக்கள் இவரை " நாவலர்" ஆக்கியது.

வைகோ : "ஏதென்ஸ் வீதியிலே... என்று ஆரம்பித்து.. பின் கர்ணனின் நட்பைத்தொட்டு,கலைஞரின் தலைமை பற்றி..என்று இவரின் தமிழ், தமிழ் நாட்டையே வசப்படுத்தி இருந்தது ஒரு காலம்.இவரின் ஆவேசப் பேச்சினால் உணர்ச்சிவயப்படாதவர் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.. ஆழ்ந்த இலக்கிய அறிவும்,வரலாற்று செய்திகளையும் இணைத்து இவர் முழங்கினால் மணிக்கணக்கில் கூட்டம் அசையாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.

    மேலும் அன்றைய வட்ட,மாவட்ட, நகர பதவிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சும் கட்டிப் போட்டது.. ஏனெனில் அவர்கள் தங்களின் தலைவர்களை பின்பற்றி பேசியதால்...
ஆனால் இன்று...
   மாணவரணியையோ..இளைஞரணியையோ தங்களின் தமிழால் கட்டிப்போட இன்று அடுத்த கட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை...

ஸ்டாலின் : ஓரளவு பேசினாலும் பெரிய ஈர்ப்பு இல்லை.. வரலாற்று குறிப்புகளில் தவறுகள் தென்படும்

கனிமொழி : இவரின் எழுத்தில் இருக்கும் ஆழம் பேச்சில் இல்லை..

தயாநிதி: இவர் தமிழ் பேசினால் அஜித் ஐஸ் விற்பது போல் இருக்கிறது..

விஜயகாந்த் : தமிள் அல்லது தமில் பேசுகிறார்.

T.ராஜேந்தர் : இவர் தமிழ்.. விடுங்க..உங்களுக்குத்தான் தெரியுமே..

    இப்படி தமிழ் பேச்சு ஆறாகத் தொடங்கி இன்று வாய்க்கால் அளவு கூட இல்லை..

   இன்றும் திருச்சி சிவா,கம்பம் செல்வேந்திரன் போன்ற நல்ல பேச்சாளர்கள் கழகத்தில் இருக்கிறார்கள்.. தமிழச்சி தங்கபாண்டியனின் தமிழும் அவையைக் கட்டிப்போடும் திறன் கொண்டதே... ஆனால் கயல் விழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இவர்களுக்கு கிடைப்பதில்லை.. தலைவர்களும் அடுத்த கட்ட தலைமுறையில் இலக்கிய பிரவாக மேடைப்பேச்சிற்கு முக்கியதுவம் கொடுத்து வாய்ப்பளிக்கவில்லை..
நல்ல தமிழையும் இலக்கியத்தமிழையும்,எதுகைமோனையை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மக்கள் காத்திருக்கிறார்கள்.. ஏனெனில்
"கல் தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி"

    இந்த பதிவுக்கான பின்னூட்டங்களை படிக்க இங்கே கிளிக்குங்கள்.

22 கருத்துக்குத்து:

கும்க்கி on November 23, 2008 at 10:23 AM said...

வந்துட்டங்னா...

கும்க்கி on November 23, 2008 at 10:27 AM said...

சாரி...பதிவு தொடர்பா நோ காமெண்ட்ஸ்............

அத்திரி on November 23, 2008 at 10:28 AM said...

என்றைக்குமே பழைய சோறுன்னா தனி ருசிதான். நல்லா இருக்கு சகா.

அப்புறம் நேத்து நான் எழுதிய பதிவுக்கு பயங்கரமா பின்னுட்டம் வரும்னு சொன்னீங்க. நானும் கொஞ்சம்... பயந்துட்டேன். நல்ல வேளை அந்த பதிவுக்கு மொத்தமே ரெண்டு பின்னூட்டம் தான்.

கார்க்கி on November 23, 2008 at 10:58 AM said...

//கும்க்கி said...
சாரி...பதிவு தொடர்பா நோ காமெண்ட்ஸ்............//

ஏனுங்கண்ணா? சரி விடுங்க, இது மாதிரி தொடர்ந்து போடலாமா வேணாமா? அத பத்தி என நினைக்கறீங்க?

@அத்திரி,

சகா, நீங்க கமெண்ட் மாடரேஷன் வச்சிருக்கிங்க. அதான் யாரும் போடல போலிருக்கு..

அத்திரி on November 23, 2008 at 11:25 AM said...

சகா கமெண்ட் மாடரேஷன் எதுவுமே கிடையாது. யாரும் கண்டுக்கல போல

narsim on November 23, 2008 at 11:29 AM said...

Thanks karkki!!(prob in tamil font saga.. I tried your number it was not reachable.. call me if you can)

முரளிகண்ணன் on November 23, 2008 at 11:38 AM said...

சகா நல்ல வேலை பண்ணுறீங்க.

தொடருங்கள்

கார்க்கி on November 23, 2008 at 1:32 PM said...

// narsim said...
Thanks karkki!!(prob in tamil font saga.. I tried your number it was not reachable.. call me if you சன்)//

வாங்க தல..

//முரளிகண்ணன் said...
சகா நல்ல வேலை பண்ணுறீங்க.

தொடருங்கள்
//

நன்றி முரளி..

வெண்பூ on November 23, 2008 at 1:33 PM said...

நல்ல பதிவு.. ஏற்கனவே படிக்காம இதை மிஸ் பண்ணியிருக்கேன்.. நன்றி..

ஜோதிபாரதி on November 23, 2008 at 2:00 PM said...

நல்ல பதிவு.
ஒரு காலத்தில் அண்ணா,நாவலர்,கலைஞர், கே.ஏ.மதியழகன்,பேராசிரியர் அன்பழகன், என்.வி.நடராசன், சத்தியவாணிமுத்து, கண்ணதாசன் போன்றோர்களின் நா வன்மையால் தான் திராவிட இயக்கமும், தமிழும் தழைக்கத் தொடங்கியது. பாரதிதாசனின் பங்கும் அளப்பரியது. தற்போது அது போன்ற நிலை இல்லாதிருப்பது ஒரு வேதனையான விடயம். இப்போது இருப்பது பத்து டாடா சுமோ இருக்கா, ஆயிரம் பேரைத் திரட்ட முடியுமா? அது முடிந்தால் நீ தலைவர், மந்திரி. இது வெற்றி கொண்டானும், தீப்பொறி ஆறுமுகமும், கஸ்துரி சங்கரும்,வளர்மதியும், இந்திரகுமாரியும், நன்னிலம் நடராஜனும் குப்பை கொட்டும் தலைமுறை. ஆரோக்கியமானதல்ல.
நர்சிம்முக்கும்,கார்க்கிக்கும் பாராட்டுக்கள்!

RAMASUBRAMANIA SHARMA on November 23, 2008 at 2:26 PM said...

ECELLENT COMMENTS WHICH IS POLITICALLY BASED. WHY, THE CURRENT GREAT ORATERS OF TAMILNADU, ARE NEGLECTED IN THIS ARTICLE. FOR eg. PROF. SALAMON PAPPAYYA, Dr K. GNANA SAMBANDAM, Dr T.K. SUBRAMANIAM, Dr RAJA.PROF. NELLAI KANNAN ....and so on.Is it because, they do not speak politics or the writer thinks, they do not know how to speak politics.Either way, it can not be considered as per my understanding.Last but not the least Thiru KUMARI ANANDAN.

RAMASUBRAMANIA SHARMA on November 23, 2008 at 2:27 PM said...

ALREADY WRITTEN...CONTINUE WITH THAT.

கார்க்கி on November 23, 2008 at 2:31 PM said...

//வெண்பூ said...
நல்ல பதிவு.. ஏற்கனவே படிக்காம இதை மிஸ் பண்ணியிருக்கேன்.. நன்றி.//

அதுதான் இதன் நோக்கமே சகா.. நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த இது போன்ற நல்ல ப‌திவுகளை பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்லலாம்.

@ஜோதி பாரதி,

நன்றி நண்பரே.. மிகச் சரியாய் சொன்னீர்கள். வளர்மதியின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அவர்தான் அவர்களின் பிரச்சார பீரங்கியாம். திமுக வும் அப்படித்தான் உள்ளது, ஒரு சிலரைத் தவிர.

கார்க்கி on November 23, 2008 at 2:35 PM said...

@sharma,

do u think they are rendering good speeches nowadays? they have that potential but not utilizing that. this article is particularly about how political parties have changed nowadays in this matter. Thanks for ur comments

ராஜ நடராஜன் on November 23, 2008 at 2:57 PM said...

மேடைத் தமிழை வளர்த்ததில் திராவிட கட்சிகளுக்குப் பெரும் பங்கு உண்டு.ஆனால் மேடைப் பேச்சும் அதனையொட்டிய நடைமுறை செயல்பாடுகளில் முரணாகவும் முக்கியமாக காசு சேர்க்கும் பாதையில் கட்சிகள் சென்றதால் மேடைப் பேச்சின் செல்வாக்கு குறைந்துபோனது.மேடைப் பேச்சுக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் எவ்வளவு தூரம் என்பது மக்களுக்குப் புரிந்து போனது.கூடவே கோசமிட்டவன்,சுவரொட்டியவன்,மேடையிட்டவன்,மேடைக்கு வெளிச்சம் போட்டவன் என தொண்டர்களின் முதுகில் ஏறி சவாரி செய்து உச்சத்துக்குப் போனபின் தலைவனுக்கும் தொண்டனுக்குமான இடைவெளி அதிகரித்துப் போனது.கூடவே மேடைப் பேச்சும் செத்துப் போய்விட்டது.

சீனு on November 23, 2008 at 4:51 PM said...

அது தமிழை வைத்து ஆட்சி பிடித்த காலம். இது தமிழை 'வைத்து' ஆட்சி பிடிக்கும் காலம்.

விலெகா on November 23, 2008 at 6:19 PM said...

:)))நன்றாக இருந்தது.,ஆனால் டீ.ஆர்...........?:))))

கார்க்கி on November 23, 2008 at 9:18 PM said...

@ராஜராஜன்,

அருமையான கருத்துக்கு நன்றி நண்பரே..

//சீனு said...
அது தமிழை வைத்து ஆட்சி பிடித்த காலம். இது தமிழை 'வைத்து' ஆட்சி பிடிக்கும் காலம்.
//

நச்சுனு சொன்னீங்க..

//விலெகா said...
:)))நன்றாக இருந்தது.,ஆனால் டீ.ஆர்...........?:))))
//

என்ன சொல்ல வர்றீங்க சகா? புரியல எனக்கு

அருண் on November 23, 2008 at 11:07 PM said...

ஆவ்! தூக்கம் தான் வருது.

Itsdifferent on November 24, 2008 at 9:23 AM said...

Vaichollil Veeraradi!!!
No other action, only talk.
Which is what most of us have cherished and inherited.
Kalam wants us to to think about 2020, what are we doing? Either living in the past glory or negativity. Can we the Gen X and Gen Y get over these traits, and do something?

rapp on November 24, 2008 at 5:24 PM said...

சூப்பர் பதிவுங்க நர்சிம், அதேமாதிரி அதை தேர்ந்தெடுத்ததுக்கு கார்க்கி. எல்லாத்தையும் தூக்கி சாப்பிடறது, அண்டசராசர நாயகனைப் பத்தி சொல்லிருக்கறது:):):)

கார்க்கி on November 25, 2008 at 12:28 PM said...

வருகைக்கு நன்றி

//rapp said...
சூப்பர் பதிவுங்க நர்சிம், அதேமாதிரி அதை தேர்ந்தெடுத்ததுக்கு கார்க்கி. எல்லாத்தையும் தூக்கி சாப்பிடறது, அண்டசராசர நாயகனைப் பத்தி சொல்லிருக்கறது:):):)//

நன்றி ராப்.. இங்கே ஜே.கே.ஆர பத்தி ஏதுமில்லையே? ஓஓ டீஆரா?

 

all rights reserved to www.karkibava.com