Nov 17, 2008

காக்டெயில்


    

   தமிழ்மணம் சூடான இடுகைகள் என்பதை 20 வாசகர் பரிந்துரை என மாற்றியது நல்லதே. ஆனால், எனக்கு நல்லதல்ல. நான் ஏற்கனவே புலம்பியது போல் எதிர் வாக்குகள் அதிகம் விழுகின்றன. அப்படி என்ன என் மேல் கோவம் எனத் தெரியவில்லை. இன்னமும் நான் அனானிகளுக்கு பெட்டியைத் திறந்தே வைத்திருக்கிறேன். வாக்களிப்பவர்கள் காரணத்தை சொன்னால் மகிழ்ச்சியடைவேன். அது மட்டுமல்லாமல் பரிந்துரையில் 2 வாக்குகள் பெற்ற பதிவெல்லாம் இருக்கும் போது 7 வாக்குகள் வாங்கிய என் பதிவு இல்லை. தமிழ்மணம் கூட எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லையே!!! பார்த்து செய்யுங்கப்பா...

_______________________________________________________

  பதிவர் சந்திப்பில் ரமேஷ் வைத்யா(கிழஞ்செழியன்),பரிசல், நர்சிம், கும்க்கி,முரளிகண்ணன், குட்டிப்பிசாசு, அத்திரி, வெண்பூ, அக்னிபார்வை,Sri ஆகியோருடன் அதிக நேரம் பேச முடிந்தது. இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலருடன் சில நிமிடங்கள் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் என் பெயரை சொன்னவுடன் அடையாளம் கண்டது மட்டுமல்லாமல் "சகா" என்று சொன்னது நினைத்து இன்னமும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

_______________________________________________________

     வாசிக்கும் பழக்கம் இருக்கும் யாரையாவது சந்தித்தால் புத்தகம் கொடுப்பது என் வழக்கம். ஆனால் பதிவர் சந்திப்புக்கு வரும் அத்தனை பேருக்கும் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால் யாருக்கும் கொடுக்க முடியவில்லை. ஆனால் பரிசலுக்காக சுஜாதாவின் "திரைக்கதை எழுதுவது எப்படி" என்ற புத்தகத்தை வாங்கி முதல் பக்கத்தில் "பரிசல்காரன்" என்றெழுதி அதனடியில் இப்படி எழுதி தயாராய் வைத்திருந்தேன்.

"பரிசல்காரன்"

விரைவில்

திரையில்...

நட்புடனும் நம்பிக்கையுடனும்,

சகா கார்க்கி..

   சந்திப்புக்கு மறுநாள் அவரைக் காண அவர் த‌ங்கியிருந்த இடத்திற்கு சென்றால் அவர் ஜாகை மாறியிருந்தார். அலைபேசியபோது அவர் இருந்த இடத்திற்கு வர சொன்னார். என்னுடன் என் நண்பனும்(நானும் ஒருவன்) இருந்தான். மேலும் எனக்கு மாலை ஐந்து மணிக்கே ட்ரெய்ன் என்பதால் அவரை சந்திக்க முடியவில்லை.அடுத்த முறை பார்க்கும்போது தரணும்.

_______________________________________________________

   மதியம் கும்க்கி அழைத்தார். நல்ல வேலை அவர் இருந்த இடத்திற்கு அருகில்தான் நான் சென்று கொண்டிருந்தேன். உடனே அவரைச் சென்று பார்த்துவிட்டு அவரிடம் இருந்து முத்தான மூன்று புத்தகங்களை களவாடினேன். நர்சிம் சொன்னதைப் போல வாசிப்பை சுவாசிப்பாக கொண்டவர் அண்னன் கும்க்கி. என்னிடம் அவர் காட்டிய நெருக்கம் எனக்கு பெருமை தந்தது.

   கும்க்கி மட்டுமல்ல, அனைத்து பதிவர்களுமே நான் நினைத்ததை விட மேலாய் என்னை நடத்தினார்கள். ஒரு மொக்கைப் பதிவராய் தான் என்னை நடத்துவார்கள் என நினைத்துதான் சென்றேன். ஆனால் தலைகள் எல்லாம் என்னிடம் காட்டிய அன்பு... நன்றி என ஒரு வார்த்தையில் சொல்ல முடியவில்லை.ஒவ்வொருவரை பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை. ஒரே பதிவில் எழுதாமல் ஒரு காக்டெயில் கலக்கும்போது ஒரு பதிவர் என‌ எழுதலாம். அடுத்த வாரம் நர்சிம்...

_______________________________________________________

சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

   வன்முறைக்கு எதிரான வன்முறையும் அஹிம்சைதான் என்று சொல்லும் சிலர் கொலை குற்றத்திற்காக வழங்கப்படும் மரண தண்டனையை மட்டும் ஏன் தவறென்கிறார்கள்?

60 கருத்துக்குத்து:

விலெகா on November 17, 2008 at 10:47 PM said...

நம்மதான் 1 ஆம் நம்பர்

விலெகா on November 17, 2008 at 10:48 PM said...

நம்மதான் 2 ஆம் நம்பர்:-))
போட்டிக்கு ஆளில்லைப்பா

விலெகா on November 17, 2008 at 10:51 PM said...

போட்டோ பார்த்தேன் நல்லர்ருக்கு:))

rapp on November 17, 2008 at 10:51 PM said...

me the 4th:):):)

கார்க்கி on November 17, 2008 at 10:53 PM said...

எல்லாம் வீட்டுலதான் அடிக்கறீங்களா? நான் இன்னும் ஆஃபிஸ்ல இருக்கிறேன் :(((((((

Anonymous said...

அடிக்கடி தல அஜீத்தை தாழ்த்தி பேசும் kaaர்கிக்கு... நெகட்டிவ் ஒட்டு நிறைய போடுங்கள்...

rapp on November 17, 2008 at 10:56 PM said...

எனக்கு வாசகர் பரிந்துரை போரடிக்குது, தமிழ்மணம் வழியா போய், பக்கம் திறக்கிரவரை காத்திருக்கிறது அப்புறம் வோட்டு போடணும். டப்பு டுப்புன்னு சூடான இடுகைக்கு பண்ற மாதிரி (பிடிச்ச பதிவுகளை)பத்து தரம் ஒரே பக்கத்தை தொறந்து மூடிட்டு போக முடியலை:):):)

rapp on November 17, 2008 at 10:57 PM said...

கும்க்கி சார்கிட்ட இருந்து வாங்கின புத்தகங்களை திருப்பி கொடுப்பீங்களா மாட்டீங்களா?:):):)

rapp on November 17, 2008 at 10:58 PM said...

எல்லாரப்பத்தியும் ஜாலியான ஒரு பதிவு போடுவீங்கன்னு பார்த்தா, இவ்ளோ இழுக்கறீங்களே

rapp on November 17, 2008 at 11:00 PM said...

கிருஷ்ணா சார் அந்த புக்கை ஏற்கனவே வெச்சிருக்கறதா எழுதிருந்தார்ல.

கார்க்கி on November 17, 2008 at 11:00 PM said...

//rapp said...
எனக்கு வாசகர் பரிந்துரை போரடிக்குது, தமிழ்மணம் வழியா போய், பக்கம் திறக்கிரவரை காத்திருக்கிறது அப்புறம் வோட்டு போடணும். டப்பு டுப்புன்னு சூடான இடுகைக்கு பண்ற மாதிரி (பிடிச்ச பதிவுகளை)பத்து தரம் ஒரே பக்கத்தை தொறந்து மூடிட்டு போக முடியலை:):):)

November 17, 2008 10:56 PM
///

அதுவும் சரிதான் ராப்..

//rapp said...
கும்க்கி சார்கிட்ட இருந்து வாங்கின புத்தகங்களை திருப்பி கொடுப்பீங்களா மாட்டீங்களா?:):):)
//

அசுக்கு புசுக்கு.. அது எனக்குதான்

கார்க்கி on November 17, 2008 at 11:01 PM said...

//rapp said...
எல்லாரப்பத்தியும் ஜாலியான ஒரு பதிவு போடுவீங்கன்னு பார்த்தா, இவ்ளோ இழுக்கறீங்களே
//

ராப் இங்க மணி 11.. இன்னும் ஆனி புடுங்கறேன். எப்படி எழுதறது சொல்லுங்க..

/ rapp said...
கிருஷ்ணா சார் அந்த புக்கை ஏற்கனவே வெச்சிருக்கறதா எழுதிருந்தார்ல.
//

அதுக்கு என்ன செய்ய? அந்த புத்தகம்தான் அவருக்கு சரினு தோணுச்சு.

கார்க்கி on November 17, 2008 at 11:02 PM said...

//Anonymous said...
அடிக்கடி தல அஜீத்தை தாழ்த்தி பேசும் kaaர்கிக்கு... நெகட்டிவ் ஒட்டு நிறைய போடுங்கள்...
//

எதிர்பார்த்தேன்.. நிறைய‌ப் போடுங்கப்பா..

அருண் on November 17, 2008 at 11:03 PM said...

காக்டெயிலில் கிக் கம்மி தான்.

அருண் on November 17, 2008 at 11:04 PM said...

கார் கீ, மாக்டெயில்னு எப்போ பதிவு போடுவீங்க?

அருண் on November 17, 2008 at 11:06 PM said...

//அது மட்டுமல்லாமல் பரிந்துரையில் 2 வாக்குகள் பெற்ற பதிவெல்லாம் இருக்கும் போது 7 வாக்குகள் வாங்கிய என் பதிவு இல்லை.//

இதுல மிகப் பெரிய சதி இருப்பதாக நினைக்கிரேன்.

rapp on November 17, 2008 at 11:06 PM said...

கோச்சுக்காதீங்க, தமிழ்மண கருவிப்பட்டை எங்கங்க ?

அருண் on November 17, 2008 at 11:07 PM said...

//எதிர் வாக்குகள் அதிகம் விழுகின்றன. //

வீரத் தளபதிகிட்ட சொல்லி, ஆட்டோ அனுப்பீடுவோம்.

அருண் on November 17, 2008 at 11:08 PM said...

//ராப் இங்க மணி 11.. இன்னும் ஆனி புடுங்கறேன். எப்படி எழுதறது சொல்லுங்க..//

"ஆனி புடுங்கறது" அப்படின்னா என்னங்க?

அருண் on November 17, 2008 at 11:15 PM said...

//தமிழ்மணம் கூட எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லையே!!! பார்த்து செய்யுங்கப்பா... //

கவலை படாதீங்க கார் கீ, அதுலயும் கள்ள ஓட்டு இருக்கும் போல..

கார்க்கி on November 17, 2008 at 11:15 PM said...

//ஆனி புடுங்கறது" அப்படின்னா என்னங்க?//

அப்படின்னா வேலைனு அர்த்தம் சகா..

//காக்டெயிலில் கிக் கம்மி தான்.//

ஆமாங்க.. வேலைக்கு நடுவே எழுதியது.. அதிகம் யோசிக்கல..

அருண் on November 17, 2008 at 11:16 PM said...

கார் கீ, வூட்டுக்கு போயாச்சா?

கார்க்கி on November 17, 2008 at 11:16 PM said...

// rapp said...
கோச்சுக்காதீங்க, தமிழ்மண கருவிப்பட்டை எங்கங்க ?
//

ஆமாம் ராப்.. போன பதிவ க்ளிக்கனா பட்டை தெரியுது.. இதுல தெரியல..

//கவலை படாதீங்க கார் கீ, அதுலயும் கள்ள ஓட்டு இருக்கும் போல..//

இல்ல சகா.. ஒரு ஐ.பிக்கு ஒரு ஓட்டுதான்

கார்க்கி on November 17, 2008 at 11:17 PM said...

//அருண் said...
கார் கீ, வூட்டுக்கு போயாச்சா?
///

இல்லைங்க.. வேலை முடிச்சிட்டேன்.. ஆனா கேப் 12 மணிக்குதான்..

அருண் on November 17, 2008 at 11:17 PM said...

//அப்படின்னா வேலைனு அர்த்தம் சகா..//
ஆபிஸ்ல வேலயெல்லா செய்வீங்களா?

அருண் on November 17, 2008 at 11:20 PM said...

//இல்ல சகா.. ஒரு ஐ.பிக்கு ஒரு ஓட்டுதான்//

IP Hide பன்னி ஓட்டு போட முடியாதா?

அருண் on November 17, 2008 at 11:22 PM said...

ஓட்டு போட லிங்க் அனுப்புங்க, அப்புறம் பாருங்க மேட்டர.

கார்க்கி on November 17, 2008 at 11:22 PM said...

//ஆபிஸ்ல வேலயெல்லா செய்வீங்களா?//

பல மாசம் உக்கார்ந்து கும்மி அடிச்சிட்டு இது மாதிரி கடைசி நேரத்தில் வேலையும் செய்வதுன்டு சகா..

//IP Hide பன்னி ஓட்டு போட முடியாதா?
//

am not sure

Anonymous said...

கார்க்கி, அஜித் ரசிகர்கள் எதிர் ஓட்டு போட்டால் கவலை வேண்டாம். நாங்க இருவது பேர் இருக்கோம். ஆதரவாக ஓட்டு போடுவோம். அவர்களிடம் பயப்பட வேண்டாம்.

அருண் on November 17, 2008 at 11:29 PM said...

//பல மாசம் உக்கார்ந்து கும்மி அடிச்சிட்டு இது மாதிரி கடைசி நேரத்தில் வேலையும் செய்வதுன்டு சகா..//

கோடிங்கா? இல்ல டெஸ்டிங்கா?

அருண் on November 17, 2008 at 11:32 PM said...

Bye bYe. Good night Kaarkee.

முரளிகண்ணன் on November 18, 2008 at 12:19 AM said...

:-)))))))))))

அக்னி பார்வை on November 18, 2008 at 1:22 AM said...

உங்கலை சந்தித்ததில் மகிழ்ச்சி....

தொப்பியை பத்திரமாக எடுத்து சென்றிர்கள?

அத்திரி on November 18, 2008 at 9:20 AM said...

கும்க்கி கிட்ட இருந்து அந்த புத்தகத்தை!!!!!! தானே எடுத்தீங்க.

சகா என் பதிவில் தமிழமண கருவி பட்டையை காணோம். மறுமொழி பகுதியில் கூட என் பதிவு வரமாட்டேங்குதே. என்னன்னு சொல்ல முடியுமா?. புதிய தமிழ்மண பீட்டாவைத்தான் டவுன் லோடு செய்ய்னுமா?.

ஸ்ரீமதி on November 18, 2008 at 9:45 AM said...

:))

கார்க்கி on November 18, 2008 at 9:48 AM said...

@முரளி,

:)))))))))))

@அக்னிபார்வை,

வாங்க சகா.எனக்கும் மகிழ்ச்சி. தொப்பிய விடுவேனா?

@அத்திரி,

அதே புத்தகம்தான் சகா.. ஒரு நாட்களில் அதுவும் செய்யப்படும் சகா..

கார்க்கி on November 18, 2008 at 9:49 AM said...

//ஸ்ரீமதி said...
:))
//

காலை வணக்கம் ஸ்ரீமதி

ஸ்ரீமதி on November 18, 2008 at 9:57 AM said...

//கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
:))
//

காலை வணக்கம் ஸ்ரீமதி//

காலை வணக்கம் கார்க்கி :))

அருண் on November 18, 2008 at 10:07 AM said...

Hi Hi Hi ...

அருண் on November 18, 2008 at 10:08 AM said...

GM Karkee and Srimathi. வேற யாராவது இருக்கீங்களா?

நானும் ஒருவன் on November 18, 2008 at 10:14 AM said...

நானும் ஆஜர்

வெண்பூ on November 18, 2008 at 10:14 AM said...

உங்கள சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி கார்க்கி.. ஒவ்வொரு பதிவர் சந்திப்புலயும் கண்டிப்பாக ரெண்டு மூணு பேரையாவது புதுசா பாத்துடறோம்.

நல்ல காக்டெய்ல்.. எங்க அஜித் பத்தி ஒண்ணுமே இல்லை!!! :))))

அருண் on November 18, 2008 at 10:16 AM said...

வாங்க நானும் ஒருவன். GM!

அருண் on November 18, 2008 at 10:19 AM said...

இன்னிக்கு என்ன டார்கெட்?

நானும் ஒருவன் on November 18, 2008 at 10:23 AM said...

"அருண் said...
இன்னிக்கு என்ன டார்கெட்?"

டார்கெட்? வேணாம்ப்பா. தினமும் 200 அடிச்சா மதிப்பு இருக்காது.

அருண் on November 18, 2008 at 10:27 AM said...

//தினமும் 200 அடிச்சா மதிப்பு இருக்காது.//
இன்னிக்கி 300 அடிப்போமா?

அருண் on November 18, 2008 at 10:43 AM said...

என்னப்பா இது, யாரையும் காணோம். தனியா புலம்ப வுட்டுடாங்களே..

ஸ்ரீமதி on November 18, 2008 at 10:47 AM said...

hi naanum vandhutten :))

அருண் on November 18, 2008 at 10:49 AM said...

வாங்க ஸ்ரீமதி.

அருண் on November 18, 2008 at 10:50 AM said...

மீ த 50

ஸ்ரீமதி on November 18, 2008 at 10:50 AM said...

Hi Arun :))

narsim on November 18, 2008 at 11:42 AM said...

ஆரம்பிச்சுட்டாங்கனு நினைக்கிறேன் சகா.. நடத்துங்க.. (அந்த க்ளூவ பதிவுல போடவா?? முதல் எழு..த்..து..??)

நல்ல சந்திப்பு.. அடுத்த வாரம் நாந்தானா?? ஹும்ம்ம்..

அந்த கடைசி கேள்வி யோசிக்க வைத்தாலும்.. எந்த குற்றத்திற்கும் மரணம் மட்டுமே தீர்ப்பல்ல..தீர்வல்ல..

கார்க்கி on November 18, 2008 at 11:54 AM said...

நன்றி அருண் மற்றும் ஸ்ரீமதி

//நல்ல காக்டெய்ல்.. எங்க அஜித் பத்தி ஒண்ணுமே இல்லை!!! :))))//

வாங்க வெண்பூ அண்ணா.. ஏற்கன்வே காண்டா அலையறாங்க.. நீங்க வேற ஏத்தி விடறீங்களா?

கார்க்கி on November 18, 2008 at 11:56 AM said...

// narsim said...
ஆரம்பிச்சுட்டாங்கனு நினைக்கிறேன் சகா.. நடத்துங்க.. (அந்த க்ளூவ பதிவுல போடவா?? முதல் எழு..த்..து..??)//


வேணாம் தலலலலலல்லலலலலலலலலல.......

//நல்ல சந்திப்பு.. அடுத்த வாரம் நாந்தானா?? ஹும்ம்ம்..//


ஆமாம்..

//அந்த கடைசி கேள்வி யோசிக்க வைத்தாலும்.. எந்த குற்றத்திற்கும் மரணம் மட்டுமே தீர்ப்பல்ல..தீர்வல்ல..//

நீங்க வன்முறைக்கு எதிரான் வன்முறை அஹிம்சை சொல்றவர் இல்லை. அதனால் மரண தண்டனை தப்புன்னு சொல்லலாம்.. ஆனா அப்படி சொல்றவங்க இப்படி சொன்னா எப்படி? முரணா இருக்கே!!

தாமிரா on November 18, 2008 at 12:54 PM said...

செட்டு சேத்து வெச்சிக்கினு நல்லா ஓட்டு போட்டுக்கினுருக்கீங்களா.. அவ்வ்வ்.. நா இது வரைக்கும் ஒரு ஓட்டு கூட வாங்குனதில்லையே.. நம்ப செட்டு எல்லாரும் எனக்கு ஓட்டு போட்டாலே 20 ஓட்டு வருமே.. அவ்வ்வ்வ்..

SK on November 18, 2008 at 2:49 PM said...

ம்ம்ம் நல்ல இருக்கு.. பதிவர் சந்திப்புல என்ஜாய் பண்ணி இருக்கீங்க..

ஏதோ தமிழ்மணம் பற்றி பிரச்சனை எல்லாரும் சொல்லுறீங்க ஆனா எனக்கு தான் ஒன்னும் புரியலை :-)

வால்பையன் on November 18, 2008 at 5:00 PM said...

காக்டெயில் குப்புன்னு தூக்குது

பரிசல்காரன் on November 18, 2008 at 5:08 PM said...

//rapp said...

கிருஷ்ணா சார் அந்த புக்கை ஏற்கனவே வெச்சிருக்கறதா எழுதிருந்தார்ல.
/

Repeaateeeeeeeeeeey

புதுகை.அப்துல்லா on November 19, 2008 at 12:49 PM said...

நானும் உன்னைய கரெக்ட்டா அடையாளம் கண்டுபிடிச்சேன் பார்த்தியா??

:)))))

கார்க்கி on November 19, 2008 at 8:57 PM said...

நன்றி தாமிரா)அப்படியெல்லாம் இல்ல சகா)

நன்றி எஸ்.கே

நன்றி வால்

நன்றி பரிசல்..

நன்றி அண்ணே

 

all rights reserved to www.karkibava.com