Nov 14, 2008

காதலியோடு எங்கெல்லாம் போயிருக்கிங்க?


   உன்னுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என நான் எப்போதும் விரும்பியதில்லை. உன் விருப்பத்திற்கு இணங்கி ஊருக்கு வெளியே இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றோம்.செவ்வாய் கிழமை என்பதால் நல்ல கூட்டம். பெண்கள் வரிசையில் மெல்ல நீ நகரும்போது உன்னை இடித்துக் கொண்டே வந்தவரிடம் "இப்படித் தள்ளினா நான் எங்க நிக்கறது?" எனக் கேட்டாய். அடுத்த நிமிடம் உள்ளேயிருந்த அம்மன் எழுந்து ஓடிவந்து சொன்னது " உள்ள போய் உட்காரும்மா"

    அடுத்த வாரம் கோயில் வேண்டாமென தாவரவியல் பூங்காவிற்கு சென்றோம். குழந்தைகள் எல்லாம் உன்னைச் சுற்றி சுற்றியே வந்தார்கள். எத‌ற்காக எனத் தெரியாமல் நாமும் தள்ளி தள்ளி சென்றோம். பின் தொடர்ந்த அவர்களை ஏனெனக் கேட்ட போது உன் பின்னாலே வந்த பட்டாம்பூச்சியைக் காட்டினார்கள். அதனிடம் சென்றுக் கேட்டேன். அது என்னைத் திருப்பிக் கேட்டது "இந்த பூ ஏன் நகர்ந்துக் கொண்டே இருக்கிறது?"

    திருவிழாக்கள் நகர வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதால் கண்காட்சிக்கு சென்றோம். ஒரு பொம்மைக் கடைக்கு சென்று அழகாய் ஒரு பொம்மை வேண்டுமெனக் கேட்டேன். எப்படி வேணும் சார் என்ற அவனிடம் உன்னைக் காட்டி இந்த பொம்மை போல அழகாய் என்றேன். வெட்கப்பட்டு ஓடிவிட்டாய். தேடாமலே சொன்னான் அவன் "அவ்ளோ அழகா இல்லை சார்".

   காதலர்களின் சொர்க்கமான கடற்கரைக்கு சென்றோம். நல்லதொரு இரவு நேரமது. இருன்ட வானில் எரிந்து விழுந்த கல்லைப் பார்த்து  நட்சத்திரம் விழுகிறது என்றேன். நட்சத்திரம் விழாது என்றாய். நீ சொன்னால் சரிதான். ஒரு நட்சத்திரத்தைப் பற்றி இன்னொரு நட்சத்திரத்திற்குத்தானே தெரியும் என்றேன். வெட்கப்படத் தொடங்கினாய். என்னைப் பார்த்து கொதித்துக் கொண்டிருந்த கடல் கேட்டது "அப்போ இது நிலா இல்லையா?"

    நீ என்னை காதலிக்கிறாய் எனத் தெரிந்து அழத் தொடங்கியது வானம். அது சத்தம் போட்டு அழுவதைக் கண்டு பயந்து நடுங்கினாய் நீ. "இடின்னா எனக்கு பயம். இன்னைக்கு அதிகமா இடிச்சது இல்ல?" என்றாய். ஆம் மொத்தம் 12 என்றேன். அதைக் கூடவா எண்ணினாய் என்பது போல் பார்த்தாய். இடி வரும்போதெல்லாம் உன் முகத்தை என் தோளில் புதைத்துக் கொண்டாய். அதை எண்ணினேன் என்றேன். ச்சீ.. போடா என வெட்கப்பட்டு கைகளில் முகம் புதைத்தாய். இதற்கு மட்டும் உன் கைகளா என்றேன். என்னைப் பார்க்காமலே சொன்னாய் "உன் தோளில் புதைந்தால் வெட்கம் அதிகாமாகிவிடாதா?"

  நீ ஆசைப்பட்டாய் என்பதற்காக அழகு நிலையம் சென்றோம். அங்கு இருந்த அழகு சாதன‌ங்கள் எல்லாம் சத்தம் போட்டன "அய் அழகு வருது". சத்தம் கேட்டு வெளியே வந்த நீ அருகில் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்தாய். எந்த நகை வேண்டுமோ வாங்கிக் கொள் என்றேன்.எனக்கா இந்த நகை என்றாய். அந்த வைர கம்மல் என் காதோரம் சொன்னது. "அய் எனக்கா இந்த சிலை"

   உன் காதலை நீ சொல்லும்முன் உனக்காக நான் காத்திருந்த பேருந்து நிலையம் சென்றோம்.நீ என்னைக் கடக்கும் ஒரு சில நிமிடத்திற்காக ஒரு மணி நேரம் நான் காத்திருந்தக் கதையை கேட்டாய். தலை சாய்த்து, விழி கோணி, உதடு சுழித்து "லூஸாப்பா நீ" என்றாய். ஒரு நாள் வாங்கும் சம்பளத்திற்காக மாதம் முழுவதும் வேலை செய்வதில்லையா என்றேன்.  நீ கேட்ட அழகைப் பார்த்து அதற்காகவே இன்னும் பல லூஸு வேலைகளை செய்யலாம் என முடிவு செய்தேன்.

122 கருத்துக்குத்து:

Anonymous said...

/"லூஸாப்பா நீ"/

கண்டுபிடிச்சிட்டாங்கப்பா...

siva

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:34 AM said...

Me da 2nd?? :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:34 AM said...

ஹை ஜாலி நான் தான் :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:35 AM said...

//இடித்துக் கொண்டே வந்தவரிடம் "இப்படித் தள்ளினா நான் எங்க நிக்கறது?" எனக் கேட்டாய். அடுத்த நிமிடம் உள்ளேயிருந்த அம்மன் எழுந்து ஓடிவந்து சொன்னது " உள்ள போய் உட்காரும்மா//

இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிட்டேன் :)))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:36 AM said...

//அது என்னைத் திருப்பிக் கேட்டது "இந்த பூ ஏன் நகர்ந்துக் கொண்டே இருக்கிறது?"//

அச்சச்சோ முடியல :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:37 AM said...

//தேடாமலே சொன்னான் அவன் "அவ்ளோ அழகா இல்லை சார்". //

அவனுமா?? அச்சோ உங்கள அடக்க யாருமே இல்லையா?? ;)))))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:38 AM said...

//நீ என்னை காதலிக்கிறாய் எனத் தெரிந்து அழத் தொடங்கியது வானம். அது சத்தம் போட்டு அழுவதைக் கண்டு பயந்து நடுங்கினாய் நீ. "இடின்னா எனக்கு பயம். இன்னைக்கு அதிகமா இடிச்சது இல்ல?" என்றாய். ஆம் மொத்தம் 12 என்றேன். அதைக் கூடவா எண்ணினாய் என்பது போல் பார்த்தாய். இடி வரும்போதெல்லாம் உன் முகத்தை என் தோளில் புதைத்துக் கொண்டாய். அதை எண்ணினேன் என்றேன். ச்சீ.. போடா என வெட்கப்பட்டு கைகளில் முகம் புதைத்தாய். இதற்கு மட்டும் உன் கைகளா என்றேன். என்னைப் பார்க்காமலே சொன்னாய் "உன் தோளில் புதைந்தால் வெட்கம் அதிகாமாகிவிடாதா?" //

So cute :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:39 AM said...

//நீ ஆசைப்பட்டாய் என்பதற்காக அழகு நிலையம் சென்றோம். //

எந்த அழகு நிலையத்துக்குள்ள உங்கள விட்டாங்க?? ;)) சும்மா தெரிஞ்சிக்க... :))

கார்க்கி on November 14, 2008 at 9:41 AM said...

//"லூஸாப்பா நீ"/

கண்டுபிடிச்சிட்டாங்கப்பா...

சிவ//

வாங்க சிவா.. லூஸாக்கிடுவாங்களே நம்மள,,

//ஸ்ரீமதி said...
Me da 2nd?? :))//

நீங்களேதான்

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:41 AM said...

// நீ கேட்ட அழகைப் பார்த்து அதற்காகவே இன்னும் பல லூஸு வேலைகளை செய்யலாம் என முடிவு செய்தேன்.//

அத்தான் இப்ப நீங்க செஞ்சிகிட்டு இருக்கீங்கன்னு நான் சொல்லமாட்டேன்ப்பா.. ;)))

Just kidding.. no hard feelings :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:42 AM said...

ஹை நாந்தான் பத்து :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:42 AM said...

//"காதலியோடு எங்கெல்லாம் போயிருக்கிங்க?"//

:)))))))நீங்க போன இடத்துக்கெல்லாம் காதலியோட போனா இப்படி தான் பேசனும்ன்னு சொல்லித்தரீங்களா?? ;)))

கார்க்கி on November 14, 2008 at 9:43 AM said...

//இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிட்டேன் :)))//

பூசாரி கூட நம்மள அப்படி சொல்லலைனு உங்களுக்கு பொறாமை.

//அவனுமா?? அச்சோ உங்கள அடக்க யாருமே இல்லையா?? ;)))))//

அவ இருக்காளே!!!

//So cute :))//

நன்றி..

//எந்த அழகு நிலையத்துக்குள்ள உங்கள விட்டாங்க?? ;)) சும்மா தெரிஞ்சிக்க... :))

//

ஆமா எனக்கெதுக்கு அழகு நிலையம். அங்க போய்த்தான் அழகானுமா நான்?

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:44 AM said...

கார்க்கி இங்க தான் இருக்கீங்களா?? அப்ப ஓகே.. :))

கார்க்கி on November 14, 2008 at 9:44 AM said...

//Just kidding.. no hard feelings :))//

ஹிஹிஹிஹி.. எங்களுக்கெல்லாம் எது சொன்னாலும் உரைக்காது..

//)))))))நீங்க போன இடத்துக்கெல்லாம் காதலியோட போனா இப்படி தான் பேசனும்ன்னு சொல்லித்தரீங்களா?? ;)))//

நான் போனப்ப இப்படி நடந்ததுனு சொல்றேன்

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:46 AM said...

//கார்க்கி said...
//இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிட்டேன் :)))//

பூசாரி கூட நம்மள அப்படி சொல்லலைனு உங்களுக்கு பொறாமை.//

நான் என்கிட்டே சொன்னவங்கள எல்லாம் கணக்குல எடுத்துகறது இல்லன்னு தெரிஞ்சி தானே நீங்க இப்படி சொல்றீங்க?? நோ ப்ராப்ளம்.. ;)))))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:47 AM said...

////எந்த அழகு நிலையத்துக்குள்ள உங்கள விட்டாங்க?? ;)) சும்மா தெரிஞ்சிக்க... :))

//

ஆமா எனக்கெதுக்கு அழகு நிலையம். அங்க போய்த்தான் அழகானுமா நான்?//

அய்யய்யோ நான் அப்படி சொல்லலீங்கோ.. பெண்கள் அழகு நிலையத்துல ஆண்கள் நுழைய தடாங்கோ.. அதான் கேட்டேங்கோ.. :)))))))

கார்க்கி on November 14, 2008 at 9:47 AM said...

//நான் என்கிட்டே சொன்னவங்கள எல்லாம் கணக்குல எடுத்துகறது இல்லன்னு தெரிஞ்சி தானே நீங்க இப்படி சொல்றீங்க?? நோ ப்ராப்ளம்.. ;)))))//

நல்லா சமாளிக்கறீங்க. அலுவலகமா வீடா?

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:48 AM said...

// கார்க்கி said...
//Just kidding.. no hard feelings :))//

ஹிஹிஹிஹி.. எங்களுக்கெல்லாம் எது சொன்னாலும் உரைக்காது..

//)))))))நீங்க போன இடத்துக்கெல்லாம் காதலியோட போனா இப்படி தான் பேசனும்ன்னு சொல்லித்தரீங்களா?? ;)))//

நான் போனப்ப இப்படி நடந்ததுனு சொல்றேன்//

ஸ்ரீநிதி கூட போனபோது இதல்லாம் நடந்ததா??

கார்க்கி on November 14, 2008 at 9:49 AM said...

//அய்யய்யோ நான் அப்படி சொல்லலீங்கோ.. பெண்கள் அழகு நிலையத்துல ஆண்கள் நுழைய தடாங்கோ.. அதான் கேட்டேங்கோ.. :)))))))//

இப்போ எல்லாம் நிறைய parlaour unisex தான். நான் பெண்கள் அழகு நிலையம்னு சொல்லவே இல்லையே!! :))))))))

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:49 AM said...

// கார்க்கி said...
//நான் என்கிட்டே சொன்னவங்கள எல்லாம் கணக்குல எடுத்துகறது இல்லன்னு தெரிஞ்சி தானே நீங்க இப்படி சொல்றீங்க?? நோ ப்ராப்ளம்.. ;)))))//

நல்லா சமாளிக்கறீங்க. அலுவலகமா வீடா?//

இப்ப இருக்கற இடம் தானே கேட்கறீங்க?? நான் அலுவலகத்துல.. நீங்க வீடா??

கார்க்கி on November 14, 2008 at 9:50 AM said...

//ஸ்ரீநிதி கூட போனபோது இதல்லாம் நடந்ததா??

//

நீங்க வேற வெந்தப் புண்ணுல ராக்கெட் விடாதீங்க. என் ஆளுதான் எஸ்கேப் ஆயிட்டா. இவ்ங்களாவது ஆதரவு தருவாங்கனு பார்த்தா இவங்களும் எஸ்கேப்.. என் நேரம்

கார்க்கி on November 14, 2008 at 9:51 AM said...

//இப்ப இருக்கற இடம் தானே கேட்கறீங்க?? நான் அலுவலகத்துல.. நீங்க வீடா??
//

நோ நோ. கும்மிக்காகும் செல்வெல்லாம் என் CTC ல அடக்கம். அதனால் அலுவலகத்தில்தான் கும்மி

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:52 AM said...

//கார்க்கி said...
//அய்யய்யோ நான் அப்படி சொல்லலீங்கோ.. பெண்கள் அழகு நிலையத்துல ஆண்கள் நுழைய தடாங்கோ.. அதான் கேட்டேங்கோ.. :)))))))//

இப்போ எல்லாம் நிறைய parlaour unisex தான். நான் பெண்கள் அழகு நிலையம்னு சொல்லவே இல்லையே!! :))))))))//

அய்யய்ய அவளை ஏன் அங்கெல்லாம் கூட்டிட்டு போறீங்க?? லவ்வர கூட்டிட்டு போக வேற நல்ல இடமா இல்ல சென்னைல இல்ல ஹைதராபாத்ல??

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:53 AM said...

//கார்க்கி said...
//ஸ்ரீநிதி கூட போனபோது இதல்லாம் நடந்ததா??

//

நீங்க வேற வெந்தப் புண்ணுல ராக்கெட் விடாதீங்க. என் ஆளுதான் எஸ்கேப் ஆயிட்டா. இவ்ங்களாவது ஆதரவு தருவாங்கனு பார்த்தா இவங்களும் எஸ்கேப்.. என் நேரம்//

ஓஓ சோ ஆள் தேடிங் ப்ரோசெச்ஸ் அண்டர்கோயிங்கா?? ;))

கார்க்கி on November 14, 2008 at 9:54 AM said...

//அய்யய்ய அவளை ஏன் அங்கெல்லாம் கூட்டிட்டு போறீங்க?? லவ்வர கூட்டிட்டு போக வேற நல்ல இடமா இல்ல சென்னைல இல்ல ஹைதராபாத்ல??
//

என்னங்க நீங்க பதிவ ஒழுங்கா படிக்க மாட்டிங்களா?

/நீ ஆசைப்பட்டாய் என்பதற்காக அழகு நிலையம் சென்றோம்//

என் ஆளாவே இருந்தாலும் பொண்ணுதானே. அந்த ஆசை இல்லாம இருக்குமா?

(அப்புறம் இது எல்லாம் கற்பனைனு தெரியுமில்ல. பின் ஏன் இந்த டவுட்?)

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:55 AM said...

//கார்க்கி said...
//இப்ப இருக்கற இடம் தானே கேட்கறீங்க?? நான் அலுவலகத்துல.. நீங்க வீடா??
//

நோ நோ. கும்மிக்காகும் செல்வெல்லாம் என் CTC ல அடக்கம். அதனால் அலுவலகத்தில்தான் கும்மி//

இல்ல இன்னைக்கு ஏதோ வீட்டுக்கு போறதா நேத்து பேச்சு அடிப்பட்டதே அதான் கேட்டேன் :))

கார்க்கி on November 14, 2008 at 9:56 AM said...

//
இல்ல இன்னைக்கு ஏதோ வீட்டுக்கு போறதா நேத்து பேச்சு அடிப்பட்டதே அதான் கேட்டேன் :))

//

மாலை 7 மணிக்குதான் ட்ரெய்ன்.

//ஓஓ சோ ஆள் தேடிங் ப்ரோசெச்ஸ் அண்டர்கோயிங்கா?? ;))//

தேடல் இல்ல. அதுவா வந்தா கன்சிடர் பண்ணுவேன்.. (ரொம்ப ஓவரா இருக்கோ)

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:57 AM said...

//கார்க்கி said...
//அய்யய்ய அவளை ஏன் அங்கெல்லாம் கூட்டிட்டு போறீங்க?? லவ்வர கூட்டிட்டு போக வேற நல்ல இடமா இல்ல சென்னைல இல்ல ஹைதராபாத்ல??
//

என்னங்க நீங்க பதிவ ஒழுங்கா படிக்க மாட்டிங்களா?

/நீ ஆசைப்பட்டாய் என்பதற்காக அழகு நிலையம் சென்றோம்//

என் ஆளாவே இருந்தாலும் பொண்ணுதானே. அந்த ஆசை இல்லாம இருக்குமா?

(அப்புறம் இது எல்லாம் கற்பனைனு தெரியுமில்ல. பின் ஏன் இந்த டவுட்?)//

ஓஓ ஓகே ஓகே அவ ஆசைப்பட்டாளா?? ம்ம்ம் அப்ப ஓகே.. பதிவ படிச்சேன் பட் உங்கள கிண்டல் பண்றதுக்காக அப்படி கேட்டேன்.. :)) என்னது இதெல்லாம் கற்பனையா?? :P

ஸ்ரீமதி on November 14, 2008 at 9:57 AM said...

//கார்க்கி said...
//
இல்ல இன்னைக்கு ஏதோ வீட்டுக்கு போறதா நேத்து பேச்சு அடிப்பட்டதே அதான் கேட்டேன் :))

//

மாலை 7 மணிக்குதான் ட்ரெய்ன்.//

Oh ok ok :))

////ஓஓ சோ ஆள் தேடிங் ப்ரோசெச்ஸ் அண்டர்கோயிங்கா?? ;))//

தேடல் இல்ல. அதுவா வந்தா கன்சிடர் பண்ணுவேன்.. (ரொம்ப ஓவரா இருக்கோ)//

ரொம்பவே ;))))

கார்க்கி on November 14, 2008 at 9:58 AM said...

//ம்ம்ம் அப்ப ஓகே.. பதிவ படிச்சேன் பட் உங்கள கிண்டல் பண்றதுக்காக அப்படி கேட்டேன்.. :))
//

நல்லா பண்ணிங்க கின்டல்..


// என்னது இதெல்லாம் கற்பனையா?? :ப்//

இதுவும் கின்டலா?

கார்க்கி on November 14, 2008 at 9:59 AM said...

//ரொம்பவே ;))))//

கிகிகிகி..

நீங்களும் சிங்கார சென்னைதானா?

இரவு கவி on November 14, 2008 at 10:01 AM said...

really superb !!!

கார்க்கி on November 14, 2008 at 10:02 AM said...

//இரவு கவி said...
really superb !!!//

வாங்க சகா.. பகல்ல வந்துருக்கீங்க :))))))))

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:14 AM said...

//கார்க்கி said...
//ம்ம்ம் அப்ப ஓகே.. பதிவ படிச்சேன் பட் உங்கள கிண்டல் பண்றதுக்காக அப்படி கேட்டேன்.. :))
//

நல்லா பண்ணிங்க கின்டல்..


// என்னது இதெல்லாம் கற்பனையா?? :ப்//

இதுவும் கின்டலா?//

இல்ல நிஜம்

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:15 AM said...

//கார்க்கி said...
//ரொம்பவே ;))))//

கிகிகிகி..

நீங்களும் சிங்கார சென்னைதானா?//

ஆமா.... நீங்க??

கார்க்கி on November 14, 2008 at 10:16 AM said...

//இல்ல நிஜம்//

எல்லாம் கற்பனைதாங்க..

//நீங்களும் சிங்கார சென்னைதானா?//

ஆமா.... நீங்க??//

சென்னைதான்.(வேளச்சேரி) இப்போது வேலை நிமித்தம் குப்பை கொட்டுவது ஹைதராபாத்தில்..

அருண் on November 14, 2008 at 10:17 AM said...

அதுக்குள்ள 34 comments ஆச்சா? இன்னிக்கும் 100 தானா?

சரவணகுமரன் on November 14, 2008 at 10:21 AM said...

கலக்கல்

அருண் on November 14, 2008 at 10:22 AM said...

//அடுத்த வாரம் கோயில் வேண்டாமென தாவரவியல் பூங்காவிற்கு சென்றோம். //

தாவரங்களை ஆய்வு செய்யவா?

கார்க்கி on November 14, 2008 at 10:23 AM said...

//அருண் said...
அதுக்குள்ள 34 comments ஆச்சா? இன்னிக்கும் 100 தானா?
//

காலை வனக்கம் அருண். வந்து ஆரம்பிச்சிட்டாங்க. மொதல்ல போய் பதிவ படிச்சிட்டு வாங்க..

// சரவணகுமரன் said...
கலக்கல்//

நன்றி சரவணகுமாரன்

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:25 AM said...

//கார்க்கி said...
//இல்ல நிஜம்//

எல்லாம் கற்பனைதாங்க..

//நீங்களும் சிங்கார சென்னைதானா?//

ஆமா.... நீங்க??//

சென்னைதான்.(வேளச்சேரி) இப்போது வேலை நிமித்தம் குப்பை கொட்டுவது ஹைதராபாத்தில்..//

ஓஓ ஓகே ஹைத்ராபாத்ல எங்க?? ஹைடெக் சிட்டியா??

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:26 AM said...

//அருண் said...
//அடுத்த வாரம் கோயில் வேண்டாமென தாவரவியல் பூங்காவிற்கு சென்றோம். //

தாவரங்களை ஆய்வு செய்யவா?//

இல்ல தண்ணி ஊத்த :))

அருண் on November 14, 2008 at 10:26 AM said...

//குழந்தைகள் எல்லாம் உன்னைச் சுற்றி சுற்றியே வந்தார்கள். //

பஞ்சு மிட்டாய் இல்ல ice cream விற்பனை செஞ்சீங்களா?

அருண் on November 14, 2008 at 10:29 AM said...

//அதனிடம் சென்றுக் கேட்டேன். //

பட்டாம்பூச்சியோட தமிழ்ல பேசினிங்களா? இல்ல, தெலுங்கா?

கார்க்கி on November 14, 2008 at 10:33 AM said...

//ஓஓ ஓகே ஹைத்ராபாத்ல எங்க?? ஹைடெக் சிட்டியா??//

அதேதான்..

//பஞ்சு மிட்டாய் இல்ல ice cream விற்பனை செஞ்சீங்களா?//

:(((( நான் கோச்சுக்கிட்டேன்

//பட்டாம்பூச்சியோட தமிழ்ல பேசினிங்களா? இல்ல, தெலுங்கா?

//

அதுங்க மொழி எனக்குத் தெரியுமே..

அருண் on November 14, 2008 at 10:33 AM said...

நீங்க எழுதினதெல்லாம் உண்மையா? ரொம்ப உருகி எழுதி இருக்கீங்க.

அருண் on November 14, 2008 at 10:35 AM said...

நாளைக்கு சென்னை போரதல, loverக்கு Ice வைக்கரீங்களா?

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:36 AM said...

//கார்க்கி said...
//ஓஓ ஓகே ஹைத்ராபாத்ல எங்க?? ஹைடெக் சிட்டியா??//

அதேதான்..//

ஓஓ வெரி குட் :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:37 AM said...

//கார்க்கி said...
//பஞ்சு மிட்டாய் இல்ல ice cream விற்பனை செஞ்சீங்களா?//

:(((( நான் கோச்சுக்கிட்டேன்//

அச்சச்சோ இதுக்கு போயி கோவிச்சுப்பாங்களா?? கூல்.. :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:38 AM said...

ஹை நாந்தான் 50 :))

அருண் on November 14, 2008 at 10:39 AM said...

//ஹைடெக் சிட்டியா??//

அதேதான்..//

மாதவ்பூரா? எந்த company? Oracle??

கார்க்கி on November 14, 2008 at 10:40 AM said...

//நாளைக்கு சென்னை போரதல, loverக்கு Ice வைக்கரீங்களா?//

அட எல்லாம் கற்பனைங்க.. நான் சிங்கிள்... சிங்கம் சிங்கிளாத்தான் இருக்குனு சொல்லலாம்

/அச்சச்சோ இதுக்கு போயி கோவிச்சுப்பாங்களா?? கூல்.. :))//

ஓக்கே..

/ஸ்ரீமதி said...
ஹை நாந்தான் 50 :))

//

நன்றியும் வாழ்த்துகளும்

அருண் on November 14, 2008 at 10:41 AM said...

Congrats ஸ்ரீமதி. நூறடிக்க வாழ்த்துக்கள்.

narsim on November 14, 2008 at 10:41 AM said...

ஆஜர் சகா..

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:42 AM said...

ஓஓ தேங்க்ஸ் கார்க்கி & அருண் :))

கார்க்கி on November 14, 2008 at 10:43 AM said...

narsim said...
ஆஜர் சகா..//

பதிவ பத்தி??????

//மாதவ்பூரா? எந்த company? Oracலெ??//

ஆமாங்க.. cyber towers, oracle corparation

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:44 AM said...

Cyber towers-ah?? Nearby Wipro right??

கார்க்கி on November 14, 2008 at 10:47 AM said...

// senthil said...
u are copied from tabu sankar's "devathaikalin devathia". u should mention. but நொட்//

யாருங்க இது? எந்த அவ்ரிங்க அதுல இருக்கு?

கார்க்கி on November 14, 2008 at 10:48 AM said...

// ஸ்ரீமதி said...
Cyber towers-ah?? Nearby Wipro rigஹ்ட்??//

அதேதாங்க..

நானும் ஒருவன் on November 14, 2008 at 10:49 AM said...

நானும் வ்ந்துட்டேன். கலக்கல் மச்சி

நானும் ஒருவன் on November 14, 2008 at 10:50 AM said...

"சாய்த்து, விழி கோணி, உதடு சுழித்து "லூஸாப்பா நீ" "

பல்பு வாங்கியத கூட அழகா சொல்றாம்ப்பா.

srinithi said...

உங்கள விட்டு நான் எங்கே போவேன்? வந்துட்டேன்

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:52 AM said...

வெல்கம் நானும் ஒருவன் :))

srinithi said...

i am always with you karki.i love you

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:53 AM said...

ஹை ஸ்ரீநிதி இஸ் ஆல்சோ ஹியர் :)))

அருண் on November 14, 2008 at 10:53 AM said...

வாங்க நானும் ஒருவன்.

நானும் ஒருவன் on November 14, 2008 at 10:55 AM said...

"ஸ்ரீமதி said...
வெல்கம் நானும் ஒருவன் :))
"

நன்றிங்க. பிரகாஷ் காணோம். தினமும் இங்கேயே கும்மியடிச்சா வர்றவங்க கடுப்பாகி ஓடிடப் போறாங்க..

அருண் on November 14, 2008 at 10:55 AM said...

//நீ என்னை காதலிக்கிறாய் எனத் தெரிந்து அழத் தொடங்கியது வானம். //

அய்யோ பாவம் அந்த பொண்ணு அப்படின்னு feel பண்ணிருக்கும்.

srinithi said...

ஸ்ரீமதி said...
ஹை ஸ்ரீநிதி இஸ் ஆல்சோ ஹியர் :)))


நீங்கதான் கார்க்கிட்ட சொல்லி புரிய வைக்கணும் அக்கா

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:57 AM said...

//srinithi said...
ஸ்ரீமதி said...
ஹை ஸ்ரீநிதி இஸ் ஆல்சோ ஹியர் :)))


நீங்கதான் கார்க்கிட்ட சொல்லி புரிய வைக்கணும் அக்கா//

ம்ம்ம் சொல்றேன்.. ஆனா, என்ன சொல்லணும்?? :))

அருண் on November 14, 2008 at 10:58 AM said...

//அங்கு இருந்த அழகு சாதன‌ங்கள் எல்லாம் சத்தம் போட்டன "அய் அழகு வருது".//

மெய்யாலுமா?

ஸ்ரீமதி on November 14, 2008 at 10:58 AM said...

//அருண் said...
//நீ என்னை காதலிக்கிறாய் எனத் தெரிந்து அழத் தொடங்கியது வானம். //

அய்யோ பாவம் அந்த பொண்ணு அப்படின்னு feel பண்ணிருக்கும்.//

நானும் யோசிச்சேன்.. பட் ரொம்ப ஓட்டக்கூடாதுன்னு விட்டுட்டேன்.. :))))))))

srinithi said...

ம்ம்ம் சொல்றேன்.. ஆனா, என்ன சொல்லணும்?? :))

அதை தனியா சொல்றேன்.

அருண் on November 14, 2008 at 11:02 AM said...

//நானும் யோசிச்சேன்.. பட் ரொம்ப ஓட்டக்கூடாதுன்னு விட்டுட்டேன்.. :))))))))//

ஓட்டரதுக்கு நேரம் காலம் எல்லாம் பாக்கக்கூடாது.

அருண் on November 14, 2008 at 11:03 AM said...

Limit பாக்காம ஓட்டுங்க. கார் கீ, எதயும் தாங்குவார். இல்லயா கார் கீ?

நானும் ஒருவன் on November 14, 2008 at 11:05 AM said...

அருண் உங்க ஆஃபிஸ்ல எனக்கு ஒரு வேலை வாங்கித் தாங்களேன். இங்க ஓட வுட்டு அடிக்கிறாங்க.

ஸ்ரீமதி on November 14, 2008 at 11:06 AM said...

//srinithi said...
ம்ம்ம் சொல்றேன்.. ஆனா, என்ன சொல்லணும்?? :))

அதை தனியா சொல்றேன்.//

லூஸாப்பா நீ?????????? நீ தனியா சொல்லிகிட்டா... எனக்கெப்படி கேட்கும்??

ஸ்ரீமதி on November 14, 2008 at 11:07 AM said...

//அருண் said...
//நானும் யோசிச்சேன்.. பட் ரொம்ப ஓட்டக்கூடாதுன்னு விட்டுட்டேன்.. :))))))))//

ஓட்டரதுக்கு நேரம் காலம் எல்லாம் பாக்கக்கூடாது.

November 14, 2008 11:02 AM


அருண் said...
Limit பாக்காம ஓட்டுங்க. கார் கீ, எதயும் தாங்குவார். இல்லயா கார் கீ?
//

அச்சோ பாவம் அவரு :))

அருண் on November 14, 2008 at 11:07 AM said...

//அருண் உங்க ஆஃபிஸ்ல எனக்கு ஒரு வேலை வாங்கித் தாங்களேன். இங்க ஓட வுட்டு அடிக்கிறாங்க./

வாங்க வாங்க. Resume அனுப்புங்க. என்னுடைய teamல vacancy இருக்கு.

srinithi said...

லூஸாப்பா நீ?????????? நீ தனியா சொல்லிகிட்டா... எனக்கெப்படி கேட்கும்??


நீங்க சொன்னா கார்க்கி ரசிக்க மாட்டாரு. நான் "லூஸாப்பா நீ" கேட்டா கவிதை எழுதவாரு. நீங்க ஹெல் பண்ன வேண்டாம். நானே பார்த்துக்கறேன்

அருண் on November 14, 2008 at 11:12 AM said...

//அச்சோ பாவம் அவரு :))//

பொது வாழ்வுக்கு வந்தா இதெல்லா சகஜம். =))

ஸ்ரீமதி on November 14, 2008 at 11:14 AM said...

//srinithi said...
லூஸாப்பா நீ?????????? நீ தனியா சொல்லிகிட்டா... எனக்கெப்படி கேட்கும்??


நீங்க சொன்னா கார்க்கி ரசிக்க மாட்டாரு. நான் "லூஸாப்பா நீ" கேட்டா கவிதை எழுதவாரு. நீங்க ஹெல் பண்ன வேண்டாம். நானே பார்த்துக்கறேன்//


ஹலோ அத நான் உன்ன கிண்டல் பண்றதுக்காக சொன்னது.. கார்க்கி அண்ணா ரசிக்க இல்ல.. :P

அருண் on November 14, 2008 at 11:14 AM said...

பாவி கார் கீயின் ஆவி, கார் கீ எங்கப்பா?

ஸ்ரீமதி on November 14, 2008 at 11:15 AM said...

// அருண் said...
//அச்சோ பாவம் அவரு :))//

பொது வாழ்வுக்கு வந்தா இதெல்லா சகஜம். =))//

:))))))

srinithi said...

ஹலோ அத நான் உன்ன கிண்டல் பண்றதுக்காக சொன்னது.. கார்க்கி அண்ணா ரசிக்க இல்ல.. :P

கார்க்கி அண்ணாஇப்பதான் எனக்கு சந்தோஷம்.

Anonymous said...

லூஸாப்பா நீ
கிகிகிகி

ஸ்ரீமதி on November 14, 2008 at 11:28 AM said...

//srinithi said...
ஹலோ அத நான் உன்ன கிண்டல் பண்றதுக்காக சொன்னது.. கார்க்கி அண்ணா ரசிக்க இல்ல.. :P

கார்க்கி அண்ணா

இப்பதான் எனக்கு சந்தோஷம்.//

:))))))

அருண் on November 14, 2008 at 11:50 AM said...

யாராவது இருக்குரீங்களா?

அருண் on November 14, 2008 at 11:59 AM said...

ஓகே.டாட்டா பைபை! ஊருக்கு போகனும்.

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:00 PM said...

//அருண் said...
யாராவது இருக்குரீங்களா?//

Naan irukken.. But where is Naanum oruvan & Karki anna??

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:03 PM said...

//அருண் said...
ஓகே.டாட்டா பைபை! ஊருக்கு போகனும்.//

Ok bye Arun.. Have a nice weekend.. :)))

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:04 PM said...

நான் தான் 94 :))

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:05 PM said...

நான் தான் 95 :))

வால்பையன் on November 14, 2008 at 12:06 PM said...

"லூஸாப்பா நீ"

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:06 PM said...

நான் தான் 96 :))

வால்பையன் on November 14, 2008 at 12:06 PM said...

நல்லா அனுபவச்சி எழுதுரிங்க

வால்பையன் on November 14, 2008 at 12:07 PM said...

அதிக காதலும் சலித்து விடும் போலிருக்குது

வால்பையன் on November 14, 2008 at 12:07 PM said...

100

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:07 PM said...

நான் தான் 100 :))

வால்பையன் on November 14, 2008 at 12:08 PM said...

சதமடிக்க வாய்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:09 PM said...

:(( வால் அண்ணா தான் 100

ஸ்ரீமதி on November 14, 2008 at 12:10 PM said...

//வால்பையன் said...
சதமடிக்க வாய்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லா இருங்க அண்ணா :))

கார்க்கி on November 14, 2008 at 12:18 PM said...

//வால்பையன் said...
அதிக காதலும் சலித்து விடும் போலிருக்குது
//

ஆமாம் சகா.. நண்பர் ஒருவரும் தபூ சங்கரின் வரிகளும் இந்தப் பதிவில் இருப்பதாக நினைவூட்டினார். ஒரு வேளை நான் எப்போதோ படித்ததா எனத் தெரியவில்லை. இனி சில மாதம் காதல் பதிவுக்கு குட்பை சொல்லலாம் என நினைக்கிறேன்.

கார்க்கி on November 14, 2008 at 12:20 PM said...

//ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
சதமடிக்க வாய்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லா இருங்க அண்ணா :))
//

நன்றி வால் மற்றும்ஸ் ரீமதி . காலைல இருந்து எழுதறீங்க. ஆனா கடைசி நேரத்தில் அவரு அடிச்சிட்டாரு. இப்படித்தான் காதலும். எப்போ எங்கே வரும்னு தெரியாது. (போதும்ட நிறுத்துனு சொல்றீங்களா?

ஸ்ரீமதி on November 14, 2008 at 2:48 PM said...

//கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
சதமடிக்க வாய்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லா இருங்க அண்ணா :))
//

நன்றி வால் மற்றும்ஸ் ரீமதி . காலைல இருந்து எழுதறீங்க. ஆனா கடைசி நேரத்தில் அவரு அடிச்சிட்டாரு. இப்படித்தான் காதலும். எப்போ எங்கே வரும்னு தெரியாது. (போதும்ட நிறுத்துனு சொல்றீங்களா?//

:)))))))ம்ஹும் அப்படியா??;))

ஸ்ரீமதி on November 14, 2008 at 2:49 PM said...

//கார்க்கி said...
//ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
சதமடிக்க வாய்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்லா இருங்க அண்ணா :))
//

நன்றி வால் மற்றும்ஸ் ரீமதி .//

அப்பறம் நான் ஸ்ரீமதி :((

dharshini on November 14, 2008 at 4:20 PM said...

தலைப்பை மட்டும் "காதலியோடு இங்கெல்லாம் போயிருகேங்க" அப்படின்னு வச்சிருக்கணும்
........................
பரவால்ல, நெக்ஸ்ட்டைம் கரைக்டா போட்ருங்க... ...........
கற்பனை வளம் ரொம்ப ஜாஸ்திங்க உங்களுக்கு! நம்பீடோம்ல்ல!
:)

கும்க்கி on November 14, 2008 at 5:17 PM said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
அப்பாடா.....தப்பிச்சோம்டா சாமி.
காலைலயே தலைய உட்டு பாத்து...வெளிய இழுத்துட்டேன்.

இந்த கும்மு கும்முறாங்க சாமி
நாடு தாங்குமா..
கூகிள் வெளங்குமா...

கும்க்கி on November 14, 2008 at 5:18 PM said...
This comment has been removed by the author.
rapp on November 14, 2008 at 5:26 PM said...

நான் திங்கக் கிழமை ஆஜராகுரேன்:):):) (இன்னைக்கு பதிவை படிக்க முடியல)(இத வெச்சு நல்ல நக்கலடிங்க:):):))

win on November 14, 2008 at 5:27 PM said...

ஹலோ இங்க கர்க்கினு ஒரு நல்லவர் இருந்தாரு ஒ wrong அட்ரஸ் sorry for the disturbance ப்ளீஸ் continue.......
:-)

கும்க்கி on November 14, 2008 at 5:45 PM said...

ராப்பம்மா(அ)ராப்பக்கா...
உங்க தலைக்கு பின்னாடி வேகமா ஒரு ப்ரொபல்லர் (அதாங்க கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)சுத்திக்கிட்டிருக்குமே...அது இல்லாம அமைதியா வந்து நகந்துட்டீங்களே..
ஏமி விஷேஷம்லு?

விலெகா on November 14, 2008 at 6:35 PM said...

115 மொய் எழுதிட்டேன்.

SK on November 14, 2008 at 6:35 PM said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் :-)

என்ன கொடுமை இது எல்லாம் நான் வரப்போ எல்லாம் ஒரு நூறு அடிச்ச அப்பறம் தான் வர்றேன்..

விலெகா on November 14, 2008 at 6:36 PM said...

அட்ரெஸ் தெரியாம இங்கே வந்திட்டடேன்,யாராச்சும் சோடா இருந்தா கொடுங்கப்பு மயக்கமா வருது:))))

SK on November 14, 2008 at 6:36 PM said...

ஸ்ரீமதி இந்த கும்மியா :-) :-)

விலெகா on November 14, 2008 at 6:37 PM said...

SK said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் :-)

என்ன கொடுமை இது எல்லாம் நான் வரப்போ எல்லாம் ஒரு நூறு அடிச்ச அப்பறம் தான் வர்றேன்
அதானே எனக்கும் ஒன்னும் புரிபடலே:))

விலெகா on November 14, 2008 at 6:38 PM said...

SK said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் :-)

என்ன கொடுமை இது எல்லாம் நான் வரப்போ எல்லாம் ஒரு நூறு அடிச்ச அப்பறம் தான் வர்றேன்
அதானே எனக்கும் ஒன்னும் புரிபடலே:))

அத்திரி on November 14, 2008 at 7:13 PM said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் முடியலை........... இத்தோட நிறுத்திக்கலாம் சகா . போதும்

தாமிரா on November 14, 2008 at 8:59 PM said...

நல்ல ஸ்டைல். மிகவும் ரசித்தேன். களைகட்டுகிறது. (எனக்கா இந்த நகை என்றாய். அந்த வைர கம்மல் என் காதோரம் சொன்னது. "அய் எனக்கா இந்த சிலை"// இதை மட்டும் ஏற்கனவே படித்த ஞாபகம்). ஒரு சின்ன ரகசியம் : இப்போதும் நீங்கள் தொடர்ந்து தபூ போன்ற கவிஞர்களை படித்துக்கொண்டிருந்தால் நிறுத்திவிடுங்கள்.

ஒரு நட்சத்திரத்தைப் பற்றி இன்னொரு நட்சத்திரத்திற்குத்தானே தெரியும் என்றேன். வெட்கப்படத் தொடங்கினாய். என்னைப் பார்த்து கொதித்துக் கொண்டிருந்த கடல் கேட்டது "அப்போ இது நிலா இல்லையா?"// இது மிகப்பிரமாதம். இன்னும் உன்னிப்பாக வார்த்தைகளை செதுக்குங்கள்.. அப்புறம் யாரும் அடிச்சுக்க முடியாது. (அட்வைஸ் எல்லாம் சொல்றதுக்கு மட்டும்தான், தெரியும்தானே..)

MaDHAN said...

Tabu effect or influence.....?????

 

all rights reserved to www.karkibava.com