Nov 12, 2008

தொட்டால் ஒட்டிக் கொள்ளும் புத்த"கம்"


   அழைத்த‌தோடு நில்லாமல் "சகா ஜமாய்" என ஊக்கம் கொடுத்த நர்சிம்முக்கு நன்றியையும் மன்னிப்பையும் முதலிலே சொல்லி விடுகிறேன்

   பத்து பன்னிரெண்டு வயது வரை படக்கதைகளிலும், சிறுவர் புத்தகங்களிலும் எல்லோரையும் போலவே ஈர்ப்புடையவனாகத்தான் இருந்திருக்கிறேன். அடுத்த கட்டமெனில் பாக்கெட் நாவல்கள்தான். ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள் ஒரு நூறையாவது படித்துத் தொலைத்திருப்பேன்.அவைகளும் நாவல்கள் என்றபோதும் திருப்தி தந்த முதல் நாவல் மோகமுள்.இன்னமும் பாபுவும் ரங்கண்ணாவும் என் முன் நிழலாடுகிறார்கள். அதைத் தொடர்ந்து அம்மா வந்தாள்.

    அதன்பின் நான் ஒரு கவிதையை காதலிக்கத் தொடங்கியதால் கவிதை புத்தகங்களை தேடிப் பிடிக்கத் தொடங்கினேன். முத‌லில் கிடைத்த அறிவுமதியின் புத்தகங்கள் மூலம் அறிமுகமான தபூ சங்கர் என்னுள் நிறைந்து இன்றளவும் அவர் செய்யும் தொல்லைகளை நீங்கள் படித்திருக்க கூடும். எந்தக் கவிதையும் அவள் போல் இல்லாததால் குறைந்தக் காலத்திலே அதற்கு மூடு விழா நடத்திவிட்டேன்.

    நான் சிங்கையில் பணிபுரிந்த (2003-2005) காலத்தில்தான் வாசிப்பை சுவாசிப்பாக கொண்டேன் எனலாம். இந்தியாவிலிருந்து வருபவர்கள் என்ன வேண்டும் என்று கேட்டால் ஒரு பட்டியலே சொல்லுவேன். அனைத்தும் புத்தகங்கள். என் பத்து வயதில் எனக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்த புத்தகம்தான் "கார்க்கியின் வாழ்க்கை வரலாறு". ஆனால் இதை என் 20வது வயதில்தான் படித்தேன்.என்னை முழுமையாய் மாற்றிய புத்தகமென இதைக் கூறுவேன். பாதி படித்ததும் ஓரங்கட்டிவிட்டு கார்க்கியின் தாய் நாவலை தேடிப் (ப‌)பிடித்தேன். அதைத் தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்கள் மீதான என் தீராக் காதல் தொடங்கியது.

  சிங்கிஸ் ஐத்மதேவ் இந்த ஆண்டு ஜூன் மாதம் தான் மரணமடைந்தார்.தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இவரின் முதல் ஆசிரியர் மற்றும் ஒரு லாரி டிரைவரின் கதை இரண்டையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கார்க்கிக்கு அடுத்தப் படியாக என்னைக் கவர்ந்த ரஷ்ய இலக்கியவாதி இவர்.

  தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் ரஷ்ய இலக்கியத்தின் சிறந்த காதல் கதை என்ற அறிமுகத்தோடுதான் படிக்கத் தொடங்கினேன். ஆனால் அதை முடித்த மறுநாளே துர்கனேவின் ஆஸ்யா என் கையில் கிடைக்க, வெண்ணிற இரவுகளை மறக்கும் அளவுக்கு என்னுள் அழுத்தமாய் பதிந்தது.ரஷ்ய நாவல்களை எப்படி மொழி மாற்றம் செய்தாலும் பிரச்சனை இல்லையோ எனத் தோண்றும். இதுவரை நான் வாசித்த ரஷ்ய கதைகள் எதுவும் எனக்கு பிடிக்காமல் இருந்ததில்லை. இன்றும் எந்த புத்தக கடைக்கு சென்றாலும் ரஷ்ய இலக்கியம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பதே என் முதல் வேலை.

    பின் தமிழ் நாவல்கள் அதிகம் படிக்கத் தொடங்கினேன். மா.வே.சிவக்குமாரின் மரிக்கொழுந்து மங்கை, உமா சந்திரனின் முள்ளும் மலரும் ஆகிய இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள். லா.ச.ராவின் சுயசரிதையான சிந்தா நதிக்கு சாஹிதிய அகாதெமி விருது கிடைத்தது என அறிந்து அதை வாங்கிப் படித்தேன். தொடர்ந்து அவரின் பச்சைக்கனவு என்ற அற்புத படைப்பை படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. ஏனோ அதன்பின் அவரை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழவில்லை எனக்கு.(முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாததால் இருக்கலாம்)

    2007ஆம் ஆண்டு புத்தக சந்தைக்கு போகும்போது என் அக்கா அவரின் கடனட்டையைக் கொடுத்து சுஜாதா எழுதிய எந்த புத்தகமாக இருந்தாலும் வாங்கிட்டு வா என்று சொன்னார். அள்ளிக் கொண்டு வந்து ஆசை தீர அவரின் எழுத்துக்களோடு சினேகம் வளர்த்தேன். இன்றும் மொழி நடைக்காக நான் வாசிக்கும் ஒரே எழுத்தாளர் சுஜாதாதான். பிரிவோம் சந்திப்போமில் அவர் வருணித்த அமெரிக்காவை நேரில் பார்த்ததில் இருந்து என் அக்காவிற்கு சுஜாதா மீது கொள்ளைப் பிரியம். பார்க்காமலே எனக்கும். நான் பதிவெழுத தொடங்கும்போது அவருக்கு நன்றிகள் கூறிவிட்டுதான் எழுதவே ஆரம்பித்தேன்.

    எந்தப் புததகம் என்றாலும் படிப்பேன், அது தமிழில் இருந்தால் எனபதை நான் அடிக்கடி சொல்லுவேன். இடையிடையே சில ஆங்கில புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் மிக முக்கியமானது  பாலோ கோய்லேவின் The Alchemist.அவரின் மாஸ்டர் பீஸ் அதுதான் போலும். அதன் தாக்கத்தில் அவரின் veronika decides to die வாங்கி முப்பதே பக்கங்களை படித்து தலையைச் சுற்றித் தூக்கி எறிந்து விட்டேன். பின் கிரடி கார்டில் கிடைத்த புள்ளிகள் மூலம் சேத்தன் பகத்தின் five point someone, one night at call cenrtre வாங்கிப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை. என் கவனம் தியானம் பக்கம் திரும்பியது. இந்தக் காலக்கட்டத்தில் ஓஷோவின் புத்தகங்களை படிக்க நேர்ந்தது.ஜென் கதைகளிலும் ஹைக்கூவிலும் நாட்டம் ஏற்ப்பட்டது. ஹைக்கூ கவிதைகளின் பிதாமகர் பாஷேவின்  சுயசரிதை Traveling through a narrow crooked path அதில் முக்கியமானது. பின் ஆந்தோனி டி மெல்லோவின prayer of the frog என்னை ஒரு விநோத உலகிற்கு அழைத்து சென்றது. மேலும் அவரின் the song of the bird என்ற புத்தகத்தை பாதி படித்துவிட்டு தொலைத்து விட்டேன். இப்போது அதன் மேலும் ஆர்வம் குறைந்து விட்டது.

  இப்போதெல்லாம் ஹைதராபாத்திற்கு ட்ரெயின் ஏறும் முன் ஏதாவ்து ஒரு புத்தகம் வாங்குவது வழக்கமாகி விட்டது. அங்கிருக்கும் கடையில் திரையுலகம் சார்ந்த புத்தகங்களே அதிகம் இருக்கின்றன. சுஜாதாவின் "திரைக்கதை  எழுதுவது எப்படி", அபூர்வ ராகங்கள், பருத்தி வீரன்,சேது ஆகியப் படங்களின் திரைக்கதை வசனம் புத்தஙக்ள்தான் நான் சமீபத்தில் படித்துக் கொண்டிருப்பது.

   இவை அனைத்தையும் விட தற்போது நான் உயிர்ப்பாய் வாசிப்பது வ்லையில்தான். அய்யனாரின் பதிவு ஒனறை தினமும் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். நர்சிம்மின் குறுந்தொகை, கவிதைக்கு ஜ்யோவ்ராம் சுந்தர்,அனுஜன்யா மற்றும் கென், என எல்லாவற்றிர்க்கும் இங்கே வழி இருக்கிறது.

   படிக்கும் பழக்கம் இன்னமும் இருந்தாலும் முன்பு போல் வாசிக்கும் பழக்கம் இப்போது என்னை ஆட்கொள்ளவில்லை. ஏனென்றும் தெரியவில்லை. ஆரம்பம் முதலே விகடன் மட்டுமே படிப்பேன்.குமுதமும் குங்குமமும் எனக்கு அலர்ஜி. கிளுகிளுப்புக்காக‌ அவ்வபோது ரிப்போர்ட்டரைப் படிப்பதுண்டு.

இதைத் தொடர நான் அழைப்பது:

1) கும்க்கி (எப்பவாது எழுதினா முதல்ல இத எழுதுங்க)

2) ராப்

3) மற்றும் எல்லோரும்.(நல்ல மேட்டர். எல்லோரும் எழுதனும்னு விரும்பறேன்.)

280 கருத்துக்குத்து:

«Oldest   ‹Older   1 – 200 of 280   Newer›   Newest»
அருண் on November 12, 2008 at 10:31 AM said...

me the First =))

கும்க்கி on November 12, 2008 at 10:34 AM said...

இதோ வந்துட்டம்ல...

அருண் on November 12, 2008 at 10:44 AM said...

கூகுள் ரீடர விட தமிழ் மணம் ஸ்பீடா இருக்கு.

அருண் on November 12, 2008 at 10:48 AM said...

எனக்கு ரஸ்ய இலக்கியம் எல்லாம் ரஸ்யன் காமிக்ஸ் தான். சோவியத் யூனினா இருந்தப்ப சூப்பர் புக்ஸ் மாசாமாசம் வரும். வழவழப்பான புக்ஸ்.

அருண் on November 12, 2008 at 10:50 AM said...

நீங்க படிச்சிருக்கீங்களா?

கார்க்கி on November 12, 2008 at 10:54 AM said...

வாங்க அர்ண்.காலை வணக்கம்..

குக்க்கி அண்ணா.. வந்தா போதுமா? படிச்சு ஏதாவ்து சொல்லுங்க‌

கார்க்கி on November 12, 2008 at 10:55 AM said...

//அருண் said...
நீங்க படிச்சிருக்கீங்களா?

//

இல்லை நண்பா.. காமிக்ஸ் எதுவும் படித்ததில்லை.. :((

கும்க்கி on November 12, 2008 at 10:56 AM said...

என்னங்க..சும்மா பெராக்கு பாத்துட்டு ஒன்னோ ரெண்டோ பின்னூட்டம் போட்டுக்கிட்டிருந்தவனை எழுத சொல்றீங்களே?
அந்த கொடுமையும் நீங்கள்லாம் அனுபவிக்கனுமா?

coolzkarthi on November 12, 2008 at 10:58 AM said...

நீங்க எல்லாம் படிப்பாளிங்களா?

கும்க்கி on November 12, 2008 at 10:59 AM said...

முதல் பதிவா போட்டுடறேன்...
ரெண்டொரு நாலாகும்...பரவாயில்லையா?
பரிசல் கோச்சுக்க போறாரு....
நம்ம கட்டளையிட்டும் எழுதாம..இப்ப என்ன என்று/..

கார்க்கி on November 12, 2008 at 11:00 AM said...

//கும்க்கி said...
என்னங்க..சும்மா பெராக்கு பாத்துட்டு ஒன்னோ ரெண்டோ பின்னூட்டம் போட்டுக்கிட்டிருந்தவனை எழுத சொல்றீங்களே?
அந்த கொடுமையும் நீங்கள்லாம் அனுபவிக்கனுமா?//

உங்கள் வாசிப்பனுபவம் குறித்து எனக்கு பெரியதோர் அபிப்பிராயம் உண்டு தோழரே. எப்படி எனத் தெரியவில்லை. உங்களுடம் பேசிய சில மணிகளில் அதை உனர்ந்துக் கொண்டேன். நிச்ச்யம் எழுத வேண்டும். நீங்க எப்போ வலை எழுத ஆரம்பிக்கிறீர்களோ அப்போது எழுதினால் பொதும்..

Bleachingpowder on November 12, 2008 at 11:01 AM said...

பெரிய ஆளுதான் நீங்க :)). நமக்கு தெரிஞ்ச இலக்கிய இதழ்கள்னா அது விகடன்,குமுதம் தான்.

Bleachingpowder on November 12, 2008 at 11:02 AM said...

அதிலும் குறிப்பாக நடுபக்கம் தான் :))

கார்க்கி on November 12, 2008 at 11:02 AM said...

//coolzkarthi said...
நீங்க எல்லாம் படிப்பாளிங்களா//

யாருங்க சொன்னா?????? சும்மா லுல்லுலாயிக்கு..

//கும்க்கி said...
முதல் பதிவா போட்டுடறேன்...
ரெண்டொரு நாலாகும்...பரவாயில்லையா?
பரிசல் கோச்சுக்க போறாரு....
நம்ம கட்டளையிட்டும் எழுதாம..இப்ப என்ன என்று/..//

இதுக்குத்தான் பரிசல் கோச்சிப்பாரு. அவரு ரொம்ப நல்ல்ல்ல்ல்லவருங்க.. நீங்க எழுதினா என்னை விட அவருதான் அதிகமா சந்தேகப்படுவாரு, ச்சே தப்பா டைப் பண்ணிட்டேன்..சந்தோஷப்படுவாரு..

கார்க்கி on November 12, 2008 at 11:03 AM said...

/bleachingpowder said...
அதிலும் குறிப்பாக நடுபக்கம் தான் :))//

அதுல பட‌மா இருக்கிறத வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டவையே உல்கத் தர இலக்கியங்களா கருதப்படுது சகா..

Bleachingpowder on November 12, 2008 at 11:06 AM said...

//அதுல பட‌மா இருக்கிறத வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டவையே உல்கத் தர இலக்கியங்களா கருதப்படுது//

:))))) அப்படினா நானும் நிறைய உலக தர இலக்கியங்களை படித்திருக்கிறேன்...சாரி... பார்த்திருக்கிறேன் :))

narsim on November 12, 2008 at 11:16 AM said...

சகா.. அருமையாக தொடர்ந்ததற்கும் அற்புதமாக தொகுத்தற்கும் நன்றி.. மிக ஆழ்ந்த வாசிப்பானுபவம்..

இவ்வளவு நல்ல பதிவிற்கு முன்னாள் எதற்கு சகா மன்னிப்பு?? அதுவும் மூன்று சுழியில்!!

நர்சிம்

கார்க்கி on November 12, 2008 at 11:20 AM said...

//narsim said...
சகா.. அருமையாக தொடர்ந்ததற்கும் அற்புதமாக தொகுத்தற்கும் நன்றி.. மிக ஆழ்ந்த வாசிப்பானுபவம்..

இவ்வளவு நல்ல பதிவிற்கு முன்னாள் எதற்கு சகா மன்னிப்பு?? அதுவும் மூன்று சுழியில்!!//


நன்றி தல.. இரண்டு நாள் தாமதத்திற்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். "முன்னாள்" ..இதுக்கு எதுக்கு தல‌ பெரிய ள் போட்டிங்க?

அருண் on November 12, 2008 at 11:31 AM said...

தமிழ் இலக்கியம் வாசிப்பது உண்டா? புற நானூறு, குறுந்தொகை?

narsim on November 12, 2008 at 11:50 AM said...

உங்களுக்கு ஏற்பட்ட அதே "ஷிப்ட்லாக்" தான் காரணம் சகா

anand on November 12, 2008 at 11:53 AM said...

// "முன்னாள்" ..இதுக்கு எதுக்கு தல‌ பெரிய ள் போட்டிங்க?//
font size கம்மி பண்ணி சின்ன ள் போட சொல்றியா கார்க்கி :):)

--Prakash

கார்க்கி on November 12, 2008 at 11:58 AM said...

// அருண் said...
தமிழ் இலக்கியம் வாசிப்பது உண்டா? புற நானூறு, குறுந்தொகை?
//

இதுவரை இல்லை. நர்சிம் எழுதும் குறுந்தொகை பாடல்கள் படிப்பதுன்டு. மற்றபடி நவீன இலக்கியங்கள் படிப்பதுண்டு. நான் விரும்பி படிப்பது தமு புத்தக‌ங்கள்தான்

//narsim said...
உங்களுக்கு ஏற்பட்ட அதே "ஷிப்ட்லாக்" தான் காரணம் சகா//

சேம் ப்ளட்டா?

// anand said...
// "முன்னாள்" ..இதுக்கு எதுக்கு தல‌ பெரிய ள் போட்டிங்க?//
font size கம்மி பண்ணி சின்ன ள் போட சொல்றியா கார்க்கி :):)

--Praகஷ்//

நக்கலு.. பதிவையும்படிங்க.. :))))))

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:00 PM said...

"அதன்பின் நான் ஒரு கவிதையை காதலிக்கத் தொடங்கியதால்"

அடங்கவே மாட்டியா?

"தபூ சங்கர் என்னுள் நிறைந்து இன்றளவும் அவர் செய்யும் தொல்லைகளை நீங்கள் படித்திருக்க கூடும்."

படிச்சோம் .படிச்சோம்..

"எந்தக் கவிதையும் அவள் போல் இல்லாததால்"

கவிதையெல்லாம் அழகாயிருந்த்திருக்கும்

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:02 PM said...

" சிங்கிஸ் ஐத்மதேவ் "

பேரே வாயில நுழையுல..

" தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் ரஷ்ய இலக்கியத்தின் சிறந்த காதல் கதை"

அங்கேயும் காதலா????????

"நடுவில் என்ன நடந்ததோ தெரியவில்லை. என் கவனம் தியானம் பக்கம் திரும்பியது."

மப்பு அதிகமாகும் நேரத்தை சொல்றீயா?

"ஒரு விநோத உலகிற்கு அழைத்து சென்றது"

ராவா அடிச்சா போவோமே அங்கேயா?

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:04 PM said...

"கிளுகிளுப்புக்காக‌ அவ்வபோது ரிப்போர்ட்டரைப் படிப்பதுண்டு."

ரிப்பீட்டு


ஒரு டவுட். புக் பேரு மட்டும் படிப்பியா?

anand on November 12, 2008 at 12:10 PM said...

பதிவை படிச்சேன் பா.
அதுல ராஜேஷ்குமார், சுஜாதா இப்படி சில வார்த்தைகள் மட்டும் தான் தெரிஞ்சது
மத்ததெல்லாம் புரியவே இல்ல. அதால சாய்ஸ் ல விட்டுட்டேன்.
ஹி ஹி...

--prakash

Bee'morgan on November 12, 2008 at 12:14 PM said...

நல்ல பதிவு கார்க்கி.. ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க.

அருண் on November 12, 2008 at 12:27 PM said...

வாங்க நானும் ஒருவன். நீங்க வந்தாதான் கும்மி கள கட்டுது.

அருண் on November 12, 2008 at 12:29 PM said...

நீங்களும் கார் கீயும் நண்பர்களா?

Anandaprakash on November 12, 2008 at 12:30 PM said...

//கார்க்கிக்கு அடுத்தப் படியாக என்னைக் கவர்ந்த ரஷ்ய இலக்கியவாதி இவர்.//

என்னை கவர்ந்த ரஷ்ய இலக்கியவாதி. மரியா ஷரபோவா :):)

--prakash

அருண் on November 12, 2008 at 12:31 PM said...

நல்லா ஓட்ரீங்க கார்கீய.

அருண் on November 12, 2008 at 12:33 PM said...

//என்னை கவர்ந்த ரஷ்ய இலக்கியவாதி. மரியா ஷரபோவா :):)//

அன்ன கோர்னிகோவா விட்டுட்டீங்க.

முரளிகண்ணன் on November 12, 2008 at 12:41 PM said...

\\அதன்பின் நான் ஒரு கவிதையை காதலிக்கத் தொடங்கியதால் கவிதை புத்தகங்களை தேடிப் பிடிக்கத் தொடங்கினேன்\\

சூப்பர்

Anandaprakash on November 12, 2008 at 12:45 PM said...

கார்க்கி நான் ஒன்ன ஓட்டல்லாம் இல்ல..
அருண் போட்டு விடறாரு.
நாமளும் கும்மி அடிக்கலாம்னு பாத்தா...
நல்ல கிளப்பராங்கயா பீதிய..

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:48 PM said...

"அருண் said...
வாங்க நானும் ஒருவன். நீங்க வந்தாதான் கும்மி கள கட்டுது.
"

ஆமாங்க.. இந்த வீணாப்போனவன் கூட 10 வருஷமா ஒன்னா சுத்தறேன்..

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:48 PM said...
This comment has been removed by the author.
நானும் ஒருவன் on November 12, 2008 at 12:49 PM said...

"anand said...
பதிவை படிச்சேன் பா.
அதுல ராஜேஷ்குமார், சுஜாதா இப்படி சில வார்த்தைகள் மட்டும் தான் தெரிஞ்சது
மத்ததெல்லாம் புரியவே இல்ல. அதால சாய்ஸ் ல விட்டுட்டேன்.
ஹி ஹி"

இப்படி தான் படம் காட்டுவான். ஏமாறாதீங்க. இவன் ஹிந்து பேப்பர் படிச்சிட்டு முஸ்லீம் பேப்பர் இல்லையானு கேட்டவன்.

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:51 PM said...

"என்னை கவர்ந்த ரஷ்ய இலக்கியவாதி. மரியா ஷரபோவா :):)"

எனக்கும்..ஹிஹிஹிஹி

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:52 PM said...

"Anandaprakash said...
கார்க்கி நான் ஒன்ன ஓட்டல்லாம் இல்ல..
அருண் போட்டு விடறாரு.
நாமளும் கும்மி அடிக்கலாம்னு பாத்தா...
நல்ல கிளப்பராங்கயா பீதிய..
"

கும்மிக்கு நான் தயார். அருண் இருக்கிங்களா, லன்ச்சுக்கு போயாச்சா? எஸ்.கே வையும் காணோம். கார்க்கி எங்கடா இருக்க?

கார்க்கி on November 12, 2008 at 12:55 PM said...

// bee'morgan said...
நல்ல பதிவு கார்க்கி.. ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க.//

நன்றி பீமோர்கன். என்னக்க பேரு இது?

//அருண் said...
நல்லா ஓட்ரீங்க கார்கீய.

//

காரைத்தாங்க ஓட்டனும்.. கார் கீ ய ஏன் ஓட்டறீங்க?

கார்க்கி on November 12, 2008 at 12:57 PM said...

//முரளிகண்ணன் said...
\\அதன்பின் நான் ஒரு கவிதையை காதலிக்கத் தொடங்கியதால் கவிதை புத்தகங்களை தேடிப் பிடிக்கத் தொடங்கினேன்\\

சூப்பர்//

கிகிகி.. நன்றி சகா..

//கும்மிக்கு நான் தயார். அருண் இருக்கிங்களா, லன்ச்சுக்கு போயாச்சா? எஸ்.கே வையும் காணோம். கார்க்கி எங்கடா இருக்க?

//

எல்லோரும் உன்னையப் போல வெட்டிப் பசங்களா? எங்களுக்கு வேலை இருக்குப்பா.. பக்கத்து சீட்டு அக்கா சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லியிருக்காங்க.. வேலை இருக்கு..

நானும் ஒருவன் on November 12, 2008 at 12:58 PM said...

"தொட்டால் ஒட்டிக் கொள்ளும் புத்த"கம்""

தலைப்பு சூப்பர் மச்சி. நாங்க எல்லாம் இரும்பு மாதிரி. அதான் ஒட்டல.

Anandaprakash on November 12, 2008 at 1:02 PM said...

3 கமெண்ட் போட்ட எனக்கு கார்க்கி பதில் சொல்லாததால்
நான் தற்காலிக வெளிநடப்பு செய்கிறேன்.

will meet after the lunch
"naanum oruvan"

ரமேஷ் said...

அருமையான பதிவு.உங்களுக்கு இந்தளவு வாசிப்பனுபவம் இருக்குமென நினைக்கவில்லை. காரல் மார்க்ஸின் மூலதனம் படித்திருக்கிறீர்களா? மரிக்கொழுந்து மங்கை. இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

சிங்கிஸ் ஐத்மதேவ்.. இவரின் ஜமீலா அற்புதமான் நாவல். இவரை இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக கிர்கிஸ்தானிய அரசு பரிந்துரை செய்திருக்கிறது. பொதுவாகவே ரஷிய எழுத்தாளர்கள் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பார்கள். அந்த நாட்டு பதிப்பகங்களும் நல்ல முறையில் விலைக் குறைவாக வெளியிடுவார்கள்.

white tiger படிச்சிங்களா? நல்லாயிருக்கு.


வாழ்த்துக்கள்.

Bee'morgan on November 12, 2008 at 1:18 PM said...

ஆகா.. பேரைப் பாத்தெல்லாம் பயந்துடாதீங்க :) எல்லாம் ச்சும்மா லுலூலாயிக்கு.. :)

prakash on November 12, 2008 at 1:42 PM said...

Me the come back

prakash on November 12, 2008 at 1:42 PM said...

47

prakash on November 12, 2008 at 1:42 PM said...

48

prakash on November 12, 2008 at 1:43 PM said...

49

prakash on November 12, 2008 at 1:44 PM said...

appaada 50!!!!

எல்லாருக்கும் வொர்க் இருக்கு போல

கார்க்கி on November 12, 2008 at 1:45 PM said...

/Anandaprakash said...
3 கமெண்ட் போட்ட எனக்கு கார்க்கி பதில் சொல்லாததால்
நான் தற்காலிக வெளிநடப்பு செய்கிறேன்.
//

முதல்லே பதில் சொன்னேனே?

@ரமேஷ்,

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகா..

//Bee'morgan said...
ஆகா.. பேரைப் பாத்தெல்லாம் பயந்துடாதீங்க :) எல்லாம் ச்சும்மா லுலூலாயிக்கு.. :)//

அப்போ சரி

கார்க்கி on November 12, 2008 at 1:46 PM said...

//prakash said...
appaada 50!!!!

எல்லாருக்கும் வொர்க் இருக்கு போல
//

ஆமாம் சப்பிடற வேலை.. 50க்கு நன்றி

நானும் ஒருவன் on November 12, 2008 at 1:47 PM said...

இதோ வந்துட்டேன். அடடே 50 மிஸ் ஆயிடுச்சா.. சரி 100 நான் தான். அருண் இருக்கிங்களா? பிரகாஷ் சாரும் வந்துட்டாரு..

நானும் ஒருவன் on November 12, 2008 at 1:49 PM said...

/ கார்க்கி said...
//prakash said...
appaada 50!!!!

எல்லாருக்கும் வொர்க் இருக்கு போல
//

ஆமாம் சப்பிடற வேலை.. 50க்கு//

அதானே முக்கியமான வேலை.. அக்காவுக்கு லன்ச் வாங்கி கொடுத்துட்டியா? இந்த பொழப்புக்கு.$#^$%^$&^&^*^

prakash on November 12, 2008 at 1:54 PM said...

வாங்க நானும் ஒருவன்
இன்னைக்கு நம்மள ஆபீஸ்ல ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க.
நீங்களும் ப்ரியா இருக்கிங்களா?

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:00 PM said...

நான் மட்டும்தான் இருக்கேன். ப்ரியா இல்லங்க..

prakash on November 12, 2008 at 2:06 PM said...

//நான் மட்டும்தான் இருக்கேன். ப்ரியா இல்லங்க..//

பூரா அகராதி புடிச்ச பயபுள்ளைகளா திரியராங்கப்பா :):)

வேற யாரையாவது கூப்பிடுங்க கும்மிக்கு...

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:07 PM said...

//பூரா அகராதி புடிச்ச பயபுள்ளைகளா திரியராங்கப்பா :):)

வேற யாரையாவது கூப்பிடுங்க கும்மிக்கு..."

அருண் சாப்பிட போய்ட்டாரு. கார்க்கியத்தான் கூப்பிடனும். ஃபோன் போடவா?

Anonymous said...

கும்மின்னா என்னங்க? என்னையும் சேர்த்துக்கோங்க‌

prakash on November 12, 2008 at 2:11 PM said...

//கார்க்கியத்தான் கூப்பிடனும்//
வாட் ஹி டெல்லிங்?

அருண் on November 12, 2008 at 2:11 PM said...

வந்தாச்சு.வந்தாச்சு. யாராச்சும் இருக்கீங்களா?

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:11 PM said...

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டத்தில் இருவருக்கு மேல சேர்ந்து நடத்தும் அரட்டை கச்சேரிக்கு கும்மி என்று பெயர். ஆனால் அனானிகள் கணக்கில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். முதலில் blogger கனக்கு ஒன்றை உருவாக்கி விட்டு வாருங்கள். (யப்பா முடியல)

கார்க்கி on November 12, 2008 at 2:12 PM said...

//அருண் said...
வந்தாச்சு.வந்தாச்சு. யாராச்சும் இருக்கீங்களா?//

நானும் வந்துட்டேன் சகா. பிரகாஷ் அண்னே, ஒருவன் , நான் மற்றும் ஒரு அனானியும் இருக்கோம்

prakash on November 12, 2008 at 2:13 PM said...

//கும்மின்னா என்னங்க?//
இப்போ நானும் "நானும் ஒருவனும்" அடிக்கிறோமே அதுதான் கும்மி

கார்க்கி on November 12, 2008 at 2:13 PM said...

/ prakash said...
//கார்க்கியத்தான் கூப்பிடனும்//
வாட் ஹி டெல்லிங்?
//

i say i may i am on the way..

Anonymous said...

prakash said...
//கும்மின்னா என்னங்க?//
இப்போ நானும் "நானும் ஒருவனும்" அடிக்கிறோமே அதுதான் கும்மி


இதானா. வெட்டி வேலைனு சொல்லுங்க‌

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:15 PM said...

"i say i may i am on the wஅய்.."

துரை இஙிலிபீஷு எல்லாம் பேசுது.

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:16 PM said...

எங்கப்பா அருணும் பிரகாஷும்?

prakash on November 12, 2008 at 2:18 PM said...

//பிரகாஷ் அண்னே, ஒருவன் , நான் மற்றும் ஒரு அனானியும் இருக்கோம்//
"நானும் ஒருவன்" எப்பவுமே கும்மில இருகறதால
நம்ம என்டர் ஆகும்போது கும்மியில நானும் ஒருவன் னு சொல்ல முடியல
இல்ல அருண்? (ஒரு எழவும் புரியல!!!)

கார்க்கி on November 12, 2008 at 2:18 PM said...

மச்சி யாரையும் காணோம். யாராவது வந்தா சொல்லு. வேலை இருக்கு.

அருண் on November 12, 2008 at 2:18 PM said...

//இதானா. வெட்டி வேலைனு சொல்லுங்க‌//

அதே தான். இதுக்குதா ஆபிஸ்ல சம்பளம் குடுக்கராங்க.

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:19 PM said...

" கார்க்கி said...
மச்சி யாரையும் காணோம். யாராவது வந்தா சொல்லு. வேலை இருக்கு.
"

என்ன வேலை? பக்கத்து சீட்டு அக்கா அதுக்குள்ள காஃபி கேட்டாங்களா?

கார்க்கி on November 12, 2008 at 2:19 PM said...

//ரு அனானியும் இருக்கோம்//
"நானும் ஒருவன்" எப்பவுமே கும்மில இருகறதால
நம்ம என்டர் ஆகும்போது கும்மியில நானும் ஒருவன் னு சொல்ல முடியல
இல்ல அருண்? (ஒரு எழவும் புரியல!!!//

ஹேய்ய்ய்ய்ய்ய்ய் சூப்பரப்பு..

prakash on November 12, 2008 at 2:20 PM said...

//எங்கப்பா அருணும் பிரகாஷும்?//

இங்கதான் அருண் இருக்கேன். உங்களுக்கு ஒரு பெரிய கேள்வி கேட்டிருக்கேன் பாருங்க

அருண் on November 12, 2008 at 2:20 PM said...

//"நானும் ஒருவன்" எப்பவுமே கும்மில இருகறதால
நம்ம என்டர் ஆகும்போது கும்மியில நானும் ஒருவன் னு சொல்ல முடியல
இல்ல அருண்? (ஒரு எழவும் புரியல!)//

கரெக்டா சொன்னீங்க.

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:20 PM said...

// அருண் said...
//இதானா. வெட்டி வேலைனு சொல்லுங்க‌//

அதே தான். இதுக்குதா ஆபிஸ்ல சம்பளம் குடுக்கராங்க"


வேலை வெட்டி இல்லாமதான் இருக்க கூடாது. வெட்டி வேலை செஞ்சா தப்பே கிடையாது.

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:21 PM said...

"கரெக்டா சொன்னீங்க."

என்ன கரெக்டா சொன்னாரு. ஒரு எழவும் புரியலனு சொன்னாரே. அதுவா?

prakash on November 12, 2008 at 2:22 PM said...

சாரி நானும் ஒருவன்
உங்களுக்கு போடவேண்டிய கமெண்ட அருணுக்கு போட்டுட்டேன்

கார்க்கி on November 12, 2008 at 2:22 PM said...

//வேலை வெட்டி இல்லாமதான் இருக்க கூடாது. வெட்டி வேலை செஞ்சா தப்பே கிடையாது.//

என்னடா சாப்பிட்ட? இன்னைக்கு பூந்து வெளையாடுர‌

அருண் on November 12, 2008 at 2:22 PM said...

//நானும் ஒருவன் said...
" கார்க்கி said...
மச்சி யாரையும் காணோம். யாராவது வந்தா சொல்லு. வேலை இருக்கு.
"

என்ன வேலை? பக்கத்து சீட்டு அக்கா அதுக்குள்ள காஃபி கேட்டாங்களா?//

பின்னாடி சீட் பிகர் பீட்சா கேட்டாங்களாம்.

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:23 PM said...

''prakash said...
சாரி நானும் ஒருவன்
உங்களுக்கு போடவேண்டிய கமெண்ட அருணுக்கு போட்டுட்டேன்
''

பராவயில்ல. ஒரு டவுட். பிற காசுக்கு ஆசைப்படற‌தால உங்களுக்கு "பிரகாஷ்" நு பேரா?

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:25 PM said...

//பின்னாடி சீட் பிகர் பீட்சா கேட்டாங்களாம்."

பிச்சை கேட்டாலே போட மாட்டேன். இவனாவது பிட்ஸா வாங்கித் தரதாஅவ்து?

அருண் on November 12, 2008 at 2:25 PM said...

இன்னிக்கு யாரு 100 அடிக்கப்போரா?

prakash on November 12, 2008 at 2:25 PM said...

//பக்கத்து சீட்டு அக்கா அதுக்குள்ள காஃபி கேட்டாங்களா?//

கார்க்கி!!
காப்பி கேட்ட பக்கத்து சீட்டு அக்கா வை நான் கேட்டதாக சொல்லவும்...

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:26 PM said...

//கார்க்கி said...
//வேலை வெட்டி இல்லாமதான் இருக்க கூடாது. வெட்டி வேலை செஞ்சா தப்பே கிடையாது.//

என்னடா சாப்பிட்ட? இன்னைக்கு பூந்து வெளையாடுர‌
"

ஓட்டை வடை. அதான் பூந்து வர்றேன்

கார்க்கி on November 12, 2008 at 2:26 PM said...

"கார்க்கி!!
காப்பி கேட்ட பக்கத்து சீட்டு அக்கா வை நான் கேட்டதாக சொல்லவும்...//

ச‌ரிங்கண்ணா

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:27 PM said...

"அருண் said...
இன்னிக்கு யாரு 100 அடிக்கப்"

சந்தேகமே வேண்டாம். நான் தான்

அருண் on November 12, 2008 at 2:27 PM said...

//நானும் ஒருவன் said...
பிச்சை கேட்டாலே போட மாட்டேன். இவனாவது பிட்ஸா வாங்கித் தரதாஅவ்//

உண்மைய இவ்வளவு சத்தமா சொல்லக்கூடாது. :)

prakash on November 12, 2008 at 2:28 PM said...

//பிற காசுக்கு ஆசைப்படற‌தால உங்களுக்கு "பிரகாஷ்" நு பேரா?//
பிறர் காசுக்கு ஆசைபடுபவர்களில் "நானும் ஒருவன்" :):)

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:28 PM said...

"அருண் said...
//நானும் ஒருவன் said...
பிச்சை கேட்டாலே போட மாட்டேன். இவனாவது பிட்ஸா வாங்கித் தரதாஅவ்//

உண்மைய இவ்வளவு சத்தமா சொல்லக்கூடாது. :)
"

ஓக்கே..

இப்ப கேட்டுச்சா? மெதுவா சொன்னேன்.

அருண் on November 12, 2008 at 2:29 PM said...

கேட்டுச்சு கேட்டுச்சு ..

கார்க்கி on November 12, 2008 at 2:29 PM said...

//prakash said...
//பிற காசுக்கு ஆசைப்படற‌தால உங்களுக்கு "பிரகாஷ்" நு பேரா?//
பிறர் காசுக்கு ஆசைபடுபவர்களில் "நானும் ஒருவன்" :):)
//

மூக்குல ரத்தம் பாரு மச்சி..

அருண் on November 12, 2008 at 2:30 PM said...

//பிறர் காசுக்கு ஆசைபடுபவர்களில் "நானும் ஒருவன்" :):)//

காசு மட்டுமா? ;)

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:30 PM said...

பயங்கரமான படிப்பாளியா அண்ணா நீங்க?? :)) ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு... :))

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:30 PM said...

"அருண் said...
கேட்டுச்சு கேட்டுச்சு ..

"

உங்க காது ஷார்ப்புங்க..நீங்கதான் மொக்கை

கார்க்கி on November 12, 2008 at 2:31 PM said...

// ஸ்ரீமதி said...
பயங்கரமான படிப்பாளியா அண்ணா நீங்க?? :)) ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு... :))
//

எல்லோரும் கேட்டுக்கொங்கப்பா.. நானும் படிப்பாளிதான்.. நன்றி

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:31 PM said...

97

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:31 PM said...

98

அருண் on November 12, 2008 at 2:31 PM said...

//நீங்கதான் மொக்கை //

யாருப்பா அது?

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:31 PM said...

நான் தான் 100

அருண் on November 12, 2008 at 2:31 PM said...
This comment has been removed by the author.
நானும் ஒருவன் on November 12, 2008 at 2:32 PM said...

ஹேய்.. சொன்ன மாதிரியே அடிச்சுட்டோம் இல்ல..

prakash on November 12, 2008 at 2:33 PM said...

//காசு மட்டுமா? ;)//
மூக்கில் ரத்தம் பார்த்ததாக கார்க்கி சொல்வதால்
பிறர் நோசுக்கு ஆசைபடுபவன் என்று சொல்லலாமா

கார்க்கி on November 12, 2008 at 2:33 PM said...

கும்மியும் மொக்கையுமன்றி வேறொன்றுமறியேனு புரொஃபைலில் போடனும் போல.

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:33 PM said...

//கார்க்கி said...
// ஸ்ரீமதி said...
பயங்கரமான படிப்பாளியா அண்ணா நீங்க?? :)) ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு... :))
//

எல்லோரும் கேட்டுக்கொங்கப்பா.. நானும் படிப்பாளிதான்.. நன்றி//

என்ன வெச்சு காமெடி பண்ணலியே?? :)))

அருண் on November 12, 2008 at 2:34 PM said...

// நானும் ஒருவன் said...
நான் தான் 100//

சொல்லி அடிக்கிறீங்க.

கார்க்கி on November 12, 2008 at 2:34 PM said...

// prakash said...
//காசு மட்டுமா? ;)//
மூக்கில் ரத்தம் பார்த்ததாக கார்க்கி சொல்வதால்
பிறர் நோசுக்கு ஆசைபடுபவன் என்று சொல்லலாமா//

கடவுளே இப்போ எனக்கு ரத்தம் வருது

prakash on November 12, 2008 at 2:34 PM said...

வாழ்த்துகள் நானும் ஒருவன் for 100

கார்க்கி on November 12, 2008 at 2:35 PM said...

//என்ன வெச்சு காமெடி பண்ணலியே?? :)))//

ச்சும்மா.. வருகைக்கு நன்றி.. கும்மியில் சேர்றீங்களா?

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:35 PM said...

"அருண் said...
// நானும் ஒருவன் said...
நான் தான் 100//

சொல்லி அடிக்கிறீங்க.
"

நாங்க எல்லாம் கில்லி இல்ல. சொல்லித்தான் அடிப்போம்.

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:36 PM said...

" கார்க்கி said...
கும்மியும் மொக்கையுமன்றி வேறொன்றுமறியேனு புரொஃபைலில் போடனும் போல.

"

அது சொல்லித்தான் தெரியனுமா நீ மொக்கைனு

prakash on November 12, 2008 at 2:37 PM said...

//கடவுளே இப்போ எனக்கு ரத்தம் வருது//
கார்க்கி கம்யூனிஸ்ட் பரம்பரைல வந்தவன் நீ..
ரத்தம் பார்த்து பயப்படலாமா?

அருண் on November 12, 2008 at 2:37 PM said...

நம்ம அலம்பல பாத்து, கூகுள் கமெண்ட்ஸ block பண்ணாம இருந்தா சரி.

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:37 PM said...

//கார்க்கி said...
ச்சும்மா.. வருகைக்கு நன்றி.. கும்மியில் சேர்றீங்களா?//

உங்க கும்மி எல்லாம் படிச்சி சிரிச்சிகிட்டு இருக்கேன் பட் என்ன டாபிக் ஓடுதுன்னு இன்னும் புரியல.. :))

கார்க்கி on November 12, 2008 at 2:38 PM said...

//prakash said...
//கடவுளே இப்போ எனக்கு ரத்தம் வருது//
கார்க்கி கம்யூனிஸ்ட் பரம்பரைல வந்தவன் நீ..
ரத்தம் பார்த்து பயப்படலா//

ரத்தம் வருதுதான்னு சொன்னேன். பயாமா எனக்கா? (பாருங்க ஸ்பெல்லிங் கூட சரியா தெரியல என்னகு)

prakash on November 12, 2008 at 2:38 PM said...

//ச்சும்மா.. வருகைக்கு நன்றி.. கும்மியில் சேர்றீங்களா?//
ஐய் லேடீஸ் லேடீஸ் :):)

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:39 PM said...

"உங்க கும்மி எல்லாம் படிச்சி சிரிச்சிகிட்டு இருக்கேன் பட் என்ன டாபிக் ஓடுதுன்னு இன்னும் புரியல.. :))
"

அப்படி ஒன்னு இல்லாமலே அடிக்கிறதுதான் எங்க கும்மியோட ஸ்பெஷாலிட்டி.

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:39 PM said...

உங்க காதல் சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் சூப்பர்... தபு ஷங்கர் டச் இருந்தது.. ஆனா நீங்க ஏன் அதுமாதிரி அதிகம் எழுதறதில்ல??

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:39 PM said...

"prakash said...
//ச்சும்மா.. வருகைக்கு நன்றி.. கும்மியில் சேர்றீங்களா?//
ஐய் லேடீஸ் லேடீஸ் :):)
"

கார்க்கி, இவங்களுக்கும் காஃபி வேணுமான்னு கேட்டியா?

கார்க்கி on November 12, 2008 at 2:40 PM said...

//ஸ்ரீமதி said...
உங்க காதல் சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் சூப்பர்... தபு ஷங்கர் டச் இருந்தது.. ஆனா நீங்க ஏன் அதுமாதிரி அதிகம் எழுதறதில்ல?//

நன்றி.. வாரம் ஒன்னு வரும். வீக் எண்ட் பதிவு. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:41 PM said...

//நானும் ஒருவன் said...
"உங்க கும்மி எல்லாம் படிச்சி சிரிச்சிகிட்டு இருக்கேன் பட் என்ன டாபிக் ஓடுதுன்னு இன்னும் புரியல.. :))
"

அப்படி ஒன்னு இல்லாமலே அடிக்கிறதுதான் எங்க கும்மியோட ஸ்பெஷாலிட்டி.//

அச்சச்சோ அப்படியா?? :))

prakash on November 12, 2008 at 2:41 PM said...

100 க்கு வாழ்த்து சொன்ன என்னை கண்டுக்காத "நானும் ஒருவனை" கண்டுக்கிறேன் (சாரி கண்டிக்கிறேன்)

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:41 PM said...

"ஸ்ரீமதி said...
உங்க காதல் சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் சூப்பர்... தபு ஷங்கர் டச் இருந்தது.. ஆனா நீங்க ஏன் அதுமாதிரி அதிகம் எழுதறதில்ல"

நீங்களுமா? அவ்ளோதான்.. இன்னைக்கு முழுக்க சரக்கோட திங்க் பண்ண ஆரம்பிச்சிடுவான்..

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:42 PM said...

"prakash said...
100 க்கு வாழ்த்து சொன்ன என்னை கண்டுக்காத "நானும் ஒருவனை" கண்டுக்கிறேன் (சாரி கண்டிக்கிறேன்)
"

உங்களுக்கு நன்றி கவுஜ எழுதிக் கொன்டிருக்கிறேன். கார்க்கி அள்வுக்கு வரவில்லை.

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:43 PM said...

//நானும் ஒருவன் said...
"ஸ்ரீமதி said...
உங்க காதல் சம்பந்தப்பட்ட பதிவெல்லாம் சூப்பர்... தபு ஷங்கர் டச் இருந்தது.. ஆனா நீங்க ஏன் அதுமாதிரி அதிகம் எழுதறதில்ல"

நீங்களுமா? அவ்ளோதான்.. இன்னைக்கு முழுக்க சரக்கோட திங்க் பண்ண ஆரம்பிச்சிடுவான்..//

அவர் ஸ்ரீநிதிக்காக தானே எழுதறார்?? ;))

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:43 PM said...

"அச்சச்சோ அப்படியா?? :))"

அப்படித்தான்.. ச்சோ ஸ்வீட்

அருண் on November 12, 2008 at 2:44 PM said...

கவிதை எழுதினா கும்மி அடிக்க முடியாது.

கார்க்கி on November 12, 2008 at 2:44 PM said...

"அவர் ஸ்ரீநிதிக்காக தானே எழுதறார்?? ;))"

உங்களுக்கு எப்படி தெரியும்? அது யாருன்னு தெரியுங்களா?

கார்க்கி on November 12, 2008 at 2:44 PM said...

//நானும் ஒருவன் said...
"அச்சச்சோ அப்படியா?? :))"

அப்படித்தான்.. ச்சோ ஸ்வீட்
//

அப்போ நாகேஷ் என்ன காரமா?

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:44 PM said...

//நானும் ஒருவன் said...
"அச்சச்சோ அப்படியா?? :))"

அப்படித்தான்.. ச்சோ ஸ்வீட்//

என்னது???????

prakash on November 12, 2008 at 2:45 PM said...

//உங்களுக்கு நன்றி கவுஜ எழுதிக் கொன்டிருக்கிறேன். கார்க்கி அள்வுக்கு வரவில்லை.//
கார்க்கியின் கவுஜை ஒன்றை உருவி அப்படியே
மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு எழுதிவிடுங்கள்

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:45 PM said...

"அருண் said...
கவிதை எழுதினா கும்மி அடிக்க முடியாது.
"

அப்படி எல்லாம் ஒதுக்க முடியாது. என்ன எழுதினாலும் கும்மி அடிக்க வேண்டும்.

அருண் on November 12, 2008 at 2:46 PM said...

//ஆனா நீங்க ஏன் அதுமாதிரி அதிகம் எழுதறதில்ல"//

நாங்க எல்லாம் கும்மி அடிக்கரது உங்களுக்கு பிடிக்கலயா?

ஸ்ரீமதி on November 12, 2008 at 2:46 PM said...

//கார்க்கி said...
"அவர் ஸ்ரீநிதிக்காக தானே எழுதறார்?? ;))"

உங்களுக்கு எப்படி தெரியும்? அது யாருன்னு தெரியுங்களா?//

அச்சச்சோ எனக்கு தெரியாது.. உங்க முந்தைய பதிவுகளின் பின்னுட்டத்துல பார்த்து தெரிஞ்சிகிட்டேன்..:))

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:46 PM said...

"கார்க்கியின் கவுஜை ஒன்றை உருவி அப்படியே
மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு எழுதிவிடுங்கள்"

உங்களுக்கு எழுதும்போது எதுக்கு மானே தேனே? மாடே ஆடே நு வேண்ணா எழுதலாம்.. (கோச்சுக்காதீங்க ))

கார்க்கி on November 12, 2008 at 2:47 PM said...

//அச்சச்சோ எனக்கு தெரியாது.. உங்க முந்தைய பதிவுகளின் பின்னுட்டத்துல பார்த்து தெரிஞ்சிகிட்டேன்..:))//

அபப்டியா.. யாரோ கொஞ்ச நாள் நல்லா விலையாடினாங்க. அப்புறம் காணோம். அதான் கேட்டேன். தவறாக நினைக வேன்டாம்.

கார்க்கி on November 12, 2008 at 2:49 PM said...

உங்கள் காதல் திருத்தம் தொடர்கதை நல்ல போய்ட்டிருக்கு.

prakash on November 12, 2008 at 2:50 PM said...

//அப்படி எல்லாம் ஒதுக்க முடியாது. என்ன எழுதினாலும் கும்மி அடிக்க வேண்டும்//

Absolutly gummi is totally irrelevent to the subject and it is subjected to the independance of all "pinnuttamists"

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:51 PM said...

"Absolutly gummi is totally irrelevent to the subject and it is subjected to the independance of all "pinnuttamiச்ட்ச்""

ரஷ்ய இலக்கியம் படிச்ச கார்க்கி இந்த ரஷ்ய மொழியை தமிழில் சொல்லவும்.

prakash on November 12, 2008 at 2:54 PM said...

//மாடே ஆடே நு வேண்ணா எழுதலாம்.. (கோச்சுக்காதீங்க ))//

நீங்க மதுரையா எல்லா வர்தைக்குமா பின்னாடி டே போடறிங்க
நல்ல இருங்கடே (கோச்சிக்க மாட்டேன்)

நானும் ஒருவன் on November 12, 2008 at 2:56 PM said...

//prakash said...
//மாடே ஆடே நு வேண்ணா எழுதலாம்.. (கோச்சுக்காதீங்க ))//

நீங்க மதுரையா எல்லா வர்தைக்குமா பின்னாடி டே போடறிங்க
நல்ல இருங்கடே (கோச்சிக்க மாட்டேன்)"

நல்ல சமாளிப்பு. ஆனா டே போட்டு பேசறது மதுரை இல்லை. ராமநாதபுரம்.

prakash on November 12, 2008 at 3:01 PM said...

//ஆனா டே போட்டு பேசறது மதுரை இல்லை. ராமநாதபுரம்.//

மாத்திட்டாங்களா, அப்ப சரி
நான் மதுரை போனப்பதான் அங்க ஒருத்தன் இப்படி பேசினான்
அவன் ஒருவேளை ராமநாதபுரம் ஆளாக இருக்கும் :):)

அருண் on November 12, 2008 at 3:02 PM said...

//ஆனா டே போட்டு பேசறது மதுரை இல்லை. ராமநாதபுரம்.//

நாகர் கோவில்லதான் டே போட்டு பேசுவாங்க.

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:04 PM said...

"நாகர் கோவில்லதான் டே போட்டு பேசுவாங்க."

நாங்க எல்லாம் நைன்ட்டி போட்டுதான் பேசுவோம்

prakash on November 12, 2008 at 3:05 PM said...

//நாகர் கோவில்லதான் டே போட்டு பேசுவாங்க.//

போங்கப்பா எத்தன தடவ சமாளிக்கிறது?

அருண் on November 12, 2008 at 3:15 PM said...

//நாங்க எல்லாம் நைன்ட்டி போட்டுதான் பேசுவோம்
//

நைன்ட்டிக்கே இந்த மப்பா?

அருண் on November 12, 2008 at 3:16 PM said...

க்குவாட்டர், half எல்லாம் அடிச்சா????

அருண் on November 12, 2008 at 3:26 PM said...

148

அருண் on November 12, 2008 at 3:26 PM said...

149

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:26 PM said...

// அருண் said...
//நாங்க எல்லாம் நைன்ட்டி போட்டுதான் பேசுவோம்
//

நைன்ட்டிக்கே இந்த மப்பா?//

நாங்க எல்லாம் ச்சின்னப்பசங்க.. 90 90 யாத்தான் அடிப்போம்.

அருண் on November 12, 2008 at 3:26 PM said...
This comment has been removed by the author.
prakash on November 12, 2008 at 3:26 PM said...

149

prakash on November 12, 2008 at 3:26 PM said...

150

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:27 PM said...

மீ த 150. எப்படி வந்து அடிச்சோம் பார்த்தீங்க இல்ல?

prakash on November 12, 2008 at 3:27 PM said...

ச்சே ஜஸ்ட் மிஸ்!!!!

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:28 PM said...

என்னப்பா ஆளாளுக்கு காமெடி பண்றீங்க? நான் தான் 150 கனக்கெடுத்துப் பாருங்க‌

அருண் on November 12, 2008 at 3:29 PM said...

//என்னப்பா ஆளாளுக்கு காமெடி பண்றீங்க? நான் தான் 150 கனக்கெடுத்துப் பாருங்க‌//

Correct. I deleted my comment. :((

Sundar on November 12, 2008 at 3:31 PM said...

நீங்கள் படித்தவற்றில் பல நானும் ரசித்தவை...கிட்ட தட்ட ஒரே கலவை.

கார்க்கி on November 12, 2008 at 3:34 PM said...

// sundar said...
நீங்கள் படித்தவற்றில் பல நானும் ரசித்தவை...கிட்ட தட்ட ஒரே கலவை//

அப்படியா? வருகைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி சுந்தர்

கார்க்கி on November 12, 2008 at 3:35 PM said...

மிக்க நன்றி பிரகாஷ், அருண், நானும் ஒருவன்,srimathi தொடர் ஆதரவிற்கு நன்றி

ஸ்ரீமதி on November 12, 2008 at 3:35 PM said...

//கார்க்கி said...
//அச்சச்சோ எனக்கு தெரியாது.. உங்க முந்தைய பதிவுகளின் பின்னுட்டத்துல பார்த்து தெரிஞ்சிகிட்டேன்..:))//

அபப்டியா.. யாரோ கொஞ்ச நாள் நல்லா விலையாடினாங்க. அப்புறம் காணோம். அதான் கேட்டேன். தவறாக நினைக வேன்டாம்.//

ம்ம்ம் நானும் பார்த்தேன் :))

prakash on November 12, 2008 at 3:35 PM said...

//என்னப்பா ஆளாளுக்கு காமெடி பண்றீங்க? நான் தான் 150 கனக்கெடுத்துப் பாருங்க‌//

நீங்கதான் இந்த browser சதி பண்ணிடிச்சி :):)

ஸ்ரீமதி on November 12, 2008 at 3:36 PM said...

//கார்க்கி said...
உங்கள் காதல் திருத்தம் தொடர்கதை நல்ல போய்ட்டிருக்கு.//

நன்றி :)))))

prakash on November 12, 2008 at 3:39 PM said...

பதிவின் உரிமையாளர் கார்க்கி நன்றி நவில இப்பதிவின் கும்மி இனிதே நிறைவுற்றது.

நாளை சந்திப்போமா?

அருண் on November 12, 2008 at 3:42 PM said...

நானும் ஒருவன், 200 நீங்க தான்

அருண் on November 12, 2008 at 3:44 PM said...

//Blogger prakash said...

பதிவின் உரிமையாளர் கார்க்கி நன்றி நவில இப்பதிவின் கும்மி இனிதே நிறைவுற்றது.
நாளை சந்திப்போமா? //

அவ்வளவு தானா? ஆபீஸ் டைம் 5.30 PM இல்ல?

அருண் on November 12, 2008 at 3:46 PM said...

யாராவது இருக்கிங்களா ?

prakash on November 12, 2008 at 3:48 PM said...

//அவ்வளவு தானா? ஆபீஸ் டைம் 5.30 PM இல்ல?//

இல்ல 6PM...
நீங்கல்லாம் போய்ட்டிங்கன்னு இல்ல நெனச்சேன்!!!

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:50 PM said...

இல்லங்க 200 நீங்களே அடிங்க..

Sundar on November 12, 2008 at 3:50 PM said...

//மரிக்கொழுந்து மங்கை//
அதுல வர மணியன் செல்வன் படங்கள் தான் ஞாபகம் வருது. குமுதத்தில் தொடராய் வந்த பொது படித்தது. சரியாய் புரியாத வயதில். திரும்ப தேடி படிக்கணும்.
//ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள் //
அந்த நாவல் தொடங்கிய பொது சில வருடங்கள் விடாமல் படித்திருக்கிறேன். நந்தினி 440 volts தான் முதல் கதையின் பேர் என்று நினைக்கிறேன்.
//முதல் நாவல் மோகமுள்.இன்னமும் பாபுவும் ரங்கண்ணாவும் என் முன் நிழலாடுகிறார்கள். அதைத் தொடர்ந்து அம்மா வந்தாள்.//
ம்ம்ம்... அம்மா வந்தாள், மரப்பசு, செம்பருத்தீ... நேரில் சந்தித்தவர்களோ என்று எண்ணத்தோன்றும் பாத்திர படைப்புகள் இன்னும் நிழலாடுகின்றன.
//லா.ச.ராவின் சுயசரிதையான சிந்தா நதிக்கு//
இது தினமணி கதிரில் middle school தாண்டாத வயதில் பல வாரம் புரிந்தும் புரியாமல் படித்தது.
//சுஜாதா// சிலிகானின் சில்லு புரட்சி பார்த்து புரியாமல் மிரண்டதுண்டு. 2084 படித்து fantasy லாண்டில் லயித்ததுண்டு.
அட ரொம்ப நீளமாகிறதே!

prakash on November 12, 2008 at 3:51 PM said...

நானும் ஒருவன் எங்கே?

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:52 PM said...

சுந்தர் நாங்க 160 பின்னூட்டதில் சொன்ன மொத்தைத்யும் ஒரே பின்னூட்டதில் சொல்லிட்டிங்க. கார்க்கிகு பதில்னு ஒரு பதிவு போட்டுட்னுங்க. :)))))

அருண் on November 12, 2008 at 3:53 PM said...

//நானும் ஒருவன் said...
இல்லங்க 200 நீங்களே அடிங்க..//

இன்னொரு 90 அடிச்சிட்டு வாங்க.

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:53 PM said...

" prakash said...
நானும் ஒருவன் எங்கே?
"

இதோ. இதோ. என் சீட் அருகே எந்த அக்காவும் இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்

அருண் on November 12, 2008 at 3:57 PM said...

கார் கீ, காபி சாப்ட போய்டிங்களா?

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:57 PM said...

90 ஆ? இப்பவா? ஈவினிங் பார்க்கலாம். இன்னும் 25 தான் 200 அடிக்கலாமா? கார்க்கிக்கிட்ட டீல் பேசிப்போம். என்ன சொல்றீங்க அருண், பிரகாஷ்?

நானும் ஒருவன் on November 12, 2008 at 3:58 PM said...

"அருண் said...
கார் கீ, காபி சாப்ட போய்டிங்களா?
"

அவன் அந்த அக்காவுக்கு வாங்கிட்டு வர போயிருப்பான்.

அருண் on November 12, 2008 at 3:59 PM said...

ஆமாம், டெய்லி கமெண்ட்ஸ் 150+ ஆகுதில்ல?

நானும் ஒருவன் on November 12, 2008 at 4:02 PM said...

"அருண் said...
ஆமாம், டெய்லி கமெண்ட்ஸ் 150+ ஆகுதில்ல?
"

இந்தப்பதிவுக்கு மொத்தமே 15 இல்லைன்ன இருவது பேர்தான் வந்திருப்பாங்க. ஆனா கணக்கு 200 கிட்ட வருது.

prakash on November 12, 2008 at 4:08 PM said...

//இந்தப்பதிவுக்கு மொத்தமே 15 இல்லைன்ன இருவது பேர்தான் வந்திருப்பாங்க. ஆனா கணக்கு 200 கிட்ட வருது.//
ஸ்ஸ்ஸ் இந்த மாதிரி பப்ளிக் பிளேஸ்ல எல்லாம் அப்படி பேசக்கூடாது
வேணுன்னா கார்க்கி கிட்ட தனி டீல் வச்சுக்கலாம்.

prakash on November 12, 2008 at 4:14 PM said...

ரஷ்ய புரட்சியில், ரஷ்ய இலக்கியங்களின் தாக்கம் நிறைய இருப்பதை நான் 80 களின்
தொடக்கத்திலேயே உணர்ந்தவன்.

நானும் ஒருவன் on November 12, 2008 at 4:16 PM said...

"prakash said...
ரஷ்ய புரட்சியில், ரஷ்ய இலக்கியங்களின் தாக்கம் நிறைய இருப்பதை நான் 80 களின்
தொடக்கத்திலேயே உணர்ந்தவன்.
"

அய்யய்யோ என்ன ஆச்சு... சோடா கொன்டு வாங்கப்பா..

prakash on November 12, 2008 at 4:18 PM said...

கார்ல் மார்க்ஸ், லெனின், போன்ற மேதைகளின் கொள்கைகளே பின்னாளில் இலக்கியங்களாக புனையபெற்றன.

அருண் on November 12, 2008 at 4:22 PM said...

//prakash said...
கார்ல் மார்க்ஸ், லெனின், போன்ற மேதைகளின் கொள்கைகளே பின்னாளில் இலக்கியங்களாக புனையபெற்றன.//

ஆ, அப்படியா? சொல்லவே இல்ல?

prakash on November 12, 2008 at 4:24 PM said...

இவர்களை பற்றி பேசுகையில் நாம் ரஷ்ய சிந்தனையாளர் பிரையன் லாரா அவர்களின் பங்களிப்பை மறந்துவிடக்கூடாது

நானும் ஒருவன் on November 12, 2008 at 4:26 PM said...

"prakash said...
இவர்களை பற்றி பேசுகையில் நாம் ரஷ்ய சிந்தனையாளர் பிரையன் லாரா அவர்களின் பங்களிப்பை மறந்துவிடக்கூடாது
"

அவருக்கு முன்னால் பல தீவிர இலக்கியங்கள் படைத்த விவியன் ரிச்சர்ட்ஸை இந்த நேரத்தில் நினைவு கூறுவது சாலச்சிறந்தது.

prakash on November 12, 2008 at 4:26 PM said...

அப்படா!!! நாமும் பதிவுக்கு சம்பந்தமாக 3 பின்னூட்டம் போட்டாச்சி...

Sundar on November 12, 2008 at 4:27 PM said...

//நானும் ஒருவன் said...
சுந்தர் நாங்க 160 பின்னூட்டதில் சொன்ன மொத்தைத்யும் ஒரே பின்னூட்டதில் சொல்லிட்டிங்க. கார்க்கிகு பதில்னு ஒரு பதிவு போட்டுட்னுங்க. :)))))//

அட நான் வேற ஆனால் நானும் ஒருவன் தான்... உங்கள் கும்மி இலக்கணம் புரியாம கொஞ்சம் கும்மியை கலச்சிட்டேனே! நீங்க போடுங்க...நான் அப்புறமா வரேன் ;)

prakash on November 12, 2008 at 4:27 PM said...

//அவருக்கு முன்னால் பல தீவிர இலக்கியங்கள் படைத்த விவியன் ரிச்சர்ட்ஸை இந்த நேரத்தில் நினைவு கூறுவது சாலச்சிறந்தது.//

மறந்துவிட்டேன் நண்பரே. நினைவூட்டியமைக்கு நன்றி

Sundar on November 12, 2008 at 4:28 PM said...

// நானும் ஒருவன் said...
"prakash said...
இவர்களை பற்றி பேசுகையில் நாம் ரஷ்ய சிந்தனையாளர் பிரையன் லாரா அவர்களின் பங்களிப்பை மறந்துவிடக்கூடாது
"

அவருக்கு முன்னால் பல தீவிர இலக்கியங்கள் படைத்த விவியன் ரிச்சர்ட்ஸை இந்த நேரத்தில் நினைவு கூறுவது சாலச்சிறந்தது.//
:) :) LOL!

prakash on November 12, 2008 at 4:30 PM said...

தோழர்களே....
200 ஐ நெருங்குகிறோம்
துவண்ட தோள்களை தூக்கி நிறுத்துங்கள்

நானும் ஒருவன் on November 12, 2008 at 4:32 PM said...

"prakash said...
தோழர்களே....
200 ஐ நெருங்குகிறோம்
துவண்ட தோள்களை தூக்கி நிறுத்துங்கள்
"

காத்திட்டு இருக்கோம்..

நானும் ஒருவன் on November 12, 2008 at 4:33 PM said...

"prakash said...
அப்படா!!! நாமும் பதிவுக்கு சம்பந்தமாக 3 பின்னூட்டம் போட்டாச்சி...
"

எது லாரா விஷ்யமா?

prakash on November 12, 2008 at 4:35 PM said...

இன்றைய வெற்றியை சரித்திரம் சொல்லும்
நாளைய வெற்றியில் நம் தனித்துவம் நில்லும்

கும்க்கி on November 12, 2008 at 4:36 PM said...

கார்க்கி இத்தனை பேரை வச்சு வேளை வாங்குறதப்பத்தி எனக்கு தெறியாமப்போச்சே..?

கும்க்கி on November 12, 2008 at 4:37 PM said...

ஹுஹூம்...விடமாட்டேன்.
196

கும்க்கி on November 12, 2008 at 4:37 PM said...

197

கும்க்கி on November 12, 2008 at 4:38 PM said...

198.....

prakash on November 12, 2008 at 4:38 PM said...

196

prakash on November 12, 2008 at 4:38 PM said...

197

«Oldest ‹Older   1 – 200 of 280   Newer› Newest»
 

all rights reserved to www.karkibava.com