Nov 6, 2008

காக்டெயில்


    சமீபத்தில் நான் எழுதிய சென்னை மெட்ராஸ் பட்டணம் என்ற பதிவு வாசகர் பரிந்துரையில் 12 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது. அந்த வரிசையில் வந்த என் முதல் பதிவு இதுதான். விஷயம் என்னவென்றால், அதில் 12/20 என்று இருப்பது 12 வாக்குகள் அதரவாகவும் 8 வாக்குகள் எதிராகவும் விழுந்திருப்பதாக அர்த்தமாம். பொதுவாக வாக்களிப்பவர்கள் பிடித்திருந்தால் ஆதரவாக போட்டுவிட்டு சென்றுவிடுவார்களாம். வாக்குகள் எதிராக விழுவது என் பதிவு அந்த வரிசையில் இருப்பதை பிடிக்காதவர்கள் செய்வதாம். அதுவும் 8 வாக்குகள் எதிராக இருப்பது கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என  என் நலம் விரும்பும் ஒரு மூத்தப் பதிவர் எனக்கு அலைபேசி கூறினார்.  ஒரு வேளை யாருடனவாது கருத்து மோதலில் ஈடுபட்டு இருந்தால் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பிறகுதான் கவ்னித்தேன்.. என் பதிவுக்கு மட்டும்தான் எதிர் வாக்குகள் விழுந்துள்ளன. நல்லாயிருங்கப்பூ.

*************************************************    வடபழனி சிக்னலில் விடுதலை சிறுத்தைகள் வைத்திருந்த ஒரு தட்டியைப் பார்த்தேன். "ஈழத் தமிழர்கள் வெடி வைத்துக் கொல்லப்படும் நேரத்தில் ,ஈனத் தமிழன் வெடிவைத்து தீபாவளி கொண்டாடுவதாக" எழுதப் பட்டிருந்தது. பல ஆண்டுகளாக ஈழத்தில் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது. அப்போதெல்லாம் திருமா தன் பிறந்தநாளைக் கொண்டாடவே இல்லை போலும். இதுப் போன்றப் போலிகளின் உணர்வால்தான் நம் நண்பர்கள் பலரும் ஈழ விடயத்தில் எதிர்நிலையில் உள்ளார்கள். இவனுக மூடிட்டு இருக்கறதே மேல்னு ஈழமக்களை சொல்லவைத்துவிடுவார்கள். 

*************************************************   தீபாவளி அன்று வீட்டருகே இருந்த சின்னப்பையன் ஒருவனை அழைத்தார் எதிர் வீட்டு அக்கா. அவன் போக மறுத்தான். ஏன்டா என்றேன். அவங்க பட்டாசு தர கூப்பிடறாங்க. எனக்கு எங்க வீட்டுல தந்ததேப் போதும்.அவங்க வேனும்னா வெடிக்கட்டும் எனக்கு வேண்டாம் என்றான். அவன் வயது வெறும் 7. அசந்துப் போனேன் நான். இது ஆரோக்கியமான விடயம் போல் தோண்றினாலும் எனக்கென்னவோ குழந்தைகள் மனதிலும் ஏற்றத்தாழ்வு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். இந்த புத்திக்கூர்மை என்பது குழந்தைததனம் காணாமல் போய்விட்டதற்கான அறிகுறிதானே?

*************************************************   ஏகன் பார்த்து வெளியே வந்தவுடன் நண்பன் ஒருவன் அழைத்து படத்தைப் பற்றிக் கேட்டான். "வழக்கமா ஆக்ஷன் ஹீரோவ காமெடி பண்ண வச்சிருப்பாங்க. இதுல வித்தியாசமா ஹீரோவ வச்சே காமெடி பண்ணியிருக்காங்கடானு" சொன்னேன். புரியாமல் முழித்தவன படத்தைப் பார்த்ததும் அலைபேசி சிரித்தான். நீங்க படம் பார்த்துட்டிங்க இல்ல? சங்கம் வளாகத்தில்  முதல் வாரமே பத்மம்(சின்னது) அரங்கிற்கு மாற்றப்பட்டது கிங் ஆஃப் ஒப்பனிங் தல படம். இப்போது சரோஜா சங்கத்தோடு சங்கமம்.

*************************************************சந்தேக சந்திராசாமியின் இடம்.

இந்த வார சந்தேகம்:

கிரிக்கெட் தெரியுமில்ல? கடைசி விக்கெட். ஏழு ரன்கள் எடுத்தால் வெற்றி. ஒருவர் 95. அடுத்த முனையில் இருப்பவர் 94. ஆட்டத்தின் கடைசிப்பந்து. ஆட்ட முடிவில் இருவரும் சதமடித்து விட்டனர். ஜெயித்தும் விட்டனர். இது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?

52 கருத்துக்குத்து:

நானும் ஒருவன் on November 6, 2008 at 8:13 PM said...

நான் தான் ஃபர்ஸ்ட்டா?il.com

நானும் ஒருவன் on November 6, 2008 at 8:14 PM said...

சந்தேக சந்திராசமிய பேட்டால் அடிச்சாதான் சரியா வரும்.

நானும் ஒருவன் on November 6, 2008 at 8:15 PM said...

//"வழக்கமா ஆக்ஷன் ஹீரோவ காமெடி பண்ண வச்சிருப்பாங்க. இதுல வித்தியாசமா ஹீரோவ வச்சே காமெடி பண்ணியிருக்காங்கடானு" //

லொள்ளுதான்டா உனக்கு. அதான் ஜுரம் வந்துடுச்சு.

rapp on November 6, 2008 at 8:18 PM said...

me the 4th:):):)

தலரசிகன் said...

அடிக்கடி எங்க தலயை சீண்டுவது நல்லதல்ல. இன்னைக்கு உங்களுக்கு தக்க பதிலடி தரப்படும்.

Anonymous said...

////"வழக்கமா ஆக்ஷன் ஹீரோவ காமெடி பண்ண வச்சிருப்பாங்க. இதுல வித்தியாசமா ஹீரோவ வச்சே காமெடி பண்ணியிருக்காங்கடானு" //

லொள்ளுதான்டா உனக்கு. அதான் ஜுரம் வந்துடுச்சு.//

எங்க வைத்தியத்தில் கோமாவுக்கே போகப் போறாரு

Anonymous said...

கப்பல் இல்லாம் துறைமுகம் இல்லை
தல இல்லாம திரையுலகம் இல்லை.

Anonymous said...

எம்.ஜி.ஆர்
ர‌ ஜி னி
அ ஜி த்

எங்க ஜி தான்டா தல..

நானும் ஒருவன் on November 6, 2008 at 8:52 PM said...

//எங்க வைத்தியத்தில் கோமாவுக்கே போகப் போறாரு//

ஏகன் பார்த்ததிலதான் ஜுரம் வந்துச்சு. மாதேஷின் தலைவா பார்த்தா கோமா தான்னு சொல்றீங்களா?

நானும் ஒருவன் on November 6, 2008 at 8:54 PM said...

// தலரசிகன் said...

அடிக்கடி எங்க தலயை சீண்டுவது நல்லதல்ல. இன்னைக்கு உங்களுக்கு தக்க பதிலடி தரப்படும்.//

தலயை சீவனும். சீண்டக் கூடாதுனு அவனுக்கு தெரியல..

Anonymous said...

கிரிக்கெட் தெரியுமில்ல? கடைசி விக்கெட். ஏழு ரன்கள் எடுத்தால் வெற்றி. ஒருவர் 95. அடுத்த முனையில் இருப்பவர் 94. ஆட்டத்தின் கடைசிப்பந்து. ஆட்ட முடிவில் இருவரும் சதமடித்து விட்டனர். ஜெயித்தும் விட்டனர். இது சாத்தியமா? சாத்தியமெனில் எப்படி?

no way.

கார்க்கி on November 6, 2008 at 9:08 PM said...

நன்றி ராப்..

தாங்க்ஸ் மச்சி...

தல பேன்களுக்கு(அந்தப் பேன் இல்லங்க,விசிறி),


ஏதாவது சொல்லி ஒரு 100 அடிங்கப்பா.. உங்கப் படம்தான் 100 நாள் ஓட மாட்டது.. இதுவாச்சு செய்ங்க..

rapp on November 6, 2008 at 9:09 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சந்தேக சந்திராசாமியின் கேள்வியத்தான் நான் third இயர் படிக்கறதுல இருந்து, இன்போசிஸ்ல கேட்டாங்கன்னு கதைக்கட்டி திரிய விட்டாங்க. இப்போ நீங்களுமா? இந்தக் கேள்வியே தப்புன்னு நான் நினைக்கிறேன். ஒருவேளை நான்தான் தப்புன்னா விடை தெரியல. சீக்கிரம் சொல்லுங்க.

rapp on November 6, 2008 at 9:12 PM said...

மாதாஜி திவ்யாவின் சந்தேகம்:

இன்னொரு பதிவான, கமலுடன் என் நண்பன் பதிவும் வந்திருக்குப் பாருங்க. ஆனா அதிலும் எட்டு ஓட்டுக்கள் எதிரா விழுந்திருக்கு. எப்டி அது?

rapp on November 6, 2008 at 9:12 PM said...

me the 15TH

rapp on November 6, 2008 at 9:13 PM said...

//"வழக்கமா ஆக்ஷன் ஹீரோவ காமெடி பண்ண வச்சிருப்பாங்க. இதுல வித்தியாசமா ஹீரோவ வச்சே காமெடி பண்ணியிருக்காங்கடானு"//

:):):)super

rapp on November 6, 2008 at 9:16 PM said...

குழந்தைகள் குழந்தைத்தனத்தை இழந்துட்டாங்கன்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன். அவங்க இப்போதைய சூழ்நிலைக்கேத்த மாதிரி தானா மோல்ட் ஆகிடறாங்க. நாமளே நம்ம பெற்றோர் குழந்தையா இருந்த காலக்கட்டத்துல இருந்ததை விட நல்லா மெச்சூரான குழந்தைகளாத்தான் இருந்தோம்னு நினைக்கிறேன்:):):)

கார்க்கி on November 6, 2008 at 9:30 PM said...

//rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சந்தேக சந்திராசாமியின் கேள்வியத்தான் நான் third இயர் படிக்கறதுல இருந்து, இன்போசிஸ்ல கேட்டாங்கன்னு கதைக்கட்டி திரிய விட்டாங்க. இப்போ நீங்களுமா? இந்தக் கேள்வியே தப்புன்னு நான் நினைக்கிறேன். ஒருவேளை நான்தான் தப்புன்னா விடை தெரியல. சீக்கிரம் சொல்லுங்க.//

விடை இருக்கு ராப்.. அடுத்த பதிவு போடுறதுக்கு முன்னாடி சொல்லிடறேன்..

கார்க்கி on November 6, 2008 at 9:32 PM said...

//மாதாஜி திவ்யாவின் சந்தேகம்:

இன்னொரு பதிவான, கமலுடன் என் நண்பன் பதிவும் வந்திருக்குப் பாருங்க. ஆனா அதிலும் எட்டு ஓட்டுக்கள் எதிரா விழுந்திருக்கு. எப்டி அது?//

எனக்கும் புரியல.. என்னவோ நடக்குது..

//rapp said...

குழந்தைகள் குழந்தைத்தனத்தை இழந்துட்டாங்கன்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன். அவங்க இப்போதைய சூழ்நிலைக்கேத்த மாதிரி தானா மோல்ட் ஆகிடறாங்க. நாமளே நம்ம பெற்றோர் குழந்தையா இருந்த காலக்கட்டத்துல இருந்ததை விட நல்லா மெச்சூரான குழந்தைகளாத்தான் இருந்தோம்னு நினைக்கிறேன்:):):)//

உண்மைதான்.. ஆனா அதில் எனக்கு வருத்தம்னு சொல்றேன்

அருண் on November 6, 2008 at 9:42 PM said...

இளைய நிலா, இதப்பாரு, http://answers.yahoo.com/question/index?qid=20061028033921AAME8Ey

அருண் on November 6, 2008 at 9:43 PM said...

சந்தேக சந்திராசாமியின் விடை...

கார்க்கி on November 6, 2008 at 9:49 PM said...

என்ன சகா அது? அந்தக் கேள்வி டெலீட் செய்யப்பட்டு உள்ளது.. உங்களுக்கு பதில் தெரியுமா? நான் சொந்தமா யோசிச்சு கண்டுபுடிச்சேன் சகா

அருண் on November 6, 2008 at 9:50 PM said...

இளைய நிலா, உங்க கவிதையெல்லாம் விட, "காக்டெயில்"ல தான் கிக் ஜாஃஸ்தியா இருக்கு.

கார்க்கி on November 6, 2008 at 9:52 PM said...

//இளைய நிலா, உங்க கவிதையெல்லாம் விட, "காக்டெயில்"ல தான் கிக் ஜாஃஸ்தியா இருக்கு.//

ஹிஹிஹி... தாங்க்ஸ்ப்பா

dharshini on November 6, 2008 at 10:08 PM said...

yaarupa ange "THALAYA" seendrathu....
kaargi anna deepavali release ellam paathu mudichitingala?
aama ippo endha kuzhanthai kuzhanthai thanama irukkunu nenekireenga? romba late.......
rapp sir solrathum correctdhan! :) enna "indha suzhalukku edha madhiri maritangale"...

விலெகா on November 6, 2008 at 10:14 PM said...

கிரிக்கெட் தெரியுமில்ல? கடைசி விக்கெட். ஏழு ரன்கள் எடுத்தால் வெற்றி. ஒருவர் 95. அடுத்த முனையில் இருப்பவர் 94. ஆட்டத்தின் கடைசிப்பந்து. ஆட்ட முடிவில் இருவரும் சதமடித்து விட்டனர். ஜெயித்தும் விட்டனர்

ங்கொய்யாலே

விலெகா on November 6, 2008 at 10:19 PM said...

கார்க்கி கதை எழுத அதை,கார்க்கி படிக்க,படித்தை கர்ர்க்கி தொடுக்க,தொடுத்ததை பதிவு எடுக்க ,எடுத்ததை படிக்க............
சித்தம் கலங்கிபோச்சப்போ
நமக்கு இந்த சந்தேகம் சந்திரசாமினாலே:))))

கார்க்கி on November 6, 2008 at 10:23 PM said...

//yaarupa ange "THALAYA" seendrathu....
kaargi anna deepavali release ellam paathu mudichitingala?
aama ippo endha kuzhanthai kuzhanthai thanama irukkunu nenekireenga? romba late.......
rapp sir solrathum correctdhan! :) enna "indha suzhalukku edha madhiri maritangaலெ".//

ஆமாம் தங்கச்சி.. கரெக்டா சொன்ன. ஆனா ராப் சார் இல்ல மேடம்...

//விலெகா said...

கார்க்கி கதை எழுத அதை,கார்க்கி படிக்க,படித்தை கர்ர்க்கி தொடுக்க,தொடுத்ததை பதிவு எடுக்க ,எடுத்ததை படிக்க............
சித்தம் கலங்கிபோச்சப்போ
நமக்கு இந்த சந்தேகம் சந்திரசாமினாலே:))))//

ஹிஹிஹி.. வரும் வாரங்களில் இன்னும் பலத்த சந்தேகத்தோடு வருவார்..

நான் ஆதவன் on November 6, 2008 at 10:32 PM said...

சகா,
அந்த எட்டு எதிர் வோட்டும் தல ரசிகர்கள் போட்ட ஓட்டா இருக்கும். நாளைக்கே தல வாழ்த்தி ஒரு பதிவ போடுங்க....20/20 தான். :-) பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பு........
-----------------------------------
எப்ப டி.வி வீட்டுக்கு வந்ததோ அப்பவே குழந்தைகளின் இயல்பு மாறத் தொடங்கியிருக்கிறது என்பது என் கருத்து.
-----------------------------------
வர வர உங்க காக்டெயில் சுவாரஸ்யம் கூடிகிட்டே போகுது. சீக்கிரமே நட்சத்திர பதிவராக வாழ்த்துக்கள் சகா.

வெண்பூ on November 6, 2008 at 11:36 PM said...

இந்த காக்டெய்ல் ஓகே...

அநேகமா கார்க்கிக்கு எதிரா யாரோ எட்டு பேர் இருக்காங்கன்னு நெனக்கிறேன். (சான்ஸ் கம்மியா?... அப்படின்னா ) கார்க்கிக்கு எதிரா இருக்குறவன் எட்டு ஐடி வெச்சிருக்கான்.. இது எப்படி?

சந்தேக சந்திரசாமி...
ஒண்ணாங்கிளாஸ் கணக்கு (நக்கலுக்காக இந்த கேள்வியை கேக்குலன்னு நெனக்கிறேன்).. மொத ஆள் சிக்ஸ் அடிக்கிறான். அவன் செஞ்சுரி, வெற்றிக்கு இன்னும் ஒரு ரன் தேவை. ஓவர் முடிஞ்சி அடுத்த ஓவர் ஸ்டார்ட் ஆகுது. இப்ப அடுத்த ஆள் பேட்டிங்க். அவனும் சிக்ஸ் அடிக்கிறான். ரெண்டு பேரும் செஞ்சுரி + போட்டியிலயும் ஜெயிச்சாச்சி.. சரியா?

Anonymous said...

ஒரு வேளை கடைசி பந்து நோ பால் ஆகிடுச்சோ

கார்க்கி on November 7, 2008 at 8:28 AM said...

//நான் ஆதவன் said...

சகா,
அந்த எட்டு எதிர் வோட்டும் தல ரசிகர்கள் போட்ட ஓட்டா இருக்கும். நாளைக்கே தல வாழ்த்தி ஒரு பதிவ போடுங்க....20/20 தான். :-) பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பு........//

அவனுங்கதான் காரணம்னா இன்னும் 10 எதிர் ஓட்டு விழுந்தாலும் கவலை இல்லை சகா..:)))

//எப்ப டி.வி வீட்டுக்கு வந்ததோ அப்பவே குழந்தைகளின் இயல்பு மாறத் தொடங்கியிருக்கிறது என்பது என் கருத்து.//

அதுவும் ஒரு காரணம்..

//வர வர உங்க காக்டெயில் சுவாரஸ்யம் கூடிகிட்டே போகுது. சீக்கிரமே நட்சத்திர பதிவராக வாழ்த்துக்கள் சகா.//

நன்றி சகா..

கார்க்கி on November 7, 2008 at 8:32 AM said...

//Blogger வெண்பூ said...

இந்த காக்டெய்ல் ஓகே...

அநேகமா கார்க்கிக்கு எதிரா யாரோ எட்டு பேர் இருக்காங்கன்னு நெனக்கிறேன். (சான்ஸ் கம்மியா?... அப்படின்னா ) கார்க்கிக்கு எதிரா இருக்குறவன் எட்டு ஐடி வெச்சிருக்கான்.. இது எப்படி?//


சகா, தமிழ்மண ஓட்டு ஐடிய வச்ச் இல்ல. வச்சு. 8 பேர் என்பது சரிதான்.. ஒரு க்ரூப்புக்கே என்னை பிடிக்கலை போல.

//சந்தேக சந்திரசாமி...
ஒண்ணாங்கிளாஸ் கணக்கு (நக்கலுக்காக இந்த கேள்வியை கேக்குலன்னு நெனக்கிறேன்).. மொத ஆள் சிக்ஸ் அடிக்கிறான். அவன் செஞ்சுரி, வெற்றிக்கு இன்னும் ஒரு ரன் தேவை. ஓவர் முடிஞ்சி அடுத்த ஓவர் ஸ்டார்ட் ஆகுது. இப்ப அடுத்த ஆள் பேட்டிங்க். அவனும் சிக்ஸ் அடிக்கிறான். ரெண்டு பேரும் செஞ்சுரி + போட்டியிலயும் ஜெயிச்சாச்சி.. சரியா?//

எங்க அண்ணன் சந்திராசாமிய அவ்ளோ லைட்டா நினைச்சிட்டிங்க. மேட்சோட கடைசிப் பந்துனு சொன்னத பார்க்கலையா? யோசிங்க சகா.

கார்க்கி on November 7, 2008 at 8:33 AM said...

//சின்ன அம்மிணி said...

ஒரு வேளை கடைசி பந்து நோ பால் ஆகிடுச்சோ//

நோ பால்? அப்படியே வச்சாலும் அவங்க எப்படி சதமடிப்பார்கள்?

கார்க்கி on November 7, 2008 at 8:54 AM said...

//சங்கம் வளாகத்தில் முதல் வாரமே பத்மம்(சின்னது) அரங்கிற்கு மாற்றப்பட்டது கிங் ஆஃப் ஒப்பனிங் தல படம். இப்போது சரோஜா சங்கத்தோடு சங்கமம்.//

சத்யமிலும் படம் சாந்தமிற்கு மாற்றப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களுக்கும் டிக்கெட் இருக்கிறது.

வெண்பூ on November 7, 2008 at 9:07 AM said...

கடைசி பால் அப்படின்றத கவனிக்காம விட்டுட்டேன்..

இதோ இப்படி..
கடைசி பால் நோ பால்.. டெக்னிக்கலா நீங்க எத்தனை ரன் வேணும்னா ஓடி எடுக்க முடியும். அதனால அவங்க 5 ரன் ஓடுறாங்க. 95 இருக்குறவர் 100 அடிச்சாச்சி. நோ பால் ரன்னோட சேத்து 6 ரன் ஆச்சு. வெற்றிக்கு இன்னும் ஒரு ரன் தேவை. 5 ரன் ஓடுனதுனால அவங்க இருக்குற முனை மாறி இருக்கும். இப்ப அடுத்தவர் பேட்டிங். சிக்ஸ்.. அவ்ளோதான்.. சரியா?

பாபு on November 7, 2008 at 9:41 AM said...

கடைசி பந்து no ball, அவர்கள் ஒரு ரன் எடுக்கிறார்கள் ,ஆனால் ஓவர் throw ஆகி விட அதுவும் பவுண்டரி க்கு சென்றதால் கூட ஒரு நான்கு ரன்கள்.அது ஒரு ரன் எடுத்தவரையே சேரும் .அதன் மூலம் அவர் நூறு எடுத்து விட்டார்.ஆனால் எதிர் முனைக்கு சென்று விட்டதால் 94 ரன் உள்ளவர் இப்போது ஆட ,அந்த பந்து சிக்ஸர்
ஒ.கே வா?

பரிசல்காரன் on November 7, 2008 at 9:45 AM said...

ந.ப.

கா.ந.உ!

narsim on November 7, 2008 at 11:32 AM said...

//பரிசல்காரன் said...
ந.ப.

கா.ந.உ!
//

ஆ ந ப..
நானும் கா ந உ!

தாமிரா on November 7, 2008 at 11:38 AM said...

வாசகர் பரிந்துரை ப‌ற்றி தெரியாத‌ விஷ‌ய‌த்தை தெரிந்துகொண்டேன். அந்த‌ வ‌ரிசையில் ப‌திவுக‌ள் எப்ப‌டி வ‌ருகின்ற‌ன‌? 6/6 அப்பிடின்னா என்ன‌? இப்போதான் புரிந்த‌து. ந‌ன்றி. (அப்பிடின்னா என‌க்கு இதுவ‌ரை ஒரு ஓட்டு கூட‌ விழ‌லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..) (அந்த‌ எட்டுல‌ ஒண்ணு நா இல்லேலே.....ன்னு சொன்னா ந‌ம்புணும் ..அவ்வ்வ்..)

வெண்பூ on November 7, 2008 at 11:39 AM said...

//
narsim said...
//பரிசல்காரன் said...
ந.ப.

கா.ந.உ!
//

ஆ ந ப..
நானும் கா ந உ!
//

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ

தாமிரா on November 7, 2008 at 11:42 AM said...

ந‌ர்சிம் : ஆ ந ப..
நானும் கா ந உ!// என‌க்கு இந்த‌ மாதிரி விளாடுற‌துல்லாம் புடிக்காது.. அப்பிடின்னா என்ன.?

"ஆம், ந‌ல்ல‌ ப‌திவு..
நானும் (சொல்கிறேன்) காக்டெயில் ந‌ன்றாக‌ உள்ள‌து.!"

...இதைத்தான் சொல்ல‌ வ‌ந்தீர்க‌ளா ப‌ரிச‌ல்? ந‌ர்சிம்?

தாமிரா on November 7, 2008 at 11:43 AM said...

வெண்பூவுமா? அப்ப‌ நானும்.. கு.செ.மா.சி.!

Ŝ₤Ω..™ on November 7, 2008 at 12:53 PM said...

தல..
// இந்த புத்திக்கூர்மை என்பது குழந்தைததனம் காணாமல் போய்விட்டதற்கான அறிகுறிதானே? //

ரொம்ப சரியான சிந்தனை.
இன்று நாம் குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்காமல், ஒரு காட்சிப் பொருள் போல் அல்லவா வளர்க்கிறோம்.. குழந்தைத்தனம் காணாமல் போக நாம் தான் முதற் காரணம்.
-----
//எனக்கு எங்க வீட்டுல தந்ததேப் போதும்.அவங்க வேனும்னா வெடிக்கட்டும் எனக்கு வேண்டாம் என்றான். //
இது போலவே இலங்கையும், பாகிஸ்தானும் இந்தியாவிடமும், சீனாவிடமும், அமெரிக்காவிடமும் சொல்லி இருந்தால்???

rapp on November 7, 2008 at 1:41 PM said...

எனக்கு ஒரு சந்தேகம், நோ பால் மூலம் கிடைக்கிற ரன் பேட்ஸ்மேனுக்குக் கிடைக்குமா? நான் ரொம்ப நாளா அது பொத்தாம் பொதுவா டீமுக்கு போயிடும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன்:(:(:(

பாபு on November 7, 2008 at 3:41 PM said...

@rapp
நோ ball க்கான ரன் இல்லை ,ஓவர் throw மூலமாக கிடைக்கும் ரன் batsman ஐ சேரும்

கார்க்கி on November 7, 2008 at 4:18 PM said...

@வெண்பூ,

இது சரி சகா...

@பாபு,

மிகச்சரி.. சூப்பர்

// பரிசல்காரன் said...

ந.ப.

கா.ந.உ!//

என்ன சகா இது?????????????

கார்க்கி on November 7, 2008 at 4:21 PM said...

@நர்சிம்,

நீங்களுமா தல?

@தாமிரா,

நீங்க எல்லாம் அப்படி செய்வீங்களா?


//
"ஆம், ந‌ல்ல‌ ப‌திவு..
நானும் (சொல்கிறேன்) காக்டெயில் ந‌ன்றாக‌ உள்ள‌து.!"//

விள‌க்க‌த்திற்கு ந‌ன்றி தாமிரா..

கார்க்கி on November 7, 2008 at 4:24 PM said...

@சென்,

//இது போலவே இலங்கையும், பாகிஸ்தானும் இந்தியாவிடமும், சீனாவிடமும், அமெரிக்காவிடமும் சொல்லி இருந்தால்???//

ஆசை தோசை அப்பளம் வடை...

// rapp said...

எனக்கு ஒரு சந்தேகம், நோ பால் மூலம் கிடைக்கிற ரன் பேட்ஸ்மேனுக்குக் கிடைக்குமா? நான் ரொம்ப நாளா அது பொத்தாம் பொதுவா டீமுக்கு போயிடும்னு நெனச்சுக்கிட்டே இருந்தேன்:(:(:(//

நோ பால்ல எடுக்கிற ரன் பேட்ஸ்மேனுக்குத்தான்.. ஆனா நோபாலுக்கு வர்ற ஒரு ரன் எக்ஸ்ட்ரா..

rapp on November 7, 2008 at 5:43 PM said...

me the 50th:):):)

rapp on November 7, 2008 at 5:45 PM said...

thank u babu and karki:):):)

Karthik on November 8, 2008 at 1:28 PM said...

ஆம்.. நானும் தமிழ்மணத்தில் பார்க்கிறேன் 'வாசகர் பரிந்துரை'. என்னது இது?

காக்டெயில் வழக்கம்போல சூப்பர்.
:)

 

all rights reserved to www.karkibava.com